Thursday, January 05, 2006

'நியூ' படத்தில் பிடித்தது

'நியூ' திரைப்படம் சர்ச்சைக்குள்ளாகி ஆபாசமான படம் என்று முத்திரை குத்தப்பட்டு சமீபத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டது அறிந்ததே. அப்படத்தை நான் காணவில்லை எனினும் டிவியில் பார்த்த ஒரு சிறு பகுதியிலேயே என் மனதினைக் கவர்ந்த காட்சி ஒன்று உண்டு.

அது தேவயானி தன் காணாமல் போன் மகனை நினைத்து அழுதுகொண்டே பேசுவதாக அமைந்த ஒரு காட்சி. "என் மகன் எப்போதும் என் கையால் தான் சாப்பிடுவான். சாப்பாடு ஊட்டும் போது சாப்பாட்டை மட்டும் சாப்பிட மாட்டான். என் விரலையும் சேர்த்து தான் சாப்பிடுவான்" - இந்த ஒரு இடத்தில் நிற்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ஏனேனில் இது நான் அனுபவித்த ஒன்று. வெறும் ரசம் சாதமே ஆனாலும் அம்மா கையால் ஊட்டிக் கோண்டால் எப்போதுமே ஒரு பிரமாதமான தனி ருசியை உணர்ந்திருக்கிறேன். அம்மாவைக் கேட்டால் உன் கையாலேயே நல்லா பெசஞ்சு சாப்பிட்டு பாருன்னு சொல்லுவாங்க. ஆனால் பல முறை முயன்றும் தோல்வி தான்.

தன் கையால் சாப்பிடும் போது கிடைக்காத அந்த ருசி அம்மா கையால் சாப்பிடும் போது மட்டும் எப்படி கிடைக்கிறது...நிஜமாகவே அம்மா விரலை சாப்பிடுகிறோமா? இந்த காட்சியை பார்த்தவர்களும் பார்க்காதவர்களும் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று தெரியப்ப்டுத்துங்களேன்!

20 comments:

Anonymous said...

That is mother. God representative to take care and nuture us. Ok by the way restless gemini-- started taking rest it seems. no updation. Busy with new wife....

கீதா said...

அது உண்மைதாங்க... அம்மா கையால சாப்பிட்டா அதுக்கு தனி ருசி வருது..

சில சமயம் எனக்கு பசிக்கவே பசிக்காது.. சாப்பாடு வேணாம்ணு சொல்லுவேன்.. ஆனா அம்மா வலுக்கட்டாயமா சாதம் பிசைஞ்சு எடுத்து வந்து ஊட்டுவாங்க..

வழக்கத்துக்கு மாறா நிறையவே சாப்பிடுவேன்.. அது எனக்கே தெரியாது.. கடைசியிலே சொல்லுவாங்க.. இவ்வளவு பசிய வச்சிக்கிட்டு வேணாங்கிறன்னு..

நம்ம பசி நமக்கே தெரியாதுங்க.. அம்மா ஒரு அற்புதம்

கைப்புள்ள said...

நன்றி மேடம்! இச்சமயத்தில் நடிகர் சூர்யா 'மதர்ஸ் டே' அன்று ஜெயா டிவியில் டெலிசாய்ஸ் நிகழ்ச்சியில் சொல்லியது நினைவுக்கு வருகிறது. மதர்ஸ் டே அன்னிக்கு நீங்க உங்க அம்மாவுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?னு ஒரு நேயர் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதில், நடிகர் என்பதைத் தாண்டி ஒரு மரியாதையை அவர் மேல் ஏற்படுத்தியது. "மதர்ஸ் டே என்று தனியாக எதையும் கொண்டாடுவது கிடையாது. அந்த ஒரு நாள் மட்டும் கார்டோ அல்லது கிஃப்டோ அம்மாவுக்கு வாங்கி கொடுத்து வாழ்த்து சொல்வதில் உடன்பாடு கிடையாது. ஒவ்வொரு நாளும் மதர்ஸ் டேவாக அம்மாவின் அன்பையும் அம்மாவையும் மனதில் வைத்துக் கொண்டால் போதும்" சூர்யா சொன்னது எவ்வளவு உண்மை. நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

கைப்புள்ள said...

வாங்க குமார்,
தங்கள் முதல் வருகைக்கு நன்றி. நீங்க சொல்றது சரி தாங்க. எவ்வள்வு தான் ஓட்டல்ல நல்ல சாப்பாடு சாப்பிட்டாலும் வீட்டுல அம்மா கையால சாப்பிடற சுவை அதனால தான் வர்றதில்லை.

சேதுக்கரசி said...

வெற்றிகரமா இதுவரை எஸ்.ஜே.சூர்யாவோட எந்தப் படத்தையும் பார்த்ததில்லை -- வாலியைத் தவிர.. ஆனா நல்லவேளை அதில் அவர் நடிக்கலை :-) நியூ படத்தைப் பத்தி நான் கேட்ட முதல் நல்ல சேதி இது :-) கைப்ஸ்.. டச்சிங்கா கூட பதிவு எழுதுவீங்களா?

நாமக்கல் சிபி said...

நல்ல சீனை மட்டும் பாத்துருக்கீங்க...
அதே மாதிரி நீங்க சொல்றதும் உண்மைதான். எங்க அம்மா ஊட்டிவிடும் போது கொஞ்சம் அதிகமாவே சாப்பிடுவேன்.

Divya said...

\"வெறும் ரசம் சாதமே ஆனாலும் அம்மா கையால் ஊட்டிக் கோண்டால் எப்போதுமே ஒரு பிரமாதமான தனி ருசியை உணர்ந்திருக்கிறேன்\"

அம்மாவின் சமையல் ஒரு தனி ருசி!
அதை அவர்கள் கையால் ஊட்டும் போது அந்த ருசி இன்னும் அதிகமாகிறதென்பது மறுக்க முடியாத உண்மை!!!

சீனு said...

ம்ம்...'நியூ' என்னுடைய ஃபேவரைட் படம். பெரும்பாலும் எஸ்.ஜே.சூர்யாஹ் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். குஷி, அ.ஆ, நியூ ஆகியவை என்னுடைய ஃபேவரைட் படங்கள்.

'நியூ' படத்தில் நீங்கள் குறிப்பிடும் காட்சியில் அவன் தன் அம்மாவை சமாதானப்படுத்தி சாப்பிட வைக்க வேண்டும். வழக்கமான காட்சிகளாக இல்லை. புதுமையாக இருக்கும். 'நாளைக்கு உங்க பையன் வருவானில்ல. அப்போ நீங்க ஓடிப்போய் மகனை கொஞ்சனும் இல்ல. அதுக்கு உங்களுக்கு தெம்பு வேணும் இல்ல. அப்போ சாப்பிடுங்க'. இப்படி சொன்னா எந்த அம்மா தான் சாப்பிடாம இருப்பாங்க.

எஸ்.எஸ்.மியூசிக்-ல் ஒரு முறை அவர் பேட்டி. அவருக்கு ஆங்கிலம் சுத்தமாக வரவில்லை. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலையோ கூச்சமோ படாமல், பட்லர் ஆங்கிலத்தில் எப்படி அவர் திரைக்கதை அமைப்பார் என்று விளக்கினார் பாருங்கள். உண்மையிலேயே அது ஒரு எக்ஸலண்ட் நேர்கானல். 'You see other film. This scene there. Dont take that. Think in other way. Same scene in different situation...' இப்படி போகிறது. அவர் மேல் இருந்த மரியாதை அதிகமானது.

வக்கிரமும் ஆபாசமும் மட்டும் இல்லாமல் எடுத்தால், உண்மையில் அவர் ஒரு மிகச் சிறந்த திரைக்கதாசிரியர் தான்.

சீனு said...

//அம்மாவின் சமையல் ஒரு தனி ருசி!//

எனக்கென்னவோ சிறிய வயதில் இருந்து சாப்பிட்டுப் பழக்கமாவதால் ரசம் சாதம் கூட பிரத்யேகமாக தெரிகிறதோ என்னவோ???

நாமக்கல் சிபி said...

இது எப்ப எழுதிய பதிவு?

இலவசக்கொத்தனார் said...

அப்பா சாமி, கொஞ்ச நாள் இந்த சினிமா பத்தி எழுதாம இருக்கப்பா. எங்க பாத்தாலும் அது ஒண்ணுதான் ஓடுது. மூச்சடைக்குதப்பா.

(இதுதான் சாக்குன்னு கவுஜ எல்லாம் எழுதக் கிளம்பக்கூடாது சொல்லிட்டேன்)

கைப்புள்ள said...

//வெற்றிகரமா இதுவரை எஸ்.ஜே.சூர்யாவோட எந்தப் படத்தையும் பார்த்ததில்லை -- வாலியைத் தவிர.. ஆனா நல்லவேளை அதில் அவர் நடிக்கலை :-) நியூ படத்தைப் பத்தி நான் கேட்ட முதல் நல்ல சேதி இது :-) கைப்ஸ்.. டச்சிங்கா கூட பதிவு எழுதுவீங்களா?//

வாங்க மேடம்,
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. இந்தக் காட்சியை சன் டிவியில் டிரெயிலரில் பார்க்கும் போது பிடித்திருந்தது. அதனால் எழுதினேன்.

கைப்புள்ள said...

//நல்ல சீனை மட்டும் பாத்துருக்கீங்க...
அதே மாதிரி நீங்க சொல்றதும் உண்மைதான். எங்க அம்மா ஊட்டிவிடும் போது கொஞ்சம் அதிகமாவே சாப்பிடுவேன்.//

கிட்டத்தட்ட ஒரு வருசத்துக்கு முன்னாடி எழுதுனது புடிச்சி கமெண்ட் போடறதை நெனச்சா சந்தோஷமா இருக்கு பாலாஜி. டேங்க்ஸ்.
:)

கைப்புள்ள said...

//அம்மாவின் சமையல் ஒரு தனி ருசி!
அதை அவர்கள் கையால் ஊட்டும் போது அந்த ருசி இன்னும் அதிகமாகிறதென்பது மறுக்க முடியாத உண்மை!!!//

வாங்க திவ்யா,
அதே! அதே! அந்த உண்மையை உணர்ந்து எழுதியது தான் இது. உங்க வருகைக்கு மிக்க நன்றி.

கைப்புள்ள said...

//எஸ்.எஸ்.மியூசிக்-ல் ஒரு முறை அவர் பேட்டி. அவருக்கு ஆங்கிலம் சுத்தமாக வரவில்லை. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலையோ கூச்சமோ படாமல், பட்லர் ஆங்கிலத்தில் எப்படி அவர் திரைக்கதை அமைப்பார் என்று விளக்கினார் பாருங்கள். உண்மையிலேயே அது ஒரு எக்ஸலண்ட் நேர்கானல். 'You see other film. This scene there. Dont take that. Think in other way. Same scene in different situation...' இப்படி போகிறது. அவர் மேல் இருந்த மரியாதை அதிகமானது.

வக்கிரமும் ஆபாசமும் மட்டும் இல்லாமல் எடுத்தால், உண்மையில் அவர் ஒரு மிகச் சிறந்த திரைக்கதாசிரியர் தான்.//

வாங்க சீனு,
எஸ்.ஜே.சூர்யாவைப் பிடிக்கும்னு வித்தியாசமான கண்ணோட்டத்தை முன் வைச்சிருக்கீங்க. திரைக்கதை அமைப்பதில் நிறைய புதுமைகளைச் செய்வதால் பாரதிராஜாவுக்கும் சூர்யாவைப் பிடிக்கும் என ஒரு பேட்டியில் கூறியிருந்தது நினைவுக்கு வருது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

கைப்புள்ள said...

//எனக்கென்னவோ சிறிய வயதில் இருந்து சாப்பிட்டுப் பழக்கமாவதால் ரசம் சாதம் கூட பிரத்யேகமாக தெரிகிறதோ என்னவோ???//

எனக்கு இப்ப ரசம் சாதம் கூட கிடைக்க மாட்டேங்குதுங்க. ஒரே ஏக்கம் தான். என்னப் பண்றது?
:(

கைப்புள்ள said...

//இது எப்ப எழுதிய பதிவு?//

வாங்க தளபதி,
ஜனவரி 2006ல் எழுதிய பதிவு இது.

கைப்புள்ள said...

//அப்பா சாமி, கொஞ்ச நாள் இந்த சினிமா பத்தி எழுதாம இருக்கப்பா. எங்க பாத்தாலும் அது ஒண்ணுதான் ஓடுது. மூச்சடைக்குதப்பா.

(இதுதான் சாக்குன்னு கவுஜ எல்லாம் எழுதக் கிளம்பக்கூடாது சொல்லிட்டேன்)//

கொத்ஸ்! இது ஜனவரி மாசம் எழுதுனதுங்க. பின்னூட்டம் இடப் பட்டதுனால இப்ப மேல வந்துடுச்சு. இதுக்கெல்லாம் என்னை குத்தம் சொல்லப்பிடாது. ஆமா!
:))

Anonymous said...

வணக்கம்,

கைப்புள்ள நான் வலை பதிவுகளுக்கு புதியவன். இப்பதான் உங்க பதிவுகள் படித்து வருகிறேன். இது மிக நல்ல பதிவு. அன்னையர் தினம் வரும் நெருங்கி வரும் வேளையில் இதை நீங்கள் மீண்டும் பதிவிட வேண்டுகிறேன், அதன் மூலம் எங்கோ நமக்காக காத்திருக்கும் அம்மாக்களின் உண்மை தேவைகளை நமது மக்கள் உணர்வார்கள்.அது நாம் அனுப்பும் வாழ்த்து அட்டை, குறுன்செய்தி, அன்பளிப்பு, ஒரு போன் கால் அல்ல என்று நமது மக்கள் உணர்ந்தால் நல்லது. Our presence is the present

அது நாம் அனுப்பும் வாழ்த்து அட்டை, குறுன்செய்தி, அன்பளிப்பு, ஒரு போன் கால் அல்ல என்று நமது மக்கள் உணர்ந்தால் நல்லது. அவள் இன்றும் நமக்கு சோறு ஊட்ட காத்திருக்கிறாள், நாம்தான் வளர்ந்துவிட்டோம் (மறந்துவிட்டோம்?). MGR & மு. கருணாநிதி (அவர்கள் மேல் இருக்கும் விமர்சனங்கள் தனி) புகழுக்கு காரனம் அவர்கள் எப்பொழுதும் தாய் பக்தியொடு இருந்தார்கள். அனைத்தும் அவர்தம் தாயின் அசீர்வாதங்களே. நாம் என்ன அவர்களை விட பெரிய அளவில் பனம் சம்பதிக்க பொகிறோமா.. இல்லை அவர்களை விட நேர பற்றாகுறையா நமக்கு..

மீண்டும் இதை பதிவிடுவேர்கள் என்ற நம்பிக்கையோடு

சரவணன்

cheena (சீனா) said...

அன்பின் கைப்புள்ள

அருமையான பதிவு - அன்னையர் தினத்தன்று ( இன்னிக்கா நேத்திக்கா ) அம்மா பற்ரியும் அம்மாவின் கைச்சமையல் பற்றியும் அவரது அன்பினைப் பற்றியும் எழுதிய பதிவினிற்கு வலைச்சரத்தில் சுட்டி கொடுத்தது பாராட்டத் தக்கது