நடிகர்கள் முரளி மற்றும் மோகனுக்கு ஆரம்பக் காலத்தில் மிகவும் கைகொடுத்தது, மொட்டை அவர்கள் படங்களுக்கு அமைத்த இசை என்று சொன்னால் அது தவறாகாது. அந்த வகையில் முரளி நடித்த படமான கீதாஞ்சலி(1985)இல் இளையராஜா வைரமுத்துவின் இப்பாடலைச் சித்ராவோடு சேர்ந்து பாடியிருப்பார். பாடுவோர் குரலே இசையாக சில பாடல்களுக்கு அமையும் எனக் கேட்டிருக்கிறேன். அப்படி அமைந்த அதிக ஆர்கெஸ்ட்ரேஷன் இல்லாத ரம்மியமான ஒரு காதல் பாடல் தான் "ஓரு ஜீவன் அழைத்தது..."
என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:
பெண் : காணாத அன்பை நான் கண்டுகொண்டேன்
காயங்கள் எல்லாம் பூவாக
ஆண் : காமங்கள் ஒன்றே என் காதலல்ல
கண்டேனே உன்னைத் தாயாக
தன் காதலியினுள்ளும் தன் தாயினைத் தேடும் தூய்மையான அன்பு கொண்ட காதலனின் மனதை ஒரு வரியில் படம் பிடித்த கவிஞருக்கு ஒரு 'ஓ....' தன் இசையால் நம் நெஞ்சில் என்றும் நிலைக்கச் செய்த இசைஞானிக்கு ஒரு 'ஓ...'
Wednesday, January 18, 2006
பாட்டு படிக்கேன் : ஒரு ஜீவன் அழைத்தது
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment