Monday, January 16, 2006

பாட்டு படிக்கேன் : கண்கள் எங்கே...

பி.சுசீலா அவர்களின் குரலின் இனிமையை நான் உணர்ந்து ரசிக்க ஆரம்பித்தது சமீப காலமாகத் தான். அவருடைய பாடல்களைத் தேடித் தேடி கேட்க வைத்த பாடல் அன்பே வா படத்தில் வரும் 'லவ் பர்ட்ஸ்...லவ் பர்ட்ஸ்...". அதைப் பற்றி இன்னுமொரு சமயம் எழுதுகிறேன். கடந்த இரு நாட்களாக நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருப்பது கே.வி.மகாதேவன் - கவிஞர் கண்ணதாசன் கூட்டணியில வந்த கர்ணன்(1963) படப்பாடல் "கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே...". நடிகர் திலகமும் தேவிகாவும் நடித்துள்ள பாடல் என எண்ணுகிறேன்.

இப்பாடல் முழுவதும் பி.சுசீலாவின் குரலில் ஒரு மயக்கத்தைக் கேட்பவர்கள் உணரலாம். பசலை நோயால் வாடும் தலைவி தலைவனை நினைந்து பாடுவதாக அமைந்துள்ள காதல் பாடல். உடனே பசலை நோய்னு உனக்கு எப்படிடா தெரியும்னு கேட்காதீங்க...எல்லாம் ஒரு யூகம் தான்! அடுத்தது பசலை நோய்னா என்னன்னு ஒரு நியாயமானக் கேள்வி(எனக்கும் எழுந்தது தான்) எழலாம். அது என்னன்னு எனக்கும் தெரியாது...ஆனா அது ஒரு கில்மாவான நோய்னு மட்டும் தெரியும். தலைவி மயங்கி மயங்கி பாடும் குஜ்லீஸான சில வரிகள்:

"இனம் என்ன குலம் என்ன
குணம் என்ன அறியேன்
ஈடு ஒன்றும் கேளாமல்
எனை அங்கு கொடுப்பேன்
கொடை கொண்ட மதயானை
உயிர் கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு
நான் இங்கு மெலிந்தேன்"

உங்களுக்கும் இதே மாதிரியான(!) ராஜா காலத்து திரைப் பாடல்கள் தெரிஞ்சா சொல்லுங்கண்ணா!

11 comments:

Unknown said...

Anna.. pongal timelley kidaicha karumbai kaiyilley vaichittu manmadha post podureenga...
pasalai... patahalainnu.. pathikicchnnu.. jillponsiyaa mattaerai galponbsiyaa pottu thaakureenga....

Do lemme kno if u find any of such raja songs....

கைப்புள்ள said...

நான் இங்கே ராஜானு சொன்னது இளையராஜாவை இல்லை. சரித்திர காலத்து படப் பாடல்களில் வந்த கில்மா பாடல்களைத் தான் கல்போன்சிfy பண்ணச் சொன்னேன்.

நீங்களும் அதையே தான் சொல்பான்சிfying என்றால் ஓகே.

கொண்டோடி said...

வைரமுத்து ஒரு பாட்டெழுதினார்.

கணவனின் புறக்கணிப்பையடுத்து தலைவி பாடும் பாடல்.
பால், பாத்திரமென்றெல்லாம் உவமைகள் வரும் அப்பாடலில்.

"ஆடைகள் மூடும் பாலாறு. - உங்கள்
கண்களில் தானே கோளாறு"
என்று நீண்டு வரும் பாடலில் ஒரு வரி வரும்.

"கண்ணா என்ன ஆத்திரம்
இன்னும் கொஞ்சம் காத்திரும்"
என்று வந்து அடுத்த வரியாக,
"விரலைத் தேடும் ஒரு மோதிரம்" என்று முடிப்பார்.

எனக்கு ஒரு மாதிரிப் புரிஞ்சுது. உங்களுக்கு என்ன மாதிரிப் புரிஞ்சுது?

கைப்புள்ள said...

கொண்டோடி சார்,
எனக்கும் ஒரு மாதிரி தான் புரியுது.

G.Ragavan said...

கைப்புள்ள, கர்ணன் படத்துக்கு இசை விஸ்வநாதன். மகாதேவன்னு தப்பாப் போட்டிருக்கீங்க. பொதுவா மகாதேவன் இந்த மாதிரி படத்துக்கு இசையமைச்சிருக்குறதால தப்பா நெனச்சுட்டீங்கன்னு நினைக்கிறேன்.

இந்தப் பாட்டு எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.

தொடை கொண்ட மதயானை நடை கொண்டு -என்று வரிகள் பெண்ணின் காதலோடு விளையாடும். மிகவும் அருமையான பாடல்.

கைப்புள்ள said...

ஆமாம் ராகவன்! நீங்க சொல்லறது சரி தான். திருத்தியமைக்கு நன்றி. இன்னும் குறிப்பாக கர்ணன் படத்துக்கு இசை விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்பது சரி தானே?

G.Ragavan said...

ஆமாம். ஆமாம். சரிதான். சரிதான்.

சிறில் அலெக்ஸ் said...

//கண்டபோதே சேன்றன அங்கே..//

அருமையான வரிகள்.

பாடில் வரும் கோரஸ் வெஸ்டர்ன் ஆர்கஸ்ட்ரா அமைப்பில் அருமையாக இருக்கும்..

தொடைகொண்ட மத யானைக்கு ஏதோ உள்ளர்த்தம் இருக்கும் போலிருக்கு.

எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

கர்ணனில் இன்னொரு பாடல்... 'இரவும் நிலவும் மலரட்டுமே'..

சிவாJஇ நடந்துகொண்டே பாடலில் நடித்திருப்பார்..

அவரைப் போய் ஒவெரச்டிங் பண்றாருன்றானுவ...கைப்பிள்ள தட்டி கேட்கக்கூடாதா?

கைப்புள்ள said...

//தொடைகொண்ட மத யானைக்கு ஏதோ உள்ளர்த்தம் இருக்கும் போலிருக்கு.//

ஹி...ஹி...அப்படி தான் எனக்கும் தோணுது.

//அவரைப் போய் ஒவெரச்டிங் பண்றாருன்றானுவ...கைப்பிள்ள தட்டி கேட்கக்கூடாதா? //

அவனுவளையெல்லாம் தட்டிக் கேட்டு ஒன்னும் ஆகப் போறதில்ல சிறில். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனைன்னு விட்டுட வேண்டியது தான்.

தேவர் மகன்ல ஒரு சீன். கமல் டிக்கட் கேன்சல் பண்ணச் சொல்லுங்கன்னு சொல்லும் போது, கமலுக்கு பின்னாடி நின்னுக் கொண்டு சங்கிலி முருகனுக்கு கண் ஜாடை காட்டுவாரு கவனிச்சிருக்கீங்களா? அந்த ஒரு காட்சியிலே எத்தனை அழுத்தம். தன் மகன் தன் கூட இன்னும் கொஞ்ச நாள் இருக்க மாட்டானாங்கிற ஒரு தந்தையின் ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் வார்த்தைகளின்றி கண்களால் பேசியிருப்பார். ஓவராக்டிங்னு சொல்றவனுவ இதெல்லாம் கவனிச்சிருப்பானுங்கனு நினைக்கிறீங்க?

G.Ragavan said...

உண்மதான். நீங்க ரெண்டு பேருஞ் சொல்லுறாப்புல சிவாஜி பெரிய நடிகருதான். மாத்தமேயில்லை. இயக்குனர் மகேந்திரன் அவரப் பத்தி ரொம்பப் புகழ்ந்து அவருடைய நானும் சினிமாவும் புத்தகத்தில் எழுதீருக்காரு.

கைப்புள்ள said...

வாங்க ராகவன்,
மறு வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி.