Tuesday, February 07, 2006

ஒரு மாற்று சிந்திப்பு(Lateral Thinking) கேள்வி

Lateral Thinkingஐ 'மாற்று சிந்திப்பு' அப்படினு சொல்லலாங்களா? நண்பன் ஒருவன் நேற்று என்னை ஒரு கேள்வி கேட்டான். எங்கோ ஒரு இடத்தில் நேர்காணலின் போது கேட்கப்பட்ட Lateral Thinking கேள்வியாம். கேள்வி சாதாரணமாகத் தெரிந்தாலும் பதில் வித்தியாசமானது. பதில் எனக்கு தெரிந்திருக்கவில்லை தான்(அவ்ளோ மசாலா இல்லீங்களே மண்டையிலே...என்ன பண்ண?). பதிலை பின்னர் கேட்டு அசந்து போனேன். நீங்கள் அக்கேள்வியை முயற்சிக்கிறீர்களா?

"ஒரு மனிதன் ஒரு பலமாடிக் கட்டிடத்தின் பத்தாம் தளத்தில் வசிக்கிறான். தினம் காலை அலுவலகத்திற்கு செல்லும் போது 10வது தளத்தில் உள்ள தன் இல்லத்திலிருந்து லிஃப்ட்(மின் தூக்கி தானே?)உதவி கொண்டு கீழே இறங்கிச் சென்று விடுவான். ஆனால் மாலை வீடு திரும்பும் போது ஏழாவது தளம் வரை லிஃப்டில் செல்வான். பின்னர் ஏழாவது தளத்திலிருந்து தன் வீடு உள்ள பத்தாவது தளம் வரை மாடிப்படி ஏறிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஏன் அப்படி செய்கிறான்?

மாடிப்படி கொண்டு கீழே இறங்குவது சுலபம். அப்போது லிஃப்ட் பயன்படுத்துபவன், மாலையில் மாடிப்படி கொண்டு மேலே ஏற முற்படுவது ஏன்? அதுவும் ஏழாவது மாடியிலிருந்து பத்தாவது மாடி வரை மட்டுமே ஏறிச் செல்வதேன்?"

உடற்பயிற்சி,அவன் இஷ்டம் அப்படினு எல்லாம் பதில் சொல்லக் கூடாது. சரியா?

19 comments:

Jayaprakash Sampath said...

அவனுடைய உயரத்துக்கு அந்த பொத்தான் எட்டாது.

லதா said...

அவர் உயரத்திற்கு 7ஆம் எண் உள்ள பொத்தானை மட்டும்தான் அழுத்த இயன்றது. 10ஆம் எண் உள்ள பொத்தான் எட்டவில்லை.

Muthu said...

கைப்புள்ள,
பதிலையும் நீங்களே சொல்லிடுங்க.

Anonymous said...

B,coz he is short man, He cann't press the 10th floor button

By
nambisusee@rediffmail.com

Anonymous said...

because he is a dwarf

Anonymous said...

because he is a dwarf

இலவசக்கொத்தனார் said...

கைப்புள்ள, இதுக்கு முன்னாடி இதை கேட்டது இல்லையா? வித்தியாசமான பதில்தான்.

யாரும் சொல்லலைன்னா நான் சொல்லறேன்.

நம்ம பதிவுல ஹரிஹரன்ஸ் ஒரு புதிர் போட்டிருக்கார். வந்து பாருங்க. அப்புறம் சொல்லவே இல்லையேன்னு சொல்லாதீங்க.

rv said...

அபூர்வ சகோதரர்கள்ல ஒருத்தரா???

சுயமா சொன்னதில்லன்னு டிஸ்கி போட்டுக்கறேன். ஏற்கனவே கேட்டிருக்கேன். அதான். ஹி ஹி.
கொஞ்சம் வேறு விதமா இருந்துது. சாயங்காலம், லிப்ட்ல கூட ஆட்கள் இருந்தாலோ, மழை பெஞ்சாலோ நேரா வீட்டுக்கே போயிடுவார். சரியா?

Anonymous said...

இது ரொம்ப பிரபலமான கேள்வி.

அந்த லிப்டில் ஏழாம் நம்பர் பொத்தானை அழுத்தும் அளவிற்கு தான் அவன் உயரம் இருந்திருக்கும். அதான காரணம்

Anonymous said...

Was in some tamil movie. The person is short (/midget) and couldn't reach the push button for the 10th floor.

.:dYNo:.

Pot"tea" kadai said...

..."ஆபிஸுக்கு சீக்கிரம் போவனும் அதனால் லிப்ட்...ஆனா வீட்டுக்குள்ள சீக்கிரம் வரனும்னு இல்லியே"...:-)

ரா.சு said...

ஏழாம் மாடி வரைக்கான பொத்தனை அமுக்கும் உயரம் மட்டுமே உடையவரவர்.

கைப்புள்ள said...

வாங்க பிரகாஷ்,லதா,அனானி நம்பி,அனானிமஸ்,அனானி,இராமநாதன்,கீதா,இன்னுமொரு அனானிமஸ்,ரா.சு,

தெயவங்களே! கலக்கறீங்க...சரியான பதில். என்னைத் தவிர எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குப்பா இந்த கேள்வியும், அதற்கான பதிலும். அதனால் எல்லாருக்கும் நன்றி தெரிவித்து பொதுவாக ஒரு மறுமொழி. யாரும் தப்பா எடுத்துக்க மாட்டீங்கனு நினைக்கிறேன். மறுபடியும் வாங்க.

கைப்புள்ள said...

முத்து,
வாங்க. நான் என்னத்தச் சொல்ல? எத்தனை பேர் சரியா பதில் சொல்லியிருக்காங்க பாருங்க. வருகைக்கு நன்றி.

கைப்புள்ள said...

வாங்க பொட் டீக் கடை,
இல்லீங்க. சரி for academic interest என்னைக் கேள்வி கேட்ட நண்பனுக்கு நான் என்ன பதில் சொன்னேன்னு சொல்றேன் - "ஏழாவதுலேருந்து பத்தாவது மாடி வரைக்கும் ஏறி போய் அவன் உடற்பயிற்சி பண்ணறான்"னு சொன்னேன். அதுக்கு அவன் கேட்டான் அப்படி ஏறுறதுனா பத்து மாடியும் ஏறுனா இன்னும் நல்லா உடற்பயிற்சி ஆகும் இல்லியா? நான் சொன்னேன் 'அட போங்கப்பா! இரண்டு மாடி ஏறுறதுக்குள்ளே மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்குது...பத்து மாடின்னா அவன் பெண்டு நிமிந்துடாது?'
:)-

Marico Industriesஇன் நேர்காணலின் போது கேட்கப்படும் கேள்வியாம் இது.

கைப்புள்ள said...

கொத்தனார்,
நான் கேட்டதில்லையேமா! என்ன செய்ய.

வரேங்க உங்க பதிவுக்கு...ஆனா வழக்கம் போல நான் காலையில தான் பார்த்தேன் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

கைப்புள்ள said...

முதன்முதலில் சரியான விடை தந்த ஐகாரஸ் பிரகாஷ் அவர்களுக்கு ஒரு சிறப்பு 'ஓ.............'

தாணு said...

வழக்கம் போல முடிவு வெளியான பிறகுதான் பார்த்தேன். ஆனால் எங்க பாப்பா(பொண்ணு) அடிக்கடி இது மாதிரி `கடி'ச்சுகிட்டே இருப்பாள், எனவே கொஞ்சம் கொஞ்சம் தெரிஞ்சிருக்கும்

கைப்புள்ள said...

//வழக்கம் போல முடிவு வெளியான பிறகுதான் பார்த்தேன். ஆனால் எங்க பாப்பா(பொண்ணு) அடிக்கடி இது மாதிரி `கடி'ச்சுகிட்டே இருப்பாள், எனவே கொஞ்சம் கொஞ்சம் தெரிஞ்சிருக்கும் //

வாங்க மேடம்! உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கேட்டு பாருங்க! உங்க பொண்ணுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு.