Saturday, July 10, 2010

பொண்டாட்டியைப் பிரசவத்துக்கு அனுப்பிட்டு பார்ட் டூ...

"பொண்டாட்டியைப் பிரசவத்துக்கு அனுப்பிட்டு..." பதிவோட தொடர்ச்சி.

ஒரு மன்னிப்பு கேட்டுக்கிட்டு இந்தப் பதிவைத் துவங்கிக்கிறேன்...கிட்டத்தட்ட மூனு மாசத்துக்கு அப்புறம் இரண்டாம் பகுதி போடறதுக்காக. போன பதிவுக்கு தலைப்பை வைக்கும் போது அதை படிச்சவங்க பலரும் புரிஞ்சிக்கிட்ட மாதிரி ஒரு அர்த்தம் பதிவுல இருக்குன்னு சத்தியமா எனக்கு தோனவே இல்லை. ஒரு அப்பாவி கெடச்சதும் எல்லாரும் ஒன்னா சேர்ந்து ஓட்டி எடுத்துட்டாங்க. அதுலயும் கிட்டத்தட்ட ஒரு வருஷமா தலைமறைவா இருந்த 'மாயவரம் ஷேக்' அபி அப்பா "கேப்"புல கிடா வெட்டி ரெண்டு கமெண்டு போட்டுட்டாரு(ரெண்டும் ஒரே கமெண்ட் வேற). இருங்க அப்பாஜி...உங்களைத் தனியா கவனிச்சிக்கிறேன். யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வராமலயா போகும்? இதுக்கு மேலயும் இந்தப் பதிவுக்கு "கேப்" விட்டா ரெண்டாவது புள்ளைக்கு "ஃபர்ஸ்ட் பர்த்டே"வும் கொண்டாடிடுவாங்கங்கிறதுனால கமெண்டுல பலரும் சொன்னா மாதிரி "இரண்டாம் குழந்தை" அது இதுன்னு எதுவும் இல்லைன்னு(இப்போதைக்கு) ஆணித்தரமா சொல்லிக்கிறேன் :) முதல் குழந்தையைப் பெறுவதற்காக அம்மணி ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தாய் வீட்டுக்குப் போனப்போ நடந்தவைக்களை நினைவு கூறுவதே இந்தப் பதிவுகளின் நோக்கம்.

பொண்டாட்டியைத் தாய் வீட்டுக்கு அனுப்புனதுக்கும் குழந்தை பிறக்கறதுக்கும் நடுவிலான இந்த இடைபட்ட காலத்தில் தான் பெரும்பாலான கணவன்மார்களுக்கு 'கொம்பு' முளைச்சது போல இருக்குமாம்னு "கொம்பு சீவும் மென்பொருள் நிறுவனங்கள்" ங்கிற தலைப்புல சமீபத்துல நடந்து முடிஞ்ச உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தான் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரையில சொல்லிருக்காரு நம்ம அம்பி. அதன் காரணமாகவே பன்னெடுங்காலமாக தாய் வீட்டுக்குச் சென்றிருக்கும் தன் மனைவி திரும்பி வரும் போது அவளுக்குத் துணையாக இருக்கட்டுமேங்கிற எண்ணத்தில் ஒரு 'சக கிழற்றியை' ஏற்பாடு செய்யும் வழக்கம் இருந்ததாம். ஆனா மனைவியான கிழற்றியும், துணையா இருக்கட்டுமேன்னு கொண்டு வரப்பட்ட சக கிழற்றியும், களத்தில் இறங்கி ஒருவருக்கு ஒருவர் குடுமிப்புடி சண்டை போடும் போது "சக களத்தி" ஆகி நாளடைவில் ஒருவருக்கு ஒருவர் "சக்களத்தி" ஆகி விடுகிறார்கள் என்று சொல்கிறது அம்பி அவர்களின் ஆய்வு.

ஆனா அந்த பழக்கம் இப்போ கணவர்கள் மத்தியில் வழக்கொழிஞ்சு போயிடுச்சாம். மேலும் டேமேஜர், அப்புரைசல், டிராபிக் ஜாம் இப்படின்னு எந்தவிதமான பிரச்சினைகளுமில்லாத ஒரு காலக்கட்டத்துக்கு ஏத்த சமூக வழக்கம் அது என்கிறார். இக்காலக்கட்டத்துக்கு அது ஒவ்வாதென்பதும் குறிப்பாக மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு இந்த பழங்கால சமூக முறையைப் பின்பற்றும் வாய்ப்பு வேலை பளுவின் காரணமாக அவர்களுடைய நிறுவனங்களாலேயே மறைமுகமாக மறுக்கப்பட்டு விடுவதாகவும், அதனால இந்த தொன்மையான தமிழர் பண்பாடு அழிந்துவிட்டதாகவும் சொல்றாரு. OMRனு பேர் உள்ள ரோடு சென்னையிலயும் இருக்கு, பெங்களூர்லயும் இருக்கு...ஆறு மணிக்கு மேல இந்த ரோட்டுல எந்த ஊர்ல மாட்டுனாலும் சரி, வீடு போய் சேர ரெண்டு மணி நேரம் ஆகும் அதுக்கப்புறம் எங்கேருந்து மேல சொன்னதெல்லாம் சாத்தியப்படும்னு தன்னுடைய ஆய்வை இந்த சமூகத்தை நோக்கிய ஒரு கேள்வியோட நிறைவு செஞ்சிருக்காரு அம்பி. அம்பியோட ஆய்வைப் பத்தி கருத்து சொல்லற அளவுக்குத் தகுதியோ அனுபவமோ இல்லாத காரணத்தால நான் என் சொந்தக் கதைக்கு நகர்ந்துக்கறேன் :)

கல்யாணம் முடிஞ்சதும் கிட்டத்தட்ட ஒன்னரை வருஷம் நானும் என் மனைவியும் பெங்களூரில்(2007-2008)இருந்தோம்...பழைய HAL ஏர்போர்ட் பக்கத்துல திப்பசந்திரா அப்படிங்கற இடத்துல தான் வீடு. கல்யாணத்துக்கு முன்னாடி தன்னோட வேலையைத் தானே செஞ்சிக்கனும், யாரையும் எதிர்பார்க்கக் கூடாது அப்படின்னு அம்மா சொல்லிக் குடுத்த நல்ல விஷயங்கள் எல்லாம் கல்யாணம் ஆன சில நாட்கள்லேயே மறந்து போயிடும் போலிருக்கு. காரணம், கல்யாணத்துக்கப்புறம் மனைவி கிட்ட நம்மோட சில பொறுப்புகளை ஒப்படைச்சிட்டு கொஞ்சம் ஃப்ரீ ஆகிடறோம். ஆனா தன்னோட வேலைகளை எப்போதும் தானே செஞ்சி பழகிக்கறது நல்லதுங்கிறது மனைவி பிரசவத்துக்குத் தாய் வீட்டுக்குப் போகும் போது தான் உரைக்க ஆரம்பிக்குது. காலையில எழுந்து தானே டீ போட்டு குடிச்சிட்டு, துணியைத் துவைச்சு காய வச்சிட்டு, ஓட்ஸோ மேகியோ பொங்கித் தின்னுட்டு, சாயந்திரம் வந்து காய வச்ச துணிகளைக் கொடியிலேருந்து எடுத்து ஐயன் பண்ணக் குடுத்துட்டு, ராத்திரி சாப்பாட்டுக்கு என்ன பண்ணலாம் இப்படின்னு யோசிச்சிக்கிட்டு, இதுக்கு நடுவால வீட்டுல யாருமில்லைங்கிற காரணத்தால மிஸ் ஆகிப் போகற குரியர்களும், ஃபோன் பில்களும், கேபிள் பில்களையும் எப்படியோ சரி பண்ணி...யப்பப்பா...பொண்டாட்டி பாத்து பாத்து நமக்காக எல்லா வேலைகளையும் செஞ்சு அனுபவிச்சு பழக்கப் பட்டுட்டு தனக்கு தானே ஹவுஸ் வைஃபா வேலை பாக்கறது ரொம்ப கஷ்டமான காரியம் தான்.

ஆயிரம் தான் சொல்லுங்க...இந்த பொண்ணுங்களுக்கு அம்மா வீட்டுக்குப் போகற மாதிரி ஒரு சந்தோஷமான விஷயம் வேற எதுவும் இருக்காதுன்னு நெனக்கிறேன். பொறந்து வளர்ந்த இடம்ங்கிறதுனால அங்கே ரொம்ப சந்தோஷமாவும் பாதுகாப்பாவும் உணர்வாங்கன்னு நெனக்கிறேன். அதனால தான் முதல் பிரசவத்துக்குத் தாய் வீட்டுக்குப் போகற வழக்கம் இருக்கும் போலிருக்கு. அதை நான் கண்கூடாவே பார்த்திருக்கறேன். பெங்களூர்ல இருக்கறப்போ ரெகுலர் செக்கப்புக்காக மாசா மாசம் டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போவேன். பொதுவா ஆட்டோவுல தான் போவோம். சில சமயம் அஞ்சு கிலோ மீட்டர் தூரத்துல இருக்கற க்ளினிக்குக்கு டாக்சில கூட போயிருக்கோம். அப்போல்லாம் ஆட்டோ ஸ்பீட் பிரேக்கர்லயோ பள்ளத்துலயோ ஏறி இறங்கும் போது "வயிறு வலிக்கிற மாதிரி இருக்குங்க...கொஞ்சம் மெதுவா போகச் சொல்லுங்க"ன்னு சொல்லுவாங்க. நானும் ஆட்டோ டிரைவர் கிட்ட எனக்கு தெரிஞ்ச கன்னடத்துல "சொல்பா ஸ்லோ ஹோகி"ன்னு எதோ உளறி புரிய வைப்பேன். ஒன்பதாவது மாசத்துல பிரசவத்துக்கு ரெண்டு வாரமே இருக்கும் போது சென்னையில அவங்க அம்மா வீட்டுல இருக்கறப்போ ஒரு முறை செக்கப்புக்கு அதே மாதிரி கூட்டிக்கிட்டு போனேன். ரோடு ரொம்ப குண்டும் குழியுமா இருந்துச்சு. எதாச்சும் சொல்லுவாங்கன்னு எதிர்பார்த்தேன். ஒன்னுமே சொல்ல காணோம்.

ஆச்சரியம் தாங்க முடியாம "ரோடு ரொம்ப மோசமா இருக்கு, ஒன்னும் கஷ்டமா இல்லியா"ன்னு கேட்டேன். அதுக்கு அவங்க சிரிச்சிக்கிட்டே சொன்ன பதில் "பழகிப் போச்சுங்க". மூனாவது மாசத்துலேருந்து எட்டாவது மாசம் வரை பெங்களூரில் இருந்த போது ஒரு நாளும் "பழகிடுச்சு" என்ற வார்த்தை வெளியே வந்தது கெடையாது. நானும் ஒவ்வொரு வாட்டியும் ஆட்டோ டிரைவர் கிட்ட 'சொல்ப ஸ்லோ ஹோகி' னு சொல்ல மறந்தது கிடையாது. உண்மையிலேயே ஒன்பதாவது மாசத்துல ஆட்டோ பள்ளத்துல எறங்கும் போது வலி தெரியாம இருந்துருக்கலாம்...ஆனா முதல் பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்குப் போனப்புறம் பொண்ணுங்களுக்கு ஒரு அசாத்திய தைரியம் வந்துடும்ங்கிறது என்னுடைய கணிப்பு. அது வரைக்கும் பார்த்து பயந்த எந்த கஷ்டமும் பெருசா தெரியாது போலிருக்கு, அவங்க முகத்துலயும் ஒரு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் பார்க்கலாம். ஒரு வேளை அதனால தான் அந்த காலத்துல பெரியவங்க முதல் பிரசவத்துக்கு பொண்ணுங்க தாய் வீட்டுக்குப் போகனும்னு ஒரு முறையை ஏற்படுத்தி வச்சிருக்காங்களோ என்னவோ? எனக்கு ஏனோ என் மனைவியின் முதல் பிரசவத்தை என் கிட்ட வச்சி பார்க்கனும்னே இருந்துச்சு. மத்த சம்பிரதாயங்களைக் குத்தம் சொல்றவங்க கூட யாரும் முதல் பிரசவத்துக்குத் தாய் வீட்டுக்கு அனுப்பறதை பத்தி 'எதுக்கு இந்த தேவையில்லாத பழைய சம்பிரதாயங்கள்'னு சொல்லறது இல்லை. முதல் பிரசவம்ங்கிறது தாய்வீட்டுல நடத்தறதே நல்லதுங்கிற ஞானம் எனக்கு ஒரு ஆட்டோவில் பிறந்தது :)

இந்த காலத்துல பொறக்கற குழந்தைகளில் பெரும்பாலானவர்களுக்கும் பண்டைய ரோமானிய(Roman) அரசியலில் இருந்த ஒருவருக்கும் தொடர்பு இருக்குன்னு சொன்னா ஆச்சரியப் படுவீங்க தானே? என்னோட பொண்ணு அர்ச்சனாவுக்குக் கூட இந்த ரோமானியரோட ஒரு தூரத்து தொடர்பு இருக்கு. யாரு அந்த ரோமானியர்? சீசர்(Caesar). வெறும் சீசர் தான்...ஷேக்ஸ்பியரால் ஆங்கில இலக்கியத்தில் ஏத்தி வைக்கப்பட்ட ஜூலியஸ் சீசர்(Julius Caesar) கிடையாது. சரி யார் அவர்? அது என்ன தொடர்பு? ஜூலியஸ் சீசரோட முன்னோர்களில் ஒருவர்...அவரோட பேரும் சீசர் தான்னு சொல்றாங்க. அவர் தான் பெண்ணின் வயிற்றை மருத்துவ முறையில் அறுத்து பிறக்க வைக்கப்பட்ட உலகின் முதல் குழந்தைன்னு சொல்றாங்க. அதனால தான் இந்த மாதிரியான ஒரு அறுவை சிகிச்சைக்கு "Caesarean Operation" அல்லது சிசேரியன் செக்ஷன் அப்படின்னு பேரு. சீசர் வழி வந்ததால சீசரியன் ஆப்பரேஷன்னு தானே பேரு இருக்கனும் எதுக்கு 'சிசேரியன்' னு சொல்றாங்கன்னு இன்னும் புரியலை. முன்னொரு காலத்துல சிசேரியன் ஆப்பரேஷனோட ஸ்பெல்லிங் 'Scissorian Operation'னு நெனச்சிட்டிருந்தேன்:)

அர்ச்சனாவைப் பொறுத்த வரை அவ பொறக்கறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி செக்கப்புக்குப் போனப்போ கூட தங்கமணியோட உடல்நிலை நல்லாருக்கு, நார்மல் டெலிவரியே ஆகும்னு சொன்னாங்க. ஆனா அதுக்கு அடுத்த வாரம் செக்கப்புக்குப் போனப்போ குழந்தையைத் தாயின் வயித்துக்குள்ள பாதுகாப்பா வைத்திருக்க உதவும் amniotic fluid ரொம்ப குறைஞ்சுடுச்சு, உடனே ஆப்பரேஷன் செய்யனும் அப்படின்னு சொல்லிட்டாங்க. சிசேரியன் ஆப்பரேஷனோட பின்விளைவுகளை(காயம் ஆறும் போது ஏற்படும் வலி, வெயிட் தூக்கப் பிடாது, நடமாடப் பிடாது அப்படின்னு சில கட்டுப்பாடுகள்) நெனச்சி மனைவியும் நானும் தயங்குனப்போ "இது ப்ரைமி-Primy (ஒரு பெண்ணுக்குப் பிறக்கும் முதல் குழந்தை என்பதை குறிப்பிட பயன்படும் மருத்துவச் சொல்), பின்னால எதாச்சும் பிரச்சனை வந்துச்சுன்னா என்னை சொல்லக் கூடாது"ன்னு சொல்லிட்டாங்க. சரின்னு எங்க குழந்தை சீசரிய வழிப்படி பிறப்பதற்கு இருவரும் ஒப்பு கொண்டோம். கடைசி வரைக்கும் அந்த இறுதி செக்கப்பின் போது எடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட்டை எங்களுக்குத் தரவே இல்லை. இப்போ தரோம் அப்போ தரோம்னு ஏதேதோ காரணம் சொல்லி மழுப்பிட்டாங்க. நாங்களும் குழந்தை நல்லபடியா பொறந்த சந்தோஷத்துல அதை ஒரு பொருட்டா எடுத்துக்கலை. அப்புறமா தான் தெரிஞ்சுச்சு என் மனைவி அந்த மருத்துவமனையில் தங்கியிருந்த நான்கு நாட்களில் பிறந்த ஆறு குழந்தைகளுமே 'சீசரியன் குழந்தைகள்' என்று. ஆக பிரசவத்துக்கு மனைவியை சேர்க்கப் போற மருத்துவமனை மற்றும் பிரசவம் பார்க்கப் போகும் டாக்டரின் வரலாறையும் தீர விசாரித்துக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஞானம் என் குழந்தை பிறந்தப்போ எனக்கு பிறந்தது.

நிற்க. ஆக்சுவலி வாட் ஐ வாண்ட்டட் டு சே இஸ்...அதாவது...சொல்ல வந்த மேட்டர் இன்னும் சொன்ன பாடில்லை :( கிளை கதைகளே மைல் நீளத்துக்குப் போனதால அடுத்த பதிவுல பொண்டாட்டியைப் பிரசவத்துக்கு அனுப்புனதுக்கப்புறம் ஏற்பட்ட சில மறக்க முடியாத அனுபவங்களைச் சொல்றேன். கண்டிப்பா போன பதிவைப் போல நாலு மாசம் இடைவெளி விழாதுன்னு நம்பறேன். அதோட நம்பிக்கை தான் வாழ்க்கைன்னும் சொல்லிக்கிறேன்...எனக்கு நானே:)

18 comments:

Porkodi (பொற்கொடி) said...

ம்ம்ம்ம்ம்... அப்புறம்?

கைப்புள்ள said...

//ம்ம்ம்ம்ம்... அப்புறம்?//

அவிவா,
வெயிட் ஒன் நிமிட் ஃபார் ஃபைவ் மினிட்ஸ் ஃபார் நெக்ஸ்ட் போஸ்ட்.
நாங்க எல்லாம் மீ த ஃபர்ஸ்ட் போடற அளவுக்கு வர்த் இல்லியா? :)

Geetha Sambasivam said...

:P:P:P:P

கைப்புள்ள said...

//:P:P:P:P//

:P அப்படின்னா பழிச்சு காட்டுறதா?

Porkodi (பொற்கொடி) said...

யாருய்யா அது? கதையை கேட்டுக்கிட்டு இருக்கும் போது டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு?? ஓ சாரி ப்லாக் ஓனரா.. ஹிஹி.. நீங்க இந்த மாதிரி ஆர்வத்தை தூண்டி வுட்டுட்டு இருந்தா டெம்ப்ளேட் பின்னூட்டமெல்லாம் மறந்துருது. (இங்க வந்து மீ த ஃபர்ஸ்ட்டேய்ய்ய்ய் சொல்லி அப்புறம் யாராவது வந்து அருமையான இடுகை, எருமையான கமெண்ட்னு சொல்லிட்டாங்கன்னா..?)

Porkodi (பொற்கொடி) said...

ஹாஹாஹா! கைப்பு, கீதா பாட்டிக்கு வாயே டிஃபால்டா பழிப்பு போஸ் தான் தெரியாதா? ;)

கைப்புள்ள said...

//ஓ சாரி ப்லாக் ஓனரா.. ஹிஹி.. நீங்க இந்த மாதிரி ஆர்வத்தை தூண்டி வுட்டுட்டு//

ஹி...ஹி...அந்த மட்டுக்கு சந்தோஷம் :)

கைப்புள்ள said...

//கீதா பாட்டிக்கு வாயே டிஃபால்டா பழிப்பு போஸ் தான் தெரியாதா? ;)
//

எனக்கு "கரகாட்டக்காரன் அக்கா புகழ்"
நடிகை காந்திமதி அவுங்க நெனைவு வருதே?
http://img.youtube.com/vi/RprvatzfHoY/2.jpg

அது ஏன்??

Thiru said...

//பொண்டாட்டி பாத்து பாத்து நமக்காக எல்லா வேலைகளையும் செஞ்சு அனுபவிச்சு பழக்கப் பட்டுட்டு தனக்கு தானே ஹவுஸ் வைஃபா வேலை பாக்கறது ரொம்ப கஷ்டமான காரியம்
தான்// ஓஹோ.. அப்படியா? சிசேரியன் ஆபரேஷன் பத்தி இப்பதான் கேள்வி படறேன். சீக்கிரமே கதையே சொல்லு.

Geetha Sambasivam said...

அக்கிரமமா இல்லை?? போர்க்கொடி, என்ன??? துணைக்கு ஆள் இருக்காங்கனு தைரியமா??? ஒண்டிக்கு ஒண்டி வாங்க, பார்ப்போம், மோதலாம்! நறநறநறநறநற

@கைப்புள்ள, :P:P:P:P ஒரு தரம் நான் ஸ்மைலி போடறதை நீங்களும் அம்பி அங்கிளும் கிண்டல் பண்ணினீங்க இல்லை? அதான் உங்க பதிவுக்கு என்னோட பின்னூட்டம் இனிமேல் :P:P:P:P:P:P

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

//தனக்கு தானே ஹவுஸ் வைஃபா வேலை பாக்கறது ரொம்ப கஷ்டமான காரியம் தான். //
இல்ல பாஸ், அது கூட நல்லாத்தான் இருக்கும்!!!
நீங்க நினைச்ச இடத்துல உங்க அழுக்கு துணிய போடலாம், பாத்திரத்த பொறுமையா ரெண்டு நாள் கழிச்சு கழுவலாம், இன்னும் சில இருக்கு,
ஆனா சபைல சால்னா உடைக்ககூடாதுன்னு............................

வெட்டிப்பயல் said...

அண்ணே,
//ஆயிரம் தான் சொல்லுங்க...இந்த பொண்ணுங்களுக்கு அம்மா வீட்டுக்குப் போகற மாதிரி ஒரு சந்தோஷமான விஷயம் வேற எதுவும் இருக்காதுன்னு நெனக்கிறேன்//

ஆஹா... சத்தியாமான வார்த்தைகள் :)

சிசேரியனுக்கு இப்படி ஒரு வரலாறு இருப்பது இது வரை எனக்கு தெரியாது... அருமையான ஆராய்ச்சி :)

ஆனா இந்த பதிவுக்கு முதல் மூன்று பத்திகள் தேவையில்லை என்பது என் எண்ணம்... அனுபவப் பதிவை மொக்கைப் பதிவாக மாற்றியதாக ஒரு எண்ணம்.

☀நான் ஆதவன்☀ said...

:))))

அண்ணே அடுத்த பாகத்தையாவது சீக்கிரம் போடுங்க.

எங்க அக்காஸூம் எப்பவாச்சும் எங்க வீட்டுக்கு வந்தா பயங்கர குஷியாகிடுவாங்க.

☀நான் ஆதவன்☀ said...

சிசேரியன் மேட்டர் புதுசுண்ணே :)

நானும் நீங்க நினைச்ச மாதிரியே தான் நினைச்சுட்டு இருந்தேன். ஒரு வேளை ஜீனியஸ் எல்லாம் இப்படி தான் நினைப்பாங்க போல :P

ambi said...

ஆகா, பழைய பாக்கிய நல்லாவே கணக்கு தீக்கறாங்க பா. நல்லா குடுக்கறாங்க டீடெயிலு.

ஆம்ம தல, நீங்க பாலுல குளிப்பாட்டி பன்னீர்லயே கொப்பளிக்க வெச்சாலும் தங்கமணிஸ் எல்லாமே ஏடிஎம்கே கட்சிக்கு தான் ஓட்டு போடுவாங்க. இதுக்கு மேலே நான் வாய தொறக்க முடியாது. :))

கேடி, சபாஷ், உனக்கும் அந்த உண்மை தெரிஞ்சு போச்சா..? :))

அபி அப்பா said...

ஆக அர்ச்சனா மேடத்தின் கூட பிறந்தது ட்வின்ஸ்ஸா? என்ன புரியலையா? ஆட்டோவிலே பிறந்தது ஒரு ஞானம், ஆஸ்பத்திரியில் பிறந்தது ஒரு ஞானம். ஆக மொத்தம் ஒரே கல்லுல மூணு மாங்காய்:-))

நாகை சிவா said...

ஆனா நீங்க சொல்லுற மேட்டரு எல்லாம் நமக்கு ஒத்து வரலையே... நீங்க உங்க வூட்டுக்கார அம்மா வ சரியா டியூன் பண்ணல என்று நினைக்குறேன் ;)

நாகை சிவா said...

4 மாசம் கழிச்சு போட்ட பதிவுக்கு 4 நாள் கழிச்சு கமெண்ட் போடுவது தவறா?