அன்பு மகள் அர்ச்சனாவிற்கு,
உன் தந்தை உனக்காக எழுதும் இரண்டாம் கடிதம் இது. 'Letters from a Father to his Daughter'னு நம்ம நாட்டோட முதல் பிரதமர் பண்டித நேரு அவரோட மகளான இந்திரா பிரியதர்ஷினிக்கு(இந்திரா காந்தி) நிறைய கடிதங்கள் எழுதிருக்காரு. ஆனா என் கிட்ட நீ அந்த லெவலுக்கு எல்லாம் எதையும் எதிர்பாக்காதே. சரி...இப்போ அதை ஏன் என்கிட்ட சொல்றீங்கன்னு கேக்கறியா? நான் இதுக்கு மேல, நேரு போல பெரிய ஆளு ஆகப் போறதில்லை. ஒரு வேளை நீ வருங்காலத்துல இந்திரா காந்தி மாதிரி உலகத்தவரால் பேசப்படற ஒரு பெண்ணா ஆனால், அப்போ உன் நைனாவான என் பேரும் பேசப்படும்ங்கிற ஒரு நப்பாசை தான்.
இந்த லெட்டர் நான் உனக்கு எழுதிருக்கேன்னு தானே கேக்கறே? உனக்கு வந்த ரெண்டு லெட்டர்களைப் பத்திச் சொல்றதுக்குத் தான் நான் இந்த லெட்டரை எழுதறேன். என்னது? லூசாப்பா நீயா? அதுல என்ன சந்தேகம் உனக்கு. ஜார்கண்ட மாநிலம் ராஞ்சியில இருக்கற உங்க சின்ன சித்தப்பா ஹேமந்த் அவங்க மகளுக்காகன்னு ரெண்டு கடுதாசி போட்டுருக்காரு. உங்க பெரிய சித்தப்பா முரளிக்கும் எனக்கும் மூனு வயசு வித்தியாசம், ஆனா உங்க சின்ன சித்தப்பாவுக்கும் எனக்கும் பதினெட்டு வயசு வித்தியாசம். ஏன்னா உங்க சின்ன பாட்டிக்கும்(அதாவது ஹேமந்த் சித்தப்பாவோட மம்மி, அதாவது எங்க சித்தி) எனக்குமே பதினோரு வயசு தான் வித்தியாசம். இப்ப எட்டாவது பாஸ் பண்ணிட்டு ஒன்பதாவது போறாரு உங்க சின்ன சித்தப்பு. நீ உங்க அம்மா வயித்துல இருக்கும் போது உங்க ரெண்டு செவ்வாழை சித்தப்புக்களும் கூட்டிக்கிட்டு காடு மேடெல்லாம் சுத்தறதுக்கு ஒரு 'பருத்தி வீரன்' தான் மகனா வேணும்னு கேட்டாங்க.
ஆனா அவங்க எதிர்பார்த்த 'பருத்தி வீரன்' ஒரு கேர்ளா(girl) பொறந்ததுக்கு அப்புறமாவும் அவங்க உன் மேல வைக்கிற அன்புக்கு எந்த குறைவும் இல்லை. உங்க பெரிய செவ்வாழை சித்தப்பு காலைல உன்னை தூக்கி வச்சிக்கிட்டு வேடிக்கை வெளையாட்டு எல்லாம் காட்டறாரு. நீ ரொம்ப விரும்பி வெளையாடற ட்ரம்ஸ் வாசிக்கிற யானை பொம்மையும் வாங்கிட்டு வந்து குடுத்தாரு. மகள் உக்காந்து சாப்பிடறதுக்காக எங்கிருந்தோ அலைஞ்சு திரிஞ்சு உனக்காக குட்டி சைஸ்ல ஒரு ஈஸி சேர் வாங்கிட்டு வந்தாரு. உங்க சின்ன செவ்வாழை சித்தப்பு, எந்த கடைக்குப் போனாலும் அர்ச்சனாவுக்கு அர்ச்சனாவுக்குன்னு கவுன், வளையல், க்ளிப்னு என்னென்னமோ தேடித் தேடி வாங்கி போன தடவை ஆனுவல் லீவுக்குச் சென்னைக்கு வந்தப்போ உனக்காக குடுத்துட்டு போயிருக்காரு. இப்ப... உனக்காக ஜார்கண்ட்லேருந்து 'தமிழ்லேயே' ரெண்டு லெட்டர் எழுதி அனுப்பிருக்காரு. ஏன் 'தமிழ்லேயே'ன்னு இழுக்கறேன்னு பாக்கறியா? உங்க சித்தப்பு எல்கேஜி படிக்கும் போது சென்னையில இருந்தாரு... அப்போ மட்டும் தான் பள்ளிக்கூடத்துல தமிழ் படிச்சாரு. இப்போ அவரு படிக்கிறது எல்லாம் கேந்திரிய வித்யாலயா ஸ்கூல்ல. அங்கே அவர் தமிழ் ஒரு பாடமா இல்லை. இந்தி மட்டும் தான். தமிழ் அவரு எப்படியோ கத்துக்கிட்டு உனக்காக ரெண்டு கடுதாசி போட்டுருக்காரு. அவரு எழுதிருக்கற லெட்டரை உனக்குப் புரியற மாதிரி கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை எல்லாம் குறைச்சு இன்னொரு தடவை நான் எழுதிருக்கேன். Girl Child Day, ராணி வேலு நாச்சியார் அப்படின்னு உனக்கு கடுதாசி அனுப்பறதுக்கு First Day Coverகளைத் தேடித் தேடி வாங்கிருக்காரு சின்ன சித்தப்பு.
கடிதம் 1
20 மார்ச் 09, வெள்ளி
To
Dr. அர்ச்சனா ராஜ்
அன்பு மகள் அர்ச்சனாவுக்கு சித்தப்பு ஹேமந்த் எழுதுவது. நான் இங்கு நலம். நீ உந்தன் பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா மற்றும் செவ்வாழை சித்தப்பு நலமா? இங்கே உந்தன் சின்னபாட்டி, நான் மற்றும் அத்தை நலம். உன்னை விசாரிக்க தான் இந்த கடிதம் எழுதியிருக்கிறேன்.
- ஹேமந்த் சித்தப்பா
Note : This was my first letter in தமிழ்.
சிரிக்கவும்.
Happy Family
Daddy, Amma, Periya Anna, Anni, Chinna Anna, Archanaa, Rani, Dhava, Hemu
கடிதம் 2
01 ஏப்ரல் 09
டு
டாக்டர்.அர்ச்சனா ராஜ்
அன்புள்ள மகளுக்கு குட்டி சித்தப்பா எழுதுவது. நான் இங்கே நலம். நீ அங்கே நலமா. ஏப்ரல் 1ஆம் தேதிக்கு தேவையான ஒரு சில குறிப்பிட்ட செய்தி அது என்னவென்றால் எப்பவும் முட்டாள் ஆவக் கூடாது மற்றும் முட்டாள் ஆக்கக் கூடாது. இது தான் என் வேண்டுகோள்.
பாட்டி, தாத்தா, அப்பா, அம்மா, பெரிய சித்தப்பா மற்றும் அனைவரையும் கவனமாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.
அன்புடன்
ஹேமந்த்
அதோட இந்தியில வேற உனக்கு அன்பும் வாழ்த்துகளும் சொல்லிருக்காரு.
உனக்காக உங்க சித்தப்பு செஞ்சி அனுப்பன க்ராஃப்ட் ஐட்டம்
போன தடவை டாக்டர் கிட்ட போனப்போ டிவில வர்ற இந்த "Rota Virus Vaccination" பத்தி நானும் உங்கம்மாவும் கேட்டோம். அது என்ன நான் கேள்விப்பட்டதில்லையேன்னு டாக்டரே சொன்னாங்க. உனக்கு அந்த ரோட்டா வைரஸ் தடுப்பூசி மறக்காம போடச் சொல்லி உங்க சித்தப்பு நியாபகப் படுத்திருக்காரு.
இது 12 ஏப்ரல் 2009 அன்னிக்கு எடுத்தது - உங்க பாட்டி வாங்கிக் குடுத்த கவுனில்.
இது 18 ஏப்ரல் 2009 அன்னிக்கு எடுத்தது - குளிச்சு முடிச்சிட்டு ஃப்ரெஷா. உனக்கு இன்னும் நிக்க வராததுனால சேர்ல சாய்ச்சு நிக்க வச்சி இந்த ஃபோட்டோ எடுத்தோம்.
19 ஏப்ரல் 2009 அன்னிக்கு மாலை கப்பி மாமா உனக்கு வாங்கி குடுத்த Sphagetti Tops மற்றும் Overall போட்டு எடுத்த படம்.
Monday, April 20, 2009
இப்படிக்கு செவ்வாழை சித்தப்பு...
Subscribe to:
Post Comments (Atom)
33 comments:
நிற்கவே சிரமப்படுகிற சிறு பிள்ளைக்கு டாக்டர் அடைமொழி. அப்புறம் இந்தியில் வாழ்த்து.
உங்கள் அன்புக்கு ஒரு அளவே.......
அர்ச்சனா ராஜ் வாழ்க!
Kalakal
குட்டி சித்தப்பு கடிதங்கள் கலக்கல் தல ;-))
தேவதை குட்டி சூப்பரு...கப்பி மாமா துணியும் சூப்பரு ;)
//நிற்கவே சிரமப்படுகிற சிறு பிள்ளைக்கு டாக்டர் அடைமொழி. அப்புறம் இந்தியில் வாழ்த்து. உங்கள் அன்புக்கு ஒரு அளவே.......//
வாங்க சுல்தான் சார்,
இரண்டுமே அர்ச்சனாவோட பாசக்கார சின்ன சித்தப்புவோட வேலை :)
//
அர்ச்சனா ராஜ் வாழ்க!//
உங்கள் நல்வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சார்.
//Kalakal//
நன்றிப்பா பாலாஜி. ப்ளாக் மூலமா லெட்டர் எழுதற இந்த ஒரிஜினல் ஐடியா உன்னோடது தான். அதுக்காக நான் நன்றி கடன் பட்டிருக்கேன்.
:)
//குட்டி சித்தப்பு கடிதங்கள் கலக்கல் தல ;-))
தேவதை குட்டி சூப்பரு...கப்பி மாமா துணியும் சூப்பரு ;)//
வாங்க கோபி,
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிங்க.
//சின்ன பாட்டிக்கும்(அதாவது ஹேமந்த் சித்தப்பாவோட மம்மி, அதாவது எங்க சித்தி) எனக்குமே பதினோரு வயசு தான் வித்தியாசம்.//
எங்க கடைசி சித்தி, எங்க ம.பா.வை விட நாலு வயசு சின்னவங்க. என்னை விட அப்போ எத்தனை வயசு பெரியவங்க?? அதைச் சொல்லுங்க பார்ப்போம். எங்க சித்திக்கும், எங்க அண்ணாவுக்கும் ஒன்றரை வயசே வித்தியாசம். சரியா? கணக்குப் போட்டு முடிங்க. :)))))))))))
அதை விடக் கூத்து சித்தி பெண்ணும், என்னோட பெண்ணுக்கும் இரண்டே வயசு வித்தியாசம். சித்தி பையரை விட எங்க பையர் சின்னவர்.
வாழ்த்தெல்லாம் நல்லா இருக்கு. குழந்தையைக் கஷ்டப் படுத்தி நிக்க வச்சு ஃபோட்டோவெல்லாம் எடுத்திருக்கீங்க. குழந்தை ரொம்ப சாதுவா இருப்பா போல, அவங்க அம்மா மாதிரி. சுத்திப் போடச் சொல்லுங்க மறக்காம.
செம கலக்கல் கடிதம்! ரொம்ப ரசித்தேன்!
//அப்போ உன் நைனாவான என் பேரும் பேசப்படும்ங்கிற ஒரு நப்பாசை தான். //
ஹிஹி..பாம்பின் கால்!!
ஆகா..அர்ச்சனா-வோட சின்ன செவ்வாழை சித்தப்பு கலக்கறாரு..
//Note : This was my first letter in தமிழ்.
சிரிக்கவும்.// LOL! so cute!
செம மெசேஜ் வேற கொடுத்துருக்காரு...:-))
/அது என்னவென்றால் எப்பவும் முட்டாள் ஆவக் கூடாது மற்றும் முட்டாள் ஆக்கக் கூடாது. இது தான் என் வேண்டுகோள். //
ஹேமந்த் ரொம்ப க்ரியேட்டிவ்..என்னோட வாழ்த்துகள்!
அர்ச்சனா ராஜ்-க்கு எங்கள் வாழ்த்துகள்! :-)
லெட்டர்-ல உங்க போர்ட்ரேட் அசத்தலா இருக்கு..ஒட்டகம் போட்டோல பார்த்த மாதிரியே! ஹிஹி!
அடடா லெட்டர் எல்லாம் கலக்கலா இருக்கு.
குழந்தையை இப்படி அடிக்கடி நிக்க வெச்சு சிரமபடுத்துவதற்க்கு எங்கள் கடும் கண்டனங்கள். :)
இப்படிக்கு தாய் மாமன்
அம்பி
பி.கு: தல, வாக்கர்னு ஒரு வஸ்து சக்கரம் வெச்சு விக்கறாங்க, அதுல பாப்பாவை உட்கார வைங்க. பாப்பாவே வீட்டை சுத்தி சுத்தி வரும்.
//எங்க கடைசி சித்தி, எங்க ம.பா.வை விட நாலு வயசு சின்னவங்க. என்னை விட அப்போ எத்தனை வயசு பெரியவங்க?? அதைச் சொல்லுங்க பார்ப்போம். எங்க சித்திக்கும், எங்க அண்ணாவுக்கும் ஒன்றரை வயசே வித்தியாசம். சரியா? கணக்குப் போட்டு முடிங்க. :)))))))))))
அதை விடக் கூத்து சித்தி பெண்ணும், என்னோட பெண்ணுக்கும் இரண்டே வயசு வித்தியாசம். சித்தி பையரை விட எங்க பையர் சின்னவர்.//
தலைவிஜி! நேரடியா கையைத் தலைக்கு மேல தூக்கித் தோல்வியை ஒத்துக்கறேன். நான் ஃபெயில்.
:(
//வாழ்த்தெல்லாம் நல்லா இருக்கு. குழந்தையைக் கஷ்டப் படுத்தி நிக்க வச்சு ஃபோட்டோவெல்லாம் எடுத்திருக்கீங்க.//
தலைவிஜி!
ஏதேது விட்டா மனித உரிமை கமிஷனுக்குப் போயிடுவீங்க போலிருக்கே?
:)
//
குழந்தை ரொம்ப சாதுவா இருப்பா போல, அவங்க அம்மா மாதிரி. சுத்திப் போடச் சொல்லுங்க மறக்காம.//
அப்போ நான் என்ன சண்டைகாரனா?
:) கண்டிப்பாச் சொல்லிடறேன்.
//செம கலக்கல் கடிதம்! ரொம்ப ரசித்தேன்!
//அப்போ உன் நைனாவான என் பேரும் பேசப்படும்ங்கிற ஒரு நப்பாசை தான். //
ஹிஹி..பாம்பின் கால்!!
ஆகா..அர்ச்சனா-வோட சின்ன செவ்வாழை சித்தப்பு கலக்கறாரு..
//Note : This was my first letter in தமிழ்.
சிரிக்கவும்.// LOL! so cute!
செம மெசேஜ் வேற கொடுத்துருக்காரு...:-))
/அது என்னவென்றால் எப்பவும் முட்டாள் ஆவக் கூடாது மற்றும் முட்டாள் ஆக்கக் கூடாது. இது தான் என் வேண்டுகோள். //
ஹேமந்த் ரொம்ப க்ரியேட்டிவ்..என்னோட வாழ்த்துகள்!
அர்ச்சனா ராஜ்-க்கு எங்கள் வாழ்த்துகள்! :-)
//
ஹி...ஹி...வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முல்லை.
:)
//லெட்டர்-ல உங்க போர்ட்ரேட் அசத்தலா இருக்கு..ஒட்டகம் போட்டோல பார்த்த மாதிரியே! ஹிஹி!//
நாங்கெல்லாம் ஒட்டகம் பக்கத்துல இல்லாம இருந்தாலும் நல்லா இருப்போம்ல
:)
//அடடா லெட்டர் எல்லாம் கலக்கலா இருக்கு.
குழந்தையை இப்படி அடிக்கடி நிக்க வெச்சு சிரமபடுத்துவதற்க்கு எங்கள் கடும் கண்டனங்கள். :)
இப்படிக்கு தாய் மாமன்
அம்பி//
நன்றிங்க தாய்மாமா சார்.
:)
//
பி.கு: தல, வாக்கர்னு ஒரு வஸ்து சக்கரம் வெச்சு விக்கறாங்க, அதுல பாப்பாவை உட்கார வைங்க. பாப்பாவே வீட்டை சுத்தி சுத்தி வரும்.//
அந்த வஸ்து வீட்டுல ஏற்கனவே இருக்கு...ஆனா அதை பாப்பா ஊஞ்சலா தான் இப்போ பயன்படுத்தறா. அதுல உக்காந்துக்கிட்டு காலை ஜாலியா கீழே தொங்கப் போட்டுக்கறா.
:)
கைப்ஸ்
அர்ச்சனா சூப்பர் !! வாழ்த்துக்கள்.. !! இப்பத்தான் பார்க்கிறேன்... :) நினைவிருக்கா.. என் கணவர் பிறந்தநாளும் இவங்க பிறந்தநாளும் ?! :))
//என்னது? லூசாப்பா நீ? //
ம்ம் இயக்குனர் பாலா ல ஆரம்பிச்சி.. இப்படி எல்லாரும் என்னோட டயலாக் ஐ எடுத்துக்கறீங்க. .. என்ன செய்ய நானு?!! இதுல உங்க டெம்ப்லெட் வேற அதுவே.. :))
போனா போகுதுன்னு விட்டுக்கொடுக்கறேன்.. !! :)))
சித்தப்பு பாசம் தாங்க முடியல.. அதுல இப்பவே பட்ச் டயலாக் எல்லாம்.. பட் இந்த லெட்டர் ஹேபிட் நம்ம எல்லோர் கிட்டேயும் மறந்துபோச்சி.. இப்ப பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு..!!
ம்ம்ம்... சித்தப்பு க்கும் தொடர்ந்து கடிதங்கள் எழுத வாழ்த்துக்கள்..!! :)
//எங்க கடைசி சித்தி, எங்க ம.பா.வை விட நாலு வயசு சின்னவங்க. என்னை விட அப்போ எத்தனை வயசு பெரியவங்க?? அதைச் சொல்லுங்க பார்ப்போம். எங்க சித்திக்கும், எங்க அண்ணாவுக்கும் ஒன்றரை வயசே வித்தியாசம். சரியா? கணக்குப் போட்டு முடிங்க. :)))))))))))
//
:))) கீதாஜி,....?!! ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ??!!
கைப்பூ வே பெயில்ன்னு சொல்லிட்டாரு.. அப்ப எங்க கதி எல்லாம் ?!! இனி எங்க அறிவுக்கு தகுந்தாப்பல கேள்வி கேளுங்க.. :)
அந்தக் காலத்திலே நடைவண்டினு சொல்லுவாங்க. மரத்திலே வீட்டிலேயே ஆசாரியை வச்சுச் செய்யச் சொல்லுவாங்க. இப்போ எல்லாம் விலைக்கு! ம்ம்ம்ம்ம்ம்!!!!!!! காலம் மட்டும் மாறலை!
//நாங்கெல்லாம் ஒட்டகம் பக்கத்துல இல்லாம இருந்தாலும் நல்லா இருப்போம்ல
:)//
ஆனா அந்த ஒட்டகம் நல்லா இருக்குமான்றதுதான் மேட்டர்! :-)
அர்ச்சனாவை விசாரித்ததாக கூறவும்
தமிழில் எழுதிய சித்தப்பாவுக்கு ஒரு salute
//கைப்பூ வே//
கவி...இது எந்த வகை பூ? இதுவரை கேள்விபட்டது இல்லையே...:-))
//கைப்பூ வே//
கவி...இது எந்த வகை பூ? இதுவரை கேள்விபட்டது இல்லையே...:-))
//
:))) ம்ம்ம். .வந்துடுவீங்களே.. ஒரு நாலு வார்த்தை சுதந்திரமாக பேசமுடியாதே.. ?! இப்ப தெரியுது ஏன் பப்பு இவ்வளவு கேள்வி கேட்கறான்னு... ?!! :))
//:))) ம்ம்ம். .வந்துடுவீங்களே.. ஒரு நாலு வார்த்தை சுதந்திரமாக பேசமுடியாதே.. ?!//
ஹிஹி..நீங்க பேசுங்க மேடம்! நல்லவேளை..திரும்ப "ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்? ன்னு கேப்பீங்களோன்னு கொஞ்சம் பயந்துக்கிட்டிருந்தேன்! :-))
@கவிதா, இதை விட்டுட்டேனே, முன்னாலே எழுதும்போது,
என்னோட ம.பா.வின் தம்பிக்கும், எங்க பெண்ணுக்கும் ஏழே வயசு வித்தியாசம், என்னை விடப் பதினான்கு வயசு சின்னவர் அந்தத் தம்பி, அப்போ எனக்கு என்ன வயசிருக்கும்கறீங்க????
//ஹிஹி..நீங்க பேசுங்க மேடம்! நல்லவேளை..திரும்ப "ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்? ன்னு கேப்பீங்களோன்னு கொஞ்சம் பயந்துக்கிட்டிருந்தேன்! :-))//
@ முல்ஸ் - :)) ம்ம்ம்.. அந்த பயம் இருக்கனும்!!
//@கவிதா, இதை விட்டுட்டேனே, முன்னாலே எழுதும்போது,
என்னோட ம.பா.வின் தம்பிக்கும், எங்க பெண்ணுக்கும் ஏழே வயசு வித்தியாசம், என்னை விடப் பதினான்கு வயசு சின்னவர் அந்தத் தம்பி, அப்போ எனக்கு என்ன வயசிருக்கும்கறீங்க????
//
@ கீதாஜி .. என்னை வுட்டுடுங்கோ... நானும் கைப்பூ மாதிரி தோல்விய ஒத்துக்கறேன்.. :))
//கைப்ஸ்
அர்ச்சனா சூப்பர் !! வாழ்த்துக்கள்.. !! இப்பத்தான் பார்க்கிறேன்... :) நினைவிருக்கா.. என் கணவர் பிறந்தநாளும் இவங்க பிறந்தநாளும் ?! :))//
வாங்க கவிதா,
மிக்க நன்றி. நினைவிருக்குங்க...25ஆம் தேதி தானே?
//என்னது? லூசாப்பா நீ? //
ம்ம் இயக்குனர் பாலா ல ஆரம்பிச்சி.. இப்படி எல்லாரும் என்னோட டயலாக் ஐ எடுத்துக்கறீங்க. .. என்ன செய்ய நானு?!! இதுல உங்க டெம்ப்லெட் வேற அதுவே.. :))
போனா போகுதுன்னு விட்டுக்கொடுக்கறேன்.. !! :)))//
அது நீங்க பாலாவைத் தான் கேக்கனும். ஏன்னா நான் பாலாவைத் தான் காப்பியடிச்சேன்...ஹி...ஹி
//சித்தப்பு பாசம் தாங்க முடியல.. அதுல இப்பவே பட்ச் டயலாக் எல்லாம்.. பட் இந்த லெட்டர் ஹேபிட் நம்ம எல்லோர் கிட்டேயும் மறந்துபோச்சி.. இப்ப பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு..!!
ம்ம்ம்... சித்தப்பு க்கும் தொடர்ந்து கடிதங்கள் எழுத வாழ்த்துக்கள்..!! :)//
மிக்க நன்றி! சித்தப்பு கிட்ட சொல்லிடறேன். அணில்குட்டியைக் கேட்டதாச் சொல்லுங்க.
:)
//அர்ச்சனாவை விசாரித்ததாக கூறவும்
தமிழில் எழுதிய சித்தப்பாவுக்கு ஒரு salute//
வாங்க பாபு சார்,
எப்படி இருக்கீங்க. உங்க விசாரிப்புக்கு மிக்க நன்றி. Saluteக்கும் தான்.
:))
இங்கே முல்லை-கவிதா, கவிதா-கீதா மேடம்னு ரெண்டு காமெடி ட்ராக் ஓடிட்டு இருக்கு. நான் அதுல தலையிடலைப்பா. ஏன் தலையை அதுல போட்டு உருட்டிட்டாங்கன்னா...?
:)
//ஏன் //தலையை
உருட்டியாச்சு உங்க தலையை! :P :P :P
கைப்ஸ் ஒரு சேதீ தெரியுமா? நான் அபி கருவா உருவானது முதலே கடிதம் எழுதிகிட்டு இருக்கேன். அவ 10வது பிறந்தநாள் பரிசா அதை (ஒரு 1000) கடிதம் இருக்கும்) கொடுத்தேன்.
அது போல இப்பவும் அவளுக்கு தனி ஜி மெயில் ஐடி கிரியேட் செஞ்சு அதிலே என் கடிதங்கள் அனுப்பிகிட்டு தான் இருக்கேன்..
அதை தனி மடலாக உங்களுக்கு அனுப்புகிறேன்.
கண்டிப்பா கடிதம் எழுதுங்க. நல்ல விஷயம் கைப்ஸ்!
என் குட்டி பொண்ணு அர்ச்சனாவுக்கு வாழ்த்துக்கள்!
அன்பு பெரியப்பா(அர்ச்சனாவுக்கு)
அபிஅப்பா
ரசித்தேன்!
கப்பி வாங்கி குடுத்த டிரஸ் பெயர் கிளுகிளுப்பா இருக்கே!
கப்பி னாலே கிளு கிளுப்பு தானே என்கிறீங்களா? அதுவும் சரி தான்!
அபி அப்பா, நாகை சிவா -
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
Post a Comment