Friday, February 10, 2006

டண்டணக்கா ... டணக்கு ... டணக்கு

கடல்ல ஒரு கப்பல் போயிட்டிருக்கு. அந்த கப்பல்ல ஒரு முஸ்லிம், ஒரு கிறிஸ்டியன்
ஒரு ஹிந்து மூணு பேரு போயிட்டிருக்காங்க. அப்ப திடீர்னு கப்பல்ல ஓட்டை விழுதுடுது. கப்பல் கொஞ்சம் கொஞ்சமா மூழ்க ஆரம்பிக்குது. கப்பலோட மேல் தளத்துக்கு நம்மாளுங்க மூணு பேரும் ஓடியாராங்க.

முஸ்லிம் "யா அல்லா! என்னை காப்பாத்து" அப்படின்னுட்டு கடல்ல குதிச்சுடறாரு. அல்லா அவரைக் காப்பாத்திடறாரு. அவரும் பத்திரமா கரையேறிடறாரு. கிறிஸ்டியன் "ஏசுவே! எம்மை இரட்சியும்" அப்படின்னுட்டு கடல்ல குதிக்கிறாரு. ஏசுவும் அவரை பத்திரமா கரை சேர்த்திடறாரு. கடைசியா ஹிந்து"புள்ளையாரப்பா! என்ன காப்பாத்தப்பா" அப்படின்னுட்டு கடல்ல குதிக்கிறாரு. திடீர்னு டண்டணக்கா..டணக்கு...டணக்குன்னு ஒரு குத்தாட்டம் பீட்டு ஸ்டார்ட் ஆகுது. மூழ்கிட்டிருக்குற ஹிந்து ரொம்ப கஷ்டப்பட்டு தலையைத் தூக்கி பார்க்கறாரு. பார்த்தா கரையில் நின்னுக்கிட்டு புள்ளையார் ஐத்தலக்கா..ஐ..ஐ...ஆ...இந்தா...ஆ...இந்தான்னு சூப்பரா ஒரு டப்பாங்கூத்து ஸ்டெப் போட்டு ஆடிக்கிட்டு இருக்காரு.

ஹிந்து "புள்ளையாரப்பா ஒன்ன நம்பி தானே கடல்ல குதிச்சேன். என்ன காப்பாத்தறத உட்டுட்டு அங்கே கரையிலே நின்னு டப்பாங்கூத்து ஆடிட்டிருக்கியே"னு கேக்கறாரு. அதுக்கு புள்ளையாரு"டாய்! நிறுத்துடா. ஒவ்வொரு வருஷமும் புள்ளையார் சதுர்த்தி முடிஞ்சதும் என்னை மெரினா பீச்சுல கொண்டு போய் விசிறி விட்டிட்டு நீங்க இப்படி தானேடா ஆடுவீங்க. அப்ப எனக்கு எப்படி இருக்கும்"அப்படின்னுட்டு திரும்பவும் அட்டத்தை கண்டினியூ பண்ணறாராம்.

ஸ்கூல்ல ரொம்பவே ரசிச்ச இந்த ஜோக் இன்னிக்கு காலையிலே கம்பெனி பஸ்ஸூல வரும் போது திடீர்னு ஞாபகம் வந்துடுச்சு. கொஞ்சம் பழசு தான்...

40 comments:

ஜோ/Joe said...

ஹி..ஹி..ஹி

Anonymous said...

கொஞ்சம் இல்லை. ரொம்பவே பழசு...

கைப்புள்ள said...

வாங்க ஜோ/அனானிமஸ்,
தங்கள் வருகைக்கு நன்றி

நாமக்கல் சிபி said...

//டாய்! நிறுத்துடா. ஒவ்வொரு வருஷமும் புள்ளையார் சதுர்த்தி முடிஞ்சதும் என்னை மெரினா பீச்சுல கொண்டு போய் விசிறி விட்டிட்டு நீங்க இப்படி தானேடா ஆடுவீங்க. அப்ப எனக்கு எப்படி இருக்கும்"//

பிள்ளையாரோட ஃபீலிங்கை யாராவது புரிஞ்சிக்க முயற்சி செஞ்சி இருக்கமா?

இப்பதான் புரிஞ்சுது.

தேங்க்ஸ் டூ கைப்புள்ள.

கைப்புள்ள said...

//பிள்ளையாரோட ஃபீலிங்கை யாராவது புரிஞ்சிக்க முயற்சி செஞ்சி இருக்கமா?//

வாங்க சிபி,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கைப்புள்ள said...

சும்மா ஒரு ஜாலிக்கு போட்டதுங்க இந்த ஜோக். என்னோட நெருங்கிய நண்பர், என்னோட எல்லா பதிவுகளையும் படிப்பவர் - தனக்கு இந்த பதிவு பிடிக்கலைன்னும் கடவுளைப் பரிகாசம் பண்ற மாதிரி இருக்கும்னு சொன்னாரு. அது என்னோட நோக்கம் இல்லைன்னு நிறைய பேர் உணர்ந்திருக்கலாம். "நம்ம பதிவுக்கு வந்தீங்களா, ஜாலியா சிரிச்சீங்களா, உங்க கருத்தையும் சந்தோஷமா சொன்னீங்களா?" இப்படி இருக்கணும்ங்கிற எண்ணத்தோட தான் நான் என் எல்லா பதிவுகளையும் எழுதறேன். சர்ச்சைக்குரிய விஷயங்களையும் தவிர்க்கறேன். (கைப்புள்ளயால உளற மட்டும் தானே முடியும்?)

ஆனாலும் "எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் எல்லாமுமாக " என்ற என் ப்ளாக் கொள்கைக்கிணங்க அந்த நண்பர் கிட்ட நான் பொதுவாக மன்னிப்பு கேட்டுக்கறேன். வேற யாராவது அவரைப் போலவே ஃபீல் பண்ணியிருந்தீங்கன்னா அவங்க கிட்டயும் நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்.

மணியன் said...

இதில் மனம் நோக என்ன இருக்கு ? ஆண்டாண்டு காலமாய் நம் கவிஞர்கள் அடிக்காத நக்கலா ? கண்ணனை நண்பனாய், காதலியாய், வேலைக்காரனாய் கண்டவன் பாரதி. "தந்தை தாய் இருந்தால்" பாடலில் அனுதாபப் படுவதுபோல சிவனை ஒரு ஆட்டு ஆட்டிவைத்திருப்பார் அருணாசலக் கவிராயர்.

- யெஸ்.பாலபாரதி said...

அய்யய்யோ...
கைப்புள இது என் தாத்தா காலத்து ஜோக்கு!

கைப்புள்ள said...

வாங்க மணியன் சார்,
நல்லா சொன்னீங்க. மேலும் விநாயகரை நாம் விரும்பும் விதமாக உருவகம் பண்ணி வழிபடறோம். ஏனோ என் நண்பருக்குக் கடவுள் தன்னை வேண்டியவனை கைவிட்டது போல் இந்த ஜோக்கில் சொல்லப் பட்டிருப்பது பிடிக்கவில்லை. அவர் உண்மையிலேயே மனவேதனை அடைந்ததாக எனக்கு பட்டது...ஆகவே மேற்கண்ட விளக்கம்.

கைப்புள்ள said...

//அய்யய்யோ...
கைப்புள இது என் தாத்தா காலத்து ஜோக்கு! //

உண்மை தாங்க. ஆனா கைப்புள்ளையோட கைவண்ணம்(value addition) எதுவும் உங்களுக்கு தெரியலியா இதுல?

நாமக்கல் சிபி said...

//வாங்க சிபி,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி//


என்னாது கருத்தா?

ஏங்க கைப்புள்ள என்னை வம்புல மாட்டி விடுறீங்க?

கைப்புள்ள said...

//என்னாது கருத்தா?

ஏங்க கைப்புள்ள என்னை வம்புல மாட்டி விடுறீங்க? //

"பிள்ளையாரோட ஃபீலிங்கை யாராவது புரிஞ்சிக்க முயற்சி செஞ்சி இருக்கமா?"
இதை தாங்க நான் கருத்துன்னு சொன்னேன். வம்பெல்லாம் ஒண்ணுமில்லீங்கோ!
:)-

இலவசக்கொத்தனார் said...

எல்லாரும் சொல்லற மாதிரி பழசுன்னு சொல்லியிருப்பேன். இல்ல சிலவங்க சொல்லற மாதிரி மனம் புண் படுதேன்னு சொல்லியிருப்பேன். ஆனா சொல்லலையே.

ஏன்ன எழுதுனது நம்ம கைப்பாச்சே. இவரும் கோச்சிக்கிட்டு நம்ம பக்கம் வராம போயிட்டா வேற யாருப்பா வருவா? வேற யாரு வருவா?

(கொஞ்சம் நடிகர் திலகம் ஸ்டையில படிச்சிக்கோங்க.)

இலவசக்கொத்தனார் said...

ஆர்த்தியின் கேள்விக்கு நம்ம பதில்.

ஏன் தண்ணில கரைக்கறாங்கன்னா கேட்ட? இல்லையே. பாலில கூட கரைக்கலாம். ஆனா பாலில கரைக்க போனா காஸ்ட்லியாயிடுமேம்மா...

(அட சட். இந்த திலகம் மாதிரி ஒரு தடவை பேசினா அப்படியே ஒட்டிக்கிடுதே)

Geetha Sambasivam said...

Traditionally it shows our bad habits are also liquidate with the clay pillaiyar.After the visarjan, {not the visarjan doing in the Marina}, in olden days we used to perform bajans and other kootu prarthanai.It makes our mind free from all worries.

Dubukku said...

"பாலில கூட கரைக்கலாம். ஆனா பாலில கரைக்க போனா காஸ்ட்லியாயிடுமேம்மா..."

--கொத்தனார் அது அப்பிடி இல்லை ...பிள்ளையார் தான் பால்ன்னா குடிச்சுருவாரே....அதனால தான் தண்ணில கரைக்கிறாங்க...

பிள்ளையார தண்ணியில கரைக்கலாம் ஆனா தண்ணிய பிள்ளையார்ல கரைக்கமுடியாதே - இப்பிடி கூட இருக்கலாம்

ஆர்த்தி அடிக்க வரதுக்கு முன்னாடி அப்பீட்டு.... :)

இலவசக்கொத்தனார் said...

இதெல்லாம் போதாதுன்னு நம்ம பெரியவர் ஹரிஹரன்ஸ் ஒரு தனிப்பதிவே ஆரம்பிச்சு இருக்காரு பாருங்க.

http://mahamosam.blogspot.com/

கைப்புள்ள said...

வாங்க ஆர்த்தி,
கொத்தனார்,டுபுக்கு,கீதா மேடம் இவங்க சொன்னதையெல்லாம் படிச்சிருப்பீங்கனு நினைக்கிறேன். சந்தேகம் தீந்துச்சா?

கைப்புள்ள said...

//இவரும் கோச்சிக்கிட்டு நம்ம பக்கம் வராம போயிட்டா வேற யாருப்பா வருவா? வேற யாரு வருவா?//

கொத்தனாரே!
யாரு பெத்த புள்ளயோ? அநியாய தன்னடக்கத்தோட இருக்கியேபா...இருக்கியேபா...(அதே சிவாஜி இஷ்டைல்)

யாரும் வராமலா 100,200,300னு வெளாசறீங்க? குறும்பு!!!

கைப்புள்ள said...

//Traditionally it shows our bad habits are also liquidate with the clay pillaiyar.//

வாங்க மேடம்!
விளக்கத்துக்கு நன்றி. அடிக்கடி வாங்க.

கைப்புள்ள said...

//பிள்ளையார தண்ணியில கரைக்கலாம் ஆனா தண்ணிய பிள்ளையார்ல கரைக்கமுடியாதே - இப்பிடி கூட இருக்கலாம்//

டுபுக்கு சார்!
இதுக்கு பேர் தான் SMS பின்னூட்டமா?

கைப்புள்ள said...

//இதெல்லாம் போதாதுன்னு நம்ம பெரியவர் ஹரிஹரன்ஸ் ஒரு தனிப்பதிவே ஆரம்பிச்சு இருக்காரு பாருங்க. //

யோசிப்பவர்,இளா,ஆர்த்தி எல்லாம் உஷாரா இருந்துக்குங்க. போட்டி பலமாயிருக்கு.

நாமக்கல் சிபி said...

//இதை தாங்க நான் கருத்துன்னு சொன்னேன். வம்பெல்லாம் ஒண்ணுமில்லீங்கோ//

இப்பல்லாம் கருத்துன்னு எது சொன்னாலும் வம்புலதாங்க போய் முடியுது கைப்புள்ள.

கைப்புள்ள said...

//இப்பல்லாம் கருத்துன்னு எது சொன்னாலும் வம்புலதாங்க போய் முடியுது கைப்புள்ள. //

கைப்புள்ள நீர்ல கரைவான்,நெருப்புல உருகுவான்...ஆனா வம்புன்னு வந்துச்சுன்னா அப்பீட்டு ஆயிடுவான். கவலை படாதீங்க முடிஞ்ச வரைக்கும் நம்ம பதிவுகள்ல வம்பான சமாச்சாரம் எதுவும் இருக்காது.

(ஆமாங்க புதுமைப் பெண் டயலாக் தான் இங்கே உல்டாங்கோ!)

நாமக்கல் சிபி said...

//நம்ம பதிவுகள்ல வம்பான சமாச்சாரம் எதுவும் இருக்காது.//

ஏதோ நீங்க சொன்னா சரி கைப்புள்ள!

எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா "என் சங்கத்து ஆளை அடிச்சது எவண்டா" ன்னு வர மாட்டீங்களா என்ன?

aathirai said...

ஒரு பாரதியார் கதைல ஒருவன் சத்தியம் பண்ணுவான்
"நான் சொல்றது மட்டும் பொய்யா இருந்தா என் கடனெல்லாம்
இந்த தெரு புள்ளையார் தீத்து வைக்கட்டும்னு "

புள்ளயார்- நீ வாங்கின கடன நான் தீக்கணுமா. உனக்கு
வெக்கறென் இருன்னு சொல்லுவார்.

தருமி said...

நம்ம பெரியவர் ஹரிஹரன்ஸ் ஒரு தனிப்பதிவே ஆரம்பிச்சு இருக்காரு "//
- அது யாரு அங்க..பெரியவர்...இப்படி ஒரு போட்டியா..?

நாமக்கல் சிபி said...

//கவலை படாதீங்க //
நீங்க சொன்னா சரிதான் கைப்புள்ள!

எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா

என் சங்கத்து ஆளை அடிச்சது எவண்டா ன்னு நீங்க வர மாட்டீங்களா என்ன?

G.Ragavan said...

இந்த விஷயத்தைப் பெருசா எடுத்துக்கக் கூடாது. இதெல்லாம் சும்மா விளையாட்டுதானே. இந்த மாதிரி விளையாட்டுகள் இறைவனோடு நெருக்கத்தைத்தான் கொடுக்கும்.

காளமேகம் கூட முருகனைப் பத்திப் பாடும் போது செருப்புன்னு தொடங்கி வெளக்கமாறுன்னு முடிக்கலையா...எல்லாம் அன்போடு உரிமை எடுத்துக்கிறதுதானய்யா..

Unknown said...

நான் போட்ட பதிவைக் காணோமே...எங்க போச்சோ?

Unknown said...

பின்குறிப்ப, பதிவுன்னுட்டு பிணாத்திட்டேன்...ஹிஹிஹி

கைப்புள்ள said...

//எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா "என் சங்கத்து ஆளை அடிச்சது எவண்டா" ன்னு வர மாட்டீங்களா என்ன?//


கண்டிப்பா...அது தானே நம்ம தொழிலே!
:)-

கைப்புள்ள said...

//காளமேகம் கூட முருகனைப் பத்திப் பாடும் போது செருப்புன்னு தொடங்கி வெளக்கமாறுன்னு முடிக்கலையா...எல்லாம் அன்போடு உரிமை எடுத்துக்கிறதுதானய்யா.//

இப்படி ஒரு பாட்டா? என்ன பாட்டுன்னு சொன்னீங்கனா நல்லாருக்கும்.

கைப்புள்ள said...

//புள்ளயார்- நீ வாங்கின கடன நான் தீக்கணுமா. உனக்கு
வெக்கறென் இருன்னு சொல்லுவார்.//

ஆமாங்க...புள்ளையார் பல பேருக்கு இஷ்ட தெய்வம். பல இடத்திலயும் ஜோக்குகள்லயும் வந்து ஒரு கலக்கு கலக்குவாரு.

கைப்புள்ள said...

//- அது யாரு அங்க..பெரியவர்...இப்படி ஒரு போட்டியா..? //

தருமி சார்,
ஹரிஹரன்ஸ் ரீபஸ் போடறதுல பெரிய ஆளு...அதனால நம்ம கொத்தனாரு அவருக்கு பெரியவருன்னு பேர் வச்சிருக்கார். மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி வெட்டு குத்து ஆசாமி கிடையாது. என்ன அப்பப்போ ரத்தம் வர்ற மாதிரி கடிச்சு வுட்டுருவாரு.

கைப்புள்ள said...

//பின்குறிப்ப, பதிவுன்னுட்டு பிணாத்திட்டேன்...ஹிஹிஹி //

வாங்க ஹரிஹரன்ஸ்,
எதை சொல்றீங்க? வெளங்கலியே?

G.Ragavan said...

////காளமேகம் கூட முருகனைப் பத்திப் பாடும் போது செருப்புன்னு தொடங்கி வெளக்கமாறுன்னு முடிக்கலையா...எல்லாம் அன்போடு உரிமை எடுத்துக்கிறதுதானய்யா.//

இப்படி ஒரு பாட்டா? என்ன பாட்டுன்னு சொன்னீங்கனா நல்லாருக்கும்.//

செருப்புக்கு வீரரைச் சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல
மருப்புக்குத் தண்டேன் பொழிந்...
திருத்தாமரை மேல் வீற்றிருக்கும் வண்டே விளக்குமாறே

நடுவுல நடுவுல கொஞ்சம் மறந்து போச்சுங்க....தெரிஞ்சவங்க யாரவது உதவிக்கு வாங்க..

கைப்புள்ள said...

நீங்க எதையும் மறக்கலை ராகவன். அப்படியே இருக்கு நீங்க சொன்னது 63ஆம் எண் பாடல்ல கீழே உள்ள தளத்துல.

http://www.tamilnation.org/literature/pmunicode/mp220.htm

நல்ல ஞாபக சக்தி போல உங்களுக்கு.
ஸ்கூல்ல படிச்ச ஒரு காளமேகப் புலவர் சிலேடை பாடல் ஞாபகம் வந்தது. அந்த பாட்டும் இந்த தளத்தில் கிடைச்சது.
(இடைச்சி நீர் கலந்த மோரைக் கொடுத்தபோது பாடியது)

177 கார்என்று பேர்படைத்தாய் ககனத்து உறும்போது
நீர்என்று பேர்படைத்தாய் நெடும்தரையில் வந்ததன்பின்
வார்ஒன்றும் மென்முலையார் ஆய்ச்சியர்கை வந்ததன்பின்
மோர்என்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே!

இலவசக்கொத்தனார் said...

கைப்பு,
டண்டணக்கா ... டணக்கு ... டணக்கு எல்லாம் இருக்கட்டும்.

உமக்காகவே பதில் வெளியிடாம கஷ்டப்பட்டு ஒரு புதிரை நடத்திக்கிட்டு இருக்கேன். வர வ்ழியப்பாரும்.

நாமக்கல் சிபி said...

//எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா "என் சங்கத்து ஆளை அடிச்சது எவண்டா" ன்னு வர மாட்டீங்களா என்ன?


கண்டிப்பா...அது தானே நம்ம தொழிலே!//


சொன்ன மாதிரியே சுப்போர்ட் வாய்ஸ் கொடுத்த கைப்புள்ளக்கு நன்றி!