Sunday, January 13, 2008

Scribbles on Akka

ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிவு இது:) 12 ஜனவரி, 2007 அன்னிக்கு அகமதாபாளையத்துல ஒரு க்யூஸ் போஸ்டைப் போட்டுட்டு பொங்கலுக்காக சென்னை கெளம்பி வந்தாச்சு. அந்தப் பதிவுக்கான பதில்களை எல்லாம் தொகுத்து சரியா ஒரு வருஷம் கழிச்சு ஒரு பதிவு போடனும்னு தோனுனதே அது வரலாற்றுச் சிறப்பு இல்லாம வேற என்னங்க? யாருப்பா அங்கேருந்து அடங்குடான்னு சவுண்ட் விடறது? கிட்டத் தட்ட நாலஞ்சு மாசமா டிராஃப்ட் மோட்ல என்னுடைய சோம்பேறித் தனத்துக்கெல்லாம் விட்னெஸா இருந்துட்டு சரியா ஒரு வருஷம் கழிச்சு வெளி வர்ற சீக்வெல் பதிவு இது. சீக்வெல் பதிவுங்கிறதை தவிர்த்து இன்னுமொரு வரலாற்றுச் சிறப்பும் இந்தப் பதிவுக்கு உண்டு. அதை கடைசியா சொல்றேன்...இப்ப 2007ல கேட்ட கேள்விகளுக்கான பதில்களை நல்ல புள்ளையா ஒரு தடவை படிச்சிடுங்க பாப்போம்.

1. மென்பொருள் துறைக்கும், BPO துறைக்கும் மிகப் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றான இவ்விடத்தில் பஞ்சப் பாண்டவர்கள் குரு துரோணாச்சாரியாரிடம் கல்வி கற்றனர். ஊரின் பெயர் என்ன?
குர்காவ்(Gurgaon). குரு துரோணாச்சாரியாரின் பூர்வீகமாக அறியப் பெறும் இவ்வூர் ஹரியானா மாநிலத்தில் தில்லிக்கு வெகு அருகாமையில் உள்ளது. தில்லியின் கிளைநகரங்களில்(Satellite Town) ஒன்றாகவும் அறியப் பெறுகிறது. குரு கிராம் எனச் சமஸ்கிருத மூலத்தைக் கொண்ட இவ்வூரின் பெயர் நாளடைவில் குர்காவ் ஆனது.

2. ஃபவுஜி(Fauji) எனும் இந்தித் தொலைக்காட்சித் தொடரின் மூலமாக அறிமுகமான பிரபல நடிகர் யார்?
ஷாருக் கான். இத்தொடரில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் கமாண்டோ அபிமன்யூ ராய்.


3. AJJ எனும் குறியீட்டைக்(Station Code) கொண்டு இந்திய இரயில்வே துறையினரால் அறியப்பெறும் ஊர் எது?
அரக்கோணம் சந்திப்பு. ரயில்வே முன்பதிவு சிஸ்டெத்தில்(சிஸ்டெம்-தமிழ்ல என்னங்க?) இந்த ரயில் நிலைய குறியீட்டுக்கு ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அத்துடன் இந்திய ரயில் விசிறிகள் என்று ஒரு சாரார் இருக்கின்றனர். முறைபடுத்தப்பட்ட ஒரு குழுமமாக ரயில் விசிறிகளால்(Rail fans or Rail enthusiasts) நடத்தி வரும் இக்குழுமத்துக்குப் பெயர் IRFCA - Indian Railways Fan Club. இங்கு ரயில்வே துறையைப் பற்றியும், ரயில்களின் தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்கள். இரயில் நிலையக் குறியீட்டை அறிந்து கொள்ளும் ஆர்வலர்களும் இருக்கிறார்கள். Rail fanning என்னும் ஒரு பொழுதுபோக்கும் உள்ளது. அதாவது ஓடுகின்ற ரயிலின் அழகை ரசிப்பதும்(தமாஷ் இல்லீங்க...உண்மையாத் தான்), ரயிலை வாடகைக்கு அமர்த்தி அது செல்லுகின்ற இடங்களை ரசிப்பதும் இரெயில் ஃபேனிங்கின் ஒரு பகுதி. "She chugged into Dadar Station" அப்படின்னெல்லாம் ரயிலைப் பார்த்து சிலாகிப்பவர்களை எல்லாம் இங்கு காணலாம்.

4. மேக்யார்(Magyar) எனும் இயற்பெயர் கொண்ட ஐரோப்பிய நாட்டை நாம் எவ்வாறு அறிகிறோம்?
விக்கிபீடியாவில் ஹங்கேரி. மேக்யார் என்பது தான் ஹங்கேரி நாட்டின் மொழியின் பெயரும் என்பது கூடுதல் தகவல்.

5. பன்னிரண்டாம் நூற்றாண்டில் தற்போதைய கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் பிறந்து இறைவன் 'சென்ன மல்லிகார்ஜுனா'வின் பால் தீராத காதல் கொண்டு பற்றுகளைத் துறந்து நிர்வாண நிலை எய்திய பெண் துறவியின் பெயர் என்ன?
அக்கா மகாதேவி. இப்பதிவுக்குத் தலைப்பு கொடுத்த கேள்வி இது. இசைஞானி இளையராஜா இசையமைத்த திரைப்படங்களைப் பற்றி ஒரு நாள் இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது, மதுஸ்ரீ தத்தா என்ற இயக்குநர் இயக்கிய 'Scribbles on Akka' என்ற குறும்படத்திற்கு இசையமைத்திருப்பதைத் தெரிந்து கொண்டேன். அக்கா மகாதேவி எனும் துறவியின் பாடல்களை (வசனாஸ் என அறியப்படுபவை) இசை படுத்தியிருக்கிறார் ராஜா. யாரிந்த அக்கா என அறிய முற்பட்ட போது தெரிந்து கொண்ட விஷயங்கள் பல. மேலும் விபரங்களுக்கு விகிபீடியாவைப் பாருங்கள். கன்னடத்தில் அக்கா மகாதேவி பாடிய வசனப் பாடல் ஒன்றில் ஆங்கில் மொழிபெயர்ப்பு கீழே.

You can confiscate
money in hand;
can you confiscate
the body's glory?

Or peel away every strip
you wear,
but can you peel
the Nothingness, the Nakedness
that covers and veils?

To the shameless girl
wearing the white jasmine Lord's
light of morning,
you fool, where's the need for cover and jewel?6. செளத்ரி எனும் கதாபாத்திர பெயர் ஏற்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்தத் தமிழ் திரைப்படம் எது?
தங்கப்பதக்கம். நடிகர் திலகத்தின் மிடுக்கையும் கம்பீரத்தையும் கண்டு நான் வியந்த படம். சௌத்ரி கதாபாத்திரத்தின் இமேஜ் இணையத்தில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை :(

7. முதலாம் உலகப் போரின் போது சென்னை உயர்நீதிமன்ற கட்டிடத்தின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்திய ஜெர்மானிய கப்பலின் பெயர் என்ன?
எம்டன். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் ஒரு மூலையில் ரிசர்வ் வங்கி சப்வே அருகில் இந்த நினைவுச் சின்னம் இருக்கிறது. செந்தில் அவர்களின் ஆங்கிலப் பதிவிலிருந்து எடுத்தப் படம் கீழே.
http://chennaitriviae.blogspot.com/2005/10/chennai-trivia-1.html

8. பூ வேலைப்பாட்டினைப் பற்றிய ஜப்பானிய கலையின் பெயர் என்ன?
இகிபானா. ஜப்பானிய துறவி ஒருவர் இக்கலையை அறிமுகப்படுத்தியதாக அறிகிறோம்.


9. 'உலகின் மிகப் பெரிய வைரம்' எனும் அறியப்பெறும் வைரக்கல்லின் பெயர் என்ன?
கல்லினன் ஜனவரி 26, 1905 அன்று தென்னாப்பிரிக்காவில் கல்லினன் எனும் இடத்தில் வெட்டி எடுக்கப்பட்ட இவ்வைரம் 3106.75 காரட்(கிட்டத்தட்ட 622 கிராம்) எடைகொண்டிருந்ததாம்.


10. நடிகர் விஜயகாந்த் அறிமுகமான 'ஒரு தூரத்து இடிமுழக்கம்' என்ற திரைப்படத்தின் இசையமைப்பாளர் யார்?
சலில் சவுத்ரி. ஜி.ராகவன் மிகச் சரியாக பதில் அளித்ததோடு, கூடுதல் தகவலையும் தந்திருந்தார். அதனால் அவர் அப்பதிவில் இட்ட பதிலையே இங்கு வெட்டி ஒட்டுகிறேன்.

ஒரு கிடையாது. தூரத்து இடி முழக்கம்-தான் படத்தின் பெயர். பி.விஜயன் இயக்கிய இந்தப் படத்துக்கு இசை சலீல்தா என்றழைக்கப்படும் சலீல் சௌத்ரி. இந்தப் படத்தில் இவரது மனைவியான சபீதா சௌத்ரி ஜெயச்சந்திரனோடு சேர்ந்து ஒரு பாடலைப் பாடியுள்ளார். அழியாத கோலங்கள் படத்திற்கும் இசை சலீல் சௌத்ரிதான். அதில் ஜெயச்சந்திரனும் பி.சுசீலாவும் இணைந்து பாடிய "பூவண்ணம் போல மின்னும்" என்ற பாடல் மிகப் பிரபலம். இவர் கரும்பு என்ற வெளிவராத திரைப்படத்திற்காக சிலப்பதிகாரத்தின் கானல்வரிப் பாடல்களுக்கு பி.சுசீலாவையும் ஏசுதாசையும் பாட வைத்து இசையமைத்தார். பி.சுசீலா பாடியது மகிழ்ச்சியான மெட்டில். ஏசுதாஸ் பாடியது சோக மெட்டில்.

11. கப்பல்களில் அதிகப் படியான சரக்கு ஏற்றப்பட்டுள்ளதா எனக் கண்டறிய கப்பலின் இருபுறங்களிலும் வரையப்பட்டிருக்கும் கோடுகளின் பெயர் என்ன?
ப்ளிம்சால் கோடுகள்(Plimsoll Lines) கப்பலின் பாதுகாப்பிற்கான ஒரு சர்வதேச தரக்கோட்பாடாகவும் ப்ளிம்சால் கோடுகள் அறியப் பெறுகின்றன.

12. உலகின் மிகச்சிறிய நாய் இனத்தின் பெயர் என்ன?
சிஹுவாஹுவா. மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு மாநிலமான சிஹுவாஹுவாவில் கண்டுபிடிக்கப் பட்ட இந்த நாயினம் ஆறு முதல் ஒன்பது அங்குலம் மட்டுமே உயரம் கொண்டது. மிகவும் துறுதுறுப்பான நாயினமாக இது அறியப் பெறுகிறது.


13. வீரபாண்டிய கட்டபொம்மனின் இளைய சகோதரரான ஊமைத்துரையின் இயற்பெயர் என்ன?
குமாரசாமி என்பது இயற்பெயர் என்று பல தளங்கள் சொல்கின்றன. சிவத்தையா என்ற பெயராலும் அறியப்பெறுகிறார். கட்டபொம்மன் கருத்தையா என்ற பெயரால் அறியப்பெற்றார். தகவல்களை வழங்கிய வவ்வால் அவர்களுக்கு மிக்க நன்றி. துரைசிங்கம் என்பது இன்னொரு சகோதரரின் பெயர். முன்னர் குறிப்பிட்டது போல ஊமைத்துரையின் இயற்பெயர் துரைசிங்கம் அல்ல. வரலாற்று ஆசிரியர்களுக்குக் கட்டபொம்மனைப் பற்றி மாற்று கருத்துகள் இருந்த போதிலும் அவருடைய இளைய சகோதரரான ஊமைத்துரையின் வீரத்தையும் திறமையையும் பற்றிப் பெருமையாகவே சொல்கிறார்கள்.

14. 17ஆம் நூற்றாண்டில், இத்தாலி நாட்டினைச் சேர்ந்த ஸ்டிரேடிவேரி(Stradivari) குடும்பத்தினர் தயாரித்த இக்கருவிகள்(ஸ்டிரேடிவேரியஸ் Stradivarius என்று அறியப்படுபவை) தற்போது உலகம் முழுவதும் மொத்தம் 700 மட்டுமே உள்ளன. பல்லாயிரக் கணக்கான டாலர்கள் மதிப்பு கொண்டவை இக்கருவிகள். எந்த கருவியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்?
வயலின் அண்டோனியோ ஸ்டிரேடிவாரி என்பவரால் 17ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட வயலின்கள் தங்களின் உன்னதமான இசைக்காக உலகப்புகழ் பெற்றவை. வயலின் தயாரிக்கப்படும் மரத்தினைப் பதப்படுத்துவதில் உபயோகப்படுத்தப் படும் விசேட முறையால் இத்தனித்துவமான இசை உருவாகுவதாகச் சொல்கிறார்கள். வயலினைத் தவிர ஸ்டிரேடிவாரி குடும்பத்தினர் தயாரித்த செல்லோ, வயோலா இசைக்கருவிகளும் தங்கள் தனித்துவமான இசைக்காகப் புகழ்பெற்றவை.


15. இஸ்ரேல் நாட்டின் தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் பெயர் என்ன?
எல் அல்(El Al) ஹீப்ரூ மொழியில் எல்-அல்லை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் 'Skyward' எனப் பொருள்படும். அதையே தமிழ்ல மொழிபெயர்த்தால் "மானத்தைப் பாத்த...". மானம் பாத்த ஏர்லைன் தான் எல்-அல்.


இன்னொரு வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தி இருக்கேன்னு சொன்னேனே...அது என்னன்னா இந்தப் பதிவை ஜனவரி 12, 2007 அன்று அகமதாபாத்தில் போட்டு விட்டு ஜனவரி 13,2007 அன்று பொண்ணு பாக்க போனேன். கொஞ்சம் பின்நவீனத்துவமா சொல்லனும்னா நான் இப்ப ரங்கமணியா வேலை பாத்துக்கிட்டு இருக்கறவங்க கிட்ட போய் என்னை காட்டிட்டு வந்த நாளு:). பொண்ணு பாக்க போறதுக்கு முன்னாடி கூட அந்த குவிஸ் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை மட்டுறுத்திக்கிட்டு இருந்தேன். அது தான் வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய செய்தி.

18 comments:

வவ்வால் said...

ஒருவருசம் முன்ன போட்டப்பதிவை எடுத்து போட்டதா, இது ஆனாலும் அப்படியே தப்பும் தவறுமா தான் வருமா?(dont mistake me)

மற்றப்பலவும் எனக்கு தெரிந்தது என்றப்போதிலும் கீழ்கண்டது பற்றி மட்டும் ஒரு மாற்றுக்கருத்து!

//13. வீரபாண்டிய கட்டபொம்மனின் இளைய சகோதரரான ஊமைத்துரையின் இயற்பெயர் என்ன?
துரைசிங்கம். //

ஊமைத்துரையின் இயற்பெயர் சிவத்தையா! அல்லது சிவத்தப்பாண்டி!துரை சிங்கம் என்பது இன்னொரு சகோதரர் பெயர்
(இதில் இவர்கள் எல்லாம் ஒரு ஒரே தாய்க்கு பிறந்தவர்கள் அல்ல என்ற ஒரு கேள்வி உண்டு எனக்கு பதில் தெரியாது,அதாவது ஒரு தந்தை, பல மனைவிகள்)

கட்டப்பொம்மன் இயற்பெயர் கருத்தப்பாண்டி!

சகோதரிகள் பெயர் துரைக்கண்ணு, சண்முகவடிவு என நினைக்கிறென்!

நான் ஏற்கனவே வீரப்பாண்டிய கட்டப்பொம்மன் பற்றிய பதிவும் போட்டுள்ளேன், அதன் சுட்டி தேடவும் பொறுமை இல்லை!

இலவசக்கொத்தனார் said...

ம். ஓக்கே.

Unknown said...

சுவாராசியமான தகவல்கள்! எழுதி வருஷம் ஒண்ணு ஆனாலும், இந்தத் தகவல்கள் என்றும் மாறாதவைதானே (வவ்வாலின் திருத்தங்களையும் சேர்த்து - அவை சரியாக இருக்கும் பட்சத்தில்)

வவ்வால், கட்டபொம்மன் சுட்டி அனுப்ப முடியுமா? ஒரு காலத்தில் வெறித்தனமாகப் பார்த்த படம் - வீரபாண்டியக் கட்டபொம்மன்!

கைப்புள்ள said...

//ஒருவருசம் முன்ன போட்டப்பதிவை எடுத்து போட்டதா, இது ஆனாலும் அப்படியே தப்பும் தவறுமா தான் வருமா?(dont mistake me)//

வாங்க வவ்வால் சார்,
தவறாக எடுத்துக் கொள்ள ஒன்னுமில்லை. சரியான தகவல் தர வேண்டும் எனும் எண்ணத்திலேயே தாங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அதோடு நான் கூறியிருக்கும் பதிலும் தவறானது தான். அதனால் பிழையான ஒரு தகவல் தந்தமைக்கு வருந்துகிறேன்.

நீங்க சொன்ன மாதிரி ஊமைதுரையோட இன்னொரு பேரு சிவத்தையா. இயற்பெயர் குமாரசாமின்னு பல தளங்களில் சொல்கிறார்கள். துரைசிங்கம் என்பது இன்னொரு சகோதரரின் பெயர் என்பதும் சரியே. கட்டபொம்மனின் தந்தை ஜெகவீரபாண்டியனுக்குப் பல மனைவிகள் இருந்ததும், கட்டபொம்மனும் ஊமைத்துரையும் வெவ்வேறு தாய் வயிற்று பிள்ளைகள் என்பதும் சரியான தகவல்.

http://www.muthamilmantram.com/viewtopic.php?f=176&t=11332 இங்கேயும்

தங்கள் பதிவான இதிலும்
http://vovalpaarvai.blogspot.com/2007/06/blog-post_12.html தகவல்களைச் சரிபார்த்தேன்.

இங்கே - http://www.treasurehouseofagathiyar.net/42800/42889.htm ஊமைத்துரையைப் பற்றி கூறியிருப்பது
"A new change took place at this juncture.
Oomaithurai, whose real name was Kumarasamy, assumed
control of the southern insurgency.
He was also called Umaiyan.
Kattabommu's father JegaVeera Kattabommu had several
wives. The first wife's only son was Umaiyan.
He was deaf and dumb.
The second wive's eldest son was Kattabommu followed
by Sevathaiya.
Since Umaiyan was deaf and dumb and Kattabommu was
the oldest of the sons of Jegavira Kattabommu, he was made
the Palayakarar.
Umaiyan from the very beginning became the undisputed
leader.
Here is what the Britishers have to say about Umaiyan:
"So great was the popularity that he was known by
different appelations but of the same meaning: 'Oomie' or
'Dumb'among the common people. Mookah among the
Mohammedans and 'Dumb Brother' (of Kattabommu),
Dumb Boy of Dumby among the Englsihmen
The rebels reverentially reffered to him as 'Swamy',
literally meaning deity.
The personal appearance of Oomaithurai seemed
deceptive. Though sickly, he possessed a masterful mind,
commanded the absolute loyalty of the people.
James Welsh, who had an intimate knowledge of this
hero, had declared,

"He was one of the most extraordinary mortals I ever knew".

He asserted the Oomie was adored, his slight sign
was an oracle, and every man flew to execute whatever he
commanded. No council assembled at which he did not
preside. no daring adventure was undertaken which he
did not lead..... Whatever undisciplined valour could effect,
was sure to be achieved wherever he appeared.....
An enterprising character and restless spirit, he was
a leader-violent and rough, yet the gifts of his personal
magnetism was such that he was passionately loved and
affectionately adored.
A deadly enemy of the English, he masterminded the
formulation and execution of those plans which were
aimed at the annihilation of imperialism. Together with
his brother Kattabomman he enginered the organisation
of the Tirunelveli League against the company in 1798.
He accompanied his brother to Ramnad and when
sepoys appeared to arrest Kattabommu, he alerted his
followers and manoevered the escape. When hostilities
broke out, he led his men in the successful defence of
Panjalamkurichi.

More conspicuous and colourful than Vira Pandya,
Oomaithurai was the de facto leader of the AntiBritish
reaction of 1799.
So profound was the affection of Kattabommu for
his dumb brother that even when he was taken to the
gallows, he expressed his anxiety for the life of Oomaithurai..
Subsequently together with other patriots, he ws thrown
into prison at Palayamkottai but made his escape in
February 1801.
Since then he devoted himself to successive assaults
on hostile positions and destruction of British authority.
His method of representing the English was extremely
simple.

Oomee collected a few little pieces of straw, arranged
them on the palm of his left hand to represent the British
force. Then with other signs characteristic of a dumb man
and a whizzing sound, drew the other hand across and swept
them off. This was the signal for attack.

The exploits of Umaithurai imparted a real thrill and an
intensity to the struggle that followed".

இதில் ஊமைதுரை ஜெகவீரபாண்டியனின் முதல் மனைவியின் மகன் எனவும், கட்டபொம்மன், சிவத்தையா ஆகியோர் ஜெகவீரபாண்டியனின் இரண்டாம் மனைவியின் மகன்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் சிவத்தையா எனும் பேரால் தான் ஊமைத்துரை அறியப்பட்டதாக நான் படித்ததும் தங்கள் பின்னூட்டத்தைக் கண்டு நினைவுக்கு வருகிறது. சரியான தகவல்கள் அடங்கிய சுட்டியைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் தெரியப் படுத்துகிறேன். வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி.

கைப்புள்ள said...

//ம். ஓக்கே//

கோச்சிக்காதீங்க சாமி. இந்த மாதிரி பழசை எல்லாம் தூசி தட்டிப் போட்டாலாவது முன்ன மாதிரி எழுத முடியுதான்னு பாக்கலாம் :(

கைப்புள்ள said...

//சுவாராசியமான தகவல்கள்! எழுதி வருஷம் ஒண்ணு ஆனாலும், இந்தத் தகவல்கள் என்றும் மாறாதவைதானே (வவ்வாலின் திருத்தங்களையும் சேர்த்து - அவை சரியாக இருக்கும் பட்சத்தில்)//
வாங்க தஞ்சாவூரான், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. திருத்தங்களைச் செய்துவிட்டேன்.

//வவ்வால், கட்டபொம்மன் சுட்டி அனுப்ப முடியுமா? ஒரு காலத்தில் வெறித்தனமாகப் பார்த்த படம் - வீரபாண்டியக் கட்டபொம்மன்!//
வவ்வாலுக்குக் கொடுத்த பதில் பின்னூட்டத்தில் அவர் எழுதிய பதிவின் சுட்டி இருக்கிறது பாருங்கள். அத்தோடு என்னுடைய இந்த பழைய பதிவையும் பாருங்கள்.

http://kaipullai.blogspot.com/2006/03/blog-post_114181953824970742.html

Geetha Sambasivam said...

ஊமைத்துரையைப் பத்தி நீங்க போட்டிருக்கும் சுட்டியை நானும் பார்த்தேன். இது தவிர இன்னும் ஏதோ ஒரு புத்தகத்திலும் படிச்ச்சிருக்கேன், ம.பொ.சி.யா, சரியா நினைவுக்கு வரலை! அருமையான தகவல்கள், தென்மாவட்ட மக்கள் ஊமைத்துரையை மிகவும் கொண்டாடுவார்கள். ஆனால் கட்டபொம்மன் காட்டிக் கொடுக்கப் பட்டதுக்கு, எட்டப்பனின் முன்னோரான பூலித்தேவனுக்கு, (உண்மையில் இவர் கட்டபொம்மனுக்கும் முன்னாலே ஆங்கிலேயரை எதிர்த்தவர், இன்னிக்கும் சங்கரன் கோயிலில் இவர் மறைந்ததாய்ச் சொல்லப் படும் சுரங்கம், அம்மன் சன்னதிக்குப் பக்கம் உள்ளது) ஜெகவீரபாண்டியன், (கட்டபொம்மனின் அப்பா) செய்த துரோகத்துக்கான பழிவாங்கலே ஆகும். இதை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதும் நிஜம், வவ்வால் உட்பட.

@வவ்வால், இப்போ விவாதத்துக்கு வரலை, நீங்க எழுதுங்க, பார்த்துக்கிறேன்.

Geetha Sambasivam said...

ரங்கமணியாகத் தேர்வு ஆகி ஒரு வருஷ நிறைவைக் கொண்டாடுவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நிஜமாவே சரித்திரத்தில் இடம் பெற்ற நிகழ்ச்சி தான்! :P

கப்பி | Kappi said...

நீங்க என்னைக்குமே பழசை மறக்காதவர்ன்னு இன்னொரு முறை நிருபிச்சிட்டீங்க தல :))

ரங்கமணி இண்டர்வியூல தேர்வாகி ஒரு வருஷம் ஆயிடுச்சா...வாழ்த்துக்கள் :))

கைப்புள்ள said...

//ஊமைத்துரையைப் பத்தி நீங்க போட்டிருக்கும் சுட்டியை நானும் பார்த்தேன். இது தவிர இன்னும் ஏதோ ஒரு புத்தகத்திலும் படிச்ச்சிருக்கேன், ம.பொ.சி.யா, சரியா நினைவுக்கு வரலை! அருமையான தகவல்கள், தென்மாவட்ட மக்கள் ஊமைத்துரையை மிகவும் கொண்டாடுவார்கள். ஆனால் கட்டபொம்மன் காட்டிக் கொடுக்கப் பட்டதுக்கு, எட்டப்பனின் முன்னோரான பூலித்தேவனுக்கு, (உண்மையில் இவர் கட்டபொம்மனுக்கும் முன்னாலே ஆங்கிலேயரை எதிர்த்தவர், இன்னிக்கும் சங்கரன் கோயிலில் இவர் மறைந்ததாய்ச் சொல்லப் படும் சுரங்கம், அம்மன் சன்னதிக்குப் பக்கம் உள்ளது) ஜெகவீரபாண்டியன், (கட்டபொம்மனின் அப்பா) செய்த துரோகத்துக்கான பழிவாங்கலே ஆகும்//

அருமையான தகவல்கள் மேடம். இலக்கியத்துல தான் பாண்டித்யம்னு பார்த்தா வரலாற்றையும் கரைச்சு குடிச்சி கரை கண்டுருக்கீங்களே...சூப்பர் அண்ட் நன்றி.
:)

கைப்புள்ள said...

//ரங்கமணியாகத் தேர்வு ஆகி ஒரு வருஷ நிறைவைக் கொண்டாடுவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நிஜமாவே சரித்திரத்தில் இடம் பெற்ற நிகழ்ச்சி தான்! :P//

தங்கள் சிஷ்யகேடி குண்டரடிப்பொடி தன்யன் ஆனான். நன்னி ஹை
:)

கைப்புள்ள said...

//நீங்க என்னைக்குமே பழசை மறக்காதவர்ன்னு இன்னொரு முறை நிருபிச்சிட்டீங்க தல :))//
ஹி...ஹி...இல்லன்னா நம்ம வண்டி எப்படி ஓடும்? பழைய ஸ்டாக்கை வச்சித் தானே ஒப்பேத்திட்டு இருக்கோம்?
:)

//ரங்கமணி இண்டர்வியூல தேர்வாகி ஒரு வருஷம் ஆயிடுச்சா...வாழ்த்துக்கள் :))//
டேங்கீஸ்பா
:)

Unknown said...

கைப்ஸ் அன்ட் வவ்ஸ்,

சுட்டிகளைப் படித்தேன்... பல சுவாராசியமான தகவல்களை அறிந்தேன். புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு விஜய ரகுனாத தொண்டைமான் எப்படி அதிபதியானார் என்பது, நான் செவி வழி கேட்ட செய்தி!!

நன்றி!

Anonymous said...

அடடா! ஒரு வருஷம் ஆயி போச்சா?
நீங்க குவிஜு போட்டதை தான் சொன்னேன்! :p

உங்களுக்கு கொக்கி போட்ருக்கேன், சின்னது தான்! சும்மா அசராம எழுதுங்க. :)

Anonymous said...

Did you find out the real name of Umaiyan? :-)

Anonymous said...

தல... தல, உன்னோட போட்டோவ ரொம்ப நல்லா இருக்குன்னு சங்கத்துல சொல்லி இருக்காங்க.. தல

Anonymous said...

ups sorry delete plz [url=http://duhum.com].[/url]

Anonymous said...

ups sorry delete plz [url=http://duhum.com].[/url]