பலமனம் என்னிடம் இருந்தும்
புதுமனம் ஒன்று வாங்க
பலவாக எண்ணிச் சேன்றேன்
மனம் விற்கும் மார்கெட்டிற்கு
வாங்க சார் வாங்க!
ஆடிக்கழிவை முன்னிட்டு ஒருமனம்
வாங்கினால் இன்னொன்று ஃப்ரீ
இன்முகத்தோடு வரவேற்றார் கடைகாரர்
உள்ளோன்று வைத்து புறமொன்று
பேசும் மனம் ஓராயிரம்
பிறர் துன்பத்தில் இன்பம்
காணும் இருகலரில் கிடைக்கும்
மனம் இரண்டாயிரம் இல்லாதவரையும்
ஏய்த்து காசுபார்க்கும் மனம்
தள்ளுபடி போக வெறும்
பத்தாயிரம் தான்வாழ பிறரைக்
கெடுக்க துணிந்திடும் மனம்
இருபதாயிரம் குற்றங்கள் செய்வாருக்கு
துணை செல்லும் இம்போர்ட்டட்
மனம் ஐம்பதாயிரம் தன்
மனதின் சாட்சி கொன்று
மானுடத்தை அழிக்க அஞ்சாத
வீரமனம் ரூபாய் ஒருலட்சம்
அடுக்கிய கடைகாரரை நிறுத்தி
நான் சொன்னேன் இம்மனங்கள்
யாவும் இருக்கின்றன என்னிடத்தில்
உண்மையினை என்றும் இயம்பிடும்
தூயமனம் பகைவருக்கும் தீங்கு
நினைந்திடாத வெள்ளைமனம் அடுத்தவர்
துன்பத்தைக் கண்டு பதறும்
தெய்வமனம் எண்ணியவை யாவருக்கும்
நல்லவையாய் அமைய ஏங்கும்
அன்புமனம் இத்தகைய மனங்களிலே
எவையேனும் உள்ளனவா? கேட்டவனை
ஒருவாறாகப் பார்த்து சொன்னார்-
நீங்கள் கேட்கும் ஓல்டுஃபேஷன்
மனங்கள் எல்லாம் எடைக்கு
வாங்கி விற்கும் பிளாட்பாரக்
கடைகளிலே செகண்ட் ஹாண்டில்
கிடைத்திடலாம் போணியாகும் நேரமிது
---கொஞ்சம் ஓரமா நில்லுங்க ப்ளீஸ்!
Saturday, January 07, 2006
மனம் வாங்கச் சென்றேன்!
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
Pramadham...Pramadham.!!! Very nicely written.!! and the last verse is superb..and true today.!! Isn't it.!!
Glad to know that you enjoyed it Sir. Thanks.
கைப்புள்ள.. இப்படி எழுதினா இன்னும்நல்லா புரியும். நாலு நாலு வரிகளா எழுதணுமின்னு இல்லை.. ஒவ்வொரு வாக்கியமும் முழுமையா இருகணும் எல்லாருக்கும் புரிஞ்சா போதும்.
--
பலமனம் என்னிடம் இருந்தும்
புதுமனம் ஒன்று வாங்க
பலவாக எண்ணிச் சேன்றேன்
மனம் விற்கும் மார்கெட்டிற்கு
வாங்க சார் வாங்க!
ஆடிக்கழிவை முன்னிட்டு
ஒருமனம் வாங்கினால் இன்னொன்று ஃப்ரீ
இன்முகத்தோடு வரவேற்றார் கடைகாரர்
உள்ளோன்று வைத்து
புறமொன்று பேசும்மனம் ஓராயிரம்
பிறர் துன்பத்தில் இன்பம்காணும்
இருகலரில் கிடைக்கும்மனம் இரண்டாயிரம்
இல்லாதவரையும் ஏய்த்து காசுபார்க்கும் மனம்
தள்ளுபடி போக வெறும் பத்தாயிரம்
தான்வாழ பிறரைக் கெடுக்க
துணிந்திடும் மனம் இருபதாயிரம்
குற்றங்கள் செய்வாருக்கு துணை செல்லும்
இம்போர்ட்டட் மனம் ஐம்பதாயிரம்
தன் மனதின் சாட்சி கொன்று
மானுடத்தை அழிக்க அஞ்சாத
வீரமனம் ரூபாய் ஒருலட்சம்
அடுக்கிய கடைகாரரை நிறுத்தி
நான் சொன்னேன்
இம்மனங்கள் யாவும்
இருக்கின்றன என்னிடத்தில்
உண்மையினை என்றும்
இயம்பிடும் தூயமனம்
பகைவருக்கும் தீங்கு
நினைந்திடாத வெள்ளைமனம்
அடுத்தவர் துன்பத்தைக் கண்டு
பதறும் தெய்வமனம்
எண்ணியவை யாவருக்கும் நல்லவையாய்
அமைய ஏங்கும் அன்புமனம்
இத்தகைய மனங்களிலே
எவையேனும் உள்ளனவா?
கேட்டவனை ஒருவாறாகப் பார்த்து சொன்னார்-
நீங்கள் கேட்கும் ஓல்டுஃபேஷன்
மனங்கள் எல்லாம் எடைக்கு
வாங்கி விற்கும் பிளாட்பாரக்
கடைகளிலே செகண்ட் ஹாண்டில்
கிடைத்திடலாம் போணியாகும் நேரமிது
---கொஞ்சம் ஓரமா நில்லுங்க ப்ளீஸ்!
//எல்லாருக்கும் புரிஞ்சா போதும்.//
ஆமாங்க! சரி தான்...நீங்க சொல்றது சரி தான். வருங்காலத்துல இந்த குறிப்பைப் பின்பற்ற முயற்சி பண்றேன். நன்றி.
எழுதும் போது எனுமோ "எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியப்பா" எழுதுறதா ஒரு நெனப்பு!அது தான் இந்த நாலு-நாலு ஃபார்முலா எல்லாம்!
:)-
ம்ம்ம்ம்! ஒரு குரூப்பாய்த்தான் கிளம்பீட்டாங்கிய போலருக்கு!
//அடப்பாவி எனது மனம் விலைமதிபில்லாதது என்று என்னி இருந்தேனே பிளாட்பாரக் கடையில் கிடைக்குதா?//
அடடா! உங்க கிட்ட கிடைக்கும்னு தெரிஞ்சிருந்தா அப்பவே வந்திருப்பேனே! பிளாட்பாரக் கடையில் கிடைக்குதுன்னு எழுதியிருப்பதை சுலபமாக் கிடைக்குதுன்னு எடுத்துக்கக் கூடாது. திருவல்லிக்கேணி பிளாட்பாரக் கடையில் எதோ ஒரு புத்தகம் வாங்க முயற்சி பண்றீங்கன்னு வைங்க...அது சில சமயம் கிடைக்கலாம்...பல சமயம் கிடைக்காது. நல்ல மனங்களுக்கு இக்காலத்தில் மதிப்பில்லை என்பதே நான் சொல்ல விழைந்தது.
//ம்ம்ம்ம்! ஒரு குரூப்பாய்த்தான் கிளம்பீட்டாங்கிய போலருக்கு!//
வாங்க நாமக்கல்லாரே!
அந்த குரூப்ல வேற யார் யார் இருக்காங்கன்னு சொன்னீங்கன்னா நானும் போய் படிப்பேன்! :)-
தங்கள் வருகைக்கு நன்றி.
யப்பா, என்ன கருத்துங்க! நல்லா இருக்கு கைப்ஸ், ஆனா இன்னும் செதுக்கலாம். அப்புறம், இங்கிலிபீசை விரட்டியடிச்சுத் தமிழ்ப்படுத்தலாம்.. உதாரணத்துக்கு:
மனம் விற்கும் சந்தைக்கு (= மார்க்கெட்டிற்கு)
ஆடிக்கழிவை முன்னிட்டு ஒருமனம்
வாங்கினால் இன்னொன்று இலவசம் (= ஃப்ரீ)
பிறர் துன்பத்தில் இன்பம்
காணும் இருநிறத்தில் கிடைக்கும் (= இருகலரில்)
துணை செல்லும் இறக்குமதி (= இம்போர்ட்டட்)
மனம் ஐம்பதாயிரம் தன்
Post a Comment