Thursday, January 05, 2006

பாட்டு படிக்கேன் : புத்தன் வந்த திசையிலே...

1962ஆம் ஆண்டு சீனப் போர்தொடுப்பின் போது தேசிய உணர்வைத் தூண்டுவதற்காக தயாரிக்கப்ப்ட்டு வெளிவந்த படம் "இரத்த திலகம்(1963)". இப்படத்தில் வரும் "புத்தன் வந்த திசையிலே..." பாடலைக் கேட்கும் போதெல்லாம் உணர்ச்சிவசப் பட்டிருக்கிறேன். காரணம் கவியரசு கண்ணதாசனின் அமுத வரிகள். பாடல் வரிகளுக்காகவும் கற்பனை நயத்திற்காகவும் பலமுறை கேட்கத் தூண்டும் பாடல்கள் உண்டு. இது அவ்வகையில் வந்த ஒரு மிகச் சிறந்த பாடல். கே.வி.மகாதேவனின் இசையும் பாடலுக்கு பலமூட்டும் விதமாக அமைந்திருக்கும்.

தாய்நாட்டைக் காக்க, போருக்காக வீரர்களை அழைப்பதாக அமைந்த இப்பாடலில் பலமுறை ரீவைண்ட் செய்யச் சொல்லும் வரிகள் இதோ:
"மக்களுக்கு புத்தி சொல்லி வா
மனைவி கண்ணில் முத்தமிட்டு வா
பெற்றவர்க்கு தாள் பணிந்து வா
பேர் எடுக்க போர் முடிக்க வா வா வா

மறுபடிக்கும் வீழ்வதில்லை வா
மரணமேனும் பெறுவதென்று வா
பருவ நெஞ்சை முன்னிறுத்தி வா
பகைவனுக்கும் ஓருயிர் தான் வா வா வா"

பகைவனுக்கும் ஓருயிர் தான் வா - மெய்சிலிர்க்கச் செய்யும் கற்பனை நயம். 'Genius' written all over the song. Some songs get you on an emotional high...I consider this one as the best among them.

இதே படத்தில் 'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு...' என்ற பாடலும், 'பசுமை நிறைந்த நினைவுகளே...' பாடலும் கவிஞரின் மணிமகுடத்திற்கு மேலும் இரு மாணிக்கங்கள். 'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு... பாடலில் என்னைக் கவர்ந்த வரிகள் -
"மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்
அவர் மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை"
He has been quite prophetic in his words above. Indeed Kannadasan still lives through his immortal songs.

A parallel reference which I found in English is 'Ozymandias' by P.B.Shelley
"I met a traveller from an antique land
Who said:—Two vast and trunkless legs of stone
Stand in the desert. Near them on the sand,
Half sunk, a shatter'd visage lies, whose frown
And wrinkled lip and sneer of cold command
Tell that its sculptor well those passions read
Which yet survive, stamp'd on these lifeless things..."
The lines above probably capture the permanence of real art.

4 comments:

சிறில் அலெக்ஸ் said...

கைப்பிள்ளைக்குள்ள இப்படி ஒரு இலக்கியன் இருக்கான்ணு பலர் தெரிஞ்சுக்கல போலிருக்கு.

அருமையான பதிவு...கைப்ஸ்.

கைப்புள்ள said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சிறில்.

சேதுக்கரசி said...

போன வாரம் நீங்க சொல்லித் தான் இந்தப் பாடல் பத்தித் தெரிஞ்சது... நன்றி கைப்ஸ்!

கைப்புள்ள said...

//போன வாரம் நீங்க சொல்லித் தான் இந்தப் பாடல் பத்தித் தெரிஞ்சது... நன்றி கைப்ஸ்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.