Wednesday, August 23, 2006

குயி...குயி...குயி...குயிஜு

பத்து கேள்விகளைக் கொண்ட ஒரு பொது அறிவு கேள்வி-பதில் பதிவுங்க. முயற்சி செஞ்சு பாருங்க.

1. ஐக்கிய நாடுகளின்(United Nations) பொதுச் செயலாளராக இருந்த ஒரே ஆசியக்
கண்டத்தவர் யார்?

2. கேர்ளி ஆண்டோ(Girly Anto) என்ற இயற்பெயர் கொண்ட திரைப்பட நடிகையின்
திரைப்பெயர் என்ன?

3. 'பாட்சா' திரைப்படத்தை நம்மில் பலரும் பார்த்திருப்போம். இப்படத்தில் 'பாட்சா' ரஜினி
அணியும் இவ்வகை கண்ணாடிகளுக்கு பெயர் என்ன?


4. நண்பர் ஒருவர் தங்களுக்கு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறார். அழைப்பிதழின் கடைசியில் RSVP என்று எழுதியிருக்கிறது. தங்களிடமிருந்து
எதிர்பார்க்கப் படுவது என்ன?

5. 1922இல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது ஒத்துழையாமை இயக்கத்தை காந்தியடிகள் விலக்கிக் கொள்ளச் செய்த நிகழ்வு எது?

6. "நீயும்நின் மனையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின் எம்மூர்
---------- ---------- தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி..."

---------- = ???

7. புகழ்பெற்ற இயேசுநாதரின் இச்சிலையை எந்த உலக நகரத்தில் காணலாம்?


8. இந்திய பாரம்பரிய சங்கீதத்தில், குதிரையின் கனைப்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள ஸ்வரம் எது?

9. அணுகுண்டு பரிசோதனையோடு தொடர்பு படுத்தப் படும் பெண்கள் நீச்சல் உடையின் பெயர் என்ன?

10. நடிகர் நாகேஷ் தன்னுடைய வழிகாட்டியாக(role model) கருதிய ஹாலிவுட் நடிகரின் பெயர் என்ன?

பதிவு தலைப்பு உபயம் : கெக்கேபிக்குணி அக்கா

156 comments:

Unknown said...

சரி ஒனக்கு ஒரு கேள்வி: இதுக்கு மொதல்ல பதில் சொல்லு:

இந்த மாதிரி அடிக்கடி குயிஜ் வச்சி கொல்லுறியே இந்த ப்ளாக்கு இதை கண்டுபுடிச்சது யாரு ?

கைப்புள்ள said...

கேமில் பெக்லியா(Camille Paglia). சரியா மகேந்திர வர்மரே?

சரி! நம்ம குயிஜுக்கு ஒரு பதிலைக் கூட காணோம்? ஏங்க? கேள்வியெல்லாம் ரொம்ப கடியா இருக்கா?
:)

ALIF AHAMED said...

யாராவது பதில் சொல்லாமலா போயிடுவாங்க..??

இல்ல நீதான் உட்டு விடுவியா.??

கைப்புள்ள said...

இல்ல மின்னலு! மெய்யாலுமே நெலமை ரொம்ப கவலைக்கிடமாத் தான் இருக்கு.

ALIF AHAMED said...

கேள்வி கேட்டதாலே பள்ளிகூடத்துக்கு போகாம கட் அடிக்கிறவங்க நாங்க..!!!!!!

ம்

பாக்கலாம்.::)))

Baby Pavan said...

Question no 2

In fact, it was Tulasidas who had changed her name from Girly Anto to Gopika.
Thanks to Google

www.hinduonnet.com/thehindu/mp/2005/08/20/stories/2005082003450100.htm

பொன்ஸ்~~Poorna said...

4. //RSVP // - Respondevu Sil vou plaiz (Spelling நினைவில்லை; மன்னிக்க)
- பதில் சொல்லுப்பா.. அதான் தல மீனீங்கு..

6. சத்தி முத்த வாவியுள்

8. ரீ?

பொன்ஸ்~~Poorna said...

10. சார்லி சாப்ளின்?

கைப்புள்ள said...

பவன் ரெண்டாவது கேள்விக்கு உங்க பதில் சரி

கைப்புள்ள said...

பொன்ஸ்,
4, 6 - சரி
8 - தவறு

ப்ரியன் said...

1) U Thant - பர்மா(மியன்மர்)

இருப்ப கைப்பூ மத்தது எல்லாம் கூக்ளிட்டு சொல்லூறேன் ;)

Baby Pavan said...

Question 1.

United Nations Secretaries-General

Trygve Halvdan Lie Norwegian 1946–53

Dag Hammarskjöld Swedish 1953–61

U Thant Burmese 1962–71

Kurt Waldheim Austrian 1972–81

Javier Pérez de Cuéllar Peruvian 1982–91

Boutros Boutros-Ghali Egyptian 1992–96

Kofi Annan Ghanaian 1997–

Again Thanks to Google

கைப்புள்ள said...

பொன்ஸ்
10- தவறு

கைப்புள்ள said...

ப்ரியன்
1- சரி

வாங்க வாங்க்...வெயிட்டிங்
:)

Baby Pavan said...

Question 4: It means he is asking your confirmation whether you would be attending the funtion. This is a french expression.

கைப்புள்ள said...

சின்னத் தம்பி,
1,2,4,7 - சரியான பதில்கள்

அப்ப மத்ததையும் கிடுகிடுன்னு சொல்லுங்க
:)

Unknown said...

7. Rio di Geniro

கைப்புள்ள said...

பவன்,
வெட்டிக்கிட்டு வான்னா கட்டிக்கிட்டு வந்திருக்கீங்களே?

ஒரு பதில் சொல்லுங்க சாமி
:)

Unknown said...

வந்துகிட்டே இருக்குங்க்கோவ்

1.யு.தான்ட் நாடு பர்மா
2. ஹி ஹி எனக்கு வெக்கமா இருக்கு அது நம்ம கோபிகா
3. ரிம்லெஸ்?
4. வருவீயா வரமாட்டியா வர்லேன்னா சொல்லிபுட்டு போ :)
5. ரவுண்டா குந்திகினு பேசுனதாப்பா?
6. கைப்பு இப்பிடி போட்டா நான் எஸ்கே அய்யாவத்தான் கேக்கனும் :(
7.மொன்டே கர்லோ?
9. பிகினி தீவு?
10.charlie chapline? or larurel hardy?

Baby Pavan said...

10 Its a Guess : Charlie Chaplin

கைப்புள்ள said...

பவன், வணக்கத்துடன்
4க்கான தங்கள் பதில் சரி

ALIF AHAMED said...

ம்ஹும்
இது அழுகுணி ஆட்டம்.

/./
கைப்புள்ள said...
பொன்ஸ்,
4, 6 - சரி
8 - தவறு
/./

சரி தவறுனு போட்டா எப்படி ??

பதில போட்டினா நாங்களும் ஆடுவோமில..::))))

நாமக்கல் சிபி said...

2. நடிகை கோபிகா!

கைப்புள்ள said...

மகி
1,2-சரி
3- ராங்
4- தமாசுன்னாலும் சரிதாம்பா
9 - கிட்டத்தட்ட சரி. எதுக்கு அதுல கொசுறு வேற
மத்ததெல்லாம் ஹி...ஹி

கைப்புள்ள said...

வணக்கத்துடன்,
2-சரி

நாமக்கல் சிபி said...

4.If R.S.V.P. is written on an invitation it means the invited guest must tell the host whether or not they plan to attend the party. It does not mean to respond only if you're coming, and it does not mean respond only if you're not coming (the expression "regrets only" is reserved for that instance). It means the host needs a definite head count for the planned event, and needs it by the date specified on the invitation.

நாமக்கல் சிபி said...

5. செளரி செளரா என்ற இடத்தில் காந்தியடிகளின் கட்டளையை மீறி, தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்டது

கைப்புள்ள said...

வணக்கத்துடன்,
1,7 - சரிங்க

சிபி வாங்க
1,2 - சரி

கைப்புள்ள said...

மின்னலு,
கிராக்கி வர்ற நேரத்துல பேஜார் பண்ணாத நைனா
:)

கைப்புள்ள said...

சிபி
4,5 - சரி

கைப்புள்ள said...

வணக்கத்துடன்,
5 - சரிங்க

கைப்புள்ள said...

தேவ்,
7-சரி

Unknown said...

மத்ததெல்லாம் ஹி...ஹி//

இதெல்லாம் என்ன விளையாட்டு ? சரின்னு எடுத்துக்கவா?

கைப்புள்ள said...

மகி,
மத்ததெல்லாம் அப்பீட்டுன்னு அர்த்தம். சும்மா சும்மா ராங்னு சொல்ல வேணாமேன்னு பாத்தேன்.

சின்னத்தம்பி,
10 - மிகச் சரி. கலக்கிட்டீங்க.

நாமக்கல் சிபி said...

10. சார்லி சாப்ளின், லாரல் ஹார்டி

Baby Pavan said...

7. I think it is on top of a mountain.
Could you kindly please tell me how to type in Tamil. You posts are nice and I enjoy reading it.

கைப்புள்ள said...

சிபி,
10- இல்லீங்க

நாமக்கல் சிபி said...

7. ரோம்!

கைப்புள்ள said...

சிபி,
7 - இல்லீங்க

ப்ரியன் said...

2.)கோபிகா

4.) RSVP : répondez s'il vous plaît - Please Respond

5.)நாராய் நாராய்! செங்கால் நாராய்!
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!
நீயும்நின் மனையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின் எம்மூர்
சத்தி முத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடுபார்த் திருக்குமென் மனைவியைக் கண்டு
எம்கோ மாறன் வழுதிக் கூடலில்
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே!

நன்றி : சுவடு : http://suvadu.blogspot.com/2003_11_01_suvadu_archive.html

நாமக்கல் சிபி said...

6. நீயும்நின் மனையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின் எம்மூர்
சத்தி முத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடுபார்த் திருக்குமென் மனைவியைக் கண்டு
எம்கோ மாறன் வழுதிக் கூடலில்
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே!

- புறநானூற்றுப் பாடல்

கைப்புள்ள said...

பவன்,
ரொம்ப மகிழ்ச்சிங்க.

கீழே கொடுக்கப் பட்டுள்ள சைட்டுக்குப் போய் ஈ-கலப்பை பதிவிறக்கம் செஞ்சிக்கங்க. இதே சைட்டுல எப்படி தட்டச்சு செய்யனும்னு வெளக்கமும் இருக்கு.

http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=3

கைப்புள்ள said...

சிபி,
10 - இல்லீங்க

ப்ரியன் said...

Dhaivata/Dha, the horse's neigh

கொசுறு : Sa Re Ga Ma Pa Dha Ni Sa


Traditionally, the seven svaras are said to derive, as do many elements of Indian music, from sounds in nature: Shadja/Sa is said to imitate the cry of the peacock; Rishaba/Re, the chataka bird crying for its mate; Gandhara/Ga, the bleating of a goat or sheep; Madhyama/Ma, the middle sound, the crane or heron's call; Panchama/Pa, the fifth sound, the kokila (cuckoo) in spring; Dhaivata/Dha, the horse's neigh, or the frog in the rainy season; Nishada/Ni, the trumpeting of the elephant.

நன்றி : http://janhaag.com/NP23thats.html

கைப்புள்ள said...

ப்ரியன்,
2,4,5 - சரிங்க

சிபி
5 - சரிங்க

Baby Pavan said...

Question 7. my earlier guess was correct.It is on top of a mountain.

Christ the Redeemer of the Open Arms, located atop the Corcovado Mountain Rio de Janeiro, Brazil.

கோவி.கண்ணன் [GK] said...

//7. புகழ்பெற்ற இயேசுநாதரின் இச்சிலையை எந்த உலக நகரத்தில் காணலாம்? //
ப்ரேசில் ரியோடிஜெனிரோ
//
8. இந்திய பாரம்பரிய சங்கீதத்தில், குதிரையின் கனைப்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள ஸ்வரம் எது?
//
பஞ்ச கல்யாணி

நாமக்கல் சிபி said...

//சிபி
5 - சரிங்க //

அதான் ஏற்கன்வே 4,5 சரின்னு சொல்லிட்டீங்களே! இன்னும் என்ன 5 - சரிங்க?

கைப்புள்ள said...

பவன்,
7 - சரி

ப்ரியன்
8 - முதல்ல சரியான பதில் சொன்னது நீங்க தான். வாழ்த்துகள்

நாமக்கல் சிபி said...

யப்பா! கைப்பு! மீதியெல்லாம் கூகிள்ள தேட முடியலையே!

நாமக்கல் சிபி said...

8. நிஷதம்

கைப்புள்ள said...

சின்னத்தம்பி,
6- சரிங்க

ஆறாம் கேள்விக்கு முதன்முதலில் சரியான பதில் சொன்ன பொன்ஸுக்கும் 9 ஆம் கேள்விக்கு இது வரை சரியான பதில் சொல்லியிருக்கிற ஒரே ஒருவரான மகேந்திரனுக்கும் வாழ்த்துகள்.

நாமக்கல் சிபி said...

3. கூலிங் கிளாஸ்

கைப்புள்ள said...

மூனாவது கேள்வி மட்டும் தாங்க இன்னும் பதில் அளிக்கப் படாமல் இருக்கு. யாராச்சும் முயற்சி பண்ணுங்க.

கைப்புள்ள said...

சிபி,
8 - இல்லீங்க

கோவி,
வாங்க வாங்க
7 - சரி
8 - இல்லீங்க

கைப்புள்ள said...

சின்னத்தம்பி, சிபி,
3க்கு பதில் தப்புங்க.

சிபி ஆனாலும் ஒங்களுக்கு நக்கல் கொஞ்சம் சாஸ்தி தானுங்கோ.
:)

நாமக்கல் சிபி said...

//8 - இல்லீங்க//
என்ன தப்பா?
பிச்சிப்பிடுவேன் பிச்சி!
கூகிளாண்டவர் சொல்லிட்டார்.

ப்ரியன் said...

7.) Rio - Corcovado Mountain - Brazil

நாமக்கல் சிபி said...

கைப்பு தவறு ஏற்பட்டு விட்டது.

8. Da Dhaivatam (धैवतं) -- Horse

கைப்புள்ள said...

தளபதி,
சங்கத்து சிங்கம்னாலும், நெத்திக் கண்ணு காட்டிக்கினாலும் ராங்ன்னா ராங் தான் நைனா!

ப்ரியன் said...

/*என்ன தப்பா?
பிச்சிப்பிடுவேன் பிச்சி!
கூகிளாண்டவர் சொல்லிட்டார்.*/

அதானே :) கூக்ளி ஆண்டவர் சொன்னது தப்பா ?

கைப்புள்ள said...

சிபி,
அப்படி வாங்க வழிக்கு
8 - இப்ப சரி

ப்ரியன்
7- சரிங்க

9க்கு இன்னும் சில பேரு டிரை பன்னுங்கப்பா. கிளுகிளுப்பான சமாச்சாரம்பா.
:)

கைப்புள்ள said...

கூகிளாண்டவர் சரியாத் தாங்க சொல்லிருக்காரு ப்ரியன். இவரு தப்பா பதில் போட்டுட்டு இங்கன வந்து ரவுசு வுடறாரு.
:)

ப்ரியன் said...

அப்ப இன்னும் 3 வது கேள்விக்கு மட்டும்தான் பதில் வரலே இல்லாயா?

தலைவர் என்ன செய்வார் எப்படி செய்வார் னு தான் புரியாதுன்னு பாத்தா தலைவர் கண்ணாடி கூட அப்படித்தான் போல

கூக்ளி காப்பாத்து

கைப்புள்ள said...

சின்னத்தம்பி,
9க்கு க்ளூ தந்துருக்கேன் பாருங்க.
:)

நாமக்கல் சிபி said...

//அணுகுண்டு பரிசோதனையோடு தொடர்பு படுத்தப் படும் பெண்கள் நீச்சல் உடையின் பெயர் என்ன?
//

//9க்கு இன்னும் சில பேரு டிரை பன்னுங்கப்பா. கிளுகிளுப்பான சமாச்சாரம்பா//

பாண்டித்தம்பீ..........எங்கய்யா போயிட்டே?

நாமக்கல் சிபி said...

9.பிகினி

கதிர் said...

இந்த ஆட்டைக்கு நான் வரலப்பா!

கைப்புள்ள said...

சிபி,
9-சரி

கைப்புள்ள said...

தம்பி,
என்னங்க முயற்சி பண்ணாமலே பழம் புளிக்கும்ங்கறீங்க?
:)

கைப்புள்ள said...

சின்னத்தம்பி,
ஐயா சாமி! நான் வர்லை இந்த ஆட்டத்துக்கு.
:)

நாமக்கல் சிபி said...

7.பிரேசில்

(Statue of Christ, Sugarloaf Mountain, Brazil)

நாமக்கல் சிபி said...

சின்னத்தம்பி, சின்னத்தம்பிதான்(பிரபு) என்பதை நிரூபிக்கிறார் கைப்புள்ளை!

ப்ரியன் said...

3 வதுக்கு ஒரு க்ளூ ப்ளீஸ்

கைப்புள்ள said...

சி.தம்பி,
or எல்லாம் சொல்லப்பிடாது. எதனா ஒன்னு சொல்லுங்க.

கதிர் said...

வாத்தியார் போட்ட மார்க்க எச்சி போட்டு அழிச்சி நாங்களே மார்க்கு போட்டுக்குற பரம்பரைல வந்தவங்க நாங்க

//என்னங்க முயற்சி பண்ணாமலே பழம் புளிக்கும்ங்கறீங்க?//

பதில் தெரியலனா சாட மாடையா இப்படிதான் சொல்லுவோம் நீங்க தான் புரிஞ்சிக்கணும்!

நாமக்கல் சிபி said...

தலை 7 சரியா இல்லையா?
பிரேசில்

கைப்புள்ள said...

சிதம்பி
9- இப்போ சரி

சிபி
7- நாடு சரி. மத்த மேட்டர் எல்லாம் தப்பு

கைப்புள்ள said...

3ஆவது கேள்விக்கு க்ளூ வேணுங்கிற புள்ளைங்க எல்லாம் கை தூக்குங்கப்பா.

கைப்புள்ள said...

சிபி,
நாடு சரிங்க. ஆனா கேட்டுருக்கறது ஊரு பேருங்கோ.

ப்ரியன் said...

நான்

ப்ரியன் said...

நான் எப்பவோ கை தூக்கியாச்சு

இராம்/Raam said...

தல,

முன்றாவது கேள்விக்கு சரியான பதில் நான் சொல்லுறேன்...

அதுக்கு பேரு wig spectacles...!

சரியா....?

இலவசக்கொத்தனார் said...

1) பர்மியர் யூ தாண்ட்

2)கோபிகா

3) ரிம்லெஸ்?

4) R.S.V.P. stands for a French phrase, "répondez, s'il vous plaît," which means "please reply." The person sending the invitation would like you to tell him or her whether you accept or decline the invitation. That is, will you be coming to the event or not? தமிழில் எழுத சோம்பேறித்தனமா இருக்கு.அதான் கட் பேஸ்ட்.

5) மாண்டகு செம்ஸ்ஃபோர்ட் ரிப்போர்ட்டுக்கு எதிராகவும், கிலாபட் மூவ்மெண்டுக்கு ஆதரவாகவும் தொடங்கப்பட்டது. (எங்கயோ துருக்கியில் நடந்த இந்த சம்பவத்துக்கு நம்ம ஆளுங்க ஏன் இவ்வளவு டென்ஸன் ஆனாங்க? அதுவும் அந்த சமயம் நம்ம பொழப்பே நாறிக்கிட்டு இருந்தது. யாராவது கொஞ்சம் சொல்லுங்கப்பா.)

6)சத்தி முத்த வாவியுள் (நன்றி சங்கர் - http://suvadu.blogspot.com/2003_11_01_suvadu_archive.html)

7) ரியோ டி ஜெனீரோ, பிரேஸில்

8) தா

9) பிகினி

10) ஜெர்ரி லூயிஸ்

(3 தப்புன்னு நினைக்கிறேன். இன்னும் ஒருக்கா வரேன்.)

நாமக்கல் சிபி said...

7.The Statue of Christ the Redeemer, standing 30 metres (98ft) tall and overlooking the city of Rio de Janeiro, is one of the tallest statues in the world.

நாமக்கல் சிபி said...

நான் சொன்ன 6 வது கேள்விக்கான விடை சரியா? தவறா?

இராம்/Raam said...

தல,

7க்கு ரீயோ-டி-ஜெனிரோ ....


சரியா...?

கைப்புள்ள said...

மன்னிக்கனும் தம்பிங்களா! வேலை வந்துடுச்சு திடீர்னு.

மூனாவதுக்கு க்ளூ "மேட்ரிக்ஸ் பட மொட்டையன்"

நாமக்கல் சிபி said...

10. Norman Wisdom + Jerry Lewis

இராம்/Raam said...

தல,

இது நல்லதுக்கு இல்லே.. கேள்வியை கேட்டுப்பிட்டு நீ பாட்டுக்கு சும்மா இருக்கே... எல்லா பதிலும் வந்திருச்சா.. அதமொதல்ல சொல்லு..

நானும் உனக்கு பதிலே போட்டுபிட்டு அரைமணிநேரமா உன்னோட பதிவே Refresh பட்டனை அமுக்கிட்டு உக்கத்திருக்கேன். ஒன்னயேயும் காணோம் இதுவரைக்கும்....!

இன்னிக்கு பசிக்கிது நாளை வந்து பதில் சொல்லுறேன்னு சொல்லபிடாது ஆமா.....

கைப்புள்ள said...

ராம்,
7 - சரி
3- இல்லப்பா

கைப்புள்ள said...

கொத்ஸ்,
3,5 ஐ தவிர எல்லாம் சரி.

கைப்புள்ள said...

சிபி,
7 - சரிங்க

கைப்புள்ள said...

சிபி,
7 - சரிங்க

நாமக்கல் சிபி said...

6வது கேள்விக்கான பதில் சரியா தப்பா?

கைப்புள்ள said...

சிபி,
உங்களோட 6 சரி தானுங்க

நாமக்கல் சிபி said...

3. நியோ

கைப்புள்ள said...

சிபி,
10க்கு + க்கு முன்னாடி உள்ளது பதிலா இல்லை பின்னாடி உள்ளதா? ஒன்னைச் சொல்லுங்கய்யா.

இராம்/Raam said...

தல..

அப்போ அது மார்ப்ஸ் ஸ்பெக்டகல்ஸ்....

சரியா..?

கைப்புள்ள said...

சிபி,
3 தப்புங்க

நாமக்கல் சிபி said...

கடைசியா சொன்னது!

அதாவது +க்கு அப்புறம்.

கைப்புள்ள said...

3ஆவது கேள்விக்கு இன்னொரு க்ளூ - தியோடோர் ரூஸ்வெல்ட்

இராம்/Raam said...

கைப்பு இன்னும் எத்தனைக்கு பதில் வரணும்....?

நாமக்கல் சிபி said...

3. FedEx

கைப்புள்ள said...

சிபி,
+க்கு அப்புறம்னா 10க்கு பதில் சரி.
:)

ராம்
3- தப்புப்பா. அடுத்த க்ளூவைப் பாரு

கப்பி | Kappi said...

3 - morpheus?

கப்பி | Kappi said...

நாங்க தலைவர் பத்தின கேள்விக்கு மட்டும் தான் பதில் சொல்வோம் :P
ஆமா அது கரீட்டா??

கைப்புள்ள said...

சிபி
3- இல்லிங்க

கப்பி
3- மொட்டை பேரு இல்லப்பா. கண்ணாடி பேரு கேட்டேன்.

கைப்புள்ள said...

கப்பி!
தலைவர் கேள்விக்கும் உன்னோட பதில் தப்பேய்.

கைப்புள்ள said...

ராம்,
3 மட்டும் தான் பாக்கி

நாமக்கல் சிபி said...

3. Matrix

நாமக்கல் சிபி said...

3. Race (!?)

கைப்புள்ள said...

சிபி,
3 - ரெண்டு பதிலுமே தப்பு. இன்னொரு க்ளூ வேணுமா? உங்களை ரொம்ப படுத்தவும் நான் விரும்பலை.

நாமக்கல் சிபி said...

எல்லா கேள்விகளுக்கும் நானே விடை கண்டுபிடித்தால் மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுகாத பாவத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால்,

மற்ற பதிவர்களுக்காக 3 வது கேள்வியை மட்டும் விட்டு வைக்கிறேன்.

(வெளிநாட்டு இங்கிலிபீஸு சமாச்சாரம், நமக்கு எப்பிடி தெரியும்)

இராம்/Raam said...

3)Pince-nez சரியா தல

கைப்புள்ள said...

ராம் சூப்பர்.கையைக் குடு. கலக்கிப்புட்டே. மூனுக்கும் பதில் சொல்லியாச்சு.

மூனுக்கு நான் க்ளூ குடுக்க வந்தேன். அது இதோ -

சரி...மூனு ரொம்ப படுத்தி எடுக்கறதால இன்னும் ஒரு சுலபமான க்ளூ.
3. மார்ஃபியஸ் என்னும் கதாபாத்திரமாக மேட்ரிக்ஸ் திரைபடத்தில் நடித்தவரும், அமெரிக்க அதிபர் தியோடோர் ரூஸ்வெல்ட் அவர்களும் அணிந்து பிரபல படுத்திய இவ்வகை கண்ணாடிகளின் பெயர் என்ன?

கப்பி | Kappi said...

//மூனாவதுக்கு க்ளூ "மேட்ரிக்ஸ் பட மொட்டையன்"//

நான் கொஸ்டின் படிக்காம க்ளூ மட்டும் படிச்சேனா.. அதான்..கண்டுக்காத தல

Unknown said...

Laurence Fishburne
morpheus?

இராம்/Raam said...

தல,

இத மட்டும் நீ இல்லன்னு சொன்னேனு வை.... எனக்கு கெட்ட கோபம் வந்து அழுதுருவேன் ஆமா....

மூனாவதுக்கு பதில் பின்ஸ்-நெஸ்
(Pince-nez )

சரியா... தப்பா..

மொதல்ல போட்டது வந்துச்சான்னு தெரியலை அதுக்குதான் இன்னொரு பதில் போட்டு இருக்கேன்...

கைப்புள்ள said...

ராம், உனக்கு ஒரு ஸ்பெசல் 'ஓ'. நெஜமாவே சூப்பர்பா. நான் கேட்ட கேள்விக்கு நானே பதில் சொல்ல வேண்டிய அவல நிலை வந்துரும்னு நெனச்சேன். அப்படி இப்படின்னு எப்படியோ கண்டுபிடிச்சிட்டே.

இப்ப எல்லாருடைய பதிலையும் வெளியிட்டுடலாமா? வெளியிட்டாலும் நாளைக்கு பதிலை எல்லாம் ஒன்னாச் சேர்த்து ஒரு பதிவு போடத் தான் செய்வேன். ஆமா!
:)

இராம்/Raam said...

தல,

நீ பெரிய குவிஸ் மாஸ்டர் ஆயீட்டே..

நானும் ரெண்டு பதிலை சொல்லிருக்கேன்... ஒரு பதிலுக்கு ரூ.2000மின்னு கணக்கு வேச்சு நாலாயிரத்தை என்னோட அக்கவுண்ட்'ல போட்டுவிடு... இதுமாசகடைசி வேற காசு சுத்தமா இல்லே..

நாளைக்கி வெள்ளிகிழமை வேற வருது. நிறைய கடைகண்ணிக்கு போவணும்.. "பார்"க்கணும்...........:-)))))

இராம்/Raam said...

//மற்ற பதிவர்களுக்காக 3 வது கேள்வியை மட்டும் விட்டு வைக்கிறேன்.//

தாங்ஸ் சிபியண்ணே....

நாமக்கல் சிபி said...

ஒரு பதிலுக்கு 2000மா? டாலரா ரூபாயா?

எதுனாலும் சரி! நான் 9 கேள்விக்கு சரியாச் சொல்லி இருக்கேன்.

நாமக்கல் சிபி said...

விடைகளை சரியாகச் சொன்ன அனைவருக்கும் சொன்ன விடைகளின் எண்ணிக்கைக்கேற்ப வினா ஒன்றுக்கு ரூ2000 வீதம் கைப்பு அவர்களால் அனுப்பப்படும்.

மேலும் பங்கு பெற்று சரியாகச் சொல்லாதாவர்களுக்கு வினா ஒன்றுக்கு ரூ1000 வீதமும், ஒன்றுக்கு மேற்பட்ட முயற்சிகளுக்கு முயற்சி ஒன்றிற்கு ரூ500ம் அனுப்பப்படும்.

பங்கு பெற்றவர்கள் அனைவரும் தங்களது விலாசத்தை தனி தனிப் பதிவுகள் மூலம் எங்கள் தலைவர், வ.வா.சங்கத்தின் விடிவெள்ளி அண்ணன் கைப்பு அவர்களுக்குத் தெரியப்படுத்தவும்.



பங்கு பெற்ற

கைப்புள்ள said...

//Laurence Fishburne
//

அது மொட்டையா நடிச்ச மார்பியஸோட பேருங்க. நமக்கு தேவை கண்ணாடி பேரு.

இராம்/Raam said...

//ராம், உனக்கு ஒரு ஸ்பெசல் 'ஓ'. நெஜமாவே சூப்பர்பா. //

தல நீ ஓ'வெல்லாம் போடவேணாம். நான் கேட்டத்த மட்டும் போட்டுவிடு இப்போ....!

//நான் கேட்ட கேள்விக்கு நானே பதில் சொல்ல வேண்டிய அவல நிலை வந்துரும்னு நெனச்சேன். அப்படி இப்படின்னு எப்படியோ கண்டுபிடிச்சிட்டே.//

நான் மொதலே பின்ஞ்நெஸ்'ன்னு கெஸ் பண்ணினேன் நீ வேற மேட்ரிக்ஸ் மொட்டதலை அது இது குழப்பிவிட்டே... ஆனாலும் அமெரிக்க பிரசிடன்ட் ரூஸ்வேல்ட்ன்னு க்ளு குடுத்தவுடனே கன்பார்ம் ஆகிப்போச்சு.....

கைப்புள்ள said...

சிபி! ராம்
ஒரு பதிலுக்கு ரெண்டாயிரமா? நானும் வரேம்பா இந்த வெளாட்டுக்கு. என்னையும் ஆட்டத்துல சேத்துக்கங்கப்பா.

நாமக்கல் சிபி said...

பங்கு பெற்றவர்களுக்கு முக்கிய குறிப்பு:

அண்ணன் கைப்பு அவர்கள் பரிசு மற்றும் ஆறுதல் பரிசுத் தொகையினை அவருடைய சொந்தப் பணத்திலிருந்து அனுப்புவார்.

கைப்புள்ள said...

இன்னும் யாராவது முயற்சி பண்றீங்களா?

நாமக்கல் சிபி said...

//இன்னும் யாராவது முயற்சி பண்றீங்களா?//

பின்னே முயற்சி ஒன்றிற்கு ரூ500 இருக்கே!

நாமக்கல் சிபி said...

முயற்சியே செய்யாமல் பின்னூட்டம் மட்டும் இட்டவர்களுக்கு ஊக்கப் பரிசாக பின்னூட்டம் ஒன்றிற்கு ரூ250 வீதம் வழங்கப்படும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

(மின்னல் உனக்கும் மகிழ்ச்சிதானே?)

நாமக்கல் சிபி said...

முகவரியைத் தெரியப்படுத்த பதிவிடும் பங்கேற்பாளர்களில் முதல் 20 பதிவிடும் நபர்களுக்கும் தலா ரூ100 அண்ணன் கைப்பு அவர்களால் வழங்கப்படும்.

நாமக்கல் சிபி said...

படித்து விட்டு பின்னூட்டம் கூட இடாமல் சென்றவர்களுக்கு தலா ரூ50..

(ஐயோ தலை விட்டுருங்க..விட்டுருங்க... நான் அமைதியா இருக்குறேன்...)

Unknown said...

hola kaippullai donde está mi premio? contesté a sus 6 preguntas y envío su premio a mi cuenta número 10398736

நாமக்கல் சிபி said...

மகேந்திரன் உங்க பாஷை எனக்கும் புரிந்து விட்டது!

6 கேள்விகள் சரியாக சொல்லியுள்ளேன். என்னுடைய அக்கவுண்ட் நம்பர் இதுதான் என்று சொல்லி இருக்கிறீர்கள். சரியா?

கைப்புள்ள said...

தளபதி!
நானே வெறும்பயன்னு ஒமக்கு தெரியாததாய்யா...இதுக்கு இம்புட்டு பில்டப்பு? நம்ம ஆஸ்தான பரிசு பச்சை சிலுக்கு ஜிப்பா துணி ஒன்னரை மீட்டரும் பானுப்ரியா உபயோகிக்கிற ஐடெக்ஸ் மைபென்சிலும் தானே? அத வேணா கஜானாவைத் தொறந்து எடுத்து குடுத்துரலாம்.

யாராருக்கு வேணுமோ வரிசையில நில்லுங்கப்பா

இராம்/Raam said...

//hola kaippullai donde está mi premio? contesté a sus 6 preguntas y envío su premio a mi cuenta número 10398736 //

மகி,

எல்லாத்துக்கும் தெரிச்ச பாஸைதான் நீங்களும் பேசுறீங்க... யாருக்கும் சரியா தெரியாத வேறபாஸை'ல சொல்லுங்க.... (உம்: தமிழ்)

நாமக்கல் சிபி said...

//நம்ம ஆஸ்தான பரிசு பச்சை சிலுக்கு ஜிப்பா துணி ஒன்னரை மீட்டரும் பானுப்ரியா உபயோகிக்கிற ஐடெக்ஸ் மைபென்சிலும் தானே? அத வேணா கஜானாவைத் தொறந்து எடுத்து குடுத்துரலாம்.
//

பங்கேற்பாளர்களே! மீண்டும் உங்கள் கவனத்திற்கு!


அண்ணன் கைப்பு அவர்கள் பரிசு மற்றும் ஆறுதல் பரிசுத் தொகையினை அவருடைய சொந்தப் பணத்திலிருந்து அனுப்புவார்.

சங்கப் பணத்திலிருந்து அல்ல!

பொன்ஸ்~~Poorna said...

ஐயா கைப்பு, ரிசல்ட் போடும் முன்னேயே 100 பின்னூட்டமா?!!

ஆஆஆஆஆஅ

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இராம்/Raam said...

தல,

நீ என்னாத்துக்கு இன்னும் காத்திக்கிட்டு இருக்க... நாங்க வெயிட் பண்ண பண்ண நீ நிறைய செலவு பண்ணவேண்டியாதிருக்கும்....
ஆமா சொல்லிப்பூட்டேன்.

பொன்ஸ்~~Poorna said...

//.இதுக்கு இம்புட்டு பில்டப்பு? நம்ம ஆஸ்தான பரிசு பச்சை சிலுக்கு ஜிப்பா துணி ஒன்னரை மீட்டரும் பானுப்ரியா உபயோகிக்கிற ஐடெக்ஸ் மைபென்சிலும் தானே? அத வேணா கஜானாவைத் தொறந்து எடுத்து குடுத்துரலாம்.//


கைப்பு, அந்தக் கேமிராவை மட்டும் கொடுத்துடு தல..

முதல் முதல் பதில் சொன்ன சங்க அடிப்படை உறுப்பினரான எனக்குத் தான் அந்தக் கேமிரா

கைப்புள்ள said...

பொன்ஸ்,
நான் போதும் போதும்னாலும் நீங்க எல்லாம் வேணும் வேணும்னு பின்னூட்டம் போட்டு 100 வரைக்கும் கொண்டு போயிட்டீங்க. நான் என்ன பண்ண முடியும் அதுக்கு?
:)

இராம்/Raam said...

//தளபதி!
நானே வெறும்பயன்னு ஒமக்கு தெரியாததாய்யா...இதுக்கு இம்புட்டு பில்டப்பு? நம்ம ஆஸ்தான பரிசு பச்சை சிலுக்கு ஜிப்பா துணி ஒன்னரை மீட்டரும் பானுப்ரியா உபயோகிக்கிற ஐடெக்ஸ் மைபென்சிலும் தானே? அத வேணா கஜானாவைத் தொறந்து எடுத்து குடுத்துரலாம்.

யாராருக்கு வேணுமோ வரிசையில நில்லுங்கப்பா //

அடபாவி இதுக்குதான் நாங்க மாய்ச்சு மாய்ச்சு உனக்கு பதில் சொன்னமா... உன்னை ஓட்டகம் கடிச்சு வைக்க....
:-)

கைப்புள்ள said...

//அண்ணன் கைப்பு அவர்கள் பரிசு மற்றும் ஆறுதல் பரிசுத் தொகையினை அவருடைய சொந்தப் பணத்திலிருந்து அனுப்புவார்.

சங்கப் பணத்திலிருந்து அல்ல!//

தள! உங்க பாசத்துக்கு முன்னாடி...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இராம்/Raam said...

//கைப்பு, அந்தக் கேமிராவை மட்டும் கொடுத்துடு தல.. //

யக்கோவ் அதுக்குதான் நான் உக்கத்திருக்கேன்... நானும் அந்தபெட்டியை தூக்கிட்டு பல்லி,கரட்டைவண்டியெல்லாம் போட்டா எடுக்காலாமின்னு உட்கார்த்திருத்தா.....

என்னா சின்னபுள்ளத்தனமா.... தல நீ எனக்குதானே அதை குடுப்பே....:-)))

//முதல் முதல் பதில் சொன்ன சங்க அடிப்படை உறுப்பினரான எனக்குத் தான் அந்தக் கேமிரா //

பொன்ஸ்க்காவிற்கு கொடுக்ககூடாது என கண்டனதீர்மானம் கொண்டு வருகிறேன். யாருயாருப்பா இதை ஆதாரிக்கிறீங்க... சீக்கிரம் சொல்லுங்க. வெளிநடப்பு பண்ணுவோம்.

கைப்புள்ள said...

//அடபாவி இதுக்குதான் நாங்க மாய்ச்சு மாய்ச்சு உனக்கு பதில் சொன்னமா... உன்னை ஓட்டகம் கடிச்சு வைக்க....
:-)//

யூ மீன் இந்த டிரோமடரி? இல்ல பேக்ட்ரியன் கேமலா? தெளிவாச் சொல்லு.
:)

இராம்/Raam said...

//யூ மீன் இந்த டிரோமடரி? இல்ல பேக்ட்ரியன் கேமலா? தெளிவாச் சொல்லு.:) //

இதுலெ இங்கிலிபிஸ் வேற.... இத்தனை ஒட்டகமா உன்னைய கடிச்சு வச்சிருக்கு... அதுதான் இம்பூட்டு அறிவா....:-)))))

நாமக்கல் சிபி said...

//யாருயாருப்பா இதை ஆதாரிக்கிறீங்க... சீக்கிரம் சொல்லுங்க. வெளிநடப்பு பண்ணுவோம்.
//

நான் இருக்கேன்.

ஆளுக்கொரு கேமிரா வந்தாகணும் சொல்லிட்டேன்.

உங்கள் நண்பன்(சரா) said...

கைப்பூ! காலைல இருந்து வேலை அதான் நண்பர்களின் பக்கங்களுக்கு வரமுடியல! நான் தைப்பையும் கேள்வியையும் மட்டும் தான் படித்துள்ளேன்.இன்னும் பின்னூட்டங்களைப் படிக்கல,
10க்கு 10ம் நண்பர்கள் வாங்கியாச்சா? இல்லை சரவணன் தான் சொல்லனும்னு அடம்புடிச்சி யாரும் விட்டு வச்சிருக்காங்கலா? (எல்லோரும் சொல்லியிருப்பீங்கன்னு நெனச்சிதான்யா பீலா விட்டுருக்கேன், என்ன கொடுமை சரவணன்னு யாரும் நம்மல கவுத்தீடதிக!)



அன்புடன்...
சரவணன்.

இராம்/Raam said...

//நான் இருக்கேன்.

ஆளுக்கொரு கேமிரா வந்தாகணும் சொல்லிட்டேன். //

தாங்ஸ் சிபிண்ணே... எங்கே இந்த புலிராசாவே காணோம். வந்தா நல்லா சவுண்ட் விடும் ஆளா காணோம்..!

மா சிவகுமார் said...

கைப்புள்ள,

நல்ல கேள்விகள். பதில்களைப் படிக்காமல் நான் முயற்சி செய்ததில்

4. ஆர் எஸ் வி பி பற்றி பொருள் மட்டும் தெரிந்திருந்தது. பிரென்சு சொறொடர் தெரியாது.

5. சௌரி சௌரா வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி விட்டு, சட்ட மறுப்பு இயக்கத்தைத் தள்ளிப் போட்டார் காந்தி.

9. பிகினி என்று ஒரு ஊகம்.

பத்துக்கு மூன்று, தேறவில்லை.

அன்புடன்,

மா சிவகுமார்

ILA (a) இளா said...

கைப்பு, அதான் தெரியுமில்லை, நம்ம தோட்டத்துல தமிழ்மணமும் வீசுறது இல்லே, தேன்கூடும் கட்டுறது இல்லேன்னு. ஒரு பதிவ போட்டா ஒரு கடுதாசி எழுதுய்யா. உன் மேல எனக்கு எக்கசக்க கோவம்,இனிமே இப்படி நடந்துச்சு அழுதுபுடுவேன் அழுது , ஆமா

siva gnanamji(#18100882083107547329) said...

1. யு தாண்ட்
2. ....
3. ....
4. Respndez sil vou plaise
தங்கள் வருகை குறித்து அறிவிக்க
வேண்டுகிறோம்
5. சாரி செளரா காவல் நிலையம் தாக்கப்பட்டு காவலர்கள் உயிர் இழ்ந்தது
6. சக்திமுற்றப்புலவர்
7....
8....
9....
10. ஜெரி லூயிஸ்

ALIF AHAMED said...

எனக்கு ஒன்பதாவது கேள்விக்கு மட்டும் தான் விடை தெரிந்தது.:(

சொன்னா நீ தப்பா எடுத்துக்கிவியோனு சொல்லல..!!!

உன்னிடம் குடுத்த வாக்குக்காக......

ALIF AHAMED said...

/./
முயற்சியே செய்யாமல் பின்னூட்டம் மட்டும் இட்டவர்களுக்கு ஊக்கப் பரிசாக பின்னூட்டம் ஒன்றிற்கு ரூ250 வீதம் வழங்கப்படும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

(மின்னல் உனக்கும் மகிழ்ச்சிதானே?)
/./

ம்ஹும் எனக்கு ரூ 250 வேண்டாம்.

அந்த ஆர்மோனிய பெட்டி போதும்.::)))

சிபி பாத்து எனக்கு வரவேண்டியதை தல தலைய எடுத்தாவது வாங்கி கொடுங்க...!!!

உங்களுக்கு தரவேண்டியதை தந்து விடுகிறேன்.

கைப்புள்ள said...

வருகைக்கும் முயற்சிக்கும் நன்றிகள் சிவஞானம்ஜி, மா.சிவகுமார்.

இளா,
பாயிண்ட் நோட்டட். இனிமே பாருங்க.
:)

சரவணா,
வாய்யா வா. அடுத்ததா அண்ணாச்சி கடையில எந்த அம்மணி வந்து ஆடப் போவுது? ஷூட்டிங்குக்கு மட்டும் எங்களை கூப்பிடாதே...மத்ததுக்கெல்லாம் மட்டும் வந்து சவுண்டு வுடு.
:)