விந்திய மலைதொடருக்கு வடக்கே படிப்பதற்கோ வேலை காரணமாகவோ செல்ல நேரிடும் என்னை போன்றோருக்கு ஏற்படும் ஒரு வித்தியாசமான பிரச்சனை - அவ்வப்போது பல நாட்களுக்கு தமிழில் பேசவே வாய்ப்பு கிடைக்காதது. அங்கே அவர்கள் பேசும் இந்தி மொழி நமக்கு எளிதாக புரியும். ஆனால் நாம் பேசுவது தமிழா,மலையாளமா,தெலுங்கா என்று கூட அவர்களால் யூகிக்க முடியாது. அந்த கடுப்பில் தென்னிந்தியர்களைப் பொதுவாக 'மதராசி' என்று அழைப்பார்கள். அவர்களுடைய மதராசில் தமிழ்நாடு,கேரளா,கர்நாடகம்,ஆந்திர பிரதேசம் எனும் நான்கு மாநிலங்களும் அடக்கம். இதை பற்றி எல்லாம் கவலை படாமல் நம்மாள் ஒரு படி மேலே போய் இன்னும் தான் இருக்கும் மாநிலத்திற்கேற்ப பஞ்சாபி,குஜராத்தி,மராட்டி என மற்ற மொழிகளையும் கற்று ஒரு கலக்கு கலக்கி விடுவான். இது போதாது என்று அங்கு அவர்கள் பேசும் வட்டார வழக்குகளையும் ஒரு கை பார்த்து விடுவான். இந்தியிலேயே யோசிக்கவும் பேசவும் பல பேர் பழகி விடுவதால் சில சமயம் தமிழ் பேசவே வாய்ப்பின்றி போய்விடும். அப்போது யாராவது நம்மூர் ஆள் வந்து தமிழில் பேச வாய்ப்பு கிடைத்தால் அந்த மகிழ்ச்சி இருக்கிறதே அதை சொல்ல முடியாது...அனுபவித்தால் தான் தெரியும்.
அவ்வாறு இரு தமிழர்கள் வேறு ஒரு மொழி பேசும் மாநிலத்தில் சந்திக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒரு அடிப்படை பண்பாடு, நம் மொழி புரியாதவர் இன்னொருவர் யாரேனும் தங்கள் உரையாடலில் பங்கு பெறுகிறார் எனில், அவருக்கும் புரியும் விதத்தில் இந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ பேசுவது. அதனை நான் முடிந்த வரை கடைபிடிப்பவன். அதே போல தமிழ் பேசும் மற்ற நண்பர்களையும் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்வேன்.
ஒரு முறை நானும் ஒரு தமிழ் நண்பனும் பல நாட்களுக்குப் பிறகு சந்தித்து தமிழில் பேசிக் கொண்டிருந்தோம். பைசா பொறாத ஏதோ ஒரு பிஸ்கோத்து விஷயத்தைத் தான் பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். அப்போது நாங்கள் பேசி சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்த இன்னொரு நண்பன்(தமிழ் தெரியாதவன்) அருகில் வந்தான். "என்ன பேசுறீங்கனு சொன்னா நானும் சிரிப்பேன் இல்ல?" என்றான். தமிழ் நண்பன் "உனக்கு சொன்னா புரியாதுடா. இது எங்களுக்கு மட்டும் தான் புரியும்" என்றான். (ஆமாம் பின்ன...கவுண்டமணி,செந்தில் ஜோக்கை சொன்னால் அவனுக்கு புரியுமா என்ன?). அவன் அன்று என்ன மூடில் இருந்தானோ தெரியவில்லை,"நீங்கள் மதராசிகளே இப்படி தாண்டா! இல்ல-பில்ல அங்க-பிங்க அப்படினு புரியாத மொழியில் ஏதோ பேசிக் கொள்வீர்கள். எங்களுக்கு எதுவும் புரியாது. எப்ப தான் மாற போறீங்களோ?" என்று கொட்டித் தீர்த்தான்.
எனக்கோ சரியான கடுப்பு. அவனே வலிய வந்து நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில் தலையிட்டு நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று கேட்டு விட்டு எங்களைத் திட்டுகிறானே என்று. இதுவே மூவருக்கும் பொதுவான விஷயம் என்றால் நாங்கள் கண்டிப்பாக இந்தியிலோ அல்லது ஆங்கிலத்தில் தான் பேசியிருப்போம். ஆனால் என் கூட இருந்த தமிழ் நண்பன் "அது ஒண்ணுமில்லைடா! நாங்க ரெண்டு பேரும் ஒரு சதித் திட்டம் தீட்டிட்டிருந்தோம். அந்த சதித் திட்டம் வெற்றிகரமா நிரைவேறிடுச்சுனா இந்தியாங்கிற இந்த நாடு கூடிய சீக்கிரம் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் தமிழ்நாடு ஆயிடும். அதுக்கப்புறம் யாரும் தமிழைத் தவிர வேற எந்த லாங்குவேஜும் பேச முடியாது. தமிழ் இல்லாத மத்த லாங்குவேஜ் பேசறவங்களை என்ன பண்ணலாம்னு தான் நாங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தோம். அப்போ தான் நீ வந்து கேட்டே...அத உன்கிட்ட எப்படி சொல்லறதுனு தான் தட்டிக் கழிச்சேன்" என்றானே பார்க்கலாம். அதுவரை கடுகடுவென்று இருந்த அந்த நண்பன் தன்னையும் அறியாமல் சிரித்து விட்டான். நாங்கள் இருவரும் சேர்ந்து சிரிக்க அங்கிருந்த இறுக்கம் தளர்ந்த்து. அதன் பிறகு நாங்கள் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம் அந்நண்பன் "யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் தமிழ்நாடு" இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று கேட்டு சிரிப்பான்.
Saturday, January 28, 2006
யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் தமிழ்நாடு
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
USTN!!
СШТН
நல்லாத்தான் இருக்கு.
இது ஒருபக்கம்னா, மும்பை அல்லது டெல்லியில் தலைமை அலுவலகம் உள்ள நிறுவனத்தின் சென்னைக் கிளைக்கு வந்து அங்குள்ள தமிழரிடம் (உதாரணத்திற்கு அவருடைய பெயர் பாலமுருகன் - நிச்சயம் தமிழர் தான்) தமிழில் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்தார்..
நல்ல கூத்து போங்க. பிரச்சினைய கெளப்பிருவீங்க போல :-))
//USTN!!
СШТН
நல்லாத்தான் இருக்கு//
நன்றி இராமநாதன். ஆனால் UST இன்னும் நல்லாயிருக்கு என்பது என் கருத்து.
CIIIT???
//தமிழில் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்தார்..//
ஏதோ பழக்க தோஷத்துல வந்திருக்கும். இந்தி சேனல் தமிழுக்கு மாற சில சமயம் நேரம் பிடிக்கும் :)-
சில சமயம் நம்மையும் அறியாமல் "ஹான்,ஜி,போலோ" ஆகியவை தமிழ் பேசும் போது கூட வந்துவிடுகிறது. எனக்கும் இது ஆரம்பத்தில் செயற்கையாகத் தோன்றியது. ஆனால் நாமே அதை உணரும் போது தான் புரிகிறது.
//நல்ல கூத்து போங்க. பிரச்சினைய கெளப்பிருவீங்க போல :-)) //
ஐயயோ! என்னண்ணா நீங்க? பிரச்சினை அது இதுனு பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க? ஒரு டமாசை பகிர்ந்துக்க போட்டது அந்த பதிவு. உடனே தனி தமிழ்நாடு கேக்கறான் அப்படி இப்படினு யாராச்சும் எதாச்சும் கிளப்பிவிட்டுட போறாங்க. Disclaimer அதனால இப்பவே போட்டுட்டேன். அதுக்கு மேலேயும் யாராச்சும் வந்து சவுண்ட் விட்டா "டாய் கட்டைதுரை"னு வீரமா ஒரு எதிர் சவுண்ட் விட்டுட்டு நைசா ஓடிட வேண்டியது தான்.
:))-
СШТН
Соединённые Штаты Тамил Нады
நீங்க சொன்னதன் ரஷ்ய மொழிபெயர்ப்பு.
நாங்க எங்கே இதையெல்லாம் கண்டோம்? நமக்கு தெரிஞ்சது
noyta CCCP மற்றும் சமீப காலமாக ROSSIJA மட்டும் தான். அதுவும் தபால்தலைகளின் வாயிலாக. noytaவை Russian encoding தெரியாததால் இப்படி தட்டச்சியுள்ளேன்.
தமாசு நல்லா இருந்தது கைப்புள்ள
வாங்க குமரன்,
தங்கள் கருத்துக்கு நன்றி.
USTN founder thalaivar Kaipullai vaazhga vaazgha:)))
டாங்ஸுங்கோ!
எல்லாம் உங்கள மாதிரி வருத்தப்படாத வாலிபர் சங்கம் மெம்பர்ஸ் குடுக்கற தைரியமும் ஆதரவும் தான்.
USTN - கொ.பா.செ யாரு ???
அஙக குஷ்பு இல்லனு கொரல் குடுக்குரது.
//அஙக குஷ்பு இல்லனு கொரல் குடுக்குரது. //
ஐயா! வேணாமய்யா. உங்களுக்கு புண்ணியமா போகும். கைப்புள்ளக்கும் குஷ்புவுக்கும் ரொம்ப தூரமய்யா! ஏதோ நம்ம பொழப்பு ஒரு 4-5 பின்னூட்டம்ங்கிற நிலையில ஓடிட்டிருக்கு. அதுலயும் மண்ணை அள்ளி போட்றாதீங்கய்யா! வேணா உங்களை கொ.ப.செ.,(வட்டம்,மாவட்டம் எது வேணுமோ சொல்லுங்க)ஆக்கிடறேன்
:)-
ஹா ஹா ஹா
சூப்பரப்பு...
இந்தி படிக்கவே கூடாதுன்னு எவ்வளவோ உறுதியா இருந்தேன்... (அது நமக்கு வரலைங்கறது வேற விசயம்)
இப்ப வேற வழியில்லாம உருது கூட படிக்க ஆரம்பிச்சிட்டம்ல?
//இப்ப வேற வழியில்லாம உருது கூட படிக்க ஆரம்பிச்சிட்டம்ல? //
உண்மை தாங்கப்பு. கிராமத்து பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க குதிரையையும் புல்லையும் இணைச்சு. அதை பத்தி நான் கூட ஒரு பதிவா போட்டேன்...அது யாருக்கும் புரியலங்கறது வேற விசயம். இதையும் கொஞ்சம் படிச்சு பாருங்க.
புல்லைத் தின்னும் காலம்
Post a Comment