ட்ரிங்...ட்ரிங்...ட்ரிங்...
என்னோட செல்போன் தான் அடிக்குது. அம்மா தான் பேசறாங்க சென்னையிலிருந்து.
"என்னப்பா எப்படியிருக்கே! நல்லாயிருக்கியா?"
"நான் நல்லா இருக்கேன்மா. நீங்க எல்லாம் நல்லா இருக்கீங்களா?"
"நாங்க எல்லாம் நல்லா இருக்கோம். குளுரெல்லாம் எப்படி இருக்கு? டெல்லியிலே இந்த தடவை 2 டிகிரியாமே குளுரு?"
"ஆமா! டெல்லியிலே செம குளுரு...ஆனா இந்தூர்ல ஒன்னும் இல்லை. ஒரு ஜேக்கட் இருந்தா போதும் சமாளிச்சுடலாம். டெல்லியிலே 6 வருஷம் இருந்துட்டு இதெல்லாம் ஜுஜுபியா தான் இருக்கு"
"குளுரு கம்மினு அலட்சியமா இருக்காதே...ஸ்வெட்டர் எல்லாம் போட்டுக்கிட்டே வெளியில போ"
"சரி சாப்பிட்டியா?"
"என்னடா இன்னும் மேட்டருக்கு வரலியேனு யோசிச்சுட்டு இருந்தேன்"
"சரி என்னா உங்க வீட்டுல இன்னிக்கு குசினி?"
"இன்னிக்கு எங்க வீட்டுல வெறகு வைக்கலை"
"அப்புறம்...?"
"வெளியிலே தான் எங்கேயாவது போய் சாப்பிடணும்"
"காலையிலே என்ன டிஃபன்?"
"இன்னிக்கு சண்டே இல்ல... அதனால மேகி"
"அப்ப மத்த நாளெல்லாம்?"
"கார்ன் ப்ளேக்ஸ் இல்லன்னா ஓட்ஸ்"
"ஏன் இட்லி தோசை எதுவும் சாப்பிடக் கூடாதா?"
"காலங்காத்தாலே இட்லி கடை போட்டு உக்காந்திருந்தா காலையில 7 மணிக்கு வர்ற கம்பெனி பஸ்ஸுக்கு டாட்டா சொல்ல வேண்டியது தான்"
"ஹூம்...வீட்டுல கார்ன் ப்ளேக்ஸ், மேகி, ப்ரெட் இதெல்லாம் குடுத்தா எறங்காது. இப்ப எறங்குதாமா?"
".......................................!!"
என் மனசுக்குள்ளேயே "எறங்குது ஆத்தா! வீட்டுல குடுக்கறத தின்னுருந்தா நல்ல புத்தி இல்ல வந்திருக்கும். அதெப்படி தின்போம்? குதிரையும் புல்லைத் தின்னும் காலம் ஒன்னு வருமாமே...அப்போ எல்லாம் எறங்கும். There is always a first time"
Wednesday, January 18, 2006
புல்லைத் தின்னும் காலம்
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
Pidi sabam, Out state or Other country ponavangalkku elarthukkum eithu thaan kathi.
Ithula enna kuthuna, engakkum antha sabam workout aiduthu.
உண்மை தானுங்க! உங்களுக்காவது பழமொழி லிங்க் பிடிபட்டுச்சா?
செல்பேச்ச நாம் என்னிக்கி கேட்டு இருக்கோம். வீட்ல வகைவகையா செஞ்சி போட்டா என்ன சட்னி இல்லையா சாம்பார் மட்டும் தானான்னு நக்கல் அடிப்போம் இங்க cornflakes, waffeles என்று தின்று உயிர் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம்.
ஆமாம் சந்தோஷ்,
பட்டு பட்டு தான் தெரிஞ்சுக்கணும்னு எழுதியிருந்தா அதை யாரால மாத்த முடியும்? இந்த ஞானமும் தொடர்ந்து இருக்கும்னு நினைக்கிறீங்க? கொஞ்சம் நல்ல சாப்பாடு கிடைச்சா மறுபடியும் முருங்கை மரம் ஏறிட மாட்டோம்?
ம் இந்தப் புத்தி அம்மா கையால சாப்பிடும்போதே நமக்கெல்லாம் இல்லாம் போச்சு..
//ம் இந்தப் புத்தி அம்மா கையால சாப்பிடும்போதே நமக்கெல்லாம் இல்லாம் போச்சு..//
அதே...அதே
Hmm, ethu en post-la irunthu konjam suttapla iruku :-) Jus kidding, great minds think alike haan....:-)
-deeksh
இதுக்குத்தான் சொல்லறது பெரியவங்க சொல்லறத கேட்டு காலா காலத்துல...... :D
மூத்தோர் சொல்வார்த்தை முதுநெல்லிக்காய்
முன்னே கசக்கும், பின்னே இனிக்கும்.
//Hmm, ethu en post-la irunthu konjam suttapla iruku :-) Jus kidding, great minds think alike haan....:-)//
வாங்க தீக்ஷ்,
உங்க தயவால இந்தப் போஸ்டு இப்ப மேலே வந்துடுச்சு. டேங்ஸுங்கோ.
:)
//இதுக்குத்தான் சொல்லறது பெரியவங்க சொல்லறத கேட்டு காலா காலத்துல...... :D //
வாங்க வாங்க! சொல்லுங்க நல்லா சொல்லுங்க கேட்டுக்கறேன்.
:)
//மூத்தோர் சொல்வார்த்தை முதுநெல்லிக்காய்
முன்னே கசக்கும், பின்னே இனிக்கும்//
வாங்க பெருசு,
இது என்னங்க குறள் வெண்பாவுல அறிவுரையா? தளை எல்லாம் சரியாயிருக்கான்னு தலைவர் கிட்ட கேட்டீங்களா?
என்னங்க பண்ணறது? எல்லாம் பட்டாத் தான் புரியுது.
:)
புலி பசிசாலும் புல்ல திங்குமா..
திங்காது
ஆனா
நாங்க சிங்கமுல....:)
]]
"புல்லைத் தின்னும் காலம்"
]]
ஃபுல்ல குடிக்கனும்
சைடிஷ் தான் தின்னனும்..:)
சின்னபுள்ள
நமக்கும் அதே கதைதான்... அதுவும் சூடு ஆறிடுச்சுனா, சாப்பிடமாட்டேன்.
டெய்லி வெரைட்டியா டிபன் இருக்கனும். தொடர்ந்து 2 நாள் இட்லி இருந்தா ஸ்ட்ரிக்ட்லி அன்செலக்ட் பண்ணிடுவேன்!!!
வாழ்க்கையே மாறி போயிடுச்சு!!! :-(
//ஆனா
நாங்க சிங்கமுல....:)//
அப்ப சிங்கம் மட்டும் தின்னுமா?
:)
//ஃபுல்ல குடிக்கனும்
சைடிஷ் தான் தின்னனும்..:)
சின்னபுள்ள //
இது கருத்துயா. கீப் இட் அப்பு.
:)
//டெய்லி வெரைட்டியா டிபன் இருக்கனும். தொடர்ந்து 2 நாள் இட்லி இருந்தா ஸ்ட்ரிக்ட்லி அன்செலக்ட் பண்ணிடுவேன்!!!
வாழ்க்கையே மாறி போயிடுச்சு!!! :-(//
வாங்க பாலாஜி,
வீட்டுக்கு வீடு வாசப்படி போல....பழசை நெனச்சி நெனச்சிபெருமூச்சு தான் விட்டுக்கனும் போல.
Post a Comment