என்றைக்கும் இல்லாதத் திருநாளாகக் கடந்த ஏழு ஆண்டுகளில் முதன் முறையாக பொங்கல் நாளன்று "சுட்டி"(இந்தியில் விடுமுறை) கிடைத்தது. தில்லியில் இருந்த வரை அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் "அண்ணா ரெஸ்டாரண்ட்" நடத்தும் நம்மூர் காரர் அண்ணாவின் தயவால், அது பொங்கல் தினம் என நினைவு படுத்திக் கொள்ள ஒரு தொண்ணையில் சர்க்கரை பொங்கல் கிடைக்கும். மற்றபடி "இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக" வருபவற்றை எல்லாம் பொங்கல் அன்று கடைசியாக 1999ஆம் ஆண்டு பார்த்ததாக ஞாபகம். இந்தூருக்கு மாற்றம் செய்து அந்த ஒரு தொண்ணை பொங்கலுக்கும் வச்சாங்கய்யா ஆப்பு என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே புதுவருடம் ஞாயிற்றுக் கிழமை தொடங்கியதால் 14 ஆம் தேதி 'மகர சங்கராந்தி'யை முன்னிட்டு விடுமுறை என்று அறிவித்து விட்டார்கள். லீவுக்காக ஏங்கினாலும் ஒவ்வொரு முறையும் லீவு விட்டா என்ன பண்ணறதுன்னு தெரியாம முழிக்கிறது வழக்கம். "வடநாட்டுக்கு" பொழைக்கப் போன என்னை மாதிரி ஆளுங்களுக்கு ஏது போக்கிடம்? சரி ஒரு ரெண்டு நாள் லீவு போட்டுட்டு ஐதராபாத்தில் இருக்கும் சித்தியைப் பார்த்து வரலாம் என்று தோன்றியதால், விட்டேன் ஜூட் ஐதராபாத்திற்கு.
பொங்கல் அன்று சென்னைக்கு வீட்டுக்குச் செல்லாமல் ஐதராபாத்திற்கு சென்றதற்கு மற்றுமொரு காரணம் சித்தி இருப்பது இந்திய விமானப் படை அகாடெமி வளாகத்தில். இந்த இடத்தை எல்லாம் பார்ப்பதற்கு மற்றுமொரு வாய்ப்பு கண்டிப்பாகக் கிடைக்காது, சித்தி அங்கிருக்கும் போதே பார்த்து விட வேண்டும் என்பதால் குளிரையும் பொருட்படுத்தாது அதிகாலை 3.30 மணிக்கு ஐதராபாத்திற்கு ரெயிலைப் பிடித்தேன் போபாலிலிருந்து. துண்டிகல் (Dundigal) என்ற இடத்தில் அமைந்து உள்ள இவ்வகாடெமி ஐதராபாத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது. 12 சிறிய கிராமங்களைச் சேர்த்து உருவானது பரந்து விரிந்து கிடக்கும் இவ்விடம். விமானப்படை வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் இவ்வளாகத்தினுள் நுழைந்ததுமே "Alma Mater of the Air Warrior" என்று எழுதப்பட்ட தகவல் பலகைகள் நம்மை வரவேற்கின்றன. மனதிற்கு மகிழ்ச்சி தரும் தூய்மையையும், பசுமையையும் இராணுவ ஒழுங்கையும் இங்கு மூலை முடுக்கெங்கிலும் காணலாம். சமீபத்தில் நேஷனல் ஜியோகிராஃபிக் (Nat Geo) சேனலில் வந்த 'மிஷன் உடான்'(Mission Udan) என்ற நிகழ்ச்சியையும் துண்டிகலில் தான் படமாக்கி இருக்கிறார்கள். அதைப் பற்றி எனது ஆங்கில வலைப்பூவிலும் எழுதியிருக்கிறேன்.
எப்படியாச்சும் ஒரு போர் விமானத்தையாவது அதனுடைய இயற்கை சூழலில் பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் அங்கு சென்றதும் மேலிட்டது. காரணம் எந்த பக்கம் பார்த்தாலும் பெருசு பெருசா நெஜ விமானம் சைசுக்கு பொம்மைங்க. பொம்மையே இவ்ளோ சூப்பரா இருந்துச்சுனா மெய்யாலுமே எவ்ளோ சோக்கா இருக்குமுனு ஒரு ஏக்கம். நானெல்லாம் எப்பவோ பைலட் ஆயிருக்க வேண்டியவன்...ஏதோ என் கஷ்டகாலம் இப்படி வந்து நட்டையும் போல்டையும் வாங்கி கொடவுன்ல போடுற எடத்துல மாட்டிக்கிட்டேன். அப்படி பைலட் ஆயிருந்தேனா இந்நேரம் ஒரு நாலஞ்சு எதிரி கப்பலைப் போட்டு தள்ளியிருப்பேன்.(சரி...சரி...அடங்கிட்டேன்)
சித்திக்கு தெரிந்த ஒரு பைலட் (ஸ்குவாட்ரன் லீடர் ராங்கில் இருப்பவர்) விமானப் படை விமானத்தை அருகிலிருந்து பார்க்கும் ஆசையைப் பூர்த்தி செய்தார். அவரிடமிருந்து கேட்டு தெரிந்து கொண்ட சில விஷயங்கள்:
விமானப்படையில் பைலட் பயிற்சிக்கு சேரும் கேடட்கள்(Cadets), முதல் ஆறு மாதத்திற்கு கீழே உள்ள எச்.டி.பி-32(HDP-32) என்ற பயிற்சி விமானத்தில் கண்டிப்பாகப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது மணிக்கு 180 கி.மீ.வேகத்தில் பறக்கக் கூடிய இலகு ரக ஜெட் எஞ்சின் பொறுத்தப்படாத இரண்டு பேர் அமரக் கூடிய ஒரு சிறிய விமானம்.
(அட யாருப்பா அது ஸ்டைலா,பர்சனாலிடியா வண்டியை ஓட்டறது...அட இவரு தான் நம்ம கைப்புள்ளயா!)
(இது கைப்புள்ள இல்லாத களையிழந்த HDP-32 விமானம்)
இந்த ஆறு மாத பயிற்சிக்குப் பின் சூர்யகிரண்(Suryakiran) எனும் ஜெட் ரக விமானத்தில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியின் முடிவுகளைத் தொடர்ந்து அவர்கள் Mig-21 ரகப் போர் விமானப் பைலட்கள் ஆகிறார்களா அல்லது ஹெலிகாப்டர்/சரக்கு விமானம்(Transport Aircraft) பைலட்கள் ஆகிறார்களா என்று முடிவு செய்யப்படும். போர் விமானப் பைலட்கள் துண்டிகலிலும், ஹெலிகாப்டர்/சரக்கு விமானப் பைலட்கள் பெங்களூரை அடுத்து உள்ள யெலஹங்காவிலும் மேலும் ஒரு ஆண்டுக்கு தங்கள் பயிற்சியைத் தொடர்கிறார்கள்.
சரி இன்னும் கொஞ்சம் மேட்டர் இருக்கு சொல்லறதுக்கு. திரும்பவும் வாங்க...வர்ற பதிவுகள்ல சொல்லறேன். எனக்கே தெரியுது மெகா சீரியல் ரேஞ்சுக்கு பிலிம் ஓவராவும் மேட்டர் கம்மியாவும் காட்டியிருக்கேனு. அடுத்த வாட்டி நல்லப் புள்ளயா நடந்துக்குவேன். காட் ப்ராமிஸ்பா.

6 comments:
thalaivaa..
ungeh indha post mattum thamizh fonts vilaiyaanduttu....
onnume padikka mudiyaleh..
Nijamava? Naan rendu moonu systethule try pannen...ellathileyum sariya dhaan varudhu...please enakkaga innum oru vaati paathuttu sollungalen. Nanri
ah ah
இன்னும் எழுதுங்க..
எங்க அக்கா பையன் பைலட் ஆகப்போறேன்னு சொல்லிட்டு இருந்தான்.. இப்ப என்னவோ அதுல அவ்வளவா ஆர்வம் காட்டலை.. ஏன்னு தெரியலை..
நீங்க விவரமா சொன்னிங்கனா... நானும் அவன்கிட்ட பேசுரப்ப சுலபமா இருக்கும்..
கிளம்பிட்டான்யா..கிளம்பிட்டான்
வாங்க ரசிகவ்!
ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க. மகிழ்ச்சி. அப்ப்டியே குறை நிறைகளையும் சொன்னீங்கனா நல்லாருக்கும்.
Post a Comment