மொட்டையின்(அட நம்ம ராஜா தானுங்கோ...ஹி...ஹி) இசையில் சமீபத்தில் ரசித்தது சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் வரும் "நல்ல வாழ்வு தொடங்கும்..." வாலியின் வரிகளை மஞ்சரியும் திப்புவும் பாடியிருக்காங்க. பாடலின் துவக்கம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. என் சிற்றறிவுக்கு எட்டிய வரை வங்காளத்தில் உள்ள 'பவுல்' மக்களின்(Baul is a mendicant sect of Bengal - இறைவனின் புகழைப் பாடிக் கொண்டு யாசித்துண்டு வாழும் ஒரு மக்கள் கூட்டம்) இசையை நினைவுபடுத்துவது போன்றிருந்தது. தபலாக்களின் நடனத்திலிருந்து மீண்டதும் கேரளத்து பஞ்சவாத்தியத்துடன் ஐயப்பனின் புகழைப் பாடுகிறார் திப்பு. "ஏழைக்கிறைவன் எங்கள் பந்தள ராஜனடா..." திப்புவின் குரலில் அப்படியொரு குழைவு...இனிமை. பாடலைக் கேட்டதும் மனதில் ஒரு அமைதி நிலவுகிறது. ராஜாவின் இசையில் தமிழிலும் மலையாளத்திலும் மஞ்சரி சமீப காலத்தில் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். இன்னுமொரு சித்ராவா? "பொண்ணா பொறந்த..." என்ற பாடலும் மஞ்சரியின் குரலில் நன்றாக உள்ளது.
Saturday, January 07, 2006
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment