Monday, August 14, 2006

யப்பா...ஷெர்லாக் ஹோம்ஸுங்ளா...

நானும் களுதை இந்தப் படம் போடப் பிடாது...போடப் பிடாதுன்னு தான் பாக்குறேன், ஹூ...ம் ஒன்னும் முடியலை. படமாப் போட்டுத் தள்ளுனா 'படம் எடுக்கற பய'ன்னு நம்மளை கட்டம் கட்டி ஓரமா ஒக்கார வச்சிடுவாங்கன்னு படத்தைக் கையிலே வச்சிக்கிட்டு வேற எதாச்சும் எழுதறதுக்கு ரெண்டு நாளா முயற்சி பண்ணேன். எதுவும் வர்க் அவுட் ஆகலை. அதுனால இதுவும் 'படம் பார்த்து கதை சொல்' தான்.

சித்தூர்கட்லேருந்து மும்பைக்கு வர்ற வழியில உதய்பூரைச் சுத்திப் பாக்கப் போனோம். காலையில உதய்பூரைச் சுத்திப் பாத்துப் போட்டு சாயங்காலமா வண்டி ஏறி மும்பைக்கு வந்துட்டேன்(அப்பா...தனி டிராக் ஓட்டாம மும்பைக்கு என்னை கொஞ்ச நாள் தொரத்தி வுட்டத வெற்றிகரமாச் சொல்லியாச்சு). உதய்பூர்ங்கிறது ராஜஸ்தான் மாநிலத்துல இருக்கு. அங்கே எடுத்த படங்களை எல்லாம் போட்டா இது ராஜஸ்தானான்னு ஆச்சரியமா இருக்கும். அந்தளவுக்கு ராஜஸ்தான் பத்தி இருந்த தப்பான நம்பிக்கைகளை எல்லாம் தகர்த்து எறிய வச்ச ஒரு ஊரு உதய்பூர். அக்பரை எதிர்த்து போரிட்ட மஹாராணா பிரதாப்பின் தலைநகர் உதய்பூர். ரக்ஷா பந்தன் அன்னிக்கு நான் உதய்பூர்ல இருந்தேன். அங்கே ஊர் சுத்திப் பாத்து, புடிச்சப் படங்களை அப்புறமாப் போடறேன்(பதிவு கணக்கை பின்னே எப்பிடி ஏத்துறதாம்?)

இப்பல்லாம் எந்தப் பக்கம் திரும்பனாலும் ஃப்ரேம் ஃப்ரேமாவே தெரியுதா...அதுனால கார்ல போவும் போது கேமராவைத் தயாரா வச்சிக்கறது. ஆனா நம்ம கலை தாகத்தைப் புரிஞ்சுக்க(!) முடியாத நம்ம கூட இருந்த பயலுக பைக்ல பாய் ஃப்ரெண்டோட போற புள்ளையையும், "டைட்டீஸ்" போட்டுக்கிட்டு உதய்பூர் பேலஸ்ல சுத்திப் பாத்துட்டு இருந்த ஒரு வெள்ளைக்காரப் புள்ளையையும் படம் புடிக்கச் சொல்லிப் படுத்தியெடுத்துட்டானுவ. "யய்யா...நான் ஒரு கலைஞன்யா...இந்த மாதிரி அடுத்தவங்க பிரைவேசியில தலையிடற பாவமெல்லாம் ஒரு கலைஞன் பண்ணப்பிடாது"ன்னு சொல்லிப் புரிய வக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு.

சரி...கீழே இருக்குற இந்தப் படத்தைப் பாருங்க. நான் எடுத்தப் படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தப் படங்களில் ஒன்றுன்னு இதை பத்திச் சொல்லலாம். கார்ல போய்க்கிட்டு இருக்கும் போது விண்ட்ஸ்க்ரீன் வழியாப் பாத்தா நமக்கு முன்னாடி ஒரு தாத்தாவும் பேத்தியும் ஸ்கூட்டர்ல போய்க்கிட்டு இருக்காங்க. ஸ்கூட்டர்ல பெரும்பாலும் சின்னக் குழந்தைகளை முன்னாடி நிக்க வச்சு கூட்டிட்டுப் போறதை தான் பாத்துருக்கேன். ஆனா தாத்தா பின்னாடி சமத்தா ஒக்காந்துட்டு போற அந்த குழந்தையைப் பாத்ததும் படம் எடுக்கனும்னு கை துறுதுறுன்னுச்சு. அந்த காட்சியைப் பாக்கறதுக்கே ரொம்ப க்யூட்டா இருந்துச்சு. என்னென்னமோ எண்ணங்கள்...சுருக்கமா சொல்லனும்னா ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி அவ்வளவு தான் இப்போதைக்குச் சொல்ல முடியுது. கார்ல டிரைவர் சீட்டுக்குப் பின் சீட்டுல ஒக்காந்திருந்தேன். பயலுக ஓட்டு ஓட்டுன்னு ஓட்டுறானுங்க இனிமே படம் எடுக்கக் கூடாதுன்னு பொட்டலம் கட்டி ஜோபியில வச்சிருந்த கேமராவை அவசர அவசரமா வெளியில எடுத்து விண்ட்ஸ்க்ரீன் வழியாவே புடிச்சது இந்தப் படம். அப்புறம் இன்னுமொன்னு...இந்தப் படத்தைப் பாத்துட்டு "உறவுகள்"ங்கிற தலைப்புல கவிதை எழுதனும்னும் முயற்சி பண்ணேனுங்க. அதுவும் வேலைக்காவலை. நீங்க யாராச்சும் ஒரு ட்ரை வுடுங்களேன்.

பெரிய சைஸ்ல எடுக்கப்பட்ட இந்தப் படத்தைத் தாத்தாவையும் பேத்தியை மட்டும் ஜூம் பண்ணி தனியா கீழே போட்டுருக்கேன். படத்தை அப்புறமா பாக்கும் போது ஒரு ஆச்சரியம். எடுக்கும் போது தெரியாத ஒரு சேதி...இந்தப் படத்தைக் கம்ப்யூட்டர் திரையில பாக்கும் போது தெரிஞ்சது. ஒரு (ஒரு சின்ன க்ளூ: படத்திலுள்ள தாத்தாவுக்கும் பேத்திக்கும் தொடர்புள்ள ஒரு விசயம் தான்) உங்களுக்குத் தெரியுதுங்ளா ஷெர்லாக் ஹோம்ஸுங்ளா?

82 comments:

Unknown said...

மோகன் உன் ஆரம்பக் கால பதிவுகளை ஞாபகப்படுத்தும் அதே கலகலப்பான நடை. ஆமா அது என்ன மேட்டர் நம்ம ட்ரிடாப் ஹெட்க்கு எதுவும் விளங்கல்லயே ராசா

siva gnanamji(#18100882083107547329) said...

fine

நாகை சிவா said...

வர வர ஒப்பேத்தும் பதிவு போடுவது எப்படி என்பதில் நல்லா தேறிக்கிட்டு வருரீர்.

சரி தேவையில்லாம ஷெர்லாக் பெயர எல்லாம் இழுத்ததுனால நானும் படத்தை உத்து உத்து பார்த்தேன். பெரிசா சொல்லுறத்துக்கு ஒன்னும் இல்லயே அந்த படத்தில்.....

அந்த குட்டி பாப்பா, வீச்சு தாங்காமல் ஒரு கையால் மூக்கை பொத்தி உள்ளது. அந்த வீச்சுக்கு காரணம் எல்லாம் என்ன கேட்க கூடாது.
மறு கையால் பொறுப்பாக வண்டியின் கம்பியை பிடித்து பாதுக்காப்பாக அமர்ந்து உள்ளது. நல்ல பாப்பா.
கையில ஏதோ கயிறு எல்லாம் கட்டி இருக்கு. ராக்கியாக இருக்குமோ சே சே வேற எதாச்சும் பேஷ்ன் கரும்மா இருக்கும். வண்டி அக்டிவா தான். தாத்தா நல்ல வெள்ளையும் ஜொள்ளையுமா இருக்காரு. பாப்பா தலையில் நல்ல அழகு அழகா நிறைய ஹேர் பின் வச்சு இருக்கு.
இவங்களுக்கு எதிர்தரப்பில் மகேந்திரா... இல்ல நீங்க தாத்தா பேத்திய மட்டும் தானே சொன்னீங்க. அம்புட்டு தாங்க. வேற எதாச்சும் தெரிஞ்சா அப்புறம் வந்து சொல்லுறேன்.

நாமக்கல் சிபி said...

நம்ப மண்டைக்கு ஒண்ணும் விளங்கலயேப்பா!

தருமி said...

நானும் வாசிக்கிறதுக்கு முந்தி போட்டோவை உத்து உத்துப் பார்த்தேன் - ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரி. எனக்கென்னவோ நீங்க அந்த தாத்தா-பேத்தி வண்டிக்கு முன்னால் ரெண்டு பேரு போய்க்கிட்டுருந்தவங்க சடார்னு வண்டிய நிப்பாட்ட, பின்னால் இருக்கிறவரு கையில துப்பாக்கி மாதிரி ஏதோ தெரிய...பயங்கர கற்பனை பண்ணிக்கிட்டே உங்க பதிவை வாசிச்சா..

ALIF AHAMED said...

என்னத்த சொல்ல

பாப்பா விரல வாயில வச்சுருக்கு!!!

பாப்பாவால முன்னாடி பாக்க முடியல.!!சைடுல பாக்குது!!!

தாத்தா உஜாலாக்கு மாறிட்டாரா!!!

மழை நல்லா பெய்கிறது அங்க!!

(கேள்வி கேட்டு அப்புறம் கயவன் பதில் போடு!!! மறக்காம வந்து தெரிஞ்சுகிறேன்:::)

ALIF AHAMED said...

நாமக்கல் சிபி @15516963 said...
நம்ப மண்டைக்கு ஒண்ணும் விளங்கலயேப்பா!
/./

அறிவு ஜீவி சுவாமிக்கே தெறியல்லையா??

தப்பு தப்பா படம் எடுத்த தலய என்ன செய்யலாம் தள...

ALIF AHAMED said...

இப்பவே லுக்கு உடுதா....!!!

ஜொள்ளு பைக்குல ஏற இப்பவே ட்ரைனிங்கா!!!! ::)))

ஷெர்லாக் ஹோம்ஸுங்ளா..."

எதாவது விளம்பரமா..ஐய்யயோ அதெல்லாம் நான் பாக்குறது இல்லையே.::((

ALIF AHAMED said...

/./
ஸ்கூட்டர்ல பெரும்பாலும் சின்னக் குழந்தைகளை முன்னாடி நிக்க வச்சு கூட்டிட்டுப் போறதை தான் பாத்துருக்கேன். ஆனா தாத்தா பின்னாடி சமத்தா ஒக்காந்துட்டு போற அந்த குழந்தையைப் பாத்ததும்.
/./

ஷெர்லாக் குடிச்சதால முன்னாடி உக்காந்து இருக்குனு தலைப்பு கொடுத்திட்டியா..

ALIF AHAMED said...

/./
ஸ்கூட்டர்ல பெரும்பாலும் சின்னக் குழந்தைகளை முன்னாடி நிக்க வச்சு கூட்டிட்டுப் போறதை தான் பாத்துருக்கேன். ஆனா தாத்தா பின்னாடி சமத்தா ஒக்காந்துட்டு போற அந்த குழந்தையைப் பாத்ததும்.
/./




ஆமா அது என்ன நிக்க வைச்சி..??
ஷெர்லாக் ஹோம்ஸுங்ளா...அதனால பின்னாடி சமத்தா....

தல முடியல தல முடியல
அவ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

தாத்தாவோட வண்டீல ப்ரேக் லைட் அதாம்பா பேக் இன்டிகேட்டர் அது எரியரதையும் உங்க வண்டி தூரத்தையும் பாத்தா தாத்தா பேத்தி ரெண்டு பேத்தையும் ஒரேடியா கவுத்தாச்சா?

கைப்புள்ள said...

//மோகன் உன் ஆரம்பக் கால பதிவுகளை ஞாபகப்படுத்தும் அதே கலகலப்பான நடை. ஆமா அது என்ன மேட்டர் நம்ம ட்ரிடாப் ஹெட்க்கு எதுவும் விளங்கல்லயே ராசா//

வாப்பா தேவு,
உன் கமெண்டைப் படிக்கறதுக்கு சந்தோசமா இருந்துச்சு. ஒன்னும் பெரிய விஷயம் எல்லாம் இல்ல. கொஞ்சம் கவனிச்சு பாரு...புரியும்.

கைப்புள்ள said...

//fine//

வாங்க சிவஞானம்ஜி,
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிங்க.

கைப்புள்ள said...

//வர வர ஒப்பேத்தும் பதிவு போடுவது எப்படி என்பதில் நல்லா தேறிக்கிட்டு வருரீர்.//

வர வர என்ன வர வர? ஆரம்பத்துலேருந்தே ஒப்பேத்திக்கிட்டுத் தானே இருக்குறோம்?

//அந்த குட்டி பாப்பா, வீச்சு தாங்காமல் ஒரு கையால் மூக்கை பொத்தி உள்ளது. அந்த வீச்சுக்கு காரணம் எல்லாம் என்ன கேட்க கூடாது.//
சே! எம்புட்டு ஃபீல் பண்ணி எழுதியிருக்கேன்? அதெல்லாம் வுட்டுப்புட்டு இப்பிடி சின்ன கவுண்டர் செந்தில் மாதிரி யோசிக்கிறதுக்கு ஒனக்கு யார்யா சொல்லிக் குடுக்கறாங்க?

அடுத்த பத்தியில கிட்டத் தட்ட பதிலைச் சொல்லிட்டே...ஆனா உன்கிட்ட நான் இன்னும் அதிகமா எதிர்பாக்குறேன்.

கைப்புள்ள said...

//நம்ப மண்டைக்கு ஒண்ணும் விளங்கலயேப்பா!//

என்னாங்க தள! சாக்ரடீஸ் படமெல்லாம் போட்டுட்டு ஒரு சில்பான்ஸ் மேட்டர் தெரியலைங்குறீங்களே? சரி வந்தது வந்துட்டீங்க அந்தப் படத்தைப் பாத்து ஒங்களுக்கு எதனா கவிதை தோணுச்சுன்னா சொல்லிட்டுப் போங்க. கவிதை சொல்ற அளவுக்குப் படம் எடுத்துருக்கேன்னு சந்தோசப் பட்டுக்குவேன்.
:)

கைப்புள்ள said...

//எனக்கென்னவோ நீங்க அந்த தாத்தா-பேத்தி வண்டிக்கு முன்னால் ரெண்டு பேரு போய்க்கிட்டுருந்தவங்க சடார்னு வண்டிய நிப்பாட்ட, பின்னால் இருக்கிறவரு கையில துப்பாக்கி மாதிரி ஏதோ தெரிய...பயங்கர கற்பனை பண்ணிக்கிட்டே உங்க பதிவை வாசிச்சா..//

வாங்க தருமி சார்,
உண்மையிலே மேட்டர் ரொம்ப சிம்பிளானது. ஏப்ரல் ஃபூல் மேட்டர் எதுவும் கெடையாது. கொஞ்சம் யோசிச்சி பார்த்தா தெரிஞ்சிடும்.

கைப்புள்ள said...

//பாப்பா விரல வாயில வச்சுருக்கு!!!

பாப்பாவால முன்னாடி பாக்க முடியல.!!சைடுல பாக்குது!!!

தாத்தா உஜாலாக்கு மாறிட்டாரா!!!

மழை நல்லா பெய்கிறது அங்க!!//

எல்லாம் சரி தான்! ஆனா மெயினான மேட்டரை வுட்டுட்டியே?

Sud Gopal said...

எவ்வளவு யோசிச்சாலும் எட்டாத மரமண்டைகளுக்கு(ஹி..ஹி.என்னை மாதிரியான) எப்போ சொல்லப் போறீங்க?

கைப்புள்ள said...

//இப்பவே லுக்கு உடுதா....!!!

ஜொள்ளு பைக்குல ஏற இப்பவே ட்ரைனிங்கா!!!! ::)))//

மின்னலு! டர்ட்டி பாய்! ஸ்டேண்ட் ஆன் தி பெஞ்ச்.

கைப்புள்ள said...

//ஷெர்லாக் குடிச்சதால முன்னாடி உக்காந்து இருக்குனு தலைப்பு கொடுத்திட்டியா..//

ஐயோ...ஐயோ! ஒனக்காக இன்னும் ஒரு க்ளூ...இதுல நக்கல் எதுவும் இல்ல. கொஞ்சம் சீரியஸா யோசி.

கைப்புள்ள said...

//தாத்தாவோட வண்டீல ப்ரேக் லைட் அதாம்பா பேக் இன்டிகேட்டர் அது எரியரதையும் உங்க வண்டி தூரத்தையும் பாத்தா தாத்தா பேத்தி ரெண்டு பேத்தையும் ஒரேடியா கவுத்தாச்சா? //

ஐயயோ! அப்படி எல்லாம் எதுவும் இல்லீங்க. நான் எவ்ளோ சந்தோஷமா க்யூட்டான அந்த காட்சியை விவரிச்சு பில்டப்பெல்லாம் தூக்கலா குடுத்து எழுதியிருக்கேன்? அதப் படிச்சப்புறம் உங்களுக்கு கவுத்த மாதிரியா தோணுது?

Unknown said...

நான் கண்டு புடிச்சுட்டேனே .... கைப்பு தலை மாதிரியே ரெண்டு பேர் தலையும் காலி அதாம்பா ஹெல்மட் இல்லை என்னா சரியா கைப்பு?

ALIF AHAMED said...

"யப்பா...ஷெர்லாக் ஹோம்ஸுங்ளா..."
/./

என்னால இதுக்கு மேல துப்பறிய முடியாது

எதுக்கும் சங்கர்லால வரசொல்லவா!!!

கைப்புள்ள said...

//எவ்வளவு யோசிச்சாலும் எட்டாத மரமண்டைகளுக்கு(ஹி..ஹி.என்னை மாதிரியான) எப்போ சொல்லப் போறீங்க?//

என்னங்க நீங்க? சூப்பரா ஓமப் பொடியெல்லாம் குடுத்துட்டு மரமண்டை அது இதுன்னு சொல்றீங்க? ஆனாலும் இம்புட்டுத் தன்னடக்கம் ஆவாது சாமி!
:)

Anonymous said...

both are "healthy"???????

ILA (a) இளா said...

அனுமானம்
1)ஒரு வேகத்தடை
2)அந்த பகிர்வு ஆட்டோ குலுங்கினதுல யாருக்கவது அடி பட்டு இருக்கலாம்
3) ஒரு குரங்கு ஆட்டோக்கு குறுக்கே நிக்குது

ILA (a) இளா said...

இங்கனையே இருக்கோம், ஆனாலும் ஓமப்பொடி மேட்டருக்கான பதில் ரொம்ப கஷ்டப்பட்டும் கண்டுபுடிக்க முடியல. சுதரு, தன்னடக்கம், சபையடக்கம் எல்லாமே கொஞசம் ஜாஸ்த்தி

கைப்புள்ள said...

/கைப்பு தலை மாதிரியே ரெண்டு பேர் தலையும் காலி அதாம்பா ஹெல்மட் இல்லை என்னா சரியா கைப்பு?//

அது என்னமோ கரீட்டு தான். ஆனா நான் நெனச்சது அது இல்லீங்கோ.
குண்டக்க மண்டக்க எதுவும் ஸ்பானிஷ்ல சொல்லி வக்காதீங்கோ. நான் ஸ்பானிஷ்ல கைநாட்டு.
:)

கைப்புள்ள said...

//என்னால இதுக்கு மேல துப்பறிய முடியாது

எதுக்கும் சங்கர்லால வரசொல்லவா!!!//

ஹ்ம்ம்ம்....ஷேரி பின்ன
:))

ரவி said...

என்னைத்தெரியல்லியான்னே....என்று விவேக்கை ஒரு கருந்தடிப்பய கேப்பானே - அத்தானே..

தாத்தா தலையில் பெரிய கிரவுண்டு...எனக்கென்னமோ - ஏதாவது டிரை சீரிஸ் அதுலதான் நடக்கும்முன்னு நினைக்கறேன்

கங்குலியை சேத்துப்பாரா தாத்தா

Unknown said...

hola el kaipullai le agradece por me recuerda sobre español

பெருசு said...

கைப்ஸ்

கண்டு புடுச்சுட்டேன்.

தேன் கூடு போட்டிக்கான் தலைப்பு.

தாத்தா-பேத்தி

உறவுகள்.

சரியா. 10/10.

கைப்புள்ள said...

//both are "healthy"???????//

வாங்க குரு!
ஆஹா என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு?
:))

கைப்புள்ள said...

//அனுமானம்
1)ஒரு வேகத்தடை
2)அந்த பகிர்வு ஆட்டோ குலுங்கினதுல யாருக்கவது அடி பட்டு இருக்கலாம்
3) ஒரு குரங்கு ஆட்டோக்கு குறுக்கே நிக்குது//

வாங்க விவ்,
அனுமானம் எல்லாம் படிக்க நல்லாத் தான் இருக்கு. ஆனா கலத் ஜவாப் இல்ல குடுத்துருக்கீங்க? நாகை சிவா பின்னூட்டத்தை ஒரு தபா படிச்சுப் பாருங்க.

உங்கள் நண்பன்(சரா) said...

கைப்பூ எனக்கும் ஒன்னும் விளங்கலை, நீயே பதில் சொல்லிடு
(உனக்காவது தெரியுமா..? இல்லை வழக்கம் போல் உதார் தானா?)

அன்புடன்...
சரவணன்.

கப்பி | Kappi said...

கைப்ஸ்..

என்ன இது சிறுபுள்ளத் தனமா??

என்ன மேட்டருன்னு நீயே சொல்லிடு..

இதுக்கெல்லாம் ஷெர்லாக் ஹோம்ஸ் வர முடியாது..அவர் கஸின் ப்ரதர் 'பீர்'லாக் ஹோம்ஸ் வந்து தான் ட்ரை பண்ணனும் ;))

கைப்புள்ள said...

எல்லாரும் இவ்ளோ கேக்கறீங்க? ஒரு க்ளூ கொடுக்கறேன். ரக்ஷா பந்தன் என்கிற பண்டிகை உண்மையில் எதனால கொண்டாடப் படுதுன்னு யோசிங்க. அதோட நாகை சிவாவோட முதல் பின்னூட்டத்தையும் படிங்க. விடை கிடைக்கும்.

கைப்புள்ள said...

மகேந்திர வர்மர், ஷோபனா ரவி, பெருசு, கப்பி, ஞானபண்டிதா!
எல்லாரும் மேலே உள்ள பின்னூட்டத்தைப் படிச்சு முயற்சி பண்ணிப் பாருங்க.

உங்கள் நண்பன்(சரா) said...

கையில கட்டியிருகிக்கிற ராக்கில ஏதோ பொம்மை மாதிரி தெரியுது...?

அன்புடன்...
சரவணன்.

கைப்புள்ள said...

ஞானபண்டிதனே!
சரியாப் புடிச்சிட்டே...ஆனா இன்னும் நான் எதிர்பாக்குறது வரலை. பொம்மை கிம்மையெல்லாம் விட்டுத் தள்ளு. கொஞ்சம் நக்கல் இல்லாம சீரியசா யோசி. சரியா?

VSK said...

மீண்டும் மிக்கி மௌஸ்??

தாத்தாவின் ஸ்கூட்டரின் இருபக்கக் கண்ணாடிகளும், பாப்பா கையில் கட்டியிருக்கும் ராக்கி யிலும் விரியும் இரு காதுகள், எனக்கு மி.மௌசை நினைவு படுத்துகிறது!!

Sridhar Harisekaran said...

இதுக்கு மேலே பாக்க முடியல!

நான் ரொம்ப கவனிச்சு பாத்ததுல இது தான் தெரிஞ்சது.

1. அந்த பாப்பா பக்கத்தில இருக்கிற ஒரு share auto பாத்துட்டு இருக்குது. அவ பண்ற செய்கையப்பார்த்தா எதோ விபத்து நடந்த மாதிரி இருக்குது.

2. வண்டியில சிகப்பு விளக்கு எறியுது. அதனால அந்த வண்டி நிக்கப்போகுது, அல்லது நின்னுக்கிட்டிருக்கு.

3. இடதுப்பக்கம் இருக்குற அந்த 'Singh' வண்டியிலே 'Number Plate' ல Number இல்ல.

4. இதுக்கும் மேலே யோசிக்க சொன்னா, அந்த பாப்பா கைல கட்டியிருக்குற நூலும், கால்ல இருக்குற செருப்பும் 'Matching' அ இருக்கு. போதுமா!

உங்கள் நண்பன்(சரா) said...

இரட்டை இதயம் போட்ட ஒரு ராக்கி சரியா?
கைப்பூ.. படுத்தாம சொல்லுப்பூ !!!

அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன்(சரா) said...

//கொஞ்சம் நக்கல் இல்லாம சீரியசா யோசி. சரியா?
//

அந்தக் குட்டிப் பாப்பா கையில் கட்டியிருக்கும் ராக்கியில் இதயம்(இரட்டை?) உள்ளது சரியா? ஹி ஹி.. நாமா சீரியசா யோசிச்சா இப்படித்தான் வருது

கைப்பூ.. படுத்தாமா சொல்லிடுப்பூ...

அன்புடன்...
சரவணன்.

பெருசு said...

அடப்பயபுள்ளைங்களா

எல்லாருமே தாத்தாவையும் பேத்தியுமே
பாத்துகிட்டே உதார் உட்டுகிட்டிருக்கீங்களே.

பக்கத்தில பாருங்க, பக்கத்து பஸ் ஸ்டாப்புல ராக்கி
கட்றாங்கன்னு, முன்னால போற பைக் பார்ட்டி எப்பிடி ஓரங்கட்றாங்கன்னு.

ராக்கிய கட்டிப்புட்டா அப்புறம் எப்படி ஜொள்ளுறது.அதான் அக்கா தங்கச்சி ஆயிடறாங்களே.

ஜொள்ளுப்பாண்டிக்கு proxy.

VSK said...

அட! அந்த இடது பக்க இரு நண்பர்களும் கூட மி.மௌ. மாதிரித்தான் தெரிகிறார்கள்!!

அது சரி! அந்த போலீஸ்காரர் ஆட்டோவை மடக்கி என்னமோ கேட்கிறாரே? என்ன விஷயம்?!! :)

உங்களுக்கு அனுப்பப்பட்ட ஆட்டோவா?

Vaikunth said...

pombala pulla kaila raakhiya!!!

கால்கரி சிவா said...

எல்லாரும் ராங் சைடில் வண்டி ஓட்டுகிறார்கள்

யப்பா.... NRI பந்தா விட ஒரு சான்ஸ் கிடைச்சிடுச்சி ஹி..ஹி..

மழை வரும் நேரம், அதிகாலை அந்தி மாலை ஆகிய நேரங்கள் போட்டோ எடுக்க நல்ல தருணங்கள். லைட்டிங் நியூட்ரலாக இருக்கும்

கால்கரி சிவா said...

ரக்ஷா பந்தன் என்றால் பாதுகாப்பான பந்தம் என பொருள் வரும். தாத்தாவின் பந்தம் பாதுகாப்பாக இருப்பதால் ஸ்கூட்டரின் போகும் போது ஏற்பட கூடிய ஆபத்தை மறந்து வேடிக்கைப் பார்க்கும் பேத்தி

Clown said...

தல உங்க தலயும் தாத்தா தல மாரி சொட்டையா? ஹி..ஹி...மொரக்காத தலை....

ALIF AHAMED said...

கையில.....
அது ராக்கி தான்

பாப்பா சட்டையில கோல பொடி..

அப்புறம் குதிங்காலுலையும் கோல பொடி இருக்கு..

ஆனா தாத்தா சட்டை பளீருனு இருக்கே.....ம் என்ன பண்னலாம்.

முடியல

தொடரும்...

Syam said...

என்னா பெரிய விசியம் ரெண்டு பேருக்கும் தொடர்புள்ள விசயம் அந்த பாப்பாவோட அம்மாவோ அப்பாவோ...

கைப்புள்ள said...

//pombala pulla kaila raakhiya!!! //

ஒத்தை வரியில ஆங்கிலத்துல இரத்தினச் சுருக்கமாச்
சொல்லி இருந்தாலும் மிகச் சரியா கண்டுபிடிச்சது வைக் தான்!
கையைக் குடுங்க வைக் கலக்கிப் புட்டீங்க!

கைப்புள்ள said...

நான் நினைத்தது, எனக்கு ஏற்பட்ட அதே ஆச்சரியம் இரண்டையும் வெளிப்படுத்தி இருக்கிறார் நண்பர் வைக். முன்பே கொடுத்த ஒரு க்ளூவின் படி இரக்ஷா பந்தன் பண்டிகை எதனால் கொண்டாடுகிறார்கள் என்று யோசித்திருந்தால் விடை மிக எளிதாகக் கிடைத்திருக்கும். இரஷா பந்தன் பண்டிகை தங்கள் சகோதரர்களுடனானத் தங்களுடைய பந்தம்(தொடர்பு) என்றுமே நிலைக்க வேண்டும் என்று பெண்களால் கொண்டாடப் படுவது. வட இந்தியாவில் தீபாவளியைப் போல மிக முக்கியமானதொரு பண்டிகை இது.

ராக்கி கயிறுகளைப் பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு அணிவிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம், அக்கயிற்றைப் பெண்கள் கடையில் வாங்குவதைப் பார்த்திருக்கலாம், ஆனால் இராக்கிக் கயிற்றைப் பெண்கள் கையில் அணிந்திருப்பதைப் பார்க்க இயலாது. வட இந்திய நண்பர்களிடமிருந்து நான் தெரிந்து கொண்டது - சகோதரர்கள் இல்லாத வீட்டில், உதாரணமாக இரு பெண் குழந்தைகள் உள்ள வீட்டில், அல்லது வேறு உறவுவழி சகோதரர்கள்(சித்தப்பா பையன், பெரியப்பா பையன்) எவரும் இல்லாத வீட்டில் மட்டுமே பெண் குழந்தைகள் இராக்கி அணிந்திருப்பதை காண முடியுமாம்.

எனவே அவ்வாறு இராக்கி அணிந்துள்ள பெண் குழந்தை இருப்பதே இப்படத்தில் உள்ள சிறப்பு.

கைப்புள்ள said...

என் பதிவுக்கு வந்து என்னை வாழவைக்கும் நண்பர்களே!(இப்பிடியெல்லாம் பில்டப்பு குடுக்கலைன்னா சத்தியமா ஒனக்கு டின்னு தான் செல்லம்). நான் அந்தப் படத்தில் பார்த்ததைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்படி ஷெர்லாக் கோம்ஸ்(H) அது இதுன்னு கொஞ்சம் பிலிம் காட்டுனது எல்லாம். எதோ பெருசா சொல்லப் போறான்னு நண்பர்கள் என்னெனவோ யோசித்து பின்னூட்டமிட்டுள்ளீர்கள். ஆனால் நான் சொல்ல வந்தது இந்த சின்ன விஷயத்தைத் தான்.

"மவனே! ஒன்னயெல்லாம் ஆட்டோ ஏத்தி மவனே காலி பண்ணனும்டா"னு ஏற்கனவே கொலை மிரட்டல் வந்துள்ளதால் இப்பவே ஒரு டிஸ்கி போட்டுக்கறேன்.

தயபிட்டு க்ஷமின்ச்சண்டி!
:)

G.Ragavan said...

கைப்பு கலக்கீட்டீங்க கலக்கி. ஒரு படம் சொல்லும் கதை இது. யாரென்றே தெரியாத...இன்னும் சொல்லப் போனால் முகமே தெரியாத ஒரு புகைப்படத்தை வைத்து அந்தக் குழந்தையின் வீட்டு நிலையைத் தெளிவாகப் புரிந்து கொண்டமை. ஒமக்கு இனிமே இந்தக் கைப்பு வேடமெல்லாம் வேண்டாம். பெரியப்புன்னு பேர மாத்திக்கப்பு!

கைப்புள்ள said...

//ஒமக்கு இனிமே இந்தக் கைப்பு வேடமெல்லாம் வேண்டாம். பெரியப்புன்னு பேர மாத்திக்கப்பு!//

ஆகா! நம்மளை ஒரேயடியா க்ளோஸ் பண்ண எதோ திட்டம் மாதிரி இருக்கே?
:)

//சகோதரர்களுடனானத் தங்களுடைய பந்தம்(தொடர்பு) என்றுமே நிலைக்க வேண்டும் என்று பெண்களால் கொண்டாடப் படுவது.//
இதை கவனிச்சீங்களா? Practical Usage of 'Sol oru Sol'.
:)

கைப்புள்ள said...

//தாத்தாவின் பந்தம் பாதுகாப்பாக இருப்பதால் ஸ்கூட்டரின் போகும் போது ஏற்பட கூடிய ஆபத்தை மறந்து வேடிக்கைப் பார்க்கும் பேத்தி//

இதை வெகுவாக ரசித்தேன் சிவா சார்! இந்தப் படத்தைப் பார்க்கும் போதெல்லாம் நான் உணர்ந்த என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாத அந்த மகிழ்ச்சிக்குச் சொல் வடிவம் கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி.

உங்கள் நண்பன்(சரா) said...

முருகேஷா கலக்கிபுட்டப்பூ...


அன்புடன்...
சரவணன்.

G.Ragavan said...

// கைப்புள்ள said...
//ஒமக்கு இனிமே இந்தக் கைப்பு வேடமெல்லாம் வேண்டாம். பெரியப்புன்னு பேர மாத்திக்கப்பு!//

ஆகா! நம்மளை ஒரேயடியா க்ளோஸ் பண்ண எதோ திட்டம் மாதிரி இருக்கே?
:) //

ஹா ஹா ஏம்ப்பு இவ்வளவு நடுக்கம். துணிஞ்சிரப்பு....

//சகோதரர்களுடனானத் தங்களுடைய பந்தம்(தொடர்பு) என்றுமே நிலைக்க வேண்டும் என்று பெண்களால் கொண்டாடப் படுவது.//
இதை கவனிச்சீங்களா? Practical Usage of 'Sol oru Sol'.
:) //

மிகச் சரி. மிக்க நன்றி. தொடர்ந்து வரனுங்கறதால அது தொடர்பு.

ALIF AHAMED said...

அடுத்த போட்டி வை தல

சும்மா கலக்கிபுடுறேன் கலக்கி...

(ஆன்சரை முன்னாடியே மெயில் அனுப்பு:::)))))

நாகை சிவா said...

யோவ் போங்கு அடிக்காத. நான் பதில சொல்லிட்டேன். நீ தான் குழப்பி விட்டுட்ட. நான் என்ன பின்னூட்டத்தில் சே.. சே... என்ற வார்த்தை போட்டு இருக்கேன் பாத்தில. புலினா சும்மாவா
ஹிஹி
நீ தான் சொல்ல மாட்டேங்குற. நானே சொல்லிக்கிறேன்.

பொன்ஸ்~~Poorna said...

தலைவர் பெரியப்பு..

வாழ்க!!! வாழ்க!!!..

ஸ்ரீவி சிவா said...

யோவ் கைப்பு,
இதெல்லாம் ரொம்ப நக்கல்...ஆமா!
நீங்க கேமரா வாங்கினது ஊருக்கெல்லாம் தெரியும்யா...அதுக்காக இப்பிடியா??
கட்டம் கட்டி போட்டோ போட்டு அலும்பு பண்ணாதீங்க...பிறகு உங்களுக்கு கட்டம் சரியில்லாம போயிரும்...ஜாக்ரதை!!

இராம்/Raam said...

//வார்த்தை போட்டு இருக்கேன் பாத்தில. புலினா சும்மாவா
ஹிஹி
நீ தான் சொல்ல மாட்டேங்குற. நானே சொல்லிக்கிறேன்.//

ஏ புலி,

அதை நீ சந்தேகமில்லமா சொல்லிருக்கணும்... இல்ல என்னை மாதிரி தெரியல்லைன்னு சும்மா இருத்திருக்கணும்..... இப்படியெல்லாம் பேசபிடாது...:-))))

கைப்புள்ள said...

//மிகச் சரி. மிக்க நன்றி. தொடர்ந்து வரனுங்கறதால அது தொடர்பு.//

//முருகேஷா கலக்கிபுட்டப்பூ...//

நன்றி ராகவன், சரவணன்.

கைப்புள்ள said...

//புலினா சும்மாவா
ஹிஹி
நீ தான் சொல்ல மாட்டேங்குற. நானே சொல்லிக்கிறேன்//

சரிப்பா ரொம்ப ஆஸ்பட்டு கேக்குற ஒனக்காண்டி ஒரு பெசல் சவுண்டு இந்தா...
"கும்தலக்கடி கும்மாவா எங்க புலி சிவான்னா சும்மாவா"
ஓகேவா? இது போதுமா?

கைப்புள்ள said...

//தலைவர் பெரியப்பு..

வாழ்க!!! வாழ்க!!!..//

வாங்க பொன்ஸ்!
நல்ல படியா சென்னை வந்து சேந்துட்டீங்களா? வீட்டுலே ஒரே கொஞ்சல்ஸ் ஆஃப் இண்டியாவா இருக்குமே? எஞ்சாய் பண்ணுங்க!
:)

கைப்புள்ள said...

//கட்டம் கட்டி போட்டோ போட்டு அலும்பு பண்ணாதீங்க...பிறகு உங்களுக்கு கட்டம் சரியில்லாம போயிரும்...ஜாக்ரதை!!//

வாங்க சூரியா ஃபாதர்,
நமக்கு கட்டம் கட்ட இனிமே ஒருத்தன் பொறந்து வரணும்.
(இப்பிடியெல்லாம் சவுண்டு வுட்டுக்கிட்டாத் தான் பொழக்க முடியும்)
:)

கைப்புள்ள said...

//அதை நீ சந்தேகமில்லமா சொல்லிருக்கணும்... இல்ல என்னை மாதிரி தெரியல்லைன்னு சும்மா இருத்திருக்கணும்..... இப்படியெல்லாம் பேசபிடாது...:-))))//

வாய்யா ராயல்(ராம்சாமி),
நல்லா ஒரைக்கிற மாதிரி சத்தமா சொல்லு.

கைப்புள்ள said...

//அடுத்த போட்டி வை தல

சும்மா கலக்கிபுடுறேன் கலக்கி...//

மின்னலு சொம்மா போட்டி வச்சாலும் போர் அடிக்கும்பா...அடுத்தது வேற எதனா ஃபிலிம் காட்டுவோம்.

பெருசு said...

கைப்ஸ்

எப்படியோ ஆரம்பிச்சு எப்படியோ முடிஞ்சுதா!.

ஆனா அந்தப்பொண்ணு கையில இருக்கிறதப்பாத்தா
ராக்கி மாதிரி தெரியலியே.

மிக்கி மவுஸ் வாட்சு மாதிரி இல்ல தெரியுது.

எப்படியோ பெரியப்பு ஹிஹி
ஒப்பேத்திட்டே.

கைப்புள்ள said...

//ஆனா அந்தப்பொண்ணு கையில இருக்கிறதப்பாத்தா
ராக்கி மாதிரி தெரியலியே.

மிக்கி மவுஸ் வாட்சு மாதிரி இல்ல தெரியுது.

எப்படியோ பெரியப்பு ஹிஹி
ஒப்பேத்திட்டே.//


¡Por favor subsistencia Perusu reservado! ¡Iam tu ya del mejor amigo!

கைப்புள்ள said...

//ஆனா அந்தப்பொண்ணு கையில இருக்கிறதப்பாத்தா
ராக்கி மாதிரி தெரியலியே.

மிக்கி மவுஸ் வாட்சு மாதிரி இல்ல தெரியுது.//

பெரியோர்களே! தாய்மார்களே! பெருசு சொல்றதை நம்பாதீங்க. அது உண்மையிலேயே ராக்கி தானுங்க. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊர் அறிந்த உண்மை...அதோட இந்த அளவுக்கெல்லாம் பீலா விடமாட்டேன்னு உங்களுக்கே தெரியும். இருந்தாலும் முன்னெச்சரிக்கையா முன்னாடியே சொல்லி வச்சிக்கிறேன்.
:)

Thiru said...

ரொம்ப நாளைக்கப்புறம் மண்டய ஒடைக்கற மாதிரி ஒரு நல்ல பதிவு. பின்னூட்டங்களையும் சேர்த்து படிததால் மிக அருமையாக உள்ளது. பின்னுட்டங்களும் சுப்பர் டா. கலந்தாலோசித்து, கலாய்த்த அனைவருக்கும் ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய 'ஓ'.

இராம்/Raam said...

//வாய்யா ராயல்(ராம்சாமி),
நல்லா ஒரைக்கிற மாதிரி சத்தமா சொல்லு. //

என்னா தல புது பட்டபேர் குடுக்குறே.... :-))))
எனி பஞ்சிங்....?

Anonymous said...

//ஒரு சின்ன க்ளூ: படத்திலுள்ள தாத்தாவுக்கும் பேத்திக்கும் தொடர்புள்ள ஒரு விசயம் தான்//

க்ளூவுக்கும் விடைக்கும் சம்மந்தம் இருக்கா?

கைப்புள்ள said...

//ரொம்ப நாளைக்கப்புறம் மண்டய ஒடைக்கற மாதிரி ஒரு நல்ல பதிவு. பின்னூட்டங்களையும் சேர்த்து படிததால் மிக அருமையாக உள்ளது. பின்னுட்டங்களும் சுப்பர் டா. கலந்தாலோசித்து, கலாய்த்த அனைவருக்கும் ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய 'ஓ'.//

ஆஹா! திருமுருகன் தமிழில் எழுதறான். ரொம்ப சந்தோஷம் மச்சி. அப்படியே ஒரு தமிழ் ப்ளாக்கும் ஆரம்பிச்சிட வேண்டியது தானே?

கைப்புள்ள said...

//என்னா தல புது பட்டபேர் குடுக்குறே.... :-))))
எனி பஞ்சிங்....? //

வாப்பா ராயல்,
பஞ்சிங் எல்லாம் ஒன்னியும் இல்லப்பா. அன்பு அதிகம் ஆயிடுச்சுன்னா கண்ணு, செல்லம்னு கூப்பிடறதில்லியா? அது மாதிரி தான் அன்பின் மிகுதியால ஒனக்கு 'ராயல் ராம்சாமி'ன்னு செல்லப் பேரு. ஒனக்குப் புடிக்கும்னு எனக்குத் தெரியும். நல்லாருக்கில்ல?
:)

கைப்புள்ள said...

//க்ளூவுக்கும் விடைக்கும் சம்மந்தம் இருக்கா? //

வாங்க இளமதி!
நீங்க கேக்கறது சரி தான். இந்த மாதிரி யாராச்சும் கேள்வி கேப்பாங்கன்னு எதிர்பார்த்தது தான். நான் அந்த க்ளூ மூலமாச் சொல்ல வந்தது என்னன்னா தாத்தாவையும், பேத்தியையும் மட்டும் கவனிங்க, ரோட்டுல ஓடுற ஆட்டோ, விளம்பரப் பலகை, மழை இதுல எல்லாம் கவனத்தை செலுத்த வேண்டாம் அப்படின்னு தான். அதுக்கு எதுக்கு தாத்தாவையும் இழுத்தேன்னு தானே கேக்கிறீங்க? வெறும் பேத்தின்னு சொல்லிருந்தேன்னா மக்கள் சுலபமா கண்டுபிடிச்சிடுவாங்களே அப்படிங்கற எண்ணம் தான்.
:)

ALIF AHAMED said...

அதுக்கு எதுக்கு தாத்தாவையும் இழுத்தேன்னு தானே கேக்கிறீங்க? வெறும் பேத்தின்னு சொல்லிருந்தேன்னா மக்கள் சுலபமா கண்டுபிடிச்சிடுவாங்களே அப்படிங்கற எண்ணம் தான்.
/./

நல்ல சமாளிப்புகேஷன்

இராம்/Raam said...

//வாப்பா ராயல்,
பஞ்சிங் எல்லாம் ஒன்னியும் இல்லப்பா. அன்பு அதிகம் ஆயிடுச்சுன்னா கண்ணு, செல்லம்னு கூப்பிடறதில்லியா? அது மாதிரி தான் அன்பின் மிகுதியால ஒனக்கு 'ராயல் ராம்சாமி'ன்னு செல்லப் பேரு. ஒனக்குப் புடிக்கும்னு எனக்குத் தெரியும். நல்லாருக்கில்ல?
:)//

உன்னோட அன்பு மழையில் நனைந்து
பட்டபேரு வாங்கினதை நினைக்கிறப்போ என்னவோ பண்ணுது தல....

இதுக்காக இன்னொரு கவிஜ 202 வரிகளில் எழுதிருவோம்..... :-)