Friday, January 11, 2008

என்ன சத்தம் இந்த நேரம்?

2007ல எடுத்ததுல பிடிச்ச படத்தைப் போட்டு ஒரு போஸ்ட் போடனும்னு கொத்ஸ் போட்ட
கொக்கில (அதாங்க tag) மாட்டுனதால - டிசம்பர் மாசம் பெங்களூருக்குப் பக்கத்துல இருக்கற நந்தி ஹில்ஸ் போனப்ப எடுத்த படம் ஒன்னு தேறுச்சு. திப்புஸ் டிராப்ங்கிற இடத்துக்குப் பாறை மேலே ஏறி போயிட்டிருக்கறப்ப இந்த காட்சி என் கண்ணுல பட்டுச்சு. டேஞ்சர்னு எழுதிருக்கற பாறை மேல அதல பாதாளத்தை நோக்கி உக்காந்துருக்கற ஜோடியைப் பாத்ததும் சட்டுன்னு எதையும் யோசிக்காம instinctiveஆ எடுத்த படம். வீட்டுக்கு வந்து கொஞ்சம் பிற்தயாரிப்பு செஞ்சிட்டு பாத்தா 'அட! நாமளா எடுத்தோம்'னு சொல்ற அளவுக்கு இருந்துச்சு.



உண்மையைச் சொல்றேங்க...படத்துல எனக்கு பாக்க கிடைக்கற அந்த ஒரு பிரம்மாண்டமான ஃபீலிங் நேர்ல பாக்கும் போது கெடைக்கல. பிடிச்சதுக்குக் காரணம்னு சொல்லப் போனா ஒரு நல்ல கதையோ கவிதையோ எழுதும் போது, நாம சொல்ல வர்ற கருத்தைத் தாண்டி படிக்கிறவங்க கற்பனைக்குக் கொஞ்சம் தீனி போட்டுச்சின்னா அது இன்னும் சிறப்பா அமையும்னு எங்கேயோ படிச்சதா ஞாபகம். அதே மாதிரி இந்த படத்துலயும் "What they are upto"அப்படின்னு நம்ம கற்பனைக்குத் தீனி போடற மாதிரி அமைஞ்ச விஷயம் எனக்கு ரொம்ப பிடிச்சது. அதுக்கேத்தா மாதிரி திப்புஸ் டிராப் பாத்துட்டுத் திரும்பி வரும் போது டேஞ்சர்னு எழுதியிருந்த பாறை மட்டும் தான் இருந்தது...அந்த ஜோடி அங்கே இல்லை. அபவுட் டர்ன் எடுத்து தான் திரும்பி தான் கீழே இறங்கி போயிருப்பாங்கன்னு நம்புவோமாக. ஒரு சிச்சுவேசன் பாட்டு ஞாபகத்துக்கு வருது. நான் ரசிச்சேன்...நீங்களும் ரசிப்பீங்கன்னு நம்பறேன் :)

படம் : புன்னகை மன்னன்
பாடல் : வாலி்
இசை : இளையராஜா
பாடியது : S.P.பாலசுப்பிரமணியம்


என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா
அடடா..

(என்ன சத்தம் இந்த நேரம்...)

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே

மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ
பதில் சொல்வார் யாரோ

(என்ன சத்தம் இந்த நேரம்...)

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ

மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யாரிவர்கள் இரு பூங்குயில்கள்
இளங்காதல் மான்கள்

(என்ன சத்தம் இந்த நேரம்...)

மூனு பேரைக் கொக்கி போடணுமாமில்லே...கொக்கில மாட்டுன அந்த மூனு மீனுங்க...
1. தேவ்
2. மருதம்
3. வடக்குப்பட்டு ராமசாமி

29 comments:

இலவசக்கொத்தனார் said...

கைப்ஸ்

முதலில் நம்ம கொக்கியில் மாட்டுனதுக்கு நன்னி.

அப்புறம், நீங்களும் தங்கமணியும் அந்த பாறை மேல என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க? அப்போ படம் எடுத்தது யாரு? சிச்சுவேஷன் சாங் அப்படின்னு கமல் தப்பிச்சுட்டு ரேகாவை காலி பண்ணும் பாட்டைப் போட்டது ஏன்? ஏன் இந்த கொலை வெறி?

சரி போகட்டும். தங்கமணி இருக்கும் இடத்தின் கீழ் டேஞ்சர் என எழுதி இருப்பது போல் படமெடுத்த உங்கள் நுண்ணரசியலைக் கண்டு பிரமித்து நிற்கிறேன்.

இருவரின் கீழுமே இருக்கிறது என்ற சப்பை வாதத்தை முன் வைத்தால் காதலில் விழுவது டேஞ்சர் என அனுபவப் பாடம் எடுக்கிறீர்களா?

இந்த பின்னூட்டம் வெளியிடப்படுமா? அப்படி வெளியிட்டால் அதற்குப் பின்னால் இந்த பதிவு தங்கமணி கண்களுக்குப் படுமா?

//பிடிச்சதுக்குக் காரணம்னு சொல்லப் போனா ஒரு நல்ல கதையோ கவிதையோ எழுதும் போது, நாம சொல்ல வர்ற கருத்தைத் தாண்டி படிக்கிறவங்க கற்பனைக்குக் கொஞ்சம் தீனி போட்டுச்சின்னா அது இன்னும் சிறப்பா அமையும்னு எங்கேயோ படிச்சதா ஞாபகம்.//

இந்த கற்பனை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

சேதுக்கரசி said...

அருமையான படம்! காதலுக்கு பயமில்லை போலிருக்கு...

கைப்புள்ள said...

//அப்புறம், நீங்களும் தங்கமணியும் அந்த பாறை மேல என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க? அப்போ படம் எடுத்தது யாரு? சிச்சுவேஷன் சாங் அப்படின்னு கமல் தப்பிச்சுட்டு ரேகாவை காலி பண்ணும் பாட்டைப் போட்டது ஏன்? ஏன் இந்த கொலை வெறி?//
ஐயா சாமி, என்னை ஓவர் டைம் மாவாட்ட வைக்கனும்னு எத்தனை நாளா ப்ளான்? ஏன் இந்த கொலைவெறின்னு நான் தான்யா கேக்கணும் :(

//சரி போகட்டும். தங்கமணி இருக்கும் இடத்தின் கீழ் டேஞ்சர் என எழுதி இருப்பது போல் படமெடுத்த உங்கள் நுண்ணரசியலைக் கண்டு பிரமித்து நிற்கிறேன்//
பைசா பொறாத சப்பை மேட்டர்ல கூட நுண்ணரசியலைக் காணும் உங்க நுண்ணரசியலைக் கண்டு நான் பிரமித்து நிற்கிறேன்.

//இருவரின் கீழுமே இருக்கிறது என்ற சப்பை வாதத்தை முன் வைத்தால் காதலில் விழுவது டேஞ்சர் என அனுபவப் பாடம் எடுக்கிறீர்களா?//
நான் ஒன்னுமே சொல்லலை ஐயா. நீங்க போட்ட கொக்கியில மாட்டுன ஒரு புழுவா நான் இப்ப போராடிட்டு இருக்கேன்.

//இந்த பின்னூட்டம் வெளியிடப்படுமா? அப்படி வெளியிட்டால் அதற்குப் பின்னால் இந்த பதிவு தங்கமணி கண்களுக்குப் படுமா?//
விலாவில் குத்து வாங்கிக்கிட்டு தான் இந்த கமெண்டையே டைப் பண்ணிட்டு இருக்கேன்.

//இந்த கற்பனை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?//
ஆஹா...உண்மையிலேயே 'you have left a lot to imagine'.

கைப்புள்ள said...

//அருமையான படம்! காதலுக்கு பயமில்லை போலிருக்கு...//

அடாடடா! உங்க கற்பனையையும் தூண்டி விட்டுட்டேன் போலிருக்கு
:)

rv said...

கைப்ஸ்,
கலக்கல் படம்...


கொத்ஸின் கேள்விக்கு நீர் சொன்ன பதில்கள் ஏனோதானோவென்று இருந்ததால் அவர் கேள்விக்கு ரிப்பிட்டேய் சொல்லிக்கொள்கிறேன்.

பி.கு: வைபாலஜி படித்து நீரும் தேறியிருப்பதாக கருத இடமிருப்பதால் தங்கமணியின் கவனத்திற்கு இப்படம் கண்டிப்பாக சிக்கியிருக்க வாய்ப்பில்லை என்று கருதவேண்டியிருக்கிறது. தெளிவுபடுத்துக....

மங்களூர் சிவா said...

கொத்ஸ் பின்னூட்ட கேள்விக்கணைகள் ஜூப்பர்!!

சேதுக்கரசி said...

சும்மா நீங்க மட்டும் பார்த்துக்கிட்டிருக்காம இதை ஏதாவது பத்திரிகைக்கோ இணையத்தில் சிறந்த புகைப்படக் களஞ்சியங்களுக்கோ அனுப்புங்க...

Sathiya said...

அருமையான படம். உண்மையிலேயே நீங்க "எடுப்பார் கைப்புள்ள"னு இப்போதான் புரியுது;)

Sanjai Gandhi said...

காதலுக்கு அறிவில்லை. அப்படியே படத்திற்கு மேல் ஒரு X குறியை போட்டிருக்கலாம். இதை படித்ததும் குசும்பனின் சமீபத்திய பதிவு நினைவுக்கு வருது.

குசும்பன் said...

படத்தைபார்த்ததும் புன்னகை மன்னன்
படம்தான் நினைவுக்கு வந்தது கீழே பதிவை படித்தால் நீங்களும் அதையே சொல்லி இருக்கீங்க, மிக அருமையான படம்!

குசும்பன் said...

இன்னும் பல கேள்விகள் இலவசக்கொத்தனார் கேட்கனும் என்று ஆசை படுகிறேன்.

எ.கா (1. கைப்புள்ள அழகில் மயங்கிய எத்தனையாவது ஆள் அவுங்க?

2. சிங்கிள் டீக்கே சிங்கி அடிக்கும் பொழுது கைப்புள்ள மட்டும் தினம் தினம் .......

இப்படி பல கேள்விகளை கேளுங்க கொத்ஸ்!!!

Dubukku said...

sooper photo.
அப்புறம் எப்பிடி இருக்கீங்க. தங்கமணி சகிதமாய் நலம் என்று நம்புகிறேன். விரும்புவதும் அதுவே.

Geetha Sambasivam said...

இது என்ன, பூமராங் போல நான் கொடுத்த கமெண்ட் திரும்பி வருது? இது என்ன டெக்னிக்? :P

Geetha Sambasivam said...

//எ.கா (1. கைப்புள்ள அழகில் மயங்கிய எத்தனையாவது ஆள் அவுங்க?

2. சிங்கிள் டீக்கே சிங்கி அடிக்கும் பொழுது கைப்புள்ள மட்டும் தினம் தினம் .......

இப்படி பல கேள்விகளை கேளுங்க கொத்ஸ்!!!//

அனைவரின் சார்பாய்க் கேட்ட கொத்தனாருக்குப் பதில் சொல்லவில்லை என்றால் கேள்விகள் அனைத்தும் தங்கமணிக்கு அனுப்பப் படும்!

Sathiya said...

போட்டாச்சு போட்டாச்சு. நீங்க கேட்டுகிட்ட மாதிரி பதிவ போட்டு கொக்கியும் போட்டாச்சு;) குத்தம் குறை இருந்தா சொல்லுங்க. http://vadakkupatturamasamy.blogspot.com/2008/01/2007.html

குசும்பன் said...

///கீதா சாம்பசிவம் said...
//எ.கா (1. கைப்புள்ள அழகில் மயங்கிய எத்தனையாவது ஆள் அவுங்க?

2. சிங்கிள் டீக்கே சிங்கி அடிக்கும் பொழுது கைப்புள்ள மட்டும் தினம் தினம் .......

இப்படி பல கேள்விகளை கேளுங்க கொத்ஸ்!!!//

அனைவரின் சார்பாய்க் கேட்ட கொத்தனாருக்குப் பதில் சொல்லவில்லை என்றால் கேள்விகள் அனைத்தும் தங்கமணிக்கு அனுப்பப் படும்!///

என்னது இன்னும் அனுப்பவில்லையா? என்னா போங்க:(((( அட்லீஸ்ட் போன் செஞ்சாவது சொல்லிடுங்க.

அது போல் பல கேள்விகள் இன்னும் இருக்கு!!!

கைப்புள்ள said...

//கைப்ஸ்,
கலக்கல் படம்...//
நன்றி மருந்து


//
கொத்ஸின் கேள்விக்கு நீர் சொன்ன பதில்கள் ஏனோதானோவென்று இருந்ததால் அவர் கேள்விக்கு ரிப்பிட்டேய் சொல்லிக்கொள்கிறேன்.//

சரி...இனிமே வெட்டு ஒன்னு துண்டு ஒன்னு தான்...படத்தை எடுத்தது தான் நானு...மாடலிங் ஃப்ரீயா வேற யாரோ ரெண்டு பேரு பண்ணாங்க...இந்த வெளக்கம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

//
பி.கு: வைபாலஜி படித்து நீரும் தேறியிருப்பதாக கருத இடமிருப்பதால் தங்கமணியின் கவனத்திற்கு இப்படம் கண்டிப்பாக சிக்கியிருக்க வாய்ப்பில்லை என்று கருதவேண்டியிருக்கிறது. தெளிவுபடுத்துக....//

சிக்கலை...சிக்கலை...சிக்கலை...சிக்கியிருந்தா நான் சிதைஞ்சிருப்பேனே இந்நேரம்
:)

கைப்புள்ள said...

//கொத்ஸ் பின்னூட்ட கேள்விக்கணைகள் ஜூப்பர்!!//

ஏன் ஜூப்பரா இருக்காது? பதில் சொல்றவன் வேற எவனோ தானே?
:)

கைப்புள்ள said...

//சும்மா நீங்க மட்டும் பார்த்துக்கிட்டிருக்காம இதை ஏதாவது பத்திரிகைக்கோ இணையத்தில் சிறந்த புகைப்படக் களஞ்சியங்களுக்கோ அனுப்புங்க...//

உண்மையாவாச் சொல்றீங்க? இதை போய் தங்க்ஸ் கிட்டச் சொல்லனும்...

மணந்த பொழுதின் பெரிதுவக்கும் தன்னூட்டுக்காரனை கலைஞன் எனக் கேட்ட வொய்ஃப்
:)

கைப்புள்ள said...

//அருமையான படம். உண்மையிலேயே நீங்க "எடுப்பார் கைப்புள்ள"னு இப்போதான் புரியுது;)//

டேங்ஸுங்கங்கோ
:)

கைப்புள்ள said...

//காதலுக்கு அறிவில்லை. அப்படியே படத்திற்கு மேல் ஒரு X குறியை போட்டிருக்கலாம். இதை படித்ததும் குசும்பனின் சமீபத்திய பதிவு நினைவுக்கு வருது//

நன்றிங்க கஜினி சார். குசும்பன் பதிவையும் பாக்கறேன்.

கைப்புள்ள said...

//படத்தைபார்த்ததும் புன்னகை மன்னன்
படம்தான் நினைவுக்கு வந்தது கீழே பதிவை படித்தால் நீங்களும் அதையே சொல்லி இருக்கீங்க, மிக அருமையான படம்!//

ரொம்ப நன்னிங்க குசும்பரே
:)

கைப்புள்ள said...

//எ.கா (1. கைப்புள்ள அழகில் மயங்கிய எத்தனையாவது ஆள் அவுங்க?

2. சிங்கிள் டீக்கே சிங்கி அடிக்கும் பொழுது கைப்புள்ள மட்டும் தினம் தினம் .......//

குடும்பத்துல கொழப்பம் உண்டாக்க விடாம போட்டீங்க போலிருக்கு? :(

கைப்புள்ள said...

//sooper photo//
நன்றிங்க டுபுக்கு சார்

//அப்புறம் எப்பிடி இருக்கீங்க. தங்கமணி சகிதமாய் நலம் என்று நம்புகிறேன். விரும்புவதும் அதுவே//
லெட்டர் எழுதி விசாரிக்கிற மாதிரி விசாரிச்சிருக்கீங்க. ரொம்ப நல்லாருக்கேன். இந்தா டுபுக்குவர்ல்டுக்கு வந்துக்கிட்டே இருக்கேன்.
:)

கைப்புள்ள said...

//இது என்ன, பூமராங் போல நான் கொடுத்த கமெண்ட் திரும்பி வருது? இது என்ன டெக்னிக்? :P//

என்னத்தைச் சொல்ல? தலைவியின் திறமையே திறமை
:)

கைப்புள்ள said...

//அனைவரின் சார்பாய்க் கேட்ட கொத்தனாருக்குப் பதில் சொல்லவில்லை என்றால் கேள்விகள் அனைத்தும் தங்கமணிக்கு அனுப்பப் படும்!//

கறுப்பு அஞ்சல் செல்லாது செல்லாது...ஐ ஆம் யுவர் பெஸ்ட் ஃபிரெண்ட்ய்யா
:(

கைப்புள்ள said...

//போட்டாச்சு போட்டாச்சு. நீங்க கேட்டுகிட்ட மாதிரி பதிவ போட்டு கொக்கியும் போட்டாச்சு;) குத்தம் குறை இருந்தா சொல்லுங்க//

பாத்தாச்சு பாத்தாச்சு...சில்ஹுவெட் படம் நல்லாருக்குங்க
:)

கைப்புள்ள said...

//என்னது இன்னும் அனுப்பவில்லையா? என்னா போங்க:(((( அட்லீஸ்ட் போன் செஞ்சாவது சொல்லிடுங்க.

அது போல் பல கேள்விகள் இன்னும் இருக்கு!!!//

குசும்பா...ஏன்? ஏன்? ஏனிந்த கொலைவெறி?
:(

Marutham said...

Ahaaa enga pochu en comment? :O

:( therilaye...Anyways meendum podren.
Thank you for the tag kaipullai :)
Will post it soon. Sorry for the delay.
Indha pic unga flickr page'laye paathruken... A very rare shot. Andha jodi ippo epdi irukaanga.. irukanga dhen ? :O avvv...

Post production nalave iruku... it has added more beauty to the pic. Kalakkal :)