Thursday, May 08, 2008

விரல்களின் ருசி

ஜனவரி 2006 - நான் தமிழில் வலைபதிய ஆரம்பித்த புதிது. அச்சமயத்தில் நான் மிகவும் ரசித்து எழுதிய ஒரு பதிவினைப் படித்துவிட்டு சரவணன் என்ற நண்பர் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். அப்பதிவுக்கு அப்போது பின்னூட்டங்கள் அவ்வளவாக வரவில்லை எனினும் 'தேன்கூடு' அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகளில் இடம்பிடித்தது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

'நியூ' படத்தில் பிடித்தது என்ற அப்பதிவில் நண்பர் சரவணன் இட்டுள்ள பின்னூட்டத்தினைக் கீழே பதிகிறேன்.

சரவணன் has left a new comment on your post "'நியூ' படத்தில் பிடித்தது":
வணக்கம்,
கைப்புள்ள நான் வலை பதிவுகளுக்கு புதியவன். இப்பதான் உங்க பதிவுகள் படித்து வருகிறேன். இது மிக நல்ல பதிவு. அன்னையர் தினம் வரும் நெருங்கி வரும் வேளையில் இதை நீங்கள் மீண்டும் பதிவிட வேண்டுகிறேன், அதன் மூலம் எங்கோ நமக்காக காத்திருக்கும் அம்மாக்களின் உண்மை தேவைகளை நமது மக்கள் உணர்வார்கள்.அது நாம் அனுப்பும் வாழ்த்து அட்டை, குறுன்செய்தி, அன்பளிப்பு, ஒரு போன் கால் அல்ல என்று நமது மக்கள் உணர்ந்தால் நல்லது. Our presence is the present

அது நாம் அனுப்பும் வாழ்த்து அட்டை, குறுன்செய்தி, அன்பளிப்பு, ஒரு போன் கால் அல்ல என்று நமது மக்கள் உணர்ந்தால் நல்லது. அவள் இன்றும் நமக்கு சோறு ஊட்ட காத்திருக்கிறாள், நாம்தான் வளர்ந்துவிட்டோம் (மறந்துவிட்டோம்?). MGR & மு. கருணாநிதி (அவர்கள் மேல் இருக்கும் விமர்சனங்கள் தனி) புகழுக்கு காரனம் அவர்கள் எப்பொழுதும் தாய் பக்தியொடு இருந்தார்கள். அனைத்தும் அவர்தம் தாயின் அசீர்வாதங்களே. நாம் என்ன அவர்களை விட பெரிய அளவில் பனம் சம்பதிக்க பொகிறோமா.. இல்லை அவர்களை விட நேர பற்றாகுறையா நமக்கு..

மீண்டும் இதை பதிவிடுவேர்கள் என்ற நம்பிக்கையோடு
சரவணன்

சரவணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அப்பதிவினை இங்கு மீண்டும் பதிகிறேன்.

'நியூ' திரைப்படம் சர்ச்சைக்குள்ளாகி ஆபாசமான படம் என்று முத்திரை குத்தப்பட்டு சமீபத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டது அறிந்ததே. அப்படத்தை நான் காணவில்லை எனினும் டிவியில் பார்த்த ஒரு சிறு பகுதியிலேயே என் மனதினைக் கவர்ந்த காட்சி ஒன்று உண்டு.

அது தேவயானி தன் காணாமல் போன் மகனை நினைத்து அழுதுகொண்டே பேசுவதாக அமைந்த ஒரு காட்சி. "என் மகன் எப்போதும் என் கையால் தான் சாப்பிடுவான். சாப்பாடு ஊட்டும் போது சாப்பாட்டை மட்டும் சாப்பிட மாட்டான். என் விரலையும் சேர்த்து தான் சாப்பிடுவான்" - இந்த ஒரு இடத்தில் நிற்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ஏனேனில் இது நான் அனுபவித்த ஒன்று. வெறும் ரசம் சாதமே ஆனாலும் அம்மா கையால் ஊட்டிக் கோண்டால் எப்போதுமே ஒரு பிரமாதமான தனி ருசியை உணர்ந்திருக்கிறேன். அம்மாவைக் கேட்டால் உன் கையாலேயே நல்லா பெசஞ்சு சாப்பிட்டு பாருன்னு சொல்லுவாங்க. ஆனால் பல முறை முயன்றும் தோல்வி தான்.

தன் கையால் சாப்பிடும் போது கிடைக்காத அந்த ருசி அம்மா கையால் சாப்பிடும் போது மட்டும் எப்படி கிடைக்கிறது...நிஜமாகவே அம்மா விரலை சாப்பிடுகிறோமா? இந்த காட்சியை பார்த்தவர்களும் பார்க்காதவர்களும் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று தெரியப்படுத்துங்களேன்!


அப்பதிவில் நான் இட்டிருந்த ஒரு மறுமொழியையும் இங்கு பதிகிறேன். இப்பதிவில் தனியாக எதுவும் எழுதவில்லை. எல்லாம் கட் அண்ட் பேஸ்ட் தான் :)

"இச்சமயத்தில் நடிகர் சூர்யா 'மதர்ஸ் டே' அன்று ஜெயா டிவியில் டெலிசாய்ஸ் நிகழ்ச்சியில் சொல்லியது நினைவுக்கு வருகிறது. மதர்ஸ் டே அன்னிக்கு நீங்க உங்க அம்மாவுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?னு ஒரு நேயர் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதில், நடிகர் என்பதைத் தாண்டி ஒரு மரியாதையை அவர் மேல் ஏற்படுத்தியது. "மதர்ஸ் டே என்று தனியாக எதையும் கொண்டாடுவது கிடையாது. அந்த ஒரு நாள் மட்டும் கார்டோ அல்லது கிஃப்டோ அம்மாவுக்கு வாங்கி கொடுத்து வாழ்த்து சொல்வதில் உடன்பாடு கிடையாது. ஒவ்வொரு நாளும் மதர்ஸ் டேவாக அம்மாவின் அன்பையும் அம்மாவையும் மனதில் வைத்துக் கொண்டால் போதும்" சூர்யா சொன்னது எவ்வளவு உண்மை. நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?"

மனதிற்கு நெருக்கமான அப்பதிவினை மீள்பதிவு செய்யத் தூண்டுதலாக இருந்த சரவணன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

25 comments:

சரவணன் said...

சரவணன்

ரொம்ப டேங்க்ஸூப்பா,

என்னையும் ஒரு ஆளா மதிச்சு மீள்பதிவெல்லாம் போட்டிருக்கீங்க படிக்கும்போதே கண்ணீர் முட்டுதே...

என்னதான் நாம வளர்ந்தாலும் நாம எல்லாரும் அம்மாங்களுக்கு கைப்புள்ளதான் ( அட குழந்தைன்னு சொல்ரன்பா ). அம்மாக்களின் விரல்களின் ருசியும், வியர்வையின் மணமும், அணைப்பின் கதகதப்பும் எதற்காவது ஈடாகுமா. இவைகள் நாம் தெரிந்தே இழக்கும் சொர்கங்கள் என்று தெரியுமா நமக்கு. அல்லது இதை தெரிந்து கொள்வதே தவறு என்று புதிய் பொருளாதாரம் ( எதற்காக எதன் பின்னால் ஓடுகிறோம் என்று தெரியாமல் ஓடுகிறோமே .. நின்று யோசித்தால் பின் தங்கிவிடுவோமாம் ) சொல்லிகொடுத்துவிட்டதா நமது மூளைகளுக்கு.

நிறைய முறை நான் டென்த்ல ஏன் இவ்வளவு மார்க் எடுத்தேன் என்று கவலை பட்டிருக்கிறேன், பேசாம ஃபெயில் ஆகி இருக்கலாம்.

சரி டோண்டு சார் பதிவுல கும்மி அடிச்சுகிட்டு இருந்தவன் இதை பார்த்து இங்க ஒடியாந்துட்டன் ரொம்ப டேன்க்ஸ், இதை பார்தபின் அட்லீஸ்ட் ஒருத்தராவது காதலுக்கு மரியாதைய கொஞ்சம் கம்மி பண்ணிட்டு குடியிருந்த கோயில்லுக்கு அன்னையர் தினத்துக்காச்சும் மரியாதை செஞ்சாங்கன்னா ரொம்ப சந்தோஷம் நான் படதேவையில்லை அவரவர்கள் உணர்வார்கள்.

Some are kissing mothers and some are scolding mothers, but their love just the same.

மீண்டும் நன்றி
சரவணன்

சரவணன் said...

I remember my mother's prayers and they have always followed me. They have clung to me all my life.

மேல இருக்கரது ஒரு பெரிய மனுஷன் சொன்னது, வாழ்வின் பல ஏற்ற இறக்கங்களை கண்டவர், சமுதாயத்தில் பல புரட்சிகரமான மாற்றங்களை செய்தவர். அவருக்கு முன்னாடிலாம் நாமெல்லம் ஜுஜூபி.

சொன்னது ஆபிரகாம் லிங்கன்

சரவணன்

Syam said...

ஒரே பீலிங்ஸ்ஸா போச்சு தல....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சரவணன் said...

//Syam said...
ஒரே பீலிங்ஸ்ஸா போச்சு //

ஆமாம் ஷ்யாம். நிறைய முறை காமெடி பதிவுகளை படிச்சுட்டு அடக்கமாட்டாம் சிரிச்சு ( நம்ம கைப்புள்ள பதிவும் வவாசங்க பதிவுகளும் போதாதா) பக்கத்து கேபின்ல இருக்கர ஜிகிடியெல்லாம் கிட்டதட்ட பயித்தியம் ரேஞ்சுல பார்க ஆரம்பிச்சுட்டாளுங்க. ஆனா பாருங்க இதை படிச்சுட்டு ஃபீலின்காயி மூக்கெல்லாம் உறிஞ்சுகிட்டு இருந்தனா அஞ்சலி படம் மாதிரி கண்ணெல்லாம் ஒரே தண்ணி அவளுங்க பயித்தியம் நெக்ஸ்ட் ஸ்டேஜ்ல இருக்குன்னு நெனச்சிருப்பாளுங்க

அப்ப பார்த்து நம்ம ஃபிரண்டு வந்து முதுகுல தட்டி என்ன மச்சான் கல்யாண நாளா கண்ணெல்லாம் கலஙியிருக்குன்னு கேட்குறான்.

ஒருத்தனாவது நம்ம ஃபீலிங்க கரெக்டா புரிஞ்சுகிறானான்னு பாருங்க, இதுவே என் அம்மா பக்கத்தில் நான் இருந்தா என் விருப்பங்கள் அவள் செயல்களாகும் அங்கே பேச்சுக்கள் ஊமைகளாகும்.

சரவணன்

சரவணன் said...

கைப்பு உங்க ஹிட் கவுண்டர் சர சரன்னு ஏறுது கவனிச்சீங்களா நான் டோண்டு சார் பதிவுல உங்களுக்கு விளம்பரம் போட்டிருக்கேன். நல்ல விஷயம் நாலு பேருக்கு போய் சேரட்டுமேன்னுதான்

சரவணன்

கைப்புள்ள said...

//அன்னையர் தினத்துக்காச்சும் மரியாதை செஞ்சாங்கன்னா ரொம்ப சந்தோஷம் நான் படதேவையில்லை அவரவர்கள் உணர்வார்கள்//

வாங்க சரவணன்,
நல்லா சொல்லிருக்கீங்க.

//Some are kissing mothers and some are scolding mothers, but their love just the same.

மீண்டும் நன்றி
சரவணன்//

நன்றி நான் தான் சொல்லனும்.

கைப்புள்ள said...

//I remember my mother's prayers and they have always followed me. They have clung to me all my life//

சூப்பர். பகிர்ந்துக்கிட்டதுக்கு மிக்க நன்றி.

கைப்புள்ள said...

//அல்லது இதை தெரிந்து கொள்வதே தவறு என்று புதிய் பொருளாதாரம் ( எதற்காக எதன் பின்னால் ஓடுகிறோம் என்று தெரியாமல் ஓடுகிறோமே .. நின்று யோசித்தால் பின் தங்கிவிடுவோமாம் ) சொல்லிகொடுத்துவிட்டதா நமது மூளைகளுக்கு.

நிறைய முறை நான் டென்த்ல ஏன் இவ்வளவு மார்க் எடுத்தேன் என்று கவலை பட்டிருக்கிறேன், பேசாம ஃபெயில் ஆகி இருக்கலாம்.//

ரொம்ப ஃபீல் பண்ணி எழுதிருக்கீங்க. என்ன சொல்றதுன்னே தெரியலை.

கைப்புள்ள said...

//ஒரே பீலிங்ஸ்ஸா போச்சு தல....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

வாய்யா 12பி,
எனக்கும் தான். வளர நன்னி.

கைப்புள்ள said...

//ஒருத்தனாவது நம்ம ஃபீலிங்க கரெக்டா புரிஞ்சுகிறானான்னு பாருங்க, இதுவே என் அம்மா பக்கத்தில் நான் இருந்தா என் விருப்பங்கள் அவள் செயல்களாகும் அங்கே பேச்சுக்கள் ஊமைகளாகும்//

கரெக்ட். சொல்லாமலே புரிஞ்சிக்கற திறமை அம்மாங்களுக்கு மட்டும் தான் உண்டு.

கைப்புள்ள said...

//கைப்பு உங்க ஹிட் கவுண்டர் சர சரன்னு ஏறுது கவனிச்சீங்களா நான் டோண்டு சார் பதிவுல உங்களுக்கு விளம்பரம் போட்டிருக்கேன். நல்ல விஷயம் நாலு பேருக்கு போய் சேரட்டுமேன்னுதான்//

ஆஹா...ரொம்ப நன்றி சரவணன்.

சரவணன் said...

ரொம்ப நன்றி கைப்புள்ள, நிறைய ஃபீலிங்க் பண்ணவச்சுட்டீங்க. நாளைக்கு பார்ப்போம் இப்ப வர்ர்ட்டா.. நிறைய பின்னூட்டங்கள் வர வாழ்த்துக்கள்

சரவணன்

இலவசக்கொத்தனார் said...

//கைப்பு உங்க ஹிட் கவுண்டர் சர சரன்னு ஏறுது கவனிச்சீங்களா நான் டோண்டு சார் பதிவுல உங்களுக்கு விளம்பரம் போட்டிருக்கேன். நல்ல விஷயம் நாலு பேருக்கு போய் சேரட்டுமேன்னுதான்//

அங்க மட்டுமா? என்னோட இந்தப் பதிவுக்கும் வந்து இல்ல போஸ்டர் ஒட்டி இருக்கீங்க. கைப்ஸ், இதுக்கும் ஒரு நன்னி சொல்லுப்பா!!

(சந்தடி சாக்கில் போஸ்டர் ஒட்டுவது எப்படி? வகுப்பில் சேர அணுக வேண்டிய முகவரி - கொத்ஸ்!)

கப்பி பய said...

:)

Anonymous said...

சூப்பரப்பு. என்னப்பு கைப்புள்ள உனக்குள்ள இப்படி ஒரு பச்சை புள்ளை இருக்கானா.

அன்புடன்
ப்ரகாஷ்

Thiru said...

நல்ல பதிவு. நானும் சூர்யா மாதிரி தான் அம்மாவுக்கு ஒரே ஒரு Mother's Day போதாதுன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். இப்போ தப்புன்னு தோணுது.

இப்ப இவ்ளோ வேகமா ஓடற நரக (சாரி.. நகர) வாழ்க்கையில் கண்டிப்பா ஒரு நாள் நின்னு, நிதானிச்சு நம்ம அம்மா நமக்கு செஞ்ச சேவைகளை எல்லாம் மனசில் ஓட விட்டுப் பாக்கலாம். அந்த ஒரு நாள் யோசனை கண்டிப்பா நம்முடைய life priorities-ல சில நல்ல மாற்றங்களை கொண்டு வரும்னு நம்பறேன்.

இனிமே வாரத்துக்கு ரெண்டு தடவை தவறமா அம்மாவுக்கு போன் பண்ணனும் - இது எனக்கு சொல்லி கொண்டது.

சரவணன் said...

//இனிமே வாரத்துக்கு ரெண்டு தடவை தவறமா அம்மாவுக்கு போன் பண்ணனும் - இது எனக்கு சொல்லி கொண்டது.//

சூப்பர் திரு ரெண்டு நாள் என்ன எப்ப நினைக்கிறீங்களோ அப்ப எல்லாம் போன் போட்டு பேசுங்க சார் டெலிகாம் ரேட்ஸ் ஆர் அட் ஆல் டை லோ. எதுக்குடா மகனே போன் பண்ண இன்னைக்கு காலைலதானே போன் பேசுனோம் அப்படின்னு கேட்டாங்கனா, விஷயம் எதுவும் இல்லைம்மா உன்கூட பேசனும்னு தோணுச்சு அதான் அப்படின்னு சொல்லுங்க சார்

சரவணன்

ambi said...

நெகிழ வெச்சுட்டீங்க தல. நேத்திக்கே பாத்துட்டேன், தாமதமான பின்னூட்டம்.


நான் காலேஜ் படிக்கும் போது மதர்ஸ் டேக்கு எங்க அம்மாவுக்கு ஒரு வால் கிலாக் வாங்கி குடுத்து, "நான் நல்லா படித்து வேலைக்கு போய் உன்னை மகிழ்ச்சியடைய செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை, அதை நினைவுபடுத்தவே இந்த கிலாக்"னு சொன்னேன்.
இன்னமும் எங்க வீட்டு சமயலறையில் அந்த கிலாக் பாக்கும் போது எங்க அம்மா பெருமையா சொல்வாங்க. :))

சரவணண் said...

அம்பி இப்பதான் உங்க பதிவுகளை படித்து வருகிறேன் நல்லா ஜொள்ளு விடுவீஙன்னு பார்தா மதர் சென்டிமென்டுலயும் கலக்கறீங்க. நல்ல விவரமான பொண்ணுங்கள நோட் பண்ணீஙன்னா பையன் எப்படி அம்மா மேல பாசமா இருக்கானான்னு பார்துட்டு லவ் பண்ணுவாங்க, அஃகோர்ஸ் கல்யாணத்துக்கு அப்புறம் யாதுமாகி நின்று இனி அம்மாவை மற என்பார்கள்

சரவணண்

வல்லிசிம்ஹன் said...

கைப்ஸ்,
அர்ருமை. அம்ம்மாவே அருமை. அதுவும் சரவணன் சொன்னதையும், சூர்யா சொன்னதையும் எடுத்துக் காட்டியதில் இன்னும் நெகிழ்வாக இருக்கிறது.

எங்க அம்மவுக்குக் கடைசி இரண்டு நாள் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தபோது நானும் அவளுக்கு ஊட்டின்னேன்.
இன்னும் கொஞ்சம் கொடுத்து இருக்கலாமோ என்ன்று இப்போது தோன்றுகிறது.:( மிகவும் நன்றிம்மா.

கீதா சாம்பசிவம் said...

அட, பதிவெல்லாம் போட்டு இருக்கீங்க???
சொல்லவே இல்லையே? அன்னையர் தின வாழ்த்துகள். அன்னையர் ஆகப்போறவங்களுக்கும், ஏற்கெனவே அன்னையர் ஆனவங்களுக்கும் வாழ்த்துகள்.

சரவணன் said...

அனைவருக்கும் இனிய அன்னையர் தின வழ்துக்கள்

சரவணன்

G.Ragavan said...

அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லாள்
ஊரில் யாவர் உள்ளார்
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயம் இன்றிச் சொல்வேன்
அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆ

"Gud4Nothin" Rags said...

che, aerkanavae petra thaayai vitu, valartha thanthayai vittu, pirantha naadai vittu ayal naatil vettiya aani pudungi kondirukiromaenu oru kavala irunthichu.. ipa antha kavala perun kavalayaa maaridichu.. elaam ungal punniyam thaan..

Linq said...

Hi,

This is Alpesh from Linq.in. I loved your blog and I thought I would let you know that your blog has got the Following Awards

1.Best blog of Month in Languages category for March.
2.Best blog in Languages category for week 23-03-2008

Check it out here:
http://news.linq.in/index.php?bg=13280

Linq tracks posts from Indian blogs and lists them in order of recent interest. We offer syndication opportunities
and many tools for bloggers to use in there web sites such as the widget below:

http://news.linq.in/blogger_tools.php

Alpesh
www.linq.in