Tuesday, October 09, 2007

சன்னாகிதா குரூ?

நிகண்டு என்பது சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல்களாகும். தமிழில் அகராதிகளுக்கு முன்னோடியாக இருந்தவை இவையே. இந் நூல்கள் ஆரம்பத்தில் உரிச்சொற்பனுவல் என்ற தமிழ்ச் சொல்லால் அழைக்கப்பட்டது. எனினும் இச் சொல் நீளமாக இருந்ததனாலோ அல்லது இடைக் காலத்திலேற்பட்ட வடமொழிச் சொற்பயன்பாட்டு மோகம் காரணமாகவோ நிகண்டு என்ற வடமொழிப் பெயரே பிற்காலத்தில் நிலைபெற்று விட்டது.

நிகண்டுகள் செய்யுள் வடிவில் அமைந்தவை.

நிகண்டுகள்
திவாகர நிகண்டு (திவாகர முனிவர் இயறியது)
பிங்கல நிகண்டு (பிங்கலம் இயற்றியது)
சூடாமணி நிகண்டு (மண்டலபுருடர் இயற்றியது)
உரிச்சொல் நிகண்டு (காங்கேயர் இயற்றியது)
கயாதர நிகண்டு (கயாதர முனிவர் இயற்றியது)
ஆசிரிய நிகண்டு (ஆண்டிப்புலவர் இயற்றியது)
அகராதி நிகண்டு (இரேவண சித்தர் இயற்றியது)
அகம்பொருள் விளக்க நிகண்டு (அருமந்தைய தேசிகர் இயற்றியது)
பொதிகை நிகண்டு (சாமிநாத கவிராயர் இயற்றியது)
பொருள் தொகை நிகண்டு (சுப்பிரமணிய பாரதியார் இயற்றியது)
நாமதீப நிகண்டு (சிவ சுப்பிரமணியக் கவிராயர் இயற்றியது)
நானார்த்த தீபிகை (முத்துசாமிப் பிள்ளை இயற்றியது)

ஹி...ஹி...அதொன்னுமில்லீங்க. சொல்ல வந்த மேட்டர் ரொம்ப சிறுசு. அதை தமிழ்மணம் முகப்புலயே படிச்சிட்டு யாரும் ஓடிப் போயிட கூடாதில்ல...அதுக்கு தான் தமிழ் விக்கிபீடியாலேருந்து நிகண்டு பத்தி ச்ச்ச்சும்மா ஒரு கட் அண்ட் பேஸ்ட். மன்னிச்சுக்கங்கங்கங்கோ.

மேல் மாடியைக் கசக்கி புழிஞ்சு கடைஞ்சு ஜூஸ் போட்டு அன்புடன் குழுமம் நடத்துன படக்கவிதை போட்டிக்காக எழுதி அனுப்புன கவிதை.


அன்பின் வாசம்

மரணம் முத்தமிடக்காத்திருக்கும் மயான
பூமியிலும்
உன்னன்பின் வாசம்
என் உயிர்ப்பூவைப்
பூக்கச் செய்யும்


இப்ப பதிவோட தலைப்பை ஒரு தடவை படிச்சிட்டு துப்பிட்டு போங்க.

Wednesday, October 03, 2007

விழிக்கு உணவு

வேறென்னங்க? அக்டோபர் மாச புகைப்படப் போட்டிக்காகத் தான். எல்லா புகைப்படங்களுமே க்ளோசப்ல கேமராவோட 'டிஜிட்டல் மேக்ரோ' மோட்ல, புகைப்பட பிரம்மாக்கள் சொல்லற மாதிரி 'As close as it gets' என்ற முறையில் எடுத்தது.

1. சுடு சாதமும் போட்டியும் - இது வேற போட்டி :)



2. பாக்கறதுக்கு உப்புமா மாதிரி இருந்தாலும் கோப்பைக்குள்ள இருக்கறதை எங்க ஊர்ல 'ஐஸ்க்ரீம்'னு சொல்லுவாங்க.


3. பிரமிட் ஜல்லிகள்...சாரி ஜெல்லிகள்


4. பாதரசமா? பருப்பு ரசமா?


5. நூடுல்ஸ் மேல பச்சை பட்டாணி...அதுவும் முளை கட்டுனது??? அப்பத் தான் படம் அழகா நல்லா வரும்னு தங்கமணி கொடுத்த ஐடியா. எதிர்த்து பேச முடியுமா?:)


6. புளியம் பிரியாணியும்(இது மட்டும் அவங்க காதுக்கு எட்டுச்சு...நான் செத்தேன்) கோழி முட்டை தோசையும்


7. ஆணா? பெண்ணா?


8. எல்லாரும் மாவாட்ட கத்துக்கிடனும்...:)



9. அழுதுகிட்டே எடுத்தது



10. முழிக்கிறத பாரு...


படங்கள் 2உம், 3உம் An& தன்னோட புகைப்படப் பதிவுல சொல்லிக் குடுத்த மாதிரி ஒரு சின்ன டேபிள் லேம்ப் வச்சி எடுத்தது. அவரு சொன்ன மாதிரி ஒரு கூடைக்குள்ளயோ வாளிக்குள்ளயோ வச்சி எடுத்திருந்தா இன்னும் நல்லா வந்திருக்கும் போல.

படங்கள் 7,8,9,10 : எப்பவோ எடுத்தது. சும்மாச்சிக்கும் போட்டு வச்சிருக்கேன்.

படங்கள் 1,2,3,4,5,6 - இதுலேருந்து எந்த ரெண்டு படங்களைப் போட்டிக்குக் கொடுக்கலாம்? சொல்லுங்க மக்கா.

படம் 3(ஜெல்லி) மற்றும் 5(நூடுல்ஸ்) இரண்டும் போட்டிக்கான படங்கள்.