Sunday, January 22, 2006

சர்தார்ஜி ஜோக்குகள்

ஒரு சர்தார்ஜி புகைப்படக்காரரை ஒரு சாவு வீட்டில் பத்து பேர் சேர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழியாகச் சென்ற ஒருவர் "ஏங்க அவரைப் போட்டு அடிக்கறாங்க?" என்று மற்றொருவரைக் கேட்கிறார்.
"பின்ன என்னங்க? இறந்தவர் உடலைப் போட்டோ எடுக்கச் சொன்னால் ஸ்மைல் ப்ளீஸ் என்றால் என்ன செய்வார்களாம்?"

சர்தார்ஜிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. எதிர்முனையில் இருப்பவர் "சந்தா! உங்கள் மகள் இறந்து விட்டாள்" என்கிறார்.
துக்கம் தாளாமல் கட்டிடத்தின் 100 வது தளத்திலிருந்து சர்தார்ஜி குதித்து விடுகிறார்.
50வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு மகள் இல்லையென்று.
25வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு இன்னும் திருமணமாகவில்லையென்று.
10வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தன் பெயர் சந்தா அல்ல பந்தா என்று.

ஓவியக் கண்காட்சியில் சர்தார்ஜி கேட்கிறார்"பார்க்க படுகேவலமாக இருக்கும் இதை தான் மாடர்ன் ஆர்ட் என்கிறீர்களா?"
பதில் வருகிறது"சாரி சார்! அது ஓவியம் அல்ல கண்ணாடி"

17 comments:

Thiru said...

Why do you want comments? People, like me, are too lazy to comment!

கைப்புள்ள said...

நாம எழுதறத படிக்கிறாங்களா? படிக்கிறவங்களுக்கு புடிச்சிருக்கானு தெரியாம எழுதிக்கிட்டே இருக்கறதுல என்ன மச்சான் புண்ணியம்?

rv said...

//"சாரி சார்! அது ஓவியம் அல்ல கண்ணாடி" //
:))

விஜயன் said...

நல்லா இருக்கு.

என்னா லுக்கு? (உங்க போட்டோ)

கைப்புள்ள said...

//என்னா லுக்கு? (உங்க போட்டோ) //

நன்றி விஜயன்.
முன்னவே ஒரு தரம் சொன்னது போல..."எங்க வயசு வாலிப வயசு"

Karthik Jayanth said...

சிப்பு வந்துருசி சிப்பு.

கைப்புள்ள said...

//சிப்பு வந்துருசி சிப்பு. //

வணக்கம்ணா! இப்படி எப்பவாச்சும் யாராச்சும் உசுப்பேத்தி உட்டுடறாங்களா? அதுக்கப்புறம் வேற என்ன வேல? ஆபிசுல எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சுட்டு பளாக்கே கதினு குந்தி கிடக்க வேண்டியது! இந்த மாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பு ரணகளமா இருக்கு!

Sardhar said...

ஆஹா...

வந்துட்டான்யா... வந்துட்டான்ய்ய்ய்ய்ய்ய்ய்யா!

தருமி said...

இந்தப் பதிவுக்குப் பின்னூட்டமாக உங்களுக்குத் தெரிந்த சர்தார் ஜோக்குகளைப் பதியவும்- அப்டின்னு போட்டிருந்தீங்கன்னு வச்சிக்கிங்க...இன்னேரம் பின்னூட்டத்துக்குப் பின்னூட்டம்; அதோடு ஜோக்குகளுக்கு ஜோக்குன்னு பின்னியிருப்போம்ல...

தருமி said...

அடடா, நானே ஒண்ணு போட்டுருக்கலாமேன்னு லேட்டா தோணுச்சி...அதான் இது:

Bholaji ordered a pizza and the clerk asked if he should cut it in six or twelve pieces.
"Six, please. I could never eat twelve pieces."

கைப்புள்ள said...

//ஆஹா...

வந்துட்டான்யா... வந்துட்டான்ய்ய்ய்ய்ய்ய்ய்யா! //

வாங்க சர்தார்! கைப்புள்ளஜி ஜோக்ஸ் போட்டு என்னைய பழி வாங்கற எண்ணம் எதாவது இருக்கா?

கைப்புள்ள said...

//இந்தப் பதிவுக்குப் பின்னூட்டமாக உங்களுக்குத் தெரிந்த சர்தார் ஜோக்குகளைப் பதியவும்- அப்டின்னு போட்டிருந்தீங்கன்னு வச்சிக்கிங்க...//

வாங்க தருமி சார்! இன்னிக்கு பெரியவங்க வந்திருக்கீங்க. ரொம்ப சந்தோஷம். அடடா இந்த வித்தையெல்லாம் தெரியாம போச்சே! சொல்லிட்டீங்க இல்ல! இதுக்கு மேல ச்சூடுங்க!

சிறில் அலெக்ஸ் said...

நல்ல ஜோக்ஸ்...சர்தார் ஜோக்ஸ் கேட்டு ரெம்ப நாள் ஆச்சு.
\சர்தார் ஜோக்குன்னு சொல்லாம கைப்புள்ள ஜோக்ஸ்னே பேர் வைக்கலாம். கைப்புள்ள கேரக்டரை வளர்த்துவிட்டமாதிரியும் இருக்கும்.

ஏப்டி ஐடியா?

கைப்புள்ள said...

//கைப்புள்ள ஜோக்ஸ்னே பேர் வைக்கலாம். கைப்புள்ள கேரக்டரை வளர்த்துவிட்டமாதிரியும் இருக்கும்.//

வாங்க சிறில்! அருமையான ஐடியா. நாட்டுல உங்கள மாதிரி நாலு பேர் இருக்கறதுனால தான் மழையே பெய்துங்கறேன்.

தருமி said...

சர்தார் ஜோக்குன்னு சொல்லாம கைப்புள்ள ஜோக்ஸ்னே பேர் வைக்கலாம்"//
நான் இதை வழிமொழிகிறேன்.அப்போ சிறிலோடு சேர்த்து "நாட்டுல எங்கள மாதிரி நாலு பேர் இருக்கறதுனால தான் மழையே பெய்து"ங்கிறீங்க; இல்லியா?
இப்ப சூடு, நயினா. நானே முதல் 'கைப்புள்ள ஜோக்கு' போட்டுட்றேன்:

கைப்புள்ள ஒரு உறவினரின் சவ அடக்கத்துக்கு பைனாகுலரோடு போனார். ஏன்னா, அது ஒரு தூரத்து உறவினர்.

கைப்புள்ள said...

வாங்க சார்!
முதல் கைப்புள்ள ஜோக்குக்கு நன்றி. ரொம்ப சந்தோஷம். போற போக்க பார்த்தா கைப்புள்ளையை 'கைப்புள்ளை காப்பியத்துல' ஒரு காப்பிய தலைவனாவோ இல்லை 'Kaipullai Adventures'ல ஒரு ஹாலிவுட் ஹீரோவாவோ பார்க்கலாம் போலிருக்கே?

யோசிப்பவர் said...

முதல் இரண்டு ஜோக்குகளும் பழசு(எனக்கு).

இந்த ஜோக் சமீபத்தில் எனக்கு எச்.எம்.எச் வந்தது. ஆனால் சர்தார்ஜி இல்லை. வேறு ஒருவர். அவர்

டி.ராஜேந்தர் (டி.ராஜேந்தர் ரசிகர்கள் என்மேல் கோபப்பட வேண்டாம்.)
//ஓவியக் கண்காட்சியில் சர்தார்ஜி கேட்கிறார்"பார்க்க படுகேவலமாக இருக்கும் இதை தான் மாடர்ன் ஆர்ட் என்கிறீர்களா?"
பதில் வருகிறது"சாரி சார்! அது ஓவியம் அல்ல கண்ணாடி" //

இந்த ஜோக் சமீபத்தில் எனக்கு எச்.எம்.எச் வந்தது. ஆனால் சர்தார்ஜி இல்லை. வேறு ஒருவர். அவர்....,

டி.ராஜேந்தர் (டி.ராஜேந்தர் ரசிகர்கள் என்மேல் கோபப்பட வேண்டாம்.Its just for fun)