படம் 1: சித்தூர்கட்டில் ஒரு மழைக்கால மா(சா)லை, ராஜஸ்தான்.
இப்படத்தில் ஒரு லேசி ஃபீல்(Lazy Feel) தெரியற மாதிரியே இருக்கும். எனக்கு இந்தப் படத்துல புடிச்ச விஷயமும் அது தான்.
படம் 2: நால்சரோவர் - சார்கேஜ் சாலை, குஜராத். சாலை சம்பந்தப் பட்ட என்னுடைய பெரும்பாலான படங்கள் பேருந்திலோ, காரிலோ பயணம் செய்து கொண்டிருக்கும் போது எடுப்பவை. இப்படம் காரில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் பயணிக்கும் போது எடுத்தது. கிராமங்களில் போக்குவரத்து நிலைமையையும் இப்படத்தின் மூலம் உணரலாம்.
படம் 3: நால்சரோவர் - சார்கேஜ் சாலை, இன்னொரு படம்.
படம் 4: மோடேரா - காந்திநகர் சாலை, குஜராத். சாலையைக் கடக்கும் பெரியவர். காரின் விண்ட்ஸ்க்ரீன் வழியாக எடுத்த படம்.
படம் 5: மோடேரா - காந்திநகர் சாலை, இன்னுமொரு படம். மின்கம்பங்கள் அளிக்கும் பெர்ஸ்பெக்ட்டிவ் இப்படத்தில் எனக்கு பிடித்தமானது.
படம் 6: மோடேரா - காந்திநகர் சாலை, ஒட்டக வண்டி
படம் 7: மோடேரா - காந்திநகர் சாலை, தூரத்தில் செல்லும் டாங்கர்.
படம் 8: திருப்பதி-சென்னை நெடுஞ்சாலை, புத்தூர் அருகில்.
படம் 9: மும்பை - உதய்பூர் தேசிய நெடுஞ்சாலை.
படம் 10: சாலையைக் கடக்கும் கொக்கு, இந்திய விமானப் படை அகாடெமி, ஐதராபாத்.
படம் 11: குன்னூர் சாலை, உதகை மலை ரயிலி பயணிக்கும் போது எடுத்தது.
படம் எண் 1 மற்றும் 9 போட்டிக்கானவை.
21 comments:
எங்கையும் போகாது சாலை :)
மாம்ஸ் மாசம் ஒரு பதிவு தானா...
உன்னால தானெ மாம்ஸ் நான் இங்க தமிழ்மணம்கு வந்தேன்....நீ தானெ எனக்கு இந்த வலைஉலகின் முதல் நண்பண்.....நன்றி நன்றி....வாழ்த்துக்கள்.
3, 9, 11 are good mams !!
கைப்புள்ள இது எல்லாம் கொஞ்சம் கூட சரி இல்ல ஆமா, மாசம் ஒரு பதிவு அதுவும் போட்டி பதிவு, இனி டெய்லி போட்டி வெச்சுடவேண்டியதுதான் போல, சரி கல்யாணம் ஆச்சி அடிவாங்கின அனுபவத்தை எல்லாம் போடு"வீங்க" போல என்று ஆவலாக இருந்தா போடாம ஏமாத்துறீங்களே!!!
அப்புறம் போட்டோ எல்லாம் அருமை:)
படங்கள் அருமை!
கைப்புள்ள!
இடுப்பிலிருந்து இறங்காமலேவா எடுத்தீர்கள்?
அட போங்கய்யா, என்னிக்காவது போட்டியில கலந்துகிலாம்னு வந்தா காடேசியா யாராவது வந்து ஆப்பு வெச்சுராங்க.. கடேசி படம் சூப்பரு
7th is best i think ...
//எங்கையும் போகாது சாலை :)//
அது தெரிஞ்ச விஷயம் தானே? எல்லாம் ஒரு வெளம்பரம் தேன்...என்ன நாஞ் சொல்றது?
:)
//மாம்ஸ் மாசம் ஒரு பதிவு தானா...//
ஆமாம் மாப்பிள்...My laziness is getting the better of me...மண்டபத்துல எவனோ பேசிட்டிருந்ததைக் கேட்டு அப்படியே பீட்டர் வுட்டுக்குனேன்...இங்லிபீசு எல்லாம் கரீட்டா இருக்கா பாத்து சொல்லு.
//உன்னால தானெ மாம்ஸ் நான் இங்க தமிழ்மணம்கு வந்தேன்....நீ தானெ எனக்கு இந்த வலைஉலகின் முதல் நண்பண்.....நன்றி நன்றி....வாழ்த்துக்கள்.//
வாழ்த்துகளுக்கு நன்றி முன்னாள் பேபி பவன்...இன்னாள் மாஸ்டர் பவன் அவர்களே!
:)
:)
//3, 9, 11 are good mams !!//
டாங்கீஸ் மாம்ஸ்.
:)
//மாசம் ஒரு பதிவு அதுவும் போட்டி பதிவு, இனி டெய்லி போட்டி வெச்சுடவேண்டியதுதான் போல, சரி கல்யாணம் ஆச்சி அடிவாங்கின அனுபவத்தை எல்லாம் போடு"வீங்க" போல என்று ஆவலாக இருந்தா போடாம ஏமாத்துறீங்களே!!!//
டெய்லி மூனு மணி நேரம் இப்பெல்லாம் பயணத்துலேயே செலவாவுதுங்க...வீட்டுக்கு வந்ததும் எதுவும் செய்ய தெம்பு இருக்க மாட்டேங்குதுங்க...அதான்.
:(
//அப்புறம் போட்டோ எல்லாம் அருமை:)//
வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிங்க.
//படங்கள் அருமை!
கைப்புள்ள!//
நன்றிங்க நானானி..
//இடுப்பிலிருந்து இறங்காமலேவா எடுத்தீர்கள்?//
ஹி...ஹி...இதெல்லாமே வண்டியில போவொ சொள்ள எடுத்ததுங்க..
:)
//அட போங்கய்யா, என்னிக்காவது போட்டியில கலந்துகிலாம்னு வந்தா காடேசியா யாராவது வந்து ஆப்பு வெச்சுராங்க.. கடேசி படம் சூப்பரு//
அட போங்க பாஸு...நானே போட்டிக்கு வந்துருக்கற படங்களை எல்லாம் பாத்துட்டு ஒரே காம்ப்ளெக்சுல இருக்கேன்...இதுல நீங்க வேற...உங்களோட எப்பவும் டமாசு தான் போங்க.
:)
நல்லா இருக்கு தல....
வாழ்த்துக்கள் :)
டேங்கர் லாரி சூரியனை தொட முயல்வது நல்லா வந்திருக்குங்க!
PIC. 10 ARUMAI! :)
Best wishes kaipullai :)
ம்ம்ம்ம், குஜராத் சாலைகளின் தரத்தைப் பார்த்துப் பெருமூச்சு விடத்தான் முடியுது, நம்ம தமிழ்நாட்டிலும் இந்த மாதிரிச் சாலைகள் வருமா? ஹிஹிஹி, இத்தனை அரசியலையும் மீறித் தரமான சாலைப் போக்குவரத்து தமிழ்நாட்டிலா? கனாக் காணறேனோ????????
2ம் முறையா பின்னூட்டறேன். அது என்னமோ உங்க பதிவு என்னோட பின்னூட்டத்தை மட்டும் ஏத்துக்கறதே இல்லை!
அப்பாடா, ஒரு வழியா 2 வது கொடுத்தது போயிடுச்சு, முதலில் கொடுத்தது என்ன ஆச்சுனு தெரியலை, அதுசரி, Diwali Greeings க்குத் தான் பதில் இல்லை, forwarded message-க்குக் கூடவா பதில் இல்லை? இந்த லட்சணத்தில் என்னைச் சொன்னாங்க எல்லாரும், நான் "நாதா" னு கூப்பிட்டுக் கொண்டு அந்தக் கால அஞ்சலி தேவி மாதிரி ஓடிடுவேன்னு கேலி வேறேயா? நானாவது அப்போ அப்போ வந்து பதிவு எழுதறேன், தலையைக் காட்டறேன். இப்படி ஒரேயடியா ஒளிஞ்சுக்கலை!! :P :P :P
நாகைசிவா, நட்டு, மருதம் - உங்க கமெண்டுகளுக்கு ரொம்ப நன்றிங்க. தாமதத்துக்கு மன்னிக்கவும். என் கண்ணைத் திறந்த ஒளவையார் வாழ்கனு சொல்லிக்கிறேன்.
:)
//ம்ம்ம்ம், குஜராத் சாலைகளின் தரத்தைப் பார்த்துப் பெருமூச்சு விடத்தான் முடியுது, நம்ம தமிழ்நாட்டிலும் இந்த மாதிரிச் சாலைகள் வருமா? ஹிஹிஹி, இத்தனை அரசியலையும் மீறித் தரமான சாலைப் போக்குவரத்து தமிழ்நாட்டிலா? கனாக் காணறேனோ????????//
நீங்க இங்க பெங்களூருக்கு வந்து பாருங்க. வாழ்க்கையே வெறுத்துடுவீங்க.
//2ம் முறையா பின்னூட்டறேன். அது என்னமோ உங்க பதிவு என்னோட பின்னூட்டத்தை மட்டும் ஏத்துக்கறதே இல்லை!//
தலைவியே! என் அறிவுக்கண்ணைத் திறந்த ஒளவையே...தாமதத்தைப் பொறுத்தருளி இச்சிறியேனை மன்னிக்க வேண்டுகிறேன்.
:(
Post a Comment