Wednesday, March 01, 2006

நான்மணிக்கடிகை

இன்னிக்கி எப்படியும் சங்கிலி பதிவு போட்டுடணும்னு ஆபிசுல கல்தா குடுத்துட்டு ஓடியாந்துட்டேன். இதுக்கு முன்னாடி எழுதுனவங்க எல்லாரும் இதுக்கு சூப்பரா நாமகரணம் பண்ணி வக்க, நாம என்ன பண்ணா எடுபடும்னு யோசிச்சதுல தோணுன பேரு தான் இந்த நான்மணிக்கடிகை. இந்த பதிவுக்கு வெறும் தலைப்பா மட்டும் எடுத்துக்குங்க, ஓகேவா?

விவசாயி மற்றும் நாமக்கல் சிபி இருவரின் அன்புக்கும் தலை வணங்கி என்னைப் பத்தியும் நான் ரசிக்கும் சில விசயங்களைப் பத்தியும் ஒரு நாலு சேதி நாலு பேருக்கு நாலு தெசயிலயும் பரப்பி விடலாம்னு ஒரு சின்ன முயற்சி.

நான் இருந்த நாலு எடம்

1. திருவல்லிக்கேணி, சென்னை
2. ஹவுஸ் காஸ், புது தில்லி
3. ஷேக் சராய், புது தில்லி
4. அனூப் நகர், இந்தூர்

விடுமுறைக்குப் போன நாலு ஊர்
1. மைசூர்
2. கூர்க்
3. மசூரி
4. ஆக்ரா

சென்னையில் புடிச்ச நாலு எடம்
1. மெரீனா கடற்கரை(குறிப்பா Twilight பார்த்த அந்த
ஓரிரு தருணங்கள்)
2. அரசினர் தோட்டம்(ராஜாஜி ஹால் இங்கே தான் இருக்கு)
3. திருவான்மியூர் பீச்
4. அண்ணா பல்கலைக்கழக வளாகம்

ரசிச்சு பாக்குற நாலு டிவி நிகழ்ச்சி
1. டிஸ்கவரி விங்ஸ்
2. சன் சப்தஸ்வரங்கள்
3. ஏசியாநெட் சரிகமபதநிஸா
4. டாம் அண்ட் ஜெரி கார்ட்டூன்

எப்ப வேணா பாக்க விரும்பும் நாலு படம்
(எல்லாமே காமெடி தான்)
1. அவ்வை சண்முகி
2. அந்தாஸ் அப்னா அப்னா(இந்தி)
3. அரிச்சந்திரா(கார்த்திக் நடிச்சது)
4. வின்னர்(வடிவேலு வராத நேரத்துல வேற வேலை பார்ப்பேன்)

விரும்பி செய்யும் நாலு செயல்கள்
1. பதிவு படிக்கறது/எழுதறது(சமீப காலமாக)
2. கேலிகிராஃபி
3. Copy writing(நிலா வச்சாங்க பாருங்க போட்டி-
ஜூலியனும் சிவாஜியும் அந்த மாதிரி சமாச்சாரம் எல்லாம்)
4. சமைக்கறது(நாமளே துன்னறதுக்கில்ல. மத்தவங்களுக்குக் குடுத்து
சந்தோஷப் படறதுக்கு. சாப்பிட்டுட்டு நல்லால்லன்னாலும் நல்லாருக்குன்னு
சொல்லுவாங்க பாருங்க...அத்த கேக்கறதுல இருக்கற போதை ஒரு புல் ஓல்ட்
மாங்க் நீட்டா அடிச்சதுக்கு சமம்)

தமிழ் சினிமாவுல புடிச்ச நாலு மண்டைங்க

1. மொட்டை
2. கமல்
3. சேரன்
4. வடிவேலு

சினிமாவுல புடிச்ச நாலு அம்மணிங்க

1. மனோரமா
2. ரேவதி
3. ஸ்மிதா பாட்டீல்
4. மீரா ஜாஸ்மின்(சண்டக்கோழி பாத்துட்டு)

புடிச்ச நாலு சாப்பிடற ஐட்டம்
1. குலாப் ஜாமூன்
2. கோழி குருமா(தேங்கா போட்டு காரம் கம்மியா...
மவுண்ட் ரோடு யாத்கார் ஓட்டல் ஸ்டைல்)
3. அம்மா வைக்கிற மீன் குழம்பு
4. சப்பாத்தியும் கீரை சாம்பாரும்(எனக்கு எனமோ இந்த
காம்பினேஷன் ரொம்ப புடிக்கும்)

படிச்ச நாலு இடம்
1. சரஸ்வதி பால விஹார், திருவல்லிக்கேணி
2. கில் ஆதர்சு மேனிலைப்பள்ளி, ராயப்பேட்டை
3. பொறியியல் கல்லூரி, கிண்டி
4. இந்திய தொழில்நுட்பக் கழகம், தில்லி

மறக்க முடியாத நாலு நிகழ்வு
1. நீ வாங்குன மார்க்குக்கு இஞ்சினீயரிங் சீட் எல்லாம் கெடக்காதுன்னு
நயினா பயம் காட்டுன நேரத்துல, தினமலர் பேப்பர்ல டோட்(DOTE)
காலேஜ் தேர்வுப் பட்டியல்ல என் நம்பரைப் பாத்த அந்த நாளு
2. அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி முதல் வருடம் நடந்த பல்சுவை நிகழ்ச்சி
(Variety Entertainment)இல் சிவில் டிபார்ட்மெண்டுக்காக ஒரு குழுவா நாங்கத் தங்க
மெடல் வாங்குன அந்த நாளு. எதோ யுனிவர்சிடி கோல்டு மெடலே வாங்குன ஒரு நெனப்பு.
அந்த போதை மூணாவது செமஸ்டர்ல ஒரு கப் வாங்குற வரை நீடிச்சுது.
3. ஐஐஎம் பெங்களூரிலிருந்து வந்த நேர்காணல் அழைப்பு. அங்கே நமக்கு ரிவெட் அடிக்கப்
பட்டாலும் "எங்கூட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனாரு"ன்னு சொல்லிக் கொள்ளக் கூடிய
ஒரு ஆனந்தம் இன்னும் இருக்கு.
4. ஐஐடியிலும் டிசிஎஸ்(TCS) நமக்கு வேலை தராம கவுத்த பிறகு, இப்ப இருக்குற
கம்பெனியில வேலை ஸ்பாட் ஆஃபராக் கெடச்ச ஒரு சந்தோசம்.

எதிர்பார்க்கும் நாலு நிகழ்வு
1. என்னிக்காச்சும் ஒரு நாளு, நாமளும் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வாரத்துல அஞ்சே
அஞ்சு நாளு மட்டும் கழுத்துல ஒரு பட்டையை மாட்டிக்கிட்டு வேலை செய்யணும்.
2. Kaipullai Callingஇல் துளியும் ஆங்கில கலப்பில்லாம தூய தமிழில் ஒரு பயனுள்ள பதிவு
போட வேண்டும் என்பது.
3. விமானத்தில் அம்ஸையும், அப்ஸையும், தம்ஸையும் ஒரு நாள் கூட்டிக் கொண்டு அழகிய ஒரு
இடத்துக்கு விடுமுறையில் செல்ல வேண்டும் என்பது.
4. இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்பது.(நேரில் பார்த்தாக்
கூட போதும்)

நான் படிக்கும் நாலு தமிழ்ப் பதிவுகள
்(நாலே நாலு அல்ல)
1. நிலவு நண்பன் - முதல் காதல். நான்
முதன் முதலில் படித்த தமிழ் பதிவு ஞானியாருடையது. அற்புதமான கவிஞர். பதிவுகளை
அவர் எழுதும் எதார்த்தமான நடை மிகவும் பிடிக்கும்.
2. சிவா - நம்மளை மாதிரியே ராஜா
ரசிகரு. ராஜாவை அவர் மூலமா இன்னும் தெரிஞ்சுக்கறேன். கலப்படம் இல்லாத அவரது
கிராமத்துக் கதைகள் ஒரு touch apart.
3. தேவ் - மதுரையும் நெல்லையும்
கூட்டணி அமைத்து கோலோச்சும் தமிழ்மணத்தில் தலைநகரின் பெருமையையும் தரணிக்கு
எடுத்துரைக்கும் தொண்டை மண்டல திருமகன். என்ன மாம்ஸூ நான் சொல்றது கரீட்டு
தானே? நல்ல கவிஞர், கலாய்ப்பாளரு.
4. இலவசக் கொத்தனார் - புதிர் மன்னன்,
பின்னூட்ட இளவரசன்(சரி தானே கொளுத்து! இப்படி சொன்னா வைத்தியருக்கு அரசர் பட்டம்
குடுத்து சமாளிச்சுடலாம் இல்ல?)

வருத்தப்படாத வாலிபர் சங்க ஆயுள் சந்தா உறுப்பினர்கள் நாலு பேரு
1. நாமக்கல் சிபி - நம்மளை மாதிரியே
ரொம்ப நல்லவரு தான் இவரும். என்ன ஒன்னு? திடீர்னு கைப்புள்ள செட்டா கட்டதுரை
செட்டான்னு சந்தேகம் வரும்படிக்காக் கேள்வியா கேட்டு மனுசனை உண்டு இல்லன்னு
ஆக்கிப்பிடுவாரு. தல பதில் தெரியாம முழிக்கிறத பாக்குறதுல என்ன தான் சந்தோசமோ?
2. தேவ் - சிபியோட சேந்தா கெட்டுப்
போயிடுவாரு. கவனமாப் பாத்துக்கோணும்.
3. கார்த்திக் ஜெயந்த் - நான் சில சமயம்
சொல்லும் அரத பழசான ஜோக்கைக் கூட கேட்டு "சிப்பு சிச்சி" வைக்கிற நல்லவரு.
4. விவசாயி - ஒலகத்துலேயே டிராக்டர்
வச்சிருக்குற ஒரே வெட்டி ஆபீசருங்க கிளப் நாங்க தான்னு பேரு எடுக்க இவரையும்
சங்கத்துல புடிச்சு போட்டாச்சு.

தொடர் ஆதரவு தரும் நால்வர்
(நால்வர் மட்டுமே அல்ல)
1. கீதா மேடம் - என்னுடைய அனைத்து விதமான
பதிவுகளுக்கும் மிகப் பெரிய ஊக்கம் இவங்க.
2. கோபி - 3டி நிபுணர். 3டி பதிவுகளுக்கு
ஊக்கம் இவரு.
3. G.ராகவன் - தமிழ் வலைப்பதிவுகள்ல ஒரு
"multi-faceted" தல.நம்மளையும் கண்டுக்கறாரு.
4. ஜனார்தனன் - எனது கல்லூரி நண்பர். தனது தற்போதைய நண்பர்களுக்கும்
கைப்புள்ளையை அறிமுகப்படுத்தி என்னை ஊக்கப் படுத்துபவர்.

சங்கிலி பதிவைத் தொடர நான் அழைக்கும் நாலு பேரு
1. நிலவு நண்பன்
2. கோபி
3. கார்த்திக் ஜெயந்த்
4. தலைவாசல் மீஜிக் டைரக்டர்

சரி! எல்லாரைப் பத்தியும் எழுதணும்னு ஆசையும் ஆர்வமும் இருக்கு ஆனா அதுக்கு நாலு-நாலுன்னு கண்டிசன் போட்டா ஒன்னும் பண்ண முடியாது. அதனால யாரையாவது மறந்துருந்தேனா மன்னிச்சுக்குங்க. இன்னொரு விசயம்! கைப்புள்ளயோட Personaவோட ஜோக்,சிரிப்பு, 3டி இந்த சமாச்சாரங்களை மட்டுமே இணைச்சு பாக்காதீங்க. என்னிக்காச்சும் ஒரு நாள் இதே பேருல பயனுள்ள விஷயமும் பதிவா வரலாம், அதுக்கும் உங்க ஏகோபித்த ஆதரவை எதிர்பார்த்து என்னுடைய பிளேடை இம்மா நேரம் தாங்கிக் கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு பேண்ட் எய்ட் கொடுத்து வாய்ப்பளித்தமைக்கு நன்றி பாராட்டி அமைகிறேன். நன்றி! வணக்கம்!!

44 comments:

G.Ragavan said...

ஐயா கைப்புள்ளயும் மாட்டிக்கிட்டாரு......சூப்பரப்பு....இன்னைக்கு நேரமாச்சு. நாளைக்கு வந்து நல்ல பெரிய கமெண்ட்டொ..இல்லை ஒன்றிற்கு மேற்பட்ட சிறிய கமெண்டுகளோ போடுறேன். :-)

G.Ragavan said...

சொல்ல மறந்துட்டேன். தலைப்பு சூப்பரப்பு.

இலவசக்கொத்தனார் said...

அப்பா கைப்பூ,

உன் பதிவைப் பாத்து என்ன நக்கல் அடிக்கலாம், என்ன கிண்டல் பண்ணலாம்ன்னு வந்தேன். ஆனா, இப்படி
'நான் படிக்கும் நாலு தமிழ்ப் பதிவுகள்' பகுதியில நம்ம பேரையும் போட்டு தொட்டுட்டியே. நல்லா இருப்பா, நல்லா இரு.
நிலா போட்டியிலே ஜெயிச்ச சந்தோஷத்தை விட இந்த பதிவைப் பாத்த சந்தோஷம்தாம்ப்பா ஜாஸ்தி.

(எப்படி படிக்கணம்ன்னு தெரியுமில்லே)

இலவசக்கொத்தனார் said...

இருந்தாலும் 'தமிழ் சினிமாவுல புடிச்ச நாலு மண்டைங்க' பகுதியில வைகைப்புயலை நாலாவதா போட்டது தப்புத்தேன்.

கைப்புள்ள said...

//நாளைக்கு வந்து நல்ல பெரிய கமெண்ட்டொ..இல்லை ஒன்றிற்கு மேற்பட்ட சிறிய கமெண்டுகளோ போடுறேன். :-) //

வாங்க ராகவன்,
உங்க கமெண்டுக(ளு)க்காக ஆர்வமா காத்துட்டிருக்கேன்.

கைப்புள்ள said...

//சொல்ல மறந்துட்டேன். தலைப்பு சூப்பரப்பு. //

ரொம்ப நன்றிங்க!

கைப்புள்ள said...

//(எப்படி படிக்கணம்ன்னு தெரியுமில்லே)//

சிவாஜி மாதிரி தானே? அப்படி தான் நான் படிச்சேன். அதே எஃபெக்டும் கெடச்சுது கொத்ஸ். நன்றிங்க!

கைப்புள்ள said...

//இருந்தாலும் 'தமிழ் சினிமாவுல புடிச்ச நாலு மண்டைங்க' பகுதியில வைகைப்புயலை நாலாவதா போட்டது தப்புத்தேன்.//

கொளுத்து! இதை எல்லாம் வரிசை கிரமமா பாக்கப் படாது. வரிசையில ஒன்னுன்னு நம்பர் இருந்தா நாலுன்னும் ஒரு நம்பர் இருக்கத் தான் செய்யும். இதையெல்லாம் பெருசு பண்ணப் படாது!

G.Ragavan said...

// என்னிக்காச்சும் ஒரு நாளு, நாமளும் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வாரத்துல அஞ்சே
அஞ்சு நாளு மட்டும் கழுத்துல ஒரு பட்டையை மாட்டிக்கிட்டு வேலை செய்யணும். //

இங்கதான் கைப்புள்ள எல்லாரும் தப்பு செய்றாங்க...அஞ்சு நாள் வேலைதான்...ஆனா அஞ்சு நாளும் வேலைல....ரொம்பத்தேவைன்னு வெச்சுக்கோங்க...ஒரு மடிமேல் (லேப்டாப்புதான்) கொடுத்து வேலைய வீட்டுக்கும் எடுத்துக்கிட்டுப் போகச் சொல்லுவாங்க...நீங்க வேற...இக்கரைக்கு அக்கரைப் பச்சதான்.

G.Ragavan said...

// 3. G.ராகவன் - தமிழ் வலைப்பதிவுகள்ல ஒரு
"multi-faceted" தல.நம்மளையும் கண்டுக்கறாரு. //

அதென்ன நன்றி கின்றின்னு....கைப்புள்ளைக்குன்னு ஒரு இது இருக்குல்ல...அதுக்குதான் வந்து பாத்து ரசிச்சிப் பின்னூட்டம் போடுறோம். திருடீ (3D) தந்த மகராசனாச்சே!

கைப்புள்ள said...

//வேலைய வீட்டுக்கும் எடுத்துக்கிட்டுப் போகச் சொல்லுவாங்க...நீங்க வேற...இக்கரைக்கு அக்கரைப் பச்சதான். //

ஹி...ஹி...அப்ப பட்டா தான் புரியும்னு சொல்லறீங்க!?

கைப்புள்ள said...

//கைப்புள்ளைக்குன்னு ஒரு இது இருக்குல்ல...//

கைப்புள்ளைக்குன்னு ஒரு இது இருக்குல்லன்னு சொல்லற அந்த இதுக்கே ஒரு நூறு நன்றி சொல்லலாம்.
:)-

Unknown said...

கைப்பு இது வரைக்கும் உம் பதிவைப் படிச்சுப் பார்த்தா எனக்கு சிப்பு சிப்பா வரும்... ஆனா இந்தப் பதிவைப் படிச்சு முடிச்சப்போ ஒரே அழுவாச்சியா வந்துருச்சு.....
உனக்கு எவ்வளவு பெரிய மனசுடா.... எங்க எல்லாரையும் ரொம்ப நல்லவங்கன்னு சொல்லிட்டே நீ....

கைப்புள்ள said...

//ஆனா இந்தப் பதிவைப் படிச்சு முடிச்சப்போ ஒரே அழுவாச்சியா வந்துருச்சு.....//

அடப்பாவிகளா!
இப்படியெல்லாம் புளுகனா தான் என்னை ஓட்டாம செண்டியா பின்னூட்டம் வருது...இல்லன்னா என்னை தாளிச்சு எடுத்துர மாட்டீங்க?
கைப்புள்ள என்ன பொழப்புடா இந்த பொய் சொல்ற பொழப்பு? இந்த பொழப்புக்கு நாந்துக்கிட்டுச் சாகலாம்!
:)-

Anonymous said...

அடடா கைப்புள்ள..

என்னம்மா எழுதி இருக்கிங்க.. ஒரு நாலு நாள் கோச்சிட்டு இந்த பக்கம் வரலைன்னா .. நாலு நாலா எழுதிடுவிங்களா.. சரி சரி.. படிச்சு நாலு பேர் நாலு பாராட்டு சொன்னாங்களா.. ரொம்ப சந்தோஷம்..

சரி என் பெயரையும் போட்டதால உங்களை மன்னிச்சு என் கோவத்தை வாபஸ் வாங்கிக்கிறேன்

தொடரட்டும் உங்கள் கலைப்பணி

அன்புடன்
கீதா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//நான் படிக்கும் நாலு தமிழ்ப் பதிவுகள்(நாலே நாலு அல்ல)
1. நிலவு நண்பன் - முதல் காதல். நான்
முதன் முதலில் படித்த தமிழ் பதிவு ஞானியாருடையது. அற்புதமான கவிஞர். பதிவுகளை
அவர் எழுதும் எதார்த்தமான நடை மிகவும் பிடிக்கும்.//

நன்றி கைப்புள்ள...ரொம்ப பாசக்காரனா இருக்காங்களப்பா..

Karthik Jayanth said...

வேலு நாயக்கரே பதில் சொல்ல முடியாத கேள்விக்கு, பதில சொல்லி .... இதயத்தில் நீங்கா எடத்த புடிச்சிடயே கூட்டாளி..அதுவும் இப்ப சங்க ஆளு வேர ..

// என்னிக்காச்சும் ஒரு நாளு, நாமளும் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வாரத்துல அஞ்சே
அஞ்சு நாளு மட்டும் கழுத்துல ஒரு பட்டையை மாட்டிக்கிட்டு வேலை செய்யணும். //

வேணாம் கூட்டாளி, நானும் இப்படி நம்பிதான் வந்தேன், ரொம்ப இம்சைய பாத்துடேன்.

இலவசக்கொத்தனார் said...

ஏன் கைப்பு, இப்பம்மாச்சும் இந்த பேருக்கு என்ன அர்த்தம்னு சொல்லலாமில்ல.

கைப்புள்ள said...

//என்னம்மா எழுதி இருக்கிங்க.. ஒரு நாலு நாள் கோச்சிட்டு இந்த பக்கம் வரலைன்னா .. நாலு நாலா எழுதிடுவிங்களா.. //

எப்படியோ கோவத்தை மறந்து திரும்ப வந்துட்டீங்க...ரொம்ப சந்தோஷம்!

கைப்புள்ள said...

//நன்றி கைப்புள்ள...ரொம்ப பாசக்காரனா இருக்காங்களப்பா.. //

இப்பிடியெல்லாம் சொல்லி டபாய்க்க முடியாது. உங்களோட சங்கிலிபதிவுக்காகக் காத்துட்டிருக்கேன்.

கைப்புள்ள said...

//வேணாம் கூட்டாளி, நானும் இப்படி நம்பிதான் வந்தேன், ரொம்ப இம்சைய பாத்துடேன்.//

வயித்துல புளியைக் கரைக்கிறீங்களே கூட்டாளி?

- யெஸ்.பாலபாரதி said...

அய்யா... கைப்புள்ள... வணக்கமுங்க... எனக்கும் சங்கிலித்தொடர் போடச் சொல்லி கேட்டதுக்கு நன்றீங்கோ... ஆனா அது சரி பட்டு வராதுன்னு தோணுற நாள... உங்க அன்பு கட்டளையை கேட்காம போறதுக்கு மன்னிச்சுக்கோங்க சாமீயோவ்வ்வ்வ்வ்வ்வ்

தகடூர் கோபி(Gopi) said...

ஆகா,ஆகா!

நாலு நாள் வலைப்பக்கம் வராம இருந்தா என்னென்னவோ செஞ்சீடுறாங்கய்யா..

ஏப்பு கைப்புள்ள,

ஓரமா நாலுபேரோட வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்த என்னிய நால்ரோடுக்கு நடுவுல இழுத்து விட்டியளே

:-)

கைப்புள்ள said...

//ஆனா அது சரி பட்டு வராதுன்னு தோணுற நாள... உங்க அன்பு கட்டளையை கேட்காம போறதுக்கு மன்னிச்சுக்கோங்க சாமீயோவ்வ்வ்வ்வ்வ்வ்//

உங்களோட பர்சனல் விருப்பம்னா பரவாயில்லீங்க...ஆனா நான் எதாச்சும் தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சுக்குங்க!

கைப்புள்ள said...

//ஏன் கைப்பு, இப்பம்மாச்சும் இந்த பேருக்கு என்ன அர்த்தம்னு சொல்லலாமில்ல. //

விளம்பிநாகனார் என்ற புலவர் எழுதிய பதினெண்கீழ்க்கண்க்கு நூல் நான்மணிக்கடிகை. இதுல இருக்குற ஒவ்வொரு பாட்டுலயும் நாலு மணியான கருத்து இருக்குறதால இந்த பேரு. மேற்கொண்டு விசயம் தெரிஞ்சவங்க சொல்லுங்கய்யா?

கைப்புள்ள said...

//ஓரமா நாலுபேரோட வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்த என்னிய நால்ரோடுக்கு நடுவுல இழுத்து விட்டியளே//

வாங்க கோபி மாமா(மெட்டி ஒலி நியாபகம்...ஹி...ஹி)...நீங்களும் ஜோதியில ஐக்கியம் ஆவுங்க!
:)-

- யெஸ்.பாலபாரதி said...

//உங்களோட பர்சனல் விருப்பம்னா பரவாயில்லீங்க...ஆனா நான் எதாச்சும் தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சுக்குங்க!//
அப்படி சொல்லிகிற மாதிரி ஏதும் இல்லைங்க... நம்ம வாழ்க்கையில!
ஏதவது சொல்லப்போய்... எல்லோரும் உச் கொட்டுற மாதிரி ஆகிப்பூடுன்னு கவலையால தான் மறுத்துடேன். என் வாழ்க்கையில் மகிழ்வான பக்கங்களை விட.. சோகமேற்படுத்தும் பக்கங்களே அதிகம். எஞ்சோகம் என்னோடு போகடும்ண்ணே..

கைப்புள்ள said...

//என் வாழ்க்கையில் மகிழ்வான பக்கங்களை விட.. சோகமேற்படுத்தும் பக்கங்களே அதிகம்.//

எனக்கு ஒரு சினிமா பாட்டு நெனப்பு வருது.
"சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே!"
நான் ஒன்னும் பெரிய தத்துவவாதியோ இல்ல மேதாவியோனு காட்டிக்கறதுக்காக இதை எழுதலை. சோகமானதை சொல்ல விரும்பலன்னா சந்தோசமான விஷயத்தை மட்டும் சொல்லுங்க. சந்தோசமே பார்த்ததில்லைன்னு எல்லாம் புருடா விடப்படாது. நா நம்பமாட்டேன்.

தகடூர் கோபி(Gopi) said...

//வாங்க கோபி மாமா(மெட்டி ஒலி நியாபகம்...ஹி...ஹி)...நீங்களும் ஜோதியில ஐக்கியம் ஆவுங்க!//

ஆங்.. போட்டாச்சி போட்டாச்சி ...

:-)

Karthik Jayanth said...

கூட்டாளி நம்ம நாலு ட்ரெய்லர பாரு

குமரன் (Kumaran) said...

வாக்களித்து ரோஜா என்ற மறுபெயரும் கொண்ட 'பாண்டி நாட்டு தங்கம்ஸ்' அணியினரை வெற்றி பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.

நாமக்கல் சிபி said...

வருத்தப்படாத வாலிபர் சங்க (முதல்)ஆயுள் சந்தா உறுப்பினராக என்னை அங்கீகரித்த கைப்புள்ளக்கு என் நன்றி.

//திடீர்னு கைப்புள்ள செட்டா கட்டதுரை
செட்டான்னு சந்தேகம் வரும்படிக்காக் கேள்வியா கேட்டு மனுசனை உண்டு இல்லன்னு
ஆக்கிப்பிடுவாரு. தல பதில் தெரியாம முழிக்கிறத பாக்குறதுல என்ன தான் சந்தோசமோ?//

என்ன தலை, இப்படிச் சொல்லிப்புட்டீரு? தலைவர் சொல்படி நடக்கும் தொண்டன் நான். உனது புகழை ஊரறியச் செய்வதுதானே என் கடன். நீங்க தீக்குளிக்கறேன்னு சொன்னா உடனடியா கையில மண்ணெணையோடவும் தீப்பெட்டியோடவும் நிக்கறது யாரு? மன்னன் குறிப்பறிந்து நடக்கும் மந்திரி நான்.


(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

Karthik Jayanth said...

கூட்டாளி போட்டாச்சி போட்டாச்சி ..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//இப்பிடியெல்லாம் சொல்லி டபாய்க்க முடியாது. உங்களோட சங்கிலிபதிவுக்காகக் காத்துட்டிருக்கேன். //


கைப்புள்ளையின் விருப்பத்திற்கிணங்க..


இதோ என்னுடைய சங்கிலிப் பதிவு...


http://nilavunanban.blogspot.com/2006/03/blog-post_05.html

கைப்புள்ள said...

//நீங்க தீக்குளிக்கறேன்னு சொன்னா உடனடியா கையில மண்ணெணையோடவும் தீப்பெட்டியோடவும் நிக்கறது யாரு? மன்னன் குறிப்பறிந்து நடக்கும் மந்திரி நான்.//

யப்பா! நல்லவனே! மண்ணெண்ணையும் தீப்பெட்டியும் கொண்டாந்து கைல வச்சுக்கிட்டு நின்னா ஊத்தி பத்த வக்கிறது யாரு? அந்த நல்ல காரியத்தையும் செஞ்சு, எள்ளுன்னா எண்ணையா நிக்கிற ஆளுன்னு வரலாற்றுல பேரும் வாங்கிக்கய்யா! ஒவ்வொரு தலைவருக்கும் உன்னை மாதிரி நாலு தொண்டன் இருந்தா போதும்...வேணா! வேணா! நீ ஒருத்தனே போதும்...எங்கேயோ போயிடலாம்!

கைப்புள்ள said...

கார்த்திக், ஞானியார்
உங்க ரெண்டு பேரு பதிவையும் பாத்து பின்னூட்டமும் போட்டாச்சு.

குமரன் (Kumaran) said...

//1. என்னிக்காச்சும் ஒரு நாளு, நாமளும் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வாரத்துல அஞ்சே
அஞ்சு நாளு மட்டும் கழுத்துல ஒரு பட்டையை மாட்டிக்கிட்டு வேலை செய்யணும்.
//

வாங்க. வாங்க. சீக்கிரம் வாங்க. உங்களை எல்லாரும் தேவையில்லாம பயமுறுத்துறாங்க. நான் ஜாலியாத் தான் இருக்கேன். வந்து சீக்கிரம் ஜோதியில ஐக்கியம் ஆயிடுங்க. :-)

//மதுரையும் நெல்லையும்
கூட்டணி அமைத்து கோலோச்சும் தமிழ்மணத்தில் //

உண்மையாவா? ஒரு காலத்துல மதுரைக்காரங்க யாராவது இருக்கீங்களான்னு தருமி சார் வலைவீசித் தேடுனார்ன்னு கேள்விப்பட்டிருக்கேன். :-)

நான்மணிக்கடிகைன்னு நல்ல பேரா வச்சிருக்கீங்க. பேரைக் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா அந்த நூலைப் பத்தின விவரமெல்லாம் நீங்க சொல்லித் தான் தெரியும். :-)

இலவசக்கொத்தனார் said...

யப்பா ராசா,

குமரனெல்லாம் டாமேஜர். அதுனால ஜாலியா இருக்காரு. அவரு லெவலில சேந்தக்கா பரவாயில்லை. வேலைக்காரனா சேராதீங்கப்பூ.

அட சட் டாமேஜர்ன்னா சொன்னேன். அதை மேனேஜர்ன்னு படிச்சுக்கோப்பா.

குமரன் (Kumaran) said...

கொத்ஸு. நான் இப்ப டாமேஜரா இருந்தாலும் சேர்றப்ப வேலக்காரனாத் தானே சேர்ந்தேன். :-)

கைப்புள்ள said...

//நான்மணிக்கடிகைன்னு நல்ல பேரா வச்சிருக்கீங்க. பேரைக் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா அந்த நூலைப் பத்தின விவரமெல்லாம் நீங்க சொல்லித் தான் தெரியும். :-)//

உண்மையைச் சொல்லனும்னா எனக்கும் அவ்வளவு தான் தெரியும். ஸ்கூல்ல படிச்ச நியாபகம்...ஆனா அதுலேருந்து ஒரு பாடல் கூட நியாபகம் இல்லை.
:)-

கைப்புள்ள said...

//குமரனெல்லாம் டாமேஜர். அதுனால ஜாலியா இருக்காரு. அவரு லெவலில சேந்தக்கா பரவாயில்லை. வேலைக்காரனா சேராதீங்கப்பூ.//

என்னங்க டாமேஜர் ஆவறது அவ்வளவு சுலபமா என்ன? இப்ப நம்ம லெவலுக்கு நான் வெறும் கூலிக்காரன் தான். உழைப்பாளி படத்துல சொல்றது மாதிரி நாம, படிப்படியா ஒழச்சு முன்னேறி சொந்தமா ஒரு சாஃப்ட்வேர் கம்பேனி இனிமே தான் ஆரம்பிக்கணும்(SAPக்குப் போட்டியா!). பழகுன தோசத்துக்கு உங்களை நம்ம கம்பேனியில ஆடிட்டரா வச்சுக்குறேன். இத ஒரு open offer. கம்பேனி தொடங்குனதும் எப்ப வேணாலும் வந்து கைப்புள்ள பேரைச் சொல்லி சேந்துக்கிடுங்க.
:)-

கைப்புள்ள said...

//கொத்ஸு. நான் இப்ப டாமேஜரா இருந்தாலும் சேர்றப்ப வேலக்காரனாத் தானே சேர்ந்தேன். :-)//

வேலைக்காரனா எத்தனை டாமேஜராக் கதறி அழ வச்சீங்க? இப்ப டாமேஜரா எப்படி போவுது வாழ்க்கை? உங்க கீழே வேலை செய்ற புள்ளங்கல்லாம் ஒழுங்கா வேலை செய்யுதுங்களா?
:)-

சந்தனமுல்லை said...

சுவாரசியமான பதிவு! தலைப்பும் அருமை! செம க்ரியேட்டிவிட்டி!

//1. என்னிக்காச்சும் ஒரு நாளு, நாமளும் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வாரத்துல அஞ்சே
அஞ்சு நாளு மட்டும் கழுத்துல ஒரு பட்டையை மாட்டிக்கிட்டு வேலை செய்யணும்//

அப்போ வீக் எண்ட் வேலை செய்யச் சொன்னா வர மாட்டீங்களா?!! பின்னூட்டம் போட்ட பல மக்கள்ஸ்
இதை கண்டு(டி)க்கலை போல இருக்கே!! :-))

கைப்புள்ள said...

//சுவாரசியமான பதிவு! தலைப்பும் அருமை! செம க்ரியேட்டிவிட்டி!//

வாங்க முல்லை. உங்க புண்ணியத்துல மூனு வருஷத்துக்கப்புறம் இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் கெடைச்சிருக்கு. மிக்க நன்றி :)

//1. என்னிக்காச்சும் ஒரு நாளு, நாமளும் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வாரத்துல அஞ்சே
அஞ்சு நாளு மட்டும் கழுத்துல ஒரு பட்டையை மாட்டிக்கிட்டு வேலை செய்யணும்//

அப்போ வீக் எண்ட் வேலை செய்யச் சொன்னா வர மாட்டீங்களா?!! பின்னூட்டம் போட்ட பல மக்கள்ஸ்
இதை கண்டு(டி)க்கலை போல இருக்கே!! :-))
//

ஹ்ம்ம்ம்...என்ன இப்படி கேட்டுப் புட்டீங்க? அந்த சோகக் கதையைக் கேட்டா உங்களுக்கே கண்ணு கலங்கிடும் manufacturing கம்பெனில வேலை செய்யறப்போ சனிக்கிழமையும் வேலை நாள் தான். சில சமயம்(சொல்லப் போனா பல சமயம்) ஞாயித்துக் கெழமையும் ஆஃபிசுக்குப் போயிருக்கேன்.

கழுத்துல பட்டை மாட்டிக்கிட்டு வேலை செய்யற கம்பெனியில சேர்ந்ததுக்கப்புறம் ஒரு மூனு மாசம் ஏழு நாளும் வேலை நாள் தான். நம்பலைன்னா வேணா இதை படிச்சிப் பாருங்க.

http://kaipullai.blogspot.com/2007/11/blog-post_27.html