Monday, December 24, 2007

'தலை'நகரம் - 4 (வாழ்த்துகள்)

தபால் தலைகள் மூலமா பல விஷயங்களைத் தெரிஞ்சிக்க முடியும். அவை அங்குல அளவுள்ள அகராதிகள் என்பதும் உண்மை தான். ஆனால் கண்டதும் காண்பவர்க்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணும் ஒரு வேலையையும் தபால் தலைகள் செய்கின்றன. அவை வாழ்த்து தெரிவிப்பது. அஞ்சல் உறையில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு சிறிய வண்ணமிகு காகிதத்தில் அழகிய படங்களையும் நல்வாழ்த்துச் செய்தியையும் கண்டால் யாருக்குத் தான் மனதில் மகிழ்ச்சி பிறக்காது? அவ்வாறு வாழ்த்து தெரிவிப்பதற்காக பல நாட்டுத் தபால்துறைகளாலும் வெளியிடப்பட்ட தபால் தலைகளை இப்பதிவில் காண்லாம்.

சிறு வயதில் 'Season's Greetings' என்ற வாழ்த்தைக் காணும் போதெல்லாம் குழப்பம் ஏற்படும். எந்த பண்டிகையினை ஒட்டி வாழ்த்துவதற்காக இப்படி வாழ்த்துகிறார்கள் என்று? ஆனால் டிசம்பர் கடைசியிலும், புத்தாண்டு துவக்கத்திலும் வரும் அனைத்து திருநாட்களுக்கும் ஒட்டுமொத்தமாக வாழ்த்து தெரிவிப்பதற்காகப் பயன்படுத்தப் பெறும் சொற்றொடர் தான் 'Season's Greetings'. அமெரிக்கா வெளியிட்டுள்ள வாழ்த்து தபால்தலை கீழே.


கிறிஸ்துமஸ் வரும் டிசம்பர் மாதத்தில் தான் யூதர்களின் எட்டு நாள் பண்டிகையான ஹனுக்கா(Hanukkah) கொண்டாடப்படுகிறது. வருடத்திற்கு வருடம் இந்த எட்டு நாட்களின் தேதிகள் மட்டும் மாறுபடுகிறது. நவம்பர் கடைசியிலும் டிசம்பர் துவக்கத்திலோ இவ்வெட்டு நாட்கள் அமைகின்றது. டென்மார்க் நாட்டுத் தபால் தலையைக் கீழே காணுங்கள். டேவிட்டின் நட்சத்திரத்தை(Star of David) ஒரு சிறுவன் தன் வீட்டு வாசலில் தொங்க விடுகிறான். பனிமழையையும் மகிழ்ச்சியான சிறுவனையும் பார்க்கறதற்கு நல்லா இருக்குதில்ல?


கீழே இருப்பது கணடா நாட்டுத் தபால் தலை. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நடக்கும் சாண்டாக்ளாஸின் ஊர்வலத்தைச் சித்தரிக்கும் வண்ணம் இத்தபால் தலை அமைந்திருக்கிறது. அத்துடன் ப்ரெஞ்சு மொழியில் கிறிஸ்துமஸ் திருநாளை 'நோயல்'(Noel) என்று அழைப்பார்கள் என்றும் தெரிந்து கொண்டேன். அத்துடன் கிறிஸ்துமஸ் பரிசு கொண்டு வரும் தாத்தாவான சாண்டா க்ளாஸையும் வெவ்வேறு நாட்டில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். உதாரணமாக
ஃப்ரான்சு நாட்டில் 'Le Père Noël ' அல்லது க்றிஸ்துமஸ் தந்தை
ஸ்பெயினில் 'Papa Noël'
துருக்கியில் 'Noël Baba'
ஸ்விட்சர்லாந்தில் 'Christkind'
முழு பட்டியலும் வேண்டும் என்றால் இங்குச் சுட்டுங்கள்.


க்றிஸ்துமஸ் பண்டிகையையும் ஏசு க்றிஸ்துவின் அவதரிப்பையும் சித்தரிக்கும் அழகிய தபால்தலைகளை ராயல் மெயில் வெளியிட்டுள்ளது.

க்றிஸ்துமஸ் மரத்துடன் விக்டோரியா காலத்து உடைகள்(Victorian Dress) அணிந்து குதூகலிக்கும் குடும்பத்தினர்.


பிறை நிலவு வடிவில் சாண்டா கிளாஸ். அவருடன் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டிருக்கும் குழந்தைகள்.


குழந்தை ஏசுவிற்கு மஜாய் மன்னர்களின் பரிசு(Gifts of Magi).


நட்பு புன்னகை பூக்கும் சாண்டா க்ளாஸ்.


கிழக்கு திசையில் இருந்து ஏசுவைக் காண வந்த மஜாய் மன்னர்கள்(Magi or 'Three Wise Men from the East') ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றி ஏசுவை வந்தடைந்தார்களாம்.

'Lo, the star which they saw in the east'

குழந்தை ஏசுவைச் சித்தரிக்கும் இன்னொரு படம்.


புனித மரியாளும் பரிசுத்த ஆவியும்.

'Blessed is thou amongst women'

புனித மரியாளும் குழந்தை ஏசுவும் - ஹங்கேரி நாட்டுத் தபால் தலை. மக்யார்(Magyar) என்பது அவர்களுடைய மொழியில் அந்நாட்டின் பெயர். அவர்களுடைய மொழியின் பெயரும் மக்யார் தான்.


ஜமைக்கா நாட்டின் க்றிஸ்துமஸ் தபால் தலை.


1993 ஆம் இலங்கையினால் வெளியிடப்பட்ட க்றிஸ்துமஸ் தபால் தலை. க்றிஸ்துமஸ் திருநாளை 'நத்தார்' என்றும் அழைக்கிறார்கள் என்று இத்தபால் தலையைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். ஒரு வேளை இலங்கையில் மட்டும் நத்தார் என்று அழைக்கிறார்களோ என கூகிளில் தேடியதில் 2006இல் எழுதப்பட்ட பாஸ்டன் பாலாவின் பதிவும் மலைநாடான் ஐயாவின் பதிவும் சிக்கியது. இன்று காலை பதிவர் மாயாவும் 'நத்தார்' வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். எல்லாருக்கும் தெரிந்த சொல்லான இது எனக்கு மட்டும் தான் பரிச்சயம் இல்லாது போய் விட்டது போலிருக்கு. இதிலிருந்து என்ன தெரியுதுன்னா 'கற்றது கைம்மண்ணளவு கல்லாதது ஸ்டாம்ப் அளவு".

சரி இத்தபால் தலையில் ஒரு சிறப்பு உள்ளது. அது என்னவென்று கண்டுபிடிக்க முடிந்தவர்கள் கண்டுபிடித்துச் சொல்லுங்கள். அடுத்த பதிவு இதனைப் பற்றியது தான்.

க்றிஸ்துமஸ் திருநாளுக்கு மட்டுமின்றி புத்தாண்டுக்கும் வாழ்த்து தெரிவிக்க பலநாட்டு தபால்துறைகளும் தபால்தலைகளை வெளியிடுகின்றன. 2008 ஆம் ஆண்டை வரவேற்பதற்காக இந்திய தபால்துறை 15 டிசம்பர் 2007 அன்று வெளியிட்டுள்ள ஐந்து அழகிய தபால் தலைகள் கீழே.






நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய க்றிஸ்துமஸ் திருநாள்(நத்தார் தினம்) வாழ்த்துகளையும் புத்தாண்டு நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

11 comments:

Thiru Murugan said...

ரொம்ப அபூர்வமான தொகுப்புகள் தான். எனக்கு 'சீசன்ஸ் க்ரீடீங்க்ஸ்" பத்தி இப்படி ஒரு அனுமானம் இருந்துச்சு - அதாவது, பல சமயம் நம்ம தபால் எல்லாம் தாமதமா வர்றதாலதான், பொத்தாம் பொதுவா இப்படி எழுதறாங்கன்னு.

உன்னோட கேள்விக்கான விடை, ஒருவேளை இயேசுநாதர் அவர் அப்பா மடியில் இருப்பது முதல் முறையோ? நான் இதுக்கு முன்னாடிப் பார்த்ததில்லை.

டேய், குமுதம் வலைப்பக்கத்தில் இயக்குனர் சீமானின் நேர்காணலை பார்த்தேன். அதில தமிங்கலம் பேசுபவர்களை புடிச்சு ஒரு வாங்கு வாங்கி இருக்காரு. இப்ப பின்னூட்டத்தில கூட ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த யோசிக்க வேண்டியிருக்கு.

ம்ம் கற்றது திரு!

குட்டிபிசாசு said...

அண்ணே,

அரிய தகவல்கள்! நன்றி!!

மேலும் நத்தார் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

கைப்புள்ள said...

//ரொம்ப அபூர்வமான தொகுப்புகள் தான்.//
நன்றி நண்பா.

//எனக்கு 'சீசன்ஸ் க்ரீடீங்க்ஸ்" பத்தி இப்படி ஒரு அனுமானம் இருந்துச்சு - அதாவது, பல சமயம் நம்ம தபால் எல்லாம் தாமதமா வர்றதாலதான், பொத்தாம் பொதுவா இப்படி எழுதறாங்கன்னு//
ஆனா "Season's Greetings" மற்றும் "Happy Holidays" இந்த இரண்டு சொற்றொடர்களையும் தங்கள் மதத்தின் மேலான தாக்குதல்களாக சிலர் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களாம். கொஞ்சம் யோசிச்சிப் பாத்தா நாம ஜனவரி 1ஆம் தேதி 'Season's Greetings'னு யாருக்காச்சும் வாழ்த்து அனுப்பினா பொங்கலுக்கும் சேர்த்து அனுப்பின மாதிரி இருக்குமில்ல?
:)

//உன்னோட கேள்விக்கான விடை, ஒருவேளை இயேசுநாதர் அவர் அப்பா மடியில் இருப்பது முதல் முறையோ? நான் இதுக்கு முன்னாடிப் பார்த்ததில்லை//
அது இல்லப்பா...படத்தைப் பாத்தா அந்தப் பெரியவரின் வலது பக்கம் நிக்கிறவரு தான் ஜோசஃப்னு நெனைக்கிறேன்.

//டேய், குமுதம் வலைப்பக்கத்தில் இயக்குனர் சீமானின் நேர்காணலை பார்த்தேன். அதில தமிங்கலம் பேசுபவர்களை புடிச்சு ஒரு வாங்கு வாங்கி இருக்காரு. இப்ப பின்னூட்டத்தில கூட ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த யோசிக்க வேண்டியிருக்கு.

ம்ம் கற்றது திரு!//

நான் அதை படிக்கலன்னாலும் இப்ப உன்கிட்டேருந்து தெரிஞ்சிக்கிட்டேன். நன்றிப்பா.

கைப்புள்ள said...

//அண்ணே,

அரிய தகவல்கள்! நன்றி!!//

வாங்க குட்டிபிசாசு,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

//மேலும் நத்தார் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!//
தங்களுக்கும் என்னுடைய இனிய வாழ்த்துகள் நண்பரே!

Anonymous said...

இயக்குனர் சீமானின் நேர்காணல் வீடியோ இங்கே
http://www.kumudam.com/cinema.php?id=6&strid=2379

Anonymous said...

இதோ இன்னும் ஒரு வீடியோ - குதுகலமா பார்க்க வேண்டியது
http://www.kumudam.com/cinema.php?id=6&strid=2063
விஜய T ராஜேந்தர் - சிரிச்சு, சிரிச்சு வயிறெல்லாம் புண்ணாகி போச்சுடா
கிடைச்சா அவசியமா பாரு. தலைவர் விஜயகாந்த் முதல் அவரது அடுத்த படமாகிய 'கருப்பனின் காதலி' வரை. பட்டைய கிளப்பி இருக்காரு

இலவசக்கொத்தனார் said...

இந்த மாதிரி எதாவது உங்க கிட்ட இருக்கா?

http://www.msnbc.msn.com/id/22409890/

இலவசக்கொத்தனார் said...

உங்க முதல் படத்தில் இருப்பது பாயின்ஸெட்டியா (http://en.wikipedia.org/wiki/Poinsettia) என்ற மலர். இது கிறுத்துமஸ் மலர் என்றே இங்கு அழைக்கப்படுகிறது.

கப்பி | Kappi said...

அரிய தொகுப்புகள் + தகவல்கள்

வளரெ நன்னி தல!!

Geetha Sambasivam said...

நல்ல பதிவுகள்னு நினைக்கிறேன், மெதுவா வந்து படிக்கிறேன். :)))))))

cheena (சீனா) said...

தபால் தலைகள் பற்றிய ஒரு சிறந்த பதிவு