Saturday, June 10, 2006

பைத்தியக்காரத் தவளையும் பாப்கார்னும்

சில பழைய விஷயங்களை...நாம ஒரு காலத்துல ரொம்பவே ரசிச்ச விஷயங்களை...கால ஓட்டத்துல நாம மறந்து போன விஷயங்களை...எங்கேயாச்சும் எப்பவாச்சும் திரும்ப நினைவு படுத்திப் பார்க்கும் போது ஒரு சந்தோஷம் வரும் பாருங்க...அதை என்னன்னு சொல்ல? இந்த விஷயம் எதுவா வேணா இருக்கலாங்க...ஒரு திரைப்படமாவோ, நண்பர் ஒருத்தரு நமக்கு எப்பவோ செஞ்ச ஒரு உதவியாவோ...குடும்பமா போன ஒரு சுற்றுலாவோ, இல்லை எதோ ஒரு சில்லறை விஷயமாக் கூட இருக்கலாம். அப்படி என்னத்த கண்டுட்டு இப்பிடி குதிச்சிட்டிருக்கேன்?

இன்னிக்கு காலையிலே ஆபீசு கெளம்பும் போது ஜீ மியூசிக் சேனல்ல ஒரு பாட்டு (பாட்டுன்னு சொல்ல கூடாது - இன்ஸ்ட்ருமெண்டல் இசை) கேட்டேங்க. அந்த இசையைச் சின்ன வயசுல கேட்ட ஞாபகம். அடிக்கடி நம்ம சென்னை தொலைக்காட்சி நிலையத்துல அந்த இசை வரும். பல முறை அதை கேட்டிருந்தாலும், அதை நான் அப்பத்துலேருந்து ரசிச்சிருக்கேங்கிறதை இன்னிக்குத் தான் உணர முடிஞ்சுது. நான் கேட்ட அந்த ஆல்பத்தோட பேரு "பைத்தியகார தவளையோட பாப்கார்ன்" (ஹி...ஹி...Popcorn by "Crazy Frog"என்பதோட தமிழாக்கம் தான் அது). இந்த ஆல்பத்தை 3டி அனிமேஷனோட டிவியில பாக்க நல்லாருந்துச்சு. கையைக் காலை ஆட்ட வைக்கிற துள்ளல் இசை. கேட்டுப் பாருங்களேன்...அட இதுவான்னு தோணும்.



நாம சின்னப் பையனா கேட்ட இசை இதுன்னா கண்டிப்பா ரீமிக்ஸாத் தான் இருக்கும்னு நினைச்சு கூகிளாடியதில் தெரிஞ்சது - பாப்கார்ன் என்றழைக்கப்படும் இந்த ஆல்பம் கெர்ஷான் கிங்ஸ்லி என்ற இசையமைப்பாளரால் 1969ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இசைக்கும் கணினிக்கும் சம்பந்தம் இல்லாதிருந்த அக்காலத்தில், கணினி மூலம் உருவாக்கப் பெற்ற இசையாக இது அறியப் பெறுகிறது. கிங்ஸ்லீ உருவாக்கிய ஒரிஜினலின் சின்ன பிட் கீழே.


அதன் பிறகு பல்வேறு இசையாளுநர்களால் எடுத்தாளப்பட்டு வெவ்வேறு வடிவங்களில் இவ்வால்பம் வெளிவந்துள்ளது. பல்வேறு விளம்பரங்களிலும் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. மேலே உள்ள பைத்தியக்காரத் தவளையின்(Crazy Frog) ரீமிக்ஸ் 2005இல் வெளிவந்தது. பூம்டேன்(Boomtan) என்ற இன்னுமொரு குழுவின் கைவண்ணத்தில் 2002இல் வெளியான இசை கீழே.


மேலும் விபரங்களுக்கு இருக்கவே இருக்கு நம்ம விகிபீடியா. இங்கேயும் பாருங்க

33 comments:

கைப்புள்ள said...

யப்பா...பாட்டைக் கேட்டுப் பாருங்க! இப்போ லிங்க் வேலை செய்யுது.
:)

இலவசக்கொத்தனார் said...

//அந்த ஆல்பத்தோட பேரு "பைத்தியகார தவளையோட பாப்கார்ன்" (ஹி...ஹி...Popcorn by "Crazy Frog"என்பதோட தமிழாக்கம் தான் அது)//

யப்பா, பாப்கார்ன் என்பதை அப்பாசோளம் / நைனாச்சோளம் என மொழிபெயர்க்காத உம்மை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கைப்புள்ள said...

கொத்ஸ்!
இதை எல்லாம் மொழிபெயர்த்து போடற அளவுக்கு மண்டை இருந்ததுன்னா ஏங்க உதை வாங்கற பொழப்பு எனக்கு? எதோ இப்போதைக்கு நம்மால முடிஞ்சது... பாட்டைக் கேட்டீங்களா? எப்படி இருக்கு?

ஆனா என்னிக்காச்சும் ஒரு நாள் நீங்க சொல்ற மாதிரியும் எழுத முயற்சி பண்ணறேன்.

:)

Geetha Sambasivam said...

கைப்புள்ள, தப்பாப் பார்த்துட்டேனோ என்னமோ, நேத்திக்குத் தமிழ் மணம் முகப்பிலே பார்த்த மாதிரி இருந்தது. நம்ம கணினிக்குத் தான் தெரியுமே முக்கியமா பார்த்தால் லிங்க் கட் பண்ணி வேடிக்கை பார்க்கணும்னு. சரியாப் பார்க்கறதுக்குள்ளே லிங்க் போயிடுச்சு. அப்புறம் பார்க்க முடியலை.

கைப்புள்ள said...

// சரியாப் பார்க்கறதுக்குள்ளே லிங்க் போயிடுச்சு. அப்புறம் பார்க்க முடியலை.//

இல்லை...இல்லை... சரியாத் தான் இருக்கு. நான் லிங்க்னு சொன்னது நான் எழுதியிருக்க நடு நடுவுல இருக்கற ஒரு சின்ன பொட்டியைத் தான். அதுல ஒரு triangle button தெரியும் பாருங்க...அது ப்ளே பட்டன். அதை க்ளிக் பண்ணீங்கனா பாட்டு கேக்கும். உங்க கணினில Real Player இருக்கான்னு மட்டும் ஒரு தடவை பாத்துக்கங்க. பாட்டைக் கேட்டுட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க.

ILA (a) இளா said...

என்னோட கம்ப்யூட்டரு செவிடா இருக்கு, ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ILA (a) இளா said...

வரப்பில கால் வெச்சதுக்கு நன்றி, அடிக்கடி வந்துட்டு போங்க
http://varappu.blogspot.com

கைப்புள்ள said...

//என்னோட கம்ப்யூட்டரு செவிடா இருக்கு, ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

ஒரு நல்ல டாக்டர் கிட்ட காட்டி சீக்கிரம் சரி பண்ணுங்க...பாட்டைக் கேக்காம உங்களை விடப் போறதில்லை.
:)

கைப்புள்ள said...

//வரப்பில கால் வெச்சதுக்கு நன்றி, அடிக்கடி வந்துட்டு போங்க
http://varappu.blogspot.com//

வரப்பில் நடந்தது ஒரு சுகமான அனுபவம். விவசாயத்துடன் வரப்பும் தழைக்க என் வாழ்த்துகள்.

பொன்ஸ்~~Poorna said...

தல,
உங்கள் இசை ஆராய்ச்சி என்னை மெய்(காது) சிலிர்க்க வைத்து விட்டது.. இருக்கும் அனேக பட்டங்களுடன், இசை அரசன் (இம்சை அரசன் இல்லை!!) என்னும் பட்டத்தையும் உங்களுக்கு அளிக்க வேணும் என்று பல்கலைக் கழகங்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன் (எந்தப் பல் கலை கழகத்துல போய் சொல்லணும்?!!):)

Anonymous said...

//அதுல ஒரு triangle button தெரியும் பாருங்க...அது ப்ளே பட்டன். அதை க்ளிக் பண்ணீங்கனா பாட்டு கேக்கும். உங்க கணினில Real Player இருக்கான்னு மட்டும் ஒரு தடவை பாத்துக்கங்க. பாட்டைக் கேட்டுட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க. //


கைப்புள்ள பாட்டு எங்க!!?? sound (music) மட்டும் வருது:)
:)
:)))))))))

நாகை சிவா said...

தரையிறக்கம் செய்து கேட்டேன். மகிழ்ந்தேன்.
வரப்பு ஒரம் நானும் சற்று நடமாடி விட்டு வந்தேன்.
வரப்பை காட்டியதற்கு நன்றி தல

Sridhar Harisekaran said...

மோகன் உங்க Memory க்கு ஒரு சபாஷ் போடனும். இந்த Music எனக்கு ஞாபகமே வரலே !! உங்க பதிவை படிச்ச அப்புறம் தான் ஞாபகம் வந்தது. எல்லாம் கீதா அக்காவோட வல்லாரை ரகசியம் தான்.

- ஸ்ரீதர்

கைப்புள்ள said...

//தல,
உங்கள் இசை ஆராய்ச்சி என்னை மெய்(காது) சிலிர்க்க வைத்து விட்டது.. இருக்கும் அனேக பட்டங்களுடன், இசை அரசன் (இம்சை அரசன் இல்லை!!) என்னும் பட்டத்தையும் உங்களுக்கு அளிக்க வேணும் என்று பல்கலைக் கழகங்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன் (எந்தப் பல் கலை கழகத்துல போய் சொல்லணும்?!!):)//

வா தாயீ!
இதுக்கே இ(ம்)சை அரசன்னு பட்டம் எல்லாம் குடுத்தா, இனிமே ப்ளூசு(Blues), ரவீந்திர சங்கீத், சால்சா, கெலிப்சோ, தெம்மாங்கு இப்படின்னு பலதரப்பட்ட மீஜிக்கைப் பத்தி பீலா ரெடி பண்ணி வச்சிருக்கோமே...அதையெல்லாம் படிச்சா என்ன பட்டம் குடுப்பீங்களாம்? சொல்லப் போனா இம்சை அரசன் தான் நமக்கேத்த சரியான பட்டம்...ஏன்னா நாங்க இம்சை அரசன் 113ஆம் புலிகேசி ஆத்தா...புலிகேசி ஆத்தா...

கைப்புள்ள said...

//கைப்புள்ள பாட்டு எங்க!!?? sound (music) மட்டும் வருது:)
:)
:))))))))) //

அலிஃப் லைலா!
பொருட்குற்றம் தான் இல்லியே...சொற்குற்றத்தையாவது மன்னிக்கலாம் இல்ல? ஆப்பு வச்சே ஆவனுமா? நல்லாரைய்யா நல்லாரு
:)

இராம்/Raam said...

அப்பு பாட்டு நல்ல இருத்துச்சு... கைப்பு கைவசம் அந்த பைத்திய தவளை வீடியோ இருக்கா...?

கைப்புள்ள said...

//தரையிறக்கம் செய்து கேட்டேன். மகிழ்ந்தேன்.//

நன்றி சிவா! நீங்கள் ரசித்ததை அறிந்து மகிழ்ச்சி.

Iyappan Krishnan said...

நல்லமனம் வாழ்கவெம் நாடுபோற்ற வாழ்கவே
அல்லாதார் சொல்லை அகற்றியே - நல்லோர்
கைப்பிள்ளை யாக கவிதை பிறந்தநாளில்
கைப்பு உமக்காக காண்


பிறந்தநாள் வாழ்துகள் மோஹன்தாஸ் :)

அன்புடன்
ஜீவா

பொன்ஸ்~~Poorna said...

//இனிமே ப்ளூசு(Bலுஎச்), ரவீந்திர சங்கீத், சால்சா, கெலிப்சோ, தெம்மாங்கு இப்படின்னு பலதரப்பட்ட மீஜிக்கைப் பத்தி பீலா ரெடி பண்ணி வச்சிருக்கோமே//
என்ன தல இப்படிக் கேக்குறீங்க.. நீங்க சென்னை வந்தப்போ, வரவேற்க வந்த நம்ம சங்கத்துப் பசங்க பெரிய லெவல்ல அடி பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தப்போ கூட, நீங்க இளையராசா பாட்டைக் காதுல மாட்டிகிட்டு கண்டுக்காம இருந்தீங்களே அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன் நீங்க தான் இ(ம்)சை அரசன்னு.. என்ன, அதுக்குள்ள ஷங்கர் முந்திகிட்டாரு..

மிச்ச மீஜிக்கப் பத்தியும் எழுதுங்க.. ம்யூசிக், வீ சேனல் பார்க்கிறதை உங்க பதிவுல எடுத்து விடுங்க.. நேஷனல் ஜியாவுக்குத் தான் பொன்ஸ் பக்கம் இருக்கீதே!! :)))

//புலிகேசி ஆத்தா...//
பை த பை, புலிகேசியோட ஆத்தாவும் நம்ம சங்கத்துல இருக்காங்களா என்ன?

Anonymous said...

Kaipullai,

wish you many more happy birth day...

Ghilli

Anonymous said...

vanakkam kai pulla...ithu tn1 kaipulla thana...paattu super...kalakkure kaipulla.

கைப்புள்ள said...

//நல்லமனம் வாழ்கவெம் நாடுபோற்ற வாழ்கவே
அல்லாதார் சொல்லை அகற்றியே - நல்லோர்
கைப்பிள்ளை யாக கவிதை பிறந்தநாளில்
கைப்பு உமக்காக காண்//

ஜீவா! தங்கள் வெண்பா கண்டு அகம் மகிழ்ந்தேன். வாழ்த்தே வெண்பாவாகக் கிடைப்பது இதுவே முதன்முறை. இப்பிறந்த நாள் பல வருடங்கள் நினைவில் நிற்கும் என்பதில் ஐயமில்லை. நன்றி.

மோகன் ராஜ்

கைப்புள்ள said...

//wish you many more happy birth day...

Ghilli//

வாழ்த்துகளுக்கு நன்றி கில்லி.

கைப்புள்ள said...

//wish you many more happy birth day...

Ghilli//

வாழ்த்துகளுக்கு நன்றி கில்லி.

Karthik Jayanth said...

'தல'

பிறந்த வாழ்த்துக்கள் !
இந்த நாள் இனிய நாள் !
நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள்
எல்லாம் மறந்த நாள் !

Anonymous said...

HAPPY BIRTHDAY WISHES MOHANRAJ,,,,, MAY GOD SHOWER HIS BLESSING TO FULFILL YOUR DESIRES...ENJOY BUDDYYYYYYYYYYYYYYYYYYYY

Anonymous said...

B'day aaaa...

Wish you a Very Happy B'day thala!!!

கைப்புள்ள said...

//பிறந்த வாழ்த்துக்கள் !
இந்த நாள் இனிய நாள் !
நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள்
எல்லாம் மறந்த நாள் !//

நன்றி பேராசிரியரே! இந்த பிறந்த நாள் மிக இனிமையாக அமைந்தது.

கைப்புள்ள said...

//HAPPY BIRTHDAY WISHES MOHANRAJ,,,,, MAY GOD SHOWER HIS BLESSING TO FULFILL YOUR DESIRES...ENJOY BUDDYYYYYYYYYYYYYYYYYYYY //

தேங்க்ஸ் டா ஜனா.

கைப்புள்ள said...

//B'day aaaa...

Wish you a Very Happy B'day thala!!!//

நன்றி டுபுக்கு சார். நீங்களும் "ஜெமினி கணேசர்"னு தெரியும். செப்பண்டி... மீரு புட்டின ரோஜு ஏ ரோஜு?
:)

Sridhar Harisekaran said...

http://video.google.com/videoplay?docid=-8987049026767517366&q=popcorn+and+frog

ALIF AHAMED said...

வ வா சங்கதிற்க்கு அனானி எழுதுவது என்னுடைய இரன்டு பின்னுட்டம் நிரா கரிக்க பட்டது எதனால் "டோன்டு" "முகமூடி" "ராபின் கூட்" "பெயரிலி" போன்று அதுவும் ஒரு பெயர் .

குறிப்பு: 1
வருத்தபடாத சங்கம் என்று பெயர் வைத்து கொன்டு வருத்தபடலமா?

குறிப்பு: 2
எனது பெயரை வழிபோக்கன் என்று மாற்றிவிட்டென்

குறிப்பு 3
நகல் : பிகிலு பொன்ஸ் ,இளா , தல , தளபதி ,ஜொள்ளூ பான்டி

ALIF AHAMED said...

வ வா சங்கதிற்க்கு அனானி எழுதுவது என்னுடைய இரன்டு பின்னுட்டம் நிரா கரிக்க பட்டது எதனால் "டோன்டு" "முகமூடி" "ராபின் கூட்" "பெயரிலி" போன்று அதுவும் ஒரு பெயர் .

குறிப்பு: 1
வருத்தபடாத சங்கம் என்று பெயர் வைத்து கொன்டு வருத்தபடலமா?

குறிப்பு: 2
எனது பெயரை மாற்றிவிட்டென்

:))))