Monday, December 10, 2007

எதப்'பூ' அனுப்பலாம்?

கன்ஃபீசன்ஸ்...மனுஷனா பொறந்தா ஒரே கன்ஃபீசன்ஸ் தான்யா. ஒரு கலைஞனுக்கு/ஒரு படைப்பாளிகளுக்கு அவனுடைய படைப்புகள் எல்லாம் கொழந்தைங்க மாதிரின்னு சொல்லுவாய்ங்க. அதே மாதிரி நம்ம படங்கள் எல்லாம் நமக்கு கொழந்தைங்க மாதிரி. (யாரும் இந்த மாதிரி எல்லாம் சொல்ல மாட்டீங்க...அதனால நானே சொல்லிக்கிறேன்...ஹி...ஹி...). வழக்கம் போல ஒரே கன்ஃபீஷன்ஸ்..எந்த கொழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பலாம்னு...

கொழந்தைங்கன்னா பெத்தவங்க பேரைக் காப்பாத்தணுமா இல்லியா? சொல்லுங்க? இது வரைக்கும் ஸ்கூலுக்கு ஒரு ஏழேட்டு கொழந்தைங்களை அனுப்பிருக்கேன். பேரை வாங்கிட்டு வாங்கடான்னா வாத்தியாரு கிட்ட மண்டைல கொட்டு வாங்கிட்டு ஃபெயிலாகி நிக்கிதுங்க ஒன்னொன்னும். இந்த தடவையாவது அட்லீஸ்ட் பார்டர் பாஸ் வாங்கற கொழந்தையா பாத்து அனுப்பனும்னு ஆசை. இதுல எதப்'பூ' அனுப்பலாம்...பாத்துச் சீக்கிரம் சொல்லுங்க.

பிற்தயாரிப்பு செய்யப்பட்ட கீழே உள்ள இருபடங்களும் (படம் 1 மற்றும் 5)புகைப்படப் போட்டிக்கானவை. தேர்ந்தெடுக்க உதவியாகக் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி...நன்றி...நன்றி!! கொயந்தை பார்டர் மார்க்ல 5வதோ 6வதாவோ வந்தாக்கா அங்கிளுங்க கிட்டயும் ஆண்ட்டி கிட்டயும் ஆசிர்வாதம் வாங்க அனுப்பி வக்கிறேன் :)
1. சங்கு புஷ்பம்

2. கீழே இருக்கற படங்கள் 2,3,4,5,6 மட்டும் தான் போட்டிக்கின்னு தனியா எடுத்தது...மத்ததெல்லாம் பழைய சரக்கு தான்.

3. எடுத்த இடம் - லால் பாக்? கப்பன் பார்க்? மலர் கண்காட்சி? இல்லீங்கோ? பெங்களூர் ஜி.பி.ஓ(General Post Office). போஸ்ட் ஆப்பீஸ்ல பூவைப் படம் புடிக்கிற அளவுக்கு முத்திப் போச்சு.

4.

5.

6.

7. வெள்ளை செம்பருத்தி

8. பட்டிப்பூ - வேற பேரு இருந்தா சொல்லுங்கய்யா

9. பால்சம்

10. கேக்டஸ் மலர்

11. பேரெல்லாம் கேக்கப்பிடாது

12. கல் வாழை

13. சாமந்தி சூழ்ந்த தடாகத்தில் ரோஜா

32 comments:

குட்டீஸ் கார்னர் said...

ஒன்லி 13 தானா, நாங்க 20 போட்டுஇருக்கோம்ல அங்கிள்...

குசும்பன் said...

ஒரு கட்டம் அதுக்குள்ள ஒரு சின்ன கட்டம் அதுக்குள்ள ஒரு சின்ன கட்டம் அதுக்குள்ள ஒரு சிகப்பு கலர்ல பெருக்கல் குறி எல்லாம் ஒரே மாதிரி இப்பதால் எந்த பூ கொடுப்பது என்று எனக்கும் கன்ஃபீசன்ஸ்:)))))))

Anonymous said...

புள்ளெங்கெல்லாம் சூப்பரா இருக்காங்க.

அதென்ன பட்டிப்பூ? நாங்க சுடுகாட்டுப்பூன்னு சொல்வோம்.

கைப்புள்ள said...

//ஒன்லி 13 தானா, நாங்க 20 போட்டுஇருக்கோம்ல அங்கிள்...//

முடியலப்பா...வயசான காலத்துல இதுவே ரொம்ப ஜாஸ்தி. படம் எல்லாம் எப்படி? பரவால்லியா?

கைப்புள்ள said...

//ஒரு கட்டம் அதுக்குள்ள ஒரு சின்ன கட்டம் அதுக்குள்ள ஒரு சின்ன கட்டம் அதுக்குள்ள ஒரு சிகப்பு கலர்ல பெருக்கல் குறி எல்லாம் ஒரே மாதிரி இப்பதால் எந்த பூ கொடுப்பது என்று எனக்கும் கன்ஃபீசன்ஸ்:)))))))//

என்னது படம் தெரியலீங்களா? அட உண்மையில தெரியலீங்களா? ஐயகோ? என்ன ஒரு கன்ஃபீசன்ஸ்? இருங்க வேற யாருக்காச்சும் நம்ம கொழந்தைங்க தெரியறாங்களான்னு கேட்டுச் சொல்றேன்.

கைப்புள்ள said...

//புள்ளெங்கெல்லாம் சூப்பரா இருக்காங்க.

அதென்ன பட்டிப்பூ? நாங்க சுடுகாட்டுப்பூன்னு சொல்வோம்.//

அனானி ஐயா!
உங்களுக்கு எங்க புள்ளைங்க தெரிஞ்சிட்டாங்களா? அப்போ காணாம போனவர்கள் பற்றிய அறிவிப்புல குடுக்க வேணாமில்ல?

சுடுகாட்டுப்பூ - புது பேரைத் தெரியப்படுத்துனதுக்கு நன்றிங்கங்கோ.
:)

அனுசுயா said...

4 & 13 சூப்பரா இருக்குங்க. அத கொஞ்சம் மெறுகேத்தி அனுப்புனா சிறப்பா இருக்கும்.

Baby Pavan said...

முடியலப்பா...வயசான காலத்துல இதுவே ரொம்ப ஜாஸ்தி. படம் எல்லாம் எப்படி? பரவால்லியா?

எங்க அளவுக்கு இல்ல இருந்தாலும் ஒத்துக்கற்றோம் அங்கிளுக்கு போட்டா படம் புடிக்க தெரியும்னு

கைப்புள்ள said...

வாங்க அனு,
வருகைக்கும் ஐடியாவுக்கும் நன்றிங்க. 4 நம்ம ஷார்ட் லிஸ்டுலயும் இருக்குது.
:)

இராம்/Raam said...

தல,

4வது படத்திலே கொஞ்சம் கட் ஆனமாதிரி இருக்கே?

5 ம் வெள்ளை செம்பருத்தியும் ஓகே'னு நினைக்கிறேன்... :)

Geetha Sambasivam said...

வண்டைப் பூவிலே விட்டு ஏன் இப்படிக் கொடுமைப் படுத்தி இருக்கீங்க? மேனகா காந்தி கிட்டே இருந்து உங்களுக்கு நோட்டீஸ் வருது!

என் சாய்ஸ், அந்த வண்டுப் பூ தான். இ.கொ.வும் நீங்களும் பேசி வச்சுக்கிட்டீங்களா? அது சரி, இது நீங்களே சுட்ட பூவா? இல்லை, கூகிளில் சுட்ட பூவா? அது தெரியணுமே? :P

Geetha Sambasivam said...

கல்யாணம் ஆயிடுச்சுங்கறதாலே "ஒன்லி போட்டி"னு ஆண்டி சொல்லிட்டாங்க போலிருக்கு! :)))))))))

துளசி கோபால் said...

கைப்புள்ளெ,

இதென்னய்யா அநியாயம்?

//புள்ளெங்கெல்லாம் சூப்பரா இருக்காங்க.

அதென்ன பட்டிப்பூ? நாங்க சுடுகாட்டுப்பூன்னு சொல்வோம்//

இதைச் சொன்னது நாந்தான்.

என்னை இப்படி அ(நாதை)னானியா
ஆக்கிட்டீரே(-:

செல்லி said...

ரொம்ப அழகாவே எல்லப் பூக்களும் இருக்கு.
அதென்ன //எதப்'பூ' அனுப்பலாம்?//
வா(ழை) பூ அனுப்பலாம் என்று இதற்குப் பதில் போடலாமா?:-)))

Baby Pavan said...

நாங்க தான் ஏற்கனவே காலிப்பிளவர் போட்டுடோம்ல...

Sathiya said...

என் சாய்ஸ் 1 & 5. முதல் படம் சங்கு புஷ்பத்துல இருக்க Sharpness, மத்ததுல இல்ல. So முதல் சாய்ஸ் சங்கு புஷ்பம் தான்.

இலவசக்கொத்தனார் said...

3, 5, 12 - இதில் எதாவது ரெண்டு. ஆனா எல்லாத்துலேயும் டிஸ்ட்ராக்ஷன் அதிகம் இருக்கு. கொஞ்சம் நகாசு வேலை செஞ்சாத் தேவலாம்.

நாகை சிவா said...

//ஒரு கட்டம் அதுக்குள்ள ஒரு சின்ன கட்டம் அதுக்குள்ள ஒரு சின்ன கட்டம் அதுக்குள்ள ஒரு சிகப்பு கலர்ல பெருக்கல் குறி எல்லாம் ஒரே மாதிரி இப்பதால் எந்த பூ கொடுப்பது என்று எனக்கும் கன்ஃபீசன்ஸ்:)))))))//

இதை வழிமொழிய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது யார் குற்றம்.

விதியின் குற்றமா? இல்லை
விதியின் பெயரை சொல்லி கைப்புள்ளை செய்ய குற்றமா?

ப்ளாக்கரின் குற்றமா? இல்லை
ப்ரவுசரின் குற்றமா?

I.E யின் குற்றம் என்று
நெருப்பு நரியில் போய் பார்த்தும் தெரியவில்லையே...

குற்றம் நடந்தது என்ன?

கைப்புள்ள said...

//எங்க அளவுக்கு இல்ல இருந்தாலும் ஒத்துக்கற்றோம் அங்கிளுக்கு போட்டா படம் புடிக்க தெரியும்னு//

ரொம்ப டேங்கீஸ்பா. கண்டிப்பா உங்களை மாதிரி காலிஃப்ளவர் படம் எல்லாம் என்னால போட முடியாது. எங்க தான் போய் புடிச்சீங்களோ?
:)

SurveySan said...

எல்லாமே, சரீயா க்ராப் பண்ணாத மாதிரி இருக்கே?

செம்பருத்தி, க்ராப் பண்ணி, டச்-அப் பண்ணா சிறப்பா வரும்னு தோணுது. ஏங்கிள் கொஞ்சம் வேற மாதிரி இருந்தா இன்னும் தூக்கலா வந்திருக்கும்.

மனசுல பட்டத சொல்லிட்டேன். அம்புடுதேன் :)

Marutham said...

2 padangalum arumai :)

Mudhal padam arumayana colours...

Vaazhthukkal!

~Marutham

ராஜ நடராஜன் said...

முதல் படத்துக்கு எனது ஓட்டு.

Iyappan Krishnan said...

mothal rendu padam vittu maththathu theriyalanna nambanum. seekiram sari pannungannacchi

Iyappan Krishnan said...

//குசும்பன் said...

ஒரு கட்டம் அதுக்குள்ள ஒரு சின்ன கட்டம் அதுக்குள்ள ஒரு சின்ன கட்டம் அதுக்குள்ள ஒரு சிகப்பு கலர்ல பெருக்கல் குறி எல்லாம் ஒரே மாதிரி இப்பதால் எந்த பூ கொடுப்பது என்று எனக்கும் கன்ஃபீசன்ஸ்:)))))))////


repeate solla vachchitteengalE

Geetha Sambasivam said...

ஒரு கட்டம் அதுக்குள்ள ஒரு சின்ன கட்டம் அதுக்குள்ள ஒரு சின்ன கட்டம் அதுக்குள்ள ஒரு சிகப்பு கலர்ல பெருக்கல் குறி எல்லாம் ஒரே மாதிரி இப்பதால் எந்த பூ கொடுப்பது என்று எனக்கும் கன்ஃபீசன்ஸ்:)))))))

இன்னைக்கு இப்படித்தான் இருக்கு, ரிப்பீஈஈஈஈட்டேஏஏஏ

Anonymous said...

//ஒரு கட்டம் அதுக்குள்ள ஒரு சின்ன கட்டம் அதுக்குள்ள ஒரு சின்ன கட்டம் அதுக்குள்ள ஒரு சிகப்பு கலர்ல பெருக்கல் குறி எல்லாம் ஒரே மாதிரி இப்பதால் எந்த பூ கொடுப்பது என்று எனக்கும் கன்ஃபீசன்ஸ்:)))))))//

இதை வழிமொழிய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது யார் குற்றம்.

விதியின் குற்றமா? இல்லை
விதியின் பெயரை சொல்லி கைப்புள்ளை செய்ய குற்றமா?

ப்ளாக்கரின் குற்றமா? இல்லை
ப்ரவுசரின் குற்றமா?

I.E யின் குற்றம் என்று
நெருப்பு நரியில் போய் பார்த்தும் தெரியவில்லையே...

குற்றம் நடந்தது என்ன?

//

ரிப்பிட்டே .......

-அரசு

ambi said...

தல, முதல் ரெண்டு படம் தான் தெரியுது எனக்கு இங்க ஆபிஸ்ல. வீட்ல போய், தங்கமணி இல்லாத நேரமா பாக்கறேன். :)

இந்த பூ வைத்தாய்! பூ வைத்தாய்! வரிகளை உங்கள பாத்து தான் பூமிகா அக்கா பாடினாங்களா? :p

Anonymous said...

உனக்காக 38 கேள்விகள் காத்துகிட்டு இருக்கு. http://thirumurugan.blogspot.com

Anonymous said...

Sorry.. http://thirumurugan.blogspot.com/2007/12/38-questions-and-answers.html

dubukudisciple said...

ஒரு கட்டம் அதுக்குள்ள ஒரு சின்ன கட்டம் அதுக்குள்ள ஒரு சின்ன கட்டம் அதுக்குள்ள ஒரு சிகப்பு கலர்ல பெருக்கல் குறி எல்லாம் ஒரே மாதிரி இப்பதால் எந்த பூ கொடுப்பது என்று எனக்கும் கன்ஃபீசன்ஸ்///
vazhimozhiya padugirathu

கைப்புள்ள said...

நண்பர்களே! மன்னிச்சுக்கங்க. ஆணி அதிகம் இருந்ததால ப்ளாக் பக்கம் வரமுடியலை. மதிச்சு கமெண்ட் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி.

படம் தெரியலைன்னு நெறைய பேரு சொன்னதால, இமேஜோட அளவை 640x480 பிக்செலுக்கு மாத்தி மறுபடியும் ஏத்திருக்கேன். இப்ப எப்படியிருக்குன்னு பாத்து சொல்லுங்க. நன்றி.

சேதுக்கரசி said...

நல்லா இருக்கு கைப்ஸ்!