Friday, January 27, 2006

மறவேன் மறவேன் என்று...


"மறவேன் மறவேன் என்று வேலின் மேல்
ஆணையிட்ட மன்னரும் மறந்தாரோ மயிலே"

தூர்தர்ஷன் மட்டுமே ஒரே தொலைக்காட்சி சேனல் என்று இருந்த காலத்தில், இரவு 9.00 மணிக்கு தேசிய ஒளிபரப்பு தொடங்குவதற்கு முன் மெல்லிசை பாடல்கள் ஒளிபரப்பப்படும். டி.கே.கலா(கில்லி புகழ்) பாடிய மேற்கண்ட பாடல் அடிக்கடி வரும்். ராஜா ரவி வர்மாவின் இவ்வோவியத்தைக் கண்டதும் அப்பாடல் தான் நினைவுக்கு வந்தது. அப்பாடலை எவரேனும் நினைவில் கொண்டிருந்தால் மற்ற வரிகளையும் தெரியப்படுத்துங்கள்.

6 comments:

Ram.K said...

அலைகடலும் ஓய்திருக்க அகக் கடல் தான் பொங்குவதேன் எனத் துவங்கும் பாடல் (பாடியது டி.கே.கலா)எனக்கு நினைவில் உண்டு. நீங்கள் சொல்வது இதுவா அல்லது வேறா என எனக்குத் தெரியவில்லை. நான் ராஜா ரவிவர்மா ஓவியம் மீது பித்துப் பிடித்தவன். இந்தப் படம் நன்றாக உள்ளது. உங்களுக்கு யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியில் யாராவது தெரிந்தால் அவர்கள் போட்ட இந்த வருட மாதக் காலண்டர் வாங்கிக் கொள்ளவும். ஆறு மணியான ரவிவர்மா வண்ணப் படங்கள் அதில் உள்ளன.

ramachandranusha(உஷா) said...

வைகை புயலாரே, டி.கே.கலா பாடிய அந்த பாடல் கல்கியின் சிவகாமியின் சபதம் நாவலில் வரும். பொன்னியின் செல்வனில்
வரும், "அலைகடலும் ஓய்ந்திருக்க" பாடலையும் அவர் பாடி கேட்டு இருக்கிறீர்களா? கலாவின் குரல் எனக்கு மிக பீடிக்கும்.
எம்.ஜீ.யார், தன் கடைசிகால படம் ஒன்றில் இவர் குரலை அறிமுகம் செய்தார். பாடல் என்னவென்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.

கைப்புள்ள said...

//நான் ராஜா ரவிவர்மா ஓவியம் மீது பித்துப் பிடித்தவன். இந்தப் படம் நன்றாக உள்ளது. உங்களுக்கு யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியில் யாராவது தெரிந்தால் அவர்கள் போட்ட இந்த வருட மாதக் காலண்டர் வாங்கிக் கொள்ளவும். ஆறு மணியான ரவிவர்மா வண்ணப் படங்கள் அதில் உள்ளன.//

எனக்கும் ராஜா ரவி வர்மாவின் ஓவியங்கள் மிகவும் பிடிக்கும். மேலை நாட்டு ஓவிய பாணியை நம் கலாச்சாரத்துக்கேற்ப மிக அழகாகக் கையாண்டிருப்பார். அவருடைய யதார்த்தமான ஓவியங்களுக்காக அவரைக் குறை கூறுபவர்களும் உண்டு. உள்ளதை உள்ள படி வரைவதில் தவறு என்ன உள்ளது? இவ்வோவியத்தைக் கண்டீர்களானால் எதையோ யோசித்துக் கொண்டிருக்கும் அப்பெண்ணின் கண்கள் பேசும். பெண்ணின் கைகளைக் கண்டீர்களானால் மெலிந்து காணப்படும்.(எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை)...மிகவும் தத்ரூபமாக இருக்கும்...ஒரு நளினம் தெரியும். அதே போல தமயந்தியும் அன்னப்பறவையும் என்ற ஓவியமும் மிகச் சிறப்பாக் இருக்கும். நீங்கள் சொன்ன அந்த காலண்டரைப் பெற முயற்சிக்கிறேன்.அலைகடலும் ஓய்திருக்க அகக் கடல் தான் பொங்குவதேன் இந்த பாடல் தற்போது நினைவில் இல்லை. கால ஓட்டத்தில் சில விஷயங்களை மறந்து விடுகிறோம், அவற்றில் சில ஒரு காலத்தில் நாம் மிகவும் ரசித்ததாகவும் கூட இருக்கும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கைப்புள்ள said...

//வைகை புயலாரே, டி.கே.கலா பாடிய அந்த பாடல் கல்கியின் சிவகாமியின் சபதம் நாவலில் வரும்.//

வாங்க மேடம்! சாதாரண கைப்புள்ளையை வைகைப் புயலாக்கி விட்டீர்கள். :)- நன்றி. எனக்கும் டி.கே.கலாவின் குரல் பிடிக்கும். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னால் கேட்ட பாடல் இன்னும் நினைவில் உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இப்பாடலைக் கேட்க ஆவல் மேலிடுகிறது...ஆனால் இணையத்தில் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. கூகிளில் தேடியதில் நீங்கள் சொல்லும் எம்.ஜி.ஆர் படம் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் வந்த நவரத்தினம் என்று தெரிய வந்த்து. பாடல் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை.

கைப்புள்ள said...

//எம்.ஜீ.யார், தன் கடைசிகால படம் ஒன்றில் இவர் குரலை அறிமுகம் செய்தார். பாடல் என்னவென்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.
//

போய் வா .......நதியலையே ......
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
வா வா நதியலையே ..
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
போய் வா .......நதியலையே ......
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா

வா வா நதியலையே ..
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா

- இந்த பாட்டா இருக்குமோ?
:)

Iyappan Krishnan said...

மறவேன் மறவே னென்று வேலின்மேல் ஆணையிட்ட
மன்னரும் மறப்பாரோ - நீல மயிலே!(மற)

உருகி உருகி உள்ளம் அவரை நினைவதையும்
உயிரும் கரைவதையும் - அறியாரோ மயிலே?(மற)

அன்பர் வரவு நோக்கி இங்குதான் காத்திருக்க
அன்னநடை பயில்வாயோ - வண்ண மயிலே!
பெம்மான் உன் மேலே வரும் பெருமிதம் தலைக்கேறிப்
பாதையை மறந்தாயோ - பேதை மயிலே!
வன்மம் மனதில் கொண்டு வஞ்சம் தீர்க்க நினைந்து
வழியில் உறங்கினாயோ - வாழி நீ மயிலே!(மற)

தன்னிகரில்லாதான் தனயர்பால் மையல் கொண்ட
மங்கைமீ திரங்காயோ - தங்க மயிலே!
சொன்னாலும் நீ அறியாய் சொந்த அறிவுமில்லாய்
உன்னை நொந் தாவதென்ன? - வன்கண் மயிலே!
மன்னும் கரிபரிகள் புவியில் பல இருக்க
உன்னை ஊர்தியாய்க் கொண்டோர் - தன்னையே நோகவேணும்(மற)

சரியாண்ணே ?