சென்னைத் தமிழ் சற்றேனும் நீங்கள் அறிவீர்கள் ஆனால் "டாய்...டபாய்க்கிறே!" என்று பலரும் திருவாய் மலர்ந்தருள கேட்டிருப்பீர்கள். டபாய்க்கிறே என்பது ஏமாற்றுவதைக் குறிப்பதாகத் தலைநகரில் வழங்கப்படுகிறது. என்ன அது "டபாய்க்கிறே".
திருவல்லிக்கேணி அக்பர் சாஹிப் தெருவில் நான் படித்த இந்தி வகுப்பில், மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட நாராயணன் சார் பல ஆண்டுகளுக்கு முன் கொடுத்த விளக்கம். டபாய்க்கிறே என்று வெறுமனே சொல்வது இப்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் இதன் முன்னோடி "ஏன் டபாய்க்கிறே?".
"ஏன் டபாய்க்கிறே?" = "ஏண்டா அப்பா ஏய்க்கிறே?". இவ்வளவு ஏக்கமாகக் கேட்கும் அளவுக்கு யாரும் இப்போது டபாய்ப்பது கிடையாது என்பது வேறு விஷயம்.
"சொல்றோம்ல" என்ற தலைப்பில் பல வழிகளில் அறிந்ததை வரும் நாட்களில் வழங்குவேன்.
Wednesday, January 04, 2006
சொல்றோம்ல: டபாய்க்கிறே?
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
nalla dabaikirey mohan raj -- whathappened to songs...
கொஞ்சம் பொறுமையா இருண்ணா!
Sokkaa thaan sollikeeraa...
amaaa intha kaalaaikirathunnaa enna paa...
innum eduthu vidanumnnaa 2500 varaikkum sollalaam.. but padhivu 25nnu title vaichathaalae 25 oda stop pannikkitten...
I eagerly expect your SOLLUROMELLEY blog posts
கலாய்க்கிறதுனா என்னன்னு தெரியலியேமா! பழைய சாமானுக்கு பாலிஷ் போடறதை நம்மூர்ல 'கலாய் பூசுறதுனு' சொல்லுவாங்க. ஒரு வேளை அதுலேருந்து வந்துச்சோ என்னவோ?எதனா லிங்க் இருக்கானு பாரு நைனா!
சரி சதாய்க்கிறேனு ஒரு வார்த்தை...அதுக்கு ரப்சர் குடுக்கறதுனு அர்த்தம். அது இன்னாங்கறீயா? இந்தியிலே 'சத்தானா' அப்படினா 'தொல்லை குடுக்கறது' இல்ல 'கஷ்டம் குடுக்கறது'னு மீனிங். கண்டுபுட்ச்சு சொன்னது நான் தாம்பா.
Post a Comment