Sunday, March 12, 2006

தடிப்பசங்க #3

காட்சி 3 : மார்க் வாங்கலியோ மார்க்கு?

ஸ்கூல்ல எட்டாப்பு வரைக்கும் படிக்கறது இருக்குதே, அது காலேஜ் படிக்கறத விட கஷ்டமான ஜமாஜாரம். பாடத்த எல்லாம் அம்மா கிட்ட ஒப்பிச்சு ஒப்பிச்சு ஓகே வாங்கி எக்ஸாம் எழுதி முடிக்கறதுக்குள்ள...ங்கப்பா சாமியோவ். சரி இதோட முடிஞ்சுதா, மார்க் வந்ததும் மேக்ஸ், சயின்ஸ், இங்கிலீசு, தமிழுன்னு ஒவ்வொரு பேப்பருக்கும் ஒவ்வொரு கதை ரெடியா வச்சிருக்கனும். நம்ம வீட்டு பக்கத்துல 90-100னு மார்க் வாங்குற எமகாதகன் எவனாச்சும் இருந்தான்னு வைங்க நம்ம கதை இன்னும் கந்தல். இந்த பதிவு அந்த மாதிரி உலகத்து கஷ்டங்களை எல்லாம் எதிர்கொண்டு ஸ்கூல் எனும் சக்ரவியூகத்தை ஆயகலைகள் அறுபத்திநாலையும் உபயோகிச்சு மீண்டவங்களுக்கு சமர்ப்பணம்.

"வந்துட்டீங்களா? சரி சரி! யூனிஃபார்மை கழட்டி வச்சுட்டு ரெண்டு பேரும் சாப்பிட வாங்க" இது யாரோட டயலாகா இருக்கும்னு கேக்கவே வேணாம். உலகத்து அம்மாக்கள் எல்லாம் இந்த டயலாக் பிறவியிலேயே தெரிஞ்சிட்டு வந்திருப்பாங்க.

"ஏன்மா! உங்களுக்கு அழகா கைட்டுன்னு சொல்ல வராதா? அது என்ன கழட்டு?" - நக்கல்@இளவல்.காம்

"இந்த நக்கலுக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை. இதே பேச்சும் செயலும் படிக்கிறதுலயும் காட்டு. ஹாஃப் இயர்லி எக்சாம் மார்க் எல்லாம் குடுத்தாங்களா?"

"வந்ததும் வராததுமா மார்க் மார்க்னு கேளுங்க? சாப்பிட எதாச்சும் குடுத்தீங்களா?" கரெக்டா தாய்க்குலத்தோட வீக்பாயிண்டை தாக்குறாரு தம்பி.

சாப்பிட்டு முடிச்சதும், எங்கேயிருந்து ஆரம்பிச்சா சரியா இருக்கும்னு தெரிஞ்ச அம்மா "டேய்! மோகன்ராஜ்! பேப்பர் குடுத்தாங்களா?". மோகன்ராஜ் யாருன்னா கேக்குறீங்க? நான் தாங்க. பின்ன எங்கம்மா என்னை கைப்புள்ளன்னா கூப்டுவாங்க?

"குடுத்தாங்க"

"எத்தனை பேப்பர்"

"மூணு"

"என்னன்னா?"

"தமிழ்,சோஷியல்,மேக்ஸ்-2"

"ஒன்னு ஒன்னா கேட்டாத் தான் சொல்லுவியா? என்ன மார்க்?"

"தமிழ்ல 87"

"யாரு ஃபர்ஸ்ட் மார்க்?"

"நான் தான்" - அதனால தானே அத முதல்ல சொல்றது

"சோஷியல்ல?"

"81"

"அதுல யாரு ஃபர்ஸ்ட் மார்க்?" - நானும் ஒரு சோதனையா பாத்துட்டேன். நாம 99ஏ வாங்குனாக் கூட யாரு ஃபர்ஸ்ட் மார்க்குங்கற கேள்வி, கண்டிப்பா ஒரு அம்மாவோட குவெஸ்டின் பாங்க்ல இல்லாம இருக்காது.

"ரவின்னு ஒரு பையன்"

"அவன் எவ்வளோ?"

"85"

"ரவியால 85 எடுக்க முடியுது. உன்னால முடியலியா?" - இதுக்கே இப்படின்னா அவன் எடுத்த உண்மையான மார்க்கான 92ஐ சொன்னா என்னாவும்?

"கணக்குல எவ்வளவு"

"கொஞ்சம் கம்மியாயிடுச்சு"

"எவ்ளோ?"

"67" தலையை தொங்கப்போட்டுக்கிட்டு ஒரு ஐயோ பாவம் முகத்தோட.

"ஏன் 67? எல்லா சம்மும் தெரியும் தெரியும்னு சொன்னியே?"

"இல்லம்மா! ஜியாமெட்ரில ரெண்டு டயாக்ராம் போட்டுட்டேன். ஆனா அதுக்கு கன்ஸ்ட்ரக்ஷன் எழுதுறதுக்குள்ள டைம் ஆயிடுச்சு...மிஸ் பேப்பரைப் புடுங்கிட்டாங்க"

"எக்ஸாம்ல ஒக்காந்து பராக்கு பாத்துட்டு இருந்தியா? சரி! ரெண்டு டயாக்ராம் தானே. அதுக்கா இவ்ளோ மார்க் கொறஞ்சுது?"

"அல்ஜிப்ரால சில ஸில்லி மிஸ்டேக்ஸ்...பாதி மார்க் கூட குடுக்காம எல்லா மார்க்கையும் கட் பண்ணிட்டாங்க...மிஸ் கூட சொன்னாங்க நீ நல்லா படிக்கிற பையன்...உன்னோட சில்லி மிஸ்டேக்னால தான் ஒனக்கு மார்க் போயிருக்குன்னு" - 98 வாங்குன ரவியைப் பாத்து 100மார்க் ஏன் எடுக்க முடியலேன்னு மிஸ் சொன்ன காரணத்தை, நமக்கு சொன்னதா சொல்லி ஒரு சால்ஜாப்பு...நல்லா படிக்கிற பையன்னு நமக்கு நாமே சர்டிபிகேட்.

"சரி! பக்கத்து வீட்டு ஷண்முகவடிவேல் எத்தனை மார்க் ஒவ்வொன்னுலயும்?"

"எல்லாம் என் ரேஞ்சு தான்" - கடன்காரன் "மூக்கன்" எல்லாத்துலயும் 90,95னு இல்ல எடுத்து வச்சிருக்கான். ரவிக்கு போட்டியே அவன் தானே? ஆனாலும் நம்ம பக்கத்து வீட்டுல இருக்கற பாவத்துக்கு அவனை கொஞ்சம் மக்காக்குறது தப்பில்லை.

"உன் ரேஞ்சுன்னா?"

"தமிழ்ல அவன் கம்மி, மேக்ஸ்லயும் சோஷிய்ல்லயும் 2-3 மார்க் அவன் அதிகம்". எங்க வீட்டுல கேட்டா இன்ன் இன்ன சப்ஜெக்ட்ல இன்ன இன்ன மார்க்னு சொல்லுடான்னு அவனுக்கு முன்னாடியே கரெக்டா சொல்லிக் குடுத்திருக்கற தைரியத்துல அளந்து விட்டாச்சு அம்மா கிட்ட. ஆனா என்னிக்காச்சும் மறந்துட்டு அஞ்சாறு மார்க் அந்த நாய் அதிகமா சொல்லிடுச்சுன்னா நம்ம பாடு வீட்டுல திண்டாட்டம் தான். ஆனா சொல்ல மாட்டான்...ஸ்ட்ராங் முட்டாய், தேன் முட்டாய்க்கே அவன் அவன் கணக்கு பாக்கும் போது ஒரு முழு சம்சா(அதாங்க சமோசா) எந்த இளிச்சவாயன் வாங்கிக் குடுப்பான்.

இப்பிடி 90உம்-95உமா வாங்குற கடன்காரன் எக்ஸாம் டைம்ல கரெக்டா வந்து நம்ம கிட்ட சந்தேகம் கேப்பான். அவனோட ஃபர்ஸ்ட் ரிவிஷன், செகண்ட் ரிவிஷன் ஓடிட்டிருக்கும் போது தான் நாம முத முறையா புஸ்தகத்தையே தெறந்துருப்போம். இந்த லட்சணத்துல நம்ம கிட்ட டவுட் க்ளியர் பண்ண வந்துருவான். நான் பண்ண ஒரே புண்ணியம் அவங்கம்மாவும், எங்கம்மாவும் நெருங்கிய தோழிகளா இல்லாதது. ஹை,ஹலோ லெவல்ல தான் இருந்துச்சு அவங்க நட்பு. அதனால நான் தப்பிச்சேன். இல்லன்னா "மூக்கன்"சண்முகவடிவேலை செட்டப் பண்ற டெக்னிக்கும் நமக்கு வேலை செய்யாது. நல்ல காலம் அவுங்க நட்பைக் கெடுக்க நம்பியார் வேலை பண்ணற தேவை நமக்கு ஏற்படலை.

"இதெல்லாம் ஒன்னும் சரியாப் படலை. உங்க டாடி வருவாங்க பேசி கையெழுத்து வாங்கிட்டு போங்க"

"நீ என்னடா? ஒனக்கு எத்தனை பேப்பர் குடுத்தாங்க" - இது மூணாப்பு படிக்கும் இளையவர் கிட்ட.

"ரெண்டு தான்"

"என்னென்ன எவ்ளோ மார்க்"

"மேக்ஸூம்,ஈ.வி.எஸ்ஸும்"

"மார்க்கு கேட்டா தான் சொல்லுவியா?"

"மேக்ஸுல 50"

"ஈ.வி.எஸ்ஸுல 49"

"மார்க் 50க்கா நூறுக்கா?"

"நூறுக்கு தான்"

"இது தான் நீ படிக்கிற லட்சணமா? மூணாவதுலேயே இப்படின்னா பின்னாடி பெரிய கிளாஸ் போக போக பாடம் கூடுமா குறையுமா?"

"........."

அம்மாவுக்குக் கோவம் வருது. நாக்கைத் துருத்திட்டு ஸ்கேல் எடுத்து ரெண்டு வைக்கிறாங்க ரெண்டு பேருக்கும். லைட்டா வலிக்குது தான்.

"இந்த லட்சணத்துல் உங்களுக்குக் கேக்கறதெல்லாம் வேணும். விதவிதமா டிரெஸ், சாப்பாடுன்னு. அது வேணாம் இது வேணாம்னு ரெண்டு நாய்க்கும் பந்தா வேற. படிக்கிறத தவிர உங்களுக்கு அப்படி என்னடா வேலை?"

"சரி! யாரு ஃபர்ஸ்ட் மார்க்"

"தெரியாது"

"தெரியாதா? நீ கேக்கலையா?"

"யாரோ ஒரு பொண்ணு"

"யாரோ ஒரு பொண்ணா? அவ எத்தனை மார்க்னு நீ கேக்கலையா?"

"நான் பொண்ணுங்க கிட்டெல்லாம் பேச மாட்டேன்"

அடப்பாவி!போட்டானே ஒரு போடு...மத்த சமயத்துலெல்லாம் கிளாஸ்ல இருக்கற கவிதாவிலேயே ஒரு நாலு ரகம் சொல்லுவான் - ஈ.கவிதா, பி.கவிதா,எஸ்.கவிதான்னு,எல்.கவிதான்னு. மார்க்ன்னதும் அந்தர் பல்டிடா சாமியோவ்! எது எப்படியோ! பையன் நல்லா சமாளிச்சுட்டான்...நமக்கு தான் இந்த காரணத்தை எல்லாம் சொல்ற குடுப்பினை இல்லை. ஏன்னா பாய்ஸ் ஸ்கூல்ங்கிறதால அஞ்சாவதோட பொண்ணுங்களுக்கு டாட்டா.

"ஆமா! நீ எப்படி பேசுவே பொண்ணுங்க கிட்ட? உன் மார்க் என்னன்னு அவ கேட்டா நான் முட்டை வாங்கியிருக்கேன்னு இல்ல நீ அவ கிட்ட சொல்லனும்?"

"முட்டை எங்கே வாங்கியிருக்கோம்?" - அம்பது வாங்கிட்டே இந்த அலம்பல். ராசா... 90 எல்லாம் வாங்குனா?

"தோ! உங்க டாடி வந்துட்டாங்க சொல்லுங்க உங்க யோக்கியதையை..."

அப்ஸூ இஸ் தி கம்.

சிரிச்சுட்டே தான் கேக்கறாரு "மார்க் எதாச்சும் குடுத்தாங்களா? உங்கம்மா இப்படி கத்துறா?"

அந்த சிரிப்பு ஒன்னு போதாதா சின்னவருக்கு. அவரே சுறுசுறுப்பா ஆரம்பிக்குறாரு"மேக்ஸூம் ஈ.வி.எஸ்ஸும் குடுத்தாங்க டாடி"

"அது மேக்ஸ் இல்ல மேத்ஸ்"

"எனக்கு மேக்ஸ் தான் சொல்ல ஈஸியா இருக்கு" இளங்கன்று பயம் அறியாதுங்களே!

"சரி! எத்தனை மார்க்?" அப்ஸின் குரல் கொஞ்சம் மாறுது... சிரிப்பும் போயே போச்.அம்ஸூ அர்ச்சனையிலேயே பயலுவ கதையப் புரிஞ்சிக்கிட்டாரு

".........."

"எவ்ளோ?" ஒரு அதட்டல்.

"மேக்ஸுல 50, ஈ.வி.எஸ்ஸுல 49"

"இந்த மார்க் போதுமா?"

"........."

"எதனால கம்மியாச்சு?"

"மிஸ் போர்ஷன்ல இல்லாததெல்லாம் கேட்டுட்டாங்க"

"அதெப்படி கேப்பாங்க? நீ படிக்கல்லன்னா கூட பரவால்லை. இந்த பொய் சொல்ற வேலை எல்லாம் இங்கே வேணாம்" காது திருகப்படுகிறது. கண்ணீரும் வருகிறது.

"காலேஜ் வாத்தியாரா இருக்குறவன் கிட்டவே வந்து நீ இந்த கதை சொன்னீன்னா, படிக்காத அப்பா அம்மாவா இருந்தா என்ன பண்ணுவே?"

"நீ படி, படிக்காத போ! ஆனா ஒழுக்கமா இரு. படிச்சின்னா நீ நல்லாயிருக்கப் போற...இல்லன்னா ரோட்ல எங்கியாச்சும் சுத்திட்டு இருப்பே குப்பை வாரிக்கிட்டு"திட்டு-கம்-அட்வைஸ் அர்ச்சனை மழை பொழியுது.ரெண்டு பேரும் அதுல நனையுறோம். மழை கொஞ்சம் கம்மியாச்சுன்னா ஸுப்பர் ஸப்பா அம்மா...அந்த பொறுப்பை எடுத்து திறம்பட செய்வாங்க.

"நீ ஒன்னும் படிக்கிற மாதிரி தெரியல்ல...உங்க ஆயா கிட்ட சொல்லி ஊருல ரெண்டு மாடு வாங்கித் தர சொல்றேன்...அத மேய்ச்சுக்கிட்டு அங்கேயே சாணி வாரிக்கிட்டு கெட...அப்ப படிக்கெல்லாம் வேணாம்...எனக்கும் செலவு மிச்சம்"

"என்ன படிக்கிறியா...இல்லை மாடு மேய்க்கிறியா?"

தம்பி அழுதுக்கிட்டே"எனக்கு படிக்கறது கஷ்டமா இருக்குங்க டாடி...நான் மாடே மேய்க்கிறேன்"னு அடிக்கிறாரு ஒரு சிக்ஸர். ஷோயப் அக்தர் பாலை வெங்கடேஷ் பிரசாத் சிக்ஸ் அடிச்சா எப்டியிருக்கும் அப்டி ஒரு போடு.

அதைக் கேட்டு அதட்டிருந்த அப்ஸும் சிரிக்க ஆரம்பிக்கிறாரு. நமக்கு தான் என்ன நடக்குதுனு புரிய லேட் ஆகுது. இந்த ஒரு சைக்கிள் கேப் போதாதா ஆட்டோ ஓட்ட நம்ம ஆளுக்கு? கண்ணை தொடச்சிட்டு "இந்த பேப்பர்ல பேரண்ட்ஸ் சைன் வாங்கிட்டு வர சொன்னாங்க மிஸ்" - கடமை தானே முக்கியம் ஒரு ஸ்டூடண்டுக்கு.

"காலேஜ் வாத்தியார் புள்ள 49உம் 50உம் எடுக்குது. இத விட ஒரு அவமானம் வேணுமாடா எனக்கு. சரிங்க டாடி! அடுத்த தடவை படிச்சு நல்ல மார்க் எடுக்கறேன்னு வருதா...மாடு மேக்க போவுது பாரு புத்தி?" அடிக்கிறதுக்கு கையை நோங்குற மாதிரி நோங்க அதுக்கு பயப்படறாப்ல ஒரு ஆக்டு குடுக்கறாரு பிரதர்.

"கொண்டா பேப்பரை" - கையெழுத்து போடப் படுகிறது.

"டாடி எனக்கும் சைன் போடுங்க" - இது நான்.

"எல்லாம் என் தலையெழுத்து. இந்தா" தம்பியின் கடின உழைப்பினால் நமக்கும் கையெழுத்து கெடக்குது.

"அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்" ஒரு தம்பி செண்டிமெண்ட் பாட்டு நினைவுக்கு வருது.

இன்னும் ப்ராக்ரஸ் ரிபோர்ட்னு ஒரு பெரிய கண்டம் இருக்குதே. நமக்கு என்ன கவலை? தம்பி உடையான் பகைக்கு அஞ்சான்னு யாரோ சொல்லியிருக்காங்களே?

62 comments:

பினாத்தல் சுரேஷ் said...

அய்யா.. அய்யா.. அய்யா!

சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிடுச்சய்யா!

மருந்து கொடுங்கய்யா!

Karthik Jayanth said...

கூட்டாளி,

மேற்படி சொன்ன மேட்டர் எல்லாம், தனி ஆளா செய்யிறது எம்புட்டு கஷ்டம்னு கொஞ்சம் ரோசனை பண்ணுங்கப்பு.

Unknown said...

sooper post, innum sirichu mudikalle :))

கைப்புள்ள said...

//சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிடுச்சய்யா!

மருந்து கொடுங்கய்யா!//

ஆஹா...பெனாத்தலாரே நம்ம பதிவைப் படிச்சு ரசிச்சு சிரிச்சிருக்காரா? சந்தோஷமா இருக்குங்க.

கைப்புள்ள said...

//கூட்டாளி,

மேற்படி சொன்ன மேட்டர் எல்லாம், தனி ஆளா செய்யிறது எம்புட்டு கஷ்டம்னு கொஞ்சம் ரோசனை பண்ணுங்கப்பு.//

ஆமா கூட்டாளி! நம்மள மாதிரி ஆளுங்களுக்குத் தானே இந்த பதிவே சமர்ப்பணம். எட்புட்டு கஸ்டப்பட்டு இருப்பீங்கன்னு புரிஞ்சுக்க முடியுது!

கைப்புள்ள said...

//sooper post, innum sirichu mudikalle :)) //

வாங்க ஏஞ்சல்!
தங்கள் முதல் வருகைக்கு நன்றி. பதிவை ரசிச்சீங்கன்னு நெனக்கும் போது சந்தோசமா இருக்கு.அடிக்கடி வாங்க!

Jsri said...

:))) இந்தப் பதிவை எனக்கு சமர்ப்பணம் செஞ்சதுக்கு நன்றி கைப்புள்ள. நம்ப பிரச்சினை என்னன்னா, வீட்டுக்குள்ளயே விரோதி. தம்பி காத்திருந்து வீட்டுக்குள்ள நுழையறதுக்குள்ள பைக்குள்ள கையைவிட்டு பேப்பரை எடுப்பான். அண்ணன் செம சாப்டீஸ். என்னைத் தண்ணி தெளிச்சுட்டானோ என்னவோ.


//"மார்க் 50க்கா நூறுக்கா?"//

நமக்கு வர கேள்வியே வேற. "இதுல எது மார்க்? எது ரேங்க்?" :(

கைப்புள்ள said...

//தம்பி காத்திருந்து வீட்டுக்குள்ள நுழையறதுக்குள்ள பைக்குள்ள கையைவிட்டு பேப்பரை எடுப்பான். அண்ணன் செம சாப்டீஸ்//

வாங்க ஜெஸ்ரீ!
ஒரு "common goal"ங்குறதுனால தான் நானும் என் தம்பியும் இந்த விஷயத்துல ஒத்துமையா இருக்குற மாதிரி தெரியுது...மத்தபடி நம்மாளும் காலை வாருற பார்ட்டி தான். அண்ணன் மனசு எப்பவும் தங்கம் தாங்க (உதாரணம் : நான்..ஹி..ஹி)

//நமக்கு வர கேள்வியே வேற. "இதுல எது மார்க்? எது ரேங்க்?" :( //
:))-

ஆர்த்தி said...

ஐயோ.. இப்படி சிரிக்க வைக்கிறீங்களே.. என்ன பைத்தியமுனு முடிவே பண்ணிடுவாங்க பார்க்கிறவிங்க...

கைப்புள்ள said...

//ஐயோ.. இப்படி சிரிக்க வைக்கிறீங்களே.. என்ன பைத்தியமுனு முடிவே பண்ணிடுவாங்க பார்க்கிறவிங்க...//

வாங்க ஆர்த்தி,
மேலும் மேலும் உளறுவதற்கு, இது போன்ற பின்னூட்டங்கள் தான் ஊக்கம். நன்றி.

Anonymous said...

Hi kaippulla,

summa sollappadathu pinnitteenga,

inime un padivu-a veeta thavira vera engayum padikkirathillenu mudivu pannitten. (veetla ellarukkum theriyum naan loose-nnu, velilayum yen therivaanen?)

keep up the good work

Paavai said...

enna exam innikkunu - amma kekka, naan edo science - moral science a, general science a nu solli - scale thedrathukkulla ore ottam odinadhu nyabagam varudhu - vayiru valikkudu sirichu sirichu

கைப்புள்ள said...

//inime un padivu-a veeta thavira vera engayum padikkirathillenu mudivu pannitten. (veetla ellarukkum theriyum naan loose-nnu, velilayum yen therivaanen?)//

வாங்க குரு,
தங்கள் முதல் பின்னூட்டத்துக்கு நன்றி. என்னோட பதிவுகளை நீங்க படிச்சுட்டு வரீங்கன்னு கேக்கறதுக்கே மகிழ்ச்சியா இருக்கு.அடிக்கடி வாங்க.அப்பப்போ ஒரு பின்னூட்டமும் போட்டு வைங்க
:)-

கண்ணன் said...

அருமையான பதிவு கைப்புள்ள, நான் மட்டும் office-ல தனியா சிரிச்சிக்கிட்டு இருக்கேன். ஏதோ,scene எல்லாம் நேர்ல பாக்கிற மாதிரி இருக்கு.
//மோகன்ராஜ் யாருன்னா கேக்குறீங்க? நான் தாங்க. பின்ன எங்கம்மா என்னை கைப்புள்ளன்னா கூப்டுவாங்க?
//
ரொம்பவும் ரசிச்சேன்.

கைப்புள்ள said...

//amma kekka, naan edo science - moral science a, general science a nu solli - scale thedrathukkulla ore ottam odinadhu nyabagam varudhu - vayiru valikkudu sirichu sirichu //

வாங்க பாவை!
ரொம்ப நாளைக்கு அப்புறம் வரீங்க. நல்லா இருக்கீங்களா? கடைசியா உங்களை தடிப்பசங்க#1ல பாத்த ஞாபகம். ஸ்கூல்ல பரிச்சை வரதுக்கு முன்னாடியும் பின்னாடியும் வீட்டுல நடக்கற நாடகம் எல்லாமே சுவையா இருக்கும்...மறக்க முடியாத விஷயங்கள். உங்களுக்கு இதை படிச்சிட்டு உங்க ஸ்கூல் ஞாபகம் வந்ததுல மகிழ்ச்சி.

கைப்புள்ள said...

//ஏதோ,scene எல்லாம் நேர்ல பாக்கிற மாதிரி இருக்கு.//

வாங்க கண்ணன்,
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

////மோகன்ராஜ் யாருன்னா கேக்குறீங்க? நான் தாங்க. பின்ன எங்கம்மா என்னை கைப்புள்ளன்னா கூப்டுவாங்க?
//
ரொம்பவும் ரசிச்சேன். //

இது எழுதும் போதே எனக்கும் ரொம்ப பிடிச்சது...நீங்களும் அதை ரசிச்சதுல ரொம்ப சந்தோஷம்.

Geetha Sambasivam said...

kaipullai, intha pathivu parthu vittu Dev parthu vaithirukkum ungal fiancee ungalai vendam enru solli vittal, ungal kalyana virunthukku nan eppo varuvathu?

கைப்புள்ள said...

//kaipullai, intha pathivu parthu vittu Dev parthu vaithirukkum ungal fiancee ungalai vendam enru solli vittal, ungal kalyana virunthukku nan eppo varuvathu? //

அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காதுங்க! அந்த கறுப்பு டயானா நம்மளை வேணாம்னு சொல்லவே மாட்டா - ஏன்னா நம்ம பர்சனாலிடி அப்படி!

உங்க கிட்ட இருக்குறதுலேயே ஒரு நல்ல பட்டு புடவையை இப்பவே டிரை க்ளீன் பண்ணி ரெடியா வச்சுக்குங்க...கல்யாணத்துக்கு வர்றதுக்கு
:)-

Geetha Sambasivam said...

kaipullai , officele velai seiveerkala matteerkala?Allathu pathivu and pinnottam iduvathuthana? Anyway I have selected a good sari for your marriage and I am ready to accept your invitation.

கைப்புள்ள said...

//kaipullai , officele velai seiveerkala matteerkala?Allathu pathivu and pinnottam iduvathuthana?//

அடடே! சரியா கண்டுபிடிச்சிட்டீங்களே! இன்னிக்கு எங்க பாஸ் வரலை...அதனாலே அதை உபயோகப்படுத்தி ஓபி அடிச்சுட்டு இருக்கேன்.

துளசி கோபால் said...

கைப்புள்ளெ,

சிரிச்சுச் சிரிச்சு சிரிச்சு...... ஹா........

இதைக் கட்டாயம் கோபாலைப் படிக்கச் சொல்லணும்.

ஆமா இதோட ரெண்டாவது பகுதியை நான் 'மிஸ்'செஞ்சுட்டேனே. லிங்கு இருக்குங்களா?

கைப்புள்ள said...

//சிரிச்சுச் சிரிச்சு சிரிச்சு...... ஹா........

இதைக் கட்டாயம் கோபாலைப் படிக்கச் சொல்லணும்.

ஆமா இதோட ரெண்டாவது பகுதியை நான் 'மிஸ்'செஞ்சுட்டேனே. லிங்கு இருக்குங்களா? //

வாங்க அக்கா!
ஐயயோ! சின்ன பசங்களோட ரகசிய டெக்னிக் எல்லாம் எதிரி முகாமுக்கு சொல்லிட்டேன் போலிருக்கே?
:)-

இந்தாங்க இது தான் தடிப்பசங்களோட லிங்குகள்.

தடிப்பசங்க #2

தடிப்பசங்க #1

துளசி கோபால் said...

ரொம்ப டேங்க்ஸ் கைப்புள்ளெ.

நானே தோண்டியெடுத்துப் படிச்சிட்டேன்.

கைப்புள்ள said...

//நானே தோண்டியெடுத்துப் படிச்சிட்டேன்.//

வாங்க அக்கா,
நீங்களே தேடி எடுத்து படிச்சிட்டீங்களா. நன்றி.

வெட்டிப்பயல் said...

kaippulle nee dhubailya velai seyyure? antha kekkaran makkaran company thaana?

வெட்டிப்பயல் said...

கைப்புள்ள! எல்லாரும் சிரிச்சு வயிறு புண்ணாயிடுச்சாம், நீ ஏன் எனக்கு தந்த மாதிரி வைத்தியச் செலவுக்கு ஆளுக்கு நூறு ரூபா கொடுக்கக் கூடாது?

கைப்புள்ள said...

//எல்லாரும் சிரிச்சு வயிறு புண்ணாயிடுச்சாம், நீ ஏன் எனக்கு தந்த மாதிரி வைத்தியச் செலவுக்கு ஆளுக்கு நூறு ரூபா கொடுக்கக் கூடாது?//

ஏன்யா...ஏன்யா...ஒனக்கு இந்த குண்டக்க மண்டக்க கேள்வி கேக்கற பொழப்பு...இந்த பொழப்புக்கு நாந்துக்கிட்டுச் சாலாம்

வெட்டிப்பயல் said...

//இந்த பொழப்புக்கு நாந்துக்கிட்டுச் சாலாம்//

எப்போன்னு சொன்னால் மேள தாளத்தோட மாலை வாங்கிட்டு தயாரா வருவேன்.

நாமக்கல் சிபி said...

எங்கள் அண்ணன் கைப்பூவின் வீரம் தெரியாமல் விளையாடிப் பார்க்க நினைக்கும் பார்த்திபன் உள்ளிட்ட வீணர்களுக்கு நான் ஒன்றை நினைவூட்ட விரும்பிகிறேன்.

கேள்வி மட்டும்தான் உங்களுக்கு கேட்கத் தெரியும் என்ற உங்கள் இயலாமைதான் உங்கள் நடவடிக்கைகளில் தெரிகிறது. அண்ணன் கைப்புவிடம் போர்க்களத்தில் பொருதிப் பார்க்க நீங்கள் தயாரா?

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

கைப்புள்ள said...

//எப்போன்னு சொன்னால் மேள தாளத்தோட மாலை வாங்கிட்டு தயாரா வருவேன்.//

அந்த மாலையை நீயே ஒன் கழுத்துல மாட்டிட்டு நீயே உத்திரத்துல சுருக்கு போட்டுட்டு தொங்கிடு ராசா

வெட்டிப்பயல் said...

//அந்த மாலையை நீயே ஒன் கழுத்துல மாட்டிட்டு நீயே உத்திரத்துல சுருக்கு போட்டுட்டு தொங்கிடு ராசா//

ஆவியா வந்து கேள்வி கேட்பேன் பரவாயில்லையா?

கைப்புள்ள said...

//ஆவியா வந்து கேள்வி கேட்பேன் பரவாயில்லையா?//

ஆவிக்கெல்லாம் பயப்படற ஆள் நாங்க இல்லை மாப்பூ...

Anonymous said...

பின்னிட்டீங்க அண்ணாச்சி. இது மாதிரி சிரிச்சி ரொம்ப நாள் ஆயிடிச்சு. நல்ல பணி. நாளைக்கு உங்க மத்த 'blog' எல்லாம் படிச்சிட்டு தான் மறுவேலையே. பின்னோட்டங்கள் தொடரும் :)

கைப்புள்ள said...

வாங்க பூன்ஸ்,
உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சதுன்னு தெரிஞ்சதுல மிக்க மகிழ்ச்சி. மத்த பதிவுகளையும் படிச்சிட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க.

Ananthoo said...

romba naal kazhichi inga vanthu uttathai ellam p(u)adicha, this was the best..kalakiteenga appu kaipulla!
evalo kaalama ellarum veetu pakkathu padikara paiyangala corect panniye otreenga enga old stylela? no puthu styles??
that brothers dialogs were all sooper..to be pathichufied in ponn;-)

வெட்டிப்பயல் said...

//அண்ணன் கைப்புவிடம் போர்க்களத்தில் பொருதிப் பார்க்க நீங்கள் தயாரா? //

போர்க்களத்தில் பொருதிப்பார்க்க(!?)
நான் தயார். உங்கள் அண்ணன் தயாரா?

daydreamer said...

Super sirippunga ponga. pakkathu vettu payyan (6th padikkum podhu) progress card, matrum inna pira answer paper ellam parandhu enga veetla vandhu vizhunduchu.. konja nera thukku appram payyane vandhu vizhundaan.. ennada na what is parallex error nu kettadhukku.. parallex error is a piece of cloth nu ezhudhi irukkaru namma junior kalaam. paavam... andha sirippodaye namma veetla light a mandagapadiyoda sign vaangiten.

நாமக்கல் சிபி said...

பார்த்திபன்ங்கற ஆளுக்கே பயப்படுற நீ! ஆவிக்கு பயப்படாம போயிருவியா என்ன?

பார்த்தி அண்ணாச்சி! நீங்க இல்லைனாலும் நான் இருக்கேன்.

வெட்டிப்பயல் said...

ஆன்லைன்ல வந்துட்டான்யா வந்துட்டான்யா!

(இன்னா கைப்பு எப்டிமா கீறே?)

Sam said...

http://img84.echo.cx/
img84/8351/vadivelu13005nm.gif
கைப்புள்ள
கண்ணாடி இப்படி மாத்திக்கோங்க!!
அன்புடன்
சாம்

Iyappan Krishnan said...

அன்புள்ள கைப்பு..

தங்களின் சங்கத்தில் சேர தனியாத ஆவலுடன் வந்த எம்மிடம் நீர் பாரா முகம் காட்டினாலும், தங்களை நான் மறக்காமல் உங்கள் வளைப் பதிவு (எதுக்கு சிரிக்கிறீங்க வளைப்பதிவு சரி தானே ?? ) படிக்க வந்தால் எல்லாம் தூ தூ என்று துப்புகிறது. எதையும் படிக்க இயலாமல் போய்விட்டது.

உங்களின் கருந்தங்க முகத்தில் வழியும் சிரிப்பென்ற கொடுமைய பார்த்து அழ வழியில்லாமல் அவதியாகி விட்டது. தயவு செய்து கவனிக்கவும்.


அன்புடன்
உங்கள் சங்கத்தில் ஏற்கப்படாத ஒரு வருத்தப் படாத வாலிபன்.

பி.கு. போடா போடா புண்ணாக்கு என்று முண்டா பனியன் போட்டுக் கொண்டு பாடிய காலங்களையும் மறந்து விடவேண்டாம் என்று கேட்டுக் கொல்கிறேன்

கைப்புள்ள said...

//தங்களின் சங்கத்தில் சேர தனியாத ஆவலுடன் வந்த எம்மிடம் நீர் பாரா முகம் காட்டினாலும்//
வேணாங் கண்ணு! இது சின்னப் புள்ள வெளாட்டு கெடயாது. பல பேர் ரத்தம் பாக்குற வெளாட்டுனா தயங்காம சேத்துக்குவேன்...ஒன்னோட காதாலயும் மூக்காலயும் ரத்தம் வந்தாலும் "ஹா...இதெல்லாம் ஒரு அடியா...என்னய்யா கிச்சுகிச்சு பண்றே" அப்படின்னு ஸ்டைலா சொல்லணும். இதெல்லாம் ஓவர்நைட் பிக்கப் ஆவாது...ரொம்ப நாள் எடுக்கும்...அது வரைக்கும் நம்ம பயலுக கிட்ட சொல்லி பயிற்சி தர சொல்றேன்...என்ன சொல்றே? சரியாய்யா?

//படிக்க வந்தால் எல்லாம் தூ தூ என்று துப்புகிறது.//

இவ்ளோ நேரம் ப்ளாக்கை நடத்துற என் மேலேயே ஏசியன் பெயிண்ட்ஸ் தான்...இப்ப தான் கொஞ்சம் சரியாயிருக்கு

//போடா போடா புண்ணாக்கு என்று முண்டா பனியன் போட்டுக் கொண்டு பாடிய காலங்களையும் மறந்து விடவேண்டாம் என்று கேட்டுக் கொல்கிறேன் //
நீ சொல்றது நேத்தைய கைப்புள்ள, இப்ப நீ பாக்கறது இன்னிய கைப்புள்ள

Iyappan Krishnan said...

பழங்கதைகளை மறந்து விட்டு பேசுகிறாயோ .. தோழா... சிங்கார வேலனோடு இருந்த போது ஒரு சண்டையில் கை சுற்றிக் கொண்டு பிரிக்க முடியாமல் கிடந்த காலங்கள் மறந்து போனதுவா.. அய்யகோ..

நீ எனக்கு பெரியாத்தா முறை வேண்டும் .. உன் கையைப் பிடித்து இழுத்தேனா என்று கேட்டுக் கொண்டே "சொன்னதை செய்வேன் செய்வதை சொல்வேன்" என்ற வார்த்தைக்கு இலக்கணமாக இருந்த அந்தக் கைப்பிள்ளையா இப்படி எல்லாம் பேசுவது..

ராசப்பரம்பரை என்று ஒருவன் சட்டையை எடுத்து தானமாக அளித்த போதும், பின் புறம் முழுதும் தீய்ந்த்து அடிப்பட்ட பெருச்சாளி போல் கிரீச்சிட்டு அம்மா.. அம்ம அம்ம என்று கதறிய போதும் நெஞ்சம் பதறாமல் இருந்த அந்தத் தானைத்தலைவனா இப்படி பேசுவது

நெஞ்சு பொறுக்குதில்லையே .. இந்த நிலைக் கெட்ட மனிதரை நினைந்து விட்டால் என்ற வரிக்கு உதா"ரணமாக" ஆகாமல் முதலில் சங்கத்தில் என்னை சேர்த்துக் கொள்ளுமாறு பணிந்த தாழ்மையுடன் எச்சரிக்காமல் கேட்டுக் கொள்கிறேன்..

( என்ன பார்த்தீண்ணே உங்க குருப்புக்கு வரணுமா.. அதெல்லாம் முடியாதுண்ணே.. கட்டதுரை நீங்களும் இப்ப்டி வந்துகூப்ட கூடாது.. தல கோச்சுக்கும் )

சங்கத்தில் சேர்த்துக் கொள்ளாமல் போனாலும்
வருத்தப்படாத வாலிபன்

ஜீவா

கைப்புள்ள said...

//உதா"ரணமாக" ஆகாமல் முதலில் சங்கத்தில் என்னை சேர்த்துக் கொள்ளுமாறு பணிந்த தாழ்மையுடன் எச்சரிக்காமல் கேட்டுக் கொள்கிறேன்..//

சரி! நம்ம பயலுகளைக் கலந்துக்கிட்டு ஒரு முடிவு சொல்றேன்

வெட்டிப்பயல் said...

ஜீவா,
இதுக்குப் போய் கைப்புள்ளயக் கேட்டுகிட்டு, அப்படியே நல்லா பிளான் பண்ணி அண்ணனை இந்தப் பக்கமா அழைச்சிகிட்டு வா, நீ தானாவே மெம்பர் ஆய்டலாம்.

இதுக்கு ஒரு சங்கம், அதுல சேற ஒரு ரெகமெண்டேஷன் வேற!


ம்.ம். தடிப் பசங்கன்னு தலைப்பே எங்களைப் பத்திதான் இருக்கு போல(நான் & கட்டதுரை).
வச்சிருக்கம்ல ஒரு ஆப்பு!

சிங். செயகுமார். said...

அண்ணாத்தே கைப்புள்ள! அது எப்பிடி அல்லாரு வூட்டுலேயும் இதே கதை நடந்திருக்கு!

கைப்புள்ள said...

//அண்ணாத்தே கைப்புள்ள! அது எப்பிடி அல்லாரு வூட்டுலேயும் இதே கதை நடந்திருக்கு!//

பரீட்சைன்னு ஒன்னு இருக்கற வரைக்கும் மார்க்குன்னு ஒன்னு குடுக்கற வரைக்கும் இந்த கதை எல்லா வூட்டுலயும் நடக்கும் தம்பி!

கைப்புள்ள said...

//ம்.ம். தடிப் பசங்கன்னு தலைப்பே எங்களைப் பத்திதான் இருக்கு போல(நான் & கட்டதுரை).
வச்சிருக்கம்ல ஒரு ஆப்பு!//

உங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு

கைப்புள்ள said...

//evalo kaalama ellarum veetu pakkathu padikara paiyangala corect panniye otreenga enga old stylela? no puthu styles??
that brothers dialogs were all sooper..to be pathichufied in ponn;-)//

வாங்க அனந்து சார்,
அப்புறம் பதில் சொல்லலாம்னு நெனச்சு அப்பிடியே மறந்து போயிட்டேன். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அதே ஓல்டு ஸ்டைல் வாத்தியார், அதே மார்க்...அதே மார்க்கு...அதனால அதே ஸ்டைல்
:)-

கைப்புள்ள said...

//ennada na what is parallex error nu kettadhukku.. parallex error is a piece of cloth nu ezhudhi irukkaru namma junior kalaam. paavam... andha sirippodaye namma veetla light a mandagapadiyoda sign vaangiten. //

வாங்க daydreamer,
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு...இது தான் நியாபகத்துக்கு வருது...ஆனா இத அப்பா அம்மா புரிஞ்சிக்க மாட்டாங்களே!
:))

கைப்புள்ள said...

//http://img84.echo.cx/
img84/8351/vadivelu13005nm.gif
கைப்புள்ள
கண்ணாடி இப்படி மாத்திக்கோங்க!!
அன்புடன்
சாம் //

வாங்க சாம்,
இந்த கண்ணாடியை நான் முன்னாடியே பாத்தேன்...ஆனா வேற ஒருத்தர் இத ஏற்கனவே தன்னோட profileல உபயோகிச்சிக்கிட்டதால நான் அதை என் profileல போடலை

Anonymous said...

Mr.Kaipullai,

This is one of the best message i red so for in the blog....onely one word i could say......Awesome....

Ghilli

கைப்புள்ள said...

//This is one of the best message i red so for in the blog....onely one word i could say......Awesome....//

மிக்க நன்றி கில்லி...இந்த மாதிரி ஊக்க மருந்து பின்னூட்டத்தை எல்லாம் பாத்தா ஒடம்ப எம்புட்டு வேணாலும் ரணகளம் ஆக்கிக்கலாம்னு தோணுது...I should admit that Iam overwhelmed. Thanks a ton.

Anonymous said...

//தம்பி அழுதுக்கிட்டே"எனக்கு படிக்கறது கஷ்டமா இருக்குங்க டாடி...நான் மாடே மேய்க்கிறேன்"னு அடிக்கிறாரு ஒரு சிக்ஸர். ஷோயப் அக்தர் பாலை வெங்கடேஷ் பிரசாத் சிக்ஸ் அடிச்சா எப்டியிருக்கும் அப்டி ஒரு போடு.//

தம்பி ஆசைப்படறே ன்னு வாங்கி கொடுத்து இருக்கனும் அப்ப தெரியும்.. உங்க தம்பி பரவாயில்லை, இப்படி அறிவு கம்மியா.. படிப்பு வராத புள்ளைய பெத்தது நீ - சோ என்னை குத்தம் சொல்லி பிரயோசனம் இல்லைன்னு சொல்றான் என் பையன்..!! அதுக்கு மேல போய் அம்மா அறிவு தானே புள்ளைக்கு இருக்கும்..ன்னு கூட சொல்லறான்.. எங்க போய் சொல்ல..

Anonymous said...

கைப்பிள்ள!
நல்லாச் சிரிச்சேனப்பா!!நகைச்சுவை ரொம்பகைகொடுக்குது.
யோகன் பாரிஸ்

சேதுக்கரசி said...

திவ்யாவும் (என்னை மாதிரி) உங்க பழைய பதிவெல்லாம் கொண்டாந்து போடுவாங்களா? :-) சூப்பர் சிரிப்புங்கோவ். நான் 11வது படிக்கும்போதுன்னு நினைக்கிறேன்.. ரிப்போர்ட்டில் அப்பா கையெழுத்துப் போடறது சந்தேகம்னு தெரிஞ்சு அம்மா கிட்டா கையெழுத்து வாங்கி, அப்பாவுக்குத் தெரியாத இடமா இருக்கும்னு நினைச்சு மேசையில் கீழ் டிராவில் வச்சேன். அடுத்த நாள் காலைல பார்த்தா ரிப்போர்ட்டைக் காணோம். எங்கப்பா எடுத்து, அம்மா கையெழுத்தை அடிச்சிட்டாங்க (scored it out) அப்புறம் கெஞ்சிக் கிஞ்சி மீண்டும் கையெழுத்து வாங்கினது ஞாபகம் வருது.

//பாய்ஸ் ஸ்கூல்ங்கிறதால அஞ்சாவதோட பொண்ணுங்களுக்கு டாட்டா.//

அடப்பாவமே :-)))

கைப்புள்ள said...

//தம்பி ஆசைப்படறே ன்னு வாங்கி கொடுத்து இருக்கனும் அப்ப தெரியும்.. //
வாங்கிக் குடுத்துருந்தா என்ன ஆகியிருக்கும்...தம்பி மாடு மேச்சிட்டு இருந்துருப்பான்...அவனுக்குத் துணையா நானும் ஆடோ கழுதையோ மேச்சிட்டு இருந்துருப்பேன்.
:)

//உங்க தம்பி பரவாயில்லை, இப்படி அறிவு கம்மியா.. படிப்பு வராத புள்ளைய பெத்தது நீ - சோ என்னை குத்தம் சொல்லி பிரயோசனம் இல்லைன்னு சொல்றான் என் பையன்..!! அதுக்கு மேல போய் அம்மா அறிவு தானே புள்ளைக்கு இருக்கும்..ன்னு கூட சொல்லறான்.. எங்க போய் சொல்ல.. //
ஹி...ஹி...எல்லா புள்ளாண்டான்களும் ஒரே மாதிரி தான் போலிருக்கு?
:D

கைப்புள்ள said...

//கைப்பிள்ள!
நல்லாச் சிரிச்சேனப்பா!!நகைச்சுவை ரொம்பகைகொடுக்குது.
யோகன் பாரிஸ்//

வாங்க யோகன் ஐயா,
வந்து படிச்சிட்டு சிரிச்சிட்டு வாழ்த்துனதுக்கு ரொம்ப நன்றிங்க. உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

கைப்புள்ள said...

//திவ்யாவும் (என்னை மாதிரி) உங்க பழைய பதிவெல்லாம் கொண்டாந்து போடுவாங்களா? :-) சூப்பர் சிரிப்புங்கோவ். நான் 11வது படிக்கும்போதுன்னு நினைக்கிறேன்.. ரிப்போர்ட்டில் அப்பா கையெழுத்துப் போடறது சந்தேகம்னு தெரிஞ்சு அம்மா கிட்டா கையெழுத்து வாங்கி, அப்பாவுக்குத் தெரியாத இடமா இருக்கும்னு நினைச்சு மேசையில் கீழ் டிராவில் வச்சேன். அடுத்த நாள் காலைல பார்த்தா ரிப்போர்ட்டைக் காணோம். எங்கப்பா எடுத்து, அம்மா கையெழுத்தை அடிச்சிட்டாங்க (scored it out) அப்புறம் கெஞ்சிக் கிஞ்சி மீண்டும் கையெழுத்து வாங்கினது ஞாபகம் வருது.//

இந்த தடவை இந்தப் பதிவை மேலே கொண்டு வந்தது கவிதாங்க. திவ்யா இல்லை. நீங்களும் நெறைய சேட்டை எல்லாம் செஞ்சிருப்பீங்க போலிருக்கு. ஆனா என்ன தான் பசங்களா நாம டகால்டி வேலை எல்லாம் செஞ்சாலும் பெத்தவங்க எப்படியாச்சும் கண்டுபிடிச்சிடுவாங்க.
:)

//பாய்ஸ் ஸ்கூல்ங்கிறதால அஞ்சாவதோட பொண்ணுங்களுக்கு டாட்டா.//

அடப்பாவமே :-))) //

ஹி...ஹி...

cheena (சீனா) said...

அய்யொ அய்யொ - அண்ணனும் தம்பியும் தூள் கெளப்பி இருக்கீங்க - சூபர் மூணாங்கிளாஸ்லே பய வெளுத்து வாங்கறான் - மாடு மேக்கப் போறானாம் - சிப்பு சிப்ப்பா வந்துது

cheena (சீனா) said...

வலைச்சரம் வழியா வந்தேன்

சந்தனமுல்லை said...

ROTFL