Sunday, January 08, 2006

பெண்ணே!

ஹி...ஹி...இதுவும் மீனாதானுங்கோ(நம்புங்க)! படம் வாட்டாக்குடி இரணியன். "பொற்காலம்" நல்லாருக்குனு நம்ம மச்சான்ஸ் எல்லாம் உசுப்பிவிட்டதன் விளைவு..."பெண்ணே!"


நான் கவிதைனு எழுதினது எல்லாத்தயும் தமுக்கடிச்சாச்சு. இனிமேல் புதுசா ஏதாச்சும் எழுதினாத் தான் உண்டு.

22 comments:

கீதா said...

கவிதை நல்லா இருக்கு ஆனா அது மீனாங்கிறதுதான் நம்பவேஏஏ முடியலை :)

அன்புடன்
கீதா

கைப்புள்ள said...

//மீனாங்கிறதுதான் நம்பவேஏஏ முடியலை :)//

என்ன பண்றது...மீனாவையே வரையற திறமை இருந்தா நான் இந்நேரம் ஓவியனா இல்ல இருப்பேன்?
:)-

நாமக்கல் சிபி said...

மீனா ஒப்பனை(அதாங்க மேக்கப்பு) இல்லாத நேரமா பார்த்து வரைஞ்சீங்களோ!

(மீனா ரசிகர்கள் மன்னிக்க)

கைப்புள்ள said...

இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லால்ல...ஆமா. நம்ம சங்கத்து ஆளே இப்படி பேசுன்னா நம்மளை வேற யாரு மதிப்பான்?

காதைக் குடுங்க:
கைப்பு! மீனா படம் சூப்பருன்னு வேற ஒரு பேருல பின்னூட்டம் போடுங்க...உங்களைத் தனியாக் கவனிச்சுக்கறேன்...சரியா?

நாமக்கல் சிபி said...

//மீனா படம் சூப்பருன்னு வேற ஒரு பேருல பின்னூட்டம் போடுங்க...உங்களைத் தனியாக் கவனிச்சுக்கறேன்...சரியா?//

இந்த வேலைய செய்ய ஏற்கனவே வேற ஒருத்தரு இருக்காரு, கூப்பிடட்டுமா?

(இதன் நகல் பின்னூட்டம் :
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

கைப்புள்ள said...

//இந்த வேலைய செய்ய ஏற்கனவே வேற ஒருத்தரு இருக்காரு, கூப்பிடட்டுமா? //

இதெல்லாம் கேக்கணுமா? இந்நேரம் செஞ்சில்ல முடிச்சிருக்கணும்?

சேதுக்கரசி said...

சிம்பிளா, நல்லா இருக்கு கவிதை.

Divya said...

நல்லா எழுதியிருக்கிறீங்க கைபுள்ள.......தொடர்ந்து கவிதைகள் எழுதலாமே!!

சேதுக்கரசி said...

//தொடர்ந்து கவிதைகள் எழுதலாமே!!//

திவ்யா, நாங்கல்லாம் நிம்மதியா இருக்கது பிடிக்கல? :-D (சரி சரி சும்மா சொன்னேன் கைப்ஸ், நீங்க பாட்டுக்கு எழுதுங்க, நாங்க இருக்கோம்ல)

Anonymous said...

கைப்புள்ள
என்னைப் பற்றி, மன்னிக்கவும் பெண்ணைப் ப்ற்றி அருமையான கவிதை.
பட்சே, நீங்கள் விவாகம் பண்ணேல்லண்டு
ஞான் அறியும். ஏனெனில் பெண்ணின் இன்னொரு அவதாரமான "மகள்" பற்றி எழுதப்படவில்லையே. ஏன்?

கைப்புள்ள said...

//சிம்பிளா, நல்லா இருக்கு கவிதை//

கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன் பதிவிட்ட கவிதையைத் தாங்கள் படித்துப் பாராட்டியதால், இக்கவிதையை இப்போது பலரும் படித்துத் தங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அதற்காகவே தங்களுக்கு ஒரு சிறப்பு நன்றி.

கைப்புள்ள said...

//நல்லா எழுதியிருக்கிறீங்க கைபுள்ள.......தொடர்ந்து கவிதைகள் எழுதலாமே!!//

மிக்க நன்றி திவ்யா. முதலில் கவிதை போல எதாவது எழுத வேண்டும் என்றால் எழுத நினைக்கும் அந்த கருத்தை வைத்துக் கொண்டு பல நாட்கள் வாழ வேண்டும், அல்லது ஒரு ஆழ்ந்த தாக்கத்தை எதாவது ஒரு நிகழ்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதை எல்லாத்தையும் மீறியும் எழுதி விட்டால் இதெல்லாம் ஒரு கவிதையான்னு பல சமயம் ஒரு எண்ணம் வரும். நினைத்த அளவில் கற்பனையைத் தட்டிக் கவிதை எழுதும் திறன் என்னிடம் இல்லை. எனினும், தாங்கள் ஊக்கப் படுத்தியிருக்கிறீர்கள், முயற்சிக்கிறேன்.
:)

கைப்புள்ள said...

//திவ்யா, நாங்கல்லாம் நிம்மதியா இருக்கது பிடிக்கல? :-D (சரி சரி சும்மா சொன்னேன் கைப்ஸ், நீங்க பாட்டுக்கு எழுதுங்க, நாங்க இருக்கோம்ல)//

ஹி...ஹி...சரியாத் தானே சொல்லிருக்கீங்க. கவிதைன்னு ஒன்னு எழுதிட்டா எப்படியிருக்குன்னு கருத்து கேக்க உங்க கிட்ட கொண்டாந்து நீட்டிடுவேனே? நல்லாருக்குன்னு பொய் வேற சொல்லனும்.அந்த பயம் தானே?
:D

கைப்புள்ள said...

//கைப்புள்ள
என்னைப் பற்றி, மன்னிக்கவும் பெண்ணைப் ப்ற்றி அருமையான கவிதை.//

வாங்க சேச்சி,
கவிதை நன்னாயிட்டுண்டோ? உத்திரிய சந்தோஷம்.

//பட்சே, நீங்கள் விவாகம் பண்ணேல்லண்டு
ஞான் அறியும். ஏனெனில் பெண்ணின் இன்னொரு அவதாரமான "மகள்" பற்றி எழுதப்படவில்லையே. ஏன்?//
எனிக்கி விவாஹம் ஆயிட்டில்லா. சத்தியம். பட்சே 'மகள்' அவதாரத்தைக் குறிச்சி ஞான் எழுதாததுக்குக் காரணம் ஞான் விவாஹம் கழியாதவன் என்பதல்லா. ஈ கவிதையை ஞான் எழுதியது 1998இல். அப்போழ் ஞான் கொச்சு குட்டன். அதிலேயே காதலி, மனைவி குறிச்செல்லாம் கற்பனை செஞ்சே எழுதியது. அப்போழ் ஞான் மகள் பற்றி யோசிக்கவே இல்லை.
:)

இப்போ நீங்க கேட்டதுனாலே யோசிச்சது. அப்போ தோணுனது.

"உனை உச்சி முகரும்
வேளை, வாழ்வின்
பொருளுணர்த்தி, மகளாய் எனை
கர்வம் கொள்ளச் செய்கின்றாய்!"

எப்படிங்க இருக்கு?

Anonymous said...

ஈ கவிதை நிங்கள் எழுதியது 1998 லோ?
ம்ம் ஈகவிதை நல்லாவே இருக்கு.
சேச்சியின் நன்றிகள்! என்ன
மலையாளம் நல்லா வெழுத்துவாங்கிறீங்க.
மகள் பற்றிய கவிதை மிகவும் அருமை. அதில் பாரதி கண்ணம்மாவின் சாயல் தெரிகிற்து
"உச்சிதனை முகர்ந்தால் கண்ணம்மா
உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி"(இது சரி என்றுதான் நினைக்கிறேன்)
நன்றி.

கைப்புள்ள said...

//ஈ கவிதை நிங்கள் எழுதியது 1998 லோ?//
அதே :)

//ம்ம் ஈகவிதை நல்லாவே இருக்கு.
சேச்சியின் நன்றிகள்! என்ன
மலையாளம் நல்லா வெழுத்துவாங்கிறீங்க//
ஹி...ஹி...எனக்கு தெரிஞ்ச மலையாளத்தை எல்லாம் கிண்டி எதோ ஒரு வாக்கியம் மாதிரி அமைச்சிட்டேன். இதுக்கு மேல எதாச்சும் கேட்டீங்கன்னா ஒன்னும் தெரியாது.

//
மகள் பற்றிய கவிதை மிகவும் அருமை. அதில் பாரதி கண்ணம்மாவின் சாயல் தெரிகிற்து
"உச்சிதனை முகர்ந்தால் கண்ணம்மா
உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி"(இது சரி என்றுதான் நினைக்கிறேன்)
நன்றி. //

மிக்க நன்றி. சாயலா? நான் பண்ணிருக்குறதுக்கு பேரு காப்பிங்க :) நீங்க சொன்ன அதே பாரதியார் கவிதையை மனசுல வெச்சிக்கிட்டு தான் எழுதுனேன். என்ன பண்ணறது? நம்ம கெபாகிடி அவ்ளோ தான்.
:)

சேதுக்கரசி said...

//கவிதைன்னு ஒன்னு எழுதிட்டா எப்படியிருக்குன்னு கருத்து கேக்க உங்க கிட்ட கொண்டாந்து நீட்டிடுவேனே? நல்லாருக்குன்னு பொய் வேற சொல்லனும்.அந்த பயம் தானே?//

தாராளமா கொண்டாங்க. சும்மா ஆகா ஓகோன்னும் சொல்லிடமாட்டேன், அலசி ஆராய்ஞ்சிடுவோம்.

Anonymous said...

உண்மையைச் சொல்றேன் எனக்கும் மலையாளாம் அவ்வாளவாய் தெரியாது.கைப்புள்ள எழுதிய மலையாளத்தைப் பார்த்து பயந்திட்டேன். பின்னயல்லோ தெரிஞ்சுது கைப்புள்ளைக்கும் அந்தளவுதான் தெரியுமாம்.
காப்பி்யடிக்கிற பழக்கமும் உண்டா?
உண்மையை ஒத்துக்கிற தாராள மனசு யாருக்கு வரும், கைப்புள்ளைக்கு வரும்.
அதெந்தாது கெபாகிடி?

கைப்புள்ள said...

//தாராளமா கொண்டாங்க. சும்மா ஆகா ஓகோன்னும் சொல்லிடமாட்டேன், அலசி ஆராய்ஞ்சிடுவோம்.//

ரைட்டேய் :)

கைப்புள்ள said...

//உண்மையைச் சொல்றேன் எனக்கும் மலையாளாம் அவ்வாளவாய் தெரியாது.கைப்புள்ள எழுதிய மலையாளத்தைப் பார்த்து பயந்திட்டேன். பின்னயல்லோ தெரிஞ்சுது கைப்புள்ளைக்கும் அந்தளவுதான் தெரியுமாம்.//
மலையாளத்துல Is, was எல்லாம் தெரியாது. அதனால ஒரு சில கலைச் சொற்களை வச்சி ஒப்பேத்தறது தான்.
:)

//காப்பி்யடிக்கிற பழக்கமும் உண்டா?//
இல்லியா பின்ன? அதெல்லாம் இல்லாட்டி நம்ம வண்டி எப்படி ஓடும்?

//அதெந்தாது கெபாகிடி?//
கெபாகிடி எந்தெங்கில் ஞான் பரையறதை விட ஞான் ஒரு ஜோக் சொல்லாம். சேச்சி அதை கேட்டால் மதி. கேட்டோ? ஆதியய காலத்தில் ஞங்களுடே ஆலப்புழைல ஒரு கொச்சு குட்டன் உண்டு. அவன் ஆ பிராயத்தில் ஒரு கொச்சு மிடில் ஸ்கூளில் படிச்சிட்டுண்டு. ஆ குட்டனோட மிஸ் ஒரு வாட்டி "ஏ வாழைப்பழம் என்று பரைஞ்சிக்கோடா" என்று பரைஞ்ஞு. ஆனா குட்டன் என்ன பரைஞ்செங்கில் "வாயைப்பயம்". மிஸ் உத்திரிய முறை டிரை செஞ்சும் குட்டன் வாயிலிருந்து "வாழைப்பழம்" என்று வரான்பாடில்லா. கேட்டோ? அவன் "வாயைப்பயம்" என்றே பரைஞ்சி கொல்லறான். மிஸ்சுக்கும் உத்திரிய கோபம் உண்டாயி. "நாளைக்கு நிண்ட அச்சனைக் கூட்டிக் கொண்டு வந்தால் மதி. அது வரைக்கும் கிளாஸை விட்டுப் பொய்க்கோடா" என்று கோவமா கத்தீ.

மறுநாள் குட்டனுடெ அச்சன் ஸ்கூளுக்கு வந்தூ. "மிஸ்! ஞங்களை விளிப்பிச்சதோ?" என்று மிஸ்சைக் கேட்டூ. மிஸ்சும்"அதே! நிங்களுடெ குட்டன் வாழைப்பழம் என்று பரைய சொல்லும்போழ் வாயைப்பயம் என்று பரையறான்? ஏதானும் ஈ ஷம்ஷயம்?" என்று கேட்டூ? அத கேட்ட குட்டனுட அச்சன் "மிஸ்! கோவிச்சிக்க வேண்டாம். கேட்டோ? ஞங்களுடைய குட்டனுட கெபாகிடி அவ்வளவு தன்னே" என்று பரைஞ்ஞு.

சேச்சிக்கு 'கெபாகிடி' குறிச்சி இப்ப மனசிலாயோ?
:))

Anonymous said...

மனசிலாயி.
ஞங்கள் எல்லாரும் வீட்டில் ஈ கதையை மலையாளத்தில் படிச்சு விழுந்து விழுந்து சிரிச்சல்லோ. ரொம்ப நன்றிங்க.
நிங்கள் மலையாள்த்துக்கு ஞங்கள் வீட்டில் நல்ல வரவேற்பு.

கைப்புள்ள said...

//மனசிலாயி.
ஞங்கள் எல்லாரும் வீட்டில் ஈ கதையை மலையாளத்தில் படிச்சு விழுந்து விழுந்து சிரிச்சல்லோ. ரொம்ப நன்றிங்க.
நிங்கள் மலையாள்த்துக்கு ஞங்கள் வீட்டில் நல்ல வரவேற்பு//

ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி
:)