Tuesday, February 14, 2006

கேலிகிராஃபி(Calligraphy)

கேலிகிராஃபி(Calligraphy) பற்றி நம்மில் பலரும் கேள்வி பட்டிருப்போம். கேலிகிராஃபி என்பது அழகிய கையெழுத்து கலை. "கேலோஸ்"(Kallos) = 'அழகு' மற்றும் "கிராஃபி(Graphy)='கையெழுத்து' எனும் கிரேக்க சொற்களின் கூட்டினால் வந்ததே கேலிகிராஃபி எனப்படும் அழகிய கையெழுத்து கலை.

எது கேலிகிராஃபி?
கையினைக் கொண்டு எழுதப்படும் அழகிய எழுத்துகள் அனைத்துமே கேலிகிராஃபிக்குள் அடக்கம். மேலும் அறிய இங்கு சுட்டவும். இச்சுட்டியில் கேலிகிராஃபியின் வகைகள், பல நாட்டு பாணிகள்,கேலிகிராஃபி வல்லுநர்கள் போன்றவற்றைப் பற்றி விரிவாகக் காணலாம். சரி! கேலிகிராஃபிக்கு ஒரு எடுத்துக்காட்டைப் பார்க்கலாமா? பேனாவினைக் கொண்டு கையால் எழுதப்பட்ட இவ்வெழுத்துகளைக் காணுங்கள். இட்டாலிக்(Italic) எனப்படும் எழுத்து பாணியில்(Writing style) அமைந்துள்ள ஒரு மாதிரி இது.


பார்த்ததும் என்ன தோன்றுகிறது?
1. அச்சடித்தது போல் உள்ள இவ்வெழுத்துகளை எவ்வாறு கையினால் எழுதுகிறார்கள்?
2. எழுத்துகளுக்கு இடையே ஒரு ஒழுங்கும் அழகும் தெரிகிறதே...அது எவ்வாறு சாத்தியமாகிறது?
3. எவ்வாறு பயில்வது?
4. கேலிகிராஃபியினால் யாருக்கு என்ன புண்ணியம்?
இந்தக் கேள்வியெல்லாம் தோன்றுகிறதா?

இது பற்றி மேலும் அறிய ஆர்வம் இருந்தால் சொல்லுங்கள், எனக்கு தெரிந்ததைச் சொல்லுகிறேன். நட்பு குறித்து நான் ஆங்கிலத்தில எழுதிய ஒரு வாசகத்தையும் கீழே காணுங்கள்.

14 comments:

கீதா said...

இது என்ன stensil கொண்டு எழுதினதா?? நான் என்னோட 10th & 12th ரெகார்ட் எழுதும்போது இதைக்கொண்டு தான் முதல் பக்கமெல்லாம் எழுதுவேன்..

அன்புடன்
கீதா

கைப்புள்ள said...

Stencil எல்லாம் இல்லை மேடம். கையினால் பேனா கொண்டு எழுதியது தான்.

சிவா said...

கைப்புள்ள!

இது போல சில பேர் மொத்த பைபிளையும் கையினால் அச்சடித்தது போல எழுதுவார்கள். அதற்கு அவர்கள் வெறும் பறவை இறகுகளை செதுக்கி பேனா போல் வைத்து, மையில் முக்கி முக்கி எழுதுகிறார்கள். சமிபத்தில் தொலைகாட்சியில் இது சம்பந்தமாக ஒரு நிகழ்ச்சி பார்த்தேன் :-)

கைப்புள்ள said...

வாங்க சிவா,
இந்த கையெழுத்து பிரதிகளுக்கு ஏக கிராக்கி. Old English Text என்ற இந்த பாணி சற்று கடினமானதும் கூட. நானும் அந்த இறகு பேனாவையெல்லாம் முயற்சி பண்ணியிருக்கேன். இறகு கொண்டு எழுதுவதற்கு அதீத பொறுமையும் ஆர்வமும் தேவை.

இலவசக்கொத்தனார் said...

வித விதமான முனைகளுடன் கூடிய பேனா செட்டுகள் இதற்கெனவே கிடைக்கின்றதே. மை நிரப்பி எழுதும் வசதி இருப்பதால் தொட்டு தொட்டு எழுதும் சங்கடமும் இல்லை.

கைப்புள்ள said...

வாங்க கொத்தனார்,
அதே...அதே! Rotring,Platignum,Speedball, Parker ஆகிய International brandகளுடன் தற்போது Made in India லோக்கல் செட்டுகளும் கிடைக்கின்றன. இறகு பேனாவில் கிடைக்கும் அதே எழுத்துருவை தற்போது பேனாக்கள் மூலமாகவும் கொண்டு வரலாம்.

ஆனா சின்ன வயசுல Rotring pen set வாங்க 500ரூபாய் எல்லாம் கேட்டா உதை தான் கிடைக்கும். அதனால தான் இந்த காக்கா இறகு முயற்சி எல்லாம்.

தேவ் | Dev said...

எதோ கேலிகிராபின்னா கலாய்க்கிற மேட்டர்ன்னு பார்த்தா என்ன என்னமோ படம் காட்டுறப்பா நீ...
கைப்பு... I AM PROUD OF U MACHEE

கைப்புள்ள said...

//என்ன என்னமோ படம் காட்டுறப்பா நீ...//

ஹா...ஹா...படம் போட்டா தானே மாப்பு படிக்கறதுக்கு நல்லாருக்கும்? என்ன நாஞ் சொல்றது?

oliyinile said...

தமிழில் உள்ள அனேகமாய் எல்லா எழுத்துருவும் செர்த்து வைத்துள்ளேன்னாக்கும்!! ஒவ்வொரு தமிழ் எழுத்தையும் தமிழில் வெவ்வேறு வடரிவத்தில் எனது கைப்பட எழுதி tru typ fonts மாற்றி எனது கணனியில் சேமித்து வைத்திருந்தேன் கால ஓட்டத்தில் வெவ்வேறு கணனிகளுக்கு மாறேக்க பல வருடங்களுக்கு முன் எல்லா எழுத்துக்களையும் தவறவிட்டு விட்டேன்!!! எங்கேயாவது தழிழ் எழுத்துரு கண்டேன் என்றால் உடனையே திறந்து வரிவடிவத்தை ஆராய்றதான் முதல் வேலை..!!
Typographic Style ஒரு காதல்தான்!!

கைப்புள்ள said...

வாங்க ஒளியினிலே!
எனக்கும் Typeface மற்றும் Fontஐ பார்க்கறது பிடிக்கும். கண்டிப்பா அது ஒரு காதல் தான். உங்களை மாதிரி நான் எழுத்துரு சேகரிச்சு வைக்கல்லன்னாலும் நான் எனக்கு பிடிச்ச எழுத்துருவை எழுதி பார்ப்பேன். இந்த நேரத்தில் ஒரு கேலிகிராஃபி புத்தகத்தில் படித்த ஒரு ஆங்கில வாசகம் நினைவுக்கு வந்தது. "The greatest thing in the World is the Alphabet, as all wisdom is contained within, except the knowledge of putting it together."

sivagnanamji(#16342789) said...

ashagu azhagu azhagu pa
nalla work
keep it up

கைப்புள்ள said...

//ashagu azhagu azhagu pa
nalla work
keep it up //

வாங்க சார்,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

G.Ragavan said...

கைப்புள்ள இது பெரிய விஷயம இருக்குது. பெரிய ஆளுதான். மலைச்சிப் போயிட்டேன். பாராட்டுகள்.

இதே மாதிரி தமிழ்ல எழுதி படம் பொடுங்களேன்.

கைப்புள்ள said...

வாங்க ராகவன்,
தங்கள் பாராட்டுதலுக்கு நன்றி. தமிழில் நான் எழுதியதன் ஒரு சிறிய உதாரணம் இங்கே காணுங்கள்.
பொற்காலம்