Sunday, January 22, 2006

ஒரு சின்ன குவிஸுங்கோ - பதில்

சொன்னா ஆச்சரியப்படுவீங்க! இந்த இவேசுபிரான் சிலை இருப்பது நமது சென்னையில் தான். அட! எங்கப்பா? எங்களுக்கு தெரியாம? என்று கேட்பவர்களுக்காக - பரங்கிமலை என்று அழைக்கப்படும், புனித தோமையார் மலையின் (St.Thomas Mount)மேல் கிட்டத்தட்ட 300 அடி உயரத்தில் உள்ளது.

என்னப்பா? நாங்க எத்தனை வாட்டி போயிருக்கோம் நாங்க பார்த்ததேயில்லியே? எனக் கேட்பவர்களுக்கு - இவ்வாலயத்தின் பிரதான நுழைவாயில் நந்தம்பாக்கம், போரூர் செல்லும் பட் சாலை(Butt Road) வழியாக உள்ளது. வந்த வழியாகவே திரும்பிச் சென்றால் இச்சிலையைக் காண முடியாது. பட் சாலை வழியாக தேவாலயத்துக்கு வந்து், வடகிழக்கு புறமாக சற்று கீழிறங்கினீர்களானால் இச்சிலை தெரியும். இல்லையெனில் பரங்கிமலை ஆபீசர்ஸ் ட்ரெயினிங் அகாடெமி(OTA) அருகாமையில் ஒரு சிறிய பாதை உள்ளது, அவ்வழியாகச் சென்றால் முதலில் இச்சிலையைக் கண்டபின் தான் ஆலயத்துக்குச் செல்ல முடியும். படத்தில் சிறியதாகத் தோன்றினாலும் கிட்டத்தட்ட 15அடி உயரமுள்ள சிலை இது.

சரி அவ்வளவு தூரம் போய் சிலையைப் பார்த்துட்டீங்க! சிலைக்குப் பக்கத்துல் நின்னு பார்த்தா மீனம்பாக்கம் விமான நிலையத்து ஓடுபாதை அழகாகத் தெரியும். விமானம் மேலெழுந்து பறப்பதையும் பார்க்கலாம். கீழே இருக்கும் படத்தைப் பாருங்க. மலை மேலிருந்து எடுத்த புகைப்படம் இது. விமானம் take-off ஆகறதைத் தான் நான் எடுத்தேன். ஆனா அது இந்த படத்துல இங்க தெரியலை. படத்துல சமதளமாகக் கீழே தெரிவது தான் சென்னை விமான நிலைய ஓடுபாதை(ரன்வே).

எதிர் பார்த்த அளவு இதில் யாரும் பங்கு கொள்ளவில்லை எனினும் முயற்சி செய்த ராமநாதனுக்கு ஒரு "ஓ..."

2 comments:

கைப்புள்ள said...

"நமக்கும் பின்னூட்டத்துக்கும் ரொம்ப தூரம் போல?" உண்மை தோண்டுவின் அறிவுரைப் படி "Test"க்கு பதிலாக.

Anonymous said...

சென்னையில் இருந்த போது பலமுறை பட்ரோடு முகப்புவாயிலில் வண்டியை விட்டுவிட்டு படி ஏறி
நடந்து சென்று உள்ளேன்.அடுத்த முறை இந்தியா வரும்போது தாங்கள்
குறிப்பிட்ட வழியாக சென்று பார்க்கிறேன்.தகவலுக்கு நன்றி தல!!!.

அன்புடன்,
துபாய் ராஜா.