இன்னைக்கு காலையில அலுவலகத்துக்குப் போற வழியில ஒரு பாட்டைக் கேட்டேங்க. ரொம்ப வித்தியாசமா இருந்தது. கிராமத்து மணம் கமழும் இந்தப் பாடலோட வரிகள் ரொம்ப இயல்பா நல்லாருந்தது. அப்புறமா அலுவலகம் வந்து இணையத்துல தேடுனப்போ அந்தப் பாடல் "தவமாய் தவமாயிருந்து" படப்பாடல்னு தெரிய வந்தது. பாடலோட முதல் பாதியில வாத்தியங்கள் அதிகமா இல்லாம பாடகர் ஏத்த இறக்கத்தோட உணர்ச்சியோட பாடறது ரொம்ப நல்லாருக்கும். பாடலோட ரெண்டாவது பாதியில உருமி மேளம் பின்னிப் பெடலெடுத்துருக்கும். இந்தப் படம் 2005லேயே வந்துட்டாலும், நான் இப்பாடலை இன்னிக்குத் தான் முதல் முறையாக் கேட்டேன். இந்தப் படத்துல வர்ற "ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு அம்மா அப்பா" அளவுக்கு இந்த "ஆக்காட்டி" பாட்டைப் பத்தி கேள்வி பட்டதில்லை. அதனால உங்களோட பகிர்ந்துக்கலாம்னு இந்தப் பாட்டை இங்கே கொண்டாந்துருக்கேன்.
படம் : தவமாய் தவமிருந்து(2005)
பாடல் : சா.பெருமாள்
இசை : சபேஷ் - முரளி
பாடியது : ஜெயமூர்த்தி
அந்த உருண்ட மலை ஓரத்துல...
உருண்ட மலை ஓரத்துல
உருண்ட மலை ஓரத்துல
உளுந்து காயப் போட்டிருந்தேன்...
அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே...
அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே
இந்த சண்டாளச் சீமையிலே இன்னைக்கு
உருமிச்சத்தம் தான் கேட்டதென்ன...
ஏ...ஆக்காட்டி ஆக்காட்டி
எங்கெங்கே முட்டையிட்டே?
எங்கெங்கே முட்டையிட்டே?
எங்கெங்கே முட்டையிட்டே...?
நாங் கல்லத் தொளைச்சி
கருமலையில் முட்டையிட்டேன்
கருமலையில் முட்டையிட்டேன்
கருமலையில் முட்டையிட்டேன்...
நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூனு குஞ்சு
ஐயா நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூனு குஞ்சு
அந்த மூனு குஞ்சுல
மூத்த குஞ்சிக்கெரை தேடி
மூனு மலை சுத்தி வந்தேன்
நடு குஞ்சிக்கெரை தேடி
நாலு மல சுத்தி வந்தேன்
இளைய குஞ்சிக்கெரை
தேடப் போகையிலே...போகையிலே...போகையிலே...
என்னை கானாங்குறத்தி மகன்,
ஐயா என்ன கானா...கானா...ங்
குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான்
என்னை கானாங்
குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான்
எங் காலு ரெண்டும் கண்ணிக்குள்ளே
றெக்க ரெண்டும் மாரடிக்க
றெக்க ரெண்டும் மாரடிக்க
றெக்க ரெண்டும் மாரடிக்க
நான் பெத்த மக்கா
நான் அழுத கண்ணீரு
ஆறாப் பெருகி ஆனை குளிப்பாட்ட
குளமாப் பெருகி குதுர குளிப்பாட்ட
ஏரி பெருகி எருது குளிப்பாட்ட
பள்ளம் பெருகி பன்னி குளிப்பாட்ட
நான்... பெத்த... மக்கா...
நான் பெத்த மக்கா
உங்கள பாதியில விட்டு
நான் இப்போ பரலோகம்
போறேனே...போறேனே...போறேனே...
(வேகமாய்)
ஏ...ஏழைக்குருவியே நீ ஏங்கி அழக் கூடாது
கத்துங்குருவியே நீ கதறி அழக் கூடாது (2)
வலை என்ன பெருங்கனமா?
அதையறுக்க வழிகளும் இருக்குதம்மா (2)
சின்னக்குருவியே நீ சிணுங்கி அழக் கூடாது
நொய்க்குருவியே நீ நொந்து அழக் கூடாது (2)
அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம்
அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம்
வலியும் வேதனையும் வலையோடு போயிடுச்சி
வாழ்க்க என்னான்னு போராடி தெரிஞ்சிடுச்சி (2)
வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்
வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்
Monday, November 10, 2008
ஏ...ஆக்காட்டி ஆக்காட்டி
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
me the firstu?
பாட்டு நல்லாத்தான் இருக்கு தல!
ஆக்காட்டி/ ஆக்காண்டி பாடலில் பல வேறுபட்டவடிவங்கள் உள்ளன. அதன் அடிப்படை விடயம் ஓரளவு ஒன்று தான் போல் உள்ளது.
எனது வலைப்பதிவில் இட்ட 3 வெவ்வேறு விதமான ஆட்காட்டி பாடல்கள்
நல்லாத்தான் இருக்கு பாட்டு !!!
//me the firstu?//
அவுன்னூ
ஆஹா...ரொம்ப நாளைக்கப்புறம் தள நம்ம வூட்டாண்ட
:)
//பாட்டு நல்லாத்தான் இருக்கு தல!//
ஆமாம் தள...நன்னி
:)
//ஆக்காட்டி/ ஆக்காண்டி பாடலில் பல வேறுபட்டவடிவங்கள் உள்ளன. அதன் அடிப்படை விடயம் ஓரளவு ஒன்று தான் போல் உள்ளது. //
வணக்கம் சந்திரன் சார்,
தங்கள் வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி. இப்பாடலில் வெவ்வேறு வடிவங்கள் இருக்கின்றன என்பதே ஒரு புதிய செய்தி தான். தங்கள் வலைப்பதிவில் இட்ட அப்பாடல்களின் சுட்டிகளைத் தரவியலுமா?
This song was first put together by Prof. K A Gunasekaran, while he was Head of the Department of Folk Lore Department, Pondichery University. He composed this from his research.
வாப்பா தேவ்,
டேங்க்ஸ் டா.
அருமையான பாடல்! ஜெயமூர்த்தி அட்டகாசமா பாடியிருக்கார்! நன்றி தல!!
/ஒரு அற்புதமான பாட்டுக்கு அதுக்கு தகுந்த அங்கீகாரம் கொடுக்காத காரணத்தினால//
இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்!
இந்தப் பாட்டைப் பத்தின பத்திரிகைச் செய்தி படிச்சிருக்கேன். ஆனால் கேட்டதில்லை இன்று வரையில் பாட்டு நல்லாத் தான் இருக்கு. சந்திரனோட வலைக்கும் போய்ப் பார்த்துட்டு வரேன். வர்ட்டா??
இப்போப் பதிவு போட்டு ஒரு மணி நேரம் சரியா?? :P:P:P:P
ம்ம்ம்ம்ம்?? பதினொரு மணி நேரம்ங்கறது ஒரு மணினு தட்டச்சிட்டேன்னு நினைக்கிறேன்! :(((((
இந்தப் பாட்டைப் பத்தின பத்திரிகைச் செய்தி படிச்சிருக்கேன். ஆனால் கேட்டதில்லை இன்று வரையில், பாட்டு நல்லாத் தான் இருக்கு
repeattu
மன்னிக்கணும் எனது பதிவின் இணைப்பையும் பிரதிட்டுவிட்டேன் என நினைத்தேன். இந்த பத்வில் பாருங்கள். ஒரு பாடல் ஈழத்து கவிஞரால் எழுதப்பட்டு ஈழத்து பாடகர்களால் பாடப்பட்டது. மற்றைய இரண்டும் தமிழக வடிவங்கள்.
http://viriyumsirakukal.blogspot.com/2007/05/blog-post_4014.html
//This song was first put together by Prof. K A Gunasekaran, while he was Head of the Department of Folk Lore Department, Pondichery University. He composed this from his research.//
வாங்க ராஜ்,
உங்க வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இந்தப் பாட்டை நானும் படத்துக்காக எதிர்பார்த்து ஏமாந்துட்டேன், படம் வருமுன் தடை வந்திருந்தாலும் எப்படியாவது பேசி சமாளிச்சு எடுத்திருப்பாங்க என்று நினைத்தேன். இப்படி பல நாட்டுப் புறப் பாடல்கள் நாட்டார் பாடல்கள் என்ற வடிவில் எங்கள் நாட்டிலும் உண்டு,
/ஒரு அற்புதமான பாட்டுக்கு அதுக்கு தகுந்த அங்கீகாரம் கொடுக்காத காரணத்தினால//
இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்!
//ஏ...ஆக்காட்டி ஆக்காட்டி"///
தலைப்பினை பார்த்ததும் டக்குன்னு ஆஹா பாஸ் குழந்தைக்கு இப்பவே பப்பு சாதம் ஊட்ட ஆரம்பிச்சிட்டாரு போலன்னு ஒரு திங்கிங்க்! (குட்டீஸ்ங்களுக்கு ஆ காட்டு காட்டுன்னு சொல்லித்தானே இறுக்கமா மூடிவைச்சிருக்கிற வாயை ஒபன்ண்ணுவாங்க)
:)))
நல்லா இருக்கு பாட்டு!
இதை கேட்டுட்டு அப்படியே ஒருக்கா ”தோல்வி நிலையென”வும் கேட்டாச்சு பாஸ்!
நன்றி :))))))
//அருமையான பாடல்! ஜெயமூர்த்தி அட்டகாசமா பாடியிருக்கார்! நன்றி தல!!//
வாப்பா கப்பி,
வளர நன்னிப்பா.
//
/ஒரு அற்புதமான பாட்டுக்கு அதுக்கு தகுந்த அங்கீகாரம் கொடுக்காத காரணத்தினால//
இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்!//
ஆமாம்ப்பா. இதுக்கு பேராசிரியர்.குணசேகரன் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய அங்கீகாரத்தைக் கொடுத்து முறைப்படி இப்பாடலை அப்படத்தில் சேர்த்திருந்தால் இந்த அற்புதமான பாடல் இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்களைச் சென்று சேர்ந்திருக்கும். அவ்வகையில் எனக்கு சேரன் மீது வருத்தமே.
//இந்தப் பாட்டைப் பத்தின பத்திரிகைச் செய்தி படிச்சிருக்கேன். ஆனால் கேட்டதில்லை இன்று வரையில் பாட்டு நல்லாத் தான் இருக்கு. சந்திரனோட வலைக்கும் போய்ப் பார்த்துட்டு வரேன். வர்ட்டா??
//
தலைவிஜி கி ஜெய் ஹோ. அடியேன் தன்யனானேன். ப்ரொஃபைல்ல யானை படம் போட்டு இருக்கீங்க சரி. அது ஏன் சோகமா படுத்து இருக்கு? உங்க மொக்கையின் தாக்கமா?
:)
//ம்ம்ம்ம்ம்?? பதினொரு மணி நேரம்ங்கறது ஒரு மணினு தட்டச்சிட்டேன்னு நினைக்கிறேன்! :(((((
ஹி...ஹி...நீங்க சொல்லாமலே புரிஞ்சிக்கிட்டேன். அதியமான் ஸ்மார்ட் இல்லே?
:)
//இந்தப் பாட்டைப் பத்தின பத்திரிகைச் செய்தி படிச்சிருக்கேன். ஆனால் கேட்டதில்லை இன்று வரையில், பாட்டு நல்லாத் தான் இருக்கு
repeattu//
வாங்க பாபு,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//மன்னிக்கணும் எனது பதிவின் இணைப்பையும் பிரதிட்டுவிட்டேன் என நினைத்தேன். இந்த பத்வில் பாருங்கள். ஒரு பாடல் ஈழத்து கவிஞரால் எழுதப்பட்டு ஈழத்து பாடகர்களால் பாடப்பட்டது. மற்றைய இரண்டும் தமிழக வடிவங்கள்.
//
வாங்க சந்திரன் சார்,
மறுவருகைக்கும் சுட்டியைத் தந்தமைக்கும் மிக்க நன்றி.
//இந்தப் பாட்டை நானும் படத்துக்காக எதிர்பார்த்து ஏமாந்துட்டேன், படம் வருமுன் தடை வந்திருந்தாலும் எப்படியாவது பேசி சமாளிச்சு எடுத்திருப்பாங்க என்று நினைத்தேன். இப்படி பல நாட்டுப் புறப் பாடல்கள் நாட்டார் பாடல்கள் என்ற வடிவில் எங்கள் நாட்டிலும் உண்டு,
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணாச்சி.
//இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்!//
வாங்க ஆயில்ஸ்,
என்ன நம்ம ஞானக்குழந்தை கப்பிகுருபரன் போலவே நீங்களும் ஃபீல் பண்ணிருக்கீங்க? கண்டுபிடிச்சிட்டேன்...அப்போ நீங்களும் ஒரு ஞானக்குழந்தை தான்.
:)
//தலைப்பினை பார்த்ததும் டக்குன்னு ஆஹா பாஸ் குழந்தைக்கு இப்பவே பப்பு சாதம் ஊட்ட ஆரம்பிச்சிட்டாரு போலன்னு ஒரு திங்கிங்க்! (குட்டீஸ்ங்களுக்கு ஆ காட்டு காட்டுன்னு சொல்லித்தானே இறுக்கமா மூடிவைச்சிருக்கிற வாயை ஒபன்ண்ணுவாங்க)
:)))//
இந்த தலைப்பை வைக்கும் போது எனக்கும் இந்த ஆ...காட்டு மேட்டர் தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. அதை நீங்களும் சொன்னதுல எனக்கு மெத்த மகிழ்ச்சி. அமீரகத்துலயும் ஒரு ஞானக்குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா வளருதுன்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க.
//நல்லா இருக்கு பாட்டு!
இதை கேட்டுட்டு அப்படியே ஒருக்கா ”தோல்வி நிலையென”வும் கேட்டாச்சு பாஸ்!
நன்றி :))))))//
டேங்கீஸ் கடகத்தாரே.
:)
pattu kettuttu appuram commenturEn
ரொம்ப நல்லா இருக்கு பாட்டு! இப்பதான் முதல்முறையா கேக்குறேன்.
me the 30TH:):):)
நான் இந்தப் பாட்டை காலேஜ் போகறப்போ பல தரம் வேன்ல கேட்டிருக்கேன்.
நல்ல பகிர்வு கைப்புள்ள சார்.
நான் இந்தப் பாட்டை படம் வர்றதுக்கு முன்னாடியே கேட்டுட்டு படத்துல இந்தப் பாட்டு வரும்ன்னு இலவு காத்த கிளியா உட்காந்திருந்தேன். வரலைன்ன உடனே, படம் நல்லா இருந்தும் ஏதோ மிஸ் ஆன ஃபீலிங்....
நன்றி...
முதலில் உள்ள சில வரிகள் பாடலில் இல்லையே.. அந்த வரிகளோடு பாடல்கள் உள்ளனவா
Post a Comment