Saturday, March 11, 2006

வச்சான்யா ஆப்பு

ஆப்பு வாங்கறது என்ன ஒனக்கு புச்சான்னு அங்கிருந்து யாருபா நாலு பேரு சவுண்ட் உடறது? புச்சில்லை தான்...ஆனாலும் எல்லாம் ஆப்பு, சித்தாப்பு இஷ்டைல்ல ஒரு பில்டாப்பு தான்...

ஐஐடி டெல்லியில படிக்க சொள்ள ரெண்டாயிரத்துலபா, ஒரு தபா நானும் நம்ம தோஸ்து ஒருத்தனும் ஹரித்வார்,ரிஷிகேசி போய்க்கினோம்பா. ஹரித்வார்ல கங்கையில குளிச்சுட்டு, மலை மேல மான்சா தேவின்னு ஒரு சாமி பாத்துட்டு திரும்ப டெல்லி வர்ற சொள்ள, முசஃபர் நகர்ங்கிற எடத்துல பஸ்ஸை நிறுத்துக்கினான்பா டீ நாஸ்தா பண்ணிக்கன்னு. நமுக்கு தான் இந்த எயற்கை,ஜீன்ரி,சில்ஹூவெட் இதுன்னா ரெம்ப புடிக்குமே...பாத்தா பக்கத்தாப்ல கங்கா கெனால்னு காவா ஓடுதுபா நம்ம கூவம் கணக்கா. ஆனா நாத்தம் கண்டி இல்லை...சரி பரவால்லை அட்ஜிஸ் பண்ணிக்கலாம்னு நம்ம தோஸ்தை கூப்ட்டு "மாமாவை சோக்கா ஒரு சில்ஹூவெட் படம் எடுபா"னு சொல்லிக்கினேன். அவன் இன்னா சொன்னான் "எங்க தலிவரு மாதிரி படையப்பா ஸ்டைல்ல நில்லு" அப்டின்னுக்குனான். "இப்டியே எடுக்கறுதுனா எடு...நமுக்கு இந்த ஸ்டைல் கியில் இதெல்லாம் புடிக்காது"ன்னு கண்டிசனா சொல்லிக்கினேன்.

ஆனா நமக்கு தான் சாஃப்ட் ஆட்டீனாச்சே? நம்மாளு (கூட வந்த தோஸ்த்), ஐஐடியில்லியே டிசைன் படிக்கிறவன். அவுங்களுக்கு ஃபர்ஷ்ட் இயரே நிகான் எப்.எம்-10ன்னு SLR கேமரால்லாம் வாங்க சொல்லி போட்டா படமெல்லாம் புடிக்கசொல்லுவாங்க...அவ்னே படையப்பா மாதிரி நிக்க சொல்றானே...நின்னு தான் பாப்பமேனு நென்ச்சுக்குனேன்பா...சரி கோல்ட் கலரு படத்துல மாமா சூப்பரா ஒரு ஹீரோ கணக்கா வருவார்னு ஒரு நல்ல திங்கிங்ல போசு குட்துக்கனேன்பா. ஆனா கடசியா பாருபா...நம்ம கதையை கீய...அவுங்க தலிவரப் பத்தி பேசிக்கினேன்னு நம்மள ராங்கான ஆங்கிள்ல நிக்க வச்சு மேலேருந்து வர வோணுங்கிற சன்லைட்டை கீயருந்து வர வைச்சு...வச்சான்யா ஒரு பெரிய ஆப்பு...

பாக்குற பேமாணியெல்லாம் நம்ம இந்த சில்ஹுவெட் படத்தைப் பாத்து பாத்து சிரிக்குதுபா...நீ யாரும் பாத்து ஸ்மைல் கண்டி உட்டேனு தெரிஞ்சிது....அப்புறம் இருக்குதுபா ஒனக்கு. இந்த போட்டாவை பாத்து தான்பா நென்ச்சிக்கினேன் இந்த சாஃப்ட் ஆட்டீன் தான் நம்ம வீரம், வீக்னெஸ் எல்லாம் அப்ப்டின்னு...

இருந்தாலும் எதுக்கு இங்கே காட்டிக்கினேங்கிறியா...சுட்ட பழமும், திருடியும், எஸெமெஸ்ஸும் போட்டே காலத்தை ஓட்டிக்கிறானு பேட் ந்நேம் வரக்கூடாதுன்னு தாம்பா...நம்ம எஸ்பீரியன்ச ஒரு....இன்னாதது...ஆங்...ஒரு ஒளி ஓவியமா ஆரமிச்சுக்கலாம்னு தோண்ச்சுபா...இப்பவாச்சும் நம்ம குட் க்வால்டீஸை தெரிஞ்சுக்கபா...வர்ட்டா?

127 comments:

G.Ragavan said...

கைப்புள்ள...சிரிச்சுச் சிரிச்சு எனக்கு வயிறு புண்ணாயிப் போச்சு................நல்லவேள பக்கத்துல யாருமில்லை...இல்லைன்னா என்னைய பைத்தியமுன்னு தெரிஞ்சிக்கிருவாங்க...ஹா ஹா ஹா

மரியாதையா வயித்துவலி மருந்துக்குத் துட்டு அனுப்பி வைய்ங்க...

Iyappan Krishnan said...

சூப்பர்.. எனக்கும் புகைப்படம்னா ரொம்ப பிடிக்கும்... வரேன் நானும் சீக்கிறம் புகைப்படத்தோட

அன்புடன்
ஜீவா

கைப்புள்ள said...

//என்னைய பைத்தியமுன்னு தெரிஞ்சிக்கிருவாங்க...ஹா ஹா ஹா

மரியாதையா வயித்துவலி மருந்துக்குத் துட்டு அனுப்பி வைய்ங்க... //

பைத்தியத்துக்கு எதுக்குங்க வயித்துவலி மருந்து...ஹி...ஹி...
:)-

நான் ஒங்களுக்கு 3டி மயில் அனுப்புனேன்னே வந்துச்சா?

கைப்புள்ள said...

//சூப்பர்.. எனக்கும் புகைப்படம்னா ரொம்ப பிடிக்கும்... வரேன் நானும் சீக்கிறம் புகைப்படத்தோட//

வாங்க ஜீவ்ஸ்! ஜோதி ஏற்கனவே பல எடத்துல எரியுது... வந்து கலந்துக்கங்க
:)-

Anand V said...

அசத்தல் படமுங்கோ !
இந்த டெக்னிக்கை எனக்கும் கொஞ்சம் சொல்லி கொடுக்க சொல்லுங்கோ உம்ம பிரண்டை !
:-)

நிலா said...

//கைப்புள்ள...சிரிச்சுச் சிரிச்சு எனக்கு வயிறு புண்ணாயிப் போச்சு................நல்லவேள பக்கத்துல யாருமில்லை...இல்லைன்னா என்னைய பைத்தியமுன்னு தெரிஞ்சிக்கிருவாங்க...//

இதேதான் இங்கேயும்...

கைப்பு,

இந்தப் படத்தை சேவ் பண்ணி வச்சிருக்கேன் - சோகமா இருக்கும்போது பாத்துக்கறதுக்காக.
ஆமா, பொண்ணு பாக்க இந்தப் படத்தைக் குடுக்கலாமுல்ல?

நிலா said...

Kaippu,

One of the best practical comedies I've seen in life...

Keep it up :-)))

SnackDragon said...

:-))

தருமி said...

கைப்புள்ள,
கோச்சுக்காத'பா."நீ யாரும் பாத்து ஸ்மைல் கண்டி உட்டேனு தெரிஞ்சிது...." இத்த படிக்க முன்னேயே சிர்ச்சி தொலச்சிட்டேன்'பா.உட்ரு'பா கண்ணு.
வர்ட்டா...!

துளசி கோபால் said...

கைப்புள்ளெ,

'ஆப்பு' இதுலெமட்டுமா? நம்மஆளுங்க பதிவைப் படிச்சுட்டு நல்லா இருக்குன்னு சொல்றாங்களேக்
கண்டி ஓட்டுப் பெட்டியை நைஸா கள(ழ)ட்டி வுட்டுருதுங்கப்பா.
எப்பபாரு நம்ம ஒரு ஓட்டு மட்டுந்தான் அங்கெகிடக்கு.
உங்க பொட்டிலேயும் இப்ப நாந்தேன் ஒரு ஓட்டைக் கடாசிட்டு வந்தேன். ஏம்ப்ப்பா 'என் ஓட்டுதேன்
எனக்கு மட்டுந்தேன்'கூட மறந்துபோச்சாப்பா?

போட்டும். இந்த கெனால்/காவான்னதுந்தேன் நினைப்புக்கு வருது. சிங்காரச் சென்னையிலே இருக்கற
கூவம் பக்கத்துலெதான் நமக்கு வேண்டப்பட்டங்க வூடு கீது. ஆட்டோக்காரர்கிட்டே 'கெனால்' பக்கம்னு சொல்லியும்
எங்கெயோ இட்டிக்கினு பொயிட்டு கடேசியா கொணாந்து சேத்தார். அப்பாலெக்கி
'ஏம்மா, அந்த காவாயண்டைன்னு சொல்லியிருந்தா ஈஜியா வந்துருப்பொம்லெ'ன்னு சொல்லிட்டு போனார்பா.

பேசிக்கினே இத்த வுட்டுட்டேன்பாரு,போட்டோ சோக்காக்கீதப்பா.

கைப்புள்ள said...

//இந்த டெக்னிக்கை எனக்கும் கொஞ்சம் சொல்லி கொடுக்க சொல்லுங்கோ உம்ம பிரண்டை !//

ஏனுங்ணா! ஹாலிவுட்ல Simple Life படத்துல இப்டி யாரையாச்சும் எடுக்கப் போறீங்களா? எப்டி எடுக்கணும்னு நானே சொல்றேன்...ராயல்டி வெட்டிடனும் சரியா?

இந்த படம் எடுக்க தேவையான மூணே மூணு பொருள் - ஒரு கேமரா, போஸ் கொடுக்க ஒரு பேக்கு, ஆப்பு அடிக்க ஒரு தாராள மனசு...அம்புட்டு தேன்...

என்ன சோகம்னா போட்டோ எடுத்தவன் அவனோட SLRல எடுக்கலை...என் fixed focus கேமராவை வச்சு எனக்கே ஆப்பு
:)-

Pot"tea" kadai said...

:-))

கைப்புள்ள said...

//ஆமா, பொண்ணு பாக்க இந்தப் படத்தைக் குடுக்கலாமுல்ல?//

ஓ! தாராளமாக் குடுக்கலாமே! பொண்ணு "என் ராசா எம்புட்டு ஸ்மார்ட்"னு சந்தோசமா நெட்டி முறிக்கும்
:)-

கைப்புள்ள said...

கார்த்திக்ராமாஸ்,
முதல் முறையா வந்திருக்கீங்க, தங்கள் வருகைக்கு நன்றி.

கைப்புள்ள said...

கார்த்திக்ராமாஸ்,பொட்டிக்கடை, நிலா மிஸ் மற்றும் :)- போட்ட எல்லாருக்கும்,

நான் தான் படத்தைப் பாத்துட்டு யாரும் ஸ்மைல் பண்ணக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல...அப்புறம் என்ன கெக்க பெக்கேனு ஒரே :)-....சின்னப்பிள்ளத் தனமால்ல இருக்கு

நாமக்கல் சிபி said...

:-) :-)), :-))), :-)))), :-)))))

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

கைப்புள்ள said...

//ஏம்ப்ப்பா 'என் ஓட்டுதேன்
எனக்கு மட்டுந்தேன்'கூட மறந்துபோச்சாப்பா?//

அட! ஆமா இல்ல...இனிமே ஜமாய்ச்சுடுவோம்...வர்ற நாள்ல இனிமே எல்லாம் 5ஸ்டார் தான்
:)-

//'ஏம்மா, அந்த காவாயண்டைன்னு சொல்லியிருந்தா ஈஜியா வந்துருப்பொம்லெ'ன்னு சொல்லிட்டு போனார்பா.//
கரீட்டாத் தான் சொல்லிருக்காரு
:)-

//பேசிக்கினே இத்த வுட்டுட்டேன்பாரு,போட்டோ சோக்காக்கீதப்பா.//
சோக்காதான் இருக்கும்...நிக்கிறது கைப்புள்ளயாச்சே?

ramachandranusha(உஷா) said...

//ஆமா, பொண்ணு பாக்க இந்தப் படத்தைக் குடுக்கலாமுல்ல?//

நிலா, வேணாம், சின்ன பையன் வாழ்க்கையோட விளையாடாதீங்க. :-))

//பொண்ணு "என் ராசா எம்புட்டு ஸ்மார்ட்"னு சந்தோசமா நெட்டி முறிக்கும்

கை பூ,பொண்ணு இந்த படத்த பார்த்த அப்புறம் அந்த பொன்னு கதி :-))))

கைப்புள்ள said...

//கை பூ,பொண்ணு இந்த படத்த பார்த்த அப்புறம் அந்த பொன்னு கதி :-))))//

பொண்ணு கதியா?...கனவு பாட்டு தான் அதுக்கப்புறம்...பூவரசம்பூ பூத்தாச்சுன்னு...
:)-

நிலா said...

கைப்பு,

//கனவு பாட்டு தான் அதுக்கப்புறம்...பூவரசம்பூ பூத்தாச்சுன்னு
//

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை?

ஆனா ஒண்ணு சாமி, ஃபோட்டாவ பார்த்துட்டு அது சிரிக்கிற சிரிப்புல அதைப் பைத்தியம் நினைச்சி வேற யாரும் கட்டிக்காமப் போயிருவான்...

ஏஜண்ட் NJ said...

ஒளி ஓவியம்!!!

கைப்பு...

குண்டு பல்பு, சூப்பர் கிரியேட்டிவிட்டி!!

முத்துகுமரன் said...

//ஓ! தாராளமாக் குடுக்கலாமே! பொண்ணு "என் ராசா எம்புட்டு ஸ்மார்ட்"னு சந்தோசமா நெட்டி முறிக்கும்
:)- //

கைப்பூ உண்மையிலே உம் ஊட்டுகாரம்மா கொடுத்து வச்சவகதான்:-))))))))))

கைப்புள்ள said...

//அதைப் பைத்தியம் நினைச்சி வேற யாரும் கட்டிக்காமப் போயிருவான்...//

இந்த சிச்சுவேஷனுக்கும் நம்ம கிட்ட ஒரு பாட்டு இருக்குதுங்களே....
அதிகாலை நேரமே. நம்ம தலிவரு மொட்டை மியூசிக்ல ஒரு அருமையான பாட்டு. என்சாயுங்க...இத விட பொருத்தமான பாட்டு என்னால சொல்ல முடியாது.

எப்படியோ நான் பைத்தியம் ஆனதோட வரப் போறவளையும் பைத்தியம் ஆக்கியாச்சு. நாளைக்குப் பேச்சுன்னு ஒன்னு வந்தா பாரு நீயுந் தான் லூசுன்னு இந்த பதிவைக் காட்ட வசதியா இருக்கும்.
:)-

கைப்புள்ள said...

//கைப்பூ உண்மையிலே உம் ஊட்டுகாரம்மா கொடுத்து வச்சவகதான்:-))))))))))//

வாங்க முத்துகுமரன்,
இது உங்களுக்குத் தெரியுது...எனக்கும் புரியுது...பொண்ணப் பெத்தவங்க புரிஞ்சிக்கிட்டதா தெரியலீங்களே?
:)-

ஆர்த்தி said...

எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது... கைப்புள்ள, உங்க எச்சரிக்கையை மீறி சிரிக்கிறேன்..

கைப்புள்ள said...

//எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது... கைப்புள்ள//

நம்ம கதை அப்டி ஆகிப்போச்சு...என்ன பண்றது? சரி...சிரிச்சுக்கங்க...ஆனா சத்தம் போடாம மனசுக்குள்ளயே சிரிச்சிக்கிடனும்.சரியா? ஏற்கனவே உங்கம்மா நீங்க 3டி பாத்து, பொண்ணுக்கு என்னமோ ஆயிடுச்சுன்னு சொல்லிருக்காங்க...அதனால சாக்கிரதைம்மா!

நாமக்கல் சிபி said...

தன்மானச்சிங்கம், வெற்றி வேங்கை, (எதிரியின்) தினவெடுத்த தோள்களுக்கு தீனி போடப் போர்க்களங்களைத் தேடித்திரியும் மாவீரன் எங்கள் பாசமிகு அண்ணன் கைப்புவின் எச்சரிக்கையை மீறி கெக்கேபிக்கேவினச் சிரிக்கும் ஆர்த்தி அவர்களின் சிரிப்பில் நானும் பங்கு கொள்கிறேன்.

:-), :-)), :-))), :-)))), :-)))))


(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

நாமக்கல் சிபி said...

கைப்பூ, நம்ம தகவல் தங்கவேலு காலமாகிவிட்டார் தெரியுமா?

http://pithatralgal.blogspot.com/2006/03/67.html

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

ஏஜண்ட் NJ said...

இந்த போட்டாவ பாத்தோன்ன,
பாரதியார் பாட்டு ஒன்னு ஞாபகத்துக்கு வருது...
சொல்லவா!!!
;-)

கைப்புள்ள said...

//பாரதியார் பாட்டு ஒன்னு ஞாபகத்துக்கு வருது...
சொல்லவா!!!
;-)//

சொல்லுங்க தல!

கைப்புள்ள said...

//கைப்புவின் எச்சரிக்கையை மீறி கெக்கேபிக்கேவினச் சிரிக்கும் ஆர்த்தி அவர்களின் சிரிப்பில் நானும் பங்கு கொள்கிறேன்.

:-), :-)), :-))), :-)))), :-)))))//

இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லால்லை. அம்புட்டு தான் சொல்வேன்.

கைப்புள்ள said...

//கைப்பூ, நம்ம தகவல் தங்கவேலு காலமாகிவிட்டார் தெரியுமா?//

வருத்தத்துக்குரிய செய்தி. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

கைப்புள்ள said...

//குண்டு பல்பு, சூப்பர் கிரியேட்டிவிட்டி!!//

படம் எடுத்த புண்ணியவானைத் தான் பாராட்டனும்.

இலவசக்கொத்தனார் said...

யப்பா, அக்காமாருங்க வர எடமா இருக்கு, என் ஆப்பு தனி மடலில்...

இதை சொல்லி ஒரு காமெண்ட் போட்டாச்சு. உள்ளேன் ஐயா.

கைப்புள்ள said...

//யப்பா, அக்காமாருங்க வர எடமா இருக்கு, என் ஆப்பு தனி மடலில்...//

எங்கடா வழக்கமா அலம்பல் உடற ஆள் வரலியேன்னு நெனச்சிட்டு இருந்தேன்

இலவசக்கொத்தனார் said...

இவ்வளவு சுறுசுறுப்பா இருந்துதே கடைசியா வரலாம்ன்னு வெயிட் பண்ணினேன். நடுவில ஞான்ஸ் வந்து கொஞ்சம் டெம்ப்ட் பண்ணி விட்டுட்டார். அதான்.....

Geetha Sambasivam said...

kaipullai, inruthan photo parthen.ponnu onnum solla mattal. konjam loose pola irukku enruthan ninaithu kolval. athanal enna paravai illai enru sollavum.ungall kaliyana virunthukkaga avaludan kathirukkiren.

கைப்புள்ள said...

//நடுவில ஞான்ஸ் வந்து கொஞ்சம் டெம்ப்ட் பண்ணி விட்டுட்டார். அதான்..... //

அதான்...சரி மேல சொல்லுங்க

கைப்புள்ள said...

//kaipullai, inruthan photo parthen.ponnu onnum solla mattal. konjam loose pola irukku enruthan ninaithu kolval. athanal enna paravai illai enru sollavum.//

வாங்க மேடம்! அக்காங்க எல்லாம் சேந்து தம்பியோட பொண்ணு பாக்குற போட்டோ இது தான் முடிவே பண்ணிட்டீங்க. தங்கள் சித்தம் என் பாக்கியம். லூஸ் போல என்ன ஏற்கனவே லூஸ் தான்...பொண்ணு புதுசா கண்டுபுடிக்க ஒன்னுமில்லை.

//ungall kaliyana virunthukkaga avaludan kathirukkiren. //
ஆஹா! தாங்கள் எல்லாம் வருவதை விட எனக்கு என்ன பெரிய மகிழ்ச்சி இருக்கப் போவுது. அப்படி எதாச்சும் ஒன்னுன்னா கட்டாயம் கூப்பிடுவேன். அவசியம் வரணும்.

இலவசக்கொத்தனார் said...

ஆமாய்யா, இது ஒரு போட்டோ, இதைக்கொண்டு போய் காமிச்சு உனக்கு பொண்ணு கிடைக்கப் போகுது. இவங்களுக்கு கல்யாண சாப்பாடு வேற போடப் போற. போய்யா. போய்யா. போய்யா. உருப்படியா எதனா வேலை இருந்தா பாரு.

கைப்புள்ள said...

//ஆமாய்யா, இது ஒரு போட்டோ, இதைக்கொண்டு போய் காமிச்சு உனக்கு பொண்ணு கிடைக்கப் போகுது. இவங்களுக்கு கல்யாண சாப்பாடு வேற போடப் போற. போய்யா. போய்யா. போய்யா. உருப்படியா எதனா வேலை இருந்தா பாரு.//

ஐயன்மீர்! என்ன இது சாபம்? கன்னியரின்...இல்லை...இல்லை...
அவங்க
நைனாக்களின் கடைகண்
அருளுக்காக ஏங்கும் ஏழைச் சிறுவனை இப்படியா எள்ளி நகையாடுவது?

தாணு said...

நானெல்லாம் சும்மாவே சிரிக்கிற ஆளு, இப்படிப் பின்பக்கத்தின் பளீரொளி பார்த்தால் வயிறு தாங்குமா, இது நியாயமா? (பின்பக்கத்தின் பளீரொளின்னா Flash-backன்னு அர்த்தம்!!!!!)

பூங்குழலி said...

:))

இலவசக்கொத்தனார் said...

//கன்னியரின்...இல்லை...இல்லை...
அவங்க
நைனாக்களின் கடைகண் //

கரெக்டா ஆரம்பிச்சயேன்னு பார்த்தா, அன்னியன் அம்பி மாதிரி கவுத்துட்டியே. விட்டா அவனை மாதிரி அப்ளிகேஷன் எழுதி யாராவது அப்பா கிட்டே குடுப்ப போல தெரியுதே. உனக்கெல்லாம் ......ஹூம்.

கைப்புள்ள said...

//நானெல்லாம் சும்மாவே சிரிக்கிற ஆளு, இப்படிப் பின்பக்கத்தின் பளீரொளி பார்த்தால் வயிறு தாங்குமா, இது நியாயமா?//

இதுல சிரிக்கற மாதிரி என்னங்க இருக்கு...ஐயா நீங்க சொல்லுங்க...அம்மா நீங்க சொல்லுங்க!

கைப்புள்ள said...

வாங்க பூங்குழலி,
தங்கள் முதல் வருகைக்கு நன்றி.

பல தடவை சொல்லியும் யாரும் இன்னும் கெக்க பெக்கேயை விடலையே? எனக்கு கோவம் கோவமா வருது...

கைப்புள்ள said...

//விட்டா அவனை மாதிரி அப்ளிகேஷன் எழுதி யாராவது அப்பா கிட்டே குடுப்ப போல தெரியுதே. உனக்கெல்லாம் ......ஹூம்.//

அது தாங்க நம்ம கிட்ட இருக்குற ஒரே வீக்னெஸ்...மத்தபடி நாம் சிங்கம்ல.

காதைக் குடுங்க அஞ்சோ பத்தோ தரேன்...பொண்ணோட அப்பாவுக்கு அப்ளிகேஷனும் கொஞ்சம் எழுதிக் குடுத்துடுங்க...உங்களுக்கு புண்ணியமா போவுது.

இலவசக்கொத்தனார் said...

//காதைக் குடுங்க அஞ்சோ பத்தோ தரேன்...பொண்ணோட அப்பாவுக்கு அப்ளிகேஷனும் கொஞ்சம் எழுதிக் குடுத்துடுங்க...//

நீ எழுதிட போறயேன்னு டென்ஸன் பட்டா என்னையே எழுத சொல்லறையேப்பா? நீ தேறப்போறது இல்ல. அதான் உங்க ஆளு அப்பாமே இப்படி படமெடுத்துட்டான்.

rv said...

கைப்பு,
கலக்கல். ஸ்மைலிய வேற எங்கேயாவது போய் போட்டுக்கறேன்.

உங்க பிரண்ட் வச்ச ஆப்பு இருக்கட்டும். புல்லா ஸ்க்ரோல் டவுண் பண்ணுங்க இந்தப் பக்கத்த. :)) (இதுக்கு ஸ்மைலி போடாம இருக்க முடிலப்பா.. மன்னிச்சிக்கோ)

ஆமா, கொத்தனார், அது என்ன PG-13 கமெண்ட்? பொதுவுல சொல்லுப்பா..

கைப்புள்ள said...

//உங்க பிரண்ட் வச்ச ஆப்பு இருக்கட்டும். புல்லா ஸ்க்ரோல் டவுண் பண்ணுங்க இந்தப் பக்கத்த. :)) (இதுக்கு ஸ்மைலி போடாம இருக்க முடிலப்பா.. மன்னிச்சிக்கோ)//

வாங்க வைத்தியரே!நானும் பாத்தேங்க அதை...அது எனக்கே :))))-வா தான் இருந்துச்சு. ஆனா பொதுவுல அனுமதிக்க முடியலையேனு ஒரு சின்ன வருத்தம்.

கைப்புள்ள said...

//நீ எழுதிட போறயேன்னு டென்ஸன் பட்டா என்னையே எழுத சொல்லறையேப்பா? நீ தேறப்போறது இல்ல. அதான் உங்க ஆளு அப்பாமே இப்படி படமெடுத்துட்டான். //

தலைவா! நீங்க கொஞ்சம் கருணை காட்டுணீங்கனா நானும் பொழச்சிக்குவேன்..."அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தாயே"ன்குற ரேஞ்சுக்கு உம்மை புகழ்ந்து பாட்டு வேணாலும் பாடறேன்.

இலவசக்கொத்தனார் said...

அதான் 50 ஆயிருச்சே. போய் தூங்கட்டுமா?

மருந்து, அதெல்லாம் பொதுவில சொல்லக் கூடாது....:)

VSK said...

இரண்டு கைகளுக்கு இடையே தெரியும் ஒளி, கீழே தெரியும் ஒளி வட்டம் இவைலளைக் கோடிட்டுப் பார்த்தால், 'மிக்கி மௌஸ்' போலத் தெரிகிறது!

'ஆப்பு' .... 'சூஊஊ....ப்பர் அப்பு!

கைப்புள்ள said...

//அதான் 50 ஆயிருச்சே. போய் தூங்கட்டுமா?//

குட் நைட் கொத்ஸூ. ஆனா ஆட்டத்துக்கு நாளைக்கு மறக்காம வந்துடணும்.

சிவா said...

ஹாஹாஹா :-)).. என்னா ஒரு Angle :-))

கைப்புள்ள said...

//இரண்டு கைகளுக்கு இடையே தெரியும் ஒளி, கீழே தெரியும் ஒளி வட்டம் இவைலளைக் கோடிட்டுப் பார்த்தால், 'மிக்கி மௌஸ்' போலத் தெரிகிறது!//

வாங்க SK,
அட ஆமாங்க...நெசமாவே மிக்கி மவுஸ் தெரியுதுங்க...நீங்க இந்த கார்டூன் படமெல்லாம் நல்லா போடுவீங்க போல...சும்மா சொல்லக் கூடாது நல்ல "unconventional thinking" தான் உங்களுக்கு.

சிவா said...

அப்புறம்..கைப்புள்ள போட்டாவை பார்த்ததில் ரொம்ப சந்தோசம்..இவர் தானா அவர் என்று நினைக்கும் போது..நல்லா தான் இருக்கு மோகன்ராஜ் :-)

Sam said...

படம் நல்லா இருக்குங்க!!!
உங்க டைசன் பத்தி இன்னொரு பதிவில நீங்க சொன்னதும் நல்லா இருந்துதுங்க!!!
அன்புடன்
சாம் :)))

கைப்புள்ள said...

//ஹாஹாஹா :-)).. என்னா ஒரு Angle :-))//

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ணு தோணுதுங்க. ஒருத்தர் குண்டு பல்புங்கறாரு, ஒருத்தர் மிக்கி மவுஸ்ங்கறாரு, ஒருத்தர் ஆங்கிளைப் பாராட்டறாரு...என்னத்த சொல்ல?

ஆனா என்னையும் மதிச்சு இதெல்லாம் சொல்லனும்னு தோணுனதுக்கே எல்லாருக்கும் ஒரு மனமார்ந்த நன்றி சொல்லனும்.

கைப்புள்ள said...

//அப்புறம்..கைப்புள்ள போட்டாவை பார்த்ததில் ரொம்ப சந்தோசம்..இவர் தானா அவர் என்று நினைக்கும் போது..நல்லா தான் இருக்கு மோகன்ராஜ் :-)//

சந்தோஷம்ங்க. அவர் தான் இவுரு...ஆனா இப்ப இவுரை மாதிரி இல்ல...இது ஆறு வருசத்துக்கு முந்தி ஆஸ்டல்ல ரொட்டி தின்னுக்குட்டு கெடந்த போது எடுத்தது. இப்பவும் திங்கறது ரொட்டின்னாலும் வயசாகுதில்லயா...ஆனா இப்ப சில extra fittingsஉம் வந்து நம்மளைச் சேந்துக்கிச்சு.
:)-

ஒரு நிமிஷம் தினமலர் அந்துமணி மாதிரி முகத்தை மறைச்சு ஒரு பில்டாப்பு வேலை பண்ணலாமானு கூட நெனச்சேன்...ஆனா நாம என்ன சினிமாகாரனா...இல்ல பத்திரிகைகாரனா? எதுக்கு இந்த வெட்டி பந்தா எல்லாம்னு அந்த ஐடியாவைக் கைவிட்டுட்டேன்.உங்க பின்னூட்டத்தைப் பாத்து அந்த முடிவு சரியானது தான் தெரிஞ்சிக்கிட்டேன்.
:)-

Anonymous said...

கைப்பூ! வழக்கம் போல கரக்டா லேட்டா வந்துட்டேன்.

காலங்காத்தால (யாருப்பா அது.. 10மணி காலங்காத்தாலயான்னு கூவறது.. நமக்கு அப்டிதம்ப்பா... கண்டுக்காதீங்க) ஏம்ப்பா இப்படி வெளிச்சம் போட்டுட்டு சிரிக்கவும் கூடாதுங்கரே!!
இது ஆவறதில்ல....

தல! நீ மட்டும் டக்குன்னு உக்கார்திருந்தா இன்னேரம் தலைக்கு பின்னால ஒளி வட்டத்தோட சங்கத்துல மாட்ட ஒரு 'ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண கைப்பானந்த ஸ்வாமிகள்'
படம் கிடைச்சிருக்கும்... ஜஸ்ட்ட்ட்டு மிஸ்.......

////////ஓ! தாராளமாக் குடுக்கலாமே! பொண்ணு "என் ராசா எம்புட்டு ஸ்மார்ட்"னு சந்தோசமா நெட்டி முறிக்கும்
:)-//////////

சரி சரி.. எனக்கு யாரோ 'ஓளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது... ' ன்னு பாடறமாதிரி தெரியுதப்பூ....

தியாக்

கைப்புள்ள said...

//படம் நல்லா இருக்குங்க!!!//

வாங்க சாம்!தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

//உங்க டைசன் பத்தி இன்னொரு பதிவில நீங்க சொன்னதும் நல்லா இருந்துதுங்க!!!
அன்புடன்
சாம் :))) //
அதையும் ஞாபகம் வச்சு சொல்லறீங்களே...உண்மையிலேயே சந்தோசத்துல திக்குமுக்காடிட்டிருக்கேன். நன்றி சாம்!

VSK said...

மாலை சூரியன் ஆற்றில் விழுந்து
'கைபுள்ள'யின் 'பேண்ட்'இன் இடையில் விழுந்து
ஒளிவட்டம், பின்னொளி வட்டமாக
நமக்குக் கிடைத்ததோ ஒரு 'ஆப்பு'!
அதனால் மலர்வதுஇங்கே சிரிப்பு!
நண்பனையும் நம்பாதே என்று
கைப்புள்ள சொல்வதே தீர்ப்பு!

Anonymous said...

கைப்பூ! வீட்டுல கல்யாணப்பேச்சு எடுக்கறாங்கன்னு இந்த மாதிரி போட்டோவை தேடி எடுத்து அத பொண்ணு கிட்ட குடுத்து தப்பிக்க பாக்கறீங்களே...
அதெல்லாம் நடக்காது.

சீக்கிரமே 'கல்யாணப் ப்ராப்திரஸ்த்து.............'

தியாக்

கைப்புள்ள said...

//கைப்புள்ள,
கோச்சுக்காத'பா."நீ யாரும் பாத்து ஸ்மைல் கண்டி உட்டேனு தெரிஞ்சிது...." இத்த படிக்க முன்னேயே சிர்ச்சி தொலச்சிட்டேன்'பா.உட்ரு'பா கண்ணு.
வர்ட்டா...! //

வாங்க தருமி சார்,
எனமோ தெரியலை உங்க பின்னூட்டம் எனக்கு மெயில்ல வரலை. நானா bloggerல உள்ள போய் moderate commentsல பாத்தப்ப தான் தெரிஞ்சது உங்க பின்னூட்டம் வந்திருக்குன்னு...அதனால தான் தாம்தம்.

எல்லாரும் தான் சிரிச்சிட்டாங்களே...நீங்களும் சிரிங்க...சிரிக்க கூடாதுன்னு சொன்னா மக்கள் கேக்கவா போறாங்க?

கைப்புள்ள said...

//தல! நீ மட்டும் டக்குன்னு உக்கார்திருந்தா இன்னேரம் தலைக்கு பின்னால ஒளி வட்டத்தோட சங்கத்துல மாட்ட ஒரு 'ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண கைப்பானந்த ஸ்வாமிகள்'
படம் கிடைச்சிருக்கும்... ஜஸ்ட்ட்ட்டு மிஸ்.......//

ஆமாம் தியாக்! போட்டோ எடுத்த புண்ணியவான், பாபா ஸ்டைல்ல உக்கார வச்சு போட்டோ எடுத்துருந்தான்னா ஒளிவட்டம் தலைக்கு பின்னாடி வந்துருக்கும். நீங்க சொல்ற மாதிரி கைப்பானந்தா சுவாமிகள் ஆகியிருப்பேன்...படுபாவி படையப்பா போஸ் இல்ல குடுக்க சொன்னான்
:)-

கைப்புள்ள said...

//சீக்கிரமே 'கல்யாணப் ப்ராப்திரஸ்த்து.............'//

தியாக்...தியாக்...ப்ளீஸ்பா...இன்னும் கொஞ்ச நாள் ஜாலியா இருந்துக்கறேன்பா...ப்ளீஸ்பா!

கைப்புள்ள said...

//மாலை சூரியன் ஆற்றில் விழுந்து
'கைபுள்ள'யின் 'பேண்ட்'இன் இடையில் விழுந்து
ஒளிவட்டம், பின்னொளி வட்டமாக
நமக்குக் கிடைத்ததோ ஒரு 'ஆப்பு'!
அதனால் மலர்வதுஇங்கே சிரிப்பு!
நண்பனையும் நம்பாதே என்று
கைப்புள்ள சொல்வதே தீர்ப்பு!//

வாங்க SK,
மறுவருகைக்கு நன்றி. அட...கவிதையாவே எழுதிட்டீங்களா? 'பு' கவிதை அருமை...புல்லரிக்க வச்சுட்டீங்க போங்க!

Unknown said...

என்ன இது.. ஊரேக் கூடி கும்மி அடிச்சு இருக்கு... எங்க அண்ணன் கைப்பு போட்டா உங்களுக்கெல்லாம் தமாசாப் போயிருச்சா?
பிச்சிப்புடுவேன் பிச்சு...
என்னச் சிரிப்பு ராஸ்கல்....

"தம்பி.. இது அண்ணன் போட்டக் கோடு இதை நீ தாண்டப் பிடாது... எதுவானாலும் அண்ணன் பாத்துக்குவேன் சொல்லிட்டுப் போன எங்க அண்ணன் பேச்சை மீறாம நான் கோட்டுக்கு இந்தப் பக்கமே நின்னுகிட்டிருக்கேன்ங்கற தைரியத்துல்ல ஆளாளுக்கு அண்ணனைக் கலாய்க்கிரீங்க..
வேணாம்... விவகாரமாயி போயிரும் சொல்லிப்புட்டேன்..."

இந்த விசயம் மட்டும் எங்க அண்ணி கைப்பொண்ணுக்குத் தெரிஞ்சுது அம்புட்டுத் தேன் உங்க அம்புட்டுப் பேத்துச் சோலியும் முடிஞ்சுப் போயிரும் சொல்லிப்புட்டேன்...

தல நீ சும்மா இரு தல.. அண்ணி படத்தைக் காட்டுனாத்தான் இந்தக் கூட்டத்துக்கு உன் மதிப்புத் தெரியும் தல..
எங்க அண்ணி படத்தைப் பார்க்க இங்கேப் போங்க

http://chennaicutchery.blogspot.com/2006/03/blog-post_13.html

அப்புறம் தல நான் இன்னும் நீ போட்டக் கோட்டுக்கு இந்தப் பக்காமவேத் தான் நிக்குறேன்.. உன் கட்டளையை மீறவே மாட்டேன் தல....
உனக்கு ஒண்ணுன்னா என் மனசுத் தாங்க மாட்டேங்குது தல நான் என்னப் பண்ணுவேன்?

கைப்புள்ள said...

வாய்யா தேவு,
இவ்ளோ நேரம் ஊரே கூடி நின்னு நம்மளப் பாத்து கும்மி அடிக்கிற வரைக்கும் லைட் கம்பத்துக்குப் பின்னாடி நின்னு வேடிக்கை பாத்துட்டு, சரியா 'தமிழ்நாடு போலீஸ்' மாதிரி எல்லாம் முடிஞ்சப்புறம் வரியே? இரு...இரு...ஒனக்கு...
...சரி...எதோ அண்ணி படம் அது இதுன்னு சொல்றே...அத மொதல்ல வந்து பாத்துட்டு...அப்புறம் இருக்குது ஒனக்கு...

Anonymous said...

கைப்பொண்ணு கிடைச்சாச்சா!

தேவ தேவர்களே உமக்கு முடிவு பண்ணிட்டாங்களா..........

///தியாக்...தியாக்...ப்ளீஸ்பா...இன்னும் கொஞ்ச நாள் ஜாலியா இருந்துக்கறேன்பா...ப்ளீஸ்பா////////
கைப்பு! உமக்கு சீக்கிரமே காப்பு!

/////////சீக்கிரமே 'கல்யாணப் ப்ராப்திரஸ்த்து.............'////////////
எப்பிடி நம்ம வாய் முஹுர்த்தம்!


:-)))))))))))))))))

தியாக்

Pavals said...

கைப்பு.. சிரிச்சு சிரிச்சு பக்கத்துல இருக்கிறவன் எல்லாம் நமக்கு என்னமோஎதோன்னு பார்க்கிறானுக..

ஐ.ஐ.டிக்காரங்க எப்பவும் வித்தியாசமா சிந்திப்பாங்க்ன்னு சொன்னாங்க.. அதுக்காக இப்படியா.. ?

Anonymous said...

தல!
இப்பதான் பொண்ண பாத்துட்டு வர்றேன்.

ஏதோ பாட்டு கேக்குதுன்னு நாந்தான் அப்பவே சொன்னேன்ல்ல... :-))

THYAG

Udhayakumar said...

கைப்பு, நான் ஃபோட்டோதான் முதல்ல பார்த்தேன். படிக்காமயே புரிஞ்சு போச்சு, நம்ம கைப்புவை அடிக்க முட்டு சந்துக்கெல்லாம் கூப்பிட வேண்டியதில்லை. அவன் ரொம்ப நல்லவன், கூப்பிட்டா எடத்துக்கே வந்து வாங்கிட்டு போவான்னு. கங்கை வரைக்கும் போயி வாங்கிருக்கியே, உண்மையிலேயே நீ ரொம்ப நல்லவன்.

கைப்புள்ள said...

//ஐ.ஐ.டிக்காரங்க எப்பவும் வித்தியாசமா சிந்திப்பாங்க்ன்னு சொன்னாங்க.. அதுக்காக இப்படியா.. ?//

அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லீங்ணா! இதோ ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி நானும் இஞ்சி தின்ன குரங்காட்டம் தான் குந்தி கெடந்தேன். எல்லாம் உங்களை மாதிரி பெரியவங்களும் படிக்கிறவங்களும் குடுக்கற ஊக்கமும் ஆதரவு தாங்க...இப்பல்லாம் பொழுது போறதே தெரியறதில்லை.
:)-

கைப்புள்ள said...

//இப்பதான் பொண்ண பாத்துட்டு வர்றேன்.

ஏதோ பாட்டு கேக்குதுன்னு நாந்தான் அப்பவே சொன்னேன்ல்ல... :-))//

ஏன்யா எல்லாரும் கலாய்க்கிறத நிறுத்துறேனுட்டு எல்லாரும் சேர்ந்து குடும்பத்துல குழப்பத்த உண்டாக்கிட்டீங்களேயா?
இங்க பாருங்க

Anonymous said...

thala :-))),

enna solla varreinga.. puriyalaye

thyag

கைப்புள்ள said...

//thala :-))),

enna solla varreinga.. puriyalaye //

தேவோட லேடஸ்ட் பதிவுல ஒரு பின்னூட்டம் போட்டிருக்கேன்...அத போய் பாருங்க...புரியும்.
:(-

Anonymous said...

aiyaa enakku oru unmai theriuanum

ungka sangkaththila yaaru parthiban yaru kadiththurai yaaru kuddaali

கைப்புள்ள said...

//நம்ம கைப்புவை அடிக்க முட்டு சந்துக்கெல்லாம் கூப்பிட வேண்டியதில்லை. அவன் ரொம்ப நல்லவன், கூப்பிட்டா எடத்துக்கே வந்து வாங்கிட்டு போவான்னு. கங்கை வரைக்கும் போயி வாங்கிருக்கியே, உண்மையிலேயே நீ ரொம்ப நல்லவன்.//

வாங்க உதயகுமார்,
உங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. இதெல்லாம் உங்களை மாதிரி நாலு பேர் போய் நாலு பேருக்கிட்ட சொன்னா தானா எல்லாருக்கும் தெரியும்.அதனால உங்களுக்கு தெரிஞ்சவங்க கிட்டயும் சொல்லி வைங்க கைப்புள்ளயோட எதயும் தாங்கும் உடம்ப பத்தி.

கைப்புள்ள said...

//aiyaa enakku oru unmai theriuanum

ungka sangkaththila yaaru parthiban yaru kadiththurai yaaru kuddaali//

வாங்க அனானிமஸ்!
கட்டதுரை,பார்த்திபன் இவனுங்க எங்கியாச்சும் லீவுல போயிருக்காங்கனு வைங்க...அந்த குறையை நம்ம பயலுகளே(சங்கத்து கூட்டாளிகளே) தீர்த்து வச்சுடுவாங்கிய.

வெட்டிப்பயல் said...

இன்னாபா யாராச்சும் கூப்டுக்கினீங்களா?

Anonymous said...

Kaipu,
I have linked this in Desipundit.
Unga puhazh ulagamellam parava oru vazhi seyya vendama?

http://www.desipundit.com/2006/03/13/%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/

வெட்டிப்பயல் said...

சரி வந்தது வந்துட்டேன்! ஒரு கேள்வி கேட்டுட்டே போறேம்பா! உன் பதிவுக்குப் பொருத்தமாத்தான் நைனா! பயப்படாதெ!

கேள்வி : ஆப்பு என்பதனை அளக்கப் பயன்படும் அலகு (அதாம்பா Unit Of Measurement) என்ன?

Radha Sriram said...

kaipu,

romba serious post ellam padichittu onga padhivukku vandha.....sema comic relief kudukareenga......enga family ya oru happy family ya maathiteenga......(enna irundhaalum mathavangolada embarassment a pathu sirikkardhu oru sugam dhaan!!!(big smiley!!)

ippadikku guiltyly,,

radha )

டி ராஜ்/ DRaj said...

கைப்பூ;
படம் பதிவு சூப்பர்.

ஐஐடி டெல்லியில எந்த வருஷம் நீங்க படிச்சீங்க???
ராஜ்

கைப்புள்ள said...

//கைப்பூ;
படம் பதிவு சூப்பர்.

ஐஐடி டெல்லியில எந்த வருஷம் நீங்க படிச்சீங்க???
ராஜ்//

வாங்க ராஜ்,
தங்களோட முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

ஐயா! நீங்களும் ஐஐடி-Dல படிச்சீங்களா? நான் படிச்சது 1999-2001. காரகோரம் ஹாஸ்டல்.

கைப்புள்ள said...

//இன்னாபா யாராச்சும் கூப்டுக்கினீங்களா?//

யாருப்பா இது புதுசா?

கைப்புள்ள said...

//I have linked this in Desipundit.
Unga puhazh ulagamellam parava oru vazhi seyya vendama?//

வாங்க டுபுக்கு!
பட்டி தொட்டியெல்லாம் கைப்பு பேர் போஸ்டர் அடிச்சி ஒட்டற மாதிரி செஞ்சிட்டீங்க...என்ன நாம மூளையைக் கசக்கி எழுதுன பதிவுக்கு லிங்க் கிடைச்சிருக்கலாம்...பல்ப் வாங்குன பதிவுக்கு கெடச்சிருக்கு...எப்பிடியிருந்தாலும் தங்கள் வருகைக்கும் லிங்குக்கும் நன்றி.

கைப்புள்ள said...

//romba serious post ellam padichittu onga padhivukku vandha.....sema comic relief kudukareenga......//

வாங்க மேடம்! தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//enga family ya oru happy family ya maathiteenga......//
இதைக் கேட்ட இந்நாள் என் வாழ்வில் பொன்னாள்.

//(enna irundhaalum mathavangolada embarassment a pathu sirikkardhu oru sugam dhaan!!!(big smiley!!)//
என்ன இது...சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு

டி ராஜ்/ DRaj said...

//ஐயா! நீங்களும் ஐஐடி-Dல படிச்சீங்களா? நான் படிச்சது 1999-2001. காரகோரம் ஹாஸ்டல்//

நான் உங்களுக்கு கொஞ்சம் (??) முன்னால படிச்சேன். 1995-96. ஷிவாலிக். நிறைய தமிழ் மக்கள் கெமிஸ்டிரி PhD பண்ணினாங்க அப்போ (மல்லுஸ் எல்லாம் பிசிக்ஸ்-ல இருந்தாங்க) . ஒருவேளை அதில சிலர உங்களுக்கு தெரிஞ்சு இருக்கலாம்.

வெட்டிப்பயல் said...

உன் கடத்தல் சாகசம் ஒண்ணு இங்க இருக்கு.

http://gundakkamandakka.blogspot.com

வெட்டிப்பயல் said...

இங்க பாருங்க மஹா ஜனங்களே!

எல்லாருடைய கேள்விக்கும் பதில் சொல்ற அண்ணாத்தை எனக்கு மட்டும் பதிலே சொல்றதில்லை!

ஆப்பு வை அளக்கப் பயன்படும் அலகு என்னன்னு கேட்டேன்.இதுவரைக்கும் பதிலே வரலை.

இலவசக்கொத்தனார் said...

இப்போ என்ன 100 வரணும். அவ்வளவுதானே. வந்தா அதோட ஸ்டாப்பிங்கா?

Anonymous said...

ah... 100,100,100, come on, come on, oh.. koths mundikitara

கைப்புள்ள said...

இல்லை கொளுத்து...100 அடிக்கிறதுன்னா உங்க உதவியோட எப்ப வேணாலும் அடிச்சுக்கலாமே...ஆனா உங்க கணக்கைக் கூட போட முடியாம நாலா பக்கமும் ஆப்பா முளைச்சு நிக்குது...கட்டதுரை, சங்கத்து ஆளுங்களோட...இப்ப புதுசா பார்த்திபன் வேற...மனுசனை இம்சை பண்றாங்கய்யா!

வெட்டிப்பயல் said...

இருந்தாலும் இந்தப் பதிவோட தலைப்பை கீழே இருக்கற லிங்கோட தலைப்பையே வெச்சிருக்கலாம்.

கைப்புள்ள said...

//ஆப்பு வை அளக்கப் பயன்படும் அலகு என்னன்னு கேட்டேன்.இதுவரைக்கும் பதிலே வரலை. //

யோவ் குண்டக்க மண்டக்க! பேச்சு பேச்சா இருக்கணும்...அதோட நியாயமாவும் இருக்கணும்...நாலா பக்கமும் ஒவ்வொரு பதிவிலேயும் ஒரு ஆப்பு சொருவிட்டே இருக்கே...நான் கமெண்டை பப்ளிஷ் பண்ணறதா...இல்லை ஒனக்கு பதிலை சொல்லறதா...பிச்சிப்புடுவேன் பிச்சு...
என்னச் சின்னப்பிள்ளதனம்...ராஸ்கல்....

இலவசக்கொத்தனார் said...

நூறு ஆச்சா? ஆகலையா?

இலவசக்கொத்தனார் said...

ஒரு பார்த்திபனை சமாளிக்க முடியலை. இவ்வளவு டென்சன். உன்னை நினைச்சா கொஞ்சம் கவலையாய்தான் இருக்கு ராசா.

இலவசக்கொத்தனார் said...

இப்பமாவது 100 ஆச்சாவே?

கைப்புள்ள said...

//இருந்தாலும் இந்தப் பதிவோட தலைப்பை கீழே இருக்கற லிங்கோட தலைப்பையே வெச்சிருக்கலாம்.//

நம்மளை வம்பிழுக்கறதுக்குனே அலையறாங்க...அத நீ வேணா உன் பதிவு பேராவே வச்சுக்க...யாரு வேணான்னா?

நாமக்கல் சிபி said...

எங்கள் அண்ணன் கைப்பூவின் வீரம் தெரியாமல் விளையாடிப் பார்க்க நினைக்கும் பார்த்திபன் உள்ளிட்ட வீணர்களுக்கு நான் ஒன்றை நினைவூட்ட விரும்பிகிறேன்.

கேள்வி மட்டும்தான் உங்களுக்கு கேட்கத் தெரியும் என்ற உங்கள் இயலாமைதான் உங்கள் நடவடிக்கைகளில் தெரிகிறது. அண்ணன் கைப்புவிடம் போர்க்களத்தில் பொருதிப் பார்க்க நீங்கள் தயாரா?

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

கைப்புள்ள said...

//இப்பமாவது 100 ஆச்சாவே? //

"அளவிலா விளையாட்டுடையார்...அன்னவர்க்கு நாங்களே சரண்"

PM-101 பின்னூட்ட மெகானிக்ஸ் என்ற 100 கிரெடிட் பேப்பரில் எனது Course Instructor Dr.இலவசக்கொத்துக்கு என் முதல் நூறு அடித்த இம்மகிழ்ச்சியான தருணத்தில் இந்நூறை அன்னவர்க்கே சமர்ப்பிக்கிறேன். நூறு அடிச்சதும் நீரு தாம்வே!

நாமக்கல் சிபி said...

முதல் செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள் தலை!
யாரிந்த பார்த்திபன், புதுசா முளச்சிருக்கான். என்னோட பதிவுல வந்து ஹிட்லிஸ்டுல என் பேரும் இருக்குன்னு சொல்லிட்டு போயிருக்கான்.

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

கைப்புள்ள said...

//யாரிந்த பார்த்திபன், புதுசா முளச்சிருக்கான். என்னோட பதிவுல வந்து ஹிட்லிஸ்டுல என் பேரும் இருக்குன்னு சொல்லிட்டு போயிருக்கான்.//

யய்யா! நம்ம சங்கத்து ஆளுங்களை எல்லாம் சேத்துக்கிட்டு 'போலி டோண்டு' தான் புதுசா பார்த்திபன்ங்கிற பேர்ல வந்திருக்கான்னு தமிழ்மணத்துல பூரா போஸ்டர் அடிச்சு ஒட்டுய்யா

நாமக்கல் சிபி said...

கைப்பூ எனக்கு மணி ஆர்டர் வேண்டாம். செக்காவே அனுப்பிடு. உனக்கெதுக்கு சிரமம்.

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

Anonymous said...

யோவ் கைப்பு!
அந்த கொத்தனாரு எங்களுக்கெல்லாம் கணக்கு குடுத்துட்டு, நாங்க அதுல பிஸியா (?!) இருக்கறப்ப இங்க வந்து 100 அடிச்சுட்டு டாக்டர் பட்டம்
வாங்கிட்டாரு!
இது அழுகுணி ஆட்டமய்யா........

இருந்தாலும் உம்ம ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்! (இல்லேன்னா நம்மளுக்கு பல்பு வச்சிருவாங்கப்போவ்) :-)))))))

தியாக்

இலவசக்கொத்தனார் said...

//"அளவிலா விளையாட்டுடையார்...அன்னவர்க்கு நாங்களே சரண்"//

நம்ம பாட்டு நமக்கேவா? நடக்கட்டும். நடக்கட்டும்.

நீங்க இங்க டாக்டர் பட்டம் தறீங்க. அங்க நிலாக்காவும், கௌசிகனும் சேர்ந்து வேற பட்டம் தராங்க. ரசிகர் மன்றம் எல்லாம் வேற வந்தாச்சு. எல்லாம் சேர்ந்து நம்மளை ஒரு வழி பண்ணறதுன்னு முடிவே கட்டிட்டீங்களா?

இப்படி ஏத்தி விட்டு ஏத்தி விட்டு இன்னைக்கு எத்தனை பேரு நடு ரோட்டில இருக்கான். நானும் அங்க வரணும்ன்னு வேண்டுதலா? போய் வேலையைப் பாருங்கப்பா...

Anonymous said...

சங்க பெருமக்களே!
தல இப்பெல்லாம் முணுமுணுக்கும் பாட்ட தல கேட்டுக்கொண்டதற்கு இணங்கி இங்க போட்டிருக்கிறேன்!

(தலயோட இன்னொரு டுயட் பாட்டுக்கு சங்கத்து செலவுல ரூம் போட்டு கம்போசிங் பண்ணிக்கிட்டு இருக்கறேன். சங்கத்து மத்த உறுப்பினர்களும்
தல இப்ப தனி ஆளு இல்ல, 'பியான்சோட இருக்கற பிரின்சு' ங்கறத உணர்ந்து கடமையாற்ற தங்கள் பாட்டெழுதும் தெறமய உபயோகிக்க
முன்வரனும்னு தல சொல்ல சொன்னாரு. செலவ சங்க நிதியிலிருந்து சைடுல தள்ளுவாராமாங்கோவ்!!!!!!!!!!)


இப்ப சங்க FM லருந்து :

ஒரு மாலை இளவெயில் நேரம்......
அழகான இலையுதிர் காலம்....
சற்று தொலைவினில் அவ னிடம் காமிரா...
அங்கே விழுந்தது ஆப்ப்பூபூபூபூபூபூ...........


அவன் வைத்து விட்ட ஆங்கிள்; நடு நடுவே கொஞ்சம் வீங்கல்.
பின்னோரம் ஆப்போடு கேட்டுக்கொண்டே நின்றேண்


அதை ப்ளாக்கில் போட்ட ஒரு தருணம்
என் வாழ்வின் சர்க்கரை நிமிடம்!!
முதல் முதலில் 100ரை கண்டேனே! கண்டேனே! கண்டேனே!


ப்ளாக்கில் போட்டு பழகிய நான்கு தினங்களில்
நடை உடை பாவனை மாற்றிவிட்டான்
சாலை முனைகளில் பார்த்திப, துரைகள்
நின்று தாக்கும் வாடிக்கை காட்டிவிட்டான்


மிச்சம் போட்டோ எங்கவா??? : அடப்போங்கடா கொய்யாளாஆஆஆஆ
எனக்கேற்ற ஆப்பாக அதை மாற்றிக் கொண்டேனே


தியாக்

Anonymous said...

தல!

பாட்டு போட்ட உடனே என்னோட அக்கவுண்டுல சங்க நிதிய ட்ரான்ஸ்பர் பண்ணிட்டியே! உன் தாராளமே தாராளம்!!

ரொம்ப டாங்சு தல!

தியாக்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

கைப்புள்ள..காலுக்கடியில் சூரியனை ஒளிச்சி வச்சிருக்கீங்க..

நீங்க என்ன நடமாடும் கட்சி விளம்பரமா..?

Anonymous said...

hey,
careful da ,Miracle....kovil (kaippu temple) kaddiduvangappa :d

"regular laughter in your life could help to reduce your risk of developing heart disease."

good job KEEP IT UP :D

kjey

Anonymous said...

//careful da ,Miracle....kovil (kaippu temple) kaddiduvangappa :d//


ம்ஹூம். அப்புறம் அண்ணாத்தைய
கைலயே புடிக்க முடியாது.. இருக்கற டார்ச்சர் தாங்கல. நீங்க வேற!

கைப்புள்ள said...

//ப்ளாக்கில் போட்டு பழகிய நான்கு தினங்களில்
நடை உடை பாவனை மாற்றிவிட்டான்
சாலை முனைகளில் பார்த்திப, துரைகள்
நின்று தாக்கும் வாடிக்கை காட்டிவிட்டான்

மிச்சம் போட்டோ எங்கவா??? : அடப்போங்கடா கொய்யாளாஆஆஆஆ
எனக்கேற்ற ஆப்பாக அதை மாற்றிக் கொண்டேனே//

தியாக்!
எப்படிமா...எப்படிம்மா...இப்பிடி? என்னவோ போம்மா!

கைப்புள்ள said...

//நீங்க என்ன நடமாடும் கட்சி விளம்பரமா..?//

என்னங்க ஞானியாரே! நெல்லை குசும்பை நம்மகிட்டவே ஆரம்பிச்சிட்ட மாதிரி தெரியுதே? நமக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரங்க!
:)

கைப்புள்ள said...

//good job KEEP IT UP :D

kjey //

வாங்க கேஜே!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

கைப்புள்ள said...

//ம்ஹூம். அப்புறம் அண்ணாத்தைய
கைலயே புடிக்க முடியாது.. இருக்கற டார்ச்சர் தாங்கல. நீங்க வேற!//

வாங்க அனானிமஸ்! கோயில் கட்டலன்னாலும் நம்ம டார்ச்சர் நிக்காதுங்கோவ்!

ஆவி அண்ணாச்சி said...

ஃபோட்டோ சூப்பரா இருக்குதுங்க!

சிரிச்சி சிரிச்சி வயிறே புண்ணாப்போச்சு!

CVR said...

:-)))))))
சான்ஸே இல்ல!!!

ஏன் இவன் இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறான்னு பக்கத்துல எல்லோரும் ஒரு மாதிரி பாக்கறாங்க!! :-D

கைப்புள்ள said...

//:-)))))))
சான்ஸே இல்ல!!!

ஏன் இவன் இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறான்னு பக்கத்துல எல்லோரும் ஒரு மாதிரி பாக்கறாங்க!! :-D//

ரெண்டு வருஷத்துக்கப்புறமும் வந்து கமெண்டு போட்டிருக்கீங்க. நன்றி CVR.
:)

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

ஸ்மைல் இல்லீங்கோ, ஒரே லாஃப்புங்கோ!

ஃபோட்டோ எடுத்தவனை சும்மாவா விட்டீங்க? ரொம்ப பெரிய மனஸூங்கோ உங்களுக்கு!

Anonymous said...

Kalam KAdanthu Padithalum (pinootam ittalum),

Kalathinal alliyatha pathivugal.

sirpoooo...siripu..

Mani,
Sg

Sanjai Gandhi said...

அண்ணே.. எதோ ஒரு குண்டு பல்பு அந்த எடத்துல தொங்க விட்டு எடுத்த மாதிரி கீது... அப்போவேவா? :P

Arun Kumar G said...

aiye..Kaippu!
Ne Overa kudukkura hypu ,
Kulikka venum soapu...
Ne Vangapora Bulbu !!!!?!?!?

Gopikrishnan said...

he he he..keela gundu bulb eriyira madhiri irukkunga..super kaipulla

cheena (சீனா) said...

ஆப்பு ந்ல்லாவே இருக்கு