Tuesday, June 16, 2009

32 கேள்விகளும் 32 பதில்களும்

பாலாஜி கோர்த்து விட்ட 32 கேள்விகளும்-பதில்களும் சங்கிலித் தொடரில் நானும் சேர்ந்துட்டேன்.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
என்னோட பேரு அசரீரி வச்ச பேராம். எனக்கு நாகராஜன்னு தான் பேரு வைக்கிறதா இருந்தாங்களாம். எங்க தாத்தா பெங்களூர் சிட்டி இரயில்வே நிலையம் கிட்ட நடந்து போய்க்கிட்டிருக்கறப்போ யாரோ பின்னாலிலிருந்து மோகன்ராஜ் மோகன்ராஜ்னு கூப்பிட்ட குரல் கேட்டுச்சாம். 'மோ' என்கிற எழுத்து என் நட்சத்திர படியும் சரியாக அமைஞ்சதாலயும் அந்த பேரையே வச்சிட்டாங்கங்கிறது வரலாறு. என் பேர் எனக்குப் பிடிக்கும்.

2. உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
பிடிக்கும். ஆனால் இப்போ இருக்கும் கையெழுத்து முன்பு போல தெளிவா திருத்தமா இருக்கறதில்லை.

3. கடைசியாக அழுதது எப்போது?
ஆண்கள்னா இப்படித் தான் இருக்கனும்னு இந்த பாழும் சமூகம் போட்டிருக்கற கட்டுப்பாடுகள்ல முக்கியமானதொரு முள்வேலி - ஆண்களின் அழுகை மறுப்பு. ஆணாப் பொறந்தா எந்த விஷயத்துக்கும் கலங்காம இருக்கனும்னு ஒரு stereotype பல காலமா நிலவிக்கிட்டிருக்கு. ஒரு ஆண் அழுதா "எப்படி பொம்பள புள்ள மாதிரி அழறான் பாரு"ன்னு கேலி பண்ணற நிலை தான் இன்னும் இருக்கு. பெண்களுக்கு நிகரா ஆண்கள் Facial, bleaching, manicure, pedicure எல்லாம் பண்ணிக்க அனுமதிக்கிற சமூகத்துல பெண்களைப் போல ஆண்களுக்கும் சங்கோஜமில்லாம அழ சம உரிமை வேணும். எல்லா நேரத்துலயும் "எதுக்கும் கண்கலங்காத ஆம்பளை சிங்கம்" இமேஜை மெயிண்டேன் பண்ணறது ரொம்ப கஷ்டம். ஆணா இருந்தாலும், பெண்ணா இருந்தாலும் மனசுல ஈரம் உள்ளவங்களுக்கு அழுகை வரும், அதை கட்டுப்படுத்தப் படாது. கட்டுப்படுத்த தடையும் விதிக்கப் படாது.

இப்பெல்லாம் உறவுகள், உணர்ச்சிகள் இந்த மாதிரி விஷயங்கள் பத்தி புரியறதுனால டக் டக்குன்னு கண்ணு கலங்கிடுது. குறிப்பா சினிமாவுல எதாவது ஒரு காட்சி ஒன்றிப் போய் பார்க்கும் போது என்னையும் அறியாம அழுகை வந்துடும். நிஜ வாழ்க்கையில அக்கம பக்கம் மக்கள் இருக்கறாங்கங்கிற ப்ரக்ஞை இருக்கறதுனால பொதுல அழறது கொஞ்சம் கம்மி தான். "சக் தே இந்தியா" படம் பார்க்கும் போது இந்திய டீம் ஹாக்கி மேட்ச் ஜெயிக்கிற மாதிரி காட்சி வரும் போது சந்தோஷத்துல அழுதேன். "தாரே ஜமீன் பர்" படம் பாக்கும் போது அந்த சின்னப் பையனை ஹாஸ்டல்ல அவங்க அம்மா-அப்பா விட்டுட்டுப் போகும் போது வரும் அம்மா பாட்டு பாத்து அழுதிருக்கேன். அந்த மாதிரி சமயங்கள்ல எல்லாம் தங்கமணி என் பக்கம் திரும்பி பாப்பாங்க நான் அழறேனா இல்லையான்னு, நானும் சட்னு கைக்குட்டையை எடுத்து கண்ணைத் தொடைச்சிக்குவேன். இதை விளக்குறதுக்காகத் தான் மேல ஒரு பேராக்ராஃப் "சமூகத்தை" சாடிருக்கோம்:) கடைசியா அழுதது பசங்க படம் பார்க்கும் போது. அடிபட்ட ஜீவாவை அவங்க ஆசிரியர் தூக்கிட்டு ஓடி வர்ற மாதிரி இருக்கற காட்சியைப் பார்த்து அழுதேன். 32 கேள்விகள்லேயே எனக்கு பிடிச்ச கேள்வி இது தான் :)

4. பிடித்த மதிய உணவு?
கீரை சாம்பாரும், உருளைக்கிழங்கு வறுவலும்.

5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
வச்சுக்குவேன். துஷ்டனைக் கண்டாத் தாங்க தூர விலகனும் :)

6. கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
ரெண்டுத்துலயும் இது வரை குளிச்சதில்லை. அதனால இதுக்குப் பதில் சரியாத் தெரியாது. ஷவர்ல குளிக்க ரொம்பப் பிடிக்கும், அருவி ஒரு பெரிய சைஸ் ஷவர்ங்கிறதால அருவில குளிச்சாலும் அது பிடிக்கும்னு தான் நெனைக்கிறேன். சென்னையில கடல்ல குளிக்கிறதைப் பத்தி நெனச்சி கூட பாக்க முடியல. காலை ஏழு மணிக்கு முன்னாடி என்னிக்காச்சும் கடற்கரைக்குப் போய் பாத்தா அதுக்கான காரணம் என்னன்னு புரியும். கங்கையில் ஹரித்வாரில் ரெண்டு வாட்டி குளிச்சிருக்கேன். சுட்டெரிக்கும் வெயிலிலும் சில்லிடும் ஐஸ் தண்ணியில் குளிச்சிட்டு எழுந்தால் கிடைக்கும் புத்துணர்ச்சியை வார்த்தைகளில் சொல்றது கடினம்.

7. ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
ஒருவரைப் பார்க்கும் போது எதையும் கவனிப்பதில்லை. ஒருவரிடம் பழகும் போது அவர் பேச்சிலுள்ள நேர்மையைக் கவனிப்பேன்.

8. உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
எந்தச் செய்லையும் கவனமாகப் பார்த்து பார்த்து திட்டமிட்டு செய்யும் குணம். அப்படிச் செய்தும் அதற்குண்டான பலன் கிடைக்காது போகும் போது ஏற்படும் ஏமாற்றத்தை எளிதில் தாங்க முடியாது இருத்தல் பிடிக்காத விஷயம்.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
மனதில் ஏற்படும் கோபத்தை ஓரிரு நாட்களுக்கு மேல் நீட்டிக்காதது. மனைவி கிட்ட பிடிக்காததுன்னு எதாவது இருக்க முடியுமா? இந்த கேள்வியே தப்பாச்சே:) மனைவி கிட்ட எல்லா விஷயங்களுமே பிடிச்சது தான். கொஞ்சம் கம்மியா பிடிச்ச விஷயம்னு சொல்லனும்னா வேணா அவங்க விஜய் ரசிகையா இருக்கறதைச் சொல்லலாம் :)

10. இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
அப்படி எதுவும் இல்லை

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
இளநீல கலர் சட்டையும், கருநீல கலர் கால்சட்டையும் - quarter pant இல்லை full pant தான் :)

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
வெட்டிப்பயல் எழுதிருக்கற 32 கேள்விகளுக்கான பதில்களை. மெட்டி படத்துலேருந்து "மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட" பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கேன்.

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
மஞ்சள். எனக்கு பிடிச்ச வண்ணம்.

14. பிடித்த மணம்?
அர்ச்சனாவைக் குளிப்பாட்டி முடிக்கும் போது கடைசியில் "Johnsons Baby Cologne" கலந்து தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டுவார்கள். அதற்குப் பின் உடை உடுத்தி, நெத்திக்குப் பொட்டு வைத்த பின்னர் அவளைத் தூக்கி உச்சி முகரும் போது பேபி பவுடரும் கலோனும் கலந்து வரும் அந்த நறுமணம்.

15. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
ஒரு பதிவுன்னு சொல்றது கஷ்டம். பாலாஜியோட பல பதிவுகள் பிடிக்கும். அவருடைய சிறுகதைகளில் நம்மை நாமே தொடர்பு படுத்திப் பார்த்துக் கொள்ளக் கூடிய மாதிரி சில விஷயங்களைச் சொல்லியிருப்பார். அது தான் கதையோட முடிவு சந்தோஷமா இருந்தாலும், சோகமா இருந்தாலும் படிக்கிறவங்களுக்கு மனசுக்கு நெருக்கமாப் பட வைக்குதுங்கிறது என்னோட எண்ணம். உதாரணத்துக்குச் சொல்லனும்னா அவர் சமீபத்தில் எழுதிய குட்டிப் பாப்பா சிறுகதையில் கீழ்கண்ட இவ்வரிகள்.

"அவசரத்திற்கு நண்பர்களிடமிருந்து கடன் வாங்கலாம். வேலை தேடும் போது நண்பர்களுக்கு நான் கணக்குப் பார்க்காமல் செலவு செய்திருக்கிறேன். ஒருத்தராவது உதவாமலா போய்விடுவார்கள். என் மனதில் உள்ள பயம் தீபாவிற்கு தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். "

16. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
கப்பி
ராயல்
நான் ஆதவன்
- ரொம்ப நாளா மூனு பேரும் எதுவும் எழுதலை, அது தான் காரணம். முதல் ரெண்டு பேரை ஏற்கனவே வெட்டிப்பயல் கூப்பிட்டுட்டதுன்னால என்னைத் தனியா திட்ட மாட்டாங்கன்னு ஒரு நம்பிக்கை.

நான் ஆதவன் - நீங்க மட்டும் வேணும்னா திட்டறதுன்னா திட்டிக்குங்க :)

17. பிடித்த விளையாட்டு?
நான் விளையாடுவதென்றால் - Scrabble. பிறர் விளையாடுவதென்றால் - கிரிக்கெட், ஹாக்கி :)

18. கண்ணாடி அணிபவரா?
ஆமாம்

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
காமெடி, அதிக பில்டப் இல்லாத படங்கள்

20. கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க.

21. பிடித்த பருவ காலம் எது?
வசந்த காலம். சென்னையில் பார்த்தது இல்லை. புதுதில்லியில் பார்த்திருக்கேன். குளிர்காலம் முடிந்து பிப்ரவரி-மார்ச் மாதங்கள் நல்ல தட்பவெப்ப நிலையோடு மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்.

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இப்போதைக்கு எதுவும் இல்லை. உண்மையைச் சொல்லனும்னா பலகாலமாக எதுவும் இல்லை. நேரம் கெடைக்கும் போது, ப்ளாக் மட்டும் தான் படிக்கிறது.

23. உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அப்படி எல்லாம் எதுவும் வரைமுறை இல்லை. தோன்றும் போது மாற்றுவேன்.

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
சமீபகாலமாகப் பிடித்த சத்தம் என் பத்து மாத மகள் "ஏய் ஏய்" என்று பேச முயலும் சத்தம். பிடிக்காதது குழந்தையின் தூக்கத்தைக் கலைக்கும் அனைத்து சத்தங்களும்.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
புசான் - Busan(தென் கொரியா)

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்கிறதுலயே ரொம்ப சில்லறைத் தனமான, சப்பைத் தனமான சில விஷயங்களைக் கூட மிகவும் கூர்ந்து கவனிப்பது, அதை பல காலம் வரை நினைவில் நிறுத்திக் கொள்வது. அதனால இதுவரை எந்த பயனும் இது வரை விளைந்ததில்லை என்று தெரிந்துள்ள போதும்.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
எனக்கு நல்லது நடக்கும் போது "எனக்கு மட்டும் இதெல்லாம் ஏன் நடக்குது" என்று கேளாத மனது, தீயது நடக்கும் போது மட்டும் "எனக்கு மட்டும் இதெல்லாம் ஏன் நடக்குது" என்று கேட்கத் துணிவது.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
மனம்

மனது ஒன்று இருக்கிறதே எனது என்று தவிக்கிறதே
எனது மனம் அழிந்திடவே அருள் புரிவாய் அருள் புரிவாய்


29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலா தலம்?
மலை சார்ந்த சுற்றுலா தலங்கள் பிடிக்கும் - ஊட்டி மட்டும் தான் போயிருக்கேன். அதனால அது பிடிக்கும்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
இது வரை இருந்தது rat raceஇல் ஓடும் billions of ratsஇல் நானும் ஒரு rat ஆக. அதனால போறதுக்குள்ள சமூகத்துக்கு எந்த வகையிலாவது பயனுள்ளவனா இருந்துட்டுப் போகனும்னு ஒரு எண்ணம் இருக்கு.

31. மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்?
மனைவிக்குத் தெரியாமல், கடைசி நேரம் வரை ரகசியங்களைக் காப்பாற்றி சர்ப்ரைஸ்கள் கொடுப்பது, ஆச்சரியப்படுத்துவது.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
And in the end, it's not the years in your life that count. It's the life in your years. இது நான் சொல்லலை, ஆபிரகாம் லிங்கன் சொன்னது. இந்த கேள்விக்கு நெஞ்சை நக்குற மாதிரி எதாவது பதில் சொல்லனும்ங்கிறதுக்காக கூகிளில் தேடிக் கண்டுபிடிச்சேன். இந்த கேள்வி பதில் மூலமா புதுசா தெரிஞ்சிக்கிட்ட ஒரு விஷயம் இது. அதுக்காக பாலாஜிக்கு நன்றி சொல்லிக்கிறேன்.

28 comments:

சந்தனமுல்லை said...

//இந்திய டீம் ஹாக்கி மேட்ச் ஜெயிக்கிற மாதிரி காட்சி வரும் போது சந்தோஷத்துல அழுதேன். "தாரே ஜமீன் பர்" படம் பாக்கும் போது அந்த சின்னப் பையனை ஹாஸ்டல்ல அவங்க அம்மா-அப்பா விட்டுட்டுப் போகும் போது வரும் அம்மா பாட்டு பாத்து அழுதிருக்கேன். அந்த மாதிரி சமயங்கள்ல எல்லாம் தங்கமணி என் பக்கம் திரும்பி பாப்பாங்க நான் அழறேனா இல்லையான்னு, //

ஹிஹி....நான் இது மாதிரி எங்க ஆயா, காலேஜ்-ல எங்க ப்ஃரெண்ட்ஸ் எல்லோரையும் ஓட்டறதே பிழைப்பா செஞ்சுருக்கேன்! சொல்லப் போனா படம் பார்க்கிறதை விட முக்கியமான செண்டி சீன் வரும்போது பக்கத்துல இருக்கறவங்களை பார்க்கிறது செம ஜாலி! :-)))

சந்தனமுல்லை said...

//ஒருவரைப் பார்க்கும் போது எதையும் கவனிப்பதில்லை. ஒருவரிடம் பழகும் போது அவர் பேச்சிலுள்ள நேர்மையைக் கவனிப்பேன்.//

"நச்" நமச்சிவாயம்!! :-))

சந்தனமுல்லை said...

//மனைவி கிட்ட பிடிக்காததுன்னு எதாவது இருக்க முடியுமா? இந்த கேள்வியே தப்பாச்சே:) மனைவி கிட்ட எல்லா விஷயங்களுமே பிடிச்சது தான். //

நீங்க இப்படி பம்முறதை பார்த்தா மேடம் ப்லோக் பக்கம் வர்றாங்களா?!! :-))

rapp said...

me the first

rapp said...

//ஆண்கள் Facial, bleaching, manicure, pedicure எல்லாம் பண்ணிக்க அனுமதிக்கிற சமூகத்துல பெண்களைப் போல ஆண்களுக்கும் சங்கோஜமில்லாம அழ சம உரிமை வேணும்.//

:):):)

//அந்த மாதிரி சமயங்கள்ல எல்லாம் தங்கமணி என் பக்கம் திரும்பி பாப்பாங்க நான் அழறேனா இல்லையான்னு, நானும் சட்னு கைக்குட்டையை எடுத்து கண்ணைத் தொடைச்சிக்குவேன். இதை விளக்குறதுக்காகத் தான் மேல ஒரு பேராக்ராஃப் "சமூகத்தை" சாடிருக்கோம்//
ஒரு தடவை விகடன்ல மதன் இதே ரேஞ்சில் தான் விடை சொல்லி ஆதங்கத்தை கொட்டிட்டார், அழுகயப் பத்தி:):):) சூப்பர்:):):)

பாசகி said...

//"சக் தே இந்தியா" படம் பார்க்கும் போது இந்திய டீம் ஹாக்கி மேட்ச் ஜெயிக்கிற மாதிரி காட்சி வரும் போது சந்தோஷத்துல அழுதேன். "தாரே ஜமீன் பர்" படம் பாக்கும் போது அந்த சின்னப் பையனை ஹாஸ்டல்ல அவங்க அம்மா-அப்பா விட்டுட்டுப் போகும் போது வரும் அம்மா பாட்டு பாத்து அழுதிருக்கேன்.//

me too :(

//அவங்க விஜய் ரசிகையா இருக்கறதைச் சொல்லலாம் :)

...quarter pant இல்லை full pant தான் :) //

ரசித்தேன்... சிரித்தேன் :)

ஆயில்யன் said...

//சந்தனமுல்லை said...

//ஒருவரைப் பார்க்கும் போது எதையும் கவனிப்பதில்லை. ஒருவரிடம் பழகும் போது அவர் பேச்சிலுள்ள நேர்மையைக் கவனிப்பேன்.//

"நச்" நமச்சிவாயம்!! :-))
//
றீப்பிட்டேய்ய்ய்ய்ய்!

Sumathi. said...

ஹாய் மோஹன்,
ரொம்ப அழகா நச்சுனு பதில்
சொல்லியிருக்கீங்க.
//...quarter pant இல்லை full pant தான் :) ரசித்தேன்... சிரித்தேன் :)//

நானும் கூட.

சந்தனமுல்லை said...

//கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
ரெண்டுத்துலயும் இது வரை குளிச்சதில்லை//

ஓ..இவ்வள்வுதானா..நான் ஏதோ குளிச்சதேயில்ல போல ன்னு நினைச்சுட்டேன்! :-))

☀நான் ஆதவன்☀ said...

//இப்பெல்லாம் உறவுகள், உணர்ச்சிகள் இந்த மாதிரி விஷயங்கள் பத்தி புரியறதுனால டக் டக்குன்னு கண்ணு கலங்கிடுது. குறிப்பா சினிமாவுல எதாவது ஒரு காட்சி ஒன்றிப் போய் பார்க்கும் போது என்னையும் அறியாம அழுகை வந்துடும்//

அண்ணே வயசானாலே இந்த பிரச்சனை வரும் :)

பை த பை அழைத்ததற்கு நன்றி. பதிவு நாளைக்கு போடுறேன்

கைப்புள்ள said...

//ஹிஹி....நான் இது மாதிரி எங்க ஆயா, காலேஜ்-ல எங்க ப்ஃரெண்ட்ஸ் எல்லோரையும் ஓட்டறதே பிழைப்பா செஞ்சுருக்கேன்! சொல்லப் போனா படம் பார்க்கிறதை விட முக்கியமான செண்டி சீன் வரும்போது பக்கத்துல இருக்கறவங்களை பார்க்கிறது செம ஜாலி! :-)))//

என்னா ஒரு வில்லத்தனம்?

கைப்புள்ள said...

////ஒருவரைப் பார்க்கும் போது எதையும் கவனிப்பதில்லை. ஒருவரிடம் பழகும் போது அவர் பேச்சிலுள்ள நேர்மையைக் கவனிப்பேன்.//

"நச்" நமச்சிவாயம்!! :-))//

ஹி...ஹி...நன்றிங்க முல்லை.
:)

கைப்புள்ள said...

//நீங்க இப்படி பம்முறதை பார்த்தா மேடம் ப்லோக் பக்கம் வர்றாங்களா?!! :-))//

உஷ்ஷ்...சத்தம் போட்டு பேசாதீங்க.
:)

கைப்புள்ள said...

//rapp said...
me the first
//

யூ தி ஃபோர்த்
:)

கைப்புள்ள said...

//ஒரு தடவை விகடன்ல மதன் இதே ரேஞ்சில் தான் விடை சொல்லி ஆதங்கத்தை கொட்டிட்டார், அழுகயப் பத்தி:):):) சூப்பர்:):):)//

ஹி...ஹி...வந்ததுக்கும் ஹாய் மதன் ரேஞ்சுக்கு உயர்த்தி பேசுனதுக்கும் நன்றிங்க ராப்
:)

கைப்புள்ள said...

////"சக் தே இந்தியா" படம் பார்க்கும் போது இந்திய டீம் ஹாக்கி மேட்ச் ஜெயிக்கிற மாதிரி காட்சி வரும் போது சந்தோஷத்துல அழுதேன். "தாரே ஜமீன் பர்" படம் பாக்கும் போது அந்த சின்னப் பையனை ஹாஸ்டல்ல அவங்க அம்மா-அப்பா விட்டுட்டுப் போகும் போது வரும் அம்மா பாட்டு பாத்து அழுதிருக்கேன்.//

me too :(//


உள்ளம் உள்ள ஜனங்க இந்த படத்தைப் பாத்து அழுகும்.
:)

//அவங்க விஜய் ரசிகையா இருக்கறதைச் சொல்லலாம் :)

...quarter pant இல்லை full pant தான் :) //

ரசித்தேன்... சிரித்தேன் :)//

ரசிச்சதுக்கும் சிரிச்சதுக்கும் நன்றிங்க பாசகி.
:)

கைப்புள்ள said...

////ஒருவரைப் பார்க்கும் போது எதையும் கவனிப்பதில்லை. ஒருவரிடம் பழகும் போது அவர் பேச்சிலுள்ள நேர்மையைக் கவனிப்பேன்.//

"நச்" நமச்சிவாயம்!! :-))
//
றீப்பிட்டேய்ய்ய்ய்ய்!//

நன்றி ஆயில்ஸ்.
:)

கைப்புள்ள said...

//ஹாய் மோஹன்,
ரொம்ப அழகா நச்சுனு பதில்
சொல்லியிருக்கீங்க.
//...quarter pant இல்லை full pant தான் :) ரசித்தேன்... சிரித்தேன் :)//

நானும் கூட.//

நன்றி மேடம்

கைப்புள்ள said...

//ஓ..இவ்வள்வுதானா..நான் ஏதோ குளிச்சதேயில்ல போல ன்னு நினைச்சுட்டேன்! :-))//

என்ன இது சின்னப்பில்லத்தனமா?
:)

கைப்புள்ள said...

// குறிப்பா சினிமாவுல எதாவது ஒரு காட்சி ஒன்றிப் போய் பார்க்கும் போது என்னையும் அறியாம அழுகை வந்துடும்//

அண்ணே வயசானாலே இந்த பிரச்சனை வரும் :)//

ஹ்ம்ம்ம்...
:((

//பை த பை அழைத்ததற்கு நன்றி. பதிவு நாளைக்கு போடுறேன்//

ஓகே...உங்க பதிவை எதிர்பார்க்கறேன்.
:)

Anonymous said...

//ஹிஹி....நான் இது மாதிரி எங்க ஆயா, காலேஜ்-ல எங்க ப்ஃரெண்ட்ஸ் எல்லோரையும் ஓட்டறதே பிழைப்பா செஞ்சுருக்கேன்! சொல்லப் போனா படம் பார்க்கிறதை விட முக்கியமான செண்டி சீன் வரும்போது பக்கத்துல இருக்கறவங்களை பார்க்கிறது செம ஜாலி! :-)))//

நானும் இந்த கட்சி தான், யாராவது அழுதா, என் முன்னடி அழுததுக்காக இன்னொரு தடவை அவங்க தனிய அழுக வேண்டி இருக்கும்..

சந்தனமுல்லை said...

// பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
சமீபகாலமாகப் பிடித்த சத்தம் என் பத்து மாத மகள் "ஏய் ஏய்" என்று பேச முயலும் சத்தம். பிடிக்காதது குழந்தையின் தூக்கத்தைக் கலைக்கும் அனைத்து சத்தங்களும்.//

சூப்பர்! எனக்கும் தூக்கத்தைக் கலைக்கிற எந்த சத்தமும் பிடிக்காது! :-)

கோபிநாத் said...

நல்லாயிருக்கு தல உங்க பதில்கள் எல்லாம்...அழுகைக்கு ஒரு ஸ்பெசல் "ஒ" :)

கைப்புள்ள said...

//நானும் இந்த கட்சி தான், யாராவது அழுதா, என் முன்னடி அழுததுக்காக இன்னொரு தடவை அவங்க தனிய அழுக வேண்டி இருக்கும்..//

வாங்க மயில்,
நல்ல பாலிசி தான் :) இது குழந்தைகளுக்கும் பொருந்துங்களா?
:)

கைப்புள்ள said...

//சூப்பர்! எனக்கும் தூக்கத்தைக் கலைக்கிற எந்த சத்தமும் பிடிக்காது! :-)//

யாரு தூக்கத்தை? உங்க தூக்கத்தையா? குழந்தை தூக்கத்தையா? சரியாச் சொல்லுங்க
:)

கைப்புள்ள said...

//நல்லாயிருக்கு தல உங்க பதில்கள் எல்லாம்...அழுகைக்கு ஒரு ஸ்பெசல் "ஒ" :)//

ரொம்ப நன்றி கேப்டன் கோபிநாத்.
:)

சந்தனமுல்லை said...

// கைப்புள்ள said...

//சூப்பர்! எனக்கும் தூக்கத்தைக் கலைக்கிற எந்த சத்தமும் பிடிக்காது! :-)//

யாரு தூக்கத்தை? உங்க தூக்கத்தையா? குழந்தை தூக்கத்தையா? சரியாச் சொல்லுங்க
:)//

வெரிகுட்! நீங்க பாஸ்! இப்படி கேள்வி வருதான்னு பார்க்கத்தான் அபப்டி ஒரு கமெண்ட்! ;-))

வெட்டிப்பயல் said...

தல,
வழக்கம் போல அருமையான பதிவு :)

மதிய உணவு எனக்கும் பிடித்தது...

அருவில ட்ரை பண்ணுங்க தல. சூப்பரா இருக்கும்.

ஒரு நல்ல பதிவை படித்த திருப்தி :)

As usual.. From the Heart :)