சில பள்ளிக்கூட நினைவுகள்...ஆணி புடுங்கற நேரத்துல சட்டுன்னு மனசுல வந்தது.
****************************************************
"உன் ரப்பரைக் கொஞ்சம் கொடேன், அழிச்சிட்டுத் தரேன்"
"ஐ...அஸ்கு புஸ்கு"
இப்ப யாராச்சும் என்கிட்ட எதாச்சும் கேக்கனும், அவங்களுக்கு நான் அஸ்கு புஸ்கு சொல்லனும்னு ரொம்ப ஆசையா இருக்கு :(
உதாரணத்துக்கு "கேன் ஐ பாரோ யுவர் லேப்டாப் அடாப்டர் ஃபார் சம்டைம்?" - "Can I borrow your Laptop Adaptor for sometime?"
"ஐ...அஸ்கு புஸ்கு"ன்னு சொன்னா மனசுக்கு எவ்வளவு இதமாயிருக்கும்? நம்ம மனசுக்குத் தான் :)
****************************************************
"வாட் இஸ் தி நாய்ஸ் ஓவர் தேர்"(What is the noise over there?)
"மிஸ் திஸ் பாய் இஸ் கில்லிங் மீ மிஸ்"
****************************************************
"ரப்பர் எப்படி செய்வாங்க தெரியுமாடா?"
"தெரியாதே"
"பென்சில் தோல் சீவி அதை பாத்திரத்துல போட்டு பால் ஊத்தி
மறு நாள் காலைல பாத்தா ரப்பர் வந்துருக்கும்"
இதை உண்மைன்னு நம்பி பென்சில் சீவி பென்சில் பாக்ஸ்ல போட்டு வீட்டுக்குப் பல தடவை எடுத்துட்டு போயும் பாம்புக்கு...சே...பென்சில் தோலுக்குப் பால் ஊத்த விட்டதில்லை :(
****************************************************
"மயில் றெக்கை இருக்கில்ல அத புக்குக்குள்ள வெச்சி அரிசி போட்டேன்னு வை...மறு நாள் மயில் குட்டி கிடைக்கும்"
"நெஜமாவாடா?"
"ஆமாம்டா...எங்க வீட்டுல அந்த மயில் குட்டி பெருசாயி முட்டை கூட போட்டுச்சே"
****************************************************
"டேய்! அவன் ஷுல சாணியை மிதிச்சிட்டு வந்திருக்காண்டா"
"சீத்தாங்கோல் விடுடா"
ரெண்டு பேரும் சேர்ந்துக்கிட்டு -
"ஐயயே...சாணி மிதிச்சிட்டு வந்திருக்கான்...சீத்தாங்கோல்"
- ஸ்கூலைத் தவிர இந்த சீத்தாங்கோலை எங்கேயுமே பயன்படுத்துனது இல்லை. அதுக்கு என்ன அர்த்தம்னு இன்னிக்கு வரைக்கும் தெரியாது.
****************************************************
ரிங்கா ரிங்கா ரோஸஸ்
பாக்கெட் ஃபுல் ஆஃப் போஸஸ்
ஹஷ்ஷா புஷ்ஷா
ஆல் ஆஃப் யூ டவுன்(வீ ஆல் ஃபால் டவுன்)
Ring-a Ring-a roses,
Pocket full of poses.
Husha, Busha.
We all fall down.
- ஸ்கூலை விட வீட்டு பக்கத்துல இருக்கற பசங்களோடயும் (பொண்ணுங்களோடயும் தான்:) ) இந்தப் பாட்டைப் பாடிக்கிட்டு கையைப் புடிச்சிக்கிட்டு ரவுண்டு சுத்தி கீழே விழுந்த நியாபகம் அதிகமா இருக்கு.
****************************************************
"நேத்து ஒலியும் ஒளியும்ல புன்னகை மன்னன் படத்துலேருந்து பாட்டு போட்டான் பாத்தியா?"
"ஆமா, நானும் பாத்தேன்"
"அதுல சப்பாத்திக்கு குருமா குருமா பாட்டுல சார்லி சாப்ளின் வேஷம் போட்டுக்கிட்டு கமல் ஓடி வந்து திடீர்னு ரேவதி கன்னத்தைக் கிள்ளி முத்தம் குடுப்பான் பாத்தியா?"
"அட பாவி...இரு இரு மிஸ் கிட்ட சொல்றேன்"
"டேய் சொல்லாதடா"
"நான் சொல்லத் தான் போறேன்"
"நீயும் தானே லேஸ் கட்ட கீழே குனியும் போது பதினாறும் பெற்று ப்ளாட்ஃபாரத்தில் வாழ்கன்னு சொன்னியே அதை நான் மிஸ் கிட்ட சொல்லுவேன்"
"சொல்லிக்கோ"
"அப்போ நீயும் சொல்லிக்கோ"
"மிஸ் மேல உனக்கு பயம் இல்லையா?"
"உனக்கு பயம் இல்லையா?"
"நான் சொன்னதை விட நீ சொன்னது தான் பெரிய விஷயம்"
கலைஞானியோட படத்தை ரசிச்சி ஒரு வார்த்தை சொல்லிட்டதுக்காக நாலாவதுலேருந்து
அஞ்சாவது போற வரைக்கும் இப்படியே ஒருத்தன் என்னை ப்ளாக்மெயில் பண்ணிக்கிட்டே
இருந்தான். ப்ளாக்மெயில் பண்ணவன் பேரு ரஜினிகாந்த். உண்மையாவேங்க.
****************************************************
ஹ்ம்ம்ம்...வயசானாலும் மனசு இன்னும் குழந்தையாவே இருக்கே...என்ன பண்ணறது? :(
Tuesday, July 07, 2009
IV Std 'E' Section
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
வந்துட்டேன்! :-)
//
உதாரணத்துக்கு "கேன் ஐ பாரோ யுவர் லேப்டாப் அடாப்டர் ஃபார் சம்டைம்?"//
LOL! இதை நான் செஞ்சு இருக்கேனே...
//"மிஸ் திஸ் பாய் இஸ் கில்லிங் மீ மிஸ்"//
ஆகா...எனக்கு "மிஸ் மிஸ்...ஊர் கோயிங் மிஸ்" தான் நினைவுக்கு வருது!! :-))
//
கலைஞானியோட படத்தை ரசிச்சி ஒரு வார்த்தை சொல்லிட்டதுக்காக நாலாவதுலேருந்து
அஞ்சாவது போற வரைக்கும் இப்படியே ஒருத்தன் என்னை ப்ளாக்மெயில் பண்ணிக்கிட்டே
இருந்தான். ப்ளாக்மெயில் பண்ணவன் பேரு ரஜினிகாந்த். உண்மையாவேங்க.//
:-)))))))))))) மிகவும் ரசித்தேன்!

ஹ்ம்ம்ம்...வயசானாலும் மனசு இன்னும் குழந்தையாவே இருக்கே...என்ன பண்ணறது? :(//
அவ்வ்வ்வ்! நல்லாத்தானே போய்கிட்டிருந்துச்சு!! ஏன் இந்த பிட்டு?!! :-))
ஹி.. ஹீ.. ஒரு கைபுள்ளயின் மனசு
//மனசுக்கு எவ்வளவு இதமாயிருக்கும்?
நம்ம மனசுக்குத் தான் :)//
ROTFL
//ஹ்ம்ம்ம்...வயசானாலும் மனசு இன்னும் குழந்தையாவே இருக்கே...என்ன பண்ணறது? :(//
இதுக்கு நீங்க :) போட்டுருக்கனும்... மனசு குழந்தையாவே இருக்கறது வரம்ங்க. நான் எப்போ பீச்சுக்கு போனாலும் பண்ற முதல் வேளை துப்பாக்கில பலூன் சுடறதுதான் :)))
//ஐ...அஸ்கு புஸ்கு"ன்னு சொன்னா மனசுக்கு எவ்வளவு இதமாயிருக்கும்?
நம்ம மனசுக்குத் தான் :)//
அதான் சொன்னீங்களே? அப்புறமா என்ன??? :P:P:P:P:P:P
அஸ்கு புஸ்கு!!!!!!நான் ஒண்ணும் என்னோட மயிலிறகை உங்களுக்குக்கொடுக்க மாட்டேனே!
கலக்கல் தல ;))
ப்ளாக்மெயில் பண்ணவன் பேரு ரஜினிகாந்த். உண்மையாவேங்க.
\\
ஹா ஹா ஹா
//வந்துட்டேன்! :-)//
நானும் ஃப்ரெண்ட்ஸ் படம் மதன் பாப் ஸ்டைல்ல "படிச்சிட்டேன்!"
////
உதாரணத்துக்கு "கேன் ஐ பாரோ யுவர் லேப்டாப் அடாப்டர் ஃபார் சம்டைம்?"//
LOL! இதை நான் செஞ்சு இருக்கேனே...//
எது? அடாப்டர் கேட்டவங்களுக்கு அஸ்கு புஸ்கு சொன்னதா?
:)
//ஆகா...எனக்கு "மிஸ் மிஸ்...ஊர் கோயிங் மிஸ்" தான் நினைவுக்கு வருது!! :-))//
ஹி...ஹி...இதுவும் சூப்பராக்கீதே?
:)
////
கலைஞானியோட படத்தை ரசிச்சி ஒரு வார்த்தை சொல்லிட்டதுக்காக நாலாவதுலேருந்து
அஞ்சாவது போற வரைக்கும் இப்படியே ஒருத்தன் என்னை ப்ளாக்மெயில் பண்ணிக்கிட்டே
இருந்தான். ப்ளாக்மெயில் பண்ணவன் பேரு ரஜினிகாந்த். உண்மையாவேங்க.//
:-)))))))))))) மிகவும் ரசித்தேன்!//
மெய்யாலுமா? இதுல ஏதும் உள்குத்து இல்லியே?
:)
//அவ்வ்வ்வ்! நல்லாத்தானே போய்கிட்டிருந்துச்சு!! ஏன் இந்த பிட்டு?!! :-))//
அட! உண்மையைச் சொல்றதுல என்னங்க தயக்கம்?
:)
//ஹி.. ஹீ.. ஒரு கைபுள்ளயின் மனசு//
டேங்கீஸ்பா திரு
:)
////மனசுக்கு எவ்வளவு இதமாயிருக்கும்?
நம்ம மனசுக்குத் தான் :)//
ROTFL//
வாங்க பாசகி!
ரொம்ப நன்றிங்க சிரிச்சதுக்கு :)
//ஹ்ம்ம்ம்...வயசானாலும் மனசு இன்னும் குழந்தையாவே இருக்கே...என்ன பண்ணறது? :(//
இதுக்கு நீங்க :) போட்டுருக்கனும்... மனசு குழந்தையாவே இருக்கறது வரம்ங்க. //
நீங்க சொல்ற பாயிண்ட் சரி தான். ஆனா இந்த குழந்தை மனசை வெளியே காட்டறதுல பல நடைமுறை சிக்கல்கள் இருக்கறதுனால தான் :( போட்டேன்.
//நான் எப்போ பீச்சுக்கு போனாலும் பண்ற முதல் வேளை துப்பாக்கில பலூன் சுடறதுதான் :)))//
சூப்பருங்கறேன்.
:)
//அதான் சொன்னீங்களே? அப்புறமா என்ன??? :P:P:P:P:P:P//
அட ஆமா இல்லை. அதான் மனசுக்கு இதமா இருக்கு :)
//அஸ்கு புஸ்கு!!!!!!நான் ஒண்ணும் என்னோட மயிலிறகை உங்களுக்குக்கொடுக்க மாட்டேனே!//
உங்க வீட்டுல வளர்ற பூனைக்குட்டி எலிக்குட்டியோட மயில் குட்டியையும் நீங்களே வளக்கனும்னு உங்களுக்கு ஆசை போலிருக்கு :)
//கலக்கல் தல ;))//
நன்றிங்க கேப்டன்.
:)
//ப்ளாக்மெயில் பண்ணவன் பேரு ரஜினிகாந்த். உண்மையாவேங்க.
\\
ஹா ஹா ஹா//
வந்து சிரிச்சதுக்கு நன்றிங்க ஜமால்.
:)
:))) LOL
நான் தான் அன்னிக்கே தொல்ஸ் கிட்ட சொன்னேன் ல... ஆள் தான் வளர்ந்து இருக்கீங்க, அதுவும்...... ;)
அப்ப என்னை யோவ் சொல்லி திட்டுனீங்க.. இப்ப என்ன சொல்லுறீங்க.. இப்ப என்ன சொல்லுறீங்க... (வினுசக்கரவத்தி மாதிரி படிக்கனும் ;) )
//அப்ப என்னை யோவ் சொல்லி திட்டுனீங்க.. இப்ப என்ன சொல்லுறீங்க.. இப்ப என்ன சொல்லுறீங்க... (வினுசக்கரவத்தி மாதிரி படிக்கனும் ;) )//
வினுசக்கரவர்த்தி மாதிரி படிச்சாச்சு. இப்ப சொல்றேன் - யோவ்!!!!!!!!!!!!!!!!!!!
"Can I borrow your Laptop Adaptor for sometime?"
"ஐ...அஸ்கு புஸ்கு"ன்னு சொன்னா மனசுக்கு எவ்வளவு இதமாயிருக்கும்? //
ஹா ஹா ஹா... நீங்க அப்படி சொன்னா எப்படியிருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன் வர்ற சிரிப்ப அடக்க முடியல.
ரப்பர், மயில் கதையெல்லாம் பெரும்பாலும் எல்லோரும் கடந்து வந்த மறக்க முடியாத நினைவுகள். ரிங்கா ரிங்கா ரோசெசும் தான்.
எல்லா பள்ளி நினைவுகளையும் ரசிச்சு சிரிச்சேன்.
//ஹா ஹா ஹா... நீங்க அப்படி சொன்னா எப்படியிருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன் வர்ற சிரிப்ப அடக்க முடியல.
ரப்பர், மயில் கதையெல்லாம் பெரும்பாலும் எல்லோரும் கடந்து வந்த மறக்க முடியாத நினைவுகள். ரிங்கா ரிங்கா ரோசெசும் தான்.
எல்லா பள்ளி நினைவுகளையும் ரசிச்சு சிரிச்சேன்.//
வாங்க விக்னேஷ்வரி,
வருகைக்கும் ரசிச்சு சிரிச்சதுக்கும் நன்றிங்க.
:)
//"மிஸ் திஸ் பாய் இஸ் கில்லிங் மீ மிஸ்"//
அது கிள்ளிங்தானே ?
//"டேய்! அவன் ஷுல சாணியை மிதிச்சிட்டு வந்திருக்காண்டா"
"சீத்தாங்கோல் விடுடா"//
அது ஷிட் ஆன் கால் ஆக இருக்குமோ?
:-)
beautiful memories....:)) same blood in many of these.
yaaruku? yaruku?! vayasagiducha? adhellam mathavanga solradhu, nambadhinga uncle! neenga enikume youth 35 thaan :)
Post a Comment