Thursday, January 19, 2006

இளையராஜா உங்களைக் கேட்கிறார்


சிம்பொனி வடிவத்தில் திருவாசகம் போன்ற தன்னுடைய புது முயற்சிகளைக் குறித்து இசைஞானி இளையராஜா தங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறார்.
பதிலளிக்க கீழ்கண்ட இணைய தளத்திற்கு செல்லுங்கள்.

7 comments:

சிவா said...

//**Now I have come to know that most of the copies of the original audio CDs of Thiruvasagam have been made by my own fans...Enthusiastically, they (might) have copied the audio to propagate my music to other music lovers...

When I came to know this, I was shocked...I was expecting the original CD sales - definitely - to reach a greater peak - than any other album. **//

கைப்புள்ள! இந்த வரிகள் எனக்கு அர்த்தமற்றவைகளாக தான் தோன்றுகிறது. திருவாசகம் இசைத்தட்டு விற்க இங்கே Volenteer ஆக பணிபுரிந்தவன் என்ற வகையில் தெரிந்ததை சொல்கிறேன். திருவாசகத்திற்க்கு கிடைத்தது போல சமீபகாலத்தில் எந்த இசைக்கும் வரவேற்ப்பை நான் பார்த்ததில்லை. நான் ஒரு 35 சி.டி இங்கே விற்றேன். ஒவ்வொன்றும் $15. இனையத்தில் முதல் இரு வாரங்கள் வர விடாமல் தடுக்க (99% தடுத்தோம்) எத்தனை நண்பர்கள் பாடுபட்டார்கள் தெரியுமா?. எனக்கு தெரிந்து நிறைய நண்பர்கள் ஒரே வீட்டில் மூன்று சி.டிக்கள் வாங்கினார்கள். எல்லோரும் சாப்ட்வேர் துறை தான். எல்லோரிடமும் Laptop உண்டு. நினைத்தால் ஒன்று வாங்கி உடனே Burn பண்ணினால் 100 சி.டி ரெடி. ஆனால் அனைவரும் 'ஒரிஜினல் தான் வேணும் சிவா' அப்படின்னே சொல்லி வாங்கினார்கள். பாடலை கேட்டுவிட்டு அத்தனை நண்பர்களின் excitment-ஐ கண்ணால் பார்த்தவன் நான். $15 என்பது ரொம்ப அதிகம். 1 டாலருக்கும் கணக்கு பார்க்கும் மக்கள், 15 டாலர் கொடுத்து வாங்க மனம் வந்தது என்றால் அது ராஜாவின் இசை தான். சில கிருஸ்தவ நண்பர்கள் கூட என்னை அழைத்து கேட்டு வாங்கினார்கள். இதே இயேசு காவியம் என்று வந்தால் நான் வாங்குவேனா என்பது சந்தேகம் தான். மொத்ததில் சி.டி வெளியான போது அடித்த அலை அப்படி ஒரு அலை. அதை இவர்கள் பயன் படுத்திக்கொள்ளவில்லை.

1) வெல்கேட் என்னும் டப்பா ஆடியோ கம்பெனியிடம் உரிமையை விற்றார்கள். அவர்களின் மார்க்கெட்டிங் திறமை என்னவென்றால், நீங்க வெல்கேட் ஓனர் வர்கீசை அழைத்து 'சார்! எனக்கு எங்க ஊரு உரிமையை கொடுங்க' என்றால் கொடுத்து விடுவார். சுத்தமாக மார்க்கெட்டிங் Network இல்லாத கம்பெனி.

2) பல இடங்களில் (கனடா, U.K) சி.டிகள் பல வாரங்களாக கிடைக்க வில்லை. அப்புறம் என்ன, எல்லோரும் pirated CD விற்க ஆரம்பித்து விட்டார்கள். மக்கள் என்ன மாதக்கணக்கிலா காத்திருப்பார்கள்.

3) சென்னையிலேயே சி.டிக்கு திண்டாட்டம். என் நண்பனை அழைத்து பேசியதில் கீழ்கட்டளை, மடிப்பாக்கம் என்று எந்த ஏரியாவிலும் கிடையாதுடா. விற்று போய்விட்டது என்றான். பின் மக்கள் என்ன செய்வார்கள்.

4) இருப்பதிலேயே கொடுமை. ஆடியோ கேசட் ஒரு மாதம் கழித்து வெளியிட்டார்கள். சென்னையை தவிர திருநெல்வேலி, மதுரை எல்லாம் கேசட் தான் முக்கிய மார்க்கெட். யாரும் கண்டு கொள்ளவே இல்லை.

5) ஸ்பெசல் எடிஷன் என்று ஒன்று வரும். அதில் ஆடியோ சி.டி யும், Making of Thiruvaasagam DVDஉம் இருக்கும் என்றார்கள். அதையும் ஒரு மாதம் கழித்து வெளியிட்டார்கள். ஆடியோ சிடி ஏற்கனவே வாங்கியவர்கள் அதை மறுபடி வாங்க என்ன கேணையன்களா?

இப்படி நிறைய. கொஞ்சம் சொல்லுங்கள். என்ன செய்தார்கள் மார்க்கெட்டிங்கு. எல்லாம் பத்திரிகைகள் ஓசியில் கொடுத்த பப்ளிசிட்டி.

கோடி கணக்கில் கொட்டி மார்க்கெட்டிங்ல கோட்டை விட்டா என்ன செய்வது. இதற்கு ஏதோ ரசிகர்கள் தான் காரணம் என்பது போல் அந்த இனையம் கூறுகிறது. பத்து பைசா பல்பொடி விற்க்கவே எவ்வளவு விளம்பரம் தேவை படுகிறது. இங்கே நானே print எடுத்து கடை கடையாக ஒட்டிக்கொண்டிருந்தேன். ஒரு போஸ்டர் கூட கிடையாது...

மொத்தத்தில் கிடைத்த வாய்ப்பை விட்டு விட்டார்கள்.

கைப்புள்ள said...

சிவா சார்,
உண்மையான ரசிகரான தாங்கள் தங்கள் மனவேதனையை புள்ளிவிவரத்துடன் எடுத்துக்காட்டியுள்ளீர்கள். நான் தூர இருந்து பார்த்தவன் தான். CDகளை விற்க என்னால் முடியவில்லை எனினும் என்னால் முடிந்தது 4-5 CDகளை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசளித்துள்ளேன்.

உங்கள் கூற்று எனக்கும் சரி என்றே படுகிறது. தங்களைப் போன்றே இதற்காக உழைத்தவர்கள் மனவேதனை அடைந்ததை அறிவேன். TIS-USA வின் தலைவர் டாக்டர்.சங்கர் குமார் அவர்கள் பல ஆயிரம் டாலர்கள் கடனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதனையும் அறிவேன். CDயை விற்பதற்கு நான் உறுப்பினனாக இருக்கும் இளையராஜா யாஹூகுழுமத் தலைவர் டாக்டர்.விஜய் அவர்களின் உழைப்பையும் அறிவேன்.ஃபாதர் ஜெகத் அவர்கள் வெல்கேட் நிறுவனத்திடமிருந்து உண்மையான விற்பனை நிலவரம் மற்றும் வரவு கணக்கு ஆகியவற்றைப் பெறுவதில் சந்திக்கும் சிக்கல்களையும் ஓரளவுக்கு அறிவேன்.

இருப்பினும் இசைஞானியிடமிருந்து மேலும் இது போன்ற படைப்புகள் வர வேண்டும் என்ற ஒரு எண்ணத்திலேயே அச்சுட்டியை என் வலைப்பதிவில் பிரபல படுத்தினேன். திருவாசகம் ஆல்பத்தை விற்க கடினமாக உழைத்த ரசிகர்கள் என் வலைப் பதிவின் வாயிலாக மனம் புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.

சிவா said...

ஐயோ! என்னங்க நீங்க. நான் நடந்த கதையை கூறினேன். நீங்க எதுக்கு மன்னிப்பு அப்படி இப்படி என்று கூறுகிறீர்கள். அங்கே இனையத்தில் கூறியிருப்பது ஓரளவுக்கு உண்மையாக இருக்கலாம். ராஜா ராஜா என்று புலம்பி கொண்டே $15 க்கு கணக்கு பார்த்தவர்களையும் தெரியும். ஆனால் அது மட்டுமே அங்கு சொல்லப்பட்டிருப்பது போல //**I was expecting the original CD sales - definitely - to reach a greater peak - than any other album**// காரணம் இல்லை. ஒழுங்காக செய்திருந்தால் இன்னும் இரு மடங்கு சி.டி விற்றிருக்கலாம். இது என் கருத்து.

விஜய் நம்ம ப்ரண்டு தான். போன முறை போகும் போது பார்த்து பேசிவிட்டு வந்தேன் அபப்டியே பாதரையும் பார்க்க கூட்டிச்சென்றார். சங்கர் குமார் சாரிடம் போனில் பேசியிருக்கிறேன். ஒன்று நிச்சயம். இப்போதிருக்கும் MP3 உலகத்தில் திருவாசகம் சி.டிக்கு கிடைத்த அங்கீகாரம் ரொம்ப அதிகம். அதை அவர்கள் உணரவேண்டும்.

நீங்க போய் மன்னிப்பு அப்படி இப்படின்னு சொல்லிக்கிட்டு. போங்க சார். வழக்கம் போல தொடருங்கள். இன்னும் உங்க ப்ளாக்கில் நிறைய படிக்க வேண்டும் :-)

கைப்புள்ள said...

ஓகே சிவா! ஃப்ரீயா விடுங்க! இதையும் கொஞ்சம் பாருங்க

http://kaipullai.blogspot.com/2006/
01/blog-post.html

கீதா said...

சிவா!! 100 சதவிதம் உண்மையை சொல்லி இருக்கிங்க.. நாங்க இந்தியா போன சமயத்துல இங்குள்ள மக்களுக்கு கொடுக்கலாம்ணு 5 CD வாங்கிவந்தோம்..ஒரே ஒரு நண்பரைத்தவிர வேற யாருக்கும் தேவைப்படலை.. (அதுக்குள்ள தான் pirated CD வந்துடுச்சே.. யாரும் ரொம்ப நாள் காத்திருக்கலை..)

இப்ப 4 CD புத்தம் புதுசா எங்ககிட்ட இருக்கு..

குமரன் (Kumaran) said...

கைப்புள்ள. சுட்டிக்கு நன்றி. இளையராஜா சாருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிச்சுட்டேன். சீக்கிரம் இந்த மாதிரி இன்னும் நிறைய போடுங்கங்கற வேண்டுகோளோட.

Anonymous said...

Dear Members of this Blog, This is Chander from Chennai. I came to know about your blog through one of my mails from IR Yahoo group. I fully agree with Mr. Siva as the marketing was very very poor. (Very well said that ad is more important even to sell a pin). And not to ignore in this world of pirated CDs, it is very important to capture the market first and reach the public as quickly as possible.

While driving via Thiruvanmiyur, i saw a very old lady selling pirated CDs ( not a strange site for Chennai people)near signal. I just had a quick look and to my surprise and shock there was a MP3 CD with Thiruvasagam, Gururamanamaalai and Geethanjali!!! for just 15 Rs. What are we talking about??? Thanks for reading this.
Best regards/ Chander

(Would anybody in this blog help me, how to write in tamil please?.
Send me a mail at connectchander@hotmail.com, if you can help me. Thanks in advance)