Thursday, January 19, 2006

ஒரு சின்ன குவிஸுங்கோ!

கீழே இருக்குற இந்த படத்தைப் பாருங்க.


இந்த அழகிய இயேசுபிரானின் சிலை எங்கே இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம். டாய் வெண்ரு! என்ன விளையாடறியா? இது கூட எங்களுக்கு தெரியாதானு பல பேர் கேக்கலாம். இத சாக்கா வச்சு தெரியாதவங்க நாலு பேர் தெரிஞ்சுக்குவாங்க இல்லியா?

(சே! பாழாப் போன பின்னூட்டம் வாங்கறதுக்கு என்னென்ன டகாய்த்தி வேலை, டயலாக் எல்லாம் விட வேண்டியிருக்கு. இதுக்காச்சும் யாருனா எதனா சொல்றாங்களானு பார்ப்போம்)

16 comments:

rv said...

ஒரு பவுண்டன் மேல மவுண்டன் மேல இருக்குன்னு நினைக்கறேன்.

வெண்ரு, டகாய்த்தி இதுக்கும் அருஞ்சொற்பொருள் சொன்ன தெரியாத நாங்கல்லாம் தெர்ஞ்சுப்போம்.

கைப்புள்ள said...

கிட்ட வந்துட்டீங்க ராமநாதன். இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க.

நானே கத்துக்குட்டி தான். இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச வரைக்கும்...

வெண்ரு - வெண்ணை
டகாய்த்தி - Dacoity(திருட்டுத்தனம்)
தப்பா இருந்தா புலவர் பெருந்தகைகள் என்னை மன்னிச்சு திருத்துங்க நைனா!

டுபுக்கு அவர்களின் Tamil Slang directoryஐயும் பார்க்கவும்.

Unknown said...

கைப்புள்ள,
இயேசு போட்டோ படத்தை விடுங்க.
போட்டோவுல நீங்க ரொம்ப நல்லா இருக்கீங்க.
நிசமாவேதாங்க இதுல கிண்டல் எல்லாம் கிடையாது.

கைப்புள்ள said...

என்ன பண்றது கல்வெட்டு...நம்ம வயசு வாலிப வயசு...அழகாத் தான் இருப்போம்.

Unknown said...

:-)))

Ramya Nageswaran said...

கல்வெட்டு, தப்பா நினைக்காதீங்க..உண்மையிலேயே வடிவேலுன்னு தெரிஞ்சு தான் எழுதியிருக்கீங்களா இல்லே அது கைப்புள்ள ஃபோட்டோன்னு நினைச்சிட்டீங்களா? எதுக்கு கேட்கறேன்னா உங்க ஹாலோவீன் அனுபவம் இன்னும் மறக்கலை அதான்! :-))))

BTW, கைப்புள்ள, நல்வரவு!!

Unknown said...

அடடா வருத்தப் படாத வாலிபர் சங்க ஆண்டு விழாவா? போட்டி எல்லாம் வச்சிருக்கு... பின்னூட்டம் வாங்கறதுக்குள்ளே கண்ணுக் கட்டுதா? ஆங்.. விடைத் தெரியல்ல பின்னூட்டம் போட்டதுக்கு ஒழுங்கா ஆறுதல் பரிசு வந்து சேரணும்ய்யா சொல்லிப்புட்டேன் ஆமா...

கைப்புள்ள said...

ரம்யா, தேவ்,
வாங்க வாங்க! வந்து புண்ணியம் கட்டிக்கிட்டீங்க! காலையிலிருந்து ஒவ்வொரு 10 நிமிஷமும் பின்னூட்டம் வந்துதா வந்துதானு ப்ளாக்கை தெறந்து தெறந்து பாத்துக்குனு இருக்கேன். என்னிக்கு ஆபிஸ்ல மாட்ட போறேனோ தெரியலை. நீங்க எல்லாம் எப்படி சமாளிக்கிறீங்க? நான் வரலை இந்த வெளாட்டுக்கு.

எல்லா தகிடுதத்தமும் செஞ்சாச்சு...வர்றவங்க எல்லாம் பின்னூட்டமா கிலோ என்ன வெலைனு கேக்கறாங்க? எந்த பப்பும் வேக மாட்டேங்குது.

பெரியவங்களே! ஒரு யோசனை சொல்லுங்க. இந்த பதிவுக்கு ஒரு 30-40 பின்னூட்டம் வந்ததும் பதிலை சொல்லிடலாமா? இது நியாயமான நப்பாசை தானே?

Prabu Raja said...

ethana naal vanthu vanthu paakarathu?

en accountla nanum oru pinnoottam pottutten.

thayavu senju vidaya sollungappu..

R. Prabu

Anonymous said...

This is in Bethlahem

வெற்றி said...

கைப்புள்ள,
எனக்கு உங்களின் கேள்விக்கான விடை திடமாகத் தெரியாது. ஆகவே ஊகத்தில்[guess] பதில் சொல்கிறேன். சரியா, தவறா என்று சொல்லுங்கள்.

படத்தின் ஒரு புறத்தில் தெரியும் இலையை[ஓலையை] பார்க்கும் போது, இம் மரம் கூடுதலாக மத்திய கிழக்கு [middle east] நாடுகளில் வளரும் மரம் போல் தெரிவதால், இவ் உருவச்சிலை மத்திய கிழக்கில் உள்ள நாடொன்றில் தான் இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. குறிப்பாக இஸ்ரேல் அல்லது பாலஸ்தீனத்திற்குள் இருக்கும் என்பதே என் ஊகம். நன்றிகள்.

கைப்புள்ள said...

பிரபுராஜா,அனானிமஸ்,வெற்றி,
தங்கள் வருகைக்கும் பங்கேற்புக்கும் மிக்க நன்றி. பல மாதங்களுக்கு முன்னர் போட்ட பதிவுக்கும் வந்து பதிலளித்துள்ளீர்கள். விடையையும் பல மாதங்களுக்கு முன்னரே சொல்லியாயிற்று. :)-
இச்சிலை இருப்பது சென்னை பரங்கிமலையில்.

பதில் சொல்லியிருக்கும் பதிவை இங்கே காணுங்கள்.

நன்மனம் said...

ஆகா, அங்கிட்டு பின்னூட்டம் வரலனு சொல்லறதுக்கு ஒரு "லிங்க்" வேற, வெளங்கிடிடுத்தையா இந்த

"(சே! பாழாப் போன பின்னூட்டம் வாங்கறதுக்கு என்னென்ன டகாய்த்தி வேலை, டயலாக் எல்லாம் விட வேண்டியிருக்கு."

வரிக்கு அர்த்தம்....

இந்த எடத்த கண்டுபிடிக்க சங்கத்து சார்பா எட்டு திக்கும் ஆளுங்கல அனுப்பி இருக்கேனே!!!! இருங்க எல்லாரையும் "தல" வீட்டுக்கு அனுப்பறேன், எதுக்குனு கேக்கபிடாது சொல்லிப்புட்டேன்....

Vaa.Manikandan said...

Is it?

I thought it is in

விவேகானந்தர் குறுக்குத் தெரு(பெரிய பஸ் ஸ்டாண்ட் அருகில்),துபாய்

கைப்புள்ள said...

//ஆகா, அங்கிட்டு பின்னூட்டம் வரலனு சொல்லறதுக்கு ஒரு "லிங்க்" வேற, வெளங்கிடிடுத்தையா இந்த

"(சே! பாழாப் போன பின்னூட்டம் வாங்கறதுக்கு என்னென்ன டகாய்த்தி வேலை, டயலாக் எல்லாம் விட வேண்டியிருக்கு."

வரிக்கு அர்த்தம்....//
இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பு...கண்டுக்கப் பிடாது.

//"தல" வீட்டுக்கு அனுப்பறேன், எதுக்குனு கேக்கபிடாது சொல்லிப்புட்டேன்....//
தாராளமா வாங்க...ஆனா நான் இருக்க மாட்டேனே...அப்ப என்ன பண்ணுவீங்க...இப்ப என்ன செய்வீங்க.

கைப்புள்ள said...

//I thought it is in

விவேகானந்தர் குறுக்குத் தெரு(பெரிய பஸ் ஸ்டாண்ட் அருகில்),துபாய்//

நீங்க சொல்ற எடம் நம்ம பேட்டைன்னாலும்...இந்த சிலை இருக்கற எடம் மெய்யாலுமே பரங்கிமலை தான்.