Thursday, February 09, 2006

நியாயந்தே...

கொஞ்சம் போல அசைவம் கலந்துருக்கு இந்தப் பதிவுல. சைவப் பிராணிகள் எல்லாம் அப்படியே ஓடிப் போயிடுங்க. படிச்சுப்புட்டு என்னைய வையப்படாது...இப்பவே சொல்லிப்புட்டேன்...ஆமா!

ஒரு கிராமத்து பள்ளிக்கூடத்துல வாத்தியார் வகுப்பெடுத்துட்டு இருக்காரு. மகாபாரதக் கதையில கிருஷ்ணரு அவதரிச்சதையும் கம்சனோட வதத்தையும் விளக்கறாரு.

"ராஜா கம்சன் வசுதேவரோட எட்டாவது குழந்தை தான் தன்னைக் கொல்ல போகுதுன்னு அசரீரி சொன்னதைக் கேட்டு கொதிச்சு போறான். கட்டுக்கடங்காத கோபம் கொண்ட அவன் தன் சகோதரி தேவகியையும் அவ கணவன் வசுதேவரையும் சிறையில அடைச்சுடுறான். முதல் குழந்தை பிறக்குது...அதுக்கு விஷம் கொடுத்து கொன்னுடுறான். இரண்டாவது குழந்தை பிறக்குது...அதை மலை உச்சியிலிருந்து தூக்கி போட்டு கொன்னுடறான் அந்த பாவி. மூணாவது குழந்தை..."

"சார்...சார்...எனக்கு ஒரு சந்தேகம்!" ராமுங்கற சூட்டிகையான ஒரு பையன் எழுந்திரிச்சு நிக்கறான்.

"என்னப்பா உனக்கு சந்தேகம்?" வாத்தியாரு கேக்கறாரு.

"சார்! எட்டாவது குழந்தை தான் தன்னை கொல்ல போகுதுன்னு தெரிஞ்ச கம்சன் தேவகியையும்,வசுதேவரையும் என் சார் ஒரே ஜெயிலில வச்சான்?"

ஹி...ஹி...அதிகப் பிரசங்கித் தனம்னாலும் கேள்வி நியாயமாத் தே இருக்கு.

30 comments:

ஏஜண்ட் NJ said...

விதி போற பாதைல தானே மதி போகும்

;-)

Pavals said...

அந்த ராமுங்கற சூட்டிகையான ஒரு பையன் தான இந்த 'கைபுள்ள'??

Unknown said...

He wanted to kill that baby so that the threat to his life would be eliminated.

கைப்புள்ள said...

//விதி போற பாதைல தானே மதி போகும்//

வாங்க ஞான்ஸ், வாஸ்தவம் தான்

கைப்புள்ள said...

////அந்த ராமுங்கற சூட்டிகையான ஒரு பையன் தான இந்த 'கைபுள்ள'??//


வாங்க ராசா!
நானே வாத்தியார் புள்ள தான். எங்க ஐயனுக்கு நான் இந்த மாதிரி சூட்டிகையெல்லாம் ஸ்கூல்ல பண்றேன்னு தெரிஞ்சது, தோலை உரிச்சுடுவாரு. அதனாலே அப்பல்லாம் அடக்க ஒடுக்கமாத் தான் இருந்தேன்.

Unknown said...

உங்க அப்பாரும் வாத்தியாரா??.. சொல்லவேயில்லை...

கைப்புள்ள said...

//He wanted to kill that baby so that the threat to his life would be eliminated. //

வாங்க செல்வன்,
பச்சை புள்ளையை எதுக்காக அநியாயமாக் கொல்லணும்ங்கறது தான் ராமுவோட கேள்வி.
:)-
(யாருங்க அது மீசைக்காரரு?)

கைப்புள்ள said...

//உங்க அப்பாரும் வாத்தியாரா??.. சொல்லவேயில்லை...//

வாங்க தேவ்,
ஆமாங்க. காலேஜ் வாத்தியார். அதனால காலேஜ்ல கூட ரொம்பெல்லாம் ஆட்டம் போடலை. உங்க அப்பாவும் வாத்தியாரா?

தாணு said...

குருவை மிஞ்சிய சிஷ்யர்கள்

தருமி said...

அப்பா வாத்தியாரா இருக்கிற பள்ளிக்கூடத்திலேயே படிச்சி..ம்ம் ..தலைவிதி உறுத்துவந்து ஊட்டுமாமே..ஊட்டுச்சி. உங்கள யாருங்க அப்பா வேலை செய்ற காலேஜில சேரச்சொன்னது...பாவங்க நீங்க...உங்க அப்பாவும்தான் :-)

கைப்புள்ள said...

//குருவை மிஞ்சிய சிஷ்யர்கள்//

வாங்க மேடம்,
ஆமாம். இப்பல்லாம் பசங்க செம ஸ்மார்ட்

கைப்புள்ள said...

//அப்பா வாத்தியாரா இருக்கிற பள்ளிக்கூடத்திலேயே படிச்சி..ம்ம் ..தலைவிதி உறுத்துவந்து ஊட்டுமாமே..ஊட்டுச்சி. //

வாங்க சார்,
எங்கப்பா ஸ்கூல் பக்கம் எல்லாம் போனதில்லை (வேலை பார்க்க தான்)
:)-

அவரு ஆரம்பத்துலேருந்து காலேஜ் பசங்களைத் தான் மேய்ச்சிருக்காரு. அதனால நாம பண்ற எல்லா தகிடுதத்தமும் அவருக்கு தெரிஞ்சுடும். மத்தபடி நாங்க ரெண்டு பேரும் வேற வேற காலேஜ்.

manasu said...

அட ச்சீ....

என்ன இது ரொம்ப

சின்னப்புள்ளதனமாவுல்ல இருக்கு

கைப்புள்ள said...

//அட ச்சீ....

என்ன இது ரொம்ப

சின்னப்புள்ளதனமாவுல்ல இருக்கு //

வாங்க மனசு,
பார்த்தீங்களா...பார்த்தீங்களா...நான் பதிவோட ஆரம்பத்துல எழுதியிருக்கறதை சரியாப் படிக்காம் என்னை வையறீங்க பார்த்தீங்களா? எனக்கு அழுவாச்சி அழுவாச்சியா வருது.

Unknown said...

தமிழ் திரைப்படங்களில், க்ளைமாக்ஸில், கார் ப்ரேக் பிடிக்காத பொது, இன்ஜினை ஆஃப் பண்ணறதை விட்டுவிட்டு, லொட்டு லொட்டுன்னு ப்ரேக் அமுத்தற அபத்தம் மாதிரி இதுவும் இருக்கு...கம்சன் புத்தி அம்புட்டுதான்வே...

கைப்புள்ள said...

//தமிழ் திரைப்படங்களில், க்ளைமாக்ஸில், கார் ப்ரேக் பிடிக்காத பொது, இன்ஜினை ஆஃப் பண்ணறதை விட்டுவிட்டு, லொட்டு லொட்டுன்னு ப்ரேக் அமுத்தற அபத்தம் மாதிரி இதுவும் இருக்கு...கம்சன் புத்தி அம்புட்டுதான்வே... //

ஹி...ஹி...போங்க பெரியவரே! எனக்கு வெட்கமா இருக்கு.

இலவசக்கொத்தனார் said...

சில கேள்விகளை எல்லாம் கேட்கக்கூடாது. புது பதிவு போடக்கூடாதா என்பதையும் சேர்த்து. :)

கைப்புள்ள said...

//சில கேள்விகளை எல்லாம் கேட்கக்கூடாது. புது பதிவு போடக்கூடாதா என்பதையும் சேர்த்து. :) //

சரிங்க கொத்தனாரே! இனிமே வெவரமா இருந்துக்குறேன்
:))-

Anonymous said...

அண்ணே..தேசிபண்டிட்ல இதக் கொஞ்சம் சேர்த்துக்கறேனே...
Hope you don't have any objections.

http://www.desipundit.com/2006/02/09/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/

Anonymous said...

actually wonder why Vasudev and Devaki continued to make babies knowing well they are gonna be killed. Abstinence here could have been the best virtue :-)

ரா.சு said...

"வசுதேவரையும் தேவகியையும் ஏன் பிரிச்சு வைக்கனும் பேசாம ரெண்டு பேரையும் கம்சன் "போட்டு" தள்ளியிருந்தார்னா பிரச்சினையேயில்லையே" அப்படினுதான் (நிசமான) கைப்புள்ள கேட்டிருப்பார், இல்லை? :-)

Unknown said...

கைபுள்ள அண்ணே,

நடந்தது இதுதான்.

தேவகி மேல கம்சனுக்கு அவ்ளோ பிரியம்.கண்ணாலம் கட்டிகுடுத்து அவனே தங்கச்சியயும் மச்சானையும் தேரோட்டியா இருந்து நகர்வலம் கூட்டிட்டு போறான்.அவ்ளோ பெரிய ஊருக்கு ராஜா,நாம தேரோட்டரதான்னு எல்லாம் அவன் பாக்கலை.

அப்ப அசரிரி தேவகியோட 8வது கொழந்தை கம்சனை கொன்னுபுடும்னு சொல்லுது.உடனே அவன் தங்கச்சிய கொல்ல போறான்.மச்சான் வாசுதேவர் அவனை தடுக்கிறார்.8வது குழந்தைய உங்கிட்ட குடுத்துடறேன் அப்படிங்கறார்.

இப்போ நீங்க சொல்ற மாதிரி இவங்க ரெண்டு பேரையும் பிரிச்சு வெச்சா ரிஸ்க்.கொஞ்ச நாள் கழிச்சு புருஷன் கூட ஓடிப்போனாலும் போயிடுவா.அது நடக்காம இருக்கணும்னா ஜெயில்ல சொந்த தங்கச்சியை காலம் பூரா கன்னியா வாழா வெட்டியா வெச்சிருக்கணும்.அது மகா பாவம்.அதுக்கு அவளை வெட்டியே கொன்னிருக்கலாம்.

பேசாம புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரையும் காவல்ல வெச்சு 8வது குழந்தைய மட்டும் கொன்னுட்டு அவங்களை உட்டரலாம் அப்படின்னு பிளான் போடறான்.மொதல்ல ஜெயில்ல எல்லாம் போடலே.மாளிகயில தான் வெக்கறான்.மொதல் 7 குழந்தைகளும் கொல்றதா அவனுக்கு திட்டமே இல்லை.

ஆனா மந்திரிமாருங்க அவன் மனசை கலைச்சுடறாங்க.கொஞ்ச நாள் கழிச்சு அவங்க மொதல்,ரெண்டவது கொழந்தைய எல்லாம் கொன்னுடறான்.அவங்களையும் ஜெயில்ல தள்ளிடறான்.

தங்கச்சிய வாழ வைக்கலாம் அப்படின்னு தான் அவனுக்கு ஆசை.ஆனா உயிர் மேல பயம்.அவளை கொல்லவும் மனசு வரலை.கொல்லாம வாழா வெட்டியா வெச்சிருக்கவும் மனசு வரலை.அதனாலதான் இந்த பிளான் போட்டான்.

இம்புட்டு தான் விஷயம்

கைப்புள்ள said...

வாங்க டுபுக்கு சார்,
என்னங்க என்னை அண்ணேனு சொல்லிட்டீங்க. என்னை அண்ணேன்னு சொல்லி உங்க வயசைக் குறைச்சு காட்ட போடுற திட்டம் எனக்கு புரியாதுன்னு நினைக்கிறீங்களா?
:)-

தாராளமா லிங்க கொடுங்க. No objections.

கைப்புள்ள said...

//"போட்டு" தள்ளியிருந்தார்னா பிரச்சினையேயில்லையே" அப்படினுதான் (நிசமான) கைப்புள்ள கேட்டிருப்பார், இல்லை? :-) //

ஐயய்யோ! இல்லீங்க. கைப்புள்ள காமெடியன் தான் ஆனா வில்லன் இல்ல!

கைப்புள்ள said...

வாங்க செல்வன்,
விளக்கம் நல்லாருக்கு. ஒத்துக்கும் படியாவும் இருக்கு. விளக்கமாக எழுதியதற்கு ரொம்ப நன்றி.

கைப்புள்ள said...

//Abstinence here could have been the best virtue :-) //

டான் பூனையாரே! செல்வனோட விளக்கத்த கொஞ்சம் படிங்க

dondu(#11168674346665545885) said...

உங்களுக்கு பதிலாக நான் தனிப்பதிவே போட்டிருக்கேனே, பார்க்க:
"கைப்புள்ள கேட்ட கேள்விக்கு பதிலை உள்ளடக்கி" @ http://dondu.blogspot.com/2006/02/blog-post_09.html

இது உண்மை டோண்டு இட்டப் பதிவே என்பதை உணர்த்த இப்பின்னூட்டத்தையும் அதே பதிவில் பின்னூட்டமாக நகலிடுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கைப்புள்ள said...

வாங்க டோண்டு சார்,
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

மணியன் said...

கருத்தடை விதயம் எல்லாம் தெரியாத காலம். தெரிந்திருந்தால் எல்லோருக்கும் win win situationஆக இருக்கும்.:)))

கைப்புள்ள said...

//தெரிந்திருந்தால் எல்லோருக்கும் win win situationஆக இருக்கும்.:))) //

ஹி...ஹி...ஹி