Wednesday, July 01, 2009

இலக்கியவானில் உதயம் பகலவன் ப்ரமிளா

நேத்து வழக்கம் போல கடுமையா உழைச்சிட்டு இருந்தேன். உங்க வீட்டு உழைப்பு எங்க வீட்டு உழைப்பு இல்லை...முத்து முத்தா முகத்துல வியர்த்து இருக்கறதைத் தொடைச்சிக் கூட விட்டுக்காத கடும் உழைப்பு. அதுவா பூமியின் புவி ஈர்ப்பு சக்தியின் காரணமா நிலத்துல கீழே விழுந்தா தான் உண்டு. நெத்தி வியர்வையை நிலமே கேட்டு வாங்கிக்கிற மாதிரியான உழைப்புன்னு வையுங்களேன். அந்த நேரத்தில் தான் என்னோட கூகிள் சாட் பொட்டியில், பார்த்தனின் தடந்தோள்களை அலங்கரிக்கும் காண்டீபத்தின் ரீங்காரத்தையும், பார்த்தனின் சாரதியின் இதழ்களைத் தழுவும் பேறு பெற்ற பஞ்சஜன்யத்தின் ஆஹாகாரத்தையும் ஒத்த ஒரு ஒலி கேட்டது "Are you there?"ன்னு.

அந்த ஒலிக்குச் சொந்தக்காரர், நான் வலையுலகில் நுழைந்த நாளிலிருந்தே அறிந்த ஒரு நண்பர். "உரையாடல் சிறுகதை போட்டிக்கு நான் ஒரு கதை எழுதிருக்கேன். கொஞ்சம் படிச்சிப் பாருங்க"ன்னு ஒரு லிங்க் கொடுத்தார். அவருடைய பல முகங்களை நான் பாத்திருக்கிறேன் - அறம் செய்ய விரும்புறவரா, ஆறுவது சிணுங்கறவரா,
இயல்வது கரக்கறவரா, ஈவது விலக்கறவரா, உடையது விளம்பறவரா, ஊக்கமது கைவிடாதவரா, எண் எழுத்து இகழாதவரா, ஏற்பது இகழாதவரா, ஐயமிட்டு உண்ணறவரா, ஒப்புரவு ஒழுகறவரா, ஓதுவது ஒழியறவரா, ஒளவியம் பேசறவரா இப்படின்னு பல முகங்கள். ஆனா அன்னிக்கு அந்த பதிவைப் படிச்சிட்டு நான் பாத்த முகம் "அடங்கொன்னியா! இந்த ஆளு இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லைடா"ன்னு நெனைக்க வச்சது. "இங்கே இருக்க வேண்டிய ஆள் இல்லைன்னா, பின்ன வேலூர் ஜெயில்ல இருக்க வேண்டியவரா"ன்னு எல்லாம் கேக்கப்பிடாது.

இவ்வளவு சீரிய(ஸ்) இலக்கியவாதிக்கு, ஒரு இலக்கியவாதிக்கே இணையான புனைப்பெயரும் இருப்பது தேவையானது என நான் நினைத்தேன். "இலக்கியவாதியான உங்களுக்கு ஒரு இலக்கியத் தரமான புனைப்பெயர் வைக்கணுமே?" அப்படின்னேன். "நீங்களே வையுங்களேன்"னு ரொம்பப் பெருந்தன்மையோட அந்த பாக்கியத்தை எனக்கு அளிச்சார். எனக்கு ரெண்டு பேரு மனசுல தோனுச்சு. முதல் பேர் "விழிவிண்மீனுக்கடியவன்".
விழிவிண்மீனுக்கடியவன் = விழி + விண்மீனுக்கு + அடியவன்
விழி = நயனம்(நயன்)
விண்மீன் = தாரா
அடியவன் = தாசன்(தாஸ்)

இரண்டாவதா எனக்கு ஒரு பேரு தோனுச்சு. அது தான் தன்னோட இலக்கிய வாழ்க்கைக்கு ஏத்ததா இருக்கும்னு அதையே ஏத்துக்கிட்டாரு. அந்த பேரு...

"பகலவன் ப்ரமிளா"

அந்த பேருக்கான விளக்கம் - பகலவனான ஞாயிறு ஒளி பொருந்தியவன். அளவிலாத சக்தியைக் கொண்டவன் அவன். இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் சக்திக்குக் காரணமாயிருப்பவனும் அவனே. இவ்வளவு வலு பொருந்தியவனாய் இருந்தாலும் தடாகத்தில் மலரும் மெல்லிய தாமரை மலரை மலரச் செய்பவனும் அவனே. ஆயினும் பாலைவனத்தில் அகப்பட்டுக் கொள்ளும் உயிரினங்களைப் பாரபட்சமின்றிச் சுட்டெரிக்கவும் அவன் தயங்குவதில்லை. இத்தன்மைத்தாய பகலவனை ஒத்தவரான கவிஞர், தன்னுடைய மக்களை மகிழ்விக்கக் கூடிய எழுத்துகளின் காரணமாய் படிப்பவர் முகங்களை மலரச் செய்பவர், அதே சமயம் தவறு செய்பவர் என்று அவர் தம் மனதில் கருதி விட்டால் எந்த ஒரு பாரபட்சமுமின்றி சுட்டெரிக்கத் தயங்காதவர்.

பகலவன் சரி...அது என்ன ப்ரமிளா? எதுக்கு அந்த பேரு? ஒன்னுமில்லை சாரே. சீரியஸ் இலக்கியம் எழுதறவங்க தன் புனைப் பேருல ஒரு பாதியிலாவது ஒரு அம்மணி பேரை வச்சி எழுதாம சாதிச்சதா வரலாறே கெடையாது. ப்ரமிளாங்கிற பேரைக் கேட்டதும் என்ன தோனும்? பலருக்கு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் படம் நியாபகத்துக்கு வரலாம், வெகு பலருக்கு சேச்சி நடிச்சி பிரபலமான தம்புராட்டி படம் நியாபகத்துக்கு வரலாம். க்ளாமரும் நடிப்பும் ஒரு சேர நிரம்பிய ஓல்டு ஆனாலும் கோல்டான ப்ரமிளாவைப் போன்ற கவர்ச்சியான எழுத்துக்குச் சொந்தக்காரர் என்பது இந்த புனைப் பெயரின் இரண்டாம் பாகத்தில் தொக்கி நிற்கும் பொருள்.

எழுத்தாளர், இலக்கியவாதி, இதழியலாளர் இப்படியாக இன்னும் பல ஆளர்களை ஆளப் போகும் 'பகலவன் ப்ரமிளா'வின் வலைப்பூ கீழே.



பகலவனும் சரி ப்ரமிளாவும் சரி இரண்டு காண்டிராஸ்டிங் சிறப்புகளைக் கொண்டிருப்பவர்கள் ஆதலால் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் பெயரான "பகலவன் ப்ரமிளா" ஜனனம். பேரு பாக்க காமெடியா இருந்தாலும் பதிவெல்லாம் டெரரா தான் இருக்கும். சீரியஸ் இலக்கியம் மட்டும் தான் எழுதுவார் பகலவன் ப்ரமிளா. ஏகவசனமா இருந்தாலும் அவருடைய இலக்கிய படைப்புகளை வாசித்து விட்டு "நீ இலக்கியவாதிடா, நீ இலக்கியவாதிடா, நீ இலக்கியவாதிடா"ன்னு மயில்சாமி மாதிரி உணர்ச்சிவசப்பட்டு பாராட்டற காலமும் வரத் தான் போகுது. அதை நானும் பாக்கத் தான் போறேன். அந்த நாள் வரும் போது...வரும் போது...வேணாம்... வரும் போது சொல்றேன் என்ன பண்ணுவேன்னு.

நீர் ஊற்று

20 comments:

பகலவன் பிரமீளா said...

என்னை மிகவும் பெருமையுடையவனாக்கியிருக்கிறீர்கள் மோகன்!

சின்னச் சின்ன மொக்கைகளும், கும்மிகளும், கும்மாளப் பின்னூட்டங்களுமென என் பதிவுலக வாழ்வை நகர்த்தி வந்த என்னை இத்தகைய உலகொன்றைக் காட்டி அதில் உள்நுழையச் செய்திருக்கிறீர்கள்!

என்றென்றும் நன்றியுடையவனாயிருப்பேன்!

வா.மணிகண்டன் said...

நல்ல அறிமுகமொன்றைத் தந்திருக்கிறீர்கள் கைப்ஸ்!

துபாய் ராஜா said...

கைப்பூ.புதுசா வந்தவர்க்கு கொடுத்திட்ட ஒரு வாய்ப்பு.இனி
குலுங்கட்டும் தமிழ்வலைப்பூ.

நாமக்கல் சிபி said...

அவ்வ்வ்வ்வ்வ்!

தல! ரொம்ப நன்றி தலை!

பேரும் வெச்சி அறிமுகமும் கொடுத்திருக்கீங்க!

சென்ஷி said...

:)))

RAMYA said...

நல்ல அறிமுகம் தந்திருக்கிறீர்கள் கைபுள்ளே :))

Iyappan Krishnan said...

எந்தக் கோயில்ல போய் அடிச்சுக்க.. இந்தமனுஷனுக்கு ஆயிரத்தெட்டு ப்ளாக் இருக்கு.. இது எத்தினியாவது ப்ளாக் தெரியலையேப்பா

ஆயில்யன் said...

/"பகலவன் ப்ரமிளா"//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

”தள” என்னை சோதித்து பார்த்தது இதுக்குத்தானா !

☀நான் ஆதவன்☀ said...

:))

கவிதா | Kavitha said...

//விழிவிண்மீனுக்கடியவன் = விழி + விண்மீனுக்கு + அடியவன்
விழி = நயனம்(நயன்)
விண்மீன் = தாரா
அடியவன் = தாசன்(தாஸ்)//

ம்ம்ம்..இதை படிச்சவுடனே சந்தேகப்பட்டேன்..!! சிபி யா இருக்குமோன்னு... ஆனா பகலவன் ப்ரமிளா வை பார்த்து வேற யாரோன்னு போயிட்டேன்...

கைப்பூ...

//பார்த்தனின் தடந்தோள்களை அலங்கரிக்கும் காண்டீபத்தின் ரீங்காரத்தையும், பார்த்தனின் சாரதியின் இதழ்களைத் தழுவும் பேறு பெற்ற பஞ்சஜன்யத்தின் ஆஹாகாரத்தையும் ஒத்த ஒரு ஒலி கேட்டது "Are you there?"ன்னு.//

ஆனா இது எல்லாம் ரொம்பவே ஓவர் சொல்லிட்டேன்... :)))

//அவருடைய பல முகங்களை நான் பாத்திருக்கிறேன் //

ம்ம்..ம்ம்ம்ம்....

//ப்ரமிளாங்கிற பேரைக் கேட்டதும் என்ன தோனும்? //

முந்தானை முடிச்சி படத்தில் ஊர்வசி யின் பெயர் ப்ரிமளா என்று நினைவு... எனக்கு இது தான் தோன்றியது....சரியா நினைவு இல்லை. :)))

கவிதா | Kavitha said...

மற்றபடி எனக்கு இந்த பகலவன் பிரமீளா வை பார்த்தா ரொம்ப பொறாமையா இருக்கு.. எப்படி இத்தனை வைத்து மெயின்டெயின் செய்யறாரு... (நோ நோ நோ.. டபுள் ட்ரிபிள் மீனிங்கு.. ஐ மென்ட் ஒன்லி ப்ளாக்'கு)

நாமக்கல் சிபி said...

/சீரியஸ்/

தல,
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

என்னையும் மதிச்சி சீரியஸ் னு போட்டிருக்கீங்க தல!

சந்தனமுல்லை said...

// Jeeves said...

எந்தக் கோயில்ல போய் அடிச்சுக்க.. இந்தமனுஷனுக்கு ஆயிரத்தெட்டு ப்ளாக் இருக்கு.. இது எத்தினியாவது ப்ளாக் தெரியலையேப்பா//

:-)))))

வெட்டிப்பயல் said...

இது எத்தனாவது பேர்னு அவருக்காவது தெரியுமா?

இருந்தாலும் தளக்கு வாழ்த்துகள்!!!

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........கோல கொல கொலப் பண்றாங்கப்பா:):):)

rapp said...

//அறம் செய்ய விரும்புறவரா, ஆறுவது சிணுங்கறவரா,
இயல்வது கரக்கறவரா, ஈவது விலக்கறவரா, உடையது விளம்பறவரா, ஊக்கமது கைவிடாதவரா, எண் எழுத்து இகழாதவரா, ஏற்பது இகழாதவரா, ஐயமிட்டு உண்ணறவரா, ஒப்புரவு ஒழுகறவரா, ஓதுவது ஒழியறவரா, ஒளவியம் பேசறவரா இப்படின்னு பல முகங்கள்.//

அர்ச்சனா, தனக்கு ப்யூச்சர்ல பயன்படும்னு வாங்கிவெச்சிருந்த புக்கை யாரோ எடுத்தினு ஓடிட்டாங்கோன்னு, சும்மா விஜயஷாந்தி கணக்கா அண்ணாசாலை போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளையின்ட் பண்ண ருத்ரமா போய்க்கிட்டிருக்கா. பாத்தா, நீங்கதான் அதை சுட்டீங்களா? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............

rapp said...

//என்னோட கூகிள் சாட் பொட்டியில், பார்த்தனின் தடந்தோள்களை அலங்கரிக்கும் காண்டீபத்தின் ரீங்காரத்தையும், பார்த்தனின் சாரதியின் இதழ்களைத் தழுவும் பேறு பெற்ற பஞ்சஜன்யத்தின் ஆஹாகாரத்தையும் ஒத்த ஒரு ஒலி கேட்டது "Are you there?"ன்னு.
//

சங்கூதிட்டாருன்னு எம்மாஞ்சாடயா சொல்றீங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........

rapp said...

//அது என்ன ப்ரமிளா? எதுக்கு அந்த பேரு? ஒன்னுமில்லை சாரே. சீரியஸ் இலக்கியம் எழுதறவங்க தன் புனைப் பேருல ஒரு பாதியிலாவது ஒரு அம்மணி பேரை வச்சி எழுதாம சாதிச்சதா வரலாறே கெடையாது. ப்ரமிளாங்கிற பேரைக் கேட்டதும் என்ன தோனும்? பலருக்கு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் படம் நியாபகத்துக்கு வரலாம், வெகு பலருக்கு சேச்சி நடிச்சி பிரபலமான தம்புராட்டி படம் நியாபகத்துக்கு வரலாம். க்ளாமரும் நடிப்பும் ஒரு சேர நிரம்பிய ஓல்டு ஆனாலும் கோல்டான ப்ரமிளாவைப் போன்ற கவர்ச்சியான எழுத்துக்குச் சொந்தக்காரர் என்பது இந்த புனைப் பெயரின் இரண்டாம் பாகத்தில் தொக்கி நிற்கும் பொருள்.//

ஆஹா ஆஹா, அருமை அற்புதம். ஆழமான விளக்கம். தீர்ந்தது இலக்கியவியாதிஎன்னும் நோய்:):):)

கைப்புள்ள said...

//அர்ச்சனா, தனக்கு ப்யூச்சர்ல பயன்படும்னு வாங்கிவெச்சிருந்த புக்கை யாரோ எடுத்தினு ஓடிட்டாங்கோன்னு, சும்மா விஜயஷாந்தி கணக்கா அண்ணாசாலை போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளையின்ட் பண்ண ருத்ரமா போய்க்கிட்டிருக்கா. பாத்தா, நீங்கதான் அதை சுட்டீங்களா? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............//


ஐ...தோடா...ஷெர்லாக் ராப்ஸ்
:)

கைப்புள்ள said...

//நல்ல அறிமுகமொன்றைத் தந்திருக்கிறீர்கள் கைப்ஸ்!//

நீங்க ஒரிஜினல் தானே?
:)