Monday, August 28, 2006

வெட்டேயாடூ விலயாடூ

மொதல்லயே ஒரு டிஸ்கி போட்டுக்கறேங்க. இது இந்தப் படத்தைப் பத்திய விமர்சனப் பதிவு இல்லீங்க. எக்கச்சக்கமா எல்லாரும் இதப் பத்தி எழுதிட்டாங்க, நான் புதுசா எழுத அப்படி ஒன்னியுமே இல்லீங்கோ. பட்டிக் காட்டான் முட்டாய் கடையைப் பாத்தா மாதிரி ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு தமிழ் படம்...அதுவும் கொட்டாய்ல போய் ஒக்காந்து...அதுவும் மும்பையில...அதுவும் தனியாப் பாத்தது(தமிழ்ல சொல்லனும்னா "என்ன கொடுமை சார் இது?" கொஞ்சம் பீட்டரா சொல்லனும்னா "How unromantic? :)" ) - அப்படி பட்ட ஒரு படத்தைப் பத்தி எப்ப பாத்தோம், எங்கே பாத்தோம்னு எழுதி வச்சுக்கறதுக்காக ஈ செறியதொரு சிபிஐ டைரி குறிப்பு. கேட்டோ?

"கணபதி பப்பா மோரியா" - விநாயகர் சதுர்த்தி அன்னிக்குத் தான் வே.வி. பாத்தோம்னு இனிமே மறக்குமா என்ன?

டேய்! இதெல்லாம் ஒனக்கே ரொம்ப ஓவராத் தெரியலியாடானு கேக்கறவங்களுக்காக...கடைசியா நான் கொட்டாயில பாத்த படம் அமிதாப் பச்சனோட "ப்ளாக்"னு(Blog லேது... Black) நெனக்கிறேன். ரொம்ப யோசிச்சு பாத்ததுல கடைசியா கொட்டாய்ல பாத்த தமிழ் படம் சென்னை மாயாஜால்ல பாத்த "பிதாமகன்"னு ஞாபகம்.

டிஜிட்டல் தானே? காசா? பணமா? அதான் சும்மா மைக் டெஸ்டிங்...

ஒடனே இவன் விசிடி பார்ட்டி தான்னு முடிவு கட்டிடாதீங்க சாமி! நான் இருக்குற காட்டுல புதுசா ரிலீஸ் ஆன இந்தி படம் வர்றதுக்கே ஒரு மாசம் ஆகும். முன்ன இருந்த இந்தூர்லயும் தமிழ் படம் எதுவும் வராது. சித்தூர்கட்ல ஒரு தியேட்டர்ல 80களில் வெளியான ஒரு மிதுன் சக்ரவர்த்தி படம் இன்னும் ஓடிட்டு இருக்கு :) இதுல எங்கேருந்து தமிழ் படம் எல்லாம்? அப்பப்போ லீவுல மெட்ராஸுக்கு வரும் போதும், ஒரு வாரம் லீவுல வரோம் அதுலயும் இந்த பாடாவதி படத்தை எல்லாம் போய் அவசியம் பாக்கனுமான்னு நெனச்சிட்டே உருப்படியா எதாவது பண்ணலாம்னு வீட்டுலயே இருந்துடுவேன்.(சே! சே! நமக்கும் சோம்பேறித் தனத்துக்கும் ரொம்ப தூரமுங்க.)

பிதாமகன் படம் பாக்கப் போனது தீபாவளிக்கு மறுநாள்...எந்த வருசம்னு சரியா ஞாபகம் இல்ல. மாயாஜாலுக்குப் போனா அப்பச் சென்னையில கிரிக்கெட் வெளாட வந்த நியூசிலாந்து டீம் மொத்தமும் அங்கே நிக்குது. கிறிஸ் கெயிர்ன்ஸ் டிவியில பாக்க அப்படி ஒன்னும் வித்தியாசமாத் தெரியலன்னாலும் நெசத்துல பாக்க பார்ட்டி பூதாகரமா இருந்தான்(கொஞ்சம் லோக்கலாச் சொல்லனும்னா 'டெல்லி எருமை' மாதிரி). ஸ்டீபன் ஃப்ளெமிங் கிட்ட ஆட்டோகிராப் வாங்கிட்டு வர்றேன்னு என் தம்பி என்கிட்டச் சொன்னதும், சும்மா அவனை ஓட்டறதுக்காக "பிளடி இண்டியன்ஸ்! ஒங்களுக்கு எல்லாம் நான் ஆட்டோகிராப் போடற்தில்ல மேன்"னு அவன் சொல்லிட்டான்னா என்னடா பண்ணுவன்னு என் தம்பியைக் கேட்டதுக்கு அவன் சொன்ன பதில் தான் இன்னும் அந்த படம் பாத்ததை ஞாபகத்துல இருக்க வச்சிருக்கு. "அப்படி சொல்லிட்டு அவனால ஈஞ்சம்பாக்கம் கூட தாண்ட முடியாது. அவன் மூஞ்சை ஒடச்சிட மாட்டோம்" அப்படின்னான். என்னமோ நமக்கு படம் பாக்கப் போகும் போது நடக்கற சின்ன விஷயங்கன்னாலயும் படம் பாத்த சூழல்னாலயும் தான் படம் மனசுல நிக்குது.

சரிங்க இப்ப "வே.வி." பத்தி சில பல மேட்டர்ஸ்.

காமெடிக்குன்னு தனியாப் படத்துல யாரும் இல்ல. ஆனா அது இல்லாத குறையை(நக்கலுக்கு இல்ல) சில வசனங்கள் (and certain witty conversations) தீர்த்து வைக்குது. உதாரணத்துக்குச் சில

1. "I hate violence against women, even if its not my jurisdiction"
(இது போன்ற ரசிக்கத்தக்க, இன்னும் சில பீட்டர் வசனங்கள் படத்துல இருக்குதுங்க)

2. "ஸாஃப்ட்வேரா நானா?... இல்லீங்க நான் ஹார்ட்வேருங்க"

3. "உங்க கூட பேசுனதும் என்னோட கஷ்டங்கள் எல்லாம் கொறஞ்சா மாதிரி இருக்கு"
"என் கூட பேசுனதும் எல்லாரும் இத தான் சொல்றாங்க"
(இந்த டயலாக்குக்கு முன்னாடி தான், ஜோதிகா அவங்க வாழ்க்கையில் நடந்த சோகங்களைப் பத்தியும், கமல் அவருடைய சோகங்களைப் பத்தியும் பேசிப்பாங்க)

4. "நல்லதாப் போச்சு...நீங்க தமிழா போயிட்டீங்க"
"இல்லை...தெலுங்கா இருந்தாலும் காப்பாத்தியிருப்பேன்"



ஆகஸ்டு திங்கள் 27ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை...12 மணி ஆட்டம். அப்பா! வரலாற்றுல பதிவாயிடுச்சு.

படத்தோட ஒளிப்பதிவு கண்ணுலயே நிக்குது. குறிப்பா தெள்ளத்தெளிவான நீல வானம் வரும் ஒரு சில காட்சிகள், அமெரிக்காவில் படமாக்கப் பட்ட இன்னும் நெறைய காட்சிகள் visual treatனு சொன்னாத் தப்பாகாது. இசையும் நல்லாருக்கு. பாடல்களை முதல் முறையா நான் நேத்து படத்துல தான் பாத்ததுங்கிறதுனால பாடல் வரிகள் எதுவும் நினைவு இல்ல. ஆனா "வெண்ணிலவே"ன்னு(இல்ல வெள்ளி நிலவேவா) வர்ற பாட்டு ரொம்ப நல்லாருக்கு, படமாக்கிய விதமும் அருமை.

முக்கியமான ஒரு மேட்டரை விட்டுப் போட்டேனுங்க. அமைதியானவரு, நல்லவருன்னு நம்பியிருந்த விவசாயி "இளா", இந்த படத்துல செய்யற அழிசாட்டியத்தை எல்லாம் சொல்லி மாளாதுங்க. நீங்களே அவரை என்னான்னு கேளுங்க :)


நம்ம சிற்றறிவுக்கு எட்டுன, மிகவும் கவனம் எடுத்து சொல்லிருக்குற சில விஷயங்கள்.
1. ப்ளாஷ்பேக்குல கமல் ஓட்டுற புல்லட்டோட நம்பர் ப்ளேட் சரியா கறுப்பு பலகை மேலே வெள்ளை நிற பெயிண்டுல எழுதிருக்கு(8-10 வருசத்துக்கு முன்னாடிங்கிறதுனால). ஆனா ஒன்னு கவனிக்காம விட்டுட்டாங்க...அந்த மாடல் புல்லட் 2004ல தான் வந்தது.

2. கொலையில உபயோகப் படுத்தப் பட்ட துப்பாக்கி பேரு கூடச் சொல்லிருக்காங்க - அது வால்தர் பிபிகே(Walther PPK). ஹிட்லர் தற்கொலை பண்ணிக்க உபயோகப் படுத்துன அதே துப்பாக்கியோட பேரு. ஆராய்ச்சி எல்லாம் நல்லாத் தான் பண்ணிருக்காங்க.

3. ஜோ தமிழ் பொண்ணுங்கிறதை மேசை மேல இருக்குற திருவாசகம் சிடியை வச்சு கமல் கண்டுபிடிச்சுடறாரு(ஒரு வார்த்தை கூட பேசாம...ஆனா அதுனால தான் கண்டுபிடிச்சாருங்கிற மாதிரி படத்துல வலியுறுத்தி சொல்லலை)

4. டைம்ஸ் ஸ்குவேர்ல மும்பை மாதிரி எப்பவும் கூட்டம் இருந்துட்டே இருக்கும்னு ஜோ சொல்ற டயலாக்கைக் கேட்டதும் மும்பை மக்கள் சந்தோசம் ஆகி உய் உய்னு விசில் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

படத்தைப் பத்தி இன்னும் ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேனுங்க. நம்ம ஜோ சொல்ற மாதிரி(ஜோதிகா இல்லீங்க...கடற்புறத்தான் ஜோ:) ) "இது நிராகரிக்கப் பட வேண்டிய படம் இல்லீங்க". அம்புட்டு தான்.

படம் பாத்தது மும்பை, மாதுங்காவுல இருக்குற ஆரோரா(Aurora) தியேட்டர்ல. படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இந்த தியேட்டர்ல தேசிய கீதத்தை இசைச்சாங்க. தேசிய கீதத்தை இசைக்கும் போது எந்திரிச்சு நிக்கனும்னும் மறக்காம எழுதி வச்சிருந்தாங்க. படத்தைப் பாத்து முடிச்சிட்டு வரும் போது மைசூர் கேப்ங்கிற ஓட்டல்ல ஃபுல் மீல்ஸ்(கர்நாடகா ஸ்டைல்ல). சாம்பார்ல் மட்டும் வெல்லம் போட்டு விட்டுருவாங்கங்குறதுனால வித்தியாசமா இருந்துச்சு. மத்தபடி ஆந்திரா ஸ்டைல் சாப்பாடு (காரம் மட்டும் சரியா இருந்துச்சுன்னா) தமிழ் நாட்டு சாப்பாட்டுக்கு ரொம்ப நெருக்கம். எதோ கெடச்ச வரைக்கும் லாபம்னு நல்லா கொட்டிக்கிட்டு வெளியே வந்தா ஒரு பேப்பர் கடைல தமிழ் பேப்பர், புக் எல்லாம் விக்குறாங்க.

குமுதம், விகடன், குங்குமம் மூனும் வாங்குனேன். இந்தியாவுக்கு சுதந்திரம் கெடச்சுடுச்சுன்னு தெரிஞ்சிக்கிற மாதிரி நான் தெரிஞ்சிக்கிட்ட ஒரு அதி முக்கியமான சமாச்சாரம் லைலாவுக்குக் கல்யாணம் ஆகிடுச்சுங்கிறது தான். விகடன்ல ஜோ-சூர்யா, சோனியா-செல்வராகவன் ஜோடிகளுக்கு அறிவுரை எல்லாம் சொல்லிருக்காங்க. பெரிய இவனாட்டம் பொது அறிவு பதிவெல்லாம் போடுறோம், நமக்கு இது கூட தெரியாமப் போச்சே...நம்ம பசங்களும் யாரும் சொல்லாம போயிட்டாங்களேன்னு கொஞ்சூண்டு "ஃபீலிங்ஸா" இருந்துச்சு :(

பெஸ்ட் கண்ணா பெஸ்ட்டு(மும்பை ஞாபகார்த்தமா)

(பி.கு: சனிக்கிழமை சாயந்திரம் ஆரோரா தியேட்டருக்குப் போன் பண்ணி "எந்த தமிழ் படங்க ஓடுது"ன்னு இந்தியில கேட்டதுக்குக் கெடச்ச பதில் தான் "வெட்டேயாடூ விலயாடூ" :))

58 comments:

Unknown said...

Good Post machee

ALIF AHAMED said...

பிளாக்கை
டைரியா
யூஸ்
பண்ணுரவங்கள
இப்பதான்
பாக்குறேன்
::))))))))))))

G.Ragavan said...

ம்ம்ம்ம்......என்ன கைப்ஸ் போஸ்டிங் எல்லாம் படம் கிடம் போட்டு பெரமாதமா இருக்கு. வேவி நான் இன்னும் பாக்கலை. முடிஞ்சா இந்த வாரம் பாக்கனும்.

கைப்புள்ள said...

//Good Post machee//

நன்றி நண்பா!

கைப்புள்ள said...

//பிளாக்கை
டைரியா
யூஸ்
பண்ணுரவங்கள
இப்பதான்
பாக்குறேன்
::))))))))))))//

அப்பிடியா?
:)

கைப்புள்ள said...

//ம்ம்ம்ம்......என்ன கைப்ஸ் போஸ்டிங் எல்லாம் படம் கிடம் போட்டு பெரமாதமா இருக்கு.//
வாங்க ராகவன்! ரொம்ப நன்றிங்க.

//வேவி நான் இன்னும் பாக்கலை. முடிஞ்சா இந்த வாரம் பாக்கனும்.//
பாருங்க. பாருங்க. மக்கள்ஸ் எல்லாம் சேர்ந்து ஆர்வத்தைத் தூண்டி விட்டுட்டாங்களா?
:)

ambi said...

வேவி நான் இன்னும் பாக்கலை. neenga sonna matter ellam irukka?nu(he hee, bullet no sonnen) apthuttu solren. :)

ILA (a) இளா said...

கைப்புவோட ஒரு நாள்ன்னு நம்ம பாண்டிப்பய ஒரு பதிவை சங்கத்துல போட்டாப்ல. அதுல ஒரு பொதுவுடைமை தெரிஞ்சுது.

நல்ல பதிவு Mr.கைப்பு.

ALIF AHAMED said...

அப்பிடியா?
:)
/./

என்ன அப்பிடியா??

ALIF AHAMED said...

/./
பாருங்க. பாருங்க. மக்கள்ஸ் எல்லாம் சேர்ந்து ஆர்வத்தைத் தூண்டி விட்டுட்டாங்களா?
/./

இன்னும் சிடி கிடைக்க வில்லை
"நெட்"லையும் coming soonனு போட்டு இருக்கானுவோ
நாளைக்கோ மறுநாளோ
ஹும்
பாக்கலாம்.:)

இராம்/Raam said...

தல,

படத்திலே இம்பூட்டே கவனிச்சியா நீ....
ஹீம் எனக்கு தெரிச்சதை ஒன்னுசொல்லுறேன். மஞ்சள்வெயில் மாலை பாட்டில் டைரக்டர் கெளதம் ஆடிக்கிட்டு வருவாரே அதப்பார்க்கல்லியா...?

இலவசக்கொத்தனார் said...

//நம்ம ஜோ சொல்ற மாதிரி(ஜோதிகா இல்லீங்க...கடற்புறத்தான் ஜோ:) ) "இது நிராகரிக்கப் பட வேண்டிய படம் இல்லீங்க". அம்புட்டு தான்.//

அப்படியா சொன்னாரு? அடப்பாவமே! அதெல்லாம் இல்லைங்க. படம் நல்லாவே இருந்துச்சு. கட்டாயம் பார்க்கலாம். ஆனா யாரோ சொன்னா மாதிரி தியேட்டர் போய்தான் பார்க்கணும்.

உங்கள் நண்பன்(சரா) said...

கைப்பூ! ஆளாளுக்குத் தலைவன வேட்டையாடுறீங்க!
நல்ல பதிவு,படமெல்லாம் பிரமாதமா வந்திருக்கு குறிப்பா அந்த டெஸ்டிங் படம்.படத்தைப் பற்றி நெறையா விசயம் சொல்லி இருக்க, நானும் கொஞ்சம் கவணிச்சுப் பார்க்கனும்,

அன்புடன்...
சரவணன்.

ALIF AHAMED said...

இலவசக்கொத்தனார் said...
ஆனா யாரோ சொன்னா மாதிரி தியேட்டர் போய்தான் பார்க்கணும்.
/./

சொன்னது இளா

என்னமாதிரி ஆளுங்க எங்க கேட்குறாங்க..::)))


(பாக்க ஆசதான் முடியலையே.....)

கதிர் said...

கைப்ஸ்,

நான் படத்தை பாக்கறதுக்கு முன்னாடி, படத்தை பாத்தவங்க எழுதறதை படிக்கறதில்லைன்னு முடிவு.

அதனால பாத்துட்டு வந்து நாளைக்கு எழுதறேன்.

கப்பி | Kappi said...

கைப்ஸ்... கேமராவில படத்தையே படம் புடிச்சு போட்டிருக்கலாம்ல..என்ன போ.. :(

கைப்புள்ள said...

//வேவி நான் இன்னும் பாக்கலை. neenga sonna matter ellam irukka?nu(he hee, bullet no sonnen) apthuttu solren. :)//

வாங்க அம்பி!
அநேகமா நான் சொன்ன மேட்டர் எல்லாமே இருக்கும். இன்னும் சித்த பிரமை எதுவும் பிடிக்கலை. இருந்தாலும் நான் சொன்ன மேட்டர்ல எதாச்சும் ஒன்னு ஒங்களுக்குக் கெடக்கலைன்னா வந்து மானத்தை வாங்கிடாதீங்க. ஐ ஆம் யுவர் பெஸ்ட் ஃபிரெண்டுயா(ஒப்பந்தம்...ஒப்பந்தம்)
:)

கைப்புள்ள said...

//நல்ல பதிவு Mr.கைப்பு//

வாங்க வெவசாயி. இப்ப நல்லப் புள்ளயாட்டம் வந்து கமெண்டு எல்லாம் போடுங்க. படத்துல கொஞ்ச நஞ்ச அக்கிரமமாய்யா பண்ணிருக்கீரு? சரி...அந்த பச்சை எங்க குத்திக்கிட்டீங்க?
:)

கைப்புள்ள said...

//என்ன அப்பிடியா??//

மின்னலு,
நீ சொல்றதைப் பாத்தா இந்த விசயத்துல நான் தான் நம்பர் ஒன் போல தெரியுது. நம்ம எப்பவும் ஒன்னு ரெண்டுன்னு சின்ன நம்பர்ல வந்து பழக்கமே இல்லயா...அதான் நம்பறதுக்குக் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.
:)

கைப்புள்ள said...

//இன்னும் சிடி கிடைக்க வில்லை
"நெட்"லையும் coming soonனு போட்டு இருக்கானுவோ
நாளைக்கோ மறுநாளோ
ஹும்
பாக்கலாம்.:) //

என்னத்தச் சொல்ல?
:(

கைப்புள்ள said...

//மஞ்சள்வெயில் மாலை பாட்டில் டைரக்டர் கெளதம் ஆடிக்கிட்டு வருவாரே அதப்பார்க்கல்லியா...?//

பாத்தேன்யா ராயல். இன்னும் பல விஷயம் கவனிச்சேன். எல்லாத்தையும் சொல்லிட்டா இதை படிச்சிட்டு படம் பாக்குறவங்களுக்குச் சுவாரசியமா இருக்காதுல்ல. அதான் சொல்லலை.
:)

கைப்புள்ள said...

//படம் நல்லாவே இருந்துச்சு. கட்டாயம் பார்க்கலாம். ஆனா யாரோ சொன்னா மாதிரி தியேட்டர் போய்தான் பார்க்கணும்.//

ஆமாங்க தியேட்டர்ல எபெக்டு எல்லாம் ரொம்ப நல்லாருந்துச்சுங்க. கூட்டத்தோட படம் பாக்குறது ஒரு தனி ஜாலி தான். ஆனா என் பக்கத்துலயும் யாராச்சும் இருந்துருக்கலாம்?
:(

கைப்புள்ள said...

//நல்ல பதிவு,படமெல்லாம் பிரமாதமா வந்திருக்கு குறிப்பா அந்த டெஸ்டிங் படம்.//
வாப்பா ஞானபண்டிதா! ரொம்ப நன்றியப்பா!

//படத்தைப் பற்றி நெறையா விசயம் சொல்லி இருக்க, நானும் கொஞ்சம் கவணிச்சுப் பார்க்கனும்//
பாரு...பாரு...ரசிக்கறதுக்கு நெறைய சமாசாரம் இருக்குது.

இராம்/Raam said...

//பாத்தேன்யா ராயல். இன்னும் பல விஷயம் கவனிச்சேன். எல்லாத்தையும் சொல்லிட்டா இதை படிச்சிட்டு படம் பாக்குறவங்களுக்குச் சுவாரசியமா இருக்காதுல்ல. அதான் சொல்லலை.:) //

தல,

எனக்குதெரியும் நீ பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய அறிவாளின்னு.......!

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கைப்புள்ள said...

//நான் படத்தை பாக்கறதுக்கு முன்னாடி, படத்தை பாத்தவங்க எழுதறதை படிக்கறதில்லைன்னு முடிவு.//
வாங்க தம்பி! அதுனால தான் நான் படம் பாக்குற சுவாரசியத்தைக் குறைக்கிற மாதிரி எதுவுமே சொல்லலை.


//அதனால பாத்துட்டு வந்து நாளைக்கு எழுதறேன்//
தாராளமா நாளைக்கு வந்து எழுதுங்க.
:)

கைப்புள்ள said...

//கைப்ஸ்... கேமராவில படத்தையே படம் புடிச்சு போட்டிருக்கலாம்ல..என்ன போ.. :( //

வாய்யா தென்மதுரையில் வளர்ந்த காஞ்சித் தலைவா!
இந்த ஐடியால்லாம் நமக்குத் தோணலியே என்ன பண்ண? பாரு அதுக்குள்ள ராயல் ராம்சாமி வாங்குன காசுக்குக் கொஞ்சம் ஜாஸ்தியாவே அறிவாளின்னு சவுண்டு வுடறதை...
:)

கைப்புள்ள said...

//எனக்குதெரியும் நீ பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய அறிவாளின்னு.......!//

இப்ப யாராச்சும் இல்லன்னாங்களா?என்னது இது சின்னப்பில்லத் தனமா ராஸ்கல்?

கப்பி | Kappi said...

//வாய்யா தென்மதுரையில் வளர்ந்த காஞ்சித் தலைவா!
//
ஹெஹெஹேஏஏஏஏ...

//இந்த ஐடியால்லாம் நமக்குத் தோணலியே என்ன பண்ண? //

பரவாயில்ல விடு..அடுத்த படம் பாக்கும்போது மறக்காம எடுத்துப் போடு...

///பாரு அதுக்குள்ள ராயல் ராம்சாமி வாங்குன காசுக்குக் கொஞ்சம் ஜாஸ்தியாவே அறிவாளின்னு சவுண்டு வுடறதை...
//

எல்லாம் உன் மேல இருக்க பாசம் தான் கைப்ஸ் :)))

ILA (a) இளா said...

//அந்த பச்சை எங்க குத்திக்கிட்டீங்க?//
அவரு இளமாறன், நம்ம பேரு (நல்லவேளை) அது இல்லீங்க

இராம்/Raam said...

//அதுக்குள்ள ராயல் ராம்சாமி வாங்குன காசுக்குக் கொஞ்சம் ஜாஸ்தியாவே அறிவாளின்னு சவுண்டு வுடறதை...:) //

ஹீ ஹீ ஹீ

இதுக்கு எதானச்சும் போட்டு குடு தல

துபாய் ராஜா said...

வித்யாசமான விமர்சனம்.நம்ம கைப்பு பாணியே தனி.

இராம்/Raam said...

//இப்ப யாராச்சும் இல்லன்னாங்களா?என்னது இது சின்னப்பில்லத் தனமா ராஸ்கல்? //

யாராவது சொல்லுவாங்களா... நீ அறிவாளி இல்லன்னு.....:-))))))

கைப்புள்ள said...

//எல்லாம் உன் மேல இருக்க பாசம் தான் கைப்ஸ் :))) //

இந்த பாசத்துக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன்?
...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கைப்புள்ள said...

//அவரு இளமாறன்//
அதப் பத்தி எங்களுக்குக் கவலையில்லை. உங்க பேரு "இளா" இல்லங்குறதுக்கு உங்க கைல எதனா ப்ரூஃப் இருக்கா?
:)

கைப்புள்ள said...

//இதுக்கு எதானச்சும் போட்டு குடு தல//

டிசிபி ராகவன் போடற மாதிரி ஒரு கோடாலி போட்டுரலாமா?
:)

கைப்புள்ள said...

//வித்யாசமான விமர்சனம்.நம்ம கைப்பு பாணியே தனி//

வாங்க தொபாய்!
ரொம்ப நன்றிங்க. சரி...அதான் கல்யாணம் ஆயிடுச்சே? இன்னும் என்ன வெக்கம்? முகத்துல போட்டுருக்குற மூடாக்கை எடுத்துருங்க? அவ்வளவா நல்லால்ல அது.
:)

கைப்புள்ள said...

//யாராவது சொல்லுவாங்களா... நீ அறிவாளி இல்லன்னு.....:-))))))//

அநியாயத்துக்கு நெஞ்சை நக்குறியே?
:))

shree said...

vidhyasama irukku unga blog. vadivelu padam pottu vilambaram pannradhu innum super :)

Unknown said...

உங்க போட்டோ வடிவேலு ஸ்டைலில் இருக்குது என்று பார்த்தா எளுதுவதும் வடிவேலு ஸ்டைலில் தான் இருக்குது ..

கைப்புள்ள said...

//vidhyasama irukku unga blog. vadivelu padam pottu vilambaram pannradhu innum super :) //

வாங்க ஸ்ரீ,
தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. நீங்க இங்கே செலவழிச்ச நேரம் உங்களுக்கு உபயோகமா இருந்துருக்கும்னு சொல்ல முடியல்லன்னாலும் பொழுதுபோக்கா இருந்துருக்கும்னு நம்பறேன். அடிக்கடி வாங்க.
:)

கைப்புள்ள said...

//உங்க போட்டோ வடிவேலு ஸ்டைலில் இருக்குது என்று பார்த்தா எளுதுவதும் வடிவேலு ஸ்டைலில் தான் இருக்குது ..//

வாங்க டெல்பின் மேடம்,
எல்லாருக்கும் பிடிக்குதுன்னு நம்பித் தான் அந்த மாதிரி எழுதிட்டு இருக்கேன். என்னோட ப்ளாக்ல உங்களுக்குப் பிடிச்ச பிடிக்காத விஷயங்களைச் சொல்லுங்களேன்.
:)

Syam said...

டிஸ்கி போட்டு இது வேவி பத்தி இல்லனு சொல்லீட்டு பூராம் அத பத்திதான் இருக்கு...என்ன தல என்ன பன்றோம்னு கூட யோசிக்க முடியாத அளவுக்கு ஆப்பு பலமா :-)

நாகை சிவா said...

என்னது லைலாவுக்கு கல்யாணம் ஆச்சா..................

//வெட்டேயாடூ விலயாடூ" //

மும்பையில் தானே இருக்க இல்ல ஆந்திரா ல இருக்கியா

ALIF AHAMED said...

ഗ്രീറ്റിങ്സ്

ബുക്ക് കിട്ടി

கைப்புள்ள said...

//என்னது லைலாவுக்கு கல்யாணம் ஆச்சா..................//

ஆமாம் புலி! நம்ப முடியலை இல்ல? ஆனா ஆயிடுச்சு.

//மும்பையில் தானே இருக்க இல்ல ஆந்திரா ல இருக்கியா //
மும்பையில தான் இருக்கேன். ஏன் கேக்குறே? ஆனா இன்றே கடைசி. மறுபடியும் சித்தூர்கட்டுக்கு இன்னிக்கு ரிடர்ன்.

கைப்புள்ள said...

//ഗ്രീറ്റിങ്സ്

ബുക്ക് കിട്ടി //

ஓ! அதுவா மின்னல் சேட்டா! கழிஞ்ச திவசங்களில் ஈ ஜோலியும் முடிஞ்சி போயி...
:)

கைப்புள்ள said...

//டிஸ்கி போட்டு இது வேவி பத்தி இல்லனு சொல்லீட்டு பூராம் அத பத்திதான் இருக்கு...//

12பி! இது கொஞ்சம் ஓவரு. நாலு வரி தான் வே.வி. பத்தி எழுதிருக்கு. மீதியெல்லாம் sweet nothings தான் :). அதையெல்லாம் படிச்சிட்டு இப்பிடி ஒரு கேள்வி கேக்கலாமா?

மு.கார்த்திகேயன் said...

என்னடா..தலைப்பு பத்தி எங்கேயும் சொல்லலியேன்னு பாத்தேன்.. தமிழ் படம் மாதிரி கிளைமாக்ஸ்ல சொல்லிட்டீங்க..கைப்புள்ள

துளசி கோபால் said...

கைப்புள்ளெ,

படம் கிடக்கட்டும், சிடி வரும்போது பாத்துக்கறேன்.
இப்படி நம்ம கிறிஸ்கெயினை டெ.எ. வுக்கு ஒப்பிடலாமா?
அவரே டெ.எ.ன்னா இங்கே இருக்கற' ரக்பி வீரர்களை' என்னான்னு சொல்றது?

த்ரீமச்சா போச்சேப்பா. ரொம்ப ஃபீலிங்காப் போச்சு (-:

இங்கே வந்து பாருங்க,. 18 வயசுப் பொடியனுங்க எல்லாம் ஆளாட்டமா இருக்கறதை.

Thiru said...

வேவி நான் இன்னும் பாக்கலை.(Sep 10th Release in Adelaide)

Btw, ORKUT-ல
பாத்தது...

கைப்புள்ள ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினியர்.
கட்ட துரைதான் PM.

சில வின்னர் வசனங்கள மாத்திப் போட்டு கண்டினியூ பண்ணுங்க...

கை : டே.......ய் கட்டதுர...ச்சாட்டிங் ச்சாட்டிங்கா இருக்கணும்....நீயும் என் க்யூபிக்களுக்கு வரக்கூடாது, நானும் வ...ர... மாட்டேன்...

கட்ட : என்னாது? மெசேஞ்சர் சரியா வேல செய்யல...கொஞ்சம் க்யூபிக்களுக்கு வா...

கை : சரி என் சங்கத்து ஆள அனுப்புறன்...அவங்கிட்ட சொல்லி அனுப்பு...

டீம் மேட் : எவன்டா எங்க சங்கத்து ஆள டெஸ்டிங்ல போட்டது...

கட்ட : ( அடிக்கப் போகிறார் )

கை : ( தன்னோட க்யூபிக்கள்-ல இருந்து எழுந்து ) டேய் கட்டதுர...நீ உண்மையிலேயே ஒரு அண்டர்வேரு ..சீச்சீ...சாஃப்டுவேரு எஞ்சினியரா இருந்தா என் ஆளு மேல கை வச்சிப் பார்..

(கட்ட, கைப்புள்ள ஆளை அடித்து விடுகிறார்.)

கை : ஒத்துக்கிர்றேன்...நீ ஒரு சாஃப்டுவேரு எஞ்சினியருன்னு ஒத்துக்கிர்றேன்....நெக்ஸ்டு மீட் பண்ணுவோம்...

( கைப்புள்ள உக்காந்த உடனே அவர் மண்டையில் வந்து விழுகிறது - அவருக்கு அப்ரெய்சலில் ஆப்பு வைக்கும் ஒரு டாகுமெண்ட்.. அதைப் பார்த்து விட்டு )

கை : எனக்கு அப்ரெய்சல்ல யாரும் ஆப்பு வச்சதில்ல...

கட்ட : போன க்வார்ட்டர்ல தான ஆப்பு வச்சேன்...

கை : அது போன க்வார்ட்டர்....நாஞ்சொல்றது இந்த க்வார்ட்டர்...

கட்ட : டேய் அந்த மானிட்டர எடுங்கடா...

(கட்டதுரை மானிட்டரை எடுத்து கைப்புள்ள காலில் போடுகிறார் )

கை : ஐயோ....கா...லூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ...

கைப்புள்ள said...

வாங்க கார்த்திக்,
முதன்முதலா நம்ம வீட்டுப் பக்கம் வர்றீங்க. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. அப்புறம் அமெரிக்காவெல்லாம் எப்படி இருக்கு?

////என்னடா..தலைப்பு பத்தி எங்கேயும் சொல்லலியேன்னு பாத்தேன்.. தமிழ் படம் மாதிரி கிளைமாக்ஸ்ல சொல்லிட்டீங்க..கைப்புள்ள//
கிளைமாக்ஸ் வரைக்கும் விறுவிறுப்பாக் கொண்டு போனேனா இல்லியான்னு நீங்க சொல்லவே இல்லியே?
:)

கைப்புள்ள said...

//இப்படி நம்ம கிறிஸ்கெயினை டெ.எ. வுக்கு ஒப்பிடலாமா?
அவரே டெ.எ.ன்னா இங்கே இருக்கற' ரக்பி வீரர்களை' என்னான்னு சொல்றது?

த்ரீமச்சா போச்சேப்பா. ரொம்ப ஃபீலிங்காப் போச்சு (-://

வாங்க துளசியக்கா!
நீங்க இவ்வளவு ஃபீலிங்ஸோட சொல்லறதைப் பாத்தா கண்டிப்பா க்றிஸ் கெயிர்ன்ஸ் உங்க ஸ்டூடண்டா இருந்துருப்பாரு போலிருக்கு. ஒரு சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக்னால அவனை(சாரி...சாரி...அவரை) டெ.எ.ன்னு சொல்லிட்டேன். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்.

//இங்கே வந்து பாருங்க,. 18 வயசுப் பொடியனுங்க எல்லாம் ஆளாட்டமா இருக்கறதை//
நியூசிலாந்துக்குல்லாம் நம்மளை அனுப்பறதுக்கும் கூப்புடறதுக்கும் யாரு இருக்காங்க? நீங்க சொன்னா சரி தான். நான் இங்கிருந்தபடியே யூகிச்சுக்கிறேன் 18 வயசு மினி "டெ.எ." எப்படியிருக்கும்னு.
:)

கைப்புள்ள said...

//வேவி நான் இன்னும் பாக்கலை.(Sep 10th Release in Adelaide)//

வா திரு,
ஆஹா இது என்ன ஏசியா-ஓசியானியா நாளா? மொதல்ல துளசி டீச்சர் நியுசிலாந்துலேருந்து...இப்ப நீ ஆஸிலேருந்து. பாரு மச்சி...தியேட்டர்ல பாரு.

//(கட்டதுரை மானிட்டரை எடுத்து கைப்புள்ள காலில் போடுகிறார் )

கை : ஐயோ....கா...லூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ... //

ஏண்டா டேய்! நண்பனைப் பத்தி ஒரு நாலு வார்த்தை நல்லதாச் சொல்லுவேன்னு பாத்தா நீயும் கைப்புள்ள ஒத வாங்குனதை கமெண்டா போடுறியா? நல்லாருப்பா...நல்லாரு.
:(

ALIF AHAMED said...

தல பாத்துபுட்டோமுல

நோகம நொங்கு சாப்புடோமுல நெட்டுல

::)))

இராம்/Raam said...

//கிளைமாக்ஸ் வரைக்கும் விறுவிறுப்பாக் கொண்டு போனேனா இல்லியான்னு நீங்க சொல்லவே இல்லியே?//

தல,

நீ பெரிய சினிமா டைரக்டரக்கும்...? கிளைமாக்ஸ் வரைக்கும் விறுவிறுப்பாக் கொண்டு போனதை பாரட்டுறதுக்கு........ :-)))))

Anonymous said...

அட என்னங்க...பதிவ முழுசா படிக்கலைங்க...(தலைவர் படத்த பார்க்கிற வரை ட்ரைலர், விமர்சனம் எதுவும் பார்க்க/படிக்கக்கூடாதுங்கிற வரட்டு வைராக்கியம் தான் :) ) இருந்தாலும் அட்டெண்டன்ஸ் போட்டுறேன்...

கடைசியா தியேட்டர்ல பார்த்த படம் பிதாமகனா? நீங்களும் நம்ம கட்சியா...:))

செ. நாகராஜ் - C. Nagaraj said...

it made me to relive my cine going experience at matunga during 1999.

U missed out the south india concern at telang road which serves tamilnadu food

கால்கரி சிவா said...

//டிஜிட்டல் தானே? காசா? பணமா? அதான் சும்மா மைக் டெஸ்டிங்...

//

மைக்கா? லென்ஸா? இல்லே ரெண்டுமா?