Monday, September 15, 2008

அடாலஜ் படிகிணறு - PIT கட்டமைப்பு போட்டிக்காக

மக்களே! பில்டப் எல்லாம் பலமா குடுத்து ஒரு மறுநுழைவு பதிவு போடணும்னு தான் எண்ணம். ஆனா ரொம்ப நாளா எதுவும் எழுதாம் டச்சு விட்டதுனால "தேவர் மகன்" ரேவதி சொல்ற மாதிரி "வெறும் காத்து தாங்க வருது". இது தமிழில் புகைப்படக்கலை குழுமம் அறிவிச்சிருக்குற கட்டமைப்பு புகைப்படப் போட்டிக்கான ஒரு பதிவு, கூடவே 2007 ஆம் ஆண்டின் துவக்கத்தில் குஜராத் மாநிலத்தில் சுற்றி பார்த்த அடாலஜ் எனும் இடத்தைப் பற்றிய ஒரு சிறு பயணக் குறிப்பு.

அடாலஜ் என்னும் இடம் குஜராத் மாநிலத்தில் வணிகத் தலைநகரமான அகமதாபாத்துக்கும், தலைநகரமான காந்திநகருக்கும் இடையே சார்கேஜ்-காந்திநகர் சாலையில் அமைந்துள்ளது. அகமதாபாத் நகரின் எந்த ஒரு பயணக் கையேட்டை(Tourist Guide)எடுத்தாலும் இவ்விடம் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அகமதாபாத்திலிருந்து இவ்விடத்திற்கு அரசு பேருந்துகளில் செல்லலாம், அல்லது நம்மூர் ஷேர் ஆட்டோ போல அகமதாபாத்தில் ஷேர் ஜீப் இயக்குகிறார்கள், அதிலும் செல்லலாம். என்ன ஒன்று ஒரு சீட்டில் ஐந்து பேரைத் திணித்து விடுவார்கள்.

அடாலஜில் நமக்கு காணக் கிடைப்பது ஒரு படிகிணறு. ஆங்கிலத்தில் இதை Stepwell என்று சொல்கிறார்கள். குஜராத்தி மொழியில் வாவ்(Vav) என்றும் இந்தியில் பாவ்டி(Bhaoli) என்றும் சொல்கிறார்கள். சாதாரண ஒரு கிணற்றை இப்படியெல்லாம் கலைநயத்துடன் அழகாகக் கட்ட முடியும் என்பதைக் கண்டு வியந்து போனேன். இக்கிணறை அரசக் குடும்பத்தினர் நீராடப் பயன்படுத்தினர் என்று அங்கு சென்று தெரிந்து கொண்டேன். ஆனால் விவசாயத்துக்கு நீர்பாசனத்துக்காகவும் இவ்வகை கிணறுகள் பயன்படுத்தப்பட்டதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது.

அடாலஜ் படிகிணறு - அறிவிப்பு பலகை

சாதாரண ஒரு கிணற்றில் எப்பேர்ப்பட்ட வேலைபாடுகள் பாருங்கள். அந்த காலத்துல ஆணிபுடுங்கறது எல்லாம் வேறுவிதமா இருந்துருக்கு :(

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் Sandstone என்னும் கல்லில் வேலைபாடுகள் செய்யப்பட்ட பல புராதன சின்னங்கள் உள்ளன. தற்கால கட்டுமானங்களான ஸ்வாமிநாராயண் கோயில்(துப்பாக்கிச் சூடு புகழ்) மற்றும் பல இந்து, சமண கோவில்களிலும் இத்தகைய அதிசயத்தக்க வேலைபாடுகளைக் காணலாம்.

படிகிணறுச் சுவற்றில் ஜோடிகிளிகள்.

மேலே இருக்கற படம் தான் போட்டிக்கு. படிகிணறு செல்வதற்கு அழகிய வேலைபாடுகள் நிறைந்த ஒரு மாளிகையின்(மாளிகைன்னு சொன்னா மிகையாகாது)வழியாகச் செல்ல வேண்டும். அதன் முகப்புத் தோற்றம் தான் இது. Horizontal(தமிழ்ல என்னங்க)ஆகவும் பல அடுக்குகளைக் கொண்டது இம்மாளிகை. பாத்தா தெரியுதுல்ல...நிழல்கள் படத்துல பூங்கதவே தாழ்திறவாய் பாட்டுல வர்ற மாதிரி நுழைவாயிலுக்குள்ள நுழைவாயில். இந்த பல்லடுக்கு Horizontal Layerகளின் கடைசி லேயரில் தான் படிகிணறு இருக்கின்றது. Horizontalஆக மட்டுமில்லாம Verticalஆகவும் ஐந்தடுக்கு கொண்டது இந்த அடாலஜ் படிகிணறு.

மேலே குறிப்பிட்டுள்ள மாளிகை வழியாக படிகிணறுக்குச் செல்லும் வழி.

படி கிணறு போகும் வழியை மேலிருந்து ஃபோகஸ் செய்து எடுத்த படம்.

ஐந்தடுக்கு கொண்ட படிகிணறின் பிரமாண்டத்தை மேலே உள்ள படத்தில் காணலாம். எட்டு கோணங்களைக் கொண்ட இக்கிணறின் சுற்றளவை வான் நோக்கி எடுக்கப் பட்ட இப்படத்தின் மூலமாக அரிதியிடலாம். உண்மையிலேயே மிகப் பெரிய ஒரு கட்டிடம் இந்த படிகிணறு. இந்தப் படத்தை கிணற்றின் நீர் துவாரம்(Water Hole) அருகே நின்று கொண்டு எடுத்தேன். சுற்றிலும் சுவர்களில் கண்கவரும் அழகிய வேலைபாடுகளும், இப்படிகிணறின் பிரம்மாணடமும் உங்கள் மனதைக் கண்டிப்பாகக் கவரும். அகமதாபாத் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் அடாலஜ் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு இடம். ரொம்ப நாளைக்கு அப்புறமா இந்த பதிவு எழுதியிருக்கேன். பதிவைப் பத்தியும் படங்களைப் பத்தியும் உங்க மேலான கருத்துகளைச் சொல்லிட்டு போங்க. அப்புறம்...படங்கள் மேலே க்ளிக்கி பாத்தா இன்னும் கொஞ்சம் பெருசாத் தெரியும்.

24 comments:

MyFriend said...

ஐந்தாவது படம் சூப்பர் தல. மணிரத்னம் பட ஸ்டைலை போல இருக்கு. :-)

கைப்புள்ள said...

//ஐந்தாவது படம் சூப்பர் தல. மணிரத்னம் பட ஸ்டைலை போல இருக்கு. :-)//

இதெல்லாம் நெம்ப ஓவரு. இருந்தாலும் மலேசிய மாரியாத்தா தலைமையில ஒரு குரூப் வந்து படம் தெரியலைன்னு இங்க சாமியாடி எனக்கு பீதியைக் கெளப்புறதை விட இது தேவலாம். ஆமா...மலேசிய மாரியாத்தான்னு நான் உங்களுக்கு வச்ச பேரை ரொம்ப சாமர்த்தியமா வேறு யாருக்கோ தள்ளிட்டீங்களாமே...மஹாதிரி முகம்மது நேத்து கூகிள் டாக்கில் சொன்னாரு...
:)

chandru / RVC said...

போட்டி படம் நல்லா இருக்குங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள்

கைப்புள்ள said...

நன்றி RVC.

கப்பி | Kappi said...

கலக்கல்ஸ் ஆப் குஜராத்!!

வாழ்த்துகள் தல!! :)

கைப்புள்ள said...

கேட்டதும் கொடுப்பவனே கப்பி கிருஷ்ணா...பெங்குவினின் நாயகனே கப்பி கிருஷ்ணா...
நன்னியோ நன்னிப்பா :)

MyFriend said...

//இதெல்லாம் நெம்ப ஓவரு. //

சீரியஸ்லி.. பாம்பே படத்துல கூட மனிஷா வீட்டுக்கு வந்து காலை கழுவிட்டு உள்ளே வருவாங்க.. கேமரா ஒரே ஆங்கில்ல இப்பாடித்தான் இருக்கும்.. அந்த லைட்டிங் எஃபெக்ட்டும் அந்த காட்சியும் பிரமாதமா படம் பிடிச்சிருப்பாங்க. பி.சி.ஸ்ரீஇராம்ன்னு நெனைக்கிறேன்.

//இருந்தாலும் மலேசிய மாரியாத்தா தலைமையில ஒரு குரூப் வந்து படம் தெரியலைன்னு இங்க சாமியாடி எனக்கு பீதியைக் கெளப்புறதை விட இது தேவலாம்.//

அட.. இதை இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்களா நீங்க? ;-))

// ஆமா...மலேசிய மாரியாத்தான்னு நான் உங்களுக்கு வச்ச பேரை ரொம்ப சாமர்த்தியமா வேறு யாருக்கோ தள்ளிட்டீங்களாமே...மஹாதிரி முகம்மது நேத்து கூகிள் டாக்கில் சொன்னாரு...
:)//

இல்ல இல்ல.. இது அதுக்கு முன்னாடியே இன்னொருத்தவங்களுக்கு வச்ச பேரு.. ஆனா, நாங்க ரெண்டு பேரும் ஒத்த ஆளுன்னு நெனச்சு மக்கள் குழம்பி பொயி கொஞ்ச நாள் இருந்தாங்க.. நீங்க இன்னும் தெளியில போல? :-P

ஓ.. மகாதீர் சொன்னாரா? நான் என்ன மோ அன்வார் சொன்னாரோன்னு நெனச்சேன். ;-)

கைப்புள்ள said...

//சீரியஸ்லி.. பாம்பே படத்துல கூட மனிஷா வீட்டுக்கு வந்து காலை கழுவிட்டு உள்ளே வருவாங்க.. கேமரா ஒரே ஆங்கில்ல இப்பாடித்தான் இருக்கும்.. அந்த லைட்டிங் எஃபெக்ட்டும் அந்த காட்சியும் பிரமாதமா படம் பிடிச்சிருப்பாங்க. பி.சி.ஸ்ரீஇராம்ன்னு நெனைக்கிறேன். //

அடடா புல்லரிக்குதுங்க. ரொம்ப நன்றிங்க.

//அட.. இதை இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்களா நீங்க? ;-))//

என்ன பண்ணறது? பிறவியிலேயே வந்த குணம் :)

//இல்ல இல்ல.. இது அதுக்கு முன்னாடியே இன்னொருத்தவங்களுக்கு வச்ச பேரு.. ஆனா, நாங்க ரெண்டு பேரும் ஒத்த ஆளுன்னு நெனச்சு மக்கள் குழம்பி பொயி கொஞ்ச நாள் இருந்தாங்க.. நீங்க இன்னும் தெளியில போல? :-P//

இது என்ன புது கூத்து? எனக்கு முன்னாடியே இன்னொருத்தருக்கு வச்சிட்டாங்களா? எப்படி? எப்படி? எப்படி?

//ஓ.. மகாதீர் சொன்னாரா? நான் என்ன மோ அன்வார் சொன்னாரோன்னு நெனச்சேன். ;-)//

அன்வர் சின்ன பையன். அதுனால நான் மகாதிர் கையில தான் பேசுவேன் :)

ஆயில்யன் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
ஐந்தாவது படம் சூப்பர் தல. மணிரத்னம் பட ஸ்டைலை போல இருக்கு. :-)
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!:))

ஆயில்யன் said...

//சாதாரண ஒரு கிணற்றில் எப்பேர்ப்பட்ட வேலைபாடுகள் பாருங்கள். அந்த காலத்துல ஆணிபுடுங்கறது எல்லாம் வேறுவிதமா இருந்துருக்கு :(///


:)))))

பட் எந்த டென்ஷனுமே இல்லாம புடுங்கியிருப்பாங்கன்னு தோணுது!

ஆயில்யன் said...

//Horizontal(தமிழ்ல என்னங்க)//

கிடைமட்டம்

கரீக்ட்டா????

படிச்சிருக்கோம்ல

ஆயில்யன் said...

சமூகம் மன்னிக்கணும்!

கிடை - இதுதான் கரீக்டான சொல்

கிடை மட்டம் அப்படின்னு சொன்னா horizontal level :)))

இலவசக்கொத்தனார் said...

நல்லா இருக்குங்க படங்கள். இந்த ஏரியாவுக்குத்தான் போனதே இல்லை. அடுத்த முறை கொடுப்பினை இருந்தாப் போய் பார்க்கணும்.

அப்புறம் இந்த மாதத்து குறுக்கெழுத்துப் போட்டி . வந்து விடையைச் சொல்லுங்க.

விளம்பரத்துக்கு நன்னி ஹை!

ஆயில்யன் said...

// கப்பி | Kappi said...
கலக்கல்ஸ் ஆப் குஜராத்!!

வாழ்த்துகள் தல!! :)
//

இதுக்கும் ஒரு ரிப்பிட்டேய்ய்ய்ய்!

வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா போய் பார்க்க வேண்டிய உலாத்தல்கள் லிஸ்டுல சேர்த்துக்கிறேன் :)

திவாண்ணா said...

ஹான்ட்சன்
horizontal ன்னா கிடைமட்டம். ஆனா அதை சொல்ல வேண்டியது இல்லியே! அடுக்கு வீடுன்னு நம்ம தமிழ் நாட்டிலேயே உண்டே.
அப்புறமா vertical ன்னா செங்குத்து. எல்லாம் அவசரத்துல நினைவு வரலை போல இருக்கு.

சரி சரி, போட்டிக்கான படம் நல்லாவே இருக்கு. வாழ்த்துக்கள்!

Sathiya said...

//Horizontal(தமிழ்ல என்னங்க)//
http://ta.wiktionary.org/wiki/horizontal

படம் அருமை! போட்டி படத்துக்கு உங்க பிலிக்கர் லிங்க் கொடுத்து இருக்கலாமே?

இந்த இதை பற்றி அருமையா விளக்கி இருக்கிறீர்கள்! இந்தியாவில் நான் இன்னும் பார்க்க வேண்டிய இடங்களில் இதையும் சேர்த்து விட்டேன்!

படங்களை பார்க்கும் பொழுது இந்த கிணறு பகுதி மிகவும் இருட்டாக இருக்கும் போல? இங்க எப்படி அரச குடும்பத்தினர் குளித்தார்கள்? பயமா இருக்காதா?

கைப்புள்ள said...

//:)))))

பட் எந்த டென்ஷனுமே இல்லாம புடுங்கியிருப்பாங்கன்னு தோணுது!
//

ஹி...ஹி...சரி தான். ஆணியெல்லாம் புடுங்கி முடிச்சீட்டு வைதேகி காத்திருந்தாள் படத்துல கவுண்டர் சொல்லுவாரே அந்த மாதிரி "டேய்! நான் ஒரு சிற்பி மாதிரிடா...எப்படி செதுக்கறேன் பாத்தியா"ன்னு சொல்லீருப்பாங்க போலிருக்கு.
:)

கைப்புள்ள said...

//சமூகம் மன்னிக்கணும்!

கிடை - இதுதான் கரீக்டான சொல்

கிடை மட்டம் அப்படின்னு சொன்னா horizontal level :)))

//

Horizontalன்னா கிடையா? இன்னிக்குத் தான் தெரிஞ்சது. ஆனா இப்போ நெடுஞ்சாண் கிடையா விழுந்தான்னு சொல்லுவாங்களே அதுவும் உங்க விளக்கத்தாலே புரியுது. வளர நன்னி.

கைப்புள்ள said...

நன்னி கொத்ஸ்.

கைப்புள்ள said...

//ஹான்ட்சன்
horizontal ன்னா கிடைமட்டம். ஆனா அதை சொல்ல வேண்டியது இல்லியே! அடுக்கு வீடுன்னு நம்ம தமிழ் நாட்டிலேயே உண்டே.
அப்புறமா vertical ன்னா செங்குத்து. எல்லாம் அவசரத்துல நினைவு வரலை போல இருக்கு.//

வாங்க திவா சார்,
போட்டிக்கு அவசர அவசரமா நேரத்துக்குக் கொடுக்கணும்ங்கிற நினைப்புல எதுவுமே நியாபகத்துக்கு வரலை. இருந்தாலும் Horizontalனா கிடைன்னு இப்ப தான் முதல் தடவையா கேள்வி படறேன்.

//சரி சரி, போட்டிக்கான படம் நல்லாவே இருக்கு. வாழ்த்துக்கள்!//

வாழ்த்துகளுக்கு நன்றி சார்.

கைப்புள்ள said...

//படங்களை பார்க்கும் பொழுது இந்த கிணறு பகுதி மிகவும் இருட்டாக இருக்கும் போல? இங்க எப்படி அரச குடும்பத்தினர் குளித்தார்கள்? பயமா இருக்காதா?//

வாங்க சத்தியா,
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. குட் கொஸ்டின் :) ஒரு வேளை ஓபன் ஏர் குளியல்ங்கிறதால பிரைவேசிக்காக இருட்டுலயே குளிச்சிருப்பாங்களோ?
:)

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம் பதிவு போடச் சொன்னப்போப் போடலை, இல்லாதப்போ போட்டிருக்கீங்க போலிருக்கு, சொல்லவும் இல்லை, follow up கொடுத்திருக்கேனோ, தெரிஞ்சுது! போகட்டும், இந்த இடம் நாங்க பார்க்க முடியலை, மறுநாள் எனக்குப் பரிட்சை (ஹிஹிஹி) இருந்தது, படிக்கணும்னு பொண்ணு, பையர், ம.பா. எல்லாம் திட்டிக் கூட்டிட்டு வந்துட்டாங்க, நானும் தேவகிரிக் கோட்டையிலே இருட்டு அறை பார்க்கும்போது உங்களைத் தான் நினைச்சுட்டேன். சிவில் சுக்குநீர்கள் எல்லாம் பார்க்க வேண்டிய இடம்னு! படம் எல்லாமே எனக்குப் பிடிச்சிருக்கு. இந்த sandstone-ல் தான் காஞ்சி கைலாசநாதர் கோயிலும் கட்டினாங்களோ??? அது பத்தியும் ஒரு பதிவு போடணும்!! நேரம் தான் இல்லை! இதே ஒரு பதிவு மாதிரி எழுதியாச்சு, வரேன், அடுத்த பதிவுக்கும் சேர்த்து வச்சுக்குங்க! :P

Geetha Sambasivam said...

http://geethasmbsvm6.blogspot.com/

பெரியவங்க நேரம் கிடைச்சால் இங்கே போய்ப் பாருங்க, உங்க மாதிரி இல்லைனாலும், ஏதோ புலம்பி இருக்கோம்ல!! :P :P :P

பாபு said...

நீங்கள் அனுப்பியுருக்கிற புகைப்படம் நன்றாக உள்ளது,
அர்ச்சனா எப்படி இருக்கா??