சின்ன வயசுல ஹிஸ்டரி மிஸ் திட்டித் திட்டித் தலையில ஏத்துன ஒரு விஷயம் - கேள்விகளுக்குப் பதில் எழுதும் போது வளவளன்னு பத்தி பத்தியா எழுதாம சுருக்கமா பாயிண்ட் பாயிண்டா எழுதனும்ங்கிறது தான். இதுக்காகவே நம்ம தோஸ்த் 'மன்னாரு'(பட்டப்பேரு தான்), பச்சை, சேப்பு, நீலம்னு கலர் கலரா பேனா கொண்டாருவான். அப்படி பேனா கெடக்கலைன்னா ஒரு க்ரேயான் பென்சில் வச்சாவது ஒரு நாலு வரி எழுதிட்டு நாப்பது அண்டர்லைன் பண்ணிக் காட்டிடுவான். சும்மா சொல்லப்பிடாது...இந்த உத்தியால மார்க்குகளையும் அள்ளிடுவான். கடந்த சில மாதங்களா அவ்வளவா ப்ளாக் பக்கம் வர முடியாத படிக்கு ஏகப்பட்ட ஆணி. அந்த அக்யாத வாசம் பீரியட்ல நடந்ததையெல்லாம் பாயிண்ட் பாயிண்டா அண்டர்லைன் பண்ணி எழுதலாம்னு தோணுனதுல விளைஞ்சது இந்தப் பதிவு.
1. ஆச்சுங்க...மாஸ்டர்லேருந்து மிஸ்டர் ஆகி ஒரு மாசத்துக்கும் மேல ஆச்சு :))) அவுட்.....டேய்னு போட்ட பதிவுக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். வாழ்த்துனவங்க, கலாய்ச்சவங்கன்னு லிஸ்ட் போட்டா அது ரொம்ப பெருசா போயிடும். எல்லாரோட அன்புக்கும் என்ன கைம்மாறு செய்யப் போறேன்னு தெரியலை. மனசு நெறைஞ்ச மகிழ்ச்சியோட எல்லாரோட அன்புக்கும் தலைவணங்கி எனது நன்றிகளைத் தெரிவிச்சிக்கிறேன்.
2. கிடாவெட்டு விழாவுக்கு சங்கத்து சிங்கங்கள் தேவ், பாண்டி, கப்பி, தள சிபி, பாலராஜன் கீதா சார், சென்னப்பட்டிண உறவுகள் பேராசிரியர் பாலா பாய், பொன்ஸ், மா.சிவகுமார் சார், ஆகியோர் வந்து சிறப்பிச்சிருந்தாங்க. தம்பி, கோவி கண்ணன்(உங்க ரெண்டு பேத்து பேருலயும் கள்ள வோட்டு போட்டுட்டாய்ங்கய்யா...பதிவர் பட்டறையிலும் ரிப்பீட்டேய்...யாரு அந்த கறுப்பு ஆடுன்னு கண்டுபிடிங்கோ). தனித்தனியா யாரையும் கவனிக்க முடியலை...மன்னிக்கனும். எல்லாமே ஜெட் ஸ்பீட்ல போய்க்கிட்டிருந்துச்சு.
3. ஆமதாபாளையத்துல இருந்த ஆணி எல்லாம் புடுங்கி முடிச்சதும். தேவையில்லாத ஆணியெல்லாம் புடுங்க விதி நம்மளை அனுப்பி வச்ச ஊரு பெங்களூரு...(பெண்களூருன்னு எல்லாரைப் போலவும் தெகிரியமா சொல்ல ஆசையிருந்தாலும், முழி நோண்டப்படும் அபாயம் இருக்கறதுன்னால அடக்கியே வாசிச்சிக்கிறேன்...அதோட எட்டப்பனுங்க எல்லா பக்கமும் வேற இருக்காய்ங்க). அப்புறம் பெங்களூர்ல, 'கண்டேன் ராயலை டேஷ் டேஷுக்கு அணியாய்', டேஷ் டேஷ்ல யாராருக்கு என்னென்ன தோணுதோ நிரப்பிக்கோங்க. ராயல் நல்ல புள்ளன்னு எனக்கு முன்னாலேயே தெரியும். ஆனா ராயல் கூட இருந்தவரு தான் 'பால் போல கள்ளும் உண்டு, நிறத்தாலே ரெண்டும் ஒன்று'ன்னு பாட வச்சிட்டாரு :)
4. உலகம் சுற்றும் வாலிபி அம்மா, அவுட்...டேய் பதிவுல எல்லாரோடையும் சேர்ந்து என்னை கலாய்ச்சிட்டு, மறுநாள் ரொம்ப அன்போட வாழ்த்தி ஒரு பின்னூட்டம் போட்டிருந்தாங்க. படிச்சிட்டு உண்மையிலேயே ரொம்ப நெகிழ்ந்து போயிட்டேன்...உங்களுக்கும் ரொம்ப நன்றிம்மா.
5. என்னிக்காச்சும் சன் டிவி நீங்கள் கேட்ட பாடல்ல விஜயசாரதி பேட்டி எடுத்து 'திருமணத்துக்கப்புறம் நீங்க பார்த்த முதல் படம் எது'ன்னு கேட்டா 'சிவாஜி'ன்னு சொல்லிக்கலாம். ஷ்ரேயா ஓவரா க்ளாமர் காட்டியிருக்காங்கன்னு ஏற்கனவே கேள்விபட்டிருந்ததுனாலயும், பக்கத்துல தங்கமணி இருந்ததுனாலயும் ஷ்ரேயா வர சீன்கள்ல மட்டும் நல்ல புள்ளயா கண்ணை மூடிக்கிட்டேன். அட...ஒரு நல்ல இம்ப்ரெஷன் பில்ட் பண்ணா உங்களுக்கெல்லாம் பொறுக்காதே...உடனே தாக்கி பின்னூட்டம் போட்டுருவீங்களே? பேராசிரியர் சாலமன் பாப்பையா...என்னத்த சொல்ல? ரொம்ப வருத்தப்பட வச்சிட்டாரு...நல்லாத் தானேங்கய்யா இருந்தீங்க? என்னாச்சு?
6. கிண்டி டைம்ஸ் : ஜிசிடி நினைவுகள்ங்கிற பதிவு எழுதி ஒரு வருஷம் ஆன போதிலும், ஒரு வருஷத்துக்கப்புறமும் அதை படிச்சிட்டு மறக்காம பின்னூட்டம் போட்டிருந்தாங்க மங்கை மேடம். அப்பவே அவங்களுக்கு நன்றி சொல்லனும்னு நெனைச்சேன்...better late than never...ரொம்ப நன்றி மேடம்.
7. பதினாறு வயசு சின்னப்பொண்ணு சங்கத்தின் நிரந்தர தலைவி(வலி) பாட்டியாகிட்டாங்க. பாட்டியான சந்தோஷத்துல எப்பவும் மொக்கை பதிவா போட்டு அம்பியைக் கதி கலங்கடிச்சிட்டு இருந்தவங்க ஜாலியான பதிவெல்லாம் போட ஆரம்பிச்சிட்டாங்க. பின்னூட்டம் போடலைன்னாலும் உங்க வீட்டு பக்கம் அப்பப்போ வந்துக்கிட்டுத் தான் இருக்கேங்கிறதுக்கு இதுவே சாட்சி.
8. தடிப்பசங்கள்ல சின்னவரு...முரளி...அதாங்க என் தம்பி, அகில இந்திய வானொலியின் ரெயின்போ எஃப் எம்ல பகுதி நேர வானொலி குதிரையோட்டியா(அதாங்க பார்ட் டைம் ரேடியோ ஜாக்கி) இருக்காரு. மாலை ஐந்து மணிக்கு ஒலிபரப்பாகும் 'நெட்வர்க் நேரம்'ங்கிற நிகழ்ச்சியையும், ஆறு மணிக்கு ஒலிபரப்பாகும் 'மெலடிஸ் ஃப்ரம் மெரினா'ங்கிற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிட்டிருக்காரு. எத்தனை பேரு இன்னும் வானொலியைத் தவறாம கேக்கறாங்கங்கிறதுக்கு நேயர்களிடமிருந்து அவருடைய நிகழ்ச்சிக்கு வரும் பாராட்டு கடிதங்களே சான்று. ஒரு சகோதரனாய் நான் மகிழ்ச்சியடையும், பெருமைப்படும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. ஆகஸ்டு 15 அன்னிக்கு டிவி நாடக பிரபலம் பாஸ்கி அவர்களை என் தம்பி எடுத்த பேட்டி சென்னை பண்பலை வரிசை 101.4 MHZ ரெயின்போ எஃப் எம்மில் ஒலிபரப்பாகிறது. முடிஞ்சா கேட்டுப் பாருங்க.
9. மலேசிய மாரியாத்தா மை ஃபிரெண்டோட(இந்தப் பதிவில செமத்தியா சாமியாடிட்டாங்க) கூட்டு சேர்ந்துக்கிட்டு ராயல், பாண்டியா, போலீஸ்கார் இவங்களோட சின்ன குழந்தை பவன் கூட என்னை கலாய்ச்சதை கண்டு எக்கச்சக்கமா ஃபீல் பண்ணிப் பின்னூட்டம் போட்டிருக்கற மாயவரத்து அசாருதீன், துபாய் கா தோஸ்த் அபி அப்பாவுக்கு டன் கணக்குல டேங்கீஸுங்கோ. உங்க பாசத்தைக் கண்டு...எக்கச்சக்கமா கண்ணு கலங்குதுங்க...நீங்க ரொம்ப நல்லவருங்கோ...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். உங்க ஆசை படியே அடுத்த ஜென்மத்துலயாவது தீபா வெங்கட்டுக்கு நீங்க தாத்தாவா பொறக்க மனமாற வாழ்த்திக்கிறேன்.
10. தலைப்பு? மேட்டர் இல்லாம தலைப்பு வெப்பேனா. காலையில ஆப்பீஸ் போகும் போது எஃப் எம்ல கேட்ட ஒரு கன்னட பாட்டு கேக்கறதுக்கு ரொம்ப நல்லாருந்துச்சு. அந்த பாட்டு தான் ஹுடுகி...ஹுடுகி...(தமிழ்ல பாடுனா 'பெண்ணே...பெண்ணே). கீழே இருக்கு பாருங்க. படத்தோட பேரு ஐஸ்வர்யா. நடிச்சிருக்கறவங்க பேரு தீபிகா படுகோனே...முன்னாள் பூப்பந்தாட்ட வீரர் பிரகாஷ் படுகோனேவின் மகள் இவர்...பிரபல மாடல்...லீவைஸ் விளம்பரப் படத்துலயும் நடிச்சிருக்காங்க. அவங்க கூட உடற்பயிற்சி பண்ணறவரு பேரு உபேந்திரா. என்ன தான் வீடியோன்னாலும் அடக்க ஒடுக்கமா கண்ணை மூடிக்கிட்டதால அம்மணியைப் பாத்துட்டு 'சக்க த ஹாட் மகா'ன்னு(செம ஹாட் மச்சின்னு) பசங்க எல்லாம் சொல்லறதை வெறுமனே காதால மட்டும் தான் கேக்க முடிஞ்சது. அவங்க சொல்றது நெசம் தானுங்களா? :)
Wednesday, August 08, 2007
ஹுடுகி...ஹுடுகி...
Subscribe to:
Post Comments (Atom)
41 comments:
Curtain Raiser?
Mee the Firstuu
Thalai, Enna full boostta...
கைப்புள்ள!
இது அநியாயம்! கல்யாணத்துக்கு என்னை கூப்புடவே இல்லைன்னு கோச்சுக்கிட்டு மூஞ்சை துக்கிவைச்சுக்கிட்டு பின்னூட்டம் போட்ட என்னைப்பத்தி ஒரு கலர் லைனு வேண்டாம்! சாதா லைனுல கூட சொல்லலை! :(
அதனால இப்ப கோச்சுக்கிட்டு நீர் போட்டிருக்கற பாட்டை பார்க்க மாட்டேன்! கேக்க மாட்டேன்!
(அம்மணி அநியாய ஒசரம்! ஹிஹி...)
தல,
இந்த வீக்கெண்ட்'லே பயங்கர சேதாரம்'னு கேள்விப்பட்டேனே???
சங்கத்திலே ரெகுலரா பூரிக்கட்டை விக்கிறவரு இன்னும் வரலை.... :)
வந்ததும் சென்னைக்கு ரிஜஸ்டர் போஸ்ட்'லே அனுப்பி வைச்சிறேன்..
Welcome back thala...
சிங்கம் களம் இறங்கிடுச்சுடோய்!
வாழ்த்துகள்!
கால்கட்டு விழுந்தததும்
கைகட்டிப் போட்டாச்சா?
ம்ம்ம்ம்ம்., முழு வேகத்தோட வந்தாச்சு போலிருக்கு! வாங்க, வாங்க! :P
வாங்க வாங்க கைப்புள்ள...ஹுடுகி உடுக்கி பந்திதீரா...ஈத்தர ஹாடு நோடிதரே....பாடு பெரும்பாடப் போயிருமய்யா! நோடுக்கொள்ளி. :)
வந்துட்டீரா? வாரும் வாரும். கொசுவர்த்தி எல்லாம் சுத்தி முடிச்சாச்சு இல்லை, இனிமேலாவது எதாவது உருப்படியா பதிவு போடற வழியைப் பாரும். :))
//Curtain Raiser?//
எதுக்குங்க விவாஜி? தெளிவாச் சொல்லுங்க சாமி :))
//Thalai, Enna full boostta...//
ஹி...ஹி...எவ்வளவு தம் கட்ட முடியுதுன்னு பாப்போம்.
:)
//கல்யாணத்துக்கு என்னை கூப்புடவே இல்லைன்னு கோச்சுக்கிட்டு மூஞ்சை துக்கிவைச்சுக்கிட்டு பின்னூட்டம் போட்ட என்னைப்பத்தி ஒரு கலர் லைனு வேண்டாம்! சாதா லைனுல கூட சொல்லலை! :(//
ஐயயோ! தப்பு நடந்து போச்சு. ஆசானே மன்னிக்கனும். அடுத்த வாட்டி தனி போஸ்டே வேணா போட்டுடறேன்.
//அதனால இப்ப கோச்சுக்கிட்டு நீர் போட்டிருக்கற பாட்டை பார்க்க மாட்டேன்! கேக்க மாட்டேன்!
(அம்மணி அநியாய ஒசரம்! ஹிஹி...) //
ஹி...ஹி...சேம் ப்ளட் போலிருக்கு. பாக்கலை கேக்கலைன்னா ஒசரம் எப்படி தெரியும்னு கேக்க மாட்டேனே? என்னைய மாதிரியே பக்கத்துல இருந்து பாத்து கேட்ட பயலுங்க சொன்னதை கேட்டுத் தான் நீங்க சொல்றீங்கன்னு நல்லா புரிஞ்சிக்கிட்டேன். அது கூட புரியாத மாங்கா மடையனா?
:)
//சங்கத்திலே ரெகுலரா பூரிக்கட்டை விக்கிறவரு இன்னும் வரலை.... :)
வந்ததும் சென்னைக்கு ரிஜஸ்டர் போஸ்ட்'லே அனுப்பி வைச்சிறேன்..//
//அதோட எட்டப்பனுங்க எல்லா பக்கமும் வேற இருக்காய்ங்க//
வாய்யா ராயலு! மேலே சொல்லிருக்கறதுக்கும் உன்னோட கமெண்டுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கெடயாது...
//Welcome back thala...//
வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி சரண்யா.
//சிங்கம் களம் இறங்கிடுச்சுடோய்!//
தள...இப்ப என்ன பண்ணறதா உத்தேசம்?
:)
//கால்கட்டு விழுந்தததும்
கைகட்டிப் போட்டாச்சா?//
வாங்க சார்,
சரியாச் சொன்னீங்க. கால்கட்டு, கைகட்டு எல்லாம் ரொம்ப சின்ன வார்த்தை. Straitjacketக்கு உள்ளே இருந்து தான் பதிவே எழுதிருக்கேன். சுருக்கமாச் சொல்லனும்னா "கையது கொண்டு மெய்யது பொத்தி காலது கொண்டு மேலது தழீஇ" அந்த மாதிரி தான்.
:)
//ம்ம்ம்ம்ம்., முழு வேகத்தோட வந்தாச்சு போலிருக்கு! வாங்க, வாங்க! :P//
தொண்டனை மறவாது வந்து வாழ்த்தியிருக்கும் தலைவிக்கு ஒரு பெரிய ஓஓஓஓஒ
:)
//வாங்க வாங்க கைப்புள்ள...ஹுடுகி உடுக்கி பந்திதீரா...ஈத்தர ஹாடு நோடிதரே....பாடு பெரும்பாடப் போயிருமய்யா! நோடுக்கொள்ளி. :)//
வாங்க ஜிரா,
என்னங்க இப்படி அவுட் ஆஃப் சிலபஸ்லேருந்து எல்லாம் கன்னடம் பேசுனா எனக்கு எப்படி புரியும்? இருந்தாலும் இப்ப இருக்கற அடக்கம் பத்தாது...இன்னும் பம்மனும்னு மட்டும் நீங்க சொல்றதுலேருந்து புரியுது. நோடுகொள்தினி.
:)
//இனிமேலாவது எதாவது உருப்படியா பதிவு போடற வழியைப் பாரும். :))//
சீக்கிரமா ஒரு மொக்கைப் பதிவோட திரும்பி வரேங்க. போன பதிவுல 50 அடிக்க நீங்க உதவி செஞ்சதை அண்டர்லைன் பண்ணிக் காட்டலன்னாலும், கண்டிப்பா மனசுலேயே இருக்கு.
:)
நம்மள நியாபகம் வச்சுட்டுதுக்கு நன்றி கண்ணு...
தங்கச்சி..கோவைன்னு கேள்விப் பட்டேன்...அப்படியா?..
அந்த நல்ல உள்ளத்தின் வைப்ரேஷன் தான்...இப்படி பதிவா வருது..:-))))
வாழ்த்துக்கள்..கைப்ஸ்...
வாங்க தல...
நீங்க சாப்பாட்டுக்கு பதில் மெமரி ப்ளஸ் சாப்பிடுவீங்கன்னு பேசிக்கறாங்களே உண்மையா தல? :)))
கைப்புள்ள said...
//சிங்கம் களம் இறங்கிடுச்சுடோய்!//
தள...இப்ப என்ன பண்ணறதா உத்தேசம்?
:)
சிபி இன்னும் நம்ம வேண்டுதல் பற்றி கைப்பு கிட்ட சொல்லலீயா?
கிடாவெட்டு நல்ல படியா முடிஞ்ச பிறகு முண்டகண்ணிக்கு கோயிலுக்கு கைப்பு மூக்கில் அலகு குத்தி முப்பது கிலோ மீட்டர் உருண்டு வருவாருன்னு நீங்க அங்க வேண்டிக்கிட்டிங்க, பிறகு சமயநல்லூர் மாரியாத்தாவுக்கு பூ மிதிப்பார் என்று வேண்டிக்கிட்டிங்க! இதல்லா எப்ப சொல்ல போறீங்க.
"பக்கத்துல தங்கமணி இருந்ததுனாலயும் ஷ்ரேயா வர சீன்கள்ல மட்டும் நல்ல புள்ளயா கண்ணை மூடிக்கிட்டேன்."
ஹா ஹா ஹா எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டிங்க.
சரி சரி கால்கட்டுன்னு ஏதோ சொல்றீங்க அந்த அளவுக்கு சேதாரமாகி போச்சா? எதையும் தாங்கும் உடம்பாச்சே!!!
(ய்பா பிள்ளைங்களா இத கைப்பு தங்கமணி படிப்பாங்க அதனால அவரு கேர்ள் பிரண்டஸ் பத்தி யாரும் மூச்சு விட்டுடாதீங்க(ஒரு 40 ,50 பேரு இருப்பாங்களா தள?) எல்லாருக்கும் தனி மடல் போட்டு சொல்லிடலாம். இனி இந்த பக்கம் வராதீங்கன்னு.
மூச்சு விடாம இருக்கமுடியலை...
இராம் said...
"வந்ததும் சென்னைக்கு ரிஜஸ்டர் போஸ்ட்'லே அனுப்பி வைச்சிறேன்.. "
இராம் ரிஜிஸ்டர் போஸ்ட் லேட் ஆகும்ய்யா!! கூரியர்ல அனுப்பிடலாம் :) இல்ல நாமலே ஓடி போய் கைல கொடுத்துட்டு வந்துடலாம்:)
வாங்க தல. இந்த அடியவன் பேரை உங்க பதிவுல பாத்து புல்லரிச்சு போனேன். :)
என்னய கல்யாணதுக்கு கூப்டலை. (நீ கூப்டியாடா?னு மடக்க கூடாது)
எனக்கு வந்த ஒரு வால் கிலாக்கை மொய்னு சொல்லி உங்களுக்கு தள்ளி விட்ருலாம்னு பார்த்தேன். :p
ok, பெங்களுரில் எங்கே?
வீடியோ எல்லாம் வீட்டுல தங்கமணி இல்லாத நேரமா பாத்துக்கறேன். :p
பாவி பய நெட்வர்க் அட்மின், எல்லா சைட்டையும் (வெப்சைட்டுங்கண்ணா) பிலாக் பண்ணி இருக்கான். :)
//நம்மள நியாபகம் வச்சுட்டுதுக்கு நன்றி கண்ணு...//
நியாபகம் வச்சிக்கிட்டதுக்கு நான் இல்ல மேடம் நன்றி சொல்லனும்?
:)
//தங்கச்சி..கோவைன்னு கேள்விப் பட்டேன்...அப்படியா?..
அந்த நல்ல உள்ளத்தின் வைப்ரேஷன் தான்...இப்படி பதிவா வருது..:-))))
வாழ்த்துக்கள்..கைப்ஸ்...//
வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி மேடம். ஆனா உங்க தங்கச்சி கோவையைச் சேர்ந்தவங்க இல்ல...அவங்க சொந்த ஊர் வாலாஜா.
//வாங்க தல...//
நன்றி பாலாஜி
//நீங்க சாப்பாட்டுக்கு பதில் மெமரி ப்ளஸ் சாப்பிடுவீங்கன்னு பேசிக்கறாங்களே உண்மையா தல? :)))//
வை திஸ் கொலை வெறி மை டியர்? இருந்தாலும் ஸ்டாம்பும் காயினும் ஓசியில குடுத்த மவராசன் நீயு...அந்த பாசத்துக்குக் கட்டுப்படறேன்.
//பேசிக்கறாங்களே//
யாருன்னு சொல்லு பதில் சொல்றேன்
//கிடாவெட்டு நல்ல படியா முடிஞ்ச பிறகு முண்டகண்ணிக்கு கோயிலுக்கு கைப்பு மூக்கில் அலகு குத்தி முப்பது கிலோ மீட்டர் உருண்டு வருவாருன்னு நீங்க அங்க வேண்டிக்கிட்டிங்க, பிறகு சமயநல்லூர் மாரியாத்தாவுக்கு பூ மிதிப்பார் என்று வேண்டிக்கிட்டிங்க! இதல்லா எப்ப சொல்ல போறீங்க.//
எல்லாமே ரொம்ப சிம்பிளான வேண்டுதலா இருக்கேன்னு தள மயங்கி நின்னுக்கிட்டு இருப்பாருன்னு நெனக்கிறேன்...அப்படித் தானே தளபதி?
:)
//(ய்பா பிள்ளைங்களா இத கைப்பு தங்கமணி படிப்பாங்க அதனால அவரு கேர்ள் பிரண்டஸ் பத்தி யாரும் மூச்சு விட்டுடாதீங்க(ஒரு 40 ,50 பேரு இருப்பாங்களா தள?) எல்லாருக்கும் தனி மடல் போட்டு சொல்லிடலாம். இனி இந்த பக்கம் வராதீங்கன்னு//
குசும்பா! ராசா...குடும்பத்துல குழப்பத்தை வெளவிக்கனும்னே ஒரு குரூப்பா கெளம்புனாப்புல இருக்கு...நல்ல்லாருங்கய்யா.
:(
//தம் கட்டுபவன் said...
மூச்சு விடாம இருக்கமுடியலை...//
தம் கட்டுபவர் மட்டும் தான் வந்துருக்காரு? அலகு குத்துபவன், 30 கிமீ உருட்டுபவன், பூ மிதிக்க பூ முடிப்பவன் இவிங்க எல்லாம் பின்னால வராங்களாக்கும்?
:(
//இராம் ரிஜிஸ்டர் போஸ்ட் லேட் ஆகும்ய்யா!! கூரியர்ல அனுப்பிடலாம் :) இல்ல நாமலே ஓடி போய் கைல கொடுத்துட்டு வந்துடலாம்:)//
இன்னும் கல்யாணம் ஆகலியா கண்ணு? யானை, பூனை, காலம் இத மூனத்தையும் சேத்து ஒரு பயமொயி இருக்கு...அத மறக்க வேணாம்.
:)
//வாங்க தல. இந்த அடியவன் பேரை உங்க பதிவுல பாத்து புல்லரிச்சு போனேன். :)
என்னய கல்யாணதுக்கு கூப்டலை. (நீ கூப்டியாடா?னு மடக்க கூடாது)//
அப்படியில்ல அம்பி...நான் உங்க மெயில் ஐடியைக் கேட்டு மு.கார்த்திகேயனுக்கு மெயில் அனுப்புனேன்...அவரு கிட்டேருந்து ரிப்ளையே வரலை...எப்படியும் தலைவி சொல்லிருப்பாங்கன்னு விட்டுட்டேன்.
:(
//எனக்கு வந்த ஒரு வால் கிலாக்கை மொய்னு சொல்லி உங்களுக்கு தள்ளி விட்ருலாம்னு பார்த்தேன். :p//
வால் கிலாக் இங்கேயும் குமிஞ்சு கெடக்கு...மலிவு விலையில் வால் கிலாக் கிடைக்கும்னு போர்டு போட்டு கடை போட்டுரலாமானு பாக்குறேன். உங்களுக்கு வால் கிளாக் வேணுமா?
:)
//ok, பெங்களுரில் எங்கே?//
இப்போதைக்கு c/o.கெஸ்ட் அவுஸ் தான்.
//வீடியோ எல்லாம் வீட்டுல தங்கமணி இல்லாத நேரமா பாத்துக்கறேன். :p//
ஆமாமா...இல்லன்னா உயிருக்கு ஆபத்து...சொல்லிட்டேன்.
//பாவி பய நெட்வர்க் அட்மின், எல்லா சைட்டையும் (வெப்சைட்டுங்கண்ணா) பிலாக் பண்ணி இருக்கான். :)//
ரைட்டு...நல்ல காலம் தெளிவு படுத்துனீங்க.
:)
கைப்பு அங்கிள்
வாங்க, வாங்க! வாழ்த்துக்கள் Welcome back.
expecting குயி...குயி...குயிஜு
I am the 37th...
Ogey..Start mujik...
தல!
அண்ணிக்கு அந்த ஃபோட்டோவைக் காட்டுனீங்களா தல?
அதான் அந்த பல்பு ஃபோட்டோ!
ஆத்தா!
எங்க கைப்புள்ளைக்கு இன்னிக்கு அலகு குத்தப் போறோம்!
வலிக்காத மாதிரி அவரை நடிக்க வைச்சுடியம்மா!
அவரு சக்ஸஸ்ஃபுல்லா நடிச்சிட்டார்னா அப்படியே ஆயிரங்கால் மண்டபத்தைச் சுத்தி அங்கப் பிரதட்சணம் செய்ய வைக்கிறோம் அவரை!
ஏய் சீக்கிரம் கெடா வெட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா ! தல சிலுப்பிகிட்டு வந்துருச்சில்ல!???:)))) !!!
bandri கைப்ஸ் !! போஸ்ட்டு சக்கத்தாகிதே !! :)))))
Post a Comment