Sunday, April 19, 2009

Rewind : தொலைக்காட்சி பிரபலங்கள்

நினைவு மீட்டல் : தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்கள் என்கிற பதிவில் பழம்பெரும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் பத்திய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டேன். இப்பதிவில் வேறு சில தொலைக்காட்சி பிரபலங்களைக் குறித்த நினைவுகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த பிரபலங்கள் தொலைக்காட்சியில் பலவிதமான பொறுப்புகளை வகித்திருக்கிறார்கள் - Performerஆக, தொகுப்பாளராக, பேச்சாளராக இப்படி பல வித பொறுப்புகள். ஆனால் தொலைக்காட்சியில் தோன்றியதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு வேறு பெருமைகளும், சிறப்புகளும், திறமைகளும் இருக்கின்றன. அத்தகையவர்களைப் பற்றிய நினைவு பகிர்தலே இப்பதிவு. தொலைக்காட்சின்னு பொதுவா சொன்னாலும் இவர்கள் தூர்தர்ஷன் ஒற்றைத் தமிழ் அலைவரிசையோடு இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தவர்கள். இவர்களைப் பற்றி இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது மேலும் சில தகவல்களும் கிடைத்தன. அந்தச் சுட்டிகளையும் நான் ஆங்காங்கே கொடுத்திருக்கிறேன். அவர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால் "ஆ சுட்டிகளைக் கொறைச்சு ஆலோசிச்சால் மதி".

முனைவர் மா.நன்னன்



தொலைக்காட்சி பிரபலம் என்றதும், முதலில் என் மனதில் தோன்றியவர் முனைவர் மா.நன்னன் அவர்கள் தான். தூர்தர்ஷனில் 80-களின் பிற்பகுதியில் வெகு பிரபலமாக இருந்த "வாழ்க்கை கல்வி" நிகழ்ச்சியின் மூலம் மாலை வேளைகளில் தமிழ் மொழி பாடங்களை நடத்துவார். கனிவான குரலில் அவர் பேசுவதும் எளிமையான முறையில் தமிழ் கற்பித்ததும் நினைவுகளாக இன்னும் மனதில் பதிந்துள்ளன. தமிழில் எழுதும் போதும் பேசும் போதும் நாம் செய்யும் தவறுகளை உதாரணங்களுடன் ஒரு வகுப்பறைச் சூழலில் விளக்குவார். ஒரு முறை பாடங்களை விளக்கி விட்டு கரும்பலகையில் ஒவ்வொரு மாணவியாகக் கூப்பிட்டு எழுத வைத்தார். ஒரு மாணவி எழுதி முடித்ததும், அடுத்த மாணவியைக் கூப்பிடுவதற்காக அவர் சொன்னது "அடுத்த பாப்பா ஓடியா". இது கிட்டத்தட்ட 20+ ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்தது, ஆனால் இன்றளவும் எங்கள் வீட்டில் மிகப் பிரபலமான வசனம் இது:) நன்னன் ஐயாவை இன்றும் 'மக்கள்' தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

சாரதா நம்பி ஆரூரான்


பட்டிமன்றப் பேச்சாளர், தமிழ் ஆர்வலர் என்பதனை மீறி சாரதா நம்பி ஆரூரன் அவர்கள் எனக்கு நினைவிருப்பதற்குக் காரணம் இவர் நன்றாகப் பாடக் கூடியவர் என்பதனால் தான். சைவ சமயப் பாடல்களை இவர் தூர்தர்ஷனில் சில நிகழ்ச்சிகளில் பாடக் கேட்டிருக்கிறேன். அதற்கென்றே ஒரு நிகழ்ச்சி இருந்தது தூர்தர்ஷனில். அந்நிகழ்ச்சியின் பெயர் நினைவிலில்லை. ஒரு வேளை "தேன் துளி"யா? இவர் சென்னை ராணி மேரி கல்லூரியில் தமிழ்த் துறை தலைவராக இருந்தவர். இவர் மறைமலை அடிகள் குடும்பத்து மருமகள் என்பதனை 'தி ஹிண்டு' சுட்டியின் வழியாகத் தெரிந்து கொண்டேன்.

மேலும் தெரிந்து கொள்ள


சுவையாகவும் அதே நேரம் வாசகர்களின் கவனத்தைக் கவரக் கூடிய வகையில் சமய சொற்பொழிவுகள் ஆற்றுவதில் சிறந்தவராக இருந்தவர் புலவர் கீரன். இவருடைய நிகழ்ச்சிகளையும் தூர்தர்ஷனில் பார்த்திருக்கிறேன். புலவர் கீரன் அவர்களின் சொற்பொழிவு தொலைக்காட்சியில் வந்தால் அதை கண்டிப்பாகப் பார்ப்பார் என் தந்தையார். திருவல்லிக்கேணியில் நாங்கள் இருந்த போது இரவு நேரங்களில் மேடைகளில் இவர் சொற்பொழிவாற்றுவதை குறித்து கேள்விப் பட்டிருக்கிறேன். அதை கேட்க என் தந்தையார் சென்றதும் நினைவிலிருக்கிறது. இவர் இறைவனடிச் சேர்ந்து பல்லாண்டுகள் ஆகிவிட்ட போதிலும், அவர் பேச்சுக்கள் எதுவும் எனக்கு நினைவில் இல்லாது போனாலும் அவருடைய சொற்பொழிவுகள் சிறப்பானவை என்று மனதில் இன்னும் பதிந்திருக்கிறது.

சுப்பு ஆறுமுகம்





"தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட...ஆமாம் வில்லினில் பாட வந்தருள்வாய் கலைமகளே" அப்படின்னு இவர் வில்லுப்பாட்டை ஆரம்பிச்சா சின்ன வயசுல செஞ்சிட்டிருக்கற வேலையை(படிக்கிற மாதிரி நடிக்கிறதை) எல்லாம் அப்படியே போட்டுட்டு டிவி பாக்க உக்காந்துருவோம். அப்பெல்லாம் வீட்டில் இருக்கும் எல்லாரும் இவருடைய நிகழ்ச்சிகளைப் பார்ப்போம் என்பதனால், மாலை ஆறு மணியளவில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இவருடைய பல நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். ஒரு நிகழ்வினைப் பற்றி எடுத்து சொல்வதற்கோ, அல்லது ஒரு செய்தியினைப் பரப்புவதற்கோ வில்லுப்பாட்டு நிகழ்ச்சியைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இவருடைய மகளையும், மகனையும் நான் இவருடைய வில்லுப்பாட்டு பார்க்கத் தொடங்கிய நாளிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றளவும் மக்கள் தொலைக்காட்சியில் சுப்பு ஆறுமுகம் ஐயா இருபதாண்டுகளுக்கு முன்னர் நான் பார்த்த அதே சுறுசுறுப்போடும், அதே சுவையோடும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை வழங்குவதைப் பார்க்கும் போது ஆச்சரியம் மேலிடுகிறது.

மேலும் தெரிந்து கொள்ள 1


மேலும் தெரிந்து கொள்ள 2

மேலும் தெரிந்து கொள்ள 3


ரேவதி சங்கரன்


சந்தனக் கூடு உருஸ் என்ற இசுலாமியத் திருவிழாவினைப் பற்றியும், கிறித்தவர்களின் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் பற்றியும், கும்பாபிஷேகம் என்பதனை தமிழில் குடமுழுக்கு என்றழைப்பர் என்பதனையும் நான் கேள்விபட காரணமாயிருந்தது தூர்தர்ஷனில் மாலை வேளைகளில் ஒளிபரப்பாக்கிக் கொண்டிருந்த "உலாவரும் ஒளிக்கதிர்" என்ற நிகழ்ச்சி. தமிழகம் எங்கிலும் நடைபெறும் விழாக்களைப் படம்பிடித்து அரை மணி நேரத் தொகுப்பாக்கி ஒளிபரப்புவார்கள். அந்த நிகழ்ச்சியில் தான் ரேவதி சங்கரன் அவர்களின் குரலை முதன்முறையாகக் கேட்டேன். இவருடைய குரலில் உச்சரிப்பு, ஏற்ற இறக்கம் அனைத்துமே பிரமாதமாக இருக்கும். 2005ஆம் ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ஒரு ஆண்டு நான் இந்தூரில் வேலை செய்துக் கொண்டிருந்த போது, பல நாட்களில் நான் கேட்ட ஒரே தமிழ் குரல் இவருடையதாக மட்டுமே இருந்திருக்கும். காலை ஏழு மணிக்கு அலுவலகப் பேருந்து பிடிக்க ஓடுவதற்கு முன்னர் சன் டிவியில் காலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இவர் தொகுத்து வழங்கி வந்த ஏவிஎம்மின் மங்கையர் சாய்ஸ் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டுச் செல்வது வழக்கம். வடிவேலு, பிரபு நடித்த ஒரு திரைப்படத்தில் ஹக்கீஸ் கட்டிக் கொண்டு அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் மருமகனைக் கண்டு "குற்றால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா"என்று இவர் நக்கல் விடுவதும் ரசிக்கும் படியாக இருக்கும். இவர் சில காலம் மங்கையர் மலர் இதழின் ஆசிரியராக இருந்தார் என்றும் கேள்வி.

மேலும் தெரிந்து கொள்ள 1

மேலும் தெரிந்து கொள்ள 2

பர்வீன் சுல்தானா


சில சமயங்களில் எதோ ஒரு காரணத்தினால் நம்முடைய மனதில் ஒரு நம்பிக்கை விதைக்கப் பட்டிருக்கும். அது எப்படி நம் மனதில் வந்தமர்ந்தது என்று யோசித்துப் பார்த்தால் நம்மாலேயே அதற்கு விளக்கம் சொல்ல முடியாது. சிறு வயதில் இருந்த அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை தான் "இந்தி பேசுபவர்கள் வடநாட்டில் வசிப்பவர்களும் முஸ்லிம்களும்" என்பதாகும். இசுலாமியர்கள் பேசுவது உருது என்று கூட அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை. அதற்கேற்றாற் போல பள்ளியில் என்கூட படித்த பையன்களும் அவர்களுக்குள் உருதுவில் தான் பேசிக் கொள்வார்கள், அத்தோடு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறுவதற்கே மிகவும் சிரமப் படுவார்கள். இந்நிலையில் தான் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பட்டிமன்றங்களில் செல்வி பர்வீன் சுல்தானா(அப்போது அவர் மாணவியாகத் தான் இருந்தார்) அவர்கள் ராமனைப் பற்றியும், அனுமனைப் பற்றியும் கம்பராமாயணத்திலிருந்து மேற்கொள்கள் காட்டி விவாதம் செய்வதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப் பட்டேன். கவிக்கோ அப்துல் ரகுமான், சதாவதானி செய்கு தம்பி பாவலர் போன்ற மதத்தினை மீறிய தமிழ் மொழிப் பற்று கொண்ட அறிஞர்களைப் பற்றி பின்னாளில் தான் தெரிந்து கொண்டேன். உருதுவைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழை நன்றாகப் படிக்கக் கூடிய இசுலாமிய நண்பர்களும் பின்னாளில் அறிமுகம் ஆனார்கள். ஆயினும் நெடுநாளைய மூ(ம)டநம்பிக்கை தகர்வதற்கு காரணமாயிருந்தவர் பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்கள்( இவர் இப்போது சென்னை SIET கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்). விஜய் டிவியில் "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு சுட்டிகள்" நிகழ்ச்சியில் இவரை நடுவராகக் காணலாம்.

திருமதி.சுதா சேஷையன் என்றொரு பட்டிமனறப் பேச்சாளர் நினைவுக்கு வருகிறார். புள்ளிவிவரங்களோடு, மிகவும் தெளிவாகவும் அழகாகவும் விவாதம் செய்வார். ஆனால் ஜோக்கெல்லாம் அடிக்க மாட்டார், சீரியஸாகத் தான் பேசுவார். அவரை "ஸ்ரேயா அப்பா" ராஜா, பேராசிரியர் அறிவொளி(நீண்ட தாடி வைத்திருப்பார்) அவர்கள் எல்லாம் மிகச் சுலபமாக நகைச்சுவையாகப் பேசி அவருடைய வாதத்தை எதிர்த்து ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்று விடுவார்கள். ஆனால் சுதா சேஷையன் அவர்களுடைய வாதத்தில் எப்போதும் நேர்மை இருக்கும்.

மாலா மணியன்


தூர்தர்ஷனின் இரண்டாவது அலைவரிசை தொடங்கிய புதிதில் செவன்த் சேனல் நிறுவனத்தின் நிகழ்ச்சிகள் பலவும் ஒளிபரப்பாகும். அந்நிறுவனத்தைச் சேர்ந்த மாலா மணியன் அவர்கள் அக்காலத்தில் வெகு பிரபலம். நிகழ்ச்சித் தொகுப்பாளராக, பேட்டி காண்பவராக, தயாரிப்பாளராகப் பல பொறுப்புகளில் இருந்த இவர் "சின்னத்திரையின் புன்னகை அரசி" என்றால் அது மிகையாகாது.


மேலும் தெரிந்து கொள்ள


ரவி ராகவேந்தர்

இவர் சினிமாவில் பெரியளவு பேசப்படாதது கண்டு உண்மையிலேயே எனக்கு மிகவும் ஆச்சரியம் தான். எனக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சி நடிகர்களில் ஒருவர் இவர். Handsome, Dignified, Charismatic இவ்வாறு இவருக்குப் பல adjectiveகளைச் சொல்லலாம். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு தொடர் 'நிலாப் பெண்ணே'. அதில் இவருடைய பெயர் ரேவந்த். இவரைக் காதலிக்கும் ஒரு பெண் தன் முகம் காட்டாமல் இவருக்குத் தொலைப்பேசியில் பேசி தன்னை கண்டுபிடிப்பதற்காகப் பல புதிர்களைப் போடுவார். அப்புதிர்களை எல்லாம் விடுவித்து கடைசியில் அப்பெண்ணை அவர் சந்திப்பாரா என்பதே அப்பபதின்மூன்று வாரத் தொடரின் கதை. இவர் இப்போது ஜீ டிவியில் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' என்ற தொடரில் நடித்து வருகிறார்.

வி.வி.சுப்பிரமணியம்


'சிந்திக்க ஒரு நொடி', 'வினாடி வினா' ஆகியவை தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி வந்த குவிஸ் நிகழ்ச்சிகள். எனக்கு க்விஸ் போட்டிகளின் மீது ஆர்வம் ஏற்பட காரணமாயிருந்தது இந்நிகழ்ச்சிகள் தான். இந்நிகழ்ச்சிகள் சிலவற்றின் குவிஸ் மாஸ்டராகச் செயல்பட்டவர் திரு.வி.வி.சுப்பிரமணியம் அவர்கள். இவர் விவேகானந்தா கல்லூரியின் தாவரவியல் துறை பேராசிரியாராகவும் தலைவராகவும் இருந்து ஓய்வு பெற்றவர். இவர் பெயரை வைத்து கூகிளில் தேடியதில் அதே பேரில் வயலின் வாத்தியக் கலைஞர் ஒருவர் இருப்பதும் தெரிய வந்தது. இருவரும் ஒன்று தானா என்ற ஐயமும் மனதில் உள்ளது. இவருடைய க்விஸ் கேள்வி பதில்களை இன்றும் தி ஹிண்டுவின் "Young World" வார இதழில் காணலாம்.

ஹியூக் மற்றும் கொலீன் கேண்ட்சர்


Hugh and Colleen Gantzer - இவர்களைப் பற்றி பலருக்குத் தெரிந்திருக்காதென நினைக்கிறேன். ஏனெனில் இவர்கள் தொலைக்காட்சியில் நேரடியாகத் தோன்றியதில்லை. ஆங்கிலோ இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஹியூக் மற்றும் கொலீன் கேண்ட்சர் இவ்விருவரும் இந்தியாவின் தலைசிறந்த பயண எழுத்தாளர்கள். 1987-88 வாக்கில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான 'Looking Beyond with Hugh and Colleen Gantzer' தான் நான் தொலைக்காட்சியில் கண்ட முதல் பயண நிகழ்ச்சி. மகாபலிபுரத்தை முதன்முதலில் தொலைக்காட்சியில் கண்டது இந்நிகழ்ச்சியில் தான்.


மேலும் தெரிந்து கொள்ள


சுமந்த் சி.ராமன்



தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி வரும் 'BSNL Sports Quiz' பற்றிக் கேள்வி பட்டிருப்பீர்கள். அதை தொகுத்து வழங்குபவர் டாக்டர் சுமந்த் சி.ராமன் அவர்கள். இவரையும் டிவியில் வெகுநாட்களாகக் கண்டு வருகிறேன். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் விளையாட்டு வர்ணனைகள் திறம்படச் செய்வார். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்ற இவர், தற்போது டிசிஎஸ் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
BSNL Sports Quiz நிகழ்ச்சியில் இருமுறை நான் இவருடன் தொலைபேசியில் பேசியிருக்கிறேன்.
மேலும் தெரிந்து கொள்ள


நரோத்தம் பூரி


இவரை நியாபகம் இருக்குதுங்களா? இவரும் ஒரு டாக்டர் கம் வர்ணனையாளர் தான். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏதுமில்லாதிருந்த காலத்தில் தூர்தர்ஷனில் விளையாட்டு குறிப்பாக கிரிக்கெட்டின் ஆங்கில வர்ணனையாளராக இருந்தவர் இவர். இவரும் அனுபம் குலாட்டி என்ற பெயர் கொண்ட தாடிக்காரர் ஒருவரும் ஞாயிறு மாலைகளில் வரும் "World of Sport" நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார்கள். ESPN, Star Sportsஇல் வரும் ஆங்கில வர்ணனையாளர்களான ஹர்ஷா போக்லே, ரவி சாஸ்திரி போன்ற சிறந்த வர்ணனையாளர் என்று சொல்ல மாட்டேன். இருப்பினும் அக்காலத்தில் மிகப் பாடாவதியான இந்தி வர்ணனைகளுக்கு நடுவில் இவருடைய ஆங்கில வர்ணனை சற்று ஆறுதலாக இருக்கும்.


மேலும் தெரிந்து கொள்ள


டாம் ஆல்டர்


ஜூனூன் இந்தி தொடரில் 'கேஷவ் கல்சி' என்ற கதாபாத்திரத்திலும் பல இந்தி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் இவர். அமெரிக்கக் கிறித்தவ போதகர்களின் மகனாகப் பிறந்த இவர், இந்தியாவில் மசூரியில் தன்னுடைய இளமையைக் கழித்தார். மிகவும் சுத்தமான உருது மொழி பேசக் கூடிய இவர் நாடகங்களிலும் நடித்து வருகிறார். புகழின் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருந்த பதினைந்து வயது சச்சின் டெண்டுல்கரை 1988இல் இவர் எடுத்த நேர்காணல் சச்சினுடைய முதல் தொலைக்காட்சி நேர்காணல் ஆகும்.
மேலும் தெரிந்து கொள்ள

52 comments:

அபி அப்பா said...

மீ த பஷ்ட்டு!

அபி அப்பா said...

ஒரு மண்டலத்துக்குள்ள 108 தடவை மீ த பஷ்ட்டு போட்டா உடனே பாலோயர்ஸ் எண்ணிக்கை 100 ஐ தொடும்ம்ன்னு பிளாக்கானந்தா ஸ்வாமி சொன்னாருங்கோவ்!

அபி அப்பா said...

அதே போல நல்ல இண்பர்மேட்டிவ் பதிவை கும்மி அடிச்சு சந்தி சிரிக்க வச்சா அதே பாலோயர்ஸ் கழண்டுப்பாங்கன்னும் அதே ஸ்வாமிஜி சொன்னார்! அதனால மீ த்ஹ எஸ்கேப்!

அபி அப்பா said...

அதே போல நல்ல இண்பர்மேட்டிவ் பதிவை கும்மி அடிச்சு சந்தி சிரிக்க வச்சா அதே பாலோயர்ஸ் கழண்டுப்பாங்கன்னும் அதே ஸ்வாமிஜி சொன்னார்! அதனால மீ த்ஹ எஸ்கேப்!

மங்கை said...

///லூசாப்பா நீ..........//

ஜூனியருக்கும் தெரிஞ்சு போச்சா!!!! நாங்களும் அவருக்கு தெரியக்கூடாதுன்னு அடக்கிதான் வாசிச்சோம்..ஆனா அவரோட ஜீனியர்??. ரொம்ப ஷார்ப்.. கண்டுபிடிச்சிட்டார்..

எனிவேஸ்---இந்த பிரபலங்கள் கண்டிப்பா நல்லதொரு அறிவையும், தமிழ் உணர்வையும், பொழுதுபோக்கையும் நமக்கு ஆரோக்கியமான முறையில் அளித்தவர்கள் என்பதில் ஐயமில்லை..

நல்ல பதிவு கைப்ஸ்..வாழ்த்துக்கள்

Geetha Sambasivam said...

அருமையான நினைவுகள். நீளம் குறைக்கணும். அதைப் பல முறை சொல்லி விட்டேன்.

Geetha Sambasivam said...

//Looking Beyond with Hugh and Colleen Gantzer'//

எல்லாப் பயணங்களையும் விடாமல் பார்த்திருக்கோம்.
வெள்ளிக்கிழமை இரவில் வரும் The World This Week நிகழ்ச்சியையும், அப்போதிருந்த பிரனாய் ராயையும் விட்டுட்டீங்க! அதே போல் இரவு 10-00 மணிக்கப்புறம் வரும் ஹிந்திப் பட மலரும் நினைவுகள் பத்தியும் சொல்லலை. மத்தது எல்லாமும் நினைவிலே இருக்கு. இப்போதைய நிகழ்ச்சிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் பெருமூச்சுத் தான் வருது.

கைப்புள்ள said...

//அபி அப்பா said...
மீ த பஷ்ட்டு!
//

வாங்க அப்பாஜி!
நீங்க தான் ஃபர்ஸ்டு.
:)

கைப்புள்ள said...

//ஒரு மண்டலத்துக்குள்ள 108 தடவை மீ த பஷ்ட்டு போட்டா உடனே பாலோயர்ஸ் எண்ணிக்கை 100 ஐ தொடும்ம்ன்னு பிளாக்கானந்தா ஸ்வாமி சொன்னாருங்கோவ்!//

அப்படீங்கறீங்க? அப்ப நானும் ஃபாலோ பண்ணிப் பாத்துடறேன்.
:)

கைப்புள்ள said...

//அதே போல நல்ல இண்பர்மேட்டிவ் பதிவை கும்மி அடிச்சு சந்தி சிரிக்க வச்சா அதே பாலோயர்ஸ் கழண்டுப்பாங்கன்னும் அதே ஸ்வாமிஜி சொன்னார்! அதனால மீ த்ஹ எஸ்கேப்!//

இது பதிவைப் படிச்சிட்டுப் போட்டதா இல்லை டெம்ப்ளேட் பின்னூட்டமா?
:)

கைப்புள்ள said...

//ஜூனியருக்கும் தெரிஞ்சு போச்சா!!!! நாங்களும் அவருக்கு தெரியக்கூடாதுன்னு அடக்கிதான் வாசிச்சோம்..ஆனா அவரோட ஜீனியர்??. ரொம்ப ஷார்ப்.. கண்டுபிடிச்சிட்டார்..//

வாங்க மங்கை மேடம்,
வரலாற்று உண்மைகளை நெடுங்காலம் மறைச்சி வைக்க முடியாதுங்களே. என்னிக்கிருந்தாலும் ஒரு நாள் தெரிஞ்சி தானே ஆகனும். என்னோட தவப்புதல்வியை ஷார்ப்னு சொன்னதுக்கும் நன்றிங்க மேடம் :)

//எனிவேஸ்---இந்த பிரபலங்கள் கண்டிப்பா நல்லதொரு அறிவையும், தமிழ் உணர்வையும், பொழுதுபோக்கையும் நமக்கு ஆரோக்கியமான முறையில் அளித்தவர்கள் என்பதில் ஐயமில்லை..

நல்ல பதிவு கைப்ஸ்..வாழ்த்துக்கள்//

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி மேடம்.

கைப்புள்ள said...

//அருமையான நினைவுகள்.//

நன்றி மேடம்.

//நீளம் குறைக்கணும். அதைப் பல முறை சொல்லி விட்டேன்.//
திருந்தாத ஜென்மம் மேடம். கெடந்துட்டுப் போறான் விடுங்க.

பதிவு எழுதறதுக்கு நேரம் கெடைக்கறதே ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால கொஞ்சம் வாய்ப்பு கெடச்சாலும் எவ்வளவு முடியுதோ அவ்வளவு எழுதி தள்ளிடறேன்.

கைப்புள்ள said...

////Looking Beyond with Hugh and Colleen Gantzer'//

எல்லாப் பயணங்களையும் விடாமல் பார்த்திருக்கோம்.//

சூப்பர் மேடம்.

//
வெள்ளிக்கிழமை இரவில் வரும் The World This Week நிகழ்ச்சியையும், அப்போதிருந்த பிரனாய் ராயையும் விட்டுட்டீங்க! அதே போல் இரவு 10-00 மணிக்கப்புறம் வரும் ஹிந்திப் பட மலரும் நினைவுகள் பத்தியும் சொல்லலை. மத்தது எல்லாமும் நினைவிலே இருக்கு. இப்போதைய நிகழ்ச்சிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் பெருமூச்சுத் தான் வருது.//

ஹ்ம்ம்ம்...எனக்கும் தான் பெருமூச்சு. அதனால தானே இந்தப் பதிவு.

ஆயில்யன் said...

பதிவை படிச்சுட்டேன் ஸோ பின்னூட்டம் போட தயாரகிக்கிறேன் ரைட்டா... ! :)))

(அபி அப்பா மாயாவரம்ன்னாலே கண்ணுல கேள்விக்குறி வைச்சுத்தான் பாக்குறாங்க நாம என்ன பண்ற்து !!! )

ஆயில்யன் said...

//அடுத்த பாப்பா ஓடியா". இது கிட்டத்தட்ட 20+ ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்தது, ஆனால் இன்றளவும் எங்கள் வீட்டில் மிகப் பிரபலமான வசனம் //

தமிழ் பேச்சு சொல் பிரயோகம் போன்ற விசயங்களில் இவரை பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டோமோ அந்த காலக்கட்டத்தில் என்று ஏங்க வைத்தவரும் கூட...!

தொடர்ந்து தன் பணி செய்து வருகிறார்

வாழ்த்துக்கள் :)

ஆயில்யன் said...

//சைவ சமயப் பாடல்களை இவர் தூர்தர்ஷனில் சில நிகழ்ச்சிகளில் பாடக் கேட்டிருக்கிறேன். அதற்கென்றே ஒரு நிகழ்ச்சி இருந்தது தூர்தர்ஷனில்.//

சொற்பொழிவுகளில் அதிகம் நான் கண்டதுண்டு! பாடல்களோடு கோவில்கள் பற்றியும் கூறி சில நிகழ்ச்சிகள் பார்த்திருக்கிறேன்!

ஆயில்யன் said...

யேயப்பாடியோவ்வ்வ்வ் எம்புட்டு பேரை ஞாபகம் வைச்சிருக்கீங்க !

சூப்பரூ!


புலவர் கீரன் பற்றி கூறவேண்டுமெனில் அவர் சொற்பொழிவை நேரில் கேட்டிராவிட்டாலும்,ஆடியோக்களில் பெரிய புராணத்தை பலமுறை கேட்டிருக்க்கிறேன்!

சைவ சமய சிறப்புக்களினை இன்றைக்கும் கூட அவரின் குரலோசையில் கேட்பது மிக விருப்பமான விசயம்!

ஆயில்யன் said...

//ஆ சுட்டிகளைக் கொறைச்சு ஆலோசிச்சால் மதி///


ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

(இந்த எக்ஸ்ட்ரா சவுண்டுக்கு அர்த்தம் புரியாட்டி எண்ட தெய்வமே ஞான் எந்தா செய்யும்:)

ஆகாய நதி said...

நல்லதொரு நினைவுமீட்டல் மற்றும் அறியாத சிலரையும் அறிந்து கொண்டேன்... :)

Anonymous said...

நரோத்தம் பூரியோட ஸ்போர்ட்ஸ் க்விஸும் நஸ்ருதீன் ஷா வோட டேர்னிங் பாயின்டும். அந்தக் காலத்துல வந்த நல்ல நிகழ்ச்சிகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப நல்லா இருக்கு பதிவு எங்களுக்கும் எல்லாரையும் திரும்ப நினைச்சுக்க வசதியா இருந்தது..

கவிதா | Kavitha said...

கைப்ஸ் நல்ல கலக்ஷ்ன்ஸ்.!! நன்றி

பர்வின் சுல்தானா மட்டும் என்னவோ.. சுத்தமாக மறந்து போச்சி... படித்த பிறகும் ரீகால் செய்ய முடியவில்லை..

ம்ம் எனக்கு ஹோபனா ரவி யை மறக்கவே முடியாது.. :)

Geetha Sambasivam said...

//ஹோபனா //

hihihi Kavitha, yaru ithu puthusa irukke? :P

கைப்புள்ள said...

//பதிவை படிச்சுட்டேன் ஸோ பின்னூட்டம் போட தயாரகிக்கிறேன் ரைட்டா... ! :)))//
வாங்க ஆயில்யன்,
ஏன் இப்படி முன்னேற்பாடு எல்லாம்?
:)

//
(அபி அப்பா மாயாவரம்ன்னாலே கண்ணுல கேள்விக்குறி வைச்சுத்தான் பாக்குறாங்க நாம என்ன பண்ற்து !!! )//

ஆயில்யன்...எல்லா மாயவரக் காரங்களும் அபி அப்பா ஆக முடியாது. அபி அப்பா ஒரு இடத்துல நிக்காம துறுதுறுன்னு ஓடி வெளையாடற புள்ளைங்கிறதுனால தான் அவருக்கும் மட்டும் அந்த கேள்வி. இதான் சாக்குன்னு நீங்க அபிஅப்பா லெவலுக்கு உங்களை நீங்களே உயர்த்திக்க வேணாம். சொல்லிட்டேன் ஆமா :)

கைப்புள்ள said...

////அடுத்த பாப்பா ஓடியா". இது கிட்டத்தட்ட 20+ ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்தது, ஆனால் இன்றளவும் எங்கள் வீட்டில் மிகப் பிரபலமான வசனம் //

தமிழ் பேச்சு சொல் பிரயோகம் போன்ற விசயங்களில் இவரை பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டோமோ அந்த காலக்கட்டத்தில் என்று ஏங்க வைத்தவரும் கூட...!

தொடர்ந்து தன் பணி செய்து வருகிறார்

வாழ்த்துக்கள் :)//

ஆமாம் ஆயில்யன், நீங்க சொல்றது சரி தான்.
:)

கைப்புள்ள said...

//சொற்பொழிவுகளில் அதிகம் நான் கண்டதுண்டு! பாடல்களோடு கோவில்கள் பற்றியும் கூறி சில நிகழ்ச்சிகள் பார்த்திருக்கிறேன்!//

ஆமாம். ஆனா அந்த நிகழ்ச்சி பேர்கள் தான் ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.
:(

கைப்புள்ள said...

//யேயப்பாடியோவ்வ்வ்வ் எம்புட்டு பேரை ஞாபகம் வைச்சிருக்கீங்க !

சூப்பரூ! //

நன்றிங்க ஆயில்யன்.


//
புலவர் கீரன் பற்றி கூறவேண்டுமெனில் அவர் சொற்பொழிவை நேரில் கேட்டிராவிட்டாலும்,ஆடியோக்களில் பெரிய புராணத்தை பலமுறை கேட்டிருக்க்கிறேன்!

சைவ சமய சிறப்புக்களினை இன்றைக்கும் கூட அவரின் குரலோசையில் கேட்பது மிக விருப்பமான விசயம்!//

இன்னொரு விஷயம் சொல்றேன் கேளுங்க. புலவர் கீரனும் மாயவரத்துக் காரர் தான்.
:)

கைப்புள்ள said...

////ஆ சுட்டிகளைக் கொறைச்சு ஆலோசிச்சால் மதி///


ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

(இந்த எக்ஸ்ட்ரா சவுண்டுக்கு அர்த்தம் புரியாட்டி எண்ட தெய்வமே ஞான் எந்தா செய்யும்:)
//

சேட்டா, ஏதானுமிது? மனசிலாயில்லே

கைப்புள்ள said...

//நல்லதொரு நினைவுமீட்டல் மற்றும் அறியாத சிலரையும் அறிந்து கொண்டேன்... :)//

வாங்க ஆகாயநதி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

கைப்புள்ள said...

//நரோத்தம் பூரியோட ஸ்போர்ட்ஸ் க்விஸும் நஸ்ருதீன் ஷா வோட டேர்னிங் பாயின்டும். அந்தக் காலத்துல வந்த நல்ல நிகழ்ச்சிகள்.
//

வாங்க வடகரை வேலன்,
இந்த டேர்னிங் பாயிண்ட் நிகழ்ச்சியை ஆரம்பத்தில் சில காலம் கிரிஷ் கர்னாட் அவர்கள் நடத்தி வந்தார்.

கைப்புள்ள said...

//ரொம்ப நல்லா இருக்கு பதிவு எங்களுக்கும் எல்லாரையும் திரும்ப நினைச்சுக்க வசதியா இருந்தது..//

உங்க வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி மேடம்.

கைப்புள்ள said...

//கைப்ஸ் நல்ல கலக்ஷ்ன்ஸ்.!! நன்றி

பர்வின் சுல்தானா மட்டும் என்னவோ.. சுத்தமாக மறந்து போச்சி... படித்த பிறகும் ரீகால் செய்ய முடியவில்லை..

ம்ம் எனக்கு ஹோபனா ரவி யை மறக்கவே முடியாது.. :)

//

வாங்க கவிதா,
உங்க வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. பர்வீன் சுல்தானா இப்போ விஜய் டிவில வர்றாங்க. ஒரு தடவை அதுலயும் பாருங்க...நியாபகம் வந்தாலும் வரலாம்.

செய்தி வாசிக்கறதுல ஸ்டார்னா அது ஷோபனா ரவி தான். அதுனால அவங்க நினைவுகள் இன்னும் பல பேருக்கு இருக்கும்.
:)

கைப்புள்ள said...

////ஹோபனா //

hihihi Kavitha, yaru ithu puthusa irukke? :P///

ஒரு எழுத்தை விட்டுடு எழுதுனதுக்கு இம்புட்டு சிரிப்பா? சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு?
:)

Geetha Sambasivam said...

சின்னப்புள்ளங்க, சின்னப்புள்ளத் தனமாத் தானே சிரிப்பாங்க? :)))))))))))))))))))))

கைப்புள்ள said...

//சின்னப்புள்ளங்க, சின்னப்புள்ளத் தனமாத் தானே சிரிப்பாங்க? :)))))))))))))))))))))//

இதெல்லாம் ரொம்ப ஓவரூ. இப்படியெல்லாம் பொய் பேசுனா "கண்ணன் வருவான் கண்ணைக் குத்துவான்"
:)

சந்தனமுல்லை said...

ஆகா...கலக்கலான நினைவு மீட்டல்! நன்னன் மறக்கவே முடியாது...அதுவும் அவர் பேசற ஸடைலை அப்படியே மிமிக்ரி செய்வாங்க, என் கஸின்ஸ்!

//சாரதா நம்பி ஆரூரன் // இப்போவும் ஞாபகம் இருக்கு..அந்த கணீர் தீர்க்கமான குரல்!

//ஹியூக் மற்றும் கொலீன் கேண்ட்சர், ரவி ராகவேந்தர்// எனக்குப் புதுசு! உங்க பதிவு மூலமாத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்!

மிக்க நன்றி கைப்ஸ் அண்ணா, நல்லதொரு பதிவைக் பகிர்ந்தமைக்கு!

அதுவும் உங்க பதிவுன்னாலே, நீங்க கொடுக்கற அந்த நுட்பமான செய்திகள்தான் - கேக் மேலே செர்ரி!

ambi said...

அருமையான பதிவு கைப்ஸ். நல்ல வாசிப்பனுபவம் கிடைக்கும் உங்க பதிவுல. :)

ரவி ராகவேந்தர் ரஜினியின் மச்சான். :)

ரேவந்த் தொடர் செம த்ரில்லிங்கா இருக்கும், நானும் தொடர்ந்து பாத்தேன். விசு படங்களில் இவர் தான் ஆஸ்தான மகன் கேரக்டர். :))


//காலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இவர் தொகுத்து வழங்கி வந்த ஏவிஎம்மின் மங்கையர் சாய்ஸ் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டுச் செல்வது வழக்கம்.//

இப்படியேல்லாம் நீங்க பிட்ட போட்டா அண்ணி வேணா அப்பாவியா நம்பலாம். ஒழுங்கா மத்த சேனல் பேரையும் சொல்லுங்க. மங்கையர் சாய்ஸாமுல்ல. தோடா! :))

ambi said...

பதிவின் நீளத்தை குறைக்கனும்னு யாரு யாரை பாத்து சொல்றதுன்னு ஒரு விவஸ்த்தை இல்லாம போச்சு. :))

எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க, ஈயத்தை பாத்து ஈளிச்சதாம் பித்தளை. :))

சின்ன பிள்ளையா?

பொய் பேசினா கண்ணன் வருவான் கண்ணை மட்டுமுல்ல மூக்கையும் சேர்த்து குத்துவான். :p

கைப்புள்ள said...

//ஆகா...கலக்கலான நினைவு மீட்டல்! நன்னன் மறக்கவே முடியாது...அதுவும் அவர் பேசற ஸடைலை அப்படியே மிமிக்ரி செய்வாங்க, என் கஸின்ஸ்! //

வாங்க முல்லை!
உண்மை தான். மிமிக்ரிக்கு நல்ல ஸ்கோப் தருவார் நன்னன் ஐயா :)

//மிக்க நன்றி கைப்ஸ் அண்ணா, நல்லதொரு பதிவைக் பகிர்ந்தமைக்கு!

அதுவும் உங்க பதிவுன்னாலே, நீங்க கொடுக்கற அந்த நுட்பமான செய்திகள்தான் - கேக் மேலே செர்ரி!//

மிக்க நன்றிங்க. உங்க பின்னூட்டத்தைப் படிக்கிறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.
:)

கைப்புள்ள said...

//அருமையான பதிவு கைப்ஸ். நல்ல வாசிப்பனுபவம் கிடைக்கும் உங்க பதிவுல. :)
//

அப்படீங்கறீங்க? அண்ணன் அம்பிக்கு ஒரு கோலி சோடா கொண்டாங்கப்பா :)

//
ரவி ராகவேந்தர் ரஜினியின் மச்சான். :)
//

ஆமாம் தெய்வ மச்சான். நேத்து தான் மறுபடியும் தெனாலி பாத்தேன்.

//
ரேவந்த் தொடர் செம த்ரில்லிங்கா இருக்கும், நானும் தொடர்ந்து பாத்தேன். விசு படங்களில் இவர் தான் ஆஸ்தான மகன் கேரக்டர். :))//

கடைசில அந்த பொண்ணு செத்துப் போயிடும். அந்த தொடர் கன்னடத்துல ஒரு படமாவே வந்துச்சு.


//காலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இவர் தொகுத்து வழங்கி வந்த ஏவிஎம்மின் மங்கையர் சாய்ஸ் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டுச் செல்வது வழக்கம்.//

இப்படியேல்லாம் நீங்க பிட்ட போட்டா அண்ணி வேணா அப்பாவியா நம்பலாம். ஒழுங்கா மத்த சேனல் பேரையும் சொல்லுங்க. மங்கையர் சாய்ஸாமுல்ல. தோடா! :))
//

ஏம்ப்பா இப்படி? நீங்க என்ன எட்டப்பனுக்குச் சொந்தக்காரரா? ஏன்??? இந்தூர்ல தமிழை விட மலையாளச் சேனல்கள் தான் அதிகம். அதுக்குன்னு கைரளி டிவில மாலை வேளைகள்ல மலையாள சினிமா பாட்டுகளைத் தொகுத்து வழங்கற அந்த நேந்திரம்பழத்தைப் பத்தியெல்லாமா எழுத முடியும்?
:))

கவிதா | Kavitha said...

ஷோபனா ரவி..

கிதாஜி இப்ப ஒகே யா??

ஷா - ஹா வா மாறிப்போச்சி... வுட்டுடுங்கோ.. ! :)

Geetha Sambasivam said...

@அம்பி,

//ஈயத்தை பாத்து ஈளிச்சதாம் பித்தளை. :))//

உங்களுக்கு ஆப்பிச்சிலே ஆணி அதிகம்னா என்னைப் பார்த்து புகை விடாதீங்க! :P:P:P

//சின்ன பிள்ளையா?//
அப்புறம் வேறே என்னவாம்??

//பொய் பேசினா கண்ணன் வருவான் கண்ணை மட்டுமுல்ல மூக்கையும் சேர்த்து குத்துவான். :p//
உங்க மூக்கைத் தானே குத்தட்டும், குத்தட்டும், பார்த்து ரசிக்கிறேன்.

Geetha Sambasivam said...

@கவிதா, மறுபடியும் தப்பு.

கீதாஜி! னு எழுதி இருக்கணுமே. ஹையா ஜாலி, இன்னிக்கு நல்ல நல்ல விஷயமாக் கிடைக்குதே!

கவிதா | Kavitha said...

@கவிதா, மறுபடியும் தப்பு.

கீதாஜி! னு எழுதி இருக்கணுமே. ஹையா ஜாலி, இன்னிக்கு நல்ல நல்ல விஷயமாக் கிடைக்குதே!

//

ஹா ஹா. .ஸிஸ்டம் கீபோர்டு ஏதோ சதி செய்து போலவே !! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!

சுரேகா.. said...

அற்புத நினைவு மீட்டல்கள்!

இன்னும் நிறைய பேர் ஞாபகத்துக்கு வந்தார்கள்.

வோர்ல்ட் திஸ் வீக் நடத்தும் ப்ரணாய் ராய்.

செய்திகளை சிறப்பாக வாசிக்கும் சுனித் டாண்டன்.

தமிழில், ஈரோடு தமிழன்பன், வரதராஜன், ஷோபனா ரவி, நிஜந்தன்,சந்தியா ராஜகோபால்

தொடர்களில், பிரபலமாக இருந்த நீனா..(நீலா மாலா) அடடே மனோகர் என எனக்கும் ஞாபக அலைகள் நீள்கிறது.

நல்ல பதிவு ! வாழ்த்துக்கள்!

தீப்பெட்டி said...

//சுரேகா said,

அற்புத நினைவு மீட்டல்கள்!//

ரிப்பீட்டுய்....

malar said...

அருமையான நினைவுகள்

ரேவதி சங்கரன் இவர் ரொம்ப கலகலப்பு .இவரை பார்க்கும் போதெல்லாம் நம்ம வீட்டிலும் இப்படி ஒருவர் இருந்தால் நல்ல இருக்கும் என்று நினைத்ததுண்டு .

பரமார்த்தகுரு said...

please add these characters also

1. renuha sahane
2.mandira bedi
3. pranoy roi
4.Varthai voilayattu aanantha geehan
5. rego
6. mala.E
7. metro priya
8. uma padmanabhan
9. nijanthan
10. thamilanban
11. varatha rajan
12. fathima babu
13. sathya rajagopal
14. naseema chikandar
15. munnottam nadathupavar

கைப்புள்ள said...

//அற்புத நினைவு மீட்டல்கள்!

இன்னும் நிறைய பேர் ஞாபகத்துக்கு வந்தார்கள்.

வோர்ல்ட் திஸ் வீக் நடத்தும் ப்ரணாய் ராய்.

செய்திகளை சிறப்பாக வாசிக்கும் சுனித் டாண்டன்.

தமிழில், ஈரோடு தமிழன்பன், வரதராஜன், ஷோபனா ரவி, நிஜந்தன்,சந்தியா ராஜகோபால்

தொடர்களில், பிரபலமாக இருந்த நீனா..(நீலா மாலா) அடடே மனோகர் என எனக்கும் ஞாபக அலைகள் நீள்கிறது.

நல்ல பதிவு ! வாழ்த்துக்கள்!

//

உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சுரேகா சார்.

கைப்புள்ள said...

////சுரேகா said,

அற்புத நினைவு மீட்டல்கள்!//

ரிப்பீட்டுய்....//

வருகைக்கு மிக்க நன்றி தீப்பெட்டி.

கைப்புள்ள said...

//அருமையான நினைவுகள்

ரேவதி சங்கரன் இவர் ரொம்ப கலகலப்பு .இவரை பார்க்கும் போதெல்லாம் நம்ம வீட்டிலும் இப்படி ஒருவர் இருந்தால் நல்ல இருக்கும் என்று நினைத்ததுண்டு .//

வாங்க மலர்,
ஆமாங்க. ரேவதி சங்கரன் மேடம் ரொம்ப கலகலப்பா பேசுவாங்க. எனக்கும் ரொம்ப பிடிக்கும் அவங்களை.
:)

கைப்புள்ள said...

//please add these characters also

1. renuha sahane
2.mandira bedi
3. pranoy roi
4.Varthai voilayattu aanantha geehan
5. rego
6. mala.E
7. metro priya
8. uma padmanabhan
9. nijanthan
10. thamilanban
11. varatha rajan
12. fathima babu
13. sathya rajagopal
14. naseema chikandar
15. munnottam nadathupavar

//

பரமார்த்த குரு...சூப்பருங்க. ஆனந்த கீதன், மெட்ரோ ப்ரியா இந்த பேரையெல்லாம் மறந்தே போயிட்டேன். இப்போ இவங்க என்ன பண்ணறாங்களோ? இ.மாலா இன்னும் மக்கள் தொலைக்காட்சியில் வந்து கொண்டு இருக்கிறார்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.