Monday, March 29, 2010

பொண்டாட்டியைப் பிரசவத்துக்கு அனுப்பிட்டு...

"பிரசவம்ங்கிறது ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒரு மறு ஜென்மம் மாதிரி" அப்படிங்கற உண்மை தமிழ்ப் படங்களைப் பார்க்கும் எந்தவொரு சராசரி ரசிகனுக்கும் தெரியும். ஒரு ஆணுக்குப் பிரசவம் குறித்த மெய்யும் பொய்யுமான பல விஷயங்களைப் போதிப்பது திரைப்படங்கள் தான் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். தமிழ்த் திரைப்படங்களில் பிரசவம் குறித்த காட்சிகள் பல விஷயங்களுக்காகப் பல விதங்களில் பயன்படுகிறது. உதாரணமாக கர்ப்பமாக இருக்கும் தங்கையின் வளைகாப்பில் அண்ணன் பாட்டு பாடுவதற்காகவும், தனக்கு பிறக்கப் போகும் குழந்தையை நினைத்து கதாநாயகன் பாடுவது போலவும், ஒரு காட்சியில் "மூன்று மாதம் முழுகாமல்" இருக்கும் கதாநாயகி அல்லது ஹீரோவுக்கு மிகவும் வேண்டப்பட்ட பெண்மணி அதற்கடுத்த காட்சியிலேயே "நிறைமாத கர்ப்பிணியாக மாறி" பிரசவ வேதனையில் துடிக்கும் போது, வில்லன்களின் தாக்குதலைத் துவம்சம் செய்து க்ளைமாக்ஸ் காட்சியில் அழகான குழந்தை பிறந்து "சுபம்" போடவும் உதவும். இவ்வளவு ஏன்...ஏதாவது ஒரு நடிகை கால்ஷீட் ப்ராப்ளம் செய்கிறார் என்றார் அவருடைய கதாபாத்திரத்தின் கதையை முடித்துக் கொள்ளவும் இந்த "பிரசவ மேட்டர்" உதவும். பிரசவம் குறித்த சில கலைச் சொற்களைக் கற்றுக் கொள்ளவும் சினிமா மிகவும் உதவுகிறது. உதாரணமாக மசக்கை, பச்சை உடம்புகாரி, வாயும் வயிறுமா இருக்கா, முழுகாம இருக்கா, மாசமா இருக்கா, இரட்டை நாடி, வவுத்து புள்ளைக்காரி போன்ற technical termsஐ எல்லாம் கற்றுக் கொள்ள சினிமாவை விட்டால் வேறு வழி ஏது? :)

சினிமா பிரசவங்கள் நகைப்புக்குரியதாய்த் தோன்றினாலும், நம் சொந்த வாழ்க்கையில் நமக்கு தெரிந்த/அல்லது வேண்டப்பட்ட ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறக்கப் போகிறது எனத் தெரியும் போது அவளுக்கு நல்ல படியாகக் குழந்தை பிறக்க வேண்டுமே என்ற ஒரு எதிர்பார்ப்பு நம்மை அறியாமலேயே வந்து ஒட்டிக் கொள்கிறது. மருத்துவத் துறையில் நிறைய வளர்ச்சிகள் ஏற்பட்டு குழந்தை பிறப்பு என்பது ஒரு சாதாரண நிகழ்வு என்ற நிலை வந்தாலும் கூட நமது சொந்தங்கள் அல்லது நமக்கு வேண்டப்பட்டவர்களுடைய குழந்தை பிறப்பு எனும் போது ஒரு விதப் பதற்றம் நம் மனதில் குடி கொள்வது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. இதுவே பிரசவம் தன்னுடைய மனைவிக்கு எனும் போதும் பிறக்கப் போவது தன்னுடைய வாரிசு எனும் போதும் ஒருவனுடைய மனதில் இருக்கும் உணர்வுகளை வார்த்தைகளால் வடிப்பது கடினம் என்றே எண்ணுகிறேன். மகிழ்ச்சி, அச்சம், எதிர்பார்ப்பு, கவலை போன்ற பலவித உணர்வுகளும் சேர்ந்த ஒரு வித விசித்திர கலவை அந்த உணர்வு. அதை அனுபவித்தவர்களுக்கே அது எவ்வாறு இருக்கும் எனத் தெரியும். பிரசவத்தின் போது வலியும் வேதனையும் ஒரு பெண்ணுக்குத் தான் என்பதும் அவள் மனதாலும், உடலாலும் தாங்கிக் கொள்ள வேண்டிய கணம் அதிகம் என்பதை பலவிடங்களில் படித்துத் தெரிந்து கொண்டாலும் பலர் சொல்லக் கேட்டிருந்தாலும் அதை எந்நாளும் உணரும் சக்தியற்றவன் ஆண் என்னும் நினைக்கும் போது ஒரு வித குற்றவுணர்ச்சி தோன்றி மறைகிறது. பாலைவன ரோஜாக்கள் படத்தின் பாடல் வரிகளான "காதல் என்பது பொதுவுடைமை கஷ்டம் மட்டும் தானே தனி உடைமை" என்னும் வரிகள் நான் என் குழந்தையின் பிறப்பை எதிர்நோக்கியிருந்த காலங்களில் பல முறை என் நினைவுக்கு வந்து சென்றதுண்டு.

பொதுவாகவே நம் சமூகத்தில் கருவுற்றிருக்கும் ஒரு பெண்ணின் மீது அவளை சுற்றியிருப்பவர்கள் கூடுதல் அக்கறை எடுத்து கவனிப்பதுண்டு. பேறு காலத்தில் செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை, உண்ணக் கூடியவை, உண்ணக் கூடாதவை என்பது பற்றிய பலவிதமான அறிவுரைகள் பலரிடமிருந்தும் கிடைக்கும். அவ்வறிவுரைகளை அப்பெண் செயல்படுத்துகிறாளா இல்லையா என்று பார்த்துக் கொள்ளக் கூடிய கடமை அவளுடய கணவனுடையதானது. அவள் அதை செயல்படுத்த வில்லை என அறிவுரை சொன்னவருக்குத் தெரிய வரும் போது "மாசமாருக்கற பொண்ணுப்பா கொஞ்சம் கவனமா பாத்துக்கக் கூடாதா? நீ தான் இதெல்லாம் பாத்து செய்யனும்" என்ற அறிவுரை அவளுடைய கணவனுக்குக் கிடைக்கும். பேருந்துகளிலோ பொது இடங்களிலோ கர்ப்பிணி பெண் உட்கார இடமில்லாமல நின்று கொண்டிருந்தால் எழுந்து இடம் தர வேண்டும் என்று பெற்றோர்கள் மூலமாக சிறுவர்களாக இருக்கும் போதே அறிவுறுத்தப் படுகிறது நம் சமூகத்தில். டெல்லியில் என்னுடன் பணிபுரிந்த ஒரு நண்பன் பின்னாளில் பெங்களூரில் பணிபுரிந்தான். அவனுடைய மனைவி கருவுற்றிருந்த போது அவன் குடியிருந்த வீட்டு ஓனரே வளைகாப்பு விழா நடத்தினாராம். கன்னடப் பெண்மணியான அவர் வட இந்தியாவைச் சேர்ந்த நண்பனின் மனைவிக்கு தென்னிந்திய முறைப்படி நடத்திய வளைகாப்பு விழாவின் படங்களை நண்பன் எனக்கு அனுப்பி வைத்தான். மற்ற நேரங்களில் எப்படியோ, பெரும்பாலான குடும்பங்களில் ஒரு பெண் இன்னொரு உயிரைத் தன்னுள் தாங்கிக் கொண்டிருக்கும் போது அவளுக்குண்டான மரியாதையும், அவள் மீது மற்றவர்கள் காண்பிக்கும் அக்கறையும் அதிகரிக்கத் தான் செய்கிறது.

"Exceptions are always a rule" என்று ஆங்கிலத்தில் ஒரு கூற்று இருக்கிறது. ஒரு விஷயம் இவ்வாறு இருக்கும் அல்லது இவ்வாறு நடக்கும் என்ற தீர்மானத்திற்கு வருவதற்கு முன் அவ்வாறு இல்லாது போதலுக்கான சாத்தியக்கூறுகளும் இருக்கத் தான் செய்கின்றன என்பதை ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். துரதிருஷ்ட வசமாக நான் அவ்வாறான 'exception' ஒன்றைத் தான் முதலில் தெரிந்து கொண்டேன். முன்ஷி பிரேம்சந்த் என்பவர் இந்தி மொழி இலக்கிய உலகின் தூண்களில் ஒருவராகக் கருதப் படுகிறார். ஒரு பத்து-பதினைந்து வருடங்களுக்கு முன் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது மாலை வேளைகளில் இந்தி வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தேன். நான் எட்டாம் வகுப்போ ஒன்பதாம் வகுப்போ படித்துக் கொண்டிருக்கும் போது இந்தி வகுப்புகளில் பிரவேஷிகாவோ(Praveshika) விஷாரத்தோ (Visharadh Poorvardh) படித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு தாளில் பிரபல எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் அடங்கிய புத்தகம் ஒன்று உண்டு. அதில் பிரேம்சந்த் அவர்கள் எழுதிய 'மதுவா'(Madhua) என்ற ஒரு கதை படித்திருக்கிறேன். கதையின் பெயர் அது தான் என்று நினைக்கிறேன்...சரியாக நினைவில்லை. வட இந்திய கிராமம் ஒன்றில் இரவு வேளையில் நடக்கும் நிகழ்வு ஒன்றினை கதைகளமாக ஆக்கியிருப்பார் ஆசிரியர். ஒரு குடிகார கணவன், அவனுக்கு ஒரு குடிகார தகப்பன். மனைவி கருவுற்றிருப்பாள். நிறைமாத கர்ப்பிணி. ஆள் அரவமற்ற ஒரு அத்துவான சூழ்நிலையில் அவர்கள் குடிசை அமைந்திருக்கும். தந்தையும், மகனும் குடிசையின் வெளியில் ஒரு லேண்டர்ன் விளக்கின் ஒளியில் அமர்ந்து கொண்டு குடித்துக் கொண்டிருப்பார்கள். குடித்துக் கொண்டிருக்கும் கணவன் தன் மனைவியை மதுவுடன் சேர்த்து சாப்பிடுவதற்காக உருளைக் கிழங்குகளை அவித்துத் தரச் சொல்வான். அவளால் இயலாத நிலைமையிலும் அவள் உருளைக்கிழங்குகளை வேக வைத்து தருவாள். சூடான உருளைக்கிழங்கின் தோலினை உரித்து வாயில் போட்டு இருவரும் தின்பார்கள். வாய் சுடுவதையும் பொருட்படுத்தாது மது அருந்துவதுமாகவும் கிழங்கு தின்பதுமாகவும் இருப்பார்கள்.

இந்நிலையில் அப்பெண்ணுக்குப் பிரசவ வலி எடுத்துக் கொள்ளும். வலி தாங்க முடியாது அவள் கதறுவாள். அதை பொருட்படுத்தாது அப்பனும் மகனும் குடித்துக் கொண்டிருப்பார்கள். பிரசவத்தின் போது கூட இருந்து உதவுவதற்கு யாருமில்லாது அப்பெண் இறந்து போவாள். கதையில் குழந்தை பிறந்து அத்தாய் இறப்பாளா, அல்லது சிசுவோடு சேர்ந்து அவள் மரித்தாளா என்பது இப்போது சரியாக நினைவில் இல்லை. ஆனால் நான் மேலே சொன்னவற்றை 'graphic detail'இல் எழுதியிருப்பார் ஆசிரியர். அக்கதை என்னை ஆழமாகப் பாதித்தது மட்டும் உண்மை. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்ற எண்ணம் அப்போது என் மனதில் எழுந்தது. இவ்வளவு வருடமாகியும் இக்கதை நினைவில் இருப்பதற்கு அது ஏற்படுத்திய பாதிப்பு தான் காரணம். காலம் செல்ல செல்ல கதையில் சொல்லப் பட்டது போன்றதும் இதை விட அவலமானதுமான சம்பவங்களைப் பற்றிப் படிக்கும் போது இலக்கியம் என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு தான் என்பது உறுதியானது. "பூந்தோட்டக் காவல்காரன்" என்றொரு படம். விஜயகாந்த், ராதிகா நடித்திருப்பார்கள். அதில் ஒரு காட்சியில் வில்லன்களுடன் விஜயகாந்துக்கு மோதல் ஏற்படும். சண்டையின் போது விஜயகாந்தை அடியாள் ஒருவன் பலமான உருட்டுக் கட்டை கொண்டு ஓங்கி அடிப்பான். அதை தடுக்க வரும் ராதிகாவின் வயிற்றில் உருட்டுக் கட்டையின் அடி விழும். இக்காட்சியை சிறு வயதில் சில முறை பார்த்திருக்கிறேன். சமீபத்தில் ஒரு நாள் அப்படத்தின் பாடல் ஒன்றைப் பார்க்க நேரிட்டது. மேலே சொன்ன அக்காட்சி நினைவுக்கு வந்தது. ஆனால் இம்முறை ஏனோ அக்காட்சியை நினைத்த மாத்திரத்தில் உடம்பு நடுங்கியது, ஒரு வித வேதனை மனதில் உருவானது, . அக்காட்சியை நினைக்காமல் மறக்க வேண்டும் என்று மனம் கட்டளையிட்டுக் கொண்டே இருந்தது. ஒரு வேளை அச்சமயம் ஒரு குழந்தைக்குத் தந்தையாகியிருந்ததால் அத்தகைய ஒரு காட்சியை நினைத்துப் பார்க்கக் கூட கஷ்டமாக இருந்ததோ என்னவோ?

பொதுவாகவே ஒரு ஆணின் மனதில் கருவுற்றிருக்கும் பெண்ணைப் பார்க்கும் போது அவள் ஒரு vulnerable நிலையில் இருக்கிறாள் என்ற ஒரு 'ஐயோ பாவம்' உணர்வு தான் மேலிடும். சமூகத்தால் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் 'டிரெய்னிங்' அத்தகையது. ஆறாவது மாதம் வரை நீச்சல் பயிற்சி மேற்கொள்ளலாம், ஏரோபிக்ஸ் செய்யலாம், கார் ஓட்டலாம் என்றெல்லாம் 'What to expect when you are expecting' புத்தகத்தில் எழுதப் பட்டிருந்ததைப் படித்த போது ஆச்சரியமே மேலிட்டது. பிரசவ வலி எடுத்து மருத்துவமனைக்குச் சென்ற போது "இது 'false pain' தான் சிறிது நேரம் கழித்து வாருங்கள்" என்று சொல்லித் திருப்பி அனுப்பப் பட்டதையும், "வலி அதிகமாக இருக்கிறது ஸ்ட்ரெச்சர் கொண்டு வாருங்கள்" என்று கதறும் பெண்ணிடம் "அதெல்லாம் முடியாது பிரசவ அறை வரை நடந்தே தான் வர வேண்டும்" என்று கூறியதையும் எனக்குத் தெரிந்த சில பெண்களின் மூலமாகக் கேள்வி பட்ட போது ஆச்சரியமாக இருந்த போதிலும் அத்தகைய சூழ்நிலையில் மருத்துவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ள முடிந்தது.

நிற்க. இந்த பதிவின் தலைப்பில் நான் எழுத நினைத்தது ஒரு வரி கூட இன்னும் எழுதவில்லை. அப்பதிவிற்கு ஒரு முன்னோட்டம் கொடுக்க ஆரம்பித்து அதுவே ஒரு பதிவின் அளவிற்கு நீண்டு விட்டதால், சொல்ல வந்த மேட்டர் வேறொரு பதிவில்...

30 comments:

Iyappan Krishnan said...

ஹ்ம்ம் அண்ணே அண்ணே... ரொம்ப நல்ல விஷயம்.. மிச்சமும் படிக்க ஆவலாகி வெயிட்டிங்க்கு



ரொம்ப படிக்கிறீங்க இப்பல்லாம்னு தெரியுதுண்ணே... நீங்க சீக்கிறம் ஒரு புக் போடனும்னு ஆசைப்படறேன்

Geetha Sambasivam said...

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., அர்ச்சனாவுக்குத் தான் தம்பியோ, தங்கையோனு நினைச்சேன், ஏமாத்திட்டீங்க! :P:P:P:P:PEdit12:10 pm//

பஸ்ஸிலே சொன்னதே இங்கேயும், போட்டாச்சு, ஓகேயா??? :P:P:P:P என்ன மேட்டர், விஷயத்துக்கு வாங்க! வயசாச்சுனு புரியுது! :P

கோபிநாத் said...

தல டமில், இந்தி, இங்கீலீபிசுன்னு படிச்சி கலக்குறிங்க...;))

சீக்கிரம் சொல்லவந்த விஷயத்தை சொல்ல்லிடுங்க தலைவா!!

☀நான் ஆதவன்☀ said...

அண்ணே என்னடா பதிவோட தலைப்புக்கு ஒத்து வரலையேன்னு நினைக்க கூட தோணல கடைசி வரி படிக்கும் வரை. நல்லா எடுத்துட்டு போயிருக்கீங்க.

நான் கூட அடுத்த குழந்தை பத்தி சொல்றீங்களோ வாழ்த்துகள் சொல்லலாம்ன்னு நினைச்சு வந்தேன் :)

துபாய் ராஜா said...

டிரெயிலரே கலங்கடிக்குதே கைப்பு... மெயின் பதிவு எப்போ ரிலீஸ்...

Thiru said...

நல்லா இருக்கு // நீங்க சீக்கிறம் ஒரு புக் போடனும்னு ஆசைப்படறேன்// வழிமொழிஞ்சிக்கறேன்

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்தூஸ்!! :))

Porkodi (பொற்கொடி) said...

இந்த வகைல டுபுக்கின் "பிரசவம்" தான் இதுவரை படிச்சுருக்கேன். இப்போ உங்க அனுபவம் படிக்க ரெடி! :)

கைப்புள்ள said...

//ரொம்ப படிக்கிறீங்க இப்பல்லாம்னு தெரியுதுண்ணே... நீங்க சீக்கிறம் ஒரு புக் போடனும்னு ஆசைப்படறேன்//

அண்ணே...நீங்க என் மேலே வச்சிருக்கற பாசத்துக்கும் மதிப்புக்கும் மிக்க நன்னி. புக் எழுதறனோ இல்லையோ அந்த மதிப்பை அப்படியே காப்பாத்திக்கிட்டா அது போதும் :)

கைப்புள்ள said...

//பஸ்ஸிலே சொன்னதே இங்கேயும், போட்டாச்சு, ஓகேயா??? :P:P:P:P என்ன மேட்டர், விஷயத்துக்கு வாங்க! வயசாச்சுனு புரியுது! :P//

நானும் கூகிள் சாட்ல கேட்டதையே இங்கேயும் கேக்கறேன் - நக்கல் கமெண்ட் மட்டும் தான் போடனும்னு உங்களுக்கு எதாச்சும் வேண்டுதலா?
:)

கைப்புள்ள said...

//தல டமில், இந்தி, இங்கீலீபிசுன்னு படிச்சி கலக்குறிங்க...;))

சீக்கிரம் சொல்லவந்த விஷயத்தை சொல்ல்லிடுங்க தலைவா!!//

கேப்டன் கோபிநாத்,
இந்த போஸ்ட் எழுதிட்டு இருந்த போதே மோடம் அவுட் ஆகிடுச்சு. அது சரியாகி வந்ததுமே அடுத்த போஸ்ட் போட்டுடறேன். பாராட்டுக்கு நன்றிங்கங்கோ :)

கைப்புள்ள said...

//நான் கூட அடுத்த குழந்தை பத்தி சொல்றீங்களோ வாழ்த்துகள் சொல்லலாம்ன்னு நினைச்சு வந்தேன் :)//

வெயிட் ஒன் நிமிட் ஃபார் ஃபை நிமிட்ஸ் ஃபார் தி நெக்ஸ்ட் போஸ்ட் :)

டேங்கீஸ்பா மிஸ்டர் ஐ.ஜி.ஆர்.மாரார்
:)

கைப்புள்ள said...

//டிரெயிலரே கலங்கடிக்குதே கைப்பு... மெயின் பதிவு எப்போ ரிலீஸ்...//

வாங்க துபாய் ராஜா,

கூடிய சீக்கிரம் போட்டுடறேன். நன்றி.

கைப்புள்ள said...

//நல்லா இருக்கு // நீங்க சீக்கிறம் ஒரு புக் போடனும்னு ஆசைப்படறேன்// வழிமொழிஞ்சிக்கறேன்//

நன்னிப்பா.

கைப்புள்ள said...

//வாழ்த்தூஸ்!! :))//

அட பாவி மனுஷா...அடுத்த பதிவு வரைக்கும் பொறுங்க ஓய்.

கைப்புள்ள said...

//இந்த வகைல டுபுக்கின் "பிரசவம்" தான் இதுவரை படிச்சுருக்கேன். இப்போ உங்க அனுபவம் படிக்க ரெடி! :)//

வாங்க அவிவா,
என்ன ரொம்ப நாளா இந்தப் பக்கமே காணோம். டுபுக்கு சாரோட பிரசவ பதிவு ரொம்பவே நெகிழ்ச்சியா இருக்கும். இந்த பதிவோட தொடர்ச்சி எப்படி இருக்கும்னு இன்னும் எனக்கே தெரியாது. பார்ப்போம் எப்படி வர போவுதுன்னு :)

Geetha Sambasivam said...

அது சரி, டுபுக்குவுக்கு எப்போப் பிரசவம் நடந்துச்சு??? உங்களுக்குமா?? ஆச்சரியமா இருக்கு? தினசரியிலே அப்படி எதையும் காணோமே? :P:P:P:P

Porkodi (பொற்கொடி) said...

ஆஆ!! கைப்பு இன்னும் அவிவாவை நினைவு வெச்சுருக்கீங்களா!!! :))) அது மாதிரியே க்யூட்டான பொண்ணு உங்களுக்கு பிறக்கும் பாருங்க ;)

இல்ல பாஸ் நீங்க போஸ்ட் போட்டா படிச்சுட்டு தான் இருக்கேன், ஆனா கமெண்ட் பண்ண லாகின் பண்ண சோம்பலா இருக்கும். அப்புறம் லாகின் பண்ணும் போது மறந்துரும். :(

கீதா பாட்டியின் க‌டி எல்லாம் க‌ண்டுக்காதீங்க‌, யூ கேரி ஆன்! :P

கைப்புள்ள said...

//அது சரி, டுபுக்குவுக்கு எப்போப் பிரசவம் நடந்துச்சு??? உங்களுக்குமா?? ஆச்சரியமா இருக்கு? தினசரியிலே அப்படி எதையும் காணோமே? :P:P:P:P//

கடவுளே! என்கிட்ட நீ இந்த மண்ணுல இருந்து கிழிச்சது எல்லாம் போதும்னு என்னை நீ மேலே கூட்டிக்கிட்டிருக்கலாமே...அதுக்குப் பதிலா இந்த மாதிரி மொக்கையான கடியெல்லாம் கேக்க வச்சி உயிரோட கொல்றியே...இது நியாயமா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(

கைப்புள்ள said...

//ஆஆ!! கைப்பு இன்னும் அவிவாவை நினைவு வெச்சுருக்கீங்களா!!! :))) அது மாதிரியே க்யூட்டான பொண்ணு உங்களுக்கு பிறக்கும் பாருங்க ;)//

ஹி...ஹி...Iam saving for itனு அந்த குட்டிப் பொண்ணு அழகா சொல்லுமே அதை மறக்க முடியுமா? எனக்கு பொண்ணு பொறந்து அவளுக்கு ஒன்னரை வயசு ஆகுது :)
http://kaipullai.blogspot.com/2009/02/tn-07-bc-2308.html

//இல்ல பாஸ் நீங்க போஸ்ட் போட்டா படிச்சுட்டு தான் இருக்கேன், ஆனா கமெண்ட் பண்ண லாகின் பண்ண சோம்பலா இருக்கும். அப்புறம் லாகின் பண்ணும் போது மறந்துரும். :(//

சேம் பிஞ்ச் :)

//கீதா பாட்டியின் க‌டி எல்லாம் க‌ண்டுக்காதீங்க‌, யூ கேரி ஆன்! :P//

கண்டுக்காம விட்டுடலாம் தான்...ஆனா பயங்கரமா கலாய்ச்சிட்டதா நெனச்சு தொடர்ச்சியா அஞ்சாறு ஸ்மைலி எல்லாம் போடறாங்க பாருங்க...அதை தான் தாங்கிக்கவே முடியலை :(

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, ரொம்ப ஜாலியா இருக்கே எனக்கு! நல்லா எஞ்சாய் பண்ணிட்டிருக்கேனே!

Porkodi (பொற்கொடி) said...

அது தெரியும். ஒண்ணு தானே இப்போ இன்னொண்ணு வர போகுதுன்னு தானே இந்த பதிவு??? இல்லை டுபுக்கு மாதிரியே ஏற்கனவே பொறந்தத பத்தி தான்னு சொன்னீங்க...

டோரிக்கண்ணு.. said...

என்னதான் சொல்லவறே?வெறுப்பேத்தாதே . ஜாக்கிறதை.இதான் உனக்கு லாஸ்ட் வார்னிங் .சரி சரி நம்ப வூட்டாண்ட வந்துட்டு போ .(நானும் பதிவர்தான்யா,அம்மாசத்தியமா நானும் பதிவர்தான்யா,wantedஆ வந்து சொல்றேன் நம்பமாட்டியே, புதுசா வந்து பதிவர்ன்னு form ஆயிட்டேன்யா )
dorikannu.blogspot.com

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

ambi said...

வாழ்த்துகள் kaips. :))

ambi said...

//அதுக்குப் பதிலா இந்த மாதிரி மொக்கையான கடியெல்லாம் கேக்க வச்சி உயிரோட கொல்றியே...இது நியாயமா?
//

Amen :))))))))))))))

அபி அப்பா said...

யோவ்! இதல்லாம் வெட்கப்படகூடிய விஷயமா? அர்ச்சனா குட்டிக்கு தம்பியா தங்கச்சியான்னு சட்டு புட்டுன்னு சொல்லும்யா! என்ன கொஞ்சம் கேப் விட்டிருக்கலாம் என்னை மாதிரி! வாழ்த்துக்கள்!

நீர் பதிவிலயும் பாரா கேப் விட மாட்டீர்! வாழ்க்கையிலும் அப்படித்தானா?

அபி அப்பா said...

யோவ்! இதல்லாம் வெட்கப்படகூடிய விஷயமா? அர்ச்சனா குட்டிக்கு தம்பியா தங்கச்சியான்னு சட்டு புட்டுன்னு சொல்லும்யா! என்ன கொஞ்சம் கேப் விட்டிருக்கலாம் என்னை மாதிரி! வாழ்த்துக்கள்!

நீர் பதிவிலயும் பாரா கேப் விட மாட்டீர்! வாழ்க்கையிலும் அப்படித்தானா?

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப உணர்ந்து எழுதி இருக்கீங்க கைப்ஸ்.
தலைப்புப் பார்த்து நானும் அடுத்தஎடிஷனுக்கு நீங்க ரெடின்னு நினைச்சுட்டு இருக்கேன்.
முன் கூட்டி வாழ்த்துகள்.

Porkodi (பொற்கொடி) said...

அலாவ்.. கைப்பு தேர்? அவிவா இயர்.. ஆமா இன்னுமா கொழந்தை வந்துக்கிட்டு இருக்கு????