Monday, June 05, 2006

மீள்பதிவுங்ணா

நமக்கு ரொம்ப நாளா ஒரு ஆசைங்ண்ணா...இந்த மீள்பதிவு மீள்பதிவுன்னு சொல்றாங்களே...அது ஒன்னாச்சும் நம்ம வலைப்பூ வாழ்க்கையிலே எழுதிரணும்னு. எதுக்கு எனக்கு இந்த மாதிரி ஆசையெல்லாம்னு கேக்கிறீங்க...அதானே? தமிழ் வலைப்பூவை எல்லாம் படிக்க ஆரம்பிச்ச புதுசுல...இந்த பின்னூட்டம்னா என்னன்னு தெரிஞ்சிக்கிறதுக்கே ரொம்ப கஷ்டப் பட்டேன். பின்னூட்டத்துக்கு அர்த்தம் தெரிஞ்சதும், திடீர்னு மீள்பதிவு நம்ம கண்ணு முன்னால வந்து நிக்குறாரு. மீள்பதிவுன்னா இன்னான்னு தெரிஞ்சதும் - இந்த மைக்கேல் மதன காமராஜன் படத்துல தீயணைப்பு வீரரா வர்ற ராஜன் சொல்லுவாரே - "சோக்கா சொன்னய்யா...கேச் மை பாயிண்ட்...நானும் இதையெல்லாம் அப்பப்ப யூஸ் பண்ணறேன்"னு... அது மாதிரி ஒரு அல்ப ஆசை வந்து நம்மளை பாடாப் படுத்துது. முன்னே ஒரு தரம் கஷ்டப் பட்டு மீள்பதிவு எழுதுன போது, நம்ம ஆசையை நிரைவேத்திக்காம கோட்டை விட்டுட்டேன். ஆனா இந்த தடவை அந்த மாதிரி மிஸ்டேக் நடக்காது. அதனால பல்லாயிரக் கணக்கான நேயர்களின் விருப்பத்திற்கிணங்க நானே கஷ்டப்பட்டு எளுதுன ஒரு மீள்பதிவு...அதுவும் இங்கிலிபீசுல.

இது நான் சின்னப்பில்லயா இருக்கறச்சே எழுதுனது...கீழே அதோட சுட்டி இருக்குது...

ஏழு ரூபா பில்லு

முழுசையும் படிக்கிற அளவுக்குப் பொறுமை இருக்குறவங்க படிச்சிட்டு அங்கேயே மொத்தலாம்...இல்லை இங்கே வந்தும் மொத்தலாம். அப்பா...ஒரு மீள்பதிவு எழுதியாச்சு.

41 comments:

Prabu Raja said...

இது ரொம்ம்ம்ம்ப பெருசா இருக்கு.

நாளைக்கு படிக்கிறேன்.

சுதாகர் said...

மீள்பதிவு கண்ட கைப்புள்ள வாழ்க!!

தருமி said...

இப்படியெல்லாம் மீள் பதிவெல்லாம் போட்டாதான் நம்ம ஆங்கிலப் பதிவுகளுக்கு ரெண்டு மூணு பின்னூட்டமாவது தேத்த முடியும்..இல்ல? :)

கைப்புள்ள said...

//இது ரொம்ம்ம்ம்ப பெருசா இருக்கு.

நாளைக்கு படிக்கிறேன்.//

சரி...ரைட்டு.
:)

தருமி said...

அங்க போய் ஒரு பின்னூட்ட கணக்கை ஏத்தலாம்னு போனா, ஏத்துக்க மாட்டேங்குதுங்க. இதை ரெண்டில எதாவது ஒண்ணுல சேத்துக்கங்க.

hi mohan,
you were able to maintain a thread of mystery and suspense till the last word. that was a good narration.good going.........

கைப்புள்ள said...

//மீள்பதிவு கண்ட கைப்புள்ள வாழ்க!!//

என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே?
:)

கைப்புள்ள said...

//இப்படியெல்லாம் மீள் பதிவெல்லாம் போட்டாதான் நம்ம ஆங்கிலப் பதிவுகளுக்கு ரெண்டு மூணு பின்னூட்டமாவது தேத்த முடியும்..இல்ல? :)//

வாங்க தருமி சார்!
என்னங்க இப்பிடியா உண்மையைச் சபையிலே போட்டு ஒடக்கிறது? சரி! கதை எப்படிங்க? தேறுதா?
:)

கைப்புள்ள said...

//hi mohan,
you were able to maintain a thread of mystery and suspense till the last word. that was a good narration.good going......... //

நன்றி தருமி சார்...ஆனால் இதுவும் யாம் வாங்கிய உண்மையான பல்புகளில் ஒன்று. அதனுடைய தாக்கம் தான் இந்த வர்ணிப்பு எல்லாம். இத மாதிரி பல்பு வாங்குனா இங்லிபீசுல எழுத சொல்லி உங்களுடைய வாழ்த்து ஊக்கப் படுத்துது. நன்றி.
:)

தருமி said...

அய்யா,
நானே ஒரு 'நீள் குழல் விளக்கு'.
"பல்பு'...? என்னங்க அது?

அதுடரி, ஏன் ஆங்கிலப்பதிவில் பின்னூட்டம் இடமுடியவில்லை. word verification தகராறு பண்ணியது. கவனியுங்கள்.

"இப்பிடியா உண்மையைச் சபையிலே போட்டு ஒடக்கிறது?"//
இது எல்லாம் நம்மகதைதானே!

தருமி said...

அய்யா,
நானே ஒரு 'நீள் குழல் விளக்கு'.
"பல்பு'...? என்னங்க அது?

அதுசரி, ஏன் ஆங்கிலப்பதிவில் பின்னூட்டம் இடமுடியவில்லை. word verification தகராறு பண்ணியது. கவனியுங்கள்.

"இப்பிடியா உண்மையைச் சபையிலே போட்டு ஒடக்கிறது?"//
இது எல்லாம் நம்மகதைதானே!

சுதாகர் said...

//
என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே?
:)
//

அப்ப, உங்கள கலாய்க்குறதுக்கு இந்த blog-யை ஆரம்பிக்கலயா? ;-)

கலாய்ப்பவர்களிடமே பரிதாபத்துடன் விசாரிக்கும் கைப்புள்ள வாழ்க!

சுதாகர் said...

//
என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே?
:)
//

அப்ப, உங்கள கலாய்க்குறதுக்கு இந்த blog-யை ஆரம்பிக்கலயா? ;-)

கலாய்ப்பவர்களிடமே பரிதாபத்துடன் விசாரிக்கும் கைப்புள்ள வாழ்க!

பொன்ஸ்~~Poorna said...

//என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே?
//
உங்களை வச்சி என்னிக்கு சீரியஸா ஏதாச்சும் பண்ணி இருக்கோம்?!!!

இன்னும் மீண்டு போய் வாசிக்கல.. வாசிச்சிட்டு வந்து இங்க மறுக்கா (குற்றப் பத்திரிக்கை) வாசிக்கிறேன் :)

நன்மனம் said...

இந்த பதிவு தட்டச்சும் போது கைப்புவின் மனசு சொன்னது ""இத்தன நாளா நம்மல கலாச விட்டாச்சு, இப்ப எங்கிட்டு போக சொன்னாலும் போகறதுக்கு ஒரு கூட்டம் இருக்கு டோய்:-))""

கைப்பு, நெசமாவே நல்ல வந்திருக்கு.

நன்மனம் said...

கைப்பு:-என்னடா பதியலாம்......

கைப்பு மனசு:- இத்தன நாளா கலாச விட்டதுக்கு ரீஜன சொல்லிடு.

கைப்பு:- பின்னூட்டம் வராத பதிவ படிக்க வெச்சுறனம்னு சொல்லரியா.

கைப்பு மனசு:- இத சொல்லவேற செய்யனமா. இங்கன ஒரு கூட்டத ரேடி பண்ணியாச்சு, நீ எங்கிட்டு போக சொன்னாலும் போவாக, நீ வேணா பாரேன்:-))

கைப்பு நல்லா இருந்தது ஒங்க விவரிப்பு.

நாமக்கல் சிபி said...

//ஆனால் இதுவும் யாம் வாங்கிய உண்மையான பல்புகளில் ஒன்று//

இங்கயும் பல்பா?

:-)))))

siva gnanamji(#18100882083107547329) said...

என்னாங்கனா......."பல்லாயிரக்கணக்கான
நேயர்களின்
விருப்பத்திற்கு இணங்கி."னு ஆரம்பிச்சு
எதிர்மாறா
செஞ்ட்டீங்களே

Unknown said...

மீள்பதிவே சுட்டில போட்டூட்டு அந்த சுட்டிக்குள்ள போனா இன்னொரு சுட்டி இருக்கெ?

இப்படி உசுப்பேத்தி,உசுப்பேத்தி தான ஒடம்பு ரணகளமா இருக்கு?:-)))

நாமக்கல் சிபி said...

"பல்பு'...? என்னங்க அது?//

தருமி சார்,
பல்பு மேட்டர் தெரியாதா உங்களுக்கு?

பல்பு ன்னா எங்க கைப்புள்ளயோட அகராதியில ஆப்புன்னு அர்த்தம்/பொருள்.

இங்கன போயி பாருங்க

kjey said...

ஆகா.....கதை சொல்ல ஆரம்பிச்சுட்டாரு ...Escapeeeee :d

anyway i read it.humm...good narration.when u write a narration next time, Don't tell what happened; recreate (interesting/thrilling/surprise) what happened.(just an idea that's it)

Anonymous said...

Hi Mohan,
This is the one which we you told to me during Malai Mandir Trip, on 2002 New Year.. Same Karnataka Bhavan we had our breakfast.

Jana

கைப்புள்ள said...

//அய்யா,
நானே ஒரு 'நீள் குழல் விளக்கு'.
"பல்பு'...? என்னங்க அது?//

தருமி சார்!
இது கற்பனை இல்ல...உண்மை சம்பவம். அந்த பெரியவரோட தாக்கம் பல நாள் இருந்ததால தான் இந்த கதை எழுதுனேன். அவரு ஏமாத்தி பில்லைத் தலையில கட்டுனாருங்குறதை இன்னும் கூட நம்ப முடியலை. ஒரு போர் வீரருக்கு அந்நேரத்துல உதவி செஞ்ச மாதிரி தான் இருந்தது...ஏன்னா அவரு ஆரம்பத்துல சொன்ன விஷயங்கள் அந்த மாதிரி.

கைப்புள்ள said...

//அதுசரி, ஏன் ஆங்கிலப்பதிவில் பின்னூட்டம் இடமுடியவில்லை. word verification தகராறு பண்ணியது. கவனியுங்கள்.//

மதிச்சு பின்னூட்டம் போடற ஒரு சிலருக்காகவாச்சும் கவனிக்கனும்...கவனிக்கறேன்.
:)

கைப்புள்ள said...

//கலாய்ப்பவர்களிடமே பரிதாபத்துடன் விசாரிக்கும் கைப்புள்ள வாழ்க!//

இதுக்கும் வாழ்த்தா? நன்றி சொதாகரு.

கைப்புள்ள said...

//இன்னும் மீண்டு போய் வாசிக்கல.. வாசிச்சிட்டு வந்து இங்க மறுக்கா (குற்றப் பத்திரிக்கை) வாசிக்கிறேன் :)//

வாங்க பொன்ஸ்!
இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகலையே?
:)

கைப்புள்ள said...

//""இத்தன நாளா நம்மல கலாச விட்டாச்சு, இப்ப எங்கிட்டு போக சொன்னாலும் போகறதுக்கு ஒரு கூட்டம் இருக்கு டோய்:-))""//

அப்படியெல்லாம் இல்லீங்க. மீள்பதிவு சுட்டியில இருந்ததால அப்படி ஆகிப் போச்சு.

கைப்புள்ள said...

//கைப்பு நல்லா இருந்தது ஒங்க விவரிப்பு.//

நன்மனம்! ரெண்டு எடத்துலயும் உங்க கருத்தைச் சொல்லிருக்கீங்க...மகிழ்ச்சியா இருக்கு. டேங்ஸுங்க.

கைப்புள்ள said...

//இங்கயும் பல்பா?

:-)))))//

பின்ன?...அது ஒன்னு தானே கல்தோன்றி மண்தோன்றா காலத்துலேருந்து நமக்கு நிரந்தரம்?
:)

கைப்புள்ள said...

//என்னாங்கனா......."பல்லாயிரக்கணக்கான
நேயர்களின்
விருப்பத்திற்கு இணங்கி."னு ஆரம்பிச்சு
எதிர்மாறா
செஞ்ட்டீங்களே//

வாங்க சிவஞானம்ஜி!
என்னங்க? படு சொதப்பலா?
:)-

கைப்புள்ள said...

//இப்படி உசுப்பேத்தி,உசுப்பேத்தி தான ஒடம்பு ரணகளமா இருக்கு?:-)))//

அடடா! ஸ்டாரு...ஸ்டாரு! உங்க நட்சத்திர அலுவலுக்கு மத்தியிலும் நம்ம பக்கம் வர்றதுக்கு நேரம் ஒதுக்குனதுக்கு ரொம்ப நன்றி செல்வன்.
அந்த கதை 2004ல சுலேகால பிரசுரம் ஆச்சு...அதனால தான் அந்த உள்சுட்டி.
:)

கைப்புள்ள said...

//பல்பு ன்னா எங்க கைப்புள்ளயோட அகராதியில ஆப்புன்னு அர்த்தம்/பொருள்.

இங்கன போயி பாருங்க//

ரொம்ப முக்கியம்...இப்போ இது? அவரு உங்க கிட்ட கேட்டாரா...அப்புறம் எதுக்கு முந்திரி கொட்டையாட்டம்?
:)

கைப்புள்ள said...

//anyway i read it.humm...good narration.when u write a narration next time, Don't tell what happened; recreate (interesting/thrilling/surprise) what happened.(just an idea that's it)//

இந்த மாதிரி யாராச்சும் கருத்து சொல்லுவாங்கன்னு தானே நெத்தி வேர்வை நெலத்துல சிந்த மீள்பதிவெல்லாம் எழுதறது? :)

அடுத்த தடவை இதே மாதிரி எங்கேயாச்சும் தாத்தா கிட்ட வசமா மாட்டுனாத் தான் இங்லீசு கதையெல்லாம் நமக்கு வரும்...அப்ப நீங்க சொன்னதை முயற்சி செஞ்சு பாக்கறேன்.

கைப்புள்ள said...

//This is the one which we you told to me during Malai Mandir Trip, on 2002 New Year.. Same Karnataka Bhavan we had our breakfast.//

வா ஜனா!
அதே...அதே...
:))

சுதாகர் said...

அண்ணே,
கத ரொம்ம்ம்ப நல்ல்லா இருக்குண்ணே! கத எழுதுன கையிக்கி தங்க காப்பு போடலான்னா, நம்ம எக்கானாமிக்கு ஒத்து வரல...

(ஆனா, எனக்கு கடசில தலயே சுத்திடிச்சி.)

எனக்கொரு சந்தேகண்ணா! யாருக்குமே புரியாம எழுதுனா, அத எல்லாரும் நல்லாருக்குன்னு சொல்லுவாங்களோ? ;-)

(ஆனா, உண்மையிலேயே நல்லாருக்கு தல...)

ambi said...

hahaaa, kadaisila oru loosu kittayaa ippdai bulbu vaanganum..?
sema comedy kaipulla..

கைப்புள்ள said...

//எனக்கொரு சந்தேகண்ணா! யாருக்குமே புரியாம எழுதுனா, அத எல்லாரும் நல்லாருக்குன்னு சொல்லுவாங்களோ? ;-)

(ஆனா, உண்மையிலேயே நல்லாருக்கு தல...)//

சொதாகரு...கொழப்பறியேமா. உண்மையிலேயே புரிஞ்சுதா இல்லியா? எத்தனை வரி படிச்சே? பொய் சொல்லாம சொல்லு? அடுத்தது இந்த கதையிலேருந்து கேள்வி கேட்டு ஒனக்கு டெஸ்ட வக்க போறேன்.
:)-

கைப்புள்ள said...

//hahaaa, kadaisila oru loosu kittayaa ippdai bulbu vaanganum..?
sema comedy kaipulla..//

வாங்க அம்பி,
2001 வருஷ துவக்கமே நமக்கு அந்த தாத்தா கிட்ட வாங்கின பல்போட தான். அதே வருஷம் தான் நமக்கு வேலையும் கெடச்சுது. ரெண்டுத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்கோ...

:)-

Geetha Sambasivam said...

வாங்க கைபுள்ள,
ஒரு பதிவுக்கு உள்ள எல்லா விஷயங்களையும் பின்னூட்டத்திலே கொடுத்துட்டீங்க. பெங்களூர் வந்திருக்கிறதா கேள்விப்பட்டேன்.உண்மையில் ராஜஸ்தான் உபசாரம் நம்மை அதிகமாகவே சாப்பிட வைக்கும். கிட்டத்தட்ட என் பிறந்த வீடு மாதிரி அது. தூய்மையான நெய், பால், தயிர், கோதுமை என்று கலப்படமே இல்லாத சாப்பாடு. இங்கே மாதிரி மைதா மாவில் எல்லாம் பராட்டா செய்ய மாட்டார்கள். பஞ்சாபியில் ராஜ்மாவுடன் பாஸ்மதி அரிசி சேர்ந்த சாப்பாடு சாப்பிட்டுப் பாருங்கள். உண்மையான பட்டூராவும் அவர்கள் செய்வதுதான். இங்கே சரவணபவனில் கூட அது மாதிரி இல்லை.

கைப்புள்ள said...

வாங்க மேடம்!
உங்க பதிவுல போட்ட பின்னூட்டத்துக்குப் பதிலை இங்கேயும் போட்டதற்கு நன்றி. உங்க பதிவுலேயே வந்து படிச்சிட்டேன் இல்ல? அதெப்படி படிக்காம இருப்போம்?
:)

நன்மனம் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோகன்ராஜ்.

கைப்புள்ள said...

//இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோகன்ராஜ்.//

அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நன்மனம்.