Wednesday, March 18, 2009

பட்டர்ஃப்ளை வைத்த ஆப்பு

ஆப்புகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம். டேமேஜர் ஆப்பு வைக்கிறதை பத்தி கேள்வி பட்டுருப்பீங்க, ஸ்கூல்ல டீச்சர் ஆப்பு வைக்கிறதை பத்தி கேள்வி பட்டிருப்பீங்க. பட்டர்ஃப்ளையினால் ஆப்பு வைக்கப் பட்டவனைப் பத்தி கேள்வி பட்டிருக்கீங்களா? இன்னிக்கு கேள்வி படுங்க.

என் வாழ்க்கையில் முதன் முதலா நான் நேர்காணல் எடுத்த நாள் நேத்திக்கு. அப்பா...இதையும் பதிவு பண்ணி வச்சாச்சு. நான் இப்போ இருக்கற ப்ராஜெக்டுல சில புதிய தேவைகள் இருப்பதால், ஒரு CVயைக் கொடுத்து தொலைபேசி நேர்காணல் எடுக்கச் சொன்னார் எங்க ப்ராஜெக்ட் மேனேஜர். உண்மையைச் சொல்லப் போனா நேர்காணல் எடுக்கனும்னு சொன்னதுமே ஒரு படபடப்பு. வழக்கம் போல "இது முதன்முறையாச்சே" அப்படீங்கற ஸ்டார்ட்டிங் டிரபிள் தான். நேத்திக்குத் தான் முதன்முதலா நேர்காணல் எடுத்தேன்னாலும் எப்படி எடுக்கனும்னு கேட்டுத் தெரிஞ்சும் ஓரளவு படிச்சும் வச்சிருந்தேன். நேர்காணல் எடுக்கும் போது எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு கேள்வி கேப்பவரை எப்படி நாம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். கேள்விகளைக் கேட்டு எப்படி மடக்கலாம் என நினைத்து நேர்காணல் எடுப்பவரிடம் நம்முடைய புத்திசாலித் தனத்தை எல்லாம் காட்ட வேண்டும் என்று நினைத்தால் இழப்பு நம்முடையது தான்னு எங்கேயோ படிச்சிருக்கேன். இதையெல்லாம் நினைவு படுத்திக் கொண்டு CVயில் கொடுக்கப் பட்டிருந்த செல்பேசி எண்ணை அழைத்தேன். அந்த நபர் ஏற்கனவே எங்கள் நிறுவன ஊழியர் என்பதால், எங்கள் ப்ராஜெக்டுக்கு அவர் தகுதியானவர் தானா என்பதை முடிவு செய்யும் பொறுப்பு மட்டுமே எனது. ஆகையால் எல்லோரும் வழக்கமாகக் கேட்கும் "Tell me about yourself" என்ற கேள்வி கேட்க வேண்டிய தேவை இருக்கவில்லை. முந்தைய பணியிடங்களில் அவருடைய அனுபவத்தைப் பற்றிக் கேட்டுக் கொண்டு SAP பற்றிய எனக்கு தெரிந்த கேள்விகளைக் கேட்கத் தொடங்கினேன்.

ஓரிரு கேள்விகளுக்குச் சரியான பதில் சொன்னார் என்றாலும், பெரும்பாலான கேள்விகளுக்கு அவருக்கு விடை தெரிந்திருக்க வில்லை. ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும், அவரை எங்கள் ப்ராஜெக்டில் அமர்த்தினால் விரைவாகக் கற்றுக் கொண்டு செயல்படுவார் என்ற நம்பிக்கையை அவர் எனக்கு நேர்காணலின் போது ஊட்டவில்லை. அதற்குண்டான ஆர்வமும் அவரிடம் இருந்ததாகத் தெரியவில்லை. "தொன்னூறு நாட்களாக பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறேன். புதிதாக எங்களுக்குக் குழந்தை பிறந்திருப்பதால் என்னுடைய நிலை க்ரிடிகலாக இருக்கிறது, அதனால் உங்கள் ப்ராஜெக்டில் சேர நான் ஆர்வம் உள்ளவனாக இருக்கிறேன்" என்று மட்டும் தெரிவித்தார். அவர் கூறியதைக் கேட்டு பரிதாபப்பட முடிந்தது என்றாலும் அவர் எங்கள் ப்ராஜெக்டுக்குத் தகுதியானவர் இல்லை என்பது மட்டும் நேர்காணல் எடுத்து முடிக்கும் போது தெரிந்தது. "இந்நேர்காணலைப் பற்றி உங்களுடைய ஃபீட்பேக் என்ன?" என்று என்னை கேட்டார். முதல்முறை என்பதால் என்ன சொல்வது என எனக்கு தெரியவில்லை. "We will let you know" என்று முடித்து விட்டேன். "உங்களை நீங்களே இன்னும் நன்றாக நேர்காணலுக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று உபயோகமான ஒரு ஃபீட்பேக் கொடுத்திருக்கலாமோ என்று பின்னர் தான் எனக்கு உரைத்தது. நேர்காணல் எடுப்பது எனக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்தது. அதன் மூலமாக நேர்காணல் எடுப்பவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று ஓரளவு தெரிந்து கொள்ளவும் முடிந்தது. உங்களுடைய நேர்காணல் அனுபவங்களையும் டிப்ஸ்களையும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

வழக்கமாக பைக் ஓட்டும் போது மனதில் எந்த விதமான சிந்தனைகளும் இருக்காது. ஆனால் ஓரிரு நாட்களாக வண்டி ஓட்டும் போது வேறு சில சிந்தனைகள் மனதில் ஓடுகின்றன. நேற்று மாலை அலுவலகத்தில் இருந்து திரும்பும் போது மேலே நேர்காணல் எடுத்த அனுபவத்தை மனதில் அசைபோட்டுக் கொண்டே வண்டி ஓட்டி வந்தேன். வருத்தப்பட்டாத வாலிபர் சங்கத்தில் நேற்று காலையிட்ட 501வது பதிவு, அப்பதிவு ஐம்பது அடிக்குமா அடிக்காதா, எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்துள்ள நாகை சிவா, ஜி.ரா அவர்கள் அன்புக்கிணங்க என்ன பதிவு போடுவது இப்படியாகப் பலவாறு யோசித்துக் கொண்டே ராமாபுரத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து கிண்டியைத் தாண்டி அடையாறு மத்திய கைலாஷ் சிக்னல் வரை வந்துவிட்டேன். சிக்னலிலிருந்து நான் வலது புறம் திரும்ப வேண்டும். எனக்கு முன்னாடியுள்ள வண்டிகள் திரும்பிக் கொண்டிருக்க நானும் திரும்பினேன். அப்போது தான் கவனித்தேன் எதிர்புறத்திலிருந்து வாகனங்கள் புறப்பட்டு வருவதை. எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த காரை ஒரு போக்குவரத்து காவலர் நிறுத்தினார். காருக்குப் பின்னாடி வந்து கொண்டிருந்த என்னை சார்ஜெண்ட் ஒருவர் கைகாட்டி நிறுத்தினார். தன்னருகே வருமாறு அழைத்தார். நான் அருகில் சென்றதும் என் பைக்கில் இருந்து சாவியை உருவி கையில் எடுத்துக் கொண்டார். "ஏன் சிக்னல் ஜம்ப் பண்ணீங்க? வந்து ஃபைன் கட்டுங்க" என்றார். "சாரி சார்" என்றேன். "லைசன்ஸ் எடுங்க" என்றார். கொடுத்தேன். "எங்கே வேலை செய்யறீங்க" என்றார். கம்பெனி என்ன என்றும் என் வேலை என்றும் சொல்லாமல் "ராமாபுரத்தில் சார்" என்றேன். என் போதாத நேரம் கழுத்தில் ஐடி கார்டு தொங்கிக் கொண்டிருந்தது. அவர் அதை பார்த்து விட்டார். "சிக்னல் ஜம்ப் பண்ணதுக்கு ஃபைன் ஆயிரத்து ஐம்பது ரூபாய்" என்றார். மறுபடியும் "சாரி சார்" இது நான். "ஃபைன் இங்கே கட்டறீங்களா? இல்லை கோர்ட்டுல கட்டறீங்களா?" என்றார். "சார் ஃபர்ஸ்ட் டைம் சார், கவனிக்காம வந்துட்டேன்" என்றேன். "கவனிக்காம வந்ததுக்கு தாங்க சார் ஃபைன்" என்றார். மறுபடியும் "ஃபர்ஸ்ட் டைம் சார், சாரி சார்" என்றேன். "ஃபைவ் ஃபிப்டி குடுத்துட்டு எடுத்துட்டு போங்க" என்றார். ஐநூறைக் கொடுத்து விட்டு ஐம்பதை தேடிக் கொண்டிருந்தேன். "பரவால்லை எடுத்துட்டு போங்க" என்று ரிசெஷனை முன்னிட்டு பத்து சதவீதம் சிறப்புத் தள்ளுபடி கொடுத்தார்.

வீட்டுக்கு வந்ததும் என் தம்பி நல்லா திட்டுனான். "மாங்கா மாதிரி ஐடி கார்டை மாட்டிக்கிட்டு வண்டி ஓட்டுவியா? நீ சாஃப்ட்வேர் ஆளுன்னு தெரிஞ்சிக்கிட்டு ஐநூறு ரூவா தாளிச்சிட்டாங்க. மத்தவங்கன்னா மேக்சிமமே முன்னூறு ரூவா தான்"அப்படின்னான். என்ன இருந்தாலும் தப்பு செஞ்சதுனால தான் தண்டம் கட்டுனேன்ற திருப்தி எனக்கிருக்கு:) அப்படி "தூ"ன்னு டீசெண்டா துப்பிட்டு போற வழியைப் பாருங்க. இப்ப எனக்கே துப்பனும் போல தான் இருக்கு. ப்ளாக்ல உக்காந்துக்கிட்டு "உத்தம புத்திரன்" மாதிரி பேசுறதுங்கிறது வேற. ஆனா நமக்குன்னு வரும் போது நாம நடந்துக்கற விதம்ங்கிறது வேற. தசாவதாரம் படம் மாதிரி... பட்டாம்பூச்சி விருதை ப்ளாக்ல போடறதுக்காக போலீஸ் கிட்ட கப்பம் கட்டி "பட்டர்ப்ஃளை எஃபெக்ட்"னா என்னன்னு ஒரு பாடமும் கத்துக்கிட்டேன். உன் முட்டாள் தனத்துக்கு ஏண்டா பட்டாம்பூச்சி விருதைக் காரணம் சொல்லறேன்னு விருது கொடுத்த புலியும், ஜி.ரா வும் கண்டிப்பா கேப்பாங்க. அவங்க கிட்ட மாப்பு கேட்டுக்கிட்டு அவங்க அன்புக்குத் தலை வணங்கி அவங்க குடுத்த விருதை சந்தோஷமா போட்டுக்கிடறேன். ஆனா எனக்கு ஒரு சந்தேகமும் இருக்கு...சங்கத்து 501வது பதிவைப் பாத்த கையோட ஒருத்தரு காலங்காத்தால பல்லு கூட வெளக்காம யாரோ ஒரு மலையாள மாந்த்ரீகரை வச்சி எதாச்சும் சாத்தானை ஏவி விட்டுருக்காங்களோன்னும் அந்த சாத்தான் தான் சார்ஜெண்டா வந்திருச்சோன்னும் எனக்கு கொஞ்சம் சந்தேகமாவே இருக்கு.


நான் பட்டாம்பூச்சி விருது கொடுக்க விரும்பும் மூவர்.

1. வெட்டிப்பயல்
2. கப்பி பய
3. நீங்க ஆதவன்


1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

42 comments:

வெட்டிப்பயல் said...

Me the Firstuuu :)

வெட்டிப்பயல் said...

பட்டாம் பூச்சியை நம்ம கைக்கு கொடுத்துட்டீங்களா?

ஆறு மாசத்துக்கு முன்னாடி எஸ்கேப் ஆனேன்... இப்ப போட வேண்டி இருக்கும் போல இருக்கே.. சரி மூணாவதா யாராவது கொடுத்தா பதிவுல போடறேன் :)

ambi said...

technically me the secondu?

ambi said...

ஐ டி கார்டை ஆபிஸ் தவிர எங்கயும் கழுத்துல மாட்டீக்காதீங்க.

அத விட முக்யம், வண்டி ஓட்டும் போது வேற எந்த சிந்தனையும் வேணாம். மல்டி டாஸ்கிங்க் எல்லாம் இங்க வேணாம், வீட்ல காட்டுங்கன்னு அர்ச்சனா பாப்பா தன் அப்பாவுக்கு சொல்ல சொன்னாங்க. :)

Bleachingpowder said...

//"சிக்னல் ஜம்ப் பண்ணதுக்கு ஃபைன் ஆயிரத்து ஐம்பது ரூபாய்" என்றார்.//

இதுக்கு நூறு ருபாய் தான் ஃபைன். இருக்கிற நாம கொடுத்து பழக்கீட்டா இல்லாதவன் என்ன பண்ணுவான். அதனால அடுத்த தடவ தவறுதல சிக்னல் ஜம்ப் பண்ணினா அதுக்கு நூறு ருபாய் மட்டும் கொடுத்து ரசீது வாங்குங்க.

Anonymous said...

நேர்காணல் பத்தி அந்த போலீஸ் உங்களுக்கு பாடம் எடுத்திருக்கார்..

எதிர்ல இருக்கறவங்கள கரெக்ட்-௮ ஜட்ஜ் பண்ணனும் (நான் என்ன குஷ்புவா, ரம்பா வா, நமிதாவானு எல்லாம் கேட்கா கூடாது!!)

அப்புறம் அவன்கிட்ட ஒன்னுமே இல்லன்னு முடிவு பண்ணக்கூடாது!!

அவன் கிட்ட எவ்வளவு முடியுமோ அவ்வளவு கரந்தரனும்..


(அப்படியே என்னகொரு Interview கால் arrange பண்ணறீங்களா??)

சந்தனமுல்லை said...

ஹ்ம்ம்..வேலைக்கு சேர்ந்த புதுசுல அதை மாட்டிக்கவே பெருமையா இருக்கும்! :-)))))

//நேர்காணல் எடுக்கனும்னு சொன்னதுமே ஒரு படபடப்பு. //

ஹிஹி..அதைப் பத்தி ஒரு பக்க சிறுகதை எழுதி ட்ராப்டில வச்சிருக்கேன்..ரொம்ப சின்னப்புள்ளத்தனமா இருக்கோன்னு!!

விருதுக்கு வாழ்த்துகள்! :-)

Geetha Sambasivam said...

//வழக்கமாக பைக் ஓட்டும் போது மனதில் எந்த விதமான சிந்தனைகளும் இருக்காது. ஆனால் ஓரிரு நாட்களாக வண்டி ஓட்டும் போது வேறு சில சிந்தனைகள் மனதில் ஓடுகின்றன//

romba thappu, சார்ஜண்ட் பிடிச்சது இருக்கட்டும், வெறும் ஐநூறு ரூபாயோட போச்சு, வேறே ஏதாவதுன்னா?? கொஞ்சம் யோசிக்கணும்! அர்ச்சனா பாப்பாவை மட்டும் கிளம்பும்போது நினைச்சுட்டு, அப்புறம் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் மத்த நினைப்பெல்லாம் வச்சுக்கணும். நாங்க வண்டியிலே போகும்போது பேசக் கூட மாட்டோம்! இறங்கும் வரை மெளன விரதம் தான்!

Geetha Sambasivam said...

நல்லா இருக்கு, பொண்ணொட, வயசைக் குறிச்ச லிங்க். :))))))

ஆப்பு உங்களுக்கு நீங்களே வச்சுக்கிட்டது, பட்டர்ஃப்ளை வைக்கலை! அதைச் சொல்ல மறந்துட்டேன், அதான் திரும்ப வந்தேன்!

☀நான் ஆதவன்☀ said...

அண்ணே விருதெல்லாம் கொடுத்து கௌரவபடுத்தியிருக்கீங்க. ரொம்ப நன்றிண்ணே.

அவ்வ்வ்வ்வ்..... (தப்பா நினைச்சுக்காதீங்க இது ஆனந்த கண்ணீர்)

நாகை சிவா said...

//உன் முட்டாள் தனத்துக்கு ஏண்டா பட்டாம்பூச்சி விருதைக் காரணம் சொல்லறேன்னு விருது கொடுத்த புலியும், ஜி.ரா வும் கண்டிப்பா கேப்பாங்க.//

மரியாதை இல்லாம அவன் இவன் னு எல்லாம் கேட்க மாட்டேன். ஏண்டாங்க போட்டா சரியா இருக்கும். அடுத்து ஜி.ரா. வந்து கேட்பார், கேட்கனும்....

நாகை சிவா said...

இருந்தாலும் 500 ரூபாய் எல்லாம் அதிகம், எந்த எந்த விதி மீறலுக்கு எவ்வளவு சார்ஜ் பண்ணுறாங்க என்பதே நமக்கு தெரிவது இல்லை. அதனால் தான் இஷ்டத்துக்கு கேட்குறாங்க. அதை யாராச்சும் விசாரித்து சொல்லுங்களேன், நானும் முயற்சி பண்ணுறேன்.

Sumathi. said...

ஹாய் மோஹன்,

//நேர்காணல் எடுக்கனும்னு சொன்னதுமே ஒரு படபடப்பு. //

அட இதுக்கு போயி அலட்டிக்கலாமா?

Sumathi. said...

ஹாய்,

//"மாங்கா மாதிரி //
எனக்கு ஒரு விஷயம் புரியலை மோஹன், அது என்ன மாங்கா மாதிரி?
என் நண்பர் கூட இப்படி அடிக்கடி தன்னை மாங்கானு சொல்லுவாரு.விளக்கம் ப்ளீஸ்.

Sumathi. said...

ஹாய்
அப்பறம் நீங்க ஃபைன் கட்டினது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனா தயவு செய்து நானெல்லாம் வண்டில போகும் போது தான் ரோட்டுல இருக்கற அத்தனை விளம்பரங்கலையும் ரசிச்சுட்டே சிரிச்சுட்டே போவேன், பின்னாடி பக்கத்தில வரவங்கல்லாம் என்னை ஒரு மாதிரி கூட பாத்த அனுபவம் இருக்கு,ஆனாலும் நான் என் பாதியோட பேசவே மாட்டேன்.அப்படி இருக்கறப்பவே ஒரு தடவை சிக்னலில் இறங்கி நின்னுட்டு திரும்ப ஏற்ரதுக்குள்ள ஆளு ஓடிட்டாரு, பின்னாடி இருக்குறவங்க துரத்திட்டு போயி சொன்னதுக்குப்பறமாத் தான் பிக்கப்பே. ஆக எதையுமே நினைக்காம வண்டி ஓட்ட பழகிக்குங்க. (என் பாதி மாதிரி)

Sumathi. said...

ஹாய்,
ஆமாம் அன்னிக்கு அந்த கான்ஸ்டபிள்க்கு நல்ல வருமானம் னுசொல்லுங்க. ஹா ஹா ஹா ஹா

ஆனாலும் இது கொஞ்சம் ஜாஸ்திதான்.

Sumathi. said...

ஹாய்,
ஆமாம் என் மாங்க நண்பர் க்குட தப்பி தவறி கூட ஐடி கார்ட கழுத்துல மாட்டிட்டு பஸ்ல க்குட போக மாட்டான்.
உங்களுக்கு ஒரு நேர்காணலுக்கே இப்படி னா, ம்ம்ம் என்னத்த சொல்ல.

Sumathi. said...

ஹாய்,
அப்பறம் என்னைக்காவது ஒரு நாள் அர்ச்சனா இத படிச்சா,
லூ...சா...ப்பா...நீ... னு தான் கேப்பா.பதில் ரெடி பண்ணிக்கோங்க.

இலவசக்கொத்தனார் said...

500 லஞ்சமா இல்லை அபீஷியலா?

G.Ragavan said...

விருது வாங்கி..... பிறகுப் போலீசிடம் ஆப்பும் வாங்கி... பதிவும் வாங்கி.... அதில் பின்னூட்டங்களும் வாங்கிய தங்களது வீரமும் தீரமும் கொற்றமும் கொடையும் பாராட்டவும் புகழவும் பட வேண்டியவை.

இதை நமது ஔவையார் அன்றே பாடியிருக்கிறார்.

காராகொன்றோ பைக்கானொன்றோ
ரோடாகொன்றோ தெருவாகொன்றோ
எவ்வழி நல்வழி போலீசார்
அவ்வழி நல்லை வாழிய கைப்பு

கைப்புள்ள said...

//பட்டாம் பூச்சியை நம்ம கைக்கு கொடுத்துட்டீங்களா?

ஆறு மாசத்துக்கு முன்னாடி எஸ்கேப் ஆனேன்... இப்ப போட வேண்டி இருக்கும் போல இருக்கே.. சரி மூணாவதா யாராவது கொடுத்தா பதிவுல போடறேன் :)

//

நன்னிப்பா பாலாஜி

கைப்புள்ள said...

//technically me the secondu?//

ஹாவுதூ.
:)

கைப்புள்ள said...

//ஐ டி கார்டை ஆபிஸ் தவிர எங்கயும் கழுத்துல மாட்டீக்காதீங்க. //

ஆமாம் அம்பி...அதனால எவ்வளோ சேதாரம்னு இப்போ தெரிஞ்சிக்கிட்டேன்.

//அத விட முக்யம், வண்டி ஓட்டும் போது வேற எந்த சிந்தனையும் வேணாம். மல்டி டாஸ்கிங்க் எல்லாம் இங்க வேணாம், வீட்ல காட்டுங்கன்னு அர்ச்சனா பாப்பா தன் அப்பாவுக்கு சொல்ல சொன்னாங்க. :)//

உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி. இனிமே உங்கப்பா கவனமா நடந்துக்குவாருன்னு நீங்களே அர்ச்சனா கிட்ட சொல்லிடுங்க.
:)

கைப்புள்ள said...

//இதுக்கு நூறு ருபாய் தான் ஃபைன். இருக்கிற நாம கொடுத்து பழக்கீட்டா இல்லாதவன் என்ன பண்ணுவான். அதனால அடுத்த தடவ தவறுதல சிக்னல் ஜம்ப் பண்ணினா அதுக்கு நூறு ருபாய் மட்டும் கொடுத்து ரசீது வாங்குங்க.
//

உண்மை தாங்க. இது நான் என்னை நானே காறித் துப்பிக்க எழுதுன பதிவு தான். அதை நெனச்சி பாக்க பாக்க எனக்கே வெட்கமா இருக்கு.
:(

கைப்புள்ள said...

//நேர்காணல் பத்தி அந்த போலீஸ் உங்களுக்கு பாடம் எடுத்திருக்கார்..

எதிர்ல இருக்கறவங்கள கரெக்ட்-௮ ஜட்ஜ் பண்ணனும் (நான் என்ன குஷ்புவா, ரம்பா வா, நமிதாவானு எல்லாம் கேட்கா கூடாது!!)

அப்புறம் அவன்கிட்ட ஒன்னுமே இல்லன்னு முடிவு பண்ணக்கூடாது!!

அவன் கிட்ட எவ்வளவு முடியுமோ அவ்வளவு கரந்தரனும்..

//

இவ்ளோ தெளிவா இண்டர்வியூ டிப்ஸ்
கொடுத்ததுக்கு நன்னி புவனேஷ்.


//(அப்படியே என்னகொரு Interview கால் arrange பண்ணறீங்களா??)//

கண்டிப்பா...நீங்க SAP சைடுலயா இருக்கீங்க? எந்த மாட்யூல்?

கைப்புள்ள said...

//ஹ்ம்ம்..வேலைக்கு சேர்ந்த புதுசுல அதை மாட்டிக்கவே பெருமையா இருக்கும்! :-)))))//

உண்மை தான்...அந்த பெருமையை எதிர்பார்த்து காத்திருந்த நாட்கள் கிட்டத்தட்ட அஞ்சு வருஷம்.

http://kaipullai.blogspot.com/2006/03/blog-post_01.html

இதுலே எதிர்பார்க்கும் நாலு நிகழ்வைப் படிச்சிப் பாருங்க.

//

ஹிஹி..அதைப் பத்தி ஒரு பக்க சிறுகதை எழுதி ட்ராப்டில வச்சிருக்கேன்..ரொம்ப சின்னப்புள்ளத்தனமா இருக்கோன்னு!! //

அதை ஏன் சிறுகதையா எழுதோனும்? சொந்த அனுபவமாவே ப்ளாக்ல போடலாமில்ல?

//விருதுக்கு வாழ்த்துகள்! :-)//
மிக்க நன்றி சகோதரி.

கைப்புள்ள said...

//romba thappu, சார்ஜண்ட் பிடிச்சது இருக்கட்டும், வெறும் ஐநூறு ரூபாயோட போச்சு, வேறே ஏதாவதுன்னா?? கொஞ்சம் யோசிக்கணும்! அர்ச்சனா பாப்பாவை மட்டும் கிளம்பும்போது நினைச்சுட்டு, அப்புறம் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் மத்த நினைப்பெல்லாம் வச்சுக்கணும். நாங்க வண்டியிலே போகும்போது பேசக் கூட மாட்டோம்! இறங்கும் வரை மெளன விரதம் தான்!
//

உங்க பின்னூட்டம் என்னை நெகிழ வைக்குது தலைவிஜி. நீங்க என் மேலயும் என்னைச் சார்ந்தவர்கள் மேலயும் வச்சிருக்கற அக்கறைக்கு மிக்க நன்றி.

கைப்புள்ள said...

//அண்ணே விருதெல்லாம் கொடுத்து கௌரவபடுத்தியிருக்கீங்க. ரொம்ப நன்றிண்ணே.

அவ்வ்வ்வ்வ்..... (தப்பா நினைச்சுக்காதீங்க இது ஆனந்த கண்ணீர்)

//

நன்றி ஆதவன். கண்டிப்பா நீங்க அந்த விருதுக்குத் தகுதியானவர் தான். கலக்குங்க.

கைப்புள்ள said...

//மரியாதை இல்லாம அவன் இவன் னு எல்லாம் கேட்க மாட்டேன். ஏண்டாங்க போட்டா சரியா இருக்கும். அடுத்து ஜி.ரா. வந்து கேட்பார், கேட்கனும்....
//

கேட்கலியே? இப்ப என்ன பண்ணுவே? இப்ப என்ன பண்ணுவே?
:P

கைப்புள்ள said...

//நல்லா இருக்கு, பொண்ணொட, வயசைக் குறிச்ச லிங்க். :))))))//

நன்றி மேடம்.

//ஆப்பு உங்களுக்கு நீங்களே வச்சுக்கிட்டது, பட்டர்ஃப்ளை வைக்கலை! அதைச் சொல்ல மறந்துட்டேன், அதான் திரும்ப வந்தேன்!//
சில சமயம்...உங்களோட நகைச்சுவை உணர்வு என்னை திக்குமுக்காட வச்சிடுது.
:)

கைப்புள்ள said...

//இருந்தாலும் 500 ரூபாய் எல்லாம் அதிகம், எந்த எந்த விதி மீறலுக்கு எவ்வளவு சார்ஜ் பண்ணுறாங்க என்பதே நமக்கு தெரிவது இல்லை. அதனால் தான் இஷ்டத்துக்கு கேட்குறாங்க. அதை யாராச்சும் விசாரித்து சொல்லுங்களேன், நானும் முயற்சி பண்ணுறேன்.

//

ஆமாம்ப்பா...தமிழக போலீசார் வெவ்வேறு குற்றங்களுக்காக வாங்கும் ஸ்டாண்டர்ட் லஞ்சம் அப்படின்னு ஒரு டேபுலர் காலம் போடு குடுத்தீங்கன்னா வசதியா இருக்கும். வருங்கால சந்ததியினர் படிச்சி பயனடைவாங்க.

:))

கைப்புள்ள said...

////நேர்காணல் எடுக்கனும்னு சொன்னதுமே ஒரு படபடப்பு. //

அட இதுக்கு போயி அலட்டிக்கலாமா?
//

வாங்க சுமதி மேடம்,
முதல் முறை இல்லையா? அதனால தான்.

கைப்புள்ள said...

//என் நண்பர் கூட இப்படி அடிக்கடி தன்னை மாங்கானு சொல்லுவாரு.விளக்கம் ப்ளீஸ்.
//


எனக்கும் தெரியாது மேடம்... இதை படிக்கிறவங்க யாராச்சும் மாங்கான்னு திட்டறதுக்கு எதாச்சும் காரணம் சொல்றாங்களான்னு பாப்போம்.
:)

கைப்புள்ள said...

//ஆக எதையுமே நினைக்காம வண்டி ஓட்ட பழகிக்குங்க. (என் பாதி மாதிரி)
//

இனிமே மாத்திக்க முயற்சிக்கிறேன் மேடம்...நன்றி.

கைப்புள்ள said...

//ஹாய்,
ஆமாம் அன்னிக்கு அந்த கான்ஸ்டபிள்க்கு நல்ல வருமானம் னுசொல்லுங்க. ஹா ஹா ஹா ஹா

ஆனாலும் இது கொஞ்சம் ஜாஸ்திதான்.

//

சார்ஜெண்டைக் கான்ஸ்டபிள் ஆக்கிய உங்க நுண்ணரசியலைக் கண்டு பிரமித்து நிற்கிறேன்.
:)

கைப்புள்ள said...

//ஹாய்,
ஆமாம் என் மாங்க நண்பர் க்குட தப்பி தவறி கூட ஐடி கார்ட கழுத்துல மாட்டிட்டு பஸ்ல க்குட போக மாட்டான்.
உங்களுக்கு ஒரு நேர்காணலுக்கே இப்படி னா, ம்ம்ம் என்னத்த சொல்ல.

//

தசாவதாரம் படத்துல வருமே...butterfly effect...அது தான் இது.
:)

கைப்புள்ள said...

//ஹாய்,
அப்பறம் என்னைக்காவது ஒரு நாள் அர்ச்சனா இத படிச்சா,
லூ...சா...ப்பா...நீ... னு தான் கேப்பா.பதில் ரெடி பண்ணிக்கோங்க.

//

ஆமாமாம். கண்டிப்பா கேப்பா...பாப்போம். இனிமே தான் பதில் ரெடி பண்ணனும்.
:)

கைப்புள்ள said...

//500 லஞ்சமா இல்லை அபீஷியலா?//

அஃபீஷியல் இல்லை.
:(

கைப்புள்ள said...

//விருது வாங்கி..... பிறகுப் போலீசிடம் ஆப்பும் வாங்கி... பதிவும் வாங்கி.... அதில் பின்னூட்டங்களும் வாங்கிய தங்களது வீரமும் தீரமும் கொற்றமும் கொடையும் பாராட்டவும் புகழவும் பட வேண்டியவை.//

என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலியே?


//இதை நமது ஔவையார் அன்றே பாடியிருக்கிறார்.

காராகொன்றோ பைக்கானொன்றோ
ரோடாகொன்றோ தெருவாகொன்றோ
எவ்வழி நல்வழி போலீசார்
அவ்வழி நல்லை வாழிய கைப்பு

//

நன்னி ஜி.ரா. இது மூதுரை பாடல் தானே?

G.Ragavan said...

// கைப்புள்ள said...

//விருது வாங்கி..... பிறகுப் போலீசிடம் ஆப்பும் வாங்கி... பதிவும் வாங்கி.... அதில் பின்னூட்டங்களும் வாங்கிய தங்களது வீரமும் தீரமும் கொற்றமும் கொடையும் பாராட்டவும் புகழவும் பட வேண்டியவை.//

என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலியே? //

இந்தச் சந்தேகம் ஏன்? காமெடியேதான். ஆனா கீமெடி இல்லை.

நம்ம சூடானார் கேக்கச் சொல்லீருக்காரு. ஏன் விருது குடுத்தோம்னு யோசிச்சதுண்டா?


// //இதை நமது ஔவையார் அன்றே பாடியிருக்கிறார்.

காராகொன்றோ பைக்கானொன்றோ
ரோடாகொன்றோ தெருவாகொன்றோ
எவ்வழி நல்வழி போலீசார்
அவ்வழி நல்லை வாழிய கைப்பு

//

நன்னி ஜி.ரா. இது மூதுரை பாடல் தானே? //

ஹிஹி அது மூதுரை... இது மொத்துரை... மொத்தோ மொத்துரை :D இது மாதிரி இன்னும் பத்துரை இருக்கு. எடுத்து விடனுமா?

ஆயில்யன் said...

//வீட்டுக்கு வந்ததும் என் தம்பி நல்லா திட்டுனான். "மாங்கா மாதிரி ஐடி கார்டை மாட்டிக்கிட்டு வண்டி ஓட்டுவியா? நீ சாஃப்ட்வேர் ஆளுன்னு தெரிஞ்சிக்கிட்டு ஐநூறு ரூவா தாளிச்சிட்டாங்க. மத்தவங்கன்னா மேக்சிமமே முன்னூறு ரூவா தான்"அப்படின்னான்.//

தம்பியுடையான் ”பைன்”னுக்கு அஞ்சான் அப்படிங்கற மாதிரி எதுக்கும் முன்னாடியே லிஸ்ட் கேட்டு வாங்கி வைச்சுக்கோங்க சென்னை மாநகர்வலம் வரதுக்கு யூஸ்புல்லா இருக்கும் :))

ரமேஷ் வைத்யா said...

மடையர்களில் மாங்கா மடையன், தேங்கா மடையன் என்று இரு பிரிவுகள் உண்டு. வருடம் பூரா மடையர்களாக இருப்பவர்கள் தேங்கா மடையர்கள். சீஸனுக்கு மட்டுமே மடையர்களாக இருப்பவர்கள் மாங்கா மடையர்கள். சுருக்கமாக மாங்கா!