"ஹலோ! நான் ஒண்டிபுதூர், கோயமுத்தூர்லேருந்து சாரதா பேசுறேன். நல்லாருக்கீங்களா"னு தொடங்கி படபடனு ஒரு அம்மா நேத்து பெப்சி உமாவோடயும் நடிகர் ஜீவாவோடவும் சன் டிவி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சில பேச ஆரம்பிச்சதும், அட ஒண்டிபுதூர்ங்கிற ஊர் பேர நாம எங்கேயோ கேள்வி பட்டிருக்கோமேணு தோணிச்சு. 'கட்' பண்ணா சில வருசத்துக்கு முன்னாடி பால்மணம் மாறாத பையனா இருக்கும் போது(கவனிக்கணும் சில வருசம் தான்) கோயமுத்தூருக்கும் போயி ஒரு வாரம் நம்ம ஆட்டையைப் போட்டது திடீர்னு ஞாபகம் வந்துச்சு. காலேஜ் கொசுவர்த்தி சுருள் சுத்தலாம்னு நெனச்சு கல் தோன்றி மண் தோன்றா காலத்துல 'கிண்டி டைம்ஸ்'னு ஒரு பதிவைத் தொடங்குனதும் ஞாபகத்துக்கு வந்துச்சு. எல்லாரும் உசுப்பேத்தி வுடறாங்களே நாம தான் பெரிய இவுரு('வெண்ரு'னு படிங்க)ஆயிட்டமே, இனிமே கதை எழுதுனா சேப்டர் சேப்டராக் கோர்வையாத் தான் எழுதணும்னு நெனச்சு கிண்டி டைம்ஸைக் கெடப்புல போட்டதும் ஞாபகம் வந்துச்சு. சரிங்க மிஸ்டர் வெண்ரு, கிண்டி டைம்ஸுக்கும் ஒண்டிபுதூருக்கும் என்ன சம்பந்தம்னு கேக்கிறீங்க...அதானே? சம்பந்தம் இருக்குங்களே? கோயம்புத்தூர் இல்லாம நம்ம வாழ்க்கையில அண்ணா யுனிவர்சிடியே இருந்திருக்காது.
ப்ளஸ்2 முடிச்சதும் மொத மொதல்ல நம்ம 'தெறம'ய புரிஞ்சிக்கிட்டு சீட் குடுத்தது கோயமுத்தூர் GCT(Government College of Technology) தான். கொளுத்துற ஜூன் மாச வெயில்ல மெட்ராஸ்லேருந்து கோயமுத்தூர் போனா, ராத்திரி நீலகிரி எக்ஸ்பிரஸ்ல குளுரு பின்னு பின்னுன்னு பின்னுது. 1-C ஒண்டிபுதூர் டு வடவள்ளி போற சேரன் பஸ் தான் அந்த ஊர்ல நம்ம ஆஸ்தான வாகனம். கோயமுத்தூர் ஜங்சன்ல 1-Cயைப் புடிச்சா நேரா லாலி ரோடுங்கிற எடத்துல எறக்கி வுட்டுருவாங். அங்கண எறங்கி கொஞ்சம் முன்ன நடந்தா ஜிசிடி வந்துரும். ஆர்.கே.நாராயணனோட 'மால்குடி டேஸ்' புக்லயும் லாலி ரோடுன்னு ஒரு ரோடு வரும்... ஆனா இந்த சமாச்சாரம் அப்பால தான் தெரிஞ்சுது நமக்கு. ஒரு வேளை ஆர்.கே.நாராயணனுக்குப் பேர் வைக்க ஐடியா கொடுத்த எடமோ? எது எப்படியோ...அந்த எடம் பார்க்க நல்லா அழகாத் தான் இருந்துச்சு. ஜிசிடிக்கு இன்னும் கொஞ்சம் தூரம் தள்ளி தடாகம் ரோட்டுல(அதான்னு நெனக்கிறேன்)தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம். நீ கிழிச்ச கிழிக்கு எங்கே ஒனக்கு இஞ்சினியரிங் சீட் கெடக்கப் போவுதுன்னு எங்க அப்புச்சி பயங்காட்டுனதுல B.Sc(Agri)க்கும் அப்ளை பண்ணி வச்சிருந்தேன். புல் பூண்டுக்கெல்லாம் பாடனிகல் பேரை தெரிஞ்சு வச்சிருந்த ஒரு விவசாய மேதை இஞ்சினியரிங் சீட் கெடச்சதால இப்ப கம்பூயட்டரைக் கட்டி மாரடிக்கிற கூலி வேலை பாத்துக்குனு இருக்காரு.
'சின்னப் பையனாச்சே!' தனியா வூட்டை வுட்டு மொத மொறையா போறானேனு அப்புச்சியும் என்னைய காலேஜ்ல சேத்து வுட அடம்புடிச்சு வர்றாரு(!). நம்மள செண்ட்ரல் ஸ்டேசன்ல வழி அனுப்புறதுக்கு ஒரு பெரிய கூட்டம் வேற. இதுக்கே இப்பிடின்னா நாலு வருசம் படிச்சி முடிச்சிட்டு வந்துருந்தா ஒரு வேளை 'பாட்டி சொல்லைத் தட்டாதே' படம் ரேஞ்சுக்குத் மாலை மரியாதை எல்லாம் செஞ்சு வரவேத்துருப்பாங்களோ என்னவோ? காலேஜ்ல சேர போகும் போது ஒழுங்கு மரியாதையா மூட்டை முடிச்சி எல்லாம் கட்டிக்கிட்டு ஒரேயடியா போயிருக்கலாம். ஆனா காலேஜ் எப்படியிருக்கு, நம்ம பயலுக்கு அங்க வசதியெல்லாம் எப்படி இருக்கும்னு மொதல்ல ஒரு reconaissance survey உட்டுக்கலாம்(நான் சிவில் இஞ்சினியரிங் படிச்சவன்னு நீங்க நம்பணும் இல்லியா...அதுக்குத் தான் இந்த பீட்டரு), அப்புறமா வந்து மூட்டை முடிச்சி கட்டிக்கலாம்னு ஒரு அரிதி பெரும்பான்மை முடிவை அம்ஸும் அப்ஸும் சேந்து எடுத்துட்டாங்க.
அங்கே சுத்து வட்டாரப் பதினெட்டு பட்டியிலயும் நல்ல பேருள்ள காலேஜ் நம்ம ஜிசிடி. கிட்டத்தட்ட அம்பது பர்செண்ட் 'புள்ளங்க' இருந்ததுனால 'கேர்ள்ஸ் காலேஜ் ஆப் டெக்னாலஜி'னு ஒரு பட்டப் பேரு வேற. சரினு அங்கப் போனா சேந்த மூணு நாள்லேயே காலேஜ் ஆரம்பிக்குதுங்கறாங்க. ஆஸ்டல் ரூமை மட்டும் வாங்கிக்கிட்டு ஒடனே திரும்பவும் வண்டியை வுடு மெட்ராஸுக்கு. பையன் கஷ்டப் படக்கூடாதுன்னு நம்மளைப் பெத்தவங்க மூட்டை கட்டுனாங்க பாருங்க நமக்காக...அடடடா இன்னிக்கெல்லாம் சொல்லிக்கிட்டே இருக்கலாம் அதப் பத்தி. நான் கொண்டு போன சாமாஞ் செட்டப் பாத்து பயலுவ எல்லாம் நம்மள ஒரு மார்க்கமாத் தான் பாத்தானுவ. க்ளோசப் டூத்பேஸ்ட் - ஆறு, சிந்தால் சோப் - 4, ரின் சோப் - 6, சன்சில்க் ஷாம்பூ - 3, இது போக தின்றதுக்கு முறுக்கு சீடை, மிச்சரு இத்தியாதி...இப்படின்னு மளிகை கடை லிஸ்ட் தோத்துச்சு போங்க.எதோ அங்க கடைபோடுற லெவலுக்குத் தான் போனேன்.
சீனியர் பயலுங்க ராகிங் எல்லாம் பண்ணுவானுங்கன்னு கேள்வி பட்டிருந்தாலும், ஆஸ்டல்ல போய் சேந்த அன்னிக்கு ஒன்னும் பெருசா நடக்கலை. ஆனா பொழுது விடிஞ்சதும் குலை நடுங்க வச்ச ஒரு சேதி என்னன்னா அதுக்கு முத நாள் ராத்திரி ரெண்டு எமகாதக சீனியருங்க ஃபர்ஸ்ட் இயர் ஆஸ்டல் டிரெய்னேஜ் பைப்பைப் புடிச்சு ரெண்டு மாறி மாங்கு மான்குன்னு ஏறி ஜன்னல் கம்பியைப் புடிச்சு வெளியில் தொங்கிட்டு பச்ச புள்ளங்களை ராகிங் பண்ணிருக்கானுவங்கிறது. அதோட அந்நியன் மாதிரி இதே கதி தான் எல்லாருக்கும்னு வார்னிங் வேற குடுத்துட்டுப் போயிருந்தானுவ. சீனியர் பசங்கக் கிட்டேருந்து காப்பாத்தறதுக்காகப் பட்டியில அடைச்ச ஆடுங்களைத் தெறந்து வுடற மாதிரி காலைல எட்டு மணிக்கு ஆஸ்டல் வாச்மேன் பிகில் அடிச்சி கூப்பிடுவாரு...அதுக்கு முன்னாடி யாரும் வெளியே போவ முடியாது. ஃபர்ஸ்ட் இயருங்கிறதால நாங்களும் சொன்ன பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டு வாச்மேன் பிகிலே கதின்னு கெடந்தோம்.
மொத நாள் க்ளாஸ்லே எல்லாரும் அவுங்க அவுங்க ஊரு பேரையெல்லாம் சொல்றாங்க. ஒரு பய சத்தியமங்கலம்ங்கிறான், ஒரு புள்ள சிறுமுகைங்குது இன்னொரு பய பண்ணாரி கேம்ப்ங்கிறான்...அப்ப தான் வீரப்பன் சிறுமுகைல ரெண்டே ரெண்டு எளநி சீவிருந்தாரு...என்னடா படிக்கிற பயலுகளும் வீரப்பனுக்கு மாமன் மச்சான் மொறயா இருப்பானுங்க போலிருக்கேனு நெனச்சிக்கிட்டு ஒக்காந்திருக்கும் போதே வாத்தியார் ஒரு பையனை எழுப்பறாரு...'தம்பி நீ மெட்ராசா' அப்டீங்கறாரு. அவனும் ஆமாங்கையாங்கிறான். எப்பிடிரா சரியா சொல்றாருன்னு யோசிக்கும் போதே 'காலேஜ் மொத நாளே டீ சர்ட்டும் ஸ்போர்ட்ஸ் ஷூ மாட்டிட்டு வந்துருக்கியே! அத வச்சு சொன்னேன். தம்பி நீங்கல்லாம் ப்ரொபஷனல் கோர்ஸ் படிக்கிற பசங்க...இந்த படிப்புக்குன்னு ஒரு மதிப்பு மரியாதை இருக்கு. அதை புரிஞ்சு நடந்துக்குங்க' அப்பிடீங்கறாரு. ஆஹா! இந்த ஊர்ல ஆட்டம் ஆடுனா நம்மளைக் குத்தி உக்கார வச்சுடுவாங்க போலிருக்கே...நம்ம அப்புச்சி தீர்க்கதரிசி தான்...ஒரு வாத்தியார் எப்பிடி யோசிப்பாருன்னு தெரிஞ்சு தான் நமக்கு எப்பிடி உடுத்தணும் எப்பிடி நடக்கணும்னு சொல்லி அனுப்பிச்சிருக்காரு. இதெல்லாம் காலேஜ் வாத்தியார் புள்ளயா இருக்கறதோட பலன்னு நெனச்சிக்கிட்டேன்.
என்னிக்குடா நம்ம கைல மாட்டுவானுங்கன்னு ரெண்டு நாள் பொறத்துப் பொறுத்து பாத்த பைப் ஏற முடியாத சீனியர் பசங்க கிளாஸ் ரூமுக்கு வாச்மேன் பின்னாடி வரிசையா போறதப் பாத்துட்டு 'போங்கடி போங்க...இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பிகில் வேலையெல்லாம் நடக்குதுன்னு நாங்களும் பாக்கறோம்'னு நாங்க போகும் போது சவுண்டு வுட ஆரம்பிச்சிட்டானுங்க. என்னத்தப் பண்றது...நாம ஃபர்ஸ்ட் இயரா பொறந்த பாவத்துக்கு இந்தப் பேச்செல்லாம் கேட்க வேண்டியிருக்கு, ராகிங்ல நாம மாட்டாத வரைக்கும் எல்லாம் சரி தான்னு நம்பி... கொஞ்சூண்டு சந்தோஷப் பட்டதுக்கு வேட்டு வச்சாரு ஒரு சாமியாரு...
(டிஸ்கி : இது மார்ச் 24, 2006 அன்னிக்கு ஏற்கனவே பதிப்பிச்ச பதிவு தான். நினைவுகளைத் தொடரலாம்னு திரும்பவும் இன்னிக்கு பப்ளிஷ் செஞ்சிருக்கேன்)
Thursday, June 18, 2009
கிண்டி டைம்ஸ் : GCT நினைவுகள் - Reloaded
Subscribe to:
Post Comments (Atom)
64 comments:
நல்ல 'நடை'னே உங்களோடது.. வெளுத்து வாங்குங்க..
உங்க நினைவுகள் நல்லா இருக்கு. GCTஐ நாங்க மச்சான் காலேஜ்ம்போம், ஏன்னா, நீங்க சொல்ற 50% நம்ம கிட்ட இல்ல (நாங்க CIT), அதனால அங்க ஃப்ரண்டு வச்சுக்கிட்டா, அது நம்ம மச்சான்ங்க, பிகர்கிட்ட கடல போட வசதி. நமக்கும் பழைய நினப்புதான்! அழகா லாலி ரோடு, தடாகம், 1C எல்லாம் ஞாபகபடுத்தி, அந்த காலத்துக்கு தள்ளிப்புட்டீங்களே அப்பு, நினச்சு காலம் இப்படி ஓடிடுச்சேன்னு சோகமா இருக்கு!
kaippu,
athu thadagam road illa... vadavalli roadlathan agri univ irukkku
//நல்ல 'நடை'னே உங்களோடது.. வெளுத்து வாங்குங்க..//
வாங்க சாணக்கியன்,
உங்களோட முதல் வருகைக்கு மிக்க நன்றி. எல்லாம் நீங்க குடுக்கற ஆதரவு தாங்க. அடிக்கடி வாங்க.
வாங்க வெளிகண்ட நாதர்,
கோயமுத்தூர்ல ஒரு வாரம் தான் இருந்தேன்னாலும் அங்கே நல்ல நினைவுகள் நமக்கு. அதான் பத்து வருஷத்துக்கு அப்புறமும் ஞாபகம் இருக்கு.
////நம்ம கிட்ட இல்ல (நாங்க CIT), அதனால அங்க ஃப்ரண்டு வச்சுக்கிட்டா, அது நம்ம மச்சான்ங்க, பிகர்கிட்ட கடல போட வசதி.//
:))-
CIT - இஞ்சினியரிங் காலேஜ்ங்கள்ல கல்ச்சுரல் விஷயத்துல ரொம்ப முன்னன்னு கேள்வி பட்டிருக்கேன். ஒரு தரம் எங்க காலேஜ்ல CIT மியூசிக் ட்ரூப் 'இளைய நிலா' பாட்டுக்கு வந்து பட்டைய கெளப்பிட்டுப் போனது ஞாபகம் இருக்கு.
//அழகா லாலி ரோடு, தடாகம், 1C எல்லாம் ஞாபகபடுத்தி, அந்த காலத்துக்கு தள்ளிப்புட்டீங்களே அப்பு, நினச்சு காலம் இப்படி ஓடிடுச்சேன்னு சோகமா இருக்கு!//
என்னங்க பண்றது? அதெல்லாம் திரும்ப வராதுங்கறதுனால தான இதெல்லாம் எழுதி எழுதி சந்தோசப் பட்டுக்கறோம்?
//athu thadagam road illa... vadavalli roadlathan agri univ irukkku//
வாங்க அனானிமஸ்,
தங்கள் வருகைக்கு நன்றி. தவறைச் சுட்டிக் காட்டுனதுக்கும் நன்றிங்க.
'முகமூடி'யின் 'சரக்கு' தொடருக்குப் பின் உடனே தொடர்ந்து வருவதால், அதன் பாதிப்பு இது என்ற உணர்வினைத் தவிர்க்க முடியாவிட்டாலும், பதிவு என்னவோ சுவையாகத்தான் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன்!
எங்க ஊரை ரொம்ப நியாபகப்படுத்திட்டீங்க! நேத்து தான் ஒரு முசுவு ஊருக்குப் போகணும்னு பொலம்பித் தீத்தேன். இந்த ஊருக்கு(அமெரிக்காவுக்கு) வந்து 1.5 வருஷம் ஓடிப்போச்சு... இதைப் படிச்ச்ச்ப்போட்டு எனக்கு "நியாபகம் வருதே.. நியாபகம் வருதே " பாட்டு மனசுல ஓடுது. :(:( 1C ஒண்டிப்புதூர் to வடவள்ளியா இல்ல மருதமலையா? எனக்கு மருதமலைன்னு நியாபகம்.
-அனிதா
//'முகமூடி'யின் 'சரக்கு' தொடருக்குப் பின் உடனே தொடர்ந்து வருவதால், அதன் பாதிப்பு இது என்ற உணர்வினைத் தவிர்க்க முடியாவிட்டாலும், பதிவு என்னவோ சுவையாகத்தான் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன்!//
வாங்க SK,
வலைப்பதிவு உலகில் பெரியவங்களோட எல்லாம் நம்மளை இணைச்சு பேசறீங்க. அதுக்கு நான் தகுதியானவனானு தெரியலை...இருந்தாலும் சந்தோஷங்க.தொடர்ந்து வாங்க.
//எங்க ஊரை ரொம்ப நியாபகப்படுத்திட்டீங்க! நேத்து தான் ஒரு முசுவு ஊருக்குப் போகணும்னு பொலம்பித் தீத்தேன்.//
வாங்க அனிதா மேடம்,
தங்கள் முதல் வருகைக்கு நன்றி. நம்ம பதிவைப் படிச்சு உங்க ஊர் ஞாபகம் வந்துச்சா...ரொம்ப சந்தோஷங்க. உங்க பின்னூட்டதுலேரு 'முசுவு'ன்னு ஒரு வார்த்தையையும் பிக்கப் பண்ணிக்கிட்டேன். 'முசுவு'ன்னா ஒரு 'தடவை'ன்னு சொல்லலாங்களா?
//1C ஒண்டிப்புதூர் to வடவள்ளியா இல்ல மருதமலையா? எனக்கு மருதமலைன்னு நியாபகம்.//
எனக்குத் தெரிஞ்சவரைக்கும் வடவள்ளி தான். ஆனா ஒரு 'முசுவு'(சரி தானுங்களா?)கோயமுத்தூர் ஜங்சன்லேருந்து நேராவே மருதமலைக்குப் போயிருக்கேன்...ஆனா பஸ் நம்பர் நெனப்பு இல்லீங்கோ. யாராச்சும் கோவை லோக்கல் பார்ட்டிங்க தெரிஞ்சா சொல்லுங்கய்யா!
கைப்புள்ள மிக விரைவில் இங்கு இன்னோரு GCT வாசி வந்து சேருவார். எப்படி அனுசுயா (http://vanusuya.blogspot.com)இந்த வலைப்பதிவை தவற விட்டார் எனத் தெரியவில்லை.
வரவர இந்த GCT வாசிகள் ஆர்பாட்டம் தாங்க முடிய வில்லையப்பா(சும்மா டமாசு).. இருப்பினும் விரைவில் அனுவை இங்கு ஆற்று படுத்து கிறேன்.
//வரவர இந்த GCT வாசிகள் ஆர்பாட்டம் தாங்க முடிய வில்லையப்பா(சும்மா டமாசு).. இருப்பினும் விரைவில் அனுவை இங்கு ஆற்று படுத்து கிறேன்.//
வாங்க தமிழ்பயணி,
தங்கள் முதல் வருகைக்கு நன்றி. கண்டிப்பா ஆற்று படுத்துங்க. ஆனா நான் நாலு வருசமும் GCTயில படிக்கலைங்க. ஒரு வாரம் தான் நம்ம GCT வாசம். அனுசுயா வந்து எங்க காலேஜை விட்டுட்டு ஓடிப் போன துரோகி தானேடா நீன்னு என்னைத் திட்டாம இருந்தா சரி தான். :)- எனக்குத் தெரிஞ்ச இன்னொரு GCT வாசி 'என்றென்றும் அன்புடன் பாலா சார்'.ஆர்ப்பாட்டம் பண்ற பார்ட்டிங்க யாருன்னு சொல்லுங்க...நானும் தெரிஞ்சிக்கறேன்.
GCT என்ற பெயரைப் பார்த்தவுடன் உங்கள் பதிவைப் படித்தேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நான் GCT யின் பழைய மாணவன். (1974-1979) (ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பழையவன்) நான் படிக்கும்போதும் அது 1c தான். ஒண்டிபுதூர் டு வடவள்ளி. வேளான் பல்கலைக் கழகம் இருப்பது மருதமலைச் சாலை. அதாவது வடவள்ளிச் சாலை. GCT இருப்பது தடாகம் சாலை. அதே சாலையில் 2கிமீ தள்ளி வேலாண்டிப் பாளையத்தில் ஒரு டெண்ட் கொட்டாய் இருந்தது.
என் வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஓடிக்கொண்டிருப்பதன் அடிநாதமாக GCT நினைவுகள் இருக்கின்றன. ஐந்து வருடங்களின் அரச வாழ்க்கை வாழ்வு முழுதுமே வியாபிக்கக் கூடிய அளவினது.
வேறு யார் யார் GCT மக்கள் இணையத்தில் இருக்கிறார்கள் தெரிந்துகொள்ள ஆசை.
நன்றி
அன்புடன்
நடராஜன்
sn_in@yahoo.com
வடவள்ளிக்கும் 1Cதான், மருதமலைக்கும் 1Cதான். ஏன்னா, அதே ரோட்ல முத வடவள்ளி வரும். கடைசியா மருதமலை வரும். அந்த ரோட்டுக்குப்பேரு மருதமலை ரோடு.
லாலி ரோடு corner-லயிருந்து left-ல திரும்பினா மருதமலை ரோடு, நேராப் போன தடாகம் ரோடு. மருதமலை ரோட்டுல முத stop வேளாண்மைப் பல்கலைக் கழகம்.
//என் வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஓடிக்கொண்டிருப்பதன் அடிநாதமாக GCT நினைவுகள் இருக்கின்றன. ஐந்து வருடங்களின் அரச வாழ்க்கை வாழ்வு முழுதுமே வியாபிக்கக் கூடிய அளவினது.
வேறு யார் யார் GCT மக்கள் இணையத்தில் இருக்கிறார்கள் தெரிந்துகொள்ள ஆசை.//
வாங்க நடராஜன் சார்,
இந்த பதிவைப் பார்த்து உங்களுக்கு உங்க வாழ்க்கையின் மறக்க முடியாத தருணங்கள் நினைவுக்கு வந்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி. எனக்குத் தெரிந்து GCTயினர் இருவர் இருக்கிறார்கள்.
என்றென்றும் அன்புடன் பாலா
அனுசுயா
வேறு யாராவது தெரிஞ்சவங்க இருந்தாலும் இதை படிக்கிறவங்க சொல்லுங்க.
//லாலி ரோடு corner-லயிருந்து left-ல திரும்பினா மருதமலை ரோடு, நேராப் போன தடாகம் ரோடு. மருதமலை ரோட்டுல முத stop வேளாண்மைப் பல்கலைக் கழகம்.//
வாங்க பிரேமலதா மேடம்,
ஆமாங்க நீங்க சொன்னதை படிச்சதும் தான் எனக்கு இந்த வழியெல்லாம் தெளிவாகுது. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. அடிக்கடி வாங்க.
நீங்கள் CEGயா அல்லது GCTயா என்பதைத் தெரியப்படுத்துங்கள். உங்களின் GCT பற்றிய இந்தப் பதிவு வேறு மாதிரி இருந்ததே. நான் CEG மாணவன். சமீபத்தில் 1963லிருந்து 1969 வரை படித்தேன். நடுவில் இரண்டாம் வருடம் பெயிலானதில் ஒரு வருடம் வீட்டில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நீங்கள் CEGயா அல்லது GCTயா என்பதைத் தெரியப்படுத்துங்கள்.//
வாங்க டோண்டு சார்,
நான் நாலு வருடம் படித்தது CEGயில் தான். CEGயில் சேருவதற்கு முன் முதலில் சீட் கிடைத்தது GCTயில் தான். GCTயில் ஒரு வாரம் ஆஸ்டலில் கழித்த என் நினைவுகளைத் தான் இங்கு பதிந்துள்ளேன். இது என் கல்லூரி நினைவலைகள் என்பதால் 'கிண்டி டைம்ஸ்' என்ற பெயரை இப்பதிவுக்கும் prefix ஆக வைத்துள்ளேன்.
அப்பா(நிம்மதிப்பெருமூச்சு), நம்ம சமீபத்துலதான் பிறந்திருக்கோம். என்னா ஒரு நிம்மதி.
கைப்பு, கொஞ்சம் சரியில்லாம ஒரே எடமா வந்துக்கிட்டிருக்கமே. எந்த வருசம்?, அதான்பா சமீபத்துல பிறந்து, சமீபத்துல படிச்சப்போ (பெயிலாகாம)...
//கைப்பு, கொஞ்சம் சரியில்லாம ஒரே எடமா வந்துக்கிட்டிருக்கமே. எந்த வருசம்?, அதான்பா சமீபத்துல பிறந்து, சமீபத்துல படிச்சப்போ (பெயிலாகாம)...//
ஐயயோ...என் மரமண்டைக்கு ஒன்னும் புரியலியே...நான் என்ன செய்வேன்?
ROTFLMAO.
:-)
சரி சரி, எந்த வருசம் college batch?
//ROTFLMAO. //
ROTFL = Rolling on the floor laughing...
MAO =???
//சரி சரி, எந்த வருசம் college batch? //
1999
சே, நீரு ரெம்பவே சமீபம். வெக்ககேடு. எனக்கு பத்துவருசம் juniorனு நினைச்சு பின்னூட்டம் போடப்போனேன். அதுக்குள்ள வருசம் போடூட்டீரு. அம்மா, 99-ல join ஆ? ஏன் அவ்வளவு லேட்டு? +2லயே டொக்கா?
//MAO =???//
அய்யோ பாவம். (again ROTFLMAO) சின்னப்புள்ளையாவே இரும். அது கெட்ட வார்த்த.
your blogger profile says that you are 27 years old. that means you are born in 1979?
கைப்புள்ள!!.. இந்த ராகிங் பத்தி நீங்க சொன்ன உடனே எனக்கு என்னோட ஏ.சி.டெக். அனுபவங்கள் ஞாபகம் வருது.!!
ராகிங் பண்ணி-ன சீனியர்ஸ செகண்ட் இயர் வந்த உடனே... முதல் வேலயா அவனுங்கள மதிக்க கூடாதுன்னு முடிவு பண்ணி அவனுங்க முன்னாடியே ஓவரா ரவுஸ் வுட்டுட்டு இருந்து...அப்புறம் நல்ல நண்பர்களானது சுவாரஸ்யமான கதை!!
நல்லா எழுதறீங்க கைப்பு. ம்... இத படிச்சா அந்த லாலிரோடு, டீக்கடை, பழக்கடை அப்பப்ப நூலகம், ஆசிரியர்கள் எல்லாம் ஞாபகம், வருதே ஞாபகம் வருதே.
//+2லயே டொக்கா?//
உஹும்...உஹும்...எனக்கு அளுவாச்சி அளுவாச்சியா வருது.
//that you are 27 years old. that means you are born in 1979?//
இதப் பாருங்க...இந்த வயசைப் பத்தி மட்டும் பேசுனீங்க நான் மனுசனா இருக்க மாட்டேன்...நான் தான் பல எடத்துலயும் பல தரம் சொல்லிருக்கேனே...நமக்கு வாலிப வயசுன்னு...அப்புறம் என்ன 78, 79ன்னு சின்னப்புள்ளத் தனமா? சின்னப் பையன் வாழ்க்கையோட வெளாடாதீங்க...ஆமா
//ராகிங் பண்ணி-ன சீனியர்ஸ செகண்ட் இயர் வந்த உடனே... முதல் வேலயா அவனுங்கள மதிக்க கூடாதுன்னு முடிவு பண்ணி அவனுங்க முன்னாடியே ஓவரா ரவுஸ் வுட்டுட்டு இருந்து...அப்புறம் நல்ல நண்பர்களானது சுவாரஸ்யமான கதை!!//
ஆஹா! இந்த கதை உங்களுக்கும் நடந்திருக்கா? நீங்க சொன்ன மாதிரி காலேஜ்ல சண்டை சச்சரவு எல்லாம் வந்த வேகத்துலியே மறைஞ்சு போயிடும்.
//நல்லா எழுதறீங்க கைப்பு. ம்... இத படிச்சா அந்த லாலிரோடு, டீக்கடை, பழக்கடை அப்பப்ப நூலகம், ஆசிரியர்கள் எல்லாம் ஞாபகம், வருதே ஞாபகம் வருதே.//
ரொம்ப நன்றிங்க! அங்க சுத்து வட்டாரத்துல எனக்கு எதுவும் தெரியாதுன்னாலும்...இப்ப ஒரு விஷயம் ஞாபகம் வந்துச்சு...அந்த பையனுக்கு அட்வைஸ் பண்ண அந்த பேராசிரியர் பேரு டாக்டர்.அமிர்தகடேசுவரன். இப்ப தான் சட்டுன்னு தோணுச்சு.
pongadi ponga va... enna akramam ragingkku adharavu therivikalenna ippadi ellama pesaradu - che che ...
anyways enna achu ragingla seekrama sollunga
உள்ளேன் ஐயா! :-P
(ஒன்னுமில்ல கைப்புள்ள, படிச்சி முடிச்சதும் என்ன பின்னூட்டம் இடுறதுன்னு தெரியலை.. அதான்.. ஹி.. ஹி..)
பின்னூட்டத்த படிச்ச பின்னாடி, நீங்க என்னா எழுதியிருக்கீங்கன்னு மறந்து போச்சு, உங்கள மாதிரியே எனக்கும் வயசு ஆகிருச்சோ?
//pongadi ponga va... enna akramam ragingkku adharavu therivikalenna ippadi ellama pesaradu - che che ...//
ஐயயோ! எனக்கும் இதுக்கும் சம்பந்தம் கிடையாது...அந்த பசங்க சொன்னதை தான் நான் எழுதியிருக்கேன்.
//anyways enna achu ragingla seekrama sollunga//
எவ்ளோ த்ரில்லிங்கா...சர்ப்ரைசிங்கா...ஒரு க்ளிஃப்ஹாங்கர் மாதிரி இருக்கு இல்ல? எனக்குத் தெரியும் நான் James Hadley Chase(யாருப்பா அவன்!)மாதிரி எழுதறேன்னு.
:)
//உள்ளேன் ஐயா! :-P//
வாங்க கோபி!
ஞாபகம் வச்சு பின்னூட்டம் போட்டதுக்கு நன்றிங்க. இத வச்சும் கணக்கு காமிச்சுருவோம்ல?
:)-
சொல்லவந்த விதயத்தை ஆரம்பிக்குமுன்பே இத்தனை நினைவலைகளா ?
கைபுள்ளை வின்னர் தான். :)
//பின்னூட்டத்த படிச்ச பின்னாடி, நீங்க என்னா எழுதியிருக்கீங்கன்னு மறந்து போச்சு//
அவ்வளவு வெத்தா இருக்குங்களா?
:)-
//உங்கள மாதிரியே எனக்கும் வயசு ஆகிருச்சோ?//
சங்கத்து ஆளா இருந்துட்டு இப்பிடியெல்லாம் பேசறது கொஞ்சம் கூட நல்லால்ல. வெளியாளுங்களுக்கு சரி...ஆனா உங்களுக்குத் தான் தெரியுமில்ல...உங்க கைப்பு இன்னும் 'கைப்படாத ரோசா'ன்னு. நீங்க வயசானவன்னு இப்பிடி எல்லார் முன்னாலயும் சொன்னீங்னா...வேணாம்...வலிக்குது...அளுதுருவேன்
//சொல்லவந்த விதயத்தை ஆரம்பிக்குமுன்பே இத்தனை நினைவலைகளா ?
கைபுள்ளை வின்னர் தான். :)//
எல்லாம் பெரியவங்க ஆசிர்வாதம் தான் சார்.
:)-
பட்டய கிளப்புங்க கைப்பு...கலக்குறீங்க போங்க...:))
//பட்டய கிளப்புங்க கைப்பு...கலக்குறீங்க போங்க...:))//
வாங்க டுபுக்கு சார்,
இது நாம போட்டுக்கிட்ட நமக்கு நாமே 'டீல்' பிரகாரமா? இல்லை இதை நான் பெரியவங்க வாக்கு பெருமாள் வாக்குன்னு எடுத்துக்கறதா?
chanceeeaaa ilaaaa...
nerayaa kathukkanum unga kittaaa...
ini adikkadi varuven kaipulla..
//chanceeeaaa ilaaaa...
nerayaa kathukkanum unga kittaaa...//
அடடா!
முதல்ல பகவான் டுபுக்கு எழுந்தருளினார். அடுத்ததா அவருடைய தம்பி 'சின்ன டுபுக்கு' அம்பி வந்து வாழ்த்தியிருக்காரு. அடியேன் தன்யனானேன். அடிக்கடி வாங்க. சக்கர சேச்சியை நான் விசாரிச்சதாவும் சொல்லுங்க.
:)
Enna Kaipullai, Chennai vanthu innuma settle agavillai? Pathive onrum Kaanom? Romba nalachchu. Sangathu velai ellam appadi appadiye kidakku? Magalir Ani Thalavi enra muraiyil cholli vitten.Viraivil ungal pathivai ethiparkiren. Sangathu alunga ellam parunga, chummave irukkanga Thlaivanai thedamal.Naan vena Kanavillai enru oru vilambaram kodukkava?
////Enna Kaipullai, Chennai vanthu innuma settle agavillai? Pathive onrum Kaanom? Romba nalachchu.//
வாங்க மேடம்! நான் இன்னும் இந்தூர்ல தான் இருக்கேன். உலகம் முழுக்க உன்னைய மாதிரி ஆளுங்களுக்காகத் தான் ஒரு பண்டிகை கொண்டாடுறாங்க. நீ அதை எங்க கூட இருந்து கொண்டாடிட்டு கடைசியா சில ஸ்பெசல் பல்புகளை வாங்கிட்டுத் தான் போகணும்னு இங்கே ஆபிசுல சொல்லிட்டாங்க. அதனால நான் சனிக்கிழமை தான் இங்கிருந்தே கிளம்பறேன்.இங்கே போன ரெண்டு மாசமா ஓபி அடிச்சதால நெறைய வேலை அதெல்லாம் முடிச்சிக் கொடுக்க வேண்டியிருக்கு. அதனால தான் புதுசா எதுவும் உளறல் இல்லை.
//Magalir Ani Thalavi enra muraiyil cholli vitten.//
ஆஹா...இது வேறயா? மகளிர் அணி உறுப்பினர்களை எல்லாம் அப்போ நீங்க ஏற்பாடு பண்ணிடுவீங்கன்னு சொல்லுங்க.
//Sangathu alunga ellam parunga, chummave irukkanga Thlaivanai thedamal.Naan vena Kanavillai enru oru vilambaram kodukkava?//
அதெல்லாம் வேணாங்க. நம்ம சங்கத்து தொண்டர் தல வாழை இலை போட்டு விருந்து(ஆப்பு) வச்சிருக்காரே நீங்க பாக்கலியா?
கைப்புள்ள இந்தப் பதிவ எப்பப் போட்டீங்க...கண்ணுலயே படாம இருந்திருச்சி. இப்பப் பாத்தா நாப்பத்திச் சொச்சப் பின்னூட்டம். பிச்சு ஒதர்ரீங்க....நடக்கட்டும். நடக்கும். கொசுத்தொல்லை ரொம்பவோ...ரொம்பக் கொசுவத்தி சுத்துறீங்களே..........
நல்லா இருக்கு
Neengal varuvatharkul Thalaivazhai virunthu kettu poi vidum. Athai parththu vittuthan koopitten. Rombave slow ponga. Virunthu aari poi vidum.
Ahaaa, kaipulla chakrachechi matter unga varikkum therinju pochchaa?
eppo yen blogguku vantheengaa? oru comment pottu poirunthaa santhosa patruppen illa!
//சும்மா ரவுண்டு கட்டி பின்னூட்டம் போடறதுன்னா இதுதானா... :-)//
வாங்க பறக்கும் பட்டம்!
மன்னிக்கணும். அப்புறமா பதில் எழுதலாம்னு நினைச்சு அப்படியே மறந்து போயிட்டேன்.
உங்களோட முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. எல்லாம் உங்களை மாதிரி நம்ம ப்ளாக்குக்கு வந்து படிக்கிறவங்களோட அன்பு தாங்க.
//இப்பப் பாத்தா நாப்பத்திச் சொச்சப் பின்னூட்டம். பிச்சு ஒதர்ரீங்க....நடக்கட்டும். நடக்கும். கொசுத்தொல்லை ரொம்பவோ...ரொம்பக் கொசுவத்தி சுத்துறீங்களே.......... //
//இப்பப் பாத்தா நாப்பத்திச் சொச்சப் பின்னூட்டம். பிச்சு ஒதர்ரீங்க....நடக்கட்டும். நடக்கும். கொசுத்தொல்லை ரொம்பவோ...ரொம்பக் கொசுவத்தி சுத்துறீங்களே.......... //
தாமதத்துக்கு மன்னிக்கணும். எல்லாம் பெரியவங்க ஆசிர்வாதம் தான். கொசுவத்திக்காகத் தானே இந்த ப்ளாக்கையே தொடங்குனது!
//நல்லா இருக்கு//
ஆகா! திருமுருகனும் தமிழ்ல எழுத ஆரம்பிச்சிட்டான்யா! அப்படியே ஒரு தமிழ் ப்ளாக் ஆரம்பிச்சு கோதாவுல குதிக்கறது தானே?
//Virunthu aari poi vidum.//
இப்ப நிஜமாவே ஆறித் தான் போச்சு.
//Ahaaa, kaipulla chakrachechi matter unga varikkum therinju pochchaa?
eppo yen blogguku vantheengaa? oru comment pottu poirunthaa santhosa patruppen illa!//
மன்னிக்கணும் அப்ப சென்னைக்குத் திரும்பற அவசரத்துல இருந்தேன். அதனால உடனே பின்னூட்டம் போட முடியலை. இனிமே கரெக்டா பின்னூட்டம் போட்டுடறேன்.
>>முதல்ல பகவான் டுபுக்கு எழுந்தருளினார். அடுத்ததா அவருடைய தம்பி 'சின்ன டுபுக்கு' அம்பி வந்து வாழ்த்தியிருக்காரு. அடியேன் தன்யனானேன்
>>
இதெல்லாம் ரெம்ப ஓவர்ன்னு உங்களுக்கே தோனல....?
//இதெல்லாம் ரெம்ப ஓவர்ன்னு உங்களுக்கே தோனல....?//
தோணலியேம்மா!
:))-
ஆஹா!!! கைப்புள்ள அண்ணன் என் காலேஜ் சீனியர்!!! அதான் ஒரு விட்ட குறை தொட்ட குறை இருக்கு...
கைப்புள்ள,
Good posting ! I am also a GCTian.
Pl. read:
http://balaji_ammu.blogspot.com/2006/04/gct-part-2.html
கைப்ஸ்..என்னமோ தேட்டீட்டி இருக்கும்போது..கூகில் ஆண்டவர் இந்த பிரசாத்த குடுத்தார்... எங்க ஊர்லயா படிச்சீங்க?.. பதிவ படிச்சுட்டு சும்மா போக முடியலை..அதான் இந்த பினூட்டம்....நீங்க தான் இப்ப பதிவு போடுறதிலையே..? ஏன்?... ரொம்ப பிஸியா?...இல்ல நாங்க எல்லா ரொம்ப சலிப்பு ஏற்படுத்தறமா?..
கைப்ஸ்..என்னமோ தேட்டீட்டி இருக்கும்போது..கூகில் ஆண்டவர் இந்த பிரசாத்த குடுத்தார்... எங்க ஊர்ல வாரம் தான் படிச்சீங்களா?.. மிஸ் பண்ணிட்டீங்க...:-))...பதிவ படிச்சுட்டு சும்மா போக முடியலை..அதான் இந்த பினூட்டம்....நீங்க தான் இப்ப பதிவு போடுறதிலையே..? ஏன்?... ரொம்ப பிஸியா?...இல்ல நாங்க எல்லா ரொம்ப சலிப்பு ஏற்படுத்தறமா?..
me the first(indha vaatti)
//me the first(indha vaatti)//
Rapp வாங்க வாங்க...யூ தி ஃபர்ஸ்ட் :)
super super, adutha paagathukku waiting:):):)
கலக்கல்ஸ்...நீங்க GCT-யா??? என்னோட ப்ரண்ட்ஸ் ரெண்டு பேரு அங்கதான் சிவில் படிச்சாங்க.
கைப்ஸ்,
1C வடவள்ளி வரைதான்.
1A, 1B,1D,1E எல்லாம் மருதமலை வரை போகும்.
நல்ல கொசுவர்த்தி
Post a Comment