Sunday, January 08, 2006

பொற்காலம்

கவிதை என்ற பெயரில் நான் முதன்முதலில் எழுதியது. பொற்காலம் படம் வந்த நேரமது. பொற்காலம் ஃபாண்ட்(எழுத்துரு) மிகவும் என்னை கவர்ந்தது. அதை தமிழ்ப் பேப்பரிலிருந்து பார்த்து பார்த்து அப்படியே காப்பியடித்தேன். அட! மீனா படத்தையும் வரையலாமே என்று தோன்றியதும் பக்கத்திலிருக்கும் பென்சில் உருவம் உருவானது. கண்,காது, மூக்கு வைத்திருந்தால் அது மீனா என்று சொன்னாலும் நம்ப முடியாது. அதனால் அப்படியே விட்டுவிட்டேன். தஞ்சாவூரு மண்ணு எடுத்து என்னுடைய அப்போதைய விருப்பப் பாடல். சரி அதே எதுகை மோனை ஸ்டைலில் எதாவது எழுதலாம் என்று தோன்றியதன் விளைவு தான் "பொற்காலம்". எப்படிங்க பரவாயில்லியா?

11 comments:

NambikkaiRAMA said...

பொற்காலம் நன்னாயிருக்கு. படம் நல்லா வரைவீங்க போலிருக்கு. வாழ்த்துக்கள்.
நானும் சின்ன வயசில் படம் வரைவேன். மயில் படம் வரைந்து பக்கத்தில் மயில் என எழுதி விடுவேன் :))

கைப்புள்ள said...

Nanri Rama. Karpanaiyilirundhu varaiya varadhu...edhavadhu padathai paathu Copy adikkaradhu mattum dhaan varum.

Anonymous said...

அடடா கைப்புள்ள அசத்தறீங்க..

இன்னும் ரெண்டு கவித எழுதுறது..

அன்புடன்
கீதா

G.Ragavan said...

கைப்புள்ள...நான் பேச்சு மூச்சில்லாம இருக்கேன். ஒவ்வொருத்தருக்குள்ளயும் எத்தன தெறமை. இந்த ஓவியத் தெறம வளந்து இன்னும் சிறக்கட்டும்.

சின்ன வயசுல மேப்பு வரைஞ்சாக்கூட எங்க வாத்தியார் தாரா முட்டை மாதிரி இருக்குன்னு சொல்லிக் கிண்டல் அடிப்பாரு.

கையெழுத்து நல்லா இருக்குறவங்களக் கண்டா பாராட்டுவேன். ஏன்னா என்னோட ஆங்கிலக் கையெழுத்து கோழி கிண்டுன மாதிரி இருக்கும். தமிழ் ஓரளவு நல்லாவே இருக்கும். ஆனால் இந்த அளவுக்கு அச்சடிச்ச மாதிரி எல்லாம் இருக்காது. வாழ்க. வளர்க.

கைப்புள்ள said...

////அடடா கைப்புள்ள அசத்தறீங்க..

இன்னும் ரெண்டு கவித எழுதுறது..//

வாங்க கீதா மேடம்!
நன்றி. எத்தனையோ நல்ல கவிஞர்கள் இருக்கும் போது, நான் எழுதுனதையும் கவிதைனு மதிச்சு 'ஆசுப்பட்டு' கேட்டுட்டீங்க. இன்னும் ரெண்டு என்ன...நாலு இருக்கு. மொத்தமா எழுதுனதே அவ்வளவு தான். இதுக்கு மேலே இனிமே எழுதுனா தான்...
கற்பழிப்போம்
திருவாசகத்துக்கு உருகியவன்
மனம் வாங்கச் சென்றேன்
பெண்ணே
படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க!

கைப்புள்ள said...

ராகவன்,
தங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி. மனம் திறந்து பாராட்டுவதற்கும் ஒரு மனசு வேண்டும். அது உங்க கிட்ட இருக்கு. அதை நான் ரொம்பவே மதிக்கிறேன்.

ஆனா நான் ஓவியனெல்லாம் இல்லீங்க...எதையாச்சும் பார்த்து பார்த்து வரையுறதுன்னா வரைஞ்சிடுவேன். மத்தபடி சொந்தமால்லாம் வரைய வராதுங்க. நான் ஒரு அரைகுறை கேஸ் தான். ஆனாலும் தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ராகவன்.

ஏஜண்ட் NJ said...


ஆஹா...
ஓவியமே ஒரு கவிதை மாதிரி இருக்கு..
கவிதையே ஒரு ஓவியமாவும் இருக்கு...

கைப்புள்ள கலக்குறீங்க போங்க!!

:-)

கைப்புள்ள said...

//ஓவியமே ஒரு கவிதை மாதிரி இருக்கு..
கவிதையே ஒரு ஓவியமாவும் இருக்கு...
//

ஞான்ஸ்,
நன்றிங்க.கேக்கறதுக்கே ரொம்ப சந்தோசமா இருக்கு.

இலவசக்கொத்தனார் said...

என்னய்யா இது, கவிதை அது இதுன்னு போயிட்டா. நல்லாதானே இருந்தே.

ஹிஹி. சும்மா டமாசு. நல்லா இருக்குடோய்.

கைப்புள்ள said...

//என்னய்யா இது, கவிதை அது இதுன்னு போயிட்டா. நல்லாதானே இருந்தே.//

ஹி...ஹி...இத்த எய்த சொள்ள (1998ல) கொஞ்சம் மரை கயண்ட கேஸாயிருந்தேன்பா!

//நல்லா இருக்குடோய். //
டாங்க்ஸுபா!

சேதுக்கரசி said...

நல்லா இருக்கு கைப்புள்ள, கவிதையும், ஓவியமும். கவிதை - முதல் முயற்சின்னா, ரொம்பவே நல்லா வந்திருக்கு.