Tuesday, June 30, 2009

ஜீஜாபாய் கதைகள் : இந்த காலத்துப் பொண்ணுங்க!

ஜீஜாபாய் யாருன்னு எல்லாருக்கும் தெரியும் தானே? மராட்டிய மாமன்னர் சிவாஜியின் அம்மா தான் ஜீஜாபாய். சிறுவயது முதலே தன் மகனுக்குக் கதைகள் சொல்லி அவரை ஒரு அறிவாளியாகவும், நீதிமானாகவும், வீரனாகவும் வளர்த்தார். கதை கேட்டா அறிவாளி ஆவறோமா, நீதிமான் ஆகறோமா இல்லை வீரனாகறோமான்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா கதை கேக்கறது எனக்கு ரொம்ப புடிக்கும், அதுல இருக்கற ஃபேண்டஸி எலிமெண்ட்டுக்காக. அதுவும் எங்க வீட்டு ஜீஜாபாய் சொன்னா ரொம்ப சுவாரசியமா இருக்கும். ஆ...ன்னு வாயைப் பிளந்துக்கிட்டு கேப்பேன். நான் மாவீரன் சிவாஜின்னா எங்கம்மா ஜீஜாபாய் தானே...ஹி...ஹி... எங்கம்மா அதுவும் கதையைச் சொன்னா சும்மா சொல்ல மாட்டாங்க, திரைக்கதையோட வசனத்தோட ஏற்ற இறக்கத்தோட கிட்டத்தட்ட நடிச்சே காட்டுவாங்க. அப்படி எங்கம்மா கிட்ட கேட்ட ஒரு கதை/நிகழ்வு/உரையாடல் தான் இது.

என் மகள் பிறந்திருந்த நேரம் அது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவியையும் மகளையும் பார்ப்பதற்காக நானும் என் அம்மாவும் அப்பாவும் அம்பத்தூர் சென்று விட்டு ஒரு மாலை வேளையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். திருவான்மியூர் செல்லும் 47D பேருந்தில் மூவரும் ஏறினோம். மூவருக்கும் வெவ்வேறு இடங்களில் உட்கார இடம் கிடைத்தது. அம்மாவுக்கு ஒரு பழக்கம். வீட்டில் இருக்கும் போது பொதுவாகத் தூங்க மாட்டாங்க. ஆனா எங்கேயாச்சும் வெளியே பேருந்துலேயே ரயிலிலேயோ போறதுன்னா போதும் ஏறி உக்காந்ததுமே தூக்கம் வந்துடும். ஆனா பக்கத்துல யாராச்சும் உக்காந்து பேச்சு குடுத்துக்கிட்டே வந்தாங்கன்னா தூங்க மாட்டாங்க. அப்படி ஒரு விநோதமான பழக்கம். எங்கம்மா மகளிர் இருக்கைகள் இருக்கற இட புறத்துலயும் நானும் எங்கப்பாவும் வலது புறத்துலயும் உக்கார்ந்துருந்தோம். அன்னிக்கு எங்கம்மா பக்கத்துல ஒரு 20 வயசு மதிக்கத் தக்க பொண்ணு உக்கார்ந்துருந்துச்சு. ஏறி உக்காந்ததும் தூங்குவாங்களே என்ன பண்ணறாங்கன்னு திரும்பி பார்த்தேன். அந்த பொண்ணு கிட்டே பேசிட்டு வந்துட்டு இருந்தாங்க. இன்னும் கொஞ்ச தூரம் போனதும் மறுபடியும் பார்த்தேன். இப்போ முன்னைவிட சுவாரசியமா சிரிச்சி சிரிச்சி ரெண்டு பேரும் பேசிக்கிட்டே வந்தாங்க. அட! என்னடா இவ்வளோ ஆழமா பேசிக்கிட்டு வராங்களேன்னு நானும் கவனிச்சிக்கிட்டே வரேன். ஆனா அவங்க சிரிச்சி பேசிக்கிறது மட்டும் குறையவே இல்லை. என் பக்கத்துல உக்காந்துருந்தவன் என்னை மாதிரியே காதுல (ஐ-பாட்) மாட்டிக்கிட்டு இருந்ததுனால என் கிட்ட யாரும் பேச வேற இல்லை. அதனால எனக்கு வேற ஒரே பொறாமை. கடைசியா அந்த பொண்ணு தி.நகர் பேருந்து நிலையத்து கிட்ட இறங்கி எங்கம்மாவுக்கு கை காட்டிட்டு போற வரைக்கும் அவங்க பேசிக்கிட்டே தான் வந்தாங்க. அந்த பொண்ணு இறங்கிப் போனதும் தூங்க ஆரம்பிச்சிட்டாங்க.

வீட்டுக்குப் போனதும் முதல் வேலையா அப்படி என்ன அவ்வளவு இண்டெரெஸ்டிங்கா சிரிச்சி சிரிச்சி பேசிக்கிட்டே வந்தாங்கன்னு தெரிஞ்சிக்க எனக்கு ஒரே ஆர்வம். எங்கம்மா எனக்கு மிமிக்ரியோட ஏற்ற இறக்கத்தோட சொன்ன கதையோட உரையாடல் வடிவம் தான் கீழே.

"டைம் என்னங்க ஆச்சு"

"ஆறு நாப்பதுமா"

"நீங்க எது வரைக்கும் போறீங்க ஆண்ட்டி?"

"திருவான்மியூர் வரைக்கும்மா"

என்னை காட்டி "அந்த அங்கிள் கூடத் தான் வந்தீங்களா?" :(

"அங்கிள் முன்னாடி உக்கார்ந்துருக்காரு பாரு அவரு தான். அது என் பையன்". இதை சொல்லிட்டு எங்கம்மா என் கிட்ட சொன்னது "இருபது வயசு பொண்ணே உன்னை அங்கிள்ங்கிறா. முதல்ல தொப்பையைக் குறைச்சிக்க" அதுக்கு நான் சொன்னேன்"இனிமே தொப்பை இருந்தா என்ன இல்லாட்டி என்ன, அதான் கல்யாணம் ஆகி குழந்தை கூட பொறந்துடுச்சே"ன்னு. நறுக்குன்னு மண்டையில ஒரு கொட்டு விழுந்துச்சு.

"சாரி ஆண்ட்டி"

"அம்பத்தூர்ல தான் உங்க வீடா?"

"இல்லம்மா, மருமகளுக்குக் குழந்தை பொறந்துருக்கு. அதை பாத்துட்டு வீட்டுக்குப் போயிக்கிட்டிருக்கோம்"

"எங்க வீடு எங்கேருக்கு சொல்லுங்க பாப்போம்"

"தெரியலையேம்மா"

"நீங்க போற வழில தான்"

"நாங்க போற வழில நெறைய இடம் இருக்கு. நான் எதைன்னு சொல்லறது?"

"சும்மா ஒரு கெஸ் பண்ணுங்களேன்"

"சைதாப்பேட்டையா?"

"அதான் இல்லை. டி.நகர்ல தான் எங்க வீடு. டி.நகர் பஸ் ஸ்டாண்டுக்குப் பின்னாடி ஒரு ரோடு போகுதில்லை. அதுல செக்கண்ட் லெஃப்ட் திரும்புனா ஒரு அபார்ட்மெண்ட் வரும். அதுல ஃபிஃப்த் ஃப்ளோர்ல தான் எங்க வீடு"

"ஓஹோ"

"அம்பத்தூர்ல என் ஃப்ரெண்டு வீடு இருக்கு. அங்கே தான் போயிட்டு வரேன்"

"அப்படியா? என்னம்மா பண்ணறே நீ"

"நான் கரெஸ்ல B.C.A.படிக்கிறேன் ஆண்ட்டி"

"கரெஸ்னா என்னம்மா?"

"என்னது உங்களுக்கு கரெஸ்னா என்னன்னு தெரியாதா?"

"தெரியாதும்மா"

"கரெஸ்பாண்டென்ஸ்ல போஸ்டல்ல படிக்கிறதை தான் ஷார்ட்டா கரெஸ்னு சொல்லுவாங்க"

"அப்படியாம்மா"

"ஆண்ட்டி! நான் ரொம்ப குண்டா இருக்கேனா ஆண்ட்டி?"

"ஏம்மா! உனக்கு என்ன? நல்லா ஸ்லிம்மா அழகாத் தானே இருக்கே?"

"போங்க ஆண்ட்டி. நீங்க பொய் சொல்றீங்க. நான் குண்டா இருக்கேன்னு எனக்கே தெரியும். இப்போ என்னோட வெயிட் எவ்வளோ தெரியுமா 46 கேஜி. நான் 40 கேஜி யைத் தாண்டுனதேயில்லை".

"இதெல்லாம் போய் ஒரு வெயிட்டுன்னு சொல்லறியேம்மா. இந்த வயசுல நல்லா சாப்பிட்டு உடம்பைப் பாத்துக்க வேணாமா?"

"என் வெயிட் அதிகமாயிடுச்சுன்னு நான் அஞ்சு மாடி படிக்கட்டுல தான் ஏறிப் போறேன். லிஃப்ட் எல்லாம் கூட யூஸ் பண்ணறதில்லை. டி.நகர் பஸ் ஸ்டாண்டுலேருந்து எங்க வீட்டுக்குப் போக 15 நிமிஷம் ஆகும். அது கூட நான் ஆட்டோல போகாம நடந்தே தான் போறேன்"

"ஹ்ம்ம்ம்"

"என் பேரு என்னன்னு சொல்லுங்க பாப்போம்?"

"...."

"என்னை பாத்து நான் க்றிஸ்டியன்னு நீங்க நெனச்சிருப்பீங்க. அதான் இல்லை. நான் ஹிண்டு தான். ஃப்ரெண்டு வீட்டுலேருந்து வரும் போது என் பொட்டு கீழே விழுந்துடுச்சு. என் பேரு பத்மப்ரியா"

"இல்லைம்மா. அப்படியெதுவும் நான் நெனக்கலை"

"எங்க வீட்டுலேயே நானும் எங்கப்பாவும் தான் கறுப்பு. எங்கப்பாவுக்கும் அம்மாவுக்கும் லவ் மேரேஜ். எங்கம்மா மலையாளி. என் தம்பி எங்கம்மா மாதிரி நல்லா சிவப்பா இருப்பான். எங்கப்பா கறுப்பா இருந்தாலும் தங்கம் தெரியுமா?"

"தம்பி என்னம்மா பண்ணறான்"

"இப்போ தான் லெவெந்த் படிக்கிறான் ஆண்ட்டி"

"திருவான்மியூர்ல இறங்கப் போறதாச் சொன்னீங்களே? உங்க வீடு அங்கே தானா?"

"இல்லம்மா. இன்னும் கொஞ்சம் தூரம் போகனும் ECRல இருக்கு"

"ஹை! ECRஆ. அங்கே தான் விஜய் வீடு கூட இருக்கு இல்லை"

"ஆமாம்மா. உனக்கு விஜய்ன்னா ரொம்ப பிடிக்குமா?"

"ஆமாம் ஆண்ட்டி! விஜய் படம்ன்னா ஒன்னு விடாமப் பாத்துடுவேன்"

"அப்போ ஒரு நாள் எங்க வீட்டுக்கு வாயேன். அப்படியே விஜயையும் பாத்துட்டுப் போ"

"அதெல்லாம் வேணாம் ஆண்ட்டி. இப்படியே தூரத்துலேருந்து விஜயைப் பாக்கறது தான் எனக்கு புடிச்சிருக்கு."

"ஆனா கல்யாணம்னு ஒன்னு பண்ணிக்கிட்டா விஜய் மாதிரி நல்லா ஹைட்டா அழகா இருக்கற பையனைத் தான் பண்ணிப்பேன் ஆண்ட்டி. அதுக்கு தான் என் வெயிட்டைக் கூட குறைச்சிக்கிட்டு இருக்கேன். எங்க சித்தி பொண்ணு ஒருத்தி இருக்கா. அவ தோனின்னா உயிரையே விடுவா. தோனி மாதிரி மாப்பிள்ள தான் வேணும்னு இப்பவே சொல்லிக்கிட்டு இருக்கா."

"ஆண்ட்டி! நீங்க ஃப்ரீ டைம்ல என்ன ஆண்ட்டி பண்ணுவீங்க?"

"வீட்டு வேலையே சரியாயிருக்கும்மா. அப்படி கொஞ்சம் டைம் கெடைச்சதுன்னா டிவி பார்ப்பேன்"

"மதியானம் தூங்க மாட்டீங்களா?"

"இல்லம்மா"

"நானும் தூங்க மாட்டேன். ஆனா எங்கம்மாவுக்கு மத்தியானம் தூங்கல்லைன்னா சாயந்திரம் எல்லாம் ரொம்ப கஷ்டப் படுவாங்க"

"நீ என்னம்மா பண்ணுவே ஃப்ரீ டைம்ல"

"டிவி பாப்பேன், பாட்டு கேப்பேன். ஃப்ரெண்ட்சுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவேன்".

"ஹ்ம்ம்ம்"

"ஆண்ட்டி உங்க மொபைல் நம்பர் குடுங்க. நான் உங்களுக்கும் இனிமே எஸ்எம்எஸ் அனுப்பறேன்"

"என் கிட்ட மொபைல் இல்லையேம்மா"

"அங்கிள் கிட்ட சொல்லி ஒரு மொபைல் வாங்கிக்கங்க ஆண்ட்டி. மொபைல் ரொம்ப யூஸ்ஃபுல்"

"சரிம்மா"

"நான் எறங்க வேண்டிய எடம் வந்துடுச்சு ஆண்ட்டி. அப்புறம் பாக்கலாம். டாட்டா"

"சரிம்மா"

இந்த முழு கதையையும் கேட்டுட்டு, எனக்கும் என் தம்பிக்கும் நல்ல டைம்பாஸ் ஆச்சு. கதையைச் சொல்லிட்டு எங்கம்மா சொன்னது "இந்த காலத்து பொண்ணுங்களும் அவங்க நெனப்புங்களும்"

17 comments:

கைப்புள்ள said...

இந்த போஸ்ட் உரையாடல் போட்டிக்குன்னும் சொன்னா உதைக்க வருவீங்க தானே?

Iyappan Krishnan said...

இல்லீங்க அங்கிள் உங்களை ஏன் உதைக்கப் போறோம்.

ILA (a) இளா said...

கொஞ்சம் வெளிப்படையான பொண்ணுன்னு சொல்லலாம். ஆனா இப்படியா வெள்ளந்தியா இருக்கிறது? போட்டிக்குன்னா வாழ்த்துக்கள்!

Unknown said...

ஆக கூடி பஸ்ல்ல வந்த அந்தப் புள்ளையை சை அடிச்ச கதைய நாசுக்கா சொல்லியிருக்கீயாக்கும்...

போட்டிக்குன்னா வாழ்த்துக்கள் மாம்ஸூ

கைப்புள்ள said...

இதை எல்லாம் ஒரு கதைன்னு போடறதுக்கு எனக்கே வெக்க வெக்கமாத் தான் வருது. ஆனா வேற எப்படி கட்டுடைக்கறதுன்னு எனக்கு தெரியலை. அதுக்காக நீங்க என்னை கட்டோட உடைச்சிடாதீங்க மக்கா.

Geetha Sambasivam said...

இது ஒரு கதை?? இதுக்கு எனக்கு அழைப்பு??? :P :P :P ஹூம்ம்ம், போட்டிக்குத் தானா நிஜம்மா??? சரி, போனால் போகுது, பரவாயில்லை! :D

Iyappan Krishnan said...

தலைமுறை இடைவெளிங்கறது இது தானோ ?

ஆனா எல்லாப் பெண்களும் இப்படி சற்றே லைலாத்தனமாக இருப்பதில்லை :) ரொம்ப விவரமானவ்ங்க

துபாய் ராஜா said...

//"என்னை காட்டி "அந்த அங்கிள் கூடத் தான் வந்தீங்களா?" :("//

'கைப்புள்ளை'ங்கற பேரை
'கைப்பெருசு'ன்னு மாத்திடுங்க.

:)))))))))))

பித்தன் said...

அங்கிள் என்ன பண்ணுறது youthனா அப்படித்தான்!! விடுங்க அங்கிள்.

அபி அப்பா said...

பாவம் அந்த பொண்ணு! தன்னை ஹீரோயினா நினைச்சு மத்தவங்களை சுத்த வைக்க தெரியாம விஜயை ஹீரோவா நினைச்சு ......அய்யோ பாவம் பெண்கள்.

கைப்புள்ள said...

//இல்லீங்க அங்கிள் உங்களை ஏன் உதைக்கப் போறோம்.//

இந்த மாதிரி ஒரு கமெண்டை நான் எதிர்பார்த்தாலும் உங்க கிட்டேருந்து எதிர்பாக்கலை அங்கிள்.
:)

கைப்புள்ள said...

//கொஞ்சம் வெளிப்படையான பொண்ணுன்னு சொல்லலாம். ஆனா இப்படியா வெள்ளந்தியா இருக்கிறது? போட்டிக்குன்னா வாழ்த்துக்கள்!//

நன்றிங்க விவாஜி
:)

கைப்புள்ள said...

//ஆக கூடி பஸ்ல்ல வந்த அந்தப் புள்ளையை சை அடிச்ச கதைய நாசுக்கா சொல்லியிருக்கீயாக்கும்...
//

என்ன இது சின்னப்புல்லத் தனமா? ஒரு புள்ளைக்குட்டிக் காரனைப் பார்த்து?

சந்தனமுல்லை said...

//
என்னை காட்டி "அந்த அங்கிள் கூடத் தான் வந்தீங்களா?" :(//

LOL!

வெட்டிப்பயல் said...

நிச்சயம் வெற்றி பெற போகும் கதை :-)

(றெம்ப்ளேட் பின்னூட்டம்... கண்டுக்காதீங்க)

தகடூர் கோபி(Gopi) said...

//'கைப்புள்ளை'ங்கற பேரை
'கைப்பெருசு'ன்னு மாத்திடுங்க.

:)))))))))))//

ரிப்பீட்டே...

rapp said...

//எங்கம்மா மகளிர் இருக்கைகள் இருக்கற இட புறத்துலயும் நானும் எங்கப்பாவும் வலது புறத்துலயும் உக்கார்ந்துருந்தோம்.//

//என் பக்கத்துல உக்காந்துருந்தவன் என்னை மாதிரியே காதுல (ஐ-பாட்) மாட்டிக்கிட்டு இருந்ததுனால என் கிட்ட யாரும் பேச வேற இல்லை.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......எதுக்காக உங்கப்பாவை இப்டி மரியாதையில்லாம பேசறீங்க, உங்கக் கூட பேசலைங்கர ஒரு சின்ன காரணத்துக்காகவா?:):):) எப்புடி?:):):)