Sunday, April 02, 2006

முதன்முறையாக...

அது என்ன "முதன்முறையாக" அப்படீங்கறீங்களா? இந்த பதிவு தாங்க...இது நான் சென்னையிலிருந்து எழுதும் முதல் பதிவு. ஒரு வழியா இன்னிக்கு அதிகாலை சென்னை வந்து சேர்ந்தாச்சு. ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க. அது போல நம்ம தமிழ்கூறு நல்லுலகுக்கு இலக்கிய சேவை ஆற்றாம ஒரு வாரமா ஒரே பேஜாரா போயிட்ச்சு. அதோட நம்ம வருத்தப்படாத வாலிப சங்கத்து வேலைகளும் போட்டது போட்ட படி கெடக்குது. தலயோட தலை கொஞ்சம் டவுன் ஆனதும் நம்ம சங்கத்து மூத்த தொண்டர் தேவு தல வாழை இலை போட்டு ஊருக்கே விருந்து வச்சிட்டாப்ல. இப்படியே போச்சுன்னா இதுக்கு மேலேயும் நம்மளை எதிர்பார்க்காம சங்கத்து வேலைங்களோட நம்ம குடும்பத்து வேலை எல்லாத்தையும் நம்ம தொண்டனுங்களே பாத்துக்குவாங்க போலிருக்கு. அதுனால அப்பப்ப ஒரு உள்ளேன் ஐயா போடணும் போலிருக்கு :(-

நாளையிலிருந்து புது வேலை...புது இடம்...புது மனிதர்கள்...புது பல்புகள்(அதை சொல்லலன்னா எப்படி? அது மட்டும் தானே நமக்கு நிரந்தரம்!). பெரியவங்க ஆசிர்வாதத்துக்காக இந்தப் பதிவு மூலமா ஒரு டிஜிட்டல் கும்பிடு போட்டுக்கறேன். அதோட நம்ம தடிப்பசங்க #3 பதிவை இன்னிக்குத் தான் என் தம்பி கிட்ட காட்டுனேன். இரு இரு...வீட்டுலல் சொல்லி உன் வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளம் ஏத்தறேன்னு ப்ளாக்மெயில் பண்ணிக்கிட்டிருக்கான். நான் ப்ளாக் வச்சிருக்கறது வீட்டுல தெரியாது. கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டு தம்பி கிட்ட காட்டிட்டேன்....நான் 50 மார்க் எடுத்த சமாச்சாரத்தை எல்லாம் நீ எல்லாருக்கும் சொல்லியிருக்கே...அதனால பழிக்குப் பழி ரத்தத்துக்கு ரத்தம்னு சொல்லிக்கிட்டிருக்கான். அவனை வேற இப்ப தாஜா பண்ணனும்....நாளைக்குப் புது ஆபிஸ்ல சேர்றதுக்கு சில கில்மாக்களையும் ரெடி பண்ண வேண்டியிருக்கு. அதுனால இன்னிக்கு அரை நாள் பர்மிஷன் போட்டுட்டு கெளம்பிக்கிறேன். நெக்ஸ்ட் மீட் பண்ணறேன்.

67 comments:

பரஞ்சோதி said...

வாங்க கைப்புள்ள,

சிங்கார சென்னை உங்களை வம்புடன் மன்னிக்கவும் அன்புடன் வரவேற்கிறது.

இனிமேல் உங்களுடைய பதிவுகள் அதிகமாக கலக்கும் என்று நினைக்கிறேன்.

பொன்ஸ்~~Poorna said...

வாங்க வாங்க கைப்புள்ளெ.. என்னடா ரொம்ப நாளா காணோமேன்னு பார்த்தேன்.. செடிகள், மலைகள் சூழ் மஹாராஷ்டிராவிலிருந்து இந்த வறண்ட சென்னை மாநகரத்திற்கு வந்திருக்கும் உங்கள் தைரியத்தைப் பாராட்டி வரவேற்கிறோம்..

Geetha Sambasivam said...

Welcome to Chennai and hearty congratulations for the udhai you got from your brother. Make him also a member in Va.VAA. Sangam so that he will keep quiet.

- யெஸ்.பாலபாரதி said...

welcome to chennai

அனுசுயா said...

வாழ்த்துக்கள் கைப்பு புது வேலைக்கு.

சிவா said...

சென்னைக்கு வந்தாச்சா! கலக்குங்க. ஊருக்கு வரும் போது இனி பார்க்கலாம். :-)

இலவசக்கொத்தனார் said...

இதெல்லாம் இருக்கட்டும். அதான் சென்னை வந்தாச்சு இல்ல. அப்புறம் என்ன ப்ரொபைல்ல இந்தோர் கேக்குது? இந்தூர் போடுமைய்யா....

ambi said...

Vaanga kaipulla, nalla chithirai veyilla chennai vareega...
karuppu kaanadiyaa maranthudaathigaa..(jinguchaa siluku sattai ellam konjam othuki veinga)
karuthu poiduveenga...

ILA (a) இளா said...

வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்! வந்தனம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்! வருக!

கைப்புள்ள said...

//All the best for your new assignment.//

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி அபிராமம் சார்!அடிக்கடி வாங்க.

கைப்புள்ள said...

//சிங்கார சென்னை உங்களை வம்புடன் மன்னிக்கவும் அன்புடன் வரவேற்கிறது.//

அதே! அதே! வம்பும் ஆப்பும் எங்கே நம்மளை விட்டிருக்கு. அது நமக்கு கவச குண்டலம் மாதிரி அல்லோ?

//இனிமேல் உங்களுடைய பதிவுகள் அதிகமாக கலக்கும் என்று நினைக்கிறேன்.//
ஆமேன்!
:)-

கைப்புள்ள said...

//செடிகள், மலைகள் சூழ் மஹாராஷ்டிராவிலிருந்து இந்த வறண்ட சென்னை மாநகரத்திற்கு வந்திருக்கும் உங்கள் தைரியத்தைப் பாராட்டி வரவேற்கிறோம்.. //

வாங்க பொன்ஸ்! உங்கள் வரவேற்புக்கு நன்றி.ஒரு சின்ன திருத்தம். இந்தூர் இருக்கறது மத்திய பிரதேச மாநிலத்தில. ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம ஊரு வெயில்ல காஞ்சு கருவாடு ஆனாலும் அது ஒரு தனி சுகம் தான். ஆனா என்னைய இங்கே இருக்க விட மாட்டானுங்க போலிருக்கு...சீக்கிரமே க்ளையண்ட் சைட்டுக்கு அனுப்ப வாய்ப்பு இருக்கு. திரும்பவும் இந்தூருக்கே போனாலும் ஆச்சரியப் படுறதுக்கில்லை.

கைப்புள்ள said...

//Make him also a member in Va.VAA. Sangam so that he will keep quiet.//

யாரு என் தம்பியா? நான் சொல்ற பேச்சை எல்லாம் அவன் கேட்டுட்டான்னா என் கால் எங்கே தரையில நிக்கும்?
:)

கைப்புள்ள said...

//welcome to chennai//

கும்பிட்டுக்கறேன் அண்ணாச்சி! தங்கள் வரவேற்புக்கு நன்றி.

கைப்புள்ள said...

//வாழ்த்துக்கள் கைப்பு புது வேலைக்கு.//

நன்றி அனுசுயா மேடம்!

கைப்புள்ள said...

//சென்னைக்கு வந்தாச்சா! கலக்குங்க. ஊருக்கு வரும் போது இனி பார்க்கலாம். :-)//

வாங்க சிவா! அப்ப நீங்களும் சென்னை திரும்பறீங்களா? எப்ப வர்றீங்க?

கைப்புள்ள said...

//இதெல்லாம் இருக்கட்டும். அதான் சென்னை வந்தாச்சு இல்ல. அப்புறம் என்ன ப்ரொபைல்ல இந்தோர் கேக்குது? இந்தூர் போடுமைய்யா....//

நீங்க சொல்றது சரி தான் கொளுத்து! என் ப்ளாக்ல சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கு. என்கிட்ட இப்ப ஆபிஸ் கம்ப்யூட்டர் கூட கிடையாது. அதுக்கு சில நாள் ஆகும். அப்படியே கிடைச்சாலும் உடனடியா ஆல்ட்+டாப் தட்டி தமிழ்மணத்துல பதிவு படிக்கற டகால்தி வேலையில எல்லாம் உடனடியா இறங்க முடியாது. கொஞ்ச நாளைக்காச்சும் வேலை செய்யணும் இல்லன்னா வேலை செய்யற மாதிரி பிலிமாச்சும் காட்டணும். அதுனால கொஞ்ச நாளைக்கு வால் சுருண்டு தான் இருக்கும். இப்ப கூட பாருங்க சைபர் கேபேயில் ஈ-கலப்பை டவுண்லோடு செய்ய முடியாம பொங்குதமிழ்ல தான் தட்டச்சு பண்ணறேன். சித்த டார்ச்சராத் தான் இருக்கு.

கைப்புள்ள said...

//karuppu kaanadiyaa maranthudaathigaa..(jinguchaa siluku sattai ellam konjam othuki veinga)
karuthu poiduveenga...//

வாங்க அம்பி!
சென்னைக்கு வந்ததும் நான் கவனிச்ச ஒரு விஷயம் "வாளை மீனுக்கும் விலங்கு மீனுக்கும்" பாட்டும் அதை பாடுன கானா உலகநாதனும் பயங்கர பாப்புலரா இருக்கறது. சரி! அத எதுக்கு இப்ப சொல்றேனு கேக்கறீங்களா? இன்னிக்கு என்னோட சேத்து நாலு பேரு இந்த கம்பெனியில் சேந்தாங்க. நாலுல மூணு பேரு மஞ்ச சட்டை தான் போட்டுருந்தாங்க(நானும் தான்).

சந்தோஷ் தன்னோட ஒரு பதிவுல சொன்ன மாதிரி ஊரை ஏமாத்தற ஒரு கும்பல்ல நானும் போயி சேந்திட்டேன். இது வரைக்கும் யூசர் கம்பெனியில் இருந்தேன். இப்ப முதல்முறையா சாப்ட்வேர் கம்பெனி...சிறுக வேலை செஞ்சு பெருக பிலிம் காட்டற வித்தையெல்லாம் கத்துக்கணும்.
:)

கைப்புள்ள said...

//வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்! வந்தனம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்! வருக!//

வாங்க விவசாயி!
வந்தது வந்துட்டீங்க. இப்பெல்லாம் முன்ன மாதிரி எரை எடுக்க முடியல்ல....அப்படியே எதாச்சும் ருந்து இருந்தா சொல்லிட்டு போங்க. ரொட்டி தின்னு தின்னு இப்பெல்லாம் முன்ன மாதிரி சோறு சாப்பிட முடியறதில்லை. இன்னிக்கு ஒரு ஓட்டல்ல மதியான சாப்பாட்டுக்குப் போயிருந்தேன். அவன் முதல் தரம் போட்ட சாதத்தையே முழுசா சாப்பிட முடியலைன்னா பாத்துக்கங்களேன்.

கைப்புள்ள said...

//Welcome To Chennai... And my best Wishes for your new job.//

வாங்க ஆர்த்தியக்கா!
தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

கைப்புள்ள said...

அம்மா! ஐயா!
எல்லாரும் என்னை கொஞ்ச நாளைக்கு மன்னிக்கணும். சுயநலமா என் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை மட்டும் படிச்சி பதில் குடுத்துட்டு எஸ்கேப் ஆகப் போறேன். நம்மளை மதிச்சு ரெண்டு வார்த்தை எழுதறவங்க பதிவை எதுவுமே நான் படிக்கலை....அதுக்காக ஒரு மன்னிப்பு கேட்டுக்கறேன். இப்ப மணி எட்டரை தான் ஆவுது....ஆனா ஆயி அப்பனுக்கு அதெல்லாம் எங்கே புரியுது? இப்ப மொஃபசில்ல வீடுங்கறதுனால பட்டிணத்துக்குப் போயிட்டு வீடு திரும்பறதுக்குள்ள நாம எங்கே இருக்கோம்னு அப்பப்ப ரன்னிங் கமெண்டரி குடுக்கச் சொல்லி உத்தரவு. அதனால இப்போதைக்கு எல்லாத்துக்கும் குட் நைட் சொல்லிக்கிறேன்.

தகடூர் கோபி(Gopi) said...

ஆஹா.. வந்துட்டான்யா.. வந்துட்டான்யா..

ஏப்பு கைப்புள்ள,

வந்தது தான் வந்தீரு.. கொஞ்சம் குளு குளுன்னு இருக்குற இடமா பாத்து வரப்படாது?

கைப்புள்ள said...

//வந்தது தான் வந்தீரு.. கொஞ்சம் குளு குளுன்னு இருக்குற இடமா பாத்து வரப்படாது?//

நம்ம மேனி எழிலைப் பாதுகாக்க இந்த இடம் தான் சரியா இருக்கு...என்ன பண்றது?
:)-

Karthik N said...

All the best!!!

indore_la irrundhu vandha orE thamizh pathivum ippo poiruchEnu oru chinna varutham mattum thaan :)

Kowshic said...

தேர்தல் சமயமா பார்த்து தாயகம் திரும்பிட்டீங்க! அண்ணன் "கைப்பு" வாழ்க! எதிர்கால முதல்வர் வாழ்க!

மாதமோ சித்திரை!
அண்ணன் கைப்புக்கே எங்கள் முத்திரை!!

Paavai said...

siruga velai senju peruga film katradaa..

posta - commenta - nagaichuvayil sirandadu edhunu pattimandram vekkalaam pola irukku

Thiru said...

Home groundla kalukka, ennoda vazhthukkal.

siva gnanamji(#18100882083107547329) said...

hearty welcome to chennai
pavam chennai
pavam kaips
GOD BLESS US & CHENNAI & KAIPS

Anonymous said...

All the best kaipu
oru mail thatti vudungalen mudinja pothu enakku r_ramn at yahoo dot com
(onnum bayapada vendam ...kadan kidan kettura maaten )

Anonymous said...

Happy to know that you have been posted in Chennai.. Enjoy. Explore and Enjoyyyyyyyyyyyy.

New Job or transfer

Jay

Geetha Sambasivam said...

என்னுடைய முதல் தமிழ் பதிவை அங்கீகாரம் செய்த வ.வா. சங்கத் தலைமைக்கு மகளிர் அணித்தலைவியின் நன்றி பல.

துளசி கோபால் said...

கைப்புள்ளெ,

சிங்காரச் சென்னைக்கு வந்தாச்சா? நல்லது. அப்ப அடுத்த வலைஞர் மாநாட்டுக்கு ஒரு ஆளைச் சேர்த்தாச்சு:-)

ஆமாம், இது என்னா இந்த 'கீதா' மகளிர் அணித்தலவின்னு என்னமோ நூல் விடுறாங்க? அது என்னா கதை?

கைப்புள்ள said...

//indore_la irrundhu vandha orE thamizh pathivum ippo poiruchEnu oru chinna varutham mattum thaan :)//

வாங்க கார்த்திக்!
இந்தூர்லேயும் பல நல்ல நினைவுகள் நமக்கு. என்ன பண்றது? வயித்துப் பொழப்புன்னு ஒன்னு இருக்கே...அதுனால கடையை மாத்த வேண்டியதாப் போச்சு.

கைப்புள்ள said...

//தேர்தல் சமயமா பார்த்து தாயகம் திரும்பிட்டீங்க! அண்ணன் "கைப்பு" வாழ்க! எதிர்கால முதல்வர் வாழ்க!//

வாங்க டி.என்.ஏ,
தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. எல்லாம் சரி தான்..."வருங்கால முதல்வர்" தான் கொஞ்சம் இடிக்குது. அது வருங்கால ஜனாதிபதின்னு இல்ல இருக்கணும்...அடுத்த தடவை இந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக் நடக்காம பாத்துக்கங்க.சரியா?
:)

கைப்புள்ள said...

//posta - commenta - nagaichuvayil sirandadu edhunu pattimandram vekkalaam pola irukku//

என்னை வாழ வைக்கும் தெய்வங்களின் கமெண்ட்ஸ் தான் சிறந்தது என்பது என்னோட தாழ்மையான கருத்து.
(அரசியல் நெடி அடிக்கற மாதிரி இருந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்ல)
:)-

கைப்புள்ள said...

//hearty welcome to chennai
pavam chennai
pavam kaips
GOD BLESS US & CHENNAI & KAIPS//

காட் ப்ளெஸ் "மால்கண்ட்"ன்னு சொல்லுங்க...அடுத்து 5 மாசத்துக்கு நம்ம முகாம் இந்த ஊர்ல தான். எங்கே இருக்குன்னு கேக்கறீங்களா...மகாராஸ்ட்ரா பார்டர்ல ஒரு தண்ணி இல்லா காடு(பொன்ஸ் மகாராஸ்ட்ரான்னு சொன்னது உண்மை ஆகிடுச்சு...நம்ம வீட்டுல தான் ஒரே பீலிங்ஸ்)
:)

பொன்ஸ்~~Poorna said...

கைப்பு அண்ணா.. ரொம்ப பின்னூட்டம் சேருதுன்னு அப்படியே விட்டுராதீங்க.. புது பதிவு போடுங்க.. தீடீர்னு சென்னை வந்துருக்கீங்க.. கடைகள், பேருந்துகளுக்குப் போகும் போது எப்படி தமிழ் பேசி சமாளிக்கறீங்கன்னு எழுதுங்க..!!!

கைப்புள்ள said...

//Home groundla kalukka, ennoda vazhthukkal.//

ஓம் கிரவுண்ட் ஆட்டம் இன்னும் அஞ்சு நாளைக்குத் தான் மாப்பிள்ளே.

கைப்புள்ள said...

//All the best kaipu
oru mail thatti vudungalen mudinja pothu enakku//

டுபுக்கு பேச்சுக்கு மறுபேச்சா? இதுக்கப்புறம் அடுத்த வேலையா உங்களுக்கு மெயில் அனுப்பிடறேன்.

கைப்புள்ள said...

//New Job or transfer//

புது வேலை தாண்டா...ஆனா பேஸ் லோகேஷன் மட்டும் தான் சென்னை. மத்தபடி கழைக்கூத்தாடி வாழ்க்கை தான்.

கைப்புள்ள said...

//என்னுடைய முதல் தமிழ் பதிவை அங்கீகாரம் செய்த வ.வா. சங்கத் தலைமைக்கு மகளிர் அணித்தலைவியின் நன்றி பல.//

என்னங்க மேடம்! அங்கீகாரம் அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க? அங்கீகாரம் பண்ற அளவுக்கெல்லாம் நமக்குத் தகுதி இல்லீங்க...வேணா உங்களோட முதல் தமிழ் பதிவுக்கு என்னோட வாழ்த்துன்னு சொல்லலாம்.

கைப்புள்ள said...

//சிங்காரச் சென்னைக்கு வந்தாச்சா? நல்லது. அப்ப அடுத்த வலைஞர் மாநாட்டுக்கு ஒரு ஆளைச் சேர்த்தாச்சு:-)//

சிங்கார சென்னைக்கு வந்தாச்சு...இப்ப இங்கிருந்து கெளம்பவும் ரெடி ஆகியாச்சு. வேணா ஒன்னு பண்ணலாம்..."மால்கண்ட்" வலைஞர் மாநாடு ஒன்னு ஏற்பாடு பண்ணலாம்.
:)-

//ஆமாம், இது என்னா இந்த 'கீதா' மகளிர் அணித்தலவின்னு என்னமோ நூல் விடுறாங்க? அது என்னா கதை? //

அதாவது... என்னோட சீரிய(!) "தல"மையில் இயங்கி வரும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்ட கீதா மேடம், சங்கத்தோட மகளிர் அணியின் சேவை சமுதாயத்துக்கு இன்றியமையாதது என்று கருதி, தானே அதன் தலைவியாக இருக்கவும் இசைந்துள்ளார்கள். இங்கிலிபீசுல எதோ சொல்லுவாங்களே"Has kindly consented to preside over"...அப்படி. நீங்க உம்னு ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா எங்க தலைவி "இணைய உலகின் அவ்வை" அவர்களிடம் சொல்லி உங்களுக்கும் ஒரு பதவி ஏற்பாடு பண்ணி தரேன். Hurry! Offer open till stocks last.

கூட்டம் சேந்துடுச்சுன்னா அப்புறம் அடிப்படை உறுப்பினரா இருந்து தான் படிப்படியா மேலே வரணும்.

கைப்புள்ள said...

//கைப்பு அண்ணா.. ரொம்ப பின்னூட்டம் சேருதுன்னு அப்படியே விட்டுராதீங்க.. புது பதிவு போடுங்க.. தீடீர்னு சென்னை வந்துருக்கீங்க.. கடைகள், பேருந்துகளுக்குப் போகும் போது எப்படி தமிழ் பேசி சமாளிக்கறீங்கன்னு எழுதுங்க..!!!//

"அநியத்தி"பொன்ஸ்! பின்னூட்டம் வருதேன்னு எழுதாம இல்லை....இன்னிக்குத் தான் நமக்கு தொடைகணினி (மடிகணினி) குடுத்தானுங்க. இன்னும் 4- 5 நாள்ல திரும்ப சென்னையை விட்டுக் கெளம்பணும்...நான் இந்தூர்லேருந்து அனுப்பிச்ச என்னோட மூட்டை முடிச்சே இன்னும் லாரியிலே வந்து சேரலை...அதுனால கொஞ்சம் டென்சன்ஸ் ஆப் இந்தியா...சீக்கிரமே எழுதறேன்.

கைப்புள்ள said...

//இன்னா நைனா! சென்னையில செட்டிலாயிக்கினியா?? ஆல் த பெஸ்ட்டு//

"செட்டிலாயிக்கினியா"னு சொல்லி வாயை மூடுறதுக்குள்ள தூக்கி கடாசிட்டாங்க நைனா...அவ்வ்...அவ்வ்வ்

இருந்தாலும் ஆல் தி பெஸ்டுக்கு டாங்ஸ்பா!

பொன்ஸ்~~Poorna said...

'அநியத்தி' க்கு என்னாங்க அர்த்தம்?? எனக்குப் புரியலையே.. உங்களை நான் எங்க மிரட்டினேன்?? :)

கைப்புள்ள said...

//'அநியத்தி' க்கு என்னாங்க அர்த்தம்?? எனக்குப் புரியலையே.. உங்களை நான் எங்க மிரட்டினேன்?? :)//

நீங்க ஏன் இதை அந்நியனோட தொடர்பு படுத்தி பாக்குறீங்க? கைப்புள்ள அண்ணன்னா பொன்ஸ் அப்ப என்ன? அதுக்கு இணையான் மலையாளச் சொல் தான் "அநியத்தி". காதலுக்கு மரியாதை மலையாள வெர்சன் "அநியத்தி பிறாவு" பத்தி நீங்க கேள்வி பட்டதில்லையா?

Unknown said...

தல வா தல சென்னைக்கு வந்தீயே.. வந்து சங்கத்துப் பயல்வளைப் பாக்கணும்ன்னு உனக்கு தோணுச்சாத் தல....
சொல்ல வேணாம்ன்னு தான் தீர்மானம்.... ஆனா முடியல்ல தல... நீ வரப் போறன்னு சொல்லி உனக்கு வரவேற்பு தோரணம் எல்லாம் ரெடி பண்ணிட்டு இருந்தோம்.. அப்போ ஒரு கும்பல் வந்து வூடு கட்டி அடிச்சுதுப் பாரு....

செம அடி.... கைப்புள்ள குரூப் தானேன்னு ஒருத்தன் பாதி அடிக்கச் சொல்ல டவுட் வேற கேட்டுட்டு குமுறு குமுறுன்னு குமுறுன்னாங்க தல....

//வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்! வந்தனம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//

சங்கத்து சிங்கம் இல ஏன் இவ்வளவு நீளமா சொன்னாருன்னு நீ யோசிச்சியா தல... அது நக்கல் இல்ல தல இல வாயிலே சிக்கல்.. அவரு வாயிலே அடிச்சாங்கத் தல.... ஆனாலும் அவர் உங்ககிட்ட வாய் திறக்கவே இல்ல....

மனசு கஷ்ட்டமா இருக்கு தல... சங்கத்து பசங்களைக் காணும்ன்னு நீ தேடுவேன்னு பார்த்தா.. போ தல நீ கண்டுக்கவே இல்ல....

தளபதி கோவை பிரதர் சிபி... அப்புறம் பேராசிரியர் கார்த்திக் ஜெயந்து, நம்ம சிறுவரணி ஜொள்ளுபாண்டி... எல்லோரும் மிஸ்ஸிங் தல.. என்னாச்சோன்னு மனசு கிடந்து தவிக்குது தல...

எது எப்படியோ யூ வெல்கம் டூ சென்னை......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Chandravathanaa said...

வாழ்த்துக்கள் .

கைப்புள்ள said...

//செம அடி.... கைப்புள்ள குரூப் தானேன்னு ஒருத்தன் பாதி அடிக்கச் சொல்ல டவுட் வேற கேட்டுட்டு குமுறு குமுறுன்னு குமுறுன்னாங்க தல....//

டாய்! எங்க சங்கத்து ஆளுங்க மேலே கை வச்சவன் எவண்டா? தைரியம் இருந்தா ஒண்டிக்கு ஒண்டி வாங்கடா!

//சங்கத்து சிங்கம் இல ஏன் இவ்வளவு நீளமா சொன்னாருன்னு நீ யோசிச்சியா தல... அது நக்கல் இல்ல தல இல வாயிலே சிக்கல்.. அவரு வாயிலே அடிச்சாங்கத் தல.... ஆனாலும் அவர் உங்ககிட்ட வாய் திறக்கவே இல்ல....//

என்னது விவசாயி மேலேயே கை வச்சுட்டாங்களா? யாருய்யா அவனுங்க...என் கிட்ட சொல்லு...நான் கடுங்கோபத்துல இருக்கேன். இன்னிக்கு நானா அவனுங்களானு பாத்துடறேன்.

Geetha Sambasivam said...

என்னங்க துளசி, இந்தப் பட்டமெல்லாம் "நமக்கு நாமே" திட்டத்தின் படி நாமே கொடுத்துக்கொள்வது தான். இப்பப் பாருங்க, இந்த அம்பி என்ற அம்மான்சேய் எனக்கு "அவ்வை"ப் பட்டம் கொடுத்து அதை நம்ம சங்கத் தலைமை கூட ஏத்துக்கிட்டது பாருங்க. நீங்க ரொம்ப நாள் வெளியூர் போனதால் மாற்றங்கள் புரிய வில்லை.

கைப்புள்ள said...

வாங்க சந்திரவதனா மேடம்,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

பொன்ஸ்~~Poorna said...

//என் கிட்ட சொல்லு...நான் கடுங்கோபத்துல இருக்கேன். இன்னிக்கு நானா அவனுங்களானு பாத்துடறேன். //

கைப்புள்ள, யாருன்னு உங்க கிட்ட சொன்ன என்ன பண்ணுவீங்க? தேவ், இவரு சொல்றாருன்னு நீங்க யார் பேரும் குடுக்காதீங்க.. கைப்புள்ள இப்பொ, இதோ இப்போ, மறுபடி மகாரஷ்ட்ரா பார்டர் போய்டுவாரு.. அப்புறம், நீங்க தான் சென்னைல இருக்கணும் ;) :)

அப்புறம், உங்க சங்கத்தின் கொள்கையே மாறிப் போய்டும் :)

கைப்புள்ள said...

//கைப்புள்ள, யாருன்னு உங்க கிட்ட சொன்ன என்ன பண்ணுவீங்க? தேவ், இவரு சொல்றாருன்னு நீங்க யார் பேரும் குடுக்காதீங்க.. கைப்புள்ள இப்பொ, இதோ இப்போ, மறுபடி மகாரஷ்ட்ரா பார்டர் போய்டுவாரு.. அப்புறம், நீங்க தான் சென்னைல இருக்கணும்//

தேவ்! சின்னப்புள்ளங்க சொல்றதை எல்லாம் கேக்காதே? தல நான் சொல்றேன்...ஒடனே யாருன்னு சொல்லு...ரத்தம் பாத்து ரொம்ப நாளாச்சு...இன்னிக்கு ஒரு ரத்த ஆறே இங்கே ஓடப் போவுது பாரு! பாப்பா பொன்ஸ்! நீ கொஞ்சம் ஓரமா நின்னுக்கம்மா... ரத்தத்தை எல்லாம் பாத்தா பயந்துருவே!எங்காளு மேலேயே அதுவும் என் பேரைச் சொல்லியும் வாய் மேலே அடிச்சா அவனுக்கு என்ன தெனாவெட்டு இருக்கும்? அவனுங்க கொட்டத்தை அடக்காம நான் என் அடுத்த பதிவை எழுதறதா இல்லை. தேவு, நேரத்தை வேஸ்ட் பண்ணாம அடிச்சவன் எவன்னு மட்டும் சொல்லு...மத்ததையெல்லாம் நான் பாத்துக்கறேன்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

இனிமேல் சென்னையை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது

நன்மனம் said...

"அடிச்சவன் எவன்னு மட்டும் சொல்லு...மத்ததையெல்லாம் நான் பாத்துக்கறேன். "

இத இத இத தான் எதிர்பார்தேன். கெளம்பிட்டான்யா கெளம்பிட்டான்யா. எத பாத்துக்கறேன்னு சொல்லவே இல்லியே தல. ஸ்ரீதர்

இலவசக்கொத்தனார் said...

யோவ், கஷ்டப்பட்டு உன் பேர் வராமாதிரி வெண்பாவெல்லாம் எழுதினா வந்து பாக்கக்கூட மாட்டேங்கற. ஆனாலும் உனக்கு நேரம் சரியில்லை.

ஆமா, திடீரென என்ன மால்கண்ட்? அதுவும் 5 மாசம்? கழுத்துப்பட்டை கம்பெனி வேலையைக் காட்டறாங்களா?

கைப்புள்ள said...

//இனிமேல் சென்னையை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது//

வாங்க ரசிகவ்!
நீங்க சொல்றது சரி தான்! கைப்புள்ள வேற சென்னையை விட்டு மால்கேட் போறாரு...இனிமே சென்னையை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது தான்.

Unknown said...

கைப்பு... நீ மாறல்ல... நீ..... என்னிக்கும் எங்க தல தான்... நம்ம சங்கத்து பசங்களை முதல்ல தேடி கண்டுபிடி....நம்ம பசங்களை எல்லாம் எதோ ஒரு பச்சக் குதிர வண்டிக்காரப் பய தான் அடிச்சு இழுத்துகிட்டுப் போனாதாப் பேசிக்கிறாயங்க....

நூல்கண்ட் தெரியும்...!!! அது என்ன மால்கண்ட்....???!!! கைப்பு... பதில் சொல்லு கைப்பு...

Unknown said...

கீதா மேடம்... இந்த சங்கமெல்லாம் வாலிப பசங்களுக்கு தான் சரி வரும்.... நீங்க வேற வம்பை மொத்தமா ஒரு விலை போட்டு கந்து வட்டிக்கு கடன் வாங்கி வாங்குற மாதிரி இருக்கு.... வேணாம்ங்க... எங்க கைப்புக்கு ஆப்பு வைக்க அங்கங்கே அவன் அவன் ஆளுங்களை வேலைக்கு வச்சு வில்லங்கம் பண்ணிகிட்டு இருக்கான்... நீங்க வீணா மாட்டிக்காதீங்க.... சொல்லிட்டேன்

kjey said...

my late wishes buddy.
GOOD LUCK

சிவா said...

Mohanraj! Did you see this?

http://geethamsangeetham.blogspot.com/2006/04/updated.html

Kalanthukkonga Sir :-)

Anbudan,
Siva

ILA (a) இளா said...

இந்த கோடை காலத்துல சூட்ட கிளப்புவார் எங்க கைப்பு. பயப்படறவங்க வேற ஊருக்கு போய்ருங்க

துளசி கோபால் said...

கீதா,

அப்படியா விஷயம்? உங்களுக்குத் தமிழ் டைப்பிங்தான் வரலைன்னு சொன்னீங்க.
மத்தபடி நல்ல 'விவரமான ஆளுதான்':-)))))
இப்பத் தமிழ்லே பூந்து வெள்ளாடுறீங்க!

கைப்புள்ள said...

//ஆமா, திடீரென என்ன மால்கண்ட்? அதுவும் 5 மாசம்? கழுத்துப்பட்டை கம்பெனி வேலையைக் காட்டறாங்களா?//

//நூல்கண்ட் தெரியும்...!!! அது என்ன மால்கண்ட்....???!!! கைப்பு... பதில் சொல்லு கைப்பு...//

அது நூல்கண்டும் இல்ல மால்கண்டும் இல்ல. அந்த இடத்தோட பேர் மால்கேட், குல்பர்கானு ஒரு 'குளிர் பிரதேசத்துக்கு' ஒரு 50 கி.மீ. தூரத்துல இருக்கு. கொத்தனார் நெத்தி வேர்வை நிலத்துல சிந்தி உழைக்கிற கூட்டமய்யா நாங்க...கோடி குடுத்தாலும் பெஞ்சுல குந்த மாட்டோம்.

கைப்புள்ள said...

//எத பாத்துக்கறேன்னு சொல்லவே இல்லியே தல//

வாங்க ஸ்ரீதர்,
இனிமே பேச்சு கெடயாது வீச்சு தான். ஒங்களுக்கு வேற நல்ல மனம்...நீங்க பயந்துற கியந்துற போறீங்க

கைப்புள்ள said...

//my late wishes buddy.
GOOD LUCK//

வாங்க கேஜே,
தங்கள் வருகைக்கும் நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. அடிக்கடி வாங்க.

கைப்புள்ள said...

//இந்த கோடை காலத்துல சூட்ட கிளப்புவார் எங்க கைப்பு. பயப்படறவங்க வேற ஊருக்கு போய்ருங்க //

அதே அதே! இப்படி தான் தலயோட பெருமையை எல்லாம் எடுத்துச் சொல்லணும்.